திருநான்மறை விளக்க ஆராய்ச்சி

-மா.சாம்பசிவபிள்ளை


Saint Sekkizhaar School of Saiva Siddhanta

தெய்வச் சேக்கிழார் சைவசித்தாந்தப் பாடசாலை

5-D, செல்வம் நகர், தஞ்சாவூர் - 613 007

சேக்கிழார் அடிப்பொடி
முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் டி.லிட்.(யாழ்)
தலைவர்

பதிப்புரை

"சைவஞ் சிவனுடன் சம்பந்த மாவது"

என்பது திருமூலரின் திருவாக்கு.  நம் சிவபெருமான் கயிலைவாசி.  சைவர்களும் வடக்கு நோக்கியே பூசை செய்வர்; விழுந்து வணங்குவர் திருநீறும் அணிவர்.  தமிழ் ஓர் அற்புதமான திராவிட மொழி, என்றாலும், அது ஒரு பிரதேசமொழியே அல்லாமல் பாரதம தழுவிய மொழியாக அமையவில்லை.  சமஸ்கிருதம் தேச மொழியாகவே அமைந்த மொழி.  ஆகவே தான் சிவபெருமான அனைத்தையும் தொடக்கத்தில் தேசமொழியில் அருளி, அதன் பிறகே தமிழ் ஞானியர்மூலம் தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.  தமிழ்நாட்டுச் சைவர்கள் இவ்விரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாகவே விளங்கி வந்திருக்கின்றனர்.  காளத்திக்கு எழுந்தருளிய ஞானப் பிள்ளையார் அத்தலத்தில் சிவனாரை வழிபட்ட பின்னர் வடக்குநோக்கிச் செல்லவில்லை.

    "அங்கண்வட திசைமேலும் குடக்கின் மேலும்
        அருந்தமிழின் வழக்கங்கு நிகழா தாகத்
    திங்கள் புனை முடியார்தந் தானந் தோறும்
        சென்றுதமிழ் இசைபாடுஞ் செய்கை போல
    மங்கையுடன் வானவர்கள் போற்றி சைப்ப
        வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச்
    செங்கமல மலர்வாவித் திருக்கே தாரம்
        தொழுதுதிருப் பதிகஇசை திருத்தப் பாடி.

    கூற்றுதைத்தார் மகிழ்ந்ததோ கரணம் பாடிக்
        குலவுதிருப் பருப்பதத்தின் கொள்கை பாடி
    ஏற்றின்மிசை வருவார்இந் திரன்றன் நீல
        பருப்பதமும் பாடிமற்றி றைவர் தானம்
    போற்றிசொன் மலர்மாலை பிறவும் பாடிப்
        புகலியர்தம் பெருந்தகையார் புனித மாகும்
    நீற்றின் அணிகோலத்துத் தொண்டர் சூழ
        நெடிதுமகிழ்ந் தப்பதியில் நிலவு கின்றார்."

    பாரததேசம் முழுமையும் பயன்பெற வேண்டும் என்றே சிவனார் திருவுள்ளம் பற்றி அவையிற்றை பாரததேச மொழியில் அருளியுள்ளார்.  இவைகளே மூல நூல்கள்.  சித்தியாருக்கு மேல் நூல் இல்லை என்பார்கள். அச்சித்தியார் கூறுதாவது:

    "வேதநூல் சைவநூல் என்று இரண்டே நூல்கள்;
        வேறு உரைக்கும் நூல் இவற்றின் விரிந்த நூல்கள்"

வேதநூல்களாவன இருக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்குமாகும்.  சைவநூல்கள் சிவாகமங்கள்.  வேதம் பொது என்பதும் சிவாகமம் சிறப்பு என்பதும் சைவர்தம் கொள்கை.  வேதநூல்கள் மேலே சொல்லப்பட்டனவே என்ற உண்மை, போற்றிப் பேணப்பட வேண்டிய ஒன்று.  அங்ஙனமே ஆந்திர, கன்னட, கேரள தேசத்தாருக்கும் இவற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகளில் வாழ் மக்களுக்கும் அமைந்த கருத்தாகும்.  தமிழர்களும் இக்கருத்தையே போற்றி வந்தனர்.  தமிழருள் வைணவர்களும் இதில் எந்தவித ஐயப்பாடும் எந்தக் காலத்திலும் தோன்றியதில்லை.  ஆனால் தமிழ்ச் சைவரில் ஒரு சிலருக்கு தேவையற்ற ஐயப்பாடு எழுந்தது நம்மவரின் தவக்குறைவு என்பது நிச்சயம்.  இவ்வையப்பாடும் சற்றேறக்குறைய எண்பது ஆண்டுகளுக்கு முன்புதான் தோற்றுவிக்கப்பட்டது.  இந்நூதன கருத்தைத் தோற்றுவித்தவர்களுக்கு ஓர் உள்நோக்கம் உண்டு என்பது வெளிப்படை.  தங்கள் நோக்கத்தை மறைக்கவே அவர்கள் பொருந்தாக் கூற்றுக்களை அவ்வக்காலங்களில் அழுத்தமாய்க்கூறி மக்களைக் குழப்பி இருக்கிறார்கள்.

    "பல்லாவரம் சுவாமி வேதாசலம் அவர்கள், திருவாசகத்தில் போற்றித் திருவகவலுக்கு எழுதிய விரிவுரையில் "மூவர் நான்மறை முதல்வா போற்றி" யென்னும் 94 ஆம் அடியிலுள்ள மூவர் நான்மறை யென்ற சொற்றொடர், தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள், திருக்குறள், தேவாரம், சிவஞானபோதம் என்னும் நூல்களைக் குறிக்குமென்றும், வடமொழி நான்கு வேதங்களைக் குறிகா தென்றும் எழுதினார்கள்.  இதற்குப் பென்னம்பெரும் எதிர்ப்புத் தோன்றவே, தொடர்ந்து தாம் திருவாசகத்திற்கு உரை எழுதப் போவதாக அறிவித்த அவர், தாம் கொண்டிருந்த எண்ணத்தைக் கை நெகிழவிட்டார்.  ஆனாலும், அவர் தோற்றுவித்த மாயையில் சிக்கிய அன்பர் ஒருவர் வேதங்கள் தமிழ்மொழி வேதங்களே என்று நிறுவ முனைந்தார்.  அவர்தாம் கா.சு.பிள்ளையவர்கள், தர்க்கம் பயின்றிருந்த இவர் இதனை நம்பாமல் குதர்க்கத்திலும், விதர்க்கத்திலும், ஈடுபடத் தொடங்கினார்.  இவருக்கு முன்னவராக விளங்கியவரின் வழி அடைக்கப்பட்டுவிட்டது கண்டு, இவர் ஓர் நூதன மார்க்கபந்துவாக உருவெடுத்தார்.  சுவாமி வேதாசலமவர்கள் கொள்கைக்குத் தாம் உடம்பாடில்லாதவராய், நான்மறையென்று வேறு தமிழ்நூல்களென ஒரு கட்டுரை கட்டியெழுதி அதற்குத் திருநான்மறை விளக்கமெனப் பெயரிட்டு செந்தமிழ்ச் செல்வியில் பிரசுரித்திருக்கின்றார். அதன் கருத்தாவது, நந்தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் நால்வருக்குச் சிவபிரான் கல்லால மரத்தடியிலே, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருடார்த்தம் நான்கனையு முணர்ந்த, அந்தமிழ்ப் பெரியோர்கள் திருக்குறள் போன்று நான்மறையென்னும் பெயருடன் நூல்கள் தமிழிற் செய்திருந்தார்க ளென்பதும், அந்நூல்களுடன் ஆறங்கமுந் தமிழிலேயே அவர்கள் இயற்றினார்களென்பதும், அந்நூல்கள் முதற் சங்கத்திறுதியில் உண்டான கடல்கோளில் அச்சங்கத்தின் ஏனைய தமிழ்நூல்களுடன் இறந்து போயினவென்பதுவும், நமது சைவ சமயாசாரியார்கள் திருவுள்ளக்கருத்தும் அதுவேயென்பதுவுமாம்".

    இங்ஙனம் இவர் மனமார உண்மையைப் புரட்டிவிட்டார்.  சிவாகமங்கள் கடலில் வீசப்பட்ட நிலையிலே, கேவேடர் ஆகி, கெளிறு அது படுத்தும்; மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் அருளினார் சிவபெருமான், என்ற உண்மை சமயாசாரியாராகிய மாணிக்கவாசகரால் கீர்த்தித் திருஅகவலில் அருளப்பட்டிருக்கிறது.  திருவாசகத்துக்கு உரை வரைந்த திரு.கா.சு.பிள்ளையவர்களுக்கு இந்த உண்மை தெரியாததன்று.  ஆகவே பிள்ளையவர்களின் பொருந்தாக்கூற்று அசதியாடுதலுக்கு உரியது என்று உணர்ந்த சைவப்பிரசாரகரும், கவிப்புலவருமாகிய யாழ்ப்பாணத்து குமாரசாமி குருக்கள் அவர்கள் கீழ்வரும் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்:

    "வடமொழி தென்மொழிகளை ஒருங்கே தந்த ஈசன் கல்லாலின்கண் நால்வர்க்குபதேசித்த தமிழ்மறைகள் கடல் கோட்பட வடமொழி வேதசிவாகமங்களையே இத்தமிழுலகு கொள்ளத் திருவுள்ளம் பற்றினாராயின் அதனை மாற்றவல்ல சிருட்டி கர்த்தர் யாவரோ! ஆயினும் ஸ்ரீ.கா.சுப்பிரமணிய பிள்ளையவர்கள் அவனருள் வயத்தராய்ச் சாகரத் தாழ்ந்து தமிழ் மறைகளைக் கொணர்ந்து தமிழுலகுக்கீவரேல் அதனை விலக்கவல்லார் யாவரோ!"

    இச்சூழலில், படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான், ஐயோவென்று போவான் என்ற உண்மையை தமிழுலகத்திற்கு எடுத்துக்கூற வேண்டிய கட்டாயத்திற்கு சிவத்திரு மா.சாம்பசிவம் பிள்ளையவர்கள் தள்ளப்பட்டார்.  தம் ஆப்த நண்பரின் மகனார் பெருந்தீங்கு இழைத்துவிட்டதை இப்பெரியாரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  ஆகவே திருநான்மறை விளக்க ஆராய்ச்சி என்ற நூலை அவர் வரைந்தார்.  அந்நூலின் படிகளை சைவப்பெரியோர்கள் பலருக்கும் தம் சொந்த செலவில் அனுப்பி வைத்தார்.  அவர்களிடமிருந்து தமக்குக் கிடைத்த கடிதங்களில் இருபத்தேசினை மட்டும் அவர் 147 பக்கங்களில் அச்சிட்டு ஒரு தனிநூலாக்கினார்.  அதனைத் தாம் வரைந்த நூலுக்கான முன்னிணைப்பாக அமைத்துக் கொண்டார்.  இவருடைய நூல் 240 பக்கங்கள் கொண்டது.  நானூறு பக்கங்களை விஞ்சி நிற்கும் தம் நூலுக்கு இவர் ஓர் 2 ரூபா விலை வைத்து 1926ஆம் ஆண்டில் வெளியிட்டார்.  இந்நூல் ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு மேலாக குதர்க்க வெளியீடுகள் வெளிவராமல் தடுத்து நிறுத்தியது.  இந்நூல் இப்போது அச்சில் இல்லை.  இந்நூலுக்கான மீள்பதிப்பு வரவேண்டிய சூழலும் இதற்கு முன்பு இல்லை.  ஆனாலும் புதிய காளான்கள் முளைக்கத் தொடங்கி விட்டன.  இவை வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் அகற்றப்பட வேண்டிய கட்டாயம் அண்மையில் ஏற்பட்டிருக்கிறது.  இறையருளால் மீள் பதிப்பை வெளிக் கொண்டரும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டியிருக்கிறது.  சைவ முன்னோர்மொழிந்தனவற்றை பொன்னே போல் போற்றப்படவேண்டும் என்பதை வலியுறுத்த இம்மீன் பதிப்பு முன்பதிப்புப் படியே இப்போது அச்சிடப்படுகிறது.

    சிவனாரைப் பழித்தோரையும், தமிழை இழித்தோரையும் கண்டிக்கத் துணிவில்லாத ஒரு சிலர் நந்தமிழுக்கு சிறப்பு சேர்ப்பதாக வாய்ப்பறை அறைந்து வருகிறார்கள்.  இதை ஓர் இயக்கமாகவே செயல்படுத்த முனைகிறார்கள்.  ஒரு வேண்டுகோள்.  இவர்கள் இந்நூலைக் கவனமாக பயிலட்டும்.  திருமுறைகள், மெய்கண்ட சாத்திரங்கள் அடிப்படையில் இந்நூலுக்கு மறுப்புரை எழுத வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து இவர்கள் திருந்தட்டும்.

    "வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க
    மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
    நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக வுலக மெல்லாம்."

சேக்கிழார் அடிப்பொடி
தி.ந.இராமச்சந்திரன்


FOREWORD

    Brahma Sri P.T.Srinivasa Iyengar Avl., M.A.,L.T., Professor of Education, St. Joseph's College, Trichinopoly and member of the senate of the Madras University, writes:-

    English education has produced strange monsters of eclecticism in India.  Strangest of all is the attempt to blend a selection of the guesses of modern European Scholars with the beliefs and prejudices of modern Indian devotees of particular sects.  One such recent attempt is to weld the European theories of Vedic interpretation in violation of the conclusions of Indian Scholarship, with the condemnation of the age-long traditions of Brahmana Scholars, characteristic of certain modern Saivas, the whole veneered with wild speculations of untutored ingenuity.  Thus it has been gravely maintained that the நான்மறை, as the four Vedas have been called in South India from time immemorial is the name of certain imaginary Tamil works, that the six vedangas were Tamil writings which have disappeared, and that our ancestors were wrong in understanding by these names the well-known Sanskrit works.  It is easy to call our fathers fools, and our children will surely repay that compliment to us.  To maintain this startling piece of perverse ingenuity, well-known Tamil passages have been startlingly misinterpreted.  Mr.Sambasivam Pillai, being a great Tamil Scholar and believer in the truth of current traditional teachings, has in this volume examined with scrupulous care the various Tamil passages and the sophistical arguments of a modern writer, and challenged these novel theories and exposed their hollowness.  He has in this book proved with great wealth of learning that the Vedas which are the ultimate source of the faith of the Hindus are the Sanskrit Vedas, that the Vedangas, are the Sanskrit Vedangas, that Siva, like other Gods worshipped by the Hindus, is a Deity of the Vedic pantheon, that no Tamil Vedas existed in old times and were swallowed by the sea, as the new theory alleges, that Yagas were Yagas and Brahmanas were Brahmanas in ancient times.  He has specially brought out the point that the worship of Siva and Amba, the world-mother, existed in the age when the Rishis taught the mantras included in the Rig Vedic Collection.

    I recommend the book of the attention of all Hindus and more specially those who seek the grace of Mahadev, for obtaining deliverance from the age-long cycle of birth death and rebirth.சிவமயம்


திரிசிரபுரம்
திரு.மா.சாம்பசிவபிள்ளை
இயற்றிய
திருநான்மறை விளக்க ஆராய்ச்சி

ஆராய்ச்சி இலக்கம் VII.

இஃது
சென்னை சட்ட கலாசாலை,

திருவாளர்
கா.சுப்பிரமணியபிள்ளையவர்கள், M.A.,M.L.

