சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


மதுரைத் தமிழ்ச் சங்கத்து அங்கத்தவரும், பத்திரிகைகளுக்கு விஷயதானஞ் செய்பவரும், யாழ்ப்பாணத்துச் சுன்னைச் சமஸ்கிருத வித்தியாசாலையில் தமிழ்ப் போதகாசிரியராயிருப்பவரும், நன்மாணாக்கருக்கு வேதனமின்றிக் கற்பிப்பவரும், பெளராணிகரும், சைவப்பிரசாரகரும், இரகுவம்மிச உரையாசிரியரும், ஸ்ரீமத் வித்துவரத்தினம் ஸ்ரீமாந் அ.குமாரசுவாமிப் புலவரவர்கள் சரித்திர ஆக்கியோரும், "அடக்கமமாருளுய்க்கு மடங்காமை - யாரிரு ளுய்த்து விடும்" என்னுங் குறண் முற்பகுதிக் கிலக்கியமானவரும், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் மருகரும் மாணாக்கரும் வித்துவ சிரோமணியுமாகிய ஸ்ரீமத்.ந.ச.பொன்னம்பல பிள்ளையவர்கள் மாணாக்கருமாகிய பிரமஸ்ரீ மகா வித்துவான்

கணேச பண்டிதரவர்கள்

அபிப்பிராயமிது:-


    சைவ சமயிகளாகிய எமக்கு முதனூல்களாகவுள்ள வேதம் ஆகமம் என்னுமிரண்டும் வடமொழியாகிய சமஸ்கிருத பாஷையிலேயே ஆதிதொட்டுள்ளன.  தென் மொழியாகிய தமிழ் பாஷையிலன்று, வடமொழியும் தென்மொழியுமாகிய விரண்டும் நமக்குரிய மொழிகளாகவே பண்டைக் காலந் தொட்டு ஆன்றோர்களாற் கொள்ளப்பட்டு வந்தன; வருகின்றன; வருவன.  இற்றைக்கு ஏறக்குறைய ஐயாயிரம் வருஷங்களுக்கு முன்னிருந்தவராகிய திருமூல நாயனாரும்,

    "மாரியுங் கோடையும் வார்பனி தூங்கநின்
    றேரியு நின்றல் கிளைக்கின்ற காலத்து
    வாரிய முந்தமிழு முடனே சொல்லிக்
    காரிகை யார்க்குங் கருணை செய்தானே."

    "அவிழ்க்கின்ற வாறுமது கிட்டுமாறுஞ்
    சிமிட்டலைப் பட்டுயிர் போகின்றவாறும்
    தமிழ்ச் சொல்லட சொல்லெனு மிவ்விரண்டு
    முணர்த் துமவனை யுணரலு மாமே."

    எனச் சிவபெருமானை யவ்விரு மொழிக்கும் முதல்வராகக் கூறி, யவ்விரு மொழியையு மொப்ப வங்கீகரித்துள்ளார்.

    நஞ்சமயாசாரியர்களும், "வடமொழியுந் தென்மொழியு மறைக னான்குமானவன்" என்றும், "ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்" என்றும், "செந்தமிழோடாரியனைச் சீரியானை" என்றும், "ஆரியந் தமிழோடிசையானவன்" என்றும், சிவபிரானை யவ்விரு மொழி வடிவினராகக் கூறி யங்கீகரித்துள்ளார்கள்.

கடைச் சங்கத்துப் புலவர்களும்

    "ஆரியமுஞ் செந்தமிழு மாராய்ந் திதனினிது
    சீர்யதென் றொன்றைச் செரிப்பரிதா - லாரியம்
    வேதமுடைத் துத்தமிழ் திருவள் ளுவனா
    ரோது குறட்பா வுடைத்து."

    "வேதப் பொருளை விரகால் விரித்துலகோ
    ரோதத் தமிழா லுரைசெய்தா - ராதலா
    லுள்ளுன ருள்ளும் பொருளெல்லா முண்டென்ப என்றும்,
    வள்ளுவர் வாய்மொழி மாட்டு."

இருமொழியையு மங்கீகரித்துள்ளார்கள்.

மாதவச் சிவஞான யோகிகளும்

"வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி யதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழுதேத்துங்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனிற்
கடல்வரைப்பி னிதன்பெருமை யாவரே கணித்தறிவார்."
என்றும்,

"இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவ ரியல்வாய்ப்ப
 விருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்த ரிசைபரப்பு
மிருமொழியு மான்றவரே தழீஇயினா ரென்றாலிவ்
விருமொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ."
என்றும்,

அவ்விரு மொழியையு மங்கீகரித்தனர்.

