சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


பெங்களூர்ச் சமஸ்தான கலாசாலை உயிர் நூலாசிரியர் ஸ்ரீமத் வித்துவ சிரோமணி செல்வச் சிரஞ்சீவி

ப.மு.சோமசுந்தரப் பிள்ளையவர்கள், M.A., ஆனர்ஸ், L.T.

இயற்றிய
சிறப்புப்பாயிரம்.


உலகெ லாமலர் சிலம்படி யொருபவ னுவப்பத்
திலக வாணுதற் சிவைவயிற் றிரோதையஞ் செல்வி
யிலக மற்றவள் பொருளவாக் கலைகளைந் தியையு
மலகி லக்கலை தத்துவ முதலைந்தின் வயங்கும்        க

பொன்னஞ் சாரசப் பொருட்டுறை புங்கவன் போற்ற
வன்னந் தாவிய நிவிருத்தி கலையதன் மாட்டு
மன்னும் பூவிடை நாவலந் தீவிதின் வாய்ப்பச்
சொன்ன பாரத மாவரு டந்தனித் தோன்றும்              உ   

கற்றைச் செஞ்சடைக் கருணையங் கடலெனுங் கபாலி
யுற்றப் பேறிவ ணுதவிடக் குமரியென் றோங்கு
மொற்றைக் கண்டத்தி னுயர்மறை யொழுக்கமு முய்வான்
பெற்ற சாதிகள் சீலமு முயர்வன பெரிதும்.                 ங

காசி காஞ்சியுங் கங்கையுங் யமுனையுங் கவேரன்
மாசில் மங்கையு மனத்தக வாசற மாற்ற
வாசி வாவென வாகமாந் தப்பொருள் வழங்குந்
தேசு லாவிய பொழிலிது தெள்ளிதிற் சிறப்ப                ச

ஓத லின்றியு முய்பொரு ளாய்தலை யொழித்துந்
தாத லர்ந்தசெம் மலர்கொடு தாணுவைச் சகத்தோர்
காத லன்பொடு பழிச்சுத லின்றியுங் காட்சி
மேத கத்தரூஉந் திருத்தொண்டர் பதியிதன் விழுப்பம்.      ரு

வேறு

பரசிவ லிங்கந் தன்னைப் பரசுவார்க் கின்ப நல்க
விரவுறு குமரித் தேஎத்து விளங்குவே தாக மங்கள்
வரவினை வழுத்த லாமே வாலறி வினன்மா சத்தி
நிரவுறு குடிலை நோக்க நிரைந்தன நாதம் விந்து.         சா 

விந்துவி னெழுத்துத் தோன்ற மேற்சதா சிவன்பால் வேத
தந்திர மனைத்து மாய தாமரைக் கண்ணா னந்தி
வந்திவண் வழிப்ப டுப்ப வாய்ப்பன கலைகள் யாவு
மெந்திறற் கயிலை யாதி யியன்மா பிரண்டே யிப்பால்.   எ

சுத்தமா மாயை வாயிற் சூக்குமை யாதி வாக்கு
மத்தமாம் பவஞ்ச வாழ்வு மணைதர வந்நால் வாக்கின்
முத்தமார் முதலி ரண்டு மொழிசிவ தத்து வத்து
முத்தம சத்தி யாகு முரிமைகொள் தத்து வத்தும்.         அ

அணிகிளர் மூன்றாம் வாக்கிங் காகம மூல மாக
விணையிலாச் சதாசி வத்து மிணங்கமா கேசு ரத்துத்
தணிவருஞ் சூக்கு மஞ்சேர் தாழ்வில்வை கரிதான் மேவப்
பணியதன் பகுப்பா லிந்தப் பார்மொழி பிரிந்த வன்றே.    கூ

நல்லற மாதி நாட்டும் கற்றமிழ் மொழியு மான்ற
வல்லிய கமலப புத் லரிய் மொழிய மாகச்
சில்லரி யெழுத்தி னோங்குந் திராவிடங் கெளட மெல்லா
மெல்லெனப் புவனி மீது விரிந்தன பற்ப லாற்றான்.     க0

