சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


சிதம்பரம் ஸ்ரீ மீனாட்சி தமிழ்க் கலாசாலைத் தலைமையாசிரியர்
பிரமஸ்ரீ மஹாமஹோ பாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி
வே.சாமிநாதையரவர்கள்
எழுதியது


    சிவபத்திச் செல்வர்களாகிய ஸ்ரீ திரு.மா.சாம்பசிவம் பிள்ளையவர்கள் ஆராய்ந்து எழுதி அச்சிற் பதிப்பித்து வெளிப்படுத்திய திருநான்மறை விளக்க ஆராய்ச்சி என்னும் புத்தகத்தைப் படித்துப் பார்த்து மிக்க இன்பமுற்றேன்.  இதிலுள்ள ஒவ்வொன்றும் தக்க ஆதாரங்களைக் காட்டி முன்னோர் கொள்கையினின்றும் சிறிதும் வேறுபடாமல், முன்னோர் கொள்கையினின்றும் சிறிதும் வேறுபடாமல், முன்னோர் மொழி பொருளேயன்றி யவர்மொழியும் பொன்னே போற் போற்றுவமென்பதற்குத் தக்க உதாரணம் என்று கல்விமான்கள் நன்கு மதிக்கும்படி விளங்குகின்றது.  தேவார முதலியவற்றில் மேற்படி பிள்ளையவர்களுக்குள்ள சிறந்த பயிற்சியையும் அவற்றின் பொருளை முறையாக அறிந்திருக்கும் ஆற்றலையும் உண்மைப் பொருளையும் ஆன்றோரொழுக்கத்தையும் தமிழ் நாட்டினர்க்கு எப்படியாவது அறிவித்துப் பயன்படச் செய்ய வேண்டுமென்றுள்ள அவாவையும் இதிலுள்ள வாக்கியங்கள் நன்கு புலப்படுத்துகின்றன.


Hosted by www.Geocities.ws

1