|
|
மாதாந்திர பொதுக்குழு கூட்டம் |
|
போலிகளும், கூலிகளும்
பொதுவாழ்வில் புகுந்திடாமல்
வேலியிட்டு சமுதாயம் விழித்திடவே உழைத்திடுவோம்..!
நாள் : 20- 03- 2008 வியாழக்கிழமை
நேரம் : இரவு 8:00 மணிக்கு
இடம் : ஷார்ஜா டேடா தர்பார் பில்டிங்
M. நிஜாம் அவர்கள் ரூமில்
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டு நற்பணிகளை மட்டுமே செய்வதில் 25 ஆண்டுகளை
கடந்து வெள்ளி விழா கண்ட நமது சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ்
வரும் 20-03-2008 வியாழக்கிழமை இரவு 8:00 மணிக்கு ஷார்ஜா டேடா தர்பார் பில்டிங்
ஆ. நிஜாம் அவர்கள் ரூமில் நடைபெற இருப்பதால் நமதூர்வாசிகள் அனைவரும் தவறாது
கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்துதர வேண்டுமாய்; அன்புடன்
கேட்டுக்கொள்கிறோம். வஸ்ஸலாம்.
இன்ஷா அல்லாஹ் வெள்ளி விழா மலரை விரைவில் எதிர்பாருங்கள்
தலைவர்
பொது செயலாளர்
பொருளாளர்
P.M. ஜாஹிர் உசேன் S.ஜஹபர்
உசேன் M.ஷாஹூல்
ஹமீது
|
|
இப்படியும்
சிலர்...??!!! |
|
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டு நற்பணிகளை மட்டுமே செய்வதில் 25
ஆண்டுகளை கடந்து வெள்ளி விழா கண்ட நமது சங்கத்தின் செயல்பாடுகளை
சீர்குளைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிதாக சில தீயசக்திகள் இப்போது
முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் என்ற பெயரை திருடி தங்களின் முகவரியாக
பயன்படுத்தி உலாவந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை
போலிகளை கண்டு
ஏமாறாதீர்..! என்ற தலைப்பில் கடந்த 06.02.2008 அன்று செய்தி
வெளியிட்டிருந்தோம்.
இருப்பினும், மீண்டும் அதே தீயசக்திகள் நமது சங்கத்தின் பெயரில் மக்களை
குழப்பும் வகையில் ஆங்காங்கே கூட்டங்கள் நடத்துவதாக தெரியவந்துள்ளது. இதை
முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்று நமது
நற்சேவைகளை நாசம் செய்யும் போலி நபர்களை கண்டு எச்சரிக்கையாக இருக்கும்படி பொது
மக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
சமுதாயத்தில் பிளவுகளை ஏற்படுத்தி தமக்கு பேரும் பதவியும் கிடைக்க வேண்டுமென்று
சூழ்சிகள் செய்யும் இது போன்ற போலிகளை தங்களின் பிணாமியாக பயன் படுத்தும்
தீயசக்திகள் தங்களின் சுயநலனுக்காக எப்பேர்பெற்ற நாசவேலைகளையும் செய்ய
தயங்கமாட்டார்கள் என்று தெரியவருகிறது. ('பூமியில் குழப்பத்தை
உண்டாக்காதீர்கள்' என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் 'நிச்சயமாக நாங்கள் தாம்
சமாதானவாதிகள்' என்று அவர்கள் சொல்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம்
உண்டாக்குபவர்கள் அன்றோ, ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை. அல்குர்ஆன்
2:11,12)
எனவே நமது சங்கத்தினால் அங்கீகரிக்க படாத போலி நபர்கள் தங்களிடம் வந்து
சங்கத்தின் பெயரில் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டாலோ அல்லது நன்கொடை வசூல்
செய்ய வந்தாலோ அதை நம்பி ஏமாற்ந்து விடாதீர்கள் மேலும் அவர்களுக்கு நல்ல
அறிவுரைகள் வழங்கி தவறான செயல்களிலிருந்து சீர்திருத்தம் செய்யுங்கள் எனவும்
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இது போன்ற போலி நபர்கள் நமது சங்கத்தின் பெயரை பயன் படுத்தி
வெளியிடும் துண்டு பிரசுரங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கு முத்துப்பேட்டை
இஸ்லாமிய நலசங்கம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்பதை இதன் மூலம் அன்புடன்
தெரிவித்துக் கொள்கிறோம். வஸ்ஸலாம்.
மேலும் விபரங்களுக்கு :-
பொது செயலாளர் : S. ஜஹபர் உசேன் 050-4614636
துபை செயலாளர் : T. ஜாஹிர் உசேன் 050-4945445
ஷார்ஜா செயலாளர் : S. நஜ்முதீன் 050-7972946
பொருளாளர் : M.ஷாஹூல் ஹமீது 050-6457732
தகவல் தொடர்பாளர் : Z. அஹமது குரைஷி 050-3557100
ஈமெயில் : [email protected]
[email protected]
வெப்சைட் :
www.miwa.20m.com
தலைவர்
பொது செயலாளர்
பொருளாளர்
P.M. ஜாஹிர் உசேன் S.ஜஹபர்
உசேன் M.ஷாஹூல்
ஹமீது
|
|
போலிகளை
கண்டு ஏமாறாதீர்..! |
|
புதிதாக சில மூடர்கள் இப்போது முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் என்ற பெயரை
திருடி தங்களின் முகவரியாக பயன்படுத்தி உலாவந்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற
ஈமெயில் திருடர்களை நம்பி ஏமாறாதீர்கள்.