வேறு

உத்தம மறையின் வழக்கொடு புணர்ந்த
    வுயர்தவ நான்குசா தியரே
மெய்த்தவர் கலப்பான் விரவினர் பலரே
    மேதகு மாகம வழியிற்
றுய்த்திடும் பரார்த்த பூசைசெய் குநரே
    சூழ்சிவற் பணிபவர் பலரே
கைத்தலில் நிகம வொழுக்கினை விடுத்துக்
    கதித்தவவ் விராத்தியர் பலரே.                    கக

அரசர்தங் குலத்தி னவனியிற் பிறந்து
    மங்கிவேட் பொழியவை வேள்வி
விரசுற வுஞற்றும் வேளிர்தம் மரபின்
    மேம்படு குலத்தினர் பலரே
கரிசிலாச் சைவ வைதிக நெறியைக்
    கடைப்பிடித் தொழுகுநாற் குலத்து
விரிவுறு மவரே விரவினர் பலரே
    வியன்றிணை மாந்தர்கள் பலரே.                கஉ

சாதிக ணெறியிற் றப்பிடா ராகித்
    தனயரு மனைகளிற் றப்பா
தோதிய வெழுத்தா மைந்தினை யெண்ணி
    யுறுபிணி வருவதற் கஞ்ச
நீதியின் மனுநூன் முறைமுறை யொழுகி
    நிகழ்சிவ தருமமே நடத்திக்
காதிய வினைகள் கடந்தரு ணெறியிற்
    கலந்திடப் பொருந்துநர் பலரே.                 கங

வேதநூல் வழியுஞ் சைவநூன் முறையும்
    விரிதரு வைதிக சைவ
மோது நூற் படியு மிருதிநூற் புராண
    மிளிரிதி காசநூல் விதியுஞ்
சாதக முரைக்கும் பாஞ்சராத் திரமுஞ்
    சாற்றருந் தந்திரம் பிறவும்
வாதமார் சமயப் புறவுரை நூலும்
    வழுத்துநர் செறிகுநர் பலரே.                   கச

தீத்தொழி லொருவிச் சிவபாற் போற்றத்
    திகழுமிப் பரதகண் டத்தே
யாத்திரண் மலிய வந்தணர் பல்க
    வலமந்து மறத்துறை நலியக்
காத்திளங் கன்றைக் கறவையா னென்னக்
    கருதலர்ச் சவட்டிய மன்னர்
பார்த்தனி னோம்ப விளங்குறூஉ நான்கு
    பழந்தமிழ் மண்டல மாதோ.                   கரு

வேறு

உலையாத வனஞ்செறியம் மண்ட லத்தே
    யுயர்தில்லை யந்தணருங் கலயர் நந்தி
தலையாய வகத்தியரும் புரையும் பார்ப்பார்
    தகுதியெவை வேதியர்யார் வேதம் யாவை
மலைவாய மயல்கடியும் இலேகை யாது
    மன்னுதமிழ் மாமறையி னிலங்கக் கூறும்
நிலையாய விருக்காதி யார ணத்தை
    நிறீஇயினான் * யாவனென நிச்ச யித்து.     கசா

 * (யாவன் = தக்கணாமூர்த்தி)

மலர்தலைமா நிலஞ்சைவத் துறையி னிற்ப
    வளர்புகலி யவதரித்த ஞான வள்ளல்
நிலவு தமிழ் முதலாய தமிழ்வே தத்தின்
    நித்திலக்கோ வைகள்யாவும் நிறைத்துக் காட்டிக்
கலியிருளைத் துணித்திடுமுத் தமிழ்நான் மாடக்
    கலையமர்முச் சங்கத்தார் கருத்துங் கூட்டி
யலர்கதிர்நேர் பெருநூலொன் றமைத்துத் தந்த
    வாண்டகைத னற்சார்பை யறையக் கேண்மின்.  கஎ