செந்தமிழ்ச்செல்வி என்னும் பத்திரிகை வாயிலாக
வெளியிட்ட
"திருநான்மறைவிளக்கம்"
என்னும் வியாசத்தில் காணப்படும்
திரிபுணர்ச்சியைநீக்குமாறுஇயற்றப்பட்டது

திரிசிரபுரம்
S.I.By.ஜனரல் டிராபிக் மானேஜர் ஆபீசு ஹெட் கிளர்க்கு
A.குழந்தைவேலுப்பிள்ளையவர்கள்
பெரு முயற்சியால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது

Printed By:
Jegam &Co. Dodson Press.
Trichinopoly.

அக்ஷய-வருஷம்- ஆனி-மாதம்
1926

விலை: ரூ.1சிவமயம்
முகவுரை

தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை யுடைமை யெமையிகழார் - தம்மை
உணரா ருணரா ருடங்கியைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்.

                                    _________________

    "திருநான்மறை விளக்கம்" எனப் பெயரியதோர் கட்டுரை "செந்தமிழ்ச் செல்வி" என்னும் மாசிக சஞ்சிகையில் வெளிவருகின்றதே அதனை நீங்கள் பார்த்தீர்களா? என்று என் நண்பரொருவர் என்னை வினாவினார்.  "திருநான்மறை விளக்கம்" என்னும் பெயர் கேட்டதுணையே பெருமகிழ் சிறந்து அச் சஞ்சிகையைத் தருவித்து அக்கட்டுரையின் ஆக்கியோன் பெயரை நோக்கினேன்.  என் அரும்பெறல் நண்பரும், விரும்புநல்லுறவரும், தம் இயற்பெயர்க்குத் தகவே எவற்றையும் உள்ளவாறே ஓர்ந்துணரும் நுண்மா ணுழைபுலமும் உணர்ந்தவாறே யுணர்த்தும் வித்தகமுமுடையவரும், "ஒழுக்க மன்பருளாசார முபசார முறவு சீலம், வழுக்கிலாத் தவந்தானங்கள் வந்தித்தல் வணங்கல் வாய்மை, அழுக்கிலாத் துறவடக்க மறிவொடச்சித்தலாதி, இழுக்கிலா வறங்க" ளெல்லாம் இயல்பானே யமையப்பெற்றவரும், ஆங்கில மொழியைப் பாங்குறக் கற்றுப் பல்கலை கழகத்தாரால் B.A .(பீ.ஏ.) பட்டம் பெற்று, பீ.ஏ.பிள்ளையெனவே நெல்லைவாழ் மாந்தரெல்லோரானும் அழைக்கப்பெற்றிருப்பினும், தவத்தான் மனந்தூயராய்ச் சிவனருட் பெற்ற பெரியோர் தம் மெய்ந்நெறியைக் குருட்டு நம்பிக்கையென்று இகழும் மேலைநாட்டு இருட்டு நம்பிக்கையில் மருளாதவரும், "படிக்கு நூல்கள் சிவாகமம் பசுபாசமோடு பதித்திறம், எடுத்தியம்புவ தீசன் வார்கழலேத் திடுந் தொழிலென்றுமே, விடுத்திடும் பெருள் காமமாதிகள் வேண்டிடும் பொருளீண்டருள், முடித்து மும்மலம்விட்டு நின்மலனோடு நின்றிடன் முத்தியே" என்ற அருளுரை வழி வழுவாது நின்ற சித்தாந்த சைவத்துத் தமருமாகிய, திருவாளர், காந்திமதிநாத பிள்ளையவர்களுக்கு முதற் புதல்வராகிய கா.சுப்பிரமணியபிள்ளை அவர்களே அக்கட்டுரையின் ஆக்கியோன் என்பது உணர்ந்தேன்.  'மகனறிவு தந்தையறிவு' எனும் மூதுரை பற்றிப் பெயர்த்தும் பெருமகிழ்வுற்று அம்மாசிக சஞ்சிகைக்கு ஒரு சந்தாதாரனாகி அதனைத் தருவித்துப் பார்த்தேன்.  பார்க்க பார்க்க அவ்வுரையின் நோக்கும் பொருட் போக்கும் இறைவ னூற்பிரமாணங்கட்கும் பொய்தீரொழுக்க நெறி நின்ற பெரியோர் கொள்கைக்கும் முற்றிலும் முரணாக விருந்தவாற்றைக் காண்டலும் குருத்துக்கெதிர்செலக் கரும் பருத்தியவனானேன்.

    அக்கட்டுரைக்கண் பற்பல பண்டை நூன்மேற்கோள்கள் காட்டப்பட்டிருந்தமையின் அந்நூல்களையும் அவற்றின் உரைகளையுங்  கூர்ந்து நோக்கினேன்.  நோக்குதலும் பெரிய ஆசங்கைகள் பலப்பல வுண்டாயின.  அவற்றை யெல்லாம் சைவ சித்தாந்த சற்குரு சம்பிரதாய தபோதனர்களாகிய பெரியோர்களையும் இரு மொழியினும் வல்ல கல்விவாணர்களையும் உசாவித் தெளிந்தேன்.  உலக சிருட்டி முதற்றோன்றி யெத்தகைய விடையூறுகளாலுந் தன் தன்மை குன்றாது நிலைபெற்று விளங்கும் நமது வைதிக சைவ சமயத்துக்கு மாறாகத் தமிழர் சமயமென வொரு நவீனக் கொள்கையைக், கலிமுதிர்ச்சியினால் வகுக்கப் புகுந்து, தெய்வத் தன்மை பொருந்திய பண்டைய அருணூல்களின் மூலப்பாடங்களையும், அந்நூல்களுக்கு உரை வகுக்கவே அவதரித்தவர்களெனக் கருதப்படும் உரையாசிரியர்களின் உரையையும் தமிழ் இலக்கிய இலக்கண வரம்புகளையுந் தழுவாது அவ்வுரை யெழுதப்பட்டிருப்பதாக அறிந்தேன்.  சிவஞானபோதத்திற்குத் திராவிடமா பாடியமியற்றிச் சித்தாந்த சைவத் திருநெறியை விளக்கிய துறைசைமாதவச் சிவஞானயோகிகள் சுமார் கச0 - ஆண்டுகட்கு முன்னரே தீர்க்கதரிசனமாயருளிய 'இல்லை வைதிக நெறியில்லை நல்லற, மில்லை நால்வருணமாச்சிரமில்லையா, மில்லை மாணாக்கர்களில்லையாரிய, ரில்லைநல் லொழுக்கமுங் கவியினென்பவே' என்னுங் காஞ்சிபுராணச் செய்யுளுக்கு இத்திருநான்மறை விளக்கம் ஒரு மேற்கோளாமெனக் கண்டேன்.  பற்பல பண்டைய அருணூல்களினின்றும் மேற்கோள்கள் காட்டப் பட்டிருந்தமையின் முதன்முறை படித்ததில் இந் நவீனக் கோளுமுண்மையாமோ வென மயங்கினேன், ஆய்ந்துபார்க்க, அரசுரிமை பூண்ட நியாயத் தலங்களிற் பொய்பட்ட வழக்கை யெடுத்து உண்மை போல விவகரிக்கும் நியாயவாதிகளின் போலிக்கடமைப்பாடு போன் றெழுதியிருத்தலலத் திருவருள் உணர்த்த வுணர்ந்தேன், அவ்வுணர்ச்சியின் பயனை யெழுதி வைத்தல் உண்மை நோக்குவோர்க்கும் மேலும் மேலும் ஆராயப் புகுவோர்க்கும் நம்பிற் சந்ததியார் உண்மைச் சைவ நெறியினின்றும் பிறழாதிருத்தற்கும் ஒரு சாதனமாமென விவ்வாராய்ச்சியை யெழுதி முடித்தேன்.  பண்டைய நூல்களின் கருத்துக்கும் நம் முன்னோர்கள் ஆட்சிக்கும் இந் நவீனக் கொள்கை உடன்பாடல்லவெனக் காட்டுவதே எனது முழு நோக்கம்.  ஒருவர் பேரிலுங் குறை கூறப்புகுந்தேனல்லேன்.

    மேனாட்டு ஆராய்ச்சி முறையைக் கைகொண்டோருக்கு நானெடுத்துக் கூறும் ஆரியர் விடயமுங் காலவரையறை நிர்ணயமும் ஏளனமாகத் தோன்றலாம்.  எனது ஆராய்ச்சி முற்றும் நமது பண்டைய நூல்களைப் பிரமாணமாகக் கொண்டுள்ளதே யொழிய எனது கற்பனை யொன்றுமில்லை யென்பதை அவர்கள் திண்ணமாயோர்வார்களாக.

    இவ்வாராய்ச்சி யெழுதும்போது நேரிட்ட ஐயப்பாடுகளை நீக்கி உண்மை காணச் செய்தவர்களாகிய சைவப் பெருந்தகையார்களுக்குங் கல்விவாணர்களுக்கும் நான் என்றுங் கடமைப் பட்டுள்ளேன்.

    இவ்வாராய்ச்சியை அச்சிடுவதற்குத் திருத்தமான வெழுத்திலெழுதிக் கொடுத்தும் மனமிளைத்த காலத்தில் ஊக்க முறுவித்தும் அச்சிடுங் காலத்தில், ஒப்பு நோக்குதல், பிழை திருத்தஞ் செய்தல் ஆகிய பலவித உதவி புரிந்த நண்பர் S.I.Ry.ஜனரல் டிராபிக் மானேஜர் ஆபிசு ஹெட் கிளர்க்கு திருவாளர் A. குழந்தைவேலுப்பிள்ளை யவர்கட்கு நான் மிகவுமுரிமையுடையனா யிருக்கின்றேன்.

    இவ்வாராய்ச்சியிற் காணப்படும் எழுத்துப்பிழை, சொற்பிழை ஆகிய பிழைகளை அறிஞர்கள் பொறுத்தருளிச்,

    "சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
        கோடாமை சான்றோர்க்கணி"

    "உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா
        ருள்ளத்து ளெல்லாமுளன்"

என்னுஞ் செந்தமிழ் அருண்மொழிகட்கு இலக்கியமாவார்களென நம்புகிறேன்.  விஷயங்களிற் பிழை காணப்படின், காரண காரியங்களுடன் எனக் கறிவிப்பார்களாயின், மறுபதிப்பில் அவைகள் திருத்தப்பட்டுத் தோன்றும்.

    இவ்வாராய்ச்சியை அச்சிடுவதற்கு உதவிபுரிந்த செல்வச் சிரஞ்சீவி பெரிய குளம் உமை சுப்பையா பிள்ளையவர்கட்கும் உத்தம பாளையம் சிவராம மங்கையர்க்கரசி யம்மாளுக்கும் இச்சைவ பரிபாலனத்தாலாய சிவபுண்ணியப்பயனை இம்மையிலும் மறுமையிலுஞ் சிவபிரான் அருளுவாராக.

குரோதன ஆண்டு
தைத்திங்கள்,
திருச்சிராப்பள்ளி
கி.பி.ககூஉசா.                                                    திரு.மா.சாம்பசிவன்.


நன்றாக நால்வர்க்கு நான்மறையினுட் பொருளை
அன்றாலின் கீழிருந்தங்கற முரைத்தான் காணேடீ
அன்றாலின் கீழிருந்தங்கற முரைத்தானாயிடினுங்
கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோசிவமயம்
ஓம்படை


ரானீழ
லொண்கழ
லிரண்டுமுப்பொ
ழுதேத்திய நால்வர்க்
கொளி  நெறி   காட்
டினை, எனவும், அறங்
காட்டியந்த ணர்க்கண்
றாலநீழ  லறமருளிச்
செய்தவர்னார்,   என
வும், பண்டிருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே,
எனவும், தொடுத்தமைத்த, நாண்மாலை கொண்டணிந்த
நால்வர்க் கன்றானிழற்கீழ், வாண்மாலையாகும் வகையருளித்
தோண்மாலை,   விட்டிலங்கத் தெக்கணமே நோக்கி வியந்த
குண   மெட்டிலங்க  வைத்த   விறல்  போற்றி, எனவும்,
      கல்லாலந் தண்ணிழற்கீழ்க் கலித்துறை         யது
         பயந்த காமர் காட்சி, நல்லானை நல்          லா
             ளொரு பாகமாகிய ஞானத                  *
தானை, எல்லாரு மேத்தத்
தகுவானை யெஞ் ஞான்
றுஞ், செஒல்லாட்டாருக்கெல்லாந்
துயரல்லதில்லை தொழுமின் கண்டீர்,
எனவும், நம் பெருமக்களாற் றுதிக்கப்
பெற்றவரும், சநகாதி முனிவோர்க்கும், நந்தி
யெம்பெருமானுக்கும், கண்ணுவராதி யோர்க்கும்
வேத சிவாகமப் பொருளை யுரைத்த பரமாசாரியரு
மாகிய ஸ்ரீதக்ஷிணாமூர்த்திக் கடவுளின் றிருவடித் தாமரை
கட்கு இவ் வாராய்ச்சியை அணிபெற அணிகுவாம்


    ருத்ரயத்தே தக்ஷிணம் முகம் தேநபாம் பாஹிநித்தியம், எனச் சுவேதாஸ்வதா உபநிடதம் சிவபிரானை நோக்கி உம்முடைய எந்த முகம் தெற்குநோக்கி யிருக்கின்றதோ அம்முகத்தினால் என்னை யெப்பொழுதும் ரட்சியுமெனக் கூறுகின்றது.


அபிப்பிராயங்கொடுத்த வித்துவப்பெரியார் பெயர் அட்டவணை.

*  பிரமஸ்ரீ. P.T. சீனிவாசையங்காரவர்கள் M.A.L.T.

 1. சென்னை, மகாமகோபாத்தியாயர் பிரமஸ்ரீ.வே.சாமிநாதையரவர்கள்
 2.  சீர்காழி, வித்துவான் ஸ்ரீ.ப.அ.முத்துத்தாண்டவராயபிள்ளையவர்கள்
 3.  யாழ்ப்பாணம், நல்லூர், பிரமஸ்ரீ. க.வே.கார்த்திகேயக்குருக்கள் அவர்கள்
 4.  யாழ்ப்பாணம் பிரமஸ்ரீ. நவநீதகிருஷ்ணபாரதியவர்கள்
 5.  யாழ்ப்பாணம் பிரமஸ்ரீ. குமாரசாமிக்குருக்களவர்கள்
 6.  யாழ்ப்பாணம் பிரமஸ்ரீ. சி.சபாபதிக்குருக்களவர்கள்
 7.  தச்சநல்லூர், ஸ்ரீலஸ்ரீ. இலக்குமணப்போற்றியவர்கள்
 8.  யாழ்ப்பாணம், விக்டோரியாக்காலேஜ் பிரின்சிபல்
      ஸ்ரீமத்.S.சிவபாதசுந்தரப் பிள்ளையவர்கள் B.A.
 9.  தஞ்சை, Row Bahadur K.S.சீனிவாசபிள்ளையவர்கள்
 10. யாழ்ப்பாணம், ஸ்ரீமத்.த.கைலாசபிள்ளையவர்கள்
 11. திருச்சி, டிஸ்டிர்கட் ரிஜிஸ்டார் ஸ்ரீமான்.ஆ.சுப்பிரமணிய பிள்ளையவர்கள் B.A.
 12. அம்பாசமுத்திரம், ஸ்ரீமத். V.P.காந்திமதிநாதபிள்ளையவர்கள் B.A.
 13. திருநெல்வேலி, தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீமத்.வி.சிதம்பரராமலிங்கப்பிள்ளையவர்கள்
 14. கோயமுத்தூர், ஸ்ரீமத் C.K.சுப்பிரமணியமுதலியாரவர்கள் B.A.F.M.U.
 15. யாழ்ப்பாணம், பிரமஸ்ரீ. சிவசுப்பிரமணிய சிவாசாரியரவர்கள்
 16. யாழ்ப்பாணம், ஸ்ரீமத் வைத்தியலிங்கப்பிள்ளையவர்கள்
 17. யாழ்ப்பாணம், பிரமஸ்ரீ.சீ.முருகேசையரவர்கள்
 18. யாழ்ப்பாணம், ஸ்ரீமத்.அட்வோகேற் அருளம்பலம் அவர்கள்
 19. யாழ்ப்பாணம், பிரமஸ்ரீ. கனகசபாபதிக்குருக்களவர்கள்
 20. யாழ்ப்பாணம், பிரமஸ்ரீ. முத்துக்குமாரசாமிக்குருக்களவர்கள்
 21. யாழ்ப்பாணம், பிரமஸ்ரீ. சுப்பிரமணியசாஸ்திரிகள்
 22. யாழ்ப்பாணம், ஸ்ரீமத். ஆறுமுகப்பிள்ளையவர்கள்
 23. சீர்காழி, ஸ்ரீமத். சோமசுந்தரப்பிள்ளையவர்கள் M.A.L.T.
 24. சீர்காழி, ஸ்ரீமாந்.ச.சதாசிவமுதலியார் அவர்கள்
 25. திருச்சிராப்பள்ளிக் கடுத்த உறந்தைவித்துவான் ஸ்ரீமத்.தே.பெரியசாமிப்பிள்ளையவர்கள்
 26. யாழ்ப்பாணம், பிரமஸ்ரீ.கணேசபண்டிதரவர்கள்
 27. யாழ்ப்பாணம், ஸ்ரீலஸ்ரீ.சுவாமிநாதபண்டிதரவர்கள்

            ஆராய்ச்சி இலக்கம் VII

அஃதாவது திருவாளர் கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் எழுதிய

திருநான்மறை விளக்கம்
என்னும் விடயத்தை
ஆராயும் ஆராய்ச்சி

இதன்கண் எடுத்துக்கொள்ளப்பட்டது.


நற்கஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்கன்று காண்.

திருவாளர் கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் யம்.ஏ.யம்.யல் அட்வோகேட்டு, திருநான்மறை விளக்கமெனவொரு விடய மெழுதியுள்ளார்.  அது சென்னையிற் பிரசுரமாகிவருகின்ற "செந்தமிழ்ச் செல்வி" யென்னும் மாதாந்தப் பத்திரிகையின் முதலாவது சிலம்பின், உ0 முதல் உரும் பக்கம் வரையினும், ருஉ முதல் ருசா வரையினும், அங முதல் அஎ வரையினும், ககக முதல் ககசா வரையினும், கருசா முதல் கருகூ வரையினும், கஅக முதல் கஅஎ வரையினும், உகரு முதல் உஉரு வரையினும், உருங முதல் உருஎ வரையினும் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.

    உ. பல்லாவரம் சுவாமி வேதாசலம் அவர்கள், திருவாசகத்தில் போற்றித் திருவகவலுக்கு எழுதிய விரிவுரையில் "மூவா நான்மறை முதல்வா போற்றி" யென்னும் கூச-ம் அடியிலுள்ள மூவா நான்மறை யென்ற சொற்றொடர், தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள், திருக்குறள், தேவாரம், சிவஞான போதம், என்னும் நூல்களைக் குறிக்குமென்றும், வடமொழி நான்கு வேதங்களைக் குறிக்காதென்றும் எழுதினார்கள்.  அவ்வாறுகொண்ட பொருள் பொருத்தமிலதெனத் தக்க பிரமாணங்களுடன், "திருவாசகம் போற்றித் திருவகவலிற் காணப்படும் மூவா நான்மறை யென்னுஞ் சொற்றொடரின் பொருளாராய்ச்சி" யென்னும் பெயரால் ஒரு விடய மெழுதிச் சென்ற ருதிரோற்காரி ஆண்டில் அச்சிடுவித்து வெளியிட்டனம்.

    ங. சுவாமி வேதாசலமவர்கள் கொள்கைக்குத் தாம் உடம்பாடில்லாதவராய், நான்மறை யென்பது வேறு தமிழ் நூல்களென நம் நண்பராகிய கா,சு. ஒரு கட்டுரை கட்டியெழுதி அதற்குத் திருநான்மறை விளக்கமெனப் பெயரிட்டு மேற்காட்டியபடி செந்தமிழ்ச் செல்வியில் பிரசுரித்திருக்கின்றார். அதன் கருத்தாவது, நந் தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் நால்வருக்குச் சிவபிரான் கல்லால மரத்தடியிலே, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் புருடார்த்தம் நான்களையுமுணர்த்த, அத்தமிழ்ப் பெரியோர்கள் திருக்குறல் போன்று நான்மறை யென்னும் பெயருடன் நூல்கள் தமிழிற் செய்திருந்தார்களென்பதும், அந்நூல்களுடன் ஆறங்சமுந் தமிழிலேயே அவர்கள் இயJற்றினார்களென்பதும், அந்நூல்கள் முதற் சங்கத்திறுதியில் உண்டான கடல்கோளில் அச்சங்கத்தின் ஏனைய தமிழ் நூல்களுடன் இறந்துபோயின வென்பதுவும் நமது சைவ சமயாசாரியர்கள் திருவுள்ளக் கருத்தும் அதுவே யென்பதுவுமாம், இக்கூற்று உண்மையா வென்பதை ஆராய்தலே இவ்வுரை யெழுதுவதின் நோக்கம்.

    ச, கா, சு, அவர்கள் தாம் எழுதப்புகுந்த நவீனக் கொள்கைக்குத் தேவார திருவாசமாதிய தமிழ் மறைகளில் ஆதாரங்களிருப்பது போல உலகினர்க்குக் காட்டவேண்டி, முதலில் எழுதுவதாவது, அபர ஞானமாகிய உண்மை நூலறிவை இறைவன் தவமிக்கார்க்கு உதவியருளி அன்னோர் வாயிலாக் உலகினர்க்கு அருணூல்களை நல்குமென்பது நமது திருநெறித் தலைவர்களது திருவுள்ளக் கருத்து என்றதுவும், அறம் பொருளின்பம் வீட்டைதலாகிய இந்நான்கனையும் சிவபெருமான் பண்டு அருந்தவர்க்கு உணர்வித்தருளினா னென்றதுவுமே. இவJற்றிJற்குத் தமிழ் மறைகளில் மூன்Jறௌ பிரமாணங்களிருப்பது போல் மூன்று திருபாடல்களைக்காட்டி, இவ்வருளுரைக்ளால் இனிது விளங்குமென வெழுதியிருக்கின்றார். அப்பாடல்களில் எவர் தங்கொள்கைக்குச் சாதகமானவை யென்று கொண்ட பகுதிகளாவன,

க-வது அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு மொழிந்த

            வாயான் முக்கணாதி, - சம்பந்தர்.

உ-வது ஒரானீழவொண் கழலிரண்டு முப்பொழு தேத்திய

        நாலவர்க்கொளிநெறி காட்டினை, - சம்பந்தர்.

ங-வது அருந்தவருக் காலின்கீ ழறமுதலா நான்கனையு

        மிருந்தவருக்கருளுமது வெனக்கறிய வியம்பேடீ.