நற்பணிகளை மட்டுமே செய்வதில் 25 ஆண்டுகளை கடந்து வெள்ளி விழா கண்ட நமது
சங்கத்தின் செயல்பாடுகளை சீர்குளைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற
புதிய திருடர்கள் உருவாகி இருக்கிறார்கள். இவர்கள் நமது சங்கத்தின் பெயரை
பயன்படுத்தி துண்டு பிரசுரங்கள் மற்றும் ஈமெயில்கள் அனுப்பி
கொண்டிருக்கிறார்கள். இது போன்ற நயவஞ்சகர்களை
முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் வன்மையாக கண்டிக்கிறது
முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கத்தின் அதகாரப்பூர்வமான ஈமெயில்
[email protected]
[email protected]
இணையதளம்
www.miwa.20m.com
இவைகளில்
அல்லாமல் நமது சங்கத்தின் பெயரை பயன்படுத்தி வரும் வேறு எந்த ஈமெயில்களையும்
நம்பி ஏமாறாதீர்கள். போலித்தனமாக சங்கத்தின் பெயரை திருடி தனக்கு முகவரி தேடிக்கொள்ளும்
மூடர்களை நமதூர் வாசிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இனம்கண்டு எச்சரிக்கையாக
இருக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தலைவர்
பொது செயலாளர்
பொருளாளர்
P.M. ஜாஹிர் உசேன் S.ஜஹபர்
உசேன் M.ஷாஹூல்
ஹமீது
|
|
முக்கிய
அறிவிப்பு |
|
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
25ஆண்டுகால நற்சேவையில் வெள்ளி விழா கண்ட
நமது சங்கத்தின் முதல் தலைவரும், மூத்த தலைவருமான ஹாஜி ஜனாப்
T.E. ஷாஹுல் ஹமீது
அவர்கள் தர்காலிகமாக விடுப்பில் ஊருக்கு செல்ல இருப்பதால், கடந்த 25.01.2008
வெள்ளிக் கிழமை மாலை நடந்த செயற்க்குழு கூட்டத்தில் தீர்மானித்தபடி, இன்ஷா
அல்லாஹ்,
தலைவராக ஜனாப் P.M.
ஜாஹிர் உசேன் அவர்களும்
துணைத் தலைவராக
ஹாஜி ஜனாப் P. சின்ன மரைக்காயர்
அவர்களும்
பொறுப்பேற்று அறப்பணியாற்றுவார்கள் என்பதை இதன் மூலம் அன்புடன்
தெரியப்படுத்திக் கொள்கிறோம். அறப்பணிகளை
அன்றாடப்பணியாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் நமது சங்கத்தின் நற்சேவைகள் தொடர
துஆ செய்து நமதூர்வாசிகள் அனைவரும் ஒத்துழைப்பு
நல்கி செயலாற்ற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வஸ்ஸலாம்.
தலைவர்
பொது செயலாளர்
பொருளாளர்
T.E. ஷாஹுல் ஹமீது
S. ஜஹபர் உசேன்
M. ஷாஹுல் ஹமீது
|
|
வெள்ளி விழா..!
வெற்றி விழா..! |
|
சமுதாய நலம் பேணுவதில் சீரோங்கும் -
அதில்
சந்தோசம் காணுவதில் சிறப்போங்கும்
துபாய் முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம்
தொண்டுகள் தொடருகின்ற பாதையில் புகழோங்கும்
இருபத்தைந்தாம் ஆண்டு துவங்குகின்ற இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு
இலங்கும் டிசம்பர் பத்தொன்பதாம் நாள் தியாகத்திரு நாளாம் ஹஜ்பெருநாளன்று
திரளாக
சங்கத்தினர் ஒன்று கூடி இதயங்கள் மகிழ்ந்திட கலந்துறவாடி
இனிதே வெள்ளி விழா கண்ட அன்று நிகழ்வுற்ற நிகழ்சிசியில் கலந்து கொண்டு
நிரைவான கருத்துரைகள், கவிதைகள், பிறவும்
நெஞ்சங்கள் புசிக்க வழங்கி சிறப்பித்த
ஹாஜி
Rtn. Dr.
L. கமால் பாட்சா
அவர்களுக்கும்
(தஞ்சை நேஷனல் பார்மா உரிமையாளர்)
ஹாஜி க.மு. நெயினார் முஹம்மது
அவர்களுக்கும்
(சங்க பிரதிநிதி - முத்துப்பேட்டை)
ஹாஜி
M. பசீர் அஹமது
அவர்களுக்கும்
(முத்துப்பேட்டை ஐக்கிய முஸ்லீம் ஜமாத் தலைவர்)
ஹாஜி
A. ஜாபர் அலி
அவர்களுக்கும்
(உதவி, துணை தலைவர், துபாய் இஸ்லாமிய
வங்கி)
ஹாஜி
M. இமாம்தீன்
அவர்களுக்கும்
(உரிமையாளர் ராயல் பர்னிச்சர், முத்துப்பேட்டை)
K.A.M.
ஹாருன் ரசீது
அவர்களுக்கும்
(உதவி மேலாளர், துபாய் வணிக வங்கி)
S. ஹாஜா அலாவுதீன் அவர்களுக்கும்
H.R. Manager, Nakheel Water Front, Dubai
H.
ஹூமாயுன் கபீர்
அவர்களுக்கும்
(சங்க பிரதிநிதி - முத்துப்பேட்டை)
M.M.
செய்யது முபாரக் ஆலிம்
அவர்களுக்கும்
M.R.S. சேக்காதி; அவர்களுக்கும்
M.
செய்யது அப்துல் ரஹ்மான் (பூக்கொய்யா)
அவர்களுக்கும்
மற்றும் வெள்ளி விழாவை வெற்றி விழாவாக்கித்தந்த
சங்கