சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


சீர்காழி இலக்கண இலக்கிய மகா வித்துவானவர்களும் 'காழித் தேவாரச்சிறப்பு' என ஓர் அரிய விரிவான ஆராய்ச்சியைச் 'செந்தமிழ்ச்செல்வியில்' பிரசுரஞ் செய்திருப்பவர்களுமாகிய
திருவாளர், ப.அ.முத்துத்தாண்டவராய பிள்ளையவர்கள்
இயற்றியது.


இளம்பிறை கெழீ இய விளங்கவிர் செஞ்சடை
யாலம ரிறைவன் வாலறி வதனா
னான்மறை யிவையென நற்றமி ழருளிய
மூவாப் புகலின் முனைவன் றாவாத்
திரிசிர புரத்துச் செம்மல் கரிசறு
மாசி லாமணி தேசுறுங் கான்முளை
சாம்ப சிவமா லோம்பிய சைவன்
றன்னை யெவ்வயிற் றகுதியி னொத்தி
யம்மதி காணலுஞ் செவ்விதழ் சுருக்கும்
பங்கயத் தமருஞ் செங்கரத் தந்தண
நான்முக மருவினை மேன்முகத் தெழீ இ
நாவின் கிழத்தி நவிறொறு நவின்று
பாவி னல்லது பண்பறி யாமே
யோத்தவை யாவு மோதினை யன்றியு
மொருமொழிப் பொருளைத் திருவினோ டறையாய்
மயங்கினை யோர்கால் வயங்குமெந் தோன்ற
லொருமுக மருவித் திருமுகந் தெழுதி
மலையின் கிழத்தி மகிழ்தொறு முரைத்துச்
சொல்லொடும் பொருளைத் துரிசறக் காட்டி
நல்லகம் படுத்தலி னாமுணர்ந் தனமே.

பாடாண்டிணை, இயன்மொழி.   


Hosted by www.Geocities.ws

1