                                                    -திருவ畲சகம்

      

மேற்காட்டிய மூன்று மேற்கோள்களீலும் இறைவனிடம் அறமாதியவைகேட்ட அருந்தவர் நால்வர், உலகினர்க்கு அருணூல்களை நல்கினாரென்ற பொருள் சற்றுங் காணப்படவில்லை யென்பது யாவரு மெளிதில் அறியக்கூடியதாயிருக்கின்றது. அந்தணாளர்களாகிய நால்வர்க்கும் அறமாதியவற்றைச் சிவபிரானருளினாரென்பது, மேற்காட்டிய க,ங, பிரமாணங்களா லறியக்கிடக்கின்றது, இறைவன், அறமாதியவற்றைக் தானே மொழிந்தார், வேதம், அங்கம் ஆகியவைகளை மொழிந்தாரென இம்மேற்கோள்கள் கூறவில்லையேயெனின், "ஆசதன் கீழிருந்து நால்வர்க் கறம் பொருள் வீடின்ப மாறங்கம் வேதந் தெரித்தானை" யென்று தமிழ் மறை மற்றோரிடத்திற் டூறாநின்றதையும் சாமியப்படுத்தி அன்பர் காட்டிய மேற்கோள்களுக்குப் பொருள் கொள்ளவேண்டுவதே முறைமை, ஏனெனின், கல்லாலயிலிருந்து இறைவன் நால்வர்க்கு உபதேசித்த ஒரு சரித்திரத்தையே தொகுத்தும் விரித்தும் செய்யுளமைதிக்குத் தக்கவாறு பெருமக்கள், அவர்களருளிய தமிழ் மறையில் ஆங்காங்குக் கூறியிருக்கின்றார்கள், "சொல்ல்லாய் கல்லாலா" "கல்ல்ல்னிழல் மேயவனே" என்பனவாதிய தமிழ் மறைகளில் காணப்படுகின்ற இவ்வாக்கியங்களுக்குப் பொருள் விரித்துரைக்குங்கால் லக்லாலடியில் நால்வர்க்கு இறைவன் வேதமாதியவற்றையும் அவைகளின் பொருளையும் உணர்த்தின சரித்திரத்தை விரித்துரைக்கவேண்டுவதே முறைமையா யிருக்கின்றது, நண்பர் காட்டினாரென அருளப்பட்டிருக்கின்றது, இவ்வாக்கியத்திற்கு நண்பர் பின்னும் கண்ட வெசேட உரையாவது; "உலகப் படைப்பிர்குப் பின் இறைவன் உலகர்க்கு அறிவுறுத்து மருணூ லருளின னென்றுரைக்கு மிடத்துள்ள துண்மை நோக்கற்பாலது" என்பதே, நுண்மை யின்னதென விளக்கிக் காட்டினாரில்லை, "ப்ருருவாயினை மானாங்காரத் தீரியல்பா யொருவிண் முதல் பூதலம் ஒன்றிய விருசுடரும்பர்கள் பிறவும் படைத்தளித்தழிப்ப மும்மூர்த்திகளாயினை, யிருவரோடொருவனாகி நிறனை, ஒரானீழலொண் கழவிரண்டும் முப்பொழுதேத்திய நால்வர்க் கொளி நெறி காட்டினை, நாட்ட மூன்றாகக் கோட்டினை, யிருநதியாவமோ டொருமதி சூடினை," என்பனவாதிய அருண்மொழிகளின் உண்மைப்பொருள், சிவபெருமான் ஒருவரே முழுமுதற் கடவுளெனவும், அவரிடமிருந்தே சிருட்டித் திதி சங்கார காரண கர்த்தர்கள் தோன்றினார்களெனவும், அம் முழுமுதJற் கடவுள் அடியார்கள் பொருட்டுச் செய்த பற்பல திருவிளையாட்டுகள் இது இது வெனச் சுட்டிக் கூறியிருப்பதுமே யெனவும் மேலோர் கூறுவர

உலகப்படைப்பிற்குப்பின் இறைவன் உலகர்க்கு அறிவுறுத்தும் அருணூலருளினனெனும் பொருளைத் திருவெழுகூற்றிருக்கையில் எம்மொழியும் எச்சொற்றொடரும் தரவில்லை யென்பதுவே தேற்றம். "நால்வர்க்கொளிநெறி காட்டினை" யென்ற சொற்றொடரினும் அப்பொருளையேற்ற எவ்வகையினும் முடியாது. இவ்வரிய செற்றொடருக்கு உரிய பொருளாவது. நமது சைவத் திருமுறைகளிற் பற்பல விடங்களிலும் கல்லாலடியில் வேதத்தை, அல்லது அவ்விரண்டனையும், அதுக்கிரகித்தானென அருளியபோதெல்லாம், அருளினான், சொன்னான், மொழிந்தான் எனக்கூறப்பட்டிருக்க இந்த ஒரு செய்யுளில்மட்டும் "ஒளிநெறி காட்டினை" யென அருளப்பட்டிருப்பதை நோக்குமிடத்து இத்தேவாரப்படுதியின் பொருள் நம்மவர் கொண்ட தல்வென்பதே நிச்சயம், ஒளி என்ற சொல் சிவஞானத்தைக் குறிக்கும், ஒளிநெறி என்றால் சன்மார்க்கம். அதாவது சிவஞானத்தால் சிவத்தோடு அத்துவிதமாயியையும் நெறியுனப் பொருள்தரும். அது, "சன்மார்க்கஞ் சகலகலை புராணம் வேதம்" என்னுஞ் சித்தியார் திருவிருத்தத்தானுமுணர்க்கிடக்கின்றது. தாயுமான சுவாமிகளும் இக்கருத்துடையராயே "அன்று நால்வருக்கும் ஒளிநெறிகாட்டும் அன்படைச் சோதியே" என அப்பதங்களையே அப்படியே யெடுத்தாண்டிருத்தலும் காண்க, ஆதலால் ஒளிநெறிகாட்டினையென்றால், வேதங்களையும் உபநிடதங்களையும் பன்னெடுங்காலம் ஓதியுங் கேட்டும் மனம் ஒருமைப்பட்டுச் சிவஞானப்பேறு அடையாதவராகிய நால்வரும், மற்றுமோர்முறை சிவபிரானை வணங்கிப் பிரார்த்திக்க அப்பொருமான் கல்லாலமரத்தடியிலெழுந்தருளிமெளனமுற்றுச் சின்முத்திரௌயைக் காட்டி அந்நால்வருக்கும் சிவஞான முதிப்பித்ததையே விளக்குமென அறியவேண்டும். கந்தபுராணம் மேருப்படலம். கௌ-வது செய்யுள், "இருவருமுணராவண்ணலேன வெள்ளெயிறியாமை, சிரநிறையனந்த கோடி திளைத்திடு முரத்திற் சீகொள், கரதல மொன்று சேர்ர்த்தி மோனமுத்திகையைக் காட்டி, யொருகணஞ்செயலொன்றின்றி யோகுசெய்வாரினுற்றான்" என்பதனூலுமறியலாம். தயுமானப் பெருந்தகையா ரெத்தன்மையரெனில் சைவத்திருமறைகளை யெழுத்தெழுத்தாய் ஆராய்ந்தௌ கற்று ஆலநிழலமர்ந்த அழகனாரை உபாசித்து அதன்பயனாக நிட்டைகூடிச் சிவானந்தத்தை யுண்டுதெவிட்டி அதன்காரணமாய் நந்தேவராதிகட்குப் பாடியம் போன்ற திருப் பாடல்களை அருளிய சைவசித்தாந்த மூர்த்தி. அதனாலன்றே "மூவர் சொலுந் தமிழ்கேட்குந் திருச்செவிக்கு மூடனேன் புலம்பிய சொல் முற்றுமோதான்" என்றருளினார். இவ் ஒளிநெறி காட்டுதலை அப்பெருந் தகையார் பன்முறையும் விதந்தோதிய தன்மையைக் "கல்லாலினீழறனிலொரு நால்வர்க்குங் கடவுணீ யுணர்த்துவதுங் கைகாட்டென்றால்" என்பதும், "நால்வர்க் கன்றாலின் கீழிருந்து மோன ஞானமமைத்த சின் முத்திரைக் கடலே" என்பதுமாகிய அவர்கள் பாடல்களின் படுதிகள் நன்குகாட்டும், இவ்வாரய்ச்சியால், அபரஞானமாடிய உண்மை நூலறிவர், இறைவன் தவமிக்கார்க்கு உதவியருளி அன்னோர் வாயிலாக உலகினர்க்கு அருணூல்களை நல்குமென்பது நமது திருநெறித்தலைவர்களது திருவுள்ளக் கருத்து எனவும், அறம்பொருளின்பம் வீட்டைத்லாகிய விந்நான்கனையும் சிவபெருமான் பண்டு அருந்தவர்க்குணர்வித் தருளினனெனவும் நம் நண்பர் கட்டிய கட்டு பட்டப்பகலை யிரவென்று கூறிடும் பாதகறே எனப் பட்டினத்தடிகள் தொகுத்த கட்டுரைக்கு இலக்கியமாகின்றது, நிற்க;