சுறவுயர்த்த விடைக்கொடியான் பாண்டி நாட்டுத்
    துரிசறுத்த வேளாளர் மரபிற் கோலஞ்
செறிகதிர்முத் தப்பொருநைக் கரையா ளப்பேர்
    திகழ்குடியி னறம்வளர்த்த சிவயோ கத்தாள்
இறுமருங்குல் செய்தவத்தாற் பரனை மாறா
    திறைஞ்சுமா சிலாமணியார்க் குதித்த பாலன்
நறுநுதல்வெண் மதிநிகருங் காந்தி யம்மை
    ஞானகலை தெருட்டவுணர் ஞேய நூலன்.     கஅ

பண்பழுத்த சொல்லாளன் செழியர் தேத்துப்
    பழம்பழுத்த வில்லாளன் பரையி னோர்பா
னண்பழுத்த கல்லாளன் நவின்ற சைவ
    ஞானநெறி வில்லாளன் மெய்கண் டார்க்கோர்
பண்பழுத்த பரம்பரையி னார்ந்த மானா
    பரநல்லூர்ப் பரஞ்சோதி வள்ளல் பாங்க
ரெண்பழுத்த சிவதீக்கை யியையப் பெற்றிங்
    கெழில்பழுத்த சிவபூசை யியற்று மேலன்    ககூ

ஒருமாது பாலூட்ட மாத ராரு
    மொருமாது பால்சொரிய வுவந்து ஞானந்
தருகாழி வேந்தர்முதற் றலைவர் ஞான்றுந்
    தமிழ்முறையைக் கோத்தநம்பி யாண்டார் ஞானறும்
பொருமாழி மன்னவர்தாம் போற்று வந்த
    புணர்வேத மொழியாவை புரிந்த வேள்வி
தருமாழி சூழ்புடவித் தருமம் யாவை
    தாமென்னச் சரிதத்தா னாய்ந்த தூயன்.     உ0

கள்ளவிழ்பூங் கொன்றையணி யானே றேறி
    கனியுறழ்சொற் கனிதழீஇ மாக்கீழ் மன்னி
யள்ளிலைவேற் குமரனொடு மமைந்த காஞ்சி
    யணிநாட்டுச் சேக்கிழார் மாற்றத் தோடும்
புள்ளுணங்கு கொடியுயர்த்துப் புனற்கட் டுஞ்சும்
    பொருபடைய மான்முதலோர் போற்றுஞ் சீர்த்தி
யொள்ளொளிய சிவஞான போத நூலிற்
    குரைவகுத்த முனிக்கரசு கூற்றத் தோடும்.  உக

வேறு

ஒருசிறிது முரணாமே யுரைக்குமொழி கற்றுடையான்
தருதருமந் தவிராமே சங்கரன்பாற் பற்றுடையான்
திருமணிநற் பூதிதிகழ் செல்வமெலாம் பெற்றுடையான்
கருமணிவிற் கண்டத்தான் கழற்குழுவன் முற்றுடையான். உஉ

பூந்தளரின் முப்பொழுதும் போற்றுவார்க் கருள்சுரப்ப
மாந்தளிரா மலர்ப்பதத்து மட்டுவார் குழலம்மை
தேந்திவலை யாத்தியலர் செஞ்சடிலப் பிரான்பக்கற்
சேந்தமருஞ் செம்பியர்தஞ் சிரபுரத்துச் சேர்வுடையான்    உங

ஆங்கிலஞ்செந் தமிழ்பயின்ற வருங்கலையி னாதரவாற்
பாங்குபெறத் துரைத்தனத்துப் பற்றொழிலு முஞற்றிமுனந்
தீங்கொறுக்கு நலத்தண்டத் திறலதிகா ரமும்வகித்து
வாங்குகட லுடுத்தபுவி வயங்குபுக ழடுத்துடையான்.    உச

ஆரதிரு முறையாய்வி னதிநுட்ப நூல்கண்டான்
ஓரதிரு மார்வமுளர் னோரமொரு பால்விண்டான்
போதிரு மானேயம் பெரிதுடையான் சிவமுண்டான்
சீர.திரு மா.சாம்ப சிவநாமங் கொண்டானே.            உரு

 


Hosted by www.Geocities.ws

1