Home

News

Members

Islam

Contact

Activities

Guest Book

Your Vote

 

 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

அருள்மறை கூறும் அழகிய மொழிகள்:-

மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கி யிருக்கின்றானோ, அதனை (அடைய வேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள், ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு, (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு, எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:32)

    

 SSLC திருவாரூர் மாவட்டத் திளேயே முதல் மாணவன்

  2007ம் ஆண்டு SSLC மெட்ரிகுலேசன் தேர்வில் திருவாரூர் மாவட்டத்திளேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்ற H.முஹம்மது தாரிக் அவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக ஹாஜி K.M.நெய்னார் முஹம்மது அவர்கள் பரிசு வழங்கினார்கள்


  2006-2007ம் ஆண்டிற்கான SSLC மெட்ரிகுலேசன் தேர்வில் முத்துப்பேட்டை பிரிலியன்ட் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவன் சி.க.ம. தெரு S.ஹபீப் சுல்தான் அவரகளின் மகன் H.முஹம்மது தாரிக் 1200க்கு 1034 மதிப்பெண்கள் பெற்று திருவாரூர் மாவட்டத் திளேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றள்ளார். இவரது அபார திறமையை பாராட்டி நமது சங்கத்தின் சார்பாக ஹாஜி K.M.நெய்னார் முஹம்மது அவர்கள் பரிசு வழங்கினார்கள். H.முஹம்மது தாரிக் இன்னும் பல சாதணைகள் படைத்து வீட்டிற்க்கும் நாட்டிற்க்கும் பெறுமை சேர்க்க வேண்டுமென்று பாராட்டி துஆ செய்து கொள்கிறது.

 

உள்ளே
மரண அறிவிபுக்கள்
முத்துப்பேட்டை செய்திகள்
 துபாயில் வேலைவாய்ப்பு
சங்க செய்திகள்

வளைகுடா செய்திகள்

கல்வி

உங்கள் பக்கம்

வாழ்த்துக்கள்

 சிறப்பு செய்திகள்

கவிதைகள்

 

   

 துபாயில் இந்திய பல்கலையின் புதிய பாடத் திட்டம்

 

துபாய்: 18 March. துபாயில் செயல்பட்டு வரும் இந்தியப் பல்கலைக்கழகமான மணிப்பால் பல்கலைக்கழகம் புதிய பொறியியல் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு மனித வளம் தொடர்பான பாடங்கள் புதிய கல்வியாண்டு முதல் தொடங்கப்படவுள்ளன. இது தவிர மேலும் தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் கட்டிடக் கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் இந்த பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.

துபாய் அறிவு கிராம செயல் இயக்குநர் டாக்டர் அயூப் காஜிம், மணிப்பால் பல்கலைக்கழக இயக்குநர் டாக்டர் ராம்ஜி ஆகியோர் இதனை தெரிவித்தனர்.

 

 அமீரகத்தில் உயர் கல்வி பயில

 

அமீரகத்தில் உயர் கல்வி வழங்கும் நிறுவனங்கள் விபரம் வருமாறு :

 

மஹாத்மா காந்தி பல்கலைக்கழகம்

Off Campus Center Block 3 Dubai Knowledge Village Tel : 04 390 2981 /82 E mail : [email protected] www.mgudxboc.com

வழங்கும் படிப்புகள் : BBA,BCA,BFT,BTS,B.Com,BSc ( Computer Science)

 

பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
சர்வதேச மையம் வழங்கும் படிப்புகள் : MBA, EMBA, 1 Year PG Diploma in MGMT Specialization in Finance & Investment Mgmt, banking & insurance, Retail Mgmt, Supply Chain Mgmt, marketing mgmt, Human Resource Mgmt. Other Courses offered BE, B.Arch, IE, BBA, BBM

 

Contact No : 07 2272203 / Mobile : 050 640 8459 E mail : [email protected] / www.rcast.org

 

இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

படிப்புகள் MBA,MCA,MTM ( Tourism ) MA ( Lit ) PG Diplomas : HR, Marketing, Finance, Operations B.Tech ( civil ) B.Com, BA, BCA, BTS ( Tourism ) B.Ed, BPP ( for non 10+2 students for 6 months )

 

Universal Empire Institute of Technology Block No 8 Dubai Knowledge Village Tel : 04 367 21 21 / 22 E mail : [email protected]

 

 

 இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

 

இலவசப் பொறியியல் கல்வியினை தானிஷ் அஹ்மத் பொறியியல் கல்லூரி வழங்குகிறது.

 

ஜுன் 2008 ஆம் ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தானிஷ் அஹ்மத் பொறியியல் கல்லூரியும், அகில இந்திய இஸ்லாமியக் கல்வி நிறுவன குழுமமும் இணைந்து பிளஸ் டூ படிக்கும் ஏழை மாணவர்களின் உயர் கல்வி படிப்பினை கருத்தில் கொண்டு 10 மாணவர்களுக்கு இலவச சேர்க்கை வழங்குகிறது எனபதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


மாணவர்களின் உயர்கல்விக்காக ஆண்டு தோறும் அனைத்து மாவட்டங்களிலும் நேரடித் தகுதித் தேர்வு நடத்தியும், மாணவர்களுக்கு அவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த இலவச சேர்க்கையை வழங்கி வருகிறோம். இவ்வாண்டு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் தகுதித் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் அதற்குண்டான படிவத்தினை அந்தந்த மாவட்டப் பள்ளிகளிலும் பள்ளிவாசல்களிலும், நாங்கள் நியமித்துள்ள முக்கிய நபர்களிடமும் பெற்று பூர்த்தி செய்து அவர்களிடம் நேரடியாகவும் கொடுக்கலாம். அல்லது எங்கள் கல்லூரி முகவரிக்கும் அனுப்பலாம்.