ரு. நம்மவர் எழுதியிருக்கிற திருநான்மறை விளக்கத்தின்கொள்கைக்குச் சிவபிரான் கல்லாலமரத்தடியி நால்வர்க்கு அறமாதிய நான்கையும் வேதத்தையும் வேதப்பொருளையும் ஆறு அங்கங்களையும் அருளினானென்று, தமிழ்த் திருமுறையிற் காணப்படும் படுதிகளிற் சிலவற்றைப் பிரமாணம்போல் ஆங்காங்குக் காட்டியிருக்கின்றார். அத்தகைய படுதிகளெல்லாவற்றையும் புத்தகங்களிற் றேடிக் கண்டுபிடிக்குஞ் சிரமத்தை இவ்வாராய்ச்சி உரையை வாசிப்போர் அடையாதிருக்கும் பொருட்டுக் கூடியவரை அவைகளை ஒருங்கு திரட்டி எங்குவரைகின்றேன்.

சம்பந்தர்.

க. அணிபெறு வடமா நிழலினி லமர் வொடு மடியிணை யிருவர்கள்.
      பணிதர வறநெறி மறையொடு மருளிய பரனுரை விடம்..... திருமிழலையே.

உ. ஆவின்கீழறமோர் நால்வர்க் கருளியனலது வாடுமெம் மடிகள்..........
      பாம்புர நன்ன கராரே.

ங.  சைவ வேடந்தா னினைத்தைம்புலனும் அழிந்த சிந்தை யந்தணாளர்க் கறம் பொருள் வீடின்ப மொழிந்தவாயான் முக்கணாதிமேய்து முதுகுன்றே.

ச.  ஓரானீழ லொண் கலிரண்டு முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி காட்டினை.

ரு.  அறங்கிளரு நால்வேத மாலின் கீழிருந்தருளி.........முதுகுன்றமே.

சா. ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று நேரியனான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர் நெறியளித்தோனின்ற கோயில் மிழலையாமே.

எ. பண்டிருக் கொருநால்வர்க்கு நீருரை செய்ததே.  (திருவான்மீயூர்)

அ. பண்டாலி னிழலானைப் பரஞ்சோதியை.  (கோழம்பம்)

கூ. கல்லா னிழல் மேயவனே    (நாகேச்சுரம்)

க0. நிறம் பசுமை செம்மையோ டிசைந்துனது நீர்மை, திறம்பயனுறும் பொருடெரிந் துணருநால்வர்க், கறம்பய னுரைத்தனைப் புறம் பயமமர்ந்தோய்.

கக.  நண்ணியோர் வடத்தினால்வர் முனிவர்க்கன்று எண்ணிலிமறைப் பொருள் விரித்தவரிடம்......திருவையாறே.

கஉ. கல்லானிழல் மேவிக்காமுறுசீர்நால்வர்க்கன் - றெல்லாவறனுரையு மின்னருளாற் சொல்லினார்.  (திருநாலூர்மயானம்)

கங.  ஓதியாரணமாயநுண் பொருளன்று நால்வர்முன்கேட்க நன்னெறி நீதியானிழலுரைக்கின்ற நீர்மையதென்  (திரு ஆமாத்தூர்)

கச.  ஆவநீழலுளாய் அடைந்தார்க்கருளாயே  (திருக்களர்)

கரு.  அன்றவ்வானிழலமர்ந்து வறவுரை நால்வர்க் கருளிப்பொன்றினார் தலையோட்டி லுண்பது (கொச்சைவயம்)

கசா. பண்டு நால்வர்க்கறமுரைத்தருளிப் பல்லுலகினி லுயிர்வாழ்க்கை கண்ட - நாதனார் (திருக்கேதீச்சரம்)

கஎ.  ஆலநீழலிருந்து அறஞ்சொன்ன அழகனே (திருக்கோடாறு)

கஅ. அன்றாலின் கீழிருந்தங்கறம் புரிந்த வருளாளர் (கச்சிநெறிக்காரைக்காடு)

கசா. ஆத்தமென மறைநால்வர்க்கறம்புரி நூலன்றுரைத்த - தீர்த்தமல்கு சடையாருந் திருவேட்டக் குடியாரே.

உ0.  முறைத்திற முறப்பொருடெரிந்துமுனிவர்க்கருளியாலநிழல்வாய், மறைத்திற மறத்தொகுதி கண்டு சமயங்களை வகுத்தவனிடம்.... கோகரணமே.

உக.  காய்த்த கல்லாலதன் கீழிருந்த கடவுளிடம் போலும்....................................வலம்புர நன்னகரே.

உஉ. ஆலநீழலுகந்த திருக்கையே                (ஆலவாய்)

அப்பமூர்த்திகள்.

உங.  மடற்பெரியவாலின் கீழற நால்வர்க்கன்றுரைத்தா னென்கின்றளால் (கழிப்பாலை)

உசா.  விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்.       (ஏகம்பம்)

உரு.  அங்கங்களாறு நான்கு மந்தணர்க் கருளிச்செய்து (செம்பொன்பள்ளி)

உசா.  ஆலின்கீ ழறங்களெல்லா மன்றவர்க் கருளிச்செய்து (பழனம்)

உஎ.  ஆலலா லிருக்கையில்லை யருந்தவ முனிவர்க்கன்று நூலலா னொடிவதில்லை (திருவையாறு).

உஅ.  ஆலத்தார் நிழலில்லறம் நால்வர்க்குக்கோலத்தா லுரை செய்தவன்.  (திருமாற்பேறு)

உகூ.  நற்றவம்செய்த நால்வர்க்கு நல்லறமுற்ற வண்மொழியா வருள் செய்த நற், கொற்றவன் (குரங்காடுதுறை)

ங0.  நாலுவேதியர்க் கின்னருள் நன்னிழலாலன்  (நீலக்குடி)

ஙக.  ஆலநீழலமர்ந்த வழகனார்  (குரக்குக்கா)

ஙஉ.  அறங்காட்டி யந்தணர்க் கன்றாலநீழ லறமருளிச் செய்தவரனார்.  (கோயில்)

ஙங.  ஆலநீழலிருப்பர் ஆகாயத்தர்.    (இடைமருது).

