Home

News

Members

Islam

Contact

Activities

Guest Book

Your Vote

 

 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

அருள்மறை கூறும் அழகிய மொழிகள்:-

மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கி யிருக்கின்றானோ, அதனை (அடைய வேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள், ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு, (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு, எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:32)

 

நமது சங்கத்தின் நலிந்தோர் நலதிட்டத்திற்கு ஹாஜி Rtn.Dr.L. கமால் பாட்சா அவர்கள் 10,000 திற்கம் நன்கொடை வழங்கியிருக்கிறார்கள்  | 

 

நமது சங்கதின் நலிந்தோர் நலதிட்டதின்கீழ் மாதாந்திர உதவி ஜனவரி 2008க்கு 53 குடும்பங்களுக்கு ங்கிய போது M.R.S. சேக்காதி, M. செயய்யது அப்துல் ரஹ்மான் (பூக்கொய்யா), ஹாஜி K.M. நெய்னார் முஹம்மது, ஹாஜி T.E ஷாஹூல் ஹமீது, S. ஹூமாயூன் கபீர் அகியோர் உடனிருந்தனர்

 

முத்துப்பேட்டையில் குத்பா (ஜும்மா) பள்ளி வாசல் கட்டுமான பணிகள்

 

முத்துப்பேட்டையில் குத்பா (ஜும்மா) பள்ளி வாசல் கட்டுமான பணிகள் மிக துரிதமாக நடந்து வருகிறது. இதுவரை நமது சங்கத்தின் சார்பாக ரூபாய் 25,00,000.00 வசூல் செய்து வழங்க ப்பட்டது.

அல்லாஹ்வின் இல்லம் கட்டுவதற்க்கு இன்னும் நிதி தேவைப்படுவதால் அனைவரும் வாரிவழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு:-


Z. அஹமது குரைஷி
Mob:+97150-3557100

[email protected]

 

 

உள்ளே

மரண அறிவிபுக்கள்

முத்துப்பேட்டை செய்திகள்

 துபாயில் வேலைவாய்ப்பு

சங்க செய்திகள்

வளைகுடா செய்திகள்

கல்வி

உங்கள் பக்கம்

வாழ்த்துக்கள்

 சிறப்பு செய்திகள்

கவிதைகள்

 

   

  • ஏழை பெண்களின் திருமணத்திற்காக ரூ.5,000.00 நிதியுதவியாக வழங்கப்படுகிறது, இத்திட்டம் நமது சங்கம் துவங்கப்பட்ட காலம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  • ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம், சீருடை, புத்தகங்களுக்கு நிதியுதவி நமது சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

  • ஆதரவற்ற முதியோர் மற்றும் விதவை குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 300 வீதம் 54 குடும்பங்களுக்கு உதவி தொகை முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கத்தின் சார்பாக கடந்த 2005 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

  • வசதியற்ற ஏழை தொழில் முனைவோருக்கு தொழில் துவங்க நிதியுதவி மற்றும் தொழில் உபகரனங்கள்  வழங்கப்பட்டு வருகிறது.

  • ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் தகுந்த முறையில் பித்ரா வசூல் செய்து முறைப்படுத்தப்பட்டு நமதூர் மட்டுமின்றி ஏனைய சிற்றூர்களுக்கும் சுமார் 800 குடும்பங்களுக்கு மேல் அரிசி மற்றும் பணம் வழங்கப்படுகிறது. (சென்ற ஆண்டு மட்டும் சுமார் ரூ1,75,000.00க்கு வினியோகம் செய்யப்பட்டது).

  • சென்னை, முத்துப்பேட்டை நல சங்கத்திற்கு கட்டிடம் கட்ட சுமார் ரூ 1,50,000.00 (ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்) நிதியுதவியாக நமது சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டுள்ளது.

  • முத்துப்பேட்டையில் பெண்கள் மதரசா கட்டுவதற்கு நமது சங்கத்தின் சார்பாக ரூபாய் 25,00,000.00 நிதி வசூல் செய்து வழங்கப்பட்டது.

  • முத்துப்பேட்டை கல்வி பேரவை (MEF)க்கு நமது சங்கத்தின் சார்பாக கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளது.

  • முத்துப்பேட்டையில் பள்ளிவாசல்கள் கட்டுமான பணிகளுக்கும், பள்ளிவாசல் பராமரிப்பு பணிகளுக்கும் நிதியுதவி செய்யப்பட்டு வருகிறது.

  • பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளுக்கு மருத்துவ செலவிற்கு அவசரகால நிதியுதவி வழங்கப்டுகிறது.

  • சமுதாய ஒற்றுமையை மையமாக கொண்டு நமதூரில் அணைத்து முஹல்லாக்களையும் ஒருங்கிணைத்து முத்துப்பேட்டை ஐக்கிய முஸ்லீம் ஜமாத் (MUMJ) அமைக்க முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் சார்பாக வழிவகை செய்யப்பட்டது.

  • சங்க உறுப்பினர்களுக்கு அவசரகால தேவைக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது.

  • முத்துப்பேட்டையில் த.மு.மு.க. வுடன் இணைந்து மக்கள் அனைவரும் பயன் பெரும் வகையில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது.

  • சங்கத்தின் உறுப்பினர்களில் யாராவது மரணமடைந்து விட்டால் அவரின் குடும்பத்திற்க்கு ரூபாய் 50,000.00ம் உதவி தொகையாக வழங்கப்படுகிறது.

  • முத்துப்பேட்டைக்கு மிக முக்கிய தேவைகளில் ஒன்றாக இருந்த ஆம்புலன்ஸ் வசதிக்கு ஏற்பாடு செய்ய நமது சங்கம் முக்கிய பங்கு வகித்தது.

  • இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் முத்துப்பேட்டையில் மீவா மருத்துவமனை கட்ட துரிதமாக ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.

  • நமது சங்கம் முத்துப்பேட்டையில் த.த.ஜ. வுடன் இணைந்து நமதூரில் தெருமுனைகளில் வழிகாட்டி பலகை சுமார் 300 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.

  • முத்துப்பேட்டையில் பேருந்து நிறுத்துமிடங்களில் பேருந்து கால அட்டவணை த.த.ஜ. வுடன் இணைந்து நமது சங்கத்தின் மூலம் வைக்கப்பட்டது.

  • சமுதாய நல்லிணக்கத்தை பேனி அனைத்து தரப்பினருமிடையே நட்புறவை பேன வழிவகை செய்யப்படுகிறது.

  • வரதட்சணை என்ற கொடிய நோயிலிருந்து சமுதாயத்தை பாதுகாக்க சிறப்பு பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது.

  • சமுதாய மேம்பாட்டிற்க்கு தேவைப்படும்போது அவ்வப்போது நிதியுதவி மற்றும் சிறப்பு ஆலோசணை வழங்கப்படுகிறது.

    இன்ஷா அல்லாஹ் இன்னும் பல நல்ல செயல் திட்டங்களுடன்...

  •  

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

       

     

     

    © 2003 MIWA-UAE  |  [email protected]  |  designed by Jana Kuraishe

    Hosted by www.Geocities.ws

    1