     மெய்கண்ட தேவர் முதலிய சைவ சித்தாந்தநூ லாசிரியர்களும், வடமொழி தென்மொழியாகிய விரண்டையு மங்கீகரித்து நூல் செய்துள்ளார்கள்.

    சேக்கிழார் முதலிய புராணநூ லாசிரியர்களும், இருமொழியையு மங்கீகரித்துள்ளார்கள்.  சுருங்கச் சொல்லின் வடமொழியை நமக்குரிய மொழி யன்றென விலக்கினவர்கள் இற்றை வரையு மொருவருமிலர், அங்ஙனமாக இக்காலத்து இவ்வுண்மையறியாத சிலர் தஞ் சமயத்திற் சிறிது மபிமானமின்றி வடமொழி பார்ப்பனப் பாஷையென மேற்கொண்டு அவ்வடமொழியிலுள்ள வேதாகமங்களையும் அவ்வேதாகமங்களைக் கைக்கொள்ளும் பிராமணர்களையும் நிந்தனை செய்வான் புக்கு, வடமொழி தொன்மொழி யன்றெனவும், அம்மொழி நம்மொழி யன்றெனவும், அம்மொழியிலுள்ள வேதாகமங்கள் நமக்குரிய வல்லவெனவும், அவ் வேதாகமங்களுக்கு முன்னேயே தமிழில் வேதாகமங்கள் இருந்தனவெனவும், வடமொழி வேதங்களைக் கைக்கொள்ளும் பிராமணர்கள் வேறு, நந்தமிழந்தணர் வேறு எனவும், தமக்கோராதரமுமின்றி வாயில் வந்தவாறு கூறுவாராயினர்.  இவர்களுடைய போலிக் கொள்கைகளுக்குத் தேவாரமாதிய சைவ நூல்களில் யாதொரு ஆதாரமுங் கிடையாது.

    அங்ஙனமாகவும் இவர்கள் தேவாராதி சைவ நூல்களிற்றமக்குப் பிரமாணமுள்ளது போல், பிரமாணமல்லாத செய்யுட்களை யெடுத்துக்காட்டி அவற்றின் பொருள்களையுந் திரித்துக் காட்டி உண்மையறியா மாந்தர்களை மெய்யென்று நம்புமாறு மயக்கும் விந்தை எவ்வளவு அதிசயிக்கத்தக்கது! அம்மம்ம! இவர்கள் தங்கள்போலிக் கொள்கைக்கு மாறாகத் தேவாராதி சைவநூல்களிலுள்ள செய்யுட்களை யெடுத்துக் காட்டாது மறைத்துவிடுகின்றார்கள்.  இவர்களவ்வாறு செய்வது தம்போலிக் கொள்கைகளை ஒருவரும் நம்பமாட்டார்களென் றேண்ணியன்றோ? அவைகளையு மெடுத்துக்காட்டித் தக்க பிரமாணங் கொண்டு மறுத்துத் தங்கொள்கையை நாட்டினன்றோ எவர்களுமதனை நம்புவார்கள்.  அன்றியதனை யெவர்கள் நம்புவார்கள்!  ஒருவரும் நம்பார்! நம்பார்!!

        இன்னுமிவர்க ளனுட்டித்துவரும் அனுட்டானக் கிரியைகளோ, அந்தியேட்டிக் கிரியைகளோ, ஆலயக் கிரியைகளோ, எவைகளும் இன்றுவரையும் சமஸ்கிருத மந்திரங்களாலேயே செய்யப்பட்டுவருதல் கண்கூடு.  அங்ஙனமாகத் தமிழில் மந்திரங்கள் இருந்தன வென்பது எவ்வாறு பொருந்தும்? இருந்தனவாயின், அம்மந்திரங்க ளெங்கே? அவற்றைக் கூறும் வேதாகமங்க ளெங்கே?  கடல்கொண்ட தென்பாராயின், தமிழ்நாடு முழுவதையும் கடல்கொண்ட தாயினன்ற்   அவ்வாறு கூறுவது பொருந்தும், ஒரு சிறுகூறுகடலாற் கொள்ளப்பட்டதாயினும் மற்றைக்  கூறுகளிலவைகள் காணப்படலாமே, காணப்படாமையின் அவர்கள் கொள்கை போலியென்பது வெளிப்படை..