ஙச.  கல்லாலினீழலிற் கலந்து தோன்றும் கவின்மறையோர்
      நால்வர்க்கு நெறிகளன்று - சொல்லாகச் சொல்லியவா
      தோன்றுந் தோன்றும்            (பூவணம்)

ஙரு.  வேதநான்குங் கல்லாலினீழற் கீழறங் கண்டானை (நள்ளாறு)

ஙசா.  கல்லாலின் கீழானை  (நாகைக்காரோணம்)

ஙஎ.  பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும்
      வேதத்தை விர்ப்பதற்கு முன்னோ பின்னோ  (ஆரூர்)

ஙஅ.  ஆலின் கீழ் நால்வர்க் கறத்தான் கண்டாய் (ஆரூர்)

ஙகூ.  அன்றாலின் கீழிருந் தங்கறஞ் சொன்னானை  (மீழலை)

ச0.  ஆலதன் கீழிருந்து நால்வர்க் கறம்பொருள் வீடின்ப
     மாறங்கம் வேதந்தெரித்தானை                 (நாகேச்சரம்)

சக.  ஆலதன் கீழற நால்வர்க் கருள் செய்தானை  (நாரையூர்)

சுந்தரமூர்த்தி நாயனார்.

சஉ. மறைநான்குங் கல்லானிழற் கீழ்ப்பன்னிய வெங்கள்பிரான்
     பழமண்ணிப் படிக்கரையே

சங.  ஆலக்கோயில் கல்லாலநிழற் கீழறங்களுரைத்த அம்மானே (கச்சூர் ஆலக்கோயில்)

சச.  சொல்லாய் கல்லாலா

சரு.  காது பொத்தரைக் கின்னர ருழுவை
      கடிக்கும் பன்னகம் பிடிப்ப ருஞ்சீயங்
      கோதின் மாதவர் குழுவுடன் கேட்பக்
      கோலவா னிழற் கீழறம் பகர
      ஏதஞ்செய்தவ ரெய்திய வின்பமியானுங் கேட்டு
      நின் னிணையடி யடைந்தேன்    (திருநின்றியூர்)

சசா.  நால்வர்க்காலின் கீழுரைத்த அறவனை    (நள்ளாறு)

சஎ.  அருந்தவமா முனிவர்க்கருளாகி யோராலதன் கீழ், இருந்தறமே
      புரிதற்கியல்வாகிய தென்னைகொலாம்.    (நாகேச்சுரம்)

மாணிக்கவாசகர்

சஅ. நன்றாக நால்வர்க்கு நான்மறையி னுட்பொருளை
     யன்றாலின் கீழிருந்தங் கறமுறைத்தான் காணேடீ

சகூ.  அருந்தவருக் காலின்கீ ழறமுதலா நான்கனையு
     மிருந்தவருக் கருளுமது வெனக்கறிய வியம்பேடீ

ரு0. அன்றால நீழற்கீ ழருமறைக டானருளி

திருமாளிகைத்தேவர்.

ருக.  அறம்பல திறங்கண் டருந்தவர்க் கரசாயாலின் கீழிருந்த வம்பலவா

கருவூர்த்தேவர்

ருஉ. முனிவர் தம்மொடு ஆனிழற்கீழ் முறைதெரிந்தோ ருடம்பினராம்

நக்கீரர்.

ருங.  ஆலநீழலன் றிருந்தறநெறி நால்வர் கேட்க நன்கினி துரைத்தனை

ருச.  ஆலின் கீழிருந் தறநெறி யருளியும்

ருரு.  முத்தீ நான்மறை யைம்புல னடக்கிய
       வறுதொழிலாளர்க் குறுதிபயந்தனை

ருசா.  கொடுத்தமைத்த நாண்மாலை கொண்டணிந்த
        நால்வர்க்கண் றானிழற்கீழ் வாண்மாலையாகும்
        வகையருளித், தோண்மாலை, விட்டிலங்கத் தெக்கணமே
        நோக்கி வியந்தகுண, மெட்டிலங்க வைத்தவிறல் போற்றி.


    இனித், தாயுமானப் பெருந்தகையார் தமிழ்மறைக்குப் பாடியம்போன்று அருளிய திருப்பாடல்களிலும் கல்லாலடியில் இறைவன் நால்வர்க்கருளிச் செய்தமையைப் பன்னிப் பன்னிப் பற்பலவிடங்களில் அருளியிருப்பவைகளும் ஆராய்ச்சிக்குரியனவாயிருப்பதால் அப்பகுதிகளிற் சில அடியிற் காட்டப்படுகின்றன.

ருஎ.  திருமருவு கல்லாலடிக்கீழும் வளர்கின்ற சித்தாந்த முத்திமுதலே

ருஅ. எந்தை வடவாற் பரமகுருவாழ்க

ருகூ. சொரூப சாக்ஷாத்கார அனுபூதி அனுசூதமுங், கற்பனை யறக்காண முக்கணுடன் வட நீழற் கண்ணூடிருந்த குருவே.

சா0. நால்வருக் கறமாதி பொருளுரைப் பத்தென்
       

 

            சு. நம் சமயாசாரியர்களும் அருட்கவி பாடியோரும், சிவபிரான் கல்லாலடியில் நால்வருக்கு உபதேசித்த முறைமையை எவ்விதமாய்ப் போற்றித் துதித்து இருக்கின்றார்களென்னும் வாய்மை, மேலே திரட்டிக் காட்டியிருக்கின்ற அவர்கள் அருண்மொழியால் விளங்கும்- ஒரு சமயம் (கூ) கல்லானிழல் மேயவனே யென்றும், மற்றோர் சமயம் (யஅ) அன்றாவின் கீழிருந்தங் கறம்புரிந்த வருளாளர், என்றும், மற்றோரிடத்தில் (உஅ) ஆலத்தார் நிழலில்லறம் நால்வர்க்குக் கோலத்தாலுரை செய்தவன் என்றும், பின்னுமோரிடத்தில் (ஙக) ஆலநிழலமர்ந்த அழகனார் என்றும், பின்னுமோரிடத்தில் (ச0) ஆலதன் கீழிருந்து நால்வர்க்கறம்பொருள் வேடின்ப மாறங்கம் வேதந்தெரித்தானை என்றும், மற்றும் (சச) சொலாய் கல்லாலா வென்றும், மற்றும் (ருரு) முத்தீநான்மறை ஐம்புலன் அடக்கிய அறுதொழிலாளர்க்குறுதி பயட்க்ஹ்தனை யென்றும், (ருசு)  தொடுத்தமைத்த, நாண்மலை கொண்டணிந்த நால்வர்க்கன்றானிழற்கீழ், வாண்மாலையாகும் வகையருளித், தோண்மாலை, விட்டிலங்கத்தெக்கணமே நோக்கி வியந்தகுண, மெட்டிலங்கவைத்த விறல்போற்றி என்றும், சுருக்கமாய்த் தொகுத்தும், விரிவாய் வகைப்படுத்தியும், அருளிச்செய்திருக்கின்றார்கள், தாயுமானப் பெருந்தகையாரோ அவ்வளவோடமையாமல் நால்வர் பெயர் களையுமரிவித்துங் கூறினார்கள். மேற்காட்டிய அருண்மொழிப் படுதிகளிளெல்லாம் ஒரே சரித்திரத்தை யிவ்வித பாடுபாட்டுகன் கூறினார்களேயன்றி வெவ்வேறு சரித்திரங்களை யல்லவென்றும் மேற்காட்டிய க முதல் எரு வரையுள்ள அருண்மொழிப்படுதிகளும் விளக்கும், சிவபிரானோ ஒருநாம மோருருவமொன்றுமிலார், அவருக்கெய்திய நாமங்களெல்லாம் அடியார்கட்கு அவர் சகளீகரித்துத் தோன்றி அருளிய காரணம் பற்றியே, இக்காரணம்பற்றியே, சிவபிரானுக்கு ஆலமர் கடவுள் என்னும் ஒரு நாமம் திவாகரம் நிகண்டு ஆசிரியர் காரணப்பெயராகவே கூறியுள்ளார்கள், திவாகர நிகண்டு தோன்றுதற்கு

1
Hosted by www.Geocities.ws