Home

News

Members

Islam

Contact

Activities

Guest Book

Your Vote

 

 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

அருள்மறை கூறும் அழகிய மொழிகள்:-

மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கி யிருக்கின்றானோ, அதனை (அடைய வேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள், ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு, (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு, எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:32)

 

 

 சிறப்பு செய்திகள்

 

ஜனவரி 24, 2008 

செவ்வாய் கிரகத்தில் பெண்ணா?-நாசா படத்தால் பரபரப்பு


 வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் (Mars) தரையிறங்கி அதை படம்பிடித்து வரும் ஸ்பிரிட் விண்கலம் (6 சக்கர ரோபோட்) அனுப்பியிருக்கும் ஒரு படம் உலகை  பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

4 ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாஸாவின் ஆய்வுக் கலம் தான் ஸ்பிரிட். 2 அடி உயரமான இந்தக் கலம் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து படம் பிடித்து அனுப்பிக் கொண்டுள்ளது. ஒரு சில மாதங்கள் மட்டுமே உயிரோடு இருக்கும் என கருதப்பட்ட இந்தக் கலம் இத்தனை நாட்களாகியும் மிக வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை வலம் வந்து கொண்டுள்ளது.

சமீபத்தில் இந்தக் கலம் அனுப்பிய ஒரு படம் திகில் கலந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ஒரு பாறையின் மீது பெண் அமர்ந்திருப்பதைப் போல உள்ளது இந்தப் படம். அவர் கையை நீட்டிக் கொண்டு போஸ் தந்து கொண்டுள்ளார்.

அது உண்மையிலேயே மனித உருவமா அல்லது பாறையின் உருவமா என்று தெரியாமல் உலகம் குழம்பி வருகிறது.

செவ்வாயில் ஜீவராசிகள் இருக்கலாம் என்றும் நம்பும் வானியல் ஆய்வாளர்களுக்கு இது நல்ல `தீனி' போட்டுள்ளது. அது பெண தான் என இவர்கள் அடித்துப் பேச.. இல்லையில்லை அது பாறையின் உருவம் என்கின்றனர் சீரியஸ் விஞ்ஞானிகள்.

Men Are From Mars, Women Are From Venus என்பார்கள். இங்கே மார்ஸ் கிரகத்தில் பெண் உருவம் கிடைத்துள்ளது.

 

உள்ளே
மரண அறிவிபுக்கள்
முத்துப்பேட்டை செய்திகள்
 துபாயில் வேலைவாய்ப்பு
சங்க செய்திகள்

வளைகுடா செய்திகள்

கல்வி

உங்கள் பக்கம்

வாழ்த்துக்கள்

 சிறப்பு செய்திகள்

கவிதைகள்

 

   

24-01-2008

 

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள 11 ஆசிரியர்களை நியமிக்கக் கோரி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்

 

 

      இன்று காலை 10.30 மணியளவில் தொண்டி பாவோடி பஜாரில் பல மாதங்களாக நிறப்பப்படாமல் உள்ள 11 ஆசிரியைகளை பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நிரப்பப்படாமல் உள்ள காலி இடங்களையும் உடனே நிரப்பக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம், கிளை தலைவர் கலீபுல்லா தலைமையில் நடைபெற்றது.

 

      இதில் மாநிலப் பேச்சாளர் தாஹா மற்றும் கலீபுல்லா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். இறுதியாக மாவட்ட தலைவர் எம். அப்துல் ஹமீது அவர்கள் கடந்த பல மாதங்களாக தொண்டி வுது கிளையின் சார்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் பல அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுக்கப்பட்டு அவைகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு வருவதாகவும், தொண்டியில் அதிகமாக சிறுபான்மை மாணவிகள் கல்வி கற்பதால் வேண்டுமென்றே இந்த பள்ளி புறக்கணிக்கப்படுவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் மாநில தலைமையின்   உத்தரவைப் பெற்று மாடுகளைக் கொண்டு வந்து பள்ளியில் அடைத்து கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறி, கல்வி அமைச்சரும் பள்ளி கல்வித்துறை இயக்குனரும் உடனடியாக நிறப்பப்படாமல் உள்ள 11 ஆசிரியர்களையும் நிறப்பி, மாணவிகள் முறையாகக் கல்வி கற்று, இன்னும் இரண்டே மாதங்களில் வர இருக்கின்ற முழு ஆண்டுத்  தேர்வில் தேர்ச்சியடைந்து முன்னேற்றமடைய உதவுமாறு வேண்டிக்கொண்டார்.

 

      இதே நிலை தொடர்ந்தால் இனி முற்றுகைப் போரட்டங்களை மாநில அளவில் நடத்த நேரிடும் என்பதையும் நினைவூட்டினார். இதில் மாவட்ட செயலாளர் து. ஆ. ஆரிப் கான், மாவட்ட பொருளாளர் அ.ஷாஹுல் ஹமீது, கிளை துணைத்தலைவர்; சாதிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் ஆண்களும் பெண்களுமாக சுமார் 350 பேர் கலந்து கொண்டனர்.

 

23-01-2008

 

வெளிநாடுகளுக்கு செல்வோர் நலன் காக்க 21நாடுகள் ஒப்பந்தம்

 

     அபுதாபி:  வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் ஊழியர்களின் நலன் காக்க ஒன்றிணைந்த நடவடிக்கையை மேற்கொள்வது என இந்தியா உட்பட 21 ஆசிய நாடுகள் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண் டுள்ளன.