        பிரணவமும் ஸ்ரீ பஞ்சாக்கரமுமே தமிழ்மந்திர மென்பாரயென் அங்ஙனம் தமிழ்நூல்கள் கூறாமையானும், ஆன்றேர்கள் ஆட்சியின்மையானும், அம்மந்திரங்களே வேதங்களாலும் ஆகமங்களாலும் வீட்டுநெறிக்குரிய மந்திரங்களென விசேடமாக எடுத்துக் கூறப்படும் மந்திரங்களாகக் காணப்படுதலானும் ஆன்றோர் ஆட்சியுண்மையானும் அவர் கூற்றுச் சிறிதும் பொருந்தாது.  தமிழ் மந்திரங்களையே அவர்கள் கவர்ந்து தமதாக்கிக் கொண்டனரெனின், அது பொருந்தாமை, அம்மந்திரங்களின் உண்மையை நோக்குவார்க்குப் புலனாகும். எங்ஙனமெனின், "ஓ" என்னும் எழுத்தே யன்றி, "ஓம்" என்றொரு எழுத்துத் தமிழினின்மையானும் வடமொழி மந்திரங்களினொவ்வொன்றின் முதலிலும் அது கூறப்படலானும், "ஓம்" என்றெ எழுத்துத் தமிழினிமிமையாம்னும் வடமொழி மந்திரங்களி  வ் வா முதலிலும் அது கூறப்படலானும், "ஓம்" மென்ற எழுத்தை அகாரம், உகாரம், மகாரம், விந்துநாதம் எனப்பிரித்து வழங்குதல் வடமொழிக்கே யுரிமையானும், தமிழ்ச் சிவஞான போதகாரரும் வடமொழி யென்பது தோன்ற "நாடிற்பிரணவமாம்" என்றும் "எண்ணில வோங்காரம்" என்றும் கூறுதலானும் "ஓ மென்று மறைபயில்லா" ரென ஆரியவேதத்தில் முதலிலே சொல்லப்படுமெனத் திருஞான்சம்பந்த மெய்பொருளாவது ---- "நாத நாம நமச்சிவாய வே" எனத் திருநாவுக்கரசு சுவாமிகள் கூறுதலானும் என்க. ஓம் என்றது தமிழ்மந்திரம் அன்றென்பது ஆராயிச்சி நூலுள்ளும் தக்க பிரமணங்களால் வலியுறுத்தப் பட்டது. ஆதலின், இவர் கொள்கையாவும் பிரமாணமற்றதென்பதே துணிபு.

        இங்ங்அன்மே தங் கொள்கையாவும் போலியென்பதுணராத இவர்களுள் ஸ்ரீமாந், கா. சுப்பிரமணியபிள்ளை (எம்.ஏ. எம்.எல். அட்வக்கேற்) அவர்கள் தம்போலிக் கொள்கையைப் பரப்ப முயன்று "திருநான்மறை விளக்க" மென் வோர்விஷயமெழுதிச் "செந்தமிச் செல்வி" யென்னும் பத்திரிகையில் வெளிப்படுத்தி வந்தனர்.

    சிவபத்தி, சிவண்டியார்பத்தி, சிவசின்னதாரர்பத்தி, சிவசாத்திரப்பத்தி, சிவசாத்திர் போதகர்பத்தி, முதலியவற்றிற்கு ஒரு கொள்கலமாயும், "சமன்செய்து சீர்தூக்குங்கோல் போல மைந் தொருபாற் --கோடாமை சான்றேர்க்கணி"  என்னும் தேவர் திருக்குறளுக்கு மேதகு மிலக்கியமாயும் இலங்குகின்ற வரும், "பொய்யமை யாற்றி ன்ற்ம்பிற்--செய்யாமை செய்யாமை நன்று" என்றவண்ணம் தாம் இயற்று நூல்களெல்லாவற்றினும் உண்மைப் பிரமாணங்களையே எடுத்துக்காட்டிப் பூர்வபக்கத்தார்க்கு நல்லறிவுச்சுடர் கொளுத்தி உய்விப்பவரும், சிவபூசா நியமதுர்ந்த்ர்ருமாகிய ஸ்ரீமாந் சாம்பசிவபிள்ளை யவர்கள் உண்மைக்கு மாறாகிய அவர் கொள்கையை நோக்கிச், "சாதி, குலம், பிற்ப்பென்னு" மிவற்றாற்றடுமாறாது, உண்மையை நாட்ட முயன்று "திருநான்மறை விளக்க வாராய்ச்சி" யென வதற்கோர் மறுப்பெழுதி அதனை வெளிப்படுத்த முயன்று அச்சிட்டு, அச்சிட்ட பிரதியுளொன்றை யெமக்கனுப்பியதனை நோக்கி  அபிப்பிராயமெழுதும்படி யெமக்குத் தெரித்தனர்.  அவர் தெரித்தவாறு, அப்பிரிதியை நோக்கினேன், நோக்கியபொழுது சுப்பிரமணிய பிள்ளை யவர்களெழுதிய போலிக் கொள்கைக ளியாவற்றையும் ஒவ்வொன்றாக வெடுத்து ஆராய்ந்து மறுத்த மறுப்புக்கனியாவும், எமக்கு உண்மையாகவே காணப்பட்டன.  "துலை நாவன்ன சமநிலை" நின்று நோக்குவோர்க்கு அவைகளுண்மை யாகவே காணப்படுமென்பதிற் சிறிதுஞ் சந்தேகமே யில்லை.

