|
உங்கள் பக்கம்
உங்களோடு சில
நொடிகள்...!
அன்புள்ள
வருகையாளர்களுக்கு!
உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.
அல்லாஹ்வின் கிருபையால் தொலை தொடர்பு கருவிகளின் வளர்ச்சியின் வெளிப்பாடே
இன்று உலகின் எந்தெந்த பகுதியிலோ வசிக்கும் நாம் அனைவரும் ஒரு சிறு
வலைத்தளக் கூட்டிற்குள் இணைந்து கருத்துக்களை பறிமாறிக் கொள்ளும்
சூழ்நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம் நம் அனைவரின் இந்த இணையக் கருத்துப்
பறிமாற்றத்தில் இணைந்திருப்பது விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு பகுதியே.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம்
துபாய் U.A.E.ல் 25 ஆண்டுகளை கடந்து.
முத்துப்பேட்டை வரலாற்றிலேயே வெள்ளி விழா கண்ட முதல்
சங்கம் என்று பெயர் பெற்று நற்செயலாற்றி கொண்டிருக்கும்
இவ்வேளைதனில், தாங்கள் அனைவரையும் இந்த இணையத்தின் மூலமாக இணைக்கும்
வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த ஏக இறைவனுக்கே எல்லாப்புகழும் உரித்தாகுக.
சமுதாய சேவையை மையமாக கொண்டு துவங்கப்பட்ட இச்சங்கம் இப்போது 25 ஆண்டுகளை
கடந்து ஒற்றுமையோடும் ஆர்வத்தோடும்; செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த
நற்செய்தியை பெருமிதத்தோடு உங்களுடன் பகிந்து கொள்வதில் பேரின்பம்
அடைகிறோம்.
கடல் கடந்து வாழ்ந்தாலும் தாயகத்தில் வாழும் நமதூர் மக்களின் நலனில்
அக்கறைகொண்டு, நபிகள் நாயகம் ஸல்.. அவர்கள் காட்டித்தந்த வழியில்
உழைப்போம் என்ற நோக்கத்தோடு அறப்பணியாற்றும், வெளிநடுகளில் வாழும்
முத்துநகர் அன்புல்லங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை
தெரிவித்துக்கொள்கிறோம்.
'ஒற்றுமை எனும் கயிற்றை பலமாக பற்றி பிடித்து கொள்ளுங்கள்'
எனும் இறைவனின் கட்டளைக்கு ஏற்ப நமது சங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கி
ஊக்கப்படுத்தி வரும், நமதூர் அனைத்து முஹல்லாக்களின் நிர்வாகத்திற்கும்,
ஏனைய இஸ்லாமிய தொண்டு அமைப்புகளுக்கும், வெளிநாடுகளில் உள்ள நமதூர் நல
சங்கங்களுக்கும் எங்களின் அன்பார்ந்த நன்றியை தெரியபடுத்த கடமை
பட்டுள்ளோம்.
உடலாலும் உல்லத்தாலும் பொருளாதார அடிப்படையாலும் சிரமம்பாராது அறவழியில்
தூயஎண்ணத்தோடு பங்காற்றி வரும் அனைவருக்கும் நாயனின் நல்கிருபை
என்றென்றும் உரித்தாகட்டுமாக.
ஏழைகளுக்காக உழைக்க கூடியவர்களாகவும், உழைப்பவர்களுக்கு உதவக்
கூடியவர்களாகவும் நம்மை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக, ஆமீன்...
என்ற துஆவுடன் உங்களை இந்த இணையத்திற்குள் வரவேற்றுக் கொள்கிறோம்.
வஸ்ஸலாம்..!
என்றும் உங்கள் நண்பன்
Z. அஹமது குரைஷி |
|
|
04-03-2007
தலைவர் மற்றும்
நிர்வாகிகள்
முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம்
துபாய் யு.ஏ.இ.
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்..
என் வாழ்நாளில் மறக்க முடியாத இந்த பயணத்தை வழிவகுத்து உங்களுடன் இனிய
சந்திப்பை ஏற்படுத்தித்தந்த எல்லாம் வல்ல ரஹ்மானுக்கே எல்லாப் புகழும்.
முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கத்தின் 24ம் ஆண்டுவிழாவிற்க்கு நேரில்
வந்து என்னை மனமுவந்து அழைத்தமைக்கு மிக்க நன்றி. ஏதிர்பாராத விதமாக
இவ்விழாவில் உங்களோடு நானும் ஒருவனாக கலந்துகொள்ளும் வாய்ப்பு
கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த மடல் அதை நிவர்த்தி செய்யும் என்ற
நம்பிக்கையோடு எழுதுகிறேன்.
எனது 30 ஆண்டு கால வெளிநாட்டு வாழ்க்கையில் கடந்த 30 நாட்களில் நான்
பெற்ற அனுபவம் என் நினைவில் நீங்காத சுவடுகள். சிறிய இடைவேளைக்கு பிறகு
நிறைய மாற்றங்களை இங்கு என்னால் உணர முடிகிறது. நட்புறவு, சகோதரத்துவம்,
கூட்டு முயற்சி, உதவி மனப்பான்மை, தன்நம்பிக்கை மற்றும் பொழுது போக்கு
அம்சங்களோடு இச்சங்கம் 24ம் ஆண்டுகளை கடந்து இப்போது வெள்ளி விழாவை
எட்டிப்பிடித்தது வியக்கத்தக்க விஷயமாகும். இன்ஷா அல்லாஹ் உங்களின்
சமுதாயப்பணி மென்மேலும் சிறக்க என்றென்றும் தூஆ செய்கிறேன்.
நான் நமது சமுதாயத்தில் பொறுப்பேற்ற பிறகு எனக்கு இந்த பயனம் சிறந்த
அனுபவத்தை தந்ததுடன் என் அனுகுமுறையில் மாற்றங்கள் செய்துகொள்வதற்க்கும்
ஒரு வாய்ப்பாக அமைந்தது. நமதூர் மக்களின் வளர்சியும் அனுகுமுறையும் என்னை
வியப்படைய வைத்தது. குறிப்பாக மீவா சங்கத்தில் துடிப்பு மிக்க
இளைஞர்களும் அனுபவமிக்க பெருப்பாளர்களும் ஒறுங்கிணைந்து செயலாற்றுவதே இதன்
வளர்ச்சிக்கு வித்தாகும் என்று உனர்கிறேன். உலகமெங்கும் பரவி வாழும்
நமதூர் மக்களின் நற்சேவை சங்கங்களில் இந்த முத்துப்பேட்டை இஸ்லாமிய
நலசங்கமே நீண்ட வரலாற்றை பெற்றிருகிறது என்பதை நானும் இச்சங்கத்தின்
அமைப்பாளர்களின் ஒருவன் என்ற முறையில் சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.
இன்ஷா அல்லாஹ் நம் சமுதாயப்பணியில் நமக்குள் சில அடிப்படையான விஷயங்களை
கடைபித்தால் அது நம் வெற்றிக்கு துணை நிற்கும் என்பதை உங்களோடு இதன் மூலம்
பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
1. எந்த சூழலிளும் ஒற்றுமை எனும் கயிற்றை நலுவவிடாமல்
பற்றிபிடித்துக்கொள்ளுதல்.
2. நமது ஒவ்வொரு செயல்களிலும் சேவை
நோக்கத்துடனுடம் தொலைநோக்கு சிந்தணையுடனும் செயலாற்றுதல்.
3. நம் சகோதரர்களின் தவறுகளை மறந்து மன்னித்து விடுவது.
4. தற்பெருமை ஆனவம் போன்றவற்றிலிருந்து விலகி இருப்பது.
5. பிழைகளை மறப்பதும் நிறைகளை நினைப்தும் இயல்பாகக்கொண்டு செயல்படுவது.
போன்ற இந்த ஐந்து அம்சங்களை நமது சமுதாயப்பணியில் உள்ளடக்கி செயலாற்றி
வெற்றியடைய எல்லாம் வல்ல அல்லாஹ் துணைநிற்பானாகவும் என்று துஆ செய்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களின் என்னோடு தகவல் தொடர்பு
வைத்துக்கொள்ளுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும்
இச்சங்கத்தின் நற்சேவைகளில் என்னையும் இனைத்துக்கொண்டு செயலாற்றுவேன்
என்று உறுதி கூறுகிறேன்.
வஸ்ஸலாம்.
M. பசீர் அஹமது
தலைவர்
முத்துப்பேட்டை
ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத்
|
|