 

    அபுதாபியில் நேற்று முன்தினம் 21 ஆசிய நாடுகளின் அமைச்சர்கள் பங் கேற்ற கூட்டம் நடந்தது. இதில், இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆப்கானிஸ்தான், பக்ரைன், வங்கதேசம், சீனா, இந்தோனேசியா, குவைத், மலேசியா, நேபாளம், ஓமன், பாகிஸ் தான், பிலிப்பைன்ஸ், கத் தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், இலங்கை, தாய் லாந்து, வியட்நாம் மற் றும் ஏமன் ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர். வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் ஊழியர்களுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்தி கொடுப் பது, வேலை செய்யும் இடத்தில் காணப்படும் சூழ்நிலைக்கு ஏற்ப கூடுதல் சம்பளத்துக்கு வழி வகை செய்வது, சட்டவிரோதமாக பணியமர்த்துவதை தடுக்க நடவடிக்கைகள் எடுப்பது போன்ற விஷயங்கள் இதில் விவாதிக்கப் பட்டன. இறுதியில் “அபுதாபி கூட் டறிக்கை’ வெளியிடப் பட்டது.இந்த கூட்டத்தில் பங் கேற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் விவகார அமைச்சர் வயலார் ரவி கூறுகையில், “வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் ஊழியர்களின் நலன் காக்க ஒன்றிணைந்து செயல்படுவது என கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது’ என்றார்.

 

நன்றி:தினமலர்

07.01.2008

 

தமிழகம் வரும் நரேந்திரமோடிக்கு எதிராக முற்றுகைப் போராட்டம், உருவானது பாசிஷ எதிர்ப்பு முன்னணி

 

  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நரேந்திரமோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஒத்தக் கருத்துடைய அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் பிரஸிடென்ட் ஹோட்டலில் 07.01.2008 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில்

1. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
2. விடுதலைச் சிறுத்தைகள்
3. சிறுபான்மையினர் கூட்டமைப்பு
4. தலித், இஸ்லாமியர், கிறித்தவக் கூட்டமைப்பு
5. பெரியார் திராவிடர் கழகம்
6. மக்கள் கலை இலக்கியக் கழகம்
7. தமிழர் தேசிய இயக்கம்
8. மறுமலர்ச்சி முஸ்லீம் லீக்
9. இஸ்லாமியர் விழிப்புணர்வு கழகம்
10. கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம்
11. குழந்தைகள் உரிமை இயக்கம்
12. மனிதஉரிமைகளுக்கான குடிமக்கள் இயக்கம்
13. புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணி

உள்ளிட்ட அமைப்புகள் பங்கெடுத்தன.

அதில் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜனநாயக வழியிலான போராட்டக் குழு அமைக்கப்பட்டு அதற்கு ஃபாஸிஸ எதிர்ப்பு முன்னணி (A.F.F) என ஒரு மனதாக பெயரிடப்பட்டது.

அதை வழிநடத்தும் பொருட்டாக வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டு கீழ்கண்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது.

1. சிறுபான்மையினர் கூட்டமைப்பு
2. தலித், இஸ்லாமிய, கிருத்துவ கூட்டமைப்பு
3. விடுதலை சிறுத்தைகள்
4. பெரியார் திராவிட கழகம்
5. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
6. தமிழர் தேசிய இயக்கம்
7. பேரா. மார்க்ஸ் (மனிதஉரிமைகளுக்கான குடிமக்கள் இயக்கம்)
8. மக்கள் கலை இலக்கியக் கழகம்

இதன் அமைப்பாளராக பேரா. ஜவாஹிருல்லாஹ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டத்தின் முடிவாக, எதிர்வரும் 14.01.2008 அன்று நரேந்திரமோடி பங்கேற்கும் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறவிருப்பதால் நமது எதிர்ப்பை ஜனநாயக வழியில் தெரிவிப்பதற்காக 'காமாராஜர் அரங்கை' முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே புரட்சிபாரதம், இந்திய குடியரசு கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் தவிர்க்க முடியாத அவசர காரணங்களால் வரவில்லை. ஆனால் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளன.

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

06.01.2008

 

குடித்து விட்டு விமானம் ஓட்டினால் கடும் நடவடிக்கை பைலட்டுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

 

புதுடெல்லி

     வளைகுடா நாடுகளுக்கு செல்லும் இந்தியப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பஹ்ரைன், குவைத், துபாய் போன்ற நகரங்களுக்கு விமானங்களை இயக்க தனியாருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

 

     நேற்று குவைத் மற்றும் பஹ்ரைன் நகரங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விமான சேவையை மத்திய விமானத்துறை அமைச்சக தலைமை இயக்குனர் கனு கோஹைன் தொடங்கி வைத்தார்.  

 

     பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், " மது அருந்தி விட்டு விமானங்களை இயக்க விமான பைலட், விமான ஊழியர்களுக்கு அனுமதி இல்லை. விமான பயணத்தின்போது இவர்கள் குடித்திருப்பது தெரிய வந்தால் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். பனி மூட்டம் காரணமாக வட மாநிலங்களின் சில நகரங்களில் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டாலும் பைலட்டுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பயிற்சியால் இந்த ஆண்டு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை '' என்று கூறினார்.

 

நன்றி:தினத் தந்தி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   

 

 

© 2003 MIWA-UAE  |  [email protected]  |  designed by Jana Kuraishe

Hosted by www.Geocities.ws

1