    இக்கண்டனம் சாம்பசிவ பிள்ளை யவர்களின் உண்மை நிலையையும் ஆழ்ந்த கல்வியறிவின் பெருமையையும் எவர்களுக்கும் உணர்த்தாதே போகாது.  சுப்பிரமணிய பிள்ளை முதலியோரெழுதிய வேதம் தமிழில் இருந்ததென்பது முதலிய பொய் வார்த்தைகளையெல்லாம் நோக்கியபொழுது அவைகள் எண்ணியவாறே அக்கொள்கைகள் பிள்ளையவர்களால் தக்க பிரமாணங்களால் மறுக்கப்பட்டிருத்தலை நோக்கியபொழுது எமக்கு மிகவும் ஆன்ந்தமுண்டாயது.  எமக்கு மாத்திரமன்று, சமயாபிமானத்தை விரும்பிய யாவர்க்கும் இது ஆன்ந்தமளிக்கு மென்பதிற் சந்தேகமே யில்லை.  அம்மறுப்புகளிற் சிலவற்றை இங்கே முகவுரையாக வெடுத்துக் காட்டி யெம் மபிப்பிராயத்தை முடிக்குதும்.  அவை வருமாறு:-

    க. தமிழ் மக்கள் நால்வருக்குச் சிவபெருமான் கல்லாலடியில் அறம் பொருள் இன்பம் வீடென்னும் நான்கு பொருளையும் உபதேசிக்க அந்நால்வரும் அதுகொண்டு நான்கு வேதங்களையும் தமிழில் இயற்றினாரென்பது கா.சு. அவர்கள் கூற்று.

    அது, சிவபிரான் தாம் முன்னர் அருளிய வேதப் பொருளைப் பிரம புத்திரராகிய சனகாதியர்கட்கு உபதேசிக்க அவர்கள் நால்வருங் கேட்டு தெரிந்து நிட்டை கூடினாரன்றி, யவர்கள் நால்வரும் நூல்கள் செய்தாரல்லரென "அணிபெறு வடமாநிழலினி லமர்வொடு மடியிணை யிருவர்கள், பணிதர வறநெறி மறையொடு மருளியபரன்" என்பது முதலாக கா.சு அவர்கள் காட்டிய தேவாரப்பிரமாணங்கள் கொண்டும், வேறு பிரமாணங்கள் கொண்டும் மறுத்துரைக்கப்பட்டுள்ளது.

    உ. "காது பொத்தரை" யென்பதை முதலாகவுடைய தேவாரத்திற் கூறிய பொருளுஞ் சிறப்புடைத்து.  அதில் மூன்றாம் அடி முதலை ஏதம் செய்தவர் என்றுமோனை வரப்பிரித்துப் பொருள் கோடலே இலக்கண விலக்கியங்கட்கும் ஆக்கியோராகிய நாயனார் கருத்திற்கும் ஒத்ததென்பது அப்பதிகத்தையுற்று நோக்கின் நன்கு விளங்கும்.

    ங.  தமிழிலுள்ள நான்மறை யென்னும் நூல் ஆதி முதல் தமிழ் நாட்டிலிருந்து பஃறுளியாறு முதலியவற்றைக் கடல் கொண்டபோது அக்கடல் கோளில் மறைந்தவகளுடன் மறைந்துபோயினவென்ற கா.சு. அவர்கள் கூற்று, தொல்காப்பிய மியற்றப்பட்ட காலம் முதற் சங்கமாதலின் அதற்குப் பின்னுண்டான கடல் கோளில் தமிழ் நான்மறை மறைந்த போது தொல்காப்பியம் மறையாதிருந்து விளங்குவதென்னை? இது வியப்பே யெனத்தக்க வினா நிகழ்த்தி மறுக்கப்பட்டுளது.  இன்னு மவ்வுரை தமிழ் நான்மறை, முதற் சங்க காலத்திருந்த தாயின் முதற் சங்கப் புலவராலியற்றப்பட்டு, புறநானூற்றின் ஆறாவதாயிருக்கின்ற செய்யுள் மறையாதிருக்கத் தமிழ் நான்மறை, மறைந்த தென்னோ? வென்னுமோர் வினா நிகழ்த்தி மறுக்கப்பட்டுளது.

    ச.  அச் செய்யுளில் வரும் நான்மறை யென்பது, தமிழ் வேதமெனக் கூறிய கா.சு. அவர்கள் கூற்று, "புரையி, னற்பனுவ னால்வேதத், தருஞ் சீரித்திப் பெருங் கண்ணுறை, நெய்மலியாவுதி பொங்கப் பன்மாண், வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி, யூபம்நட்ட வியனகளம் பலகொல் யாபலகொல்லோ" என்னுஞ் செய்யுள் கொண்டு மறுக்கப்பட்டுளது.

    ரு.  திருமூலர் பிராமணர்களை யிகழ்ந்தாரென்ற அவர் கூற்று, வேதப் பொருள் சிவபெருமானென்பதை யுணராத பிராமணரையே யிகழ்ந்தாரன்றி, ஏனையோரை யிகழ்ந்தாரல்லரென அத்திருமூலர் கூறிய

    "அந்தண ராவோ ரறுதொழிற் பூண்டுளோர்
    செந்தழ லோம்பிமுப் போது நியமஞ்செய்
    தந்தவநற் கருமத்து நின்றாங் கிட்டுச்
    சந்தியு மோதிச் சடங்கறுப் பார்களே."

    "பெருநெறி யான பிரணவ மோர்ந்து
    குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
    திருநெறி யான திருகை யிருத்திச்
    சொரூப மதானோர் துகளில் பார்ப்பாரே." என்னுஞ் செய்யுட் பிரமாணங்காட்டி மறுக்கப்பட்டுள்ளது.

    சா.  வேதாரணியத்துக்குப் பக்கத்திலே கல்லாலிருந்தது என்னுமவர் கூற்று, தக்க பிரமாணங்கள்காட்டி மறுக்கப்பட்டுளது.

      எ.  "சதாசிவத்துவம் முத்தமிழ் வேதம்" என்பதற்கு சதாசிவ தத்துவத்திலிருந்து முத்தமிழும் வேதமும் தோன்றிய வெனப்பொருள் கொண்டதும், அப்பொருள்,

    "ஆரியமுந் தமிழுமுடனே சொல்லி" என்பதனால் வலியுறுத்தப் பட்டிருப்பதும் மிகவும் வியக்கத்தக்கன.  இவ்வாறே கா.சுப்பிரமணிய பிள்ளை யவர்களுடைய போலிக் கொள்கைகளை எல்லாம் ஆங்காங்கே தக்க பிரமாணங்காட்டி மறுத்த மறுப்புக்களியாவும் மிக வியக்கத்தக்கனவும் யாவரும் மறுக் கொணாத உண்மைகளுமேயாம்.

    ஆதலால் இவ்வுண்மைகளையெல்லாம் யாங்கடைப் பிடித்து உய்யுமாறு பலகாண் முயன்று ஆராய்ந்து இவ்வாராய்ச்சியை யெழுதி கா.சு.  அவர்க ளெழுதிய நவீனப் போலிக் கொள்கைகளால் கல்லாமாந்தர் மயங்காவண்ணம் உதவிய ஸ்ரீமாந்.  சாம்பசிவ பிள்ளை யவர்களுக்குச் சைவ சமயிகளாகிய நாமெல்லாரும் மனமார்ந்த அன்போடு என்றும் ஸ்துதிகூற வேண்டிய வர்களாகவே யிருக்கின்றோம்.  அதுவேயு மன்றி அவர்கள் பூரணாயுனாடனிருந்து இதுபோலும் உத்தமோத்தம நன்மைகளைச் செய்யுங் கருணை பாலிக்கும்வண்ணம் சிவபிரான்றிருவடிக்கு விண்ணப்பஞ் செய்யும் விழுமிய கடப்பாடுமுடையேம்.


Hosted by www.Geocities.ws

1