மேலும் விபரங்ளுக்கும் விதிமுறைகளுக்கும் உடன் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
 தானிஷ; அஹ்மது பொறியியல் கல்லூரி,
நெ 166, முடிச்சூர் ரோடு (பதிவு அலுவலகம் எதிரில்),

மேற்கு தாம்பரம், சென்னை 600045.


தொலைபேசி : 9382377788 - 044 32918452, 9380586462

நன்றி : சமரசம்

முஸ்லிம் மாணவர்களின் கவணத்திற்கு

 

முஸ்லிம்கள் கல்வி கற்பது கடமை!
பணம் இல்லையே என்று படிக்காமல் இருப்பது மடமை!!
இதோ, முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள்


B.Sc(Agri) B.V.Sc., B.Ed, A.Arch., B.L., B.E., B.Tech., B.D.S., M.B.B.S., M.S., M.D., M.E., M.S.W., M.Tech.,M.C.A மற்றும் Professional/Technical இதர பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் 366 பேருக்கு மத்திய அரசின் சிறுபான்மையினர் அமைச்சகம் கல்வி உதவித்தொகை வழங்குகின்றது. மாணவியருக்கு தனியே 30% ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக் கல்விக் கட்டணம் (டியுசன் பீஸ்) ரூ.20,000/- வரை. மேலும் விடுதியில் தங்கிப் படிப்போர்க்கு ஆண்டிற்கு ரூ.10,000/- மற்றவர்களுக்கு ரூ.5,000/ கிடைக்கும்.

IIM, IIT, NIT, IITDM, JIPMER ல் படிப்பவர்களுக்கு முழுக்கட்டணம் கிடைக்கும்.


இந்த உதவித் தொகை பெறத் தகுதி பெற்றவர்கள் :

1.     +2 தேர்வில் 50% மார்க் பெற்றிருக்க வேண்டும்.

2.    பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 2,50,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.Affidavit is non judicial stamp paper without notary public signature அல்லது பணி செய்யும் நிறுவனங்களில் இருந்து ஆண்டு வருமானச் சான்றிதழ் பெற்றுத்தர வேண்டும்.
3.     தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்ற அரசு அதிகாரியின் சான்றிதழ் (Residency Certifivcate) பெற வேண்டும்.
4.     வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழ் முஸ்லிம் மாணவர்களும் தமிழ் நாட்டு ஒதுக்கீட்டிலேயே பெற வேண்டும்.
5.   தற்சமயம் படிக்கும் நிறுவனத்திடம் இருந்து அனுமதி (Admission Card) மற்றும் கல்விக் கட்டணம் (Tution fee) சான்றிதழ் பெற வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

www.minorityaffairs.gov.in என்ற இணையத் தளத்தில் Scheme என்ற தலைப்பின்கீழ் Merit Cum Mens Scholorship Scheme ல் சென்று விண்ணப்ப படிவம் மற்றும் இதர விபரங்களை டவுன்லோடு செய்து தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம்.

14-10-2007 Hindu நாளிதழ் பக்கம் 12 ல் மற்றும் 14-10-2007 தினத்தந்தி நாளிதழ் பக்கம் 13 லட இது சம்பந்தமான விளம்பரம் உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-10-2007 இருந்து 30-11-2007 வரை நீடிக்கப்பட்டுள்ளது.


பூர்த்தி செய்யத விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு தாங்கள் படிக்கும் கல்லூரி மூலம் உடனே அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.
 

சிறுபான்மையினர் நல ஆணையர் மற்றும்
மேலான்மை இயக்குநர்,
தமிழ்நாடு சிறுபான்மையனர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,
807, அண்ணாசாலை, சென்னை - 600002



மேலும் விபரங்களுக்கு :
ஜனாப். ரிஸ்வான் அஹமது (மேலாளர் TAMCO)
தொலைபேசி 044-28514846 அல்லது
044-28515450
என்ற தொலைபேசயில் தொடர்பு கெள்ளவும்.

சமுதாய ஆர்வளர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், சமுதாய அமைப்புகள் ஆகிய அனைவரும் இச்செய்தியினை பள்ளிவாசல்கள், கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்து மேலும் அச்சடித்து விநியோகம் செய்து முஸ்லிம்களிடம் எடுத்து சொல்லி உடன் பயன் பெறச் செய்யவும்.
 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-11-2007


வீழ்ந்து கிடக்கும் சமுதாயம் எழுந்து நிற்க கைகொடுப்போம்!!
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

© 2003 MIWA-UAE  |  [email protected]  |  designed by Jana Kuraishe

Hosted by www.Geocities.ws

1