சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


சென்னை இராஜங்க சட்ட நிர்மாண சபையில் அங்கத்தினராயிருந்த ஸ்ரீகாழி ஸ்ரீமான் கி.சிதம்பரநாத முதலியார் அவர்கள் இளவலாரும், பண்டார சாத்திர முதலிய அரிய பெரிய நூல்களை அச்சிடுவித்துத் தமிழ்ச் சைவ மக்களுக்கு உபகரித்துவரும் வித்துவ சிரேஷ்டருமாகிய

திருவாளர் ச. சதாசிவ முதலியாரவர்கள்

இயற்றியது.


சீர்சான்ற வேதசிவா கமங்களினுண் மைப்பொருள்சேர்
    செவ்வி வாய்ப்ப
ஏர்சான்ற நான்மறைக ளிவையெனமேற் கோள்நிறுவி
    யெவரு மெச்ச
நேர்சான்ற நான்மறையா ராய்ச்சியெனச் செப்புநூ
    னெறியிற் றந்தான்
பேர்சான்ற திரிசிரமா புரத்தமருஞ் சாம்பசிவப்
    பெரியோன் மாதோ

இப்பெரிய நூலதனை வாசிப்போர் தமிழ்மொழியி
    னேற்றத் தோடே
ஒப்பரிய வடமொழியின் மாண்பும்வே தாகமத்தி
    னுயர்வு மெண்ணிச்
செப்பரிய திராவிடவே தக்கலைமெய் கண்டசாத்தி
    ரத்திற் கூறும்
மெய்ப்பொருளீ னுண்மையுணர்ந் துயர்ஞானச்
    செல்வராய் விளங்கு வாரே


Hosted by www.Geocities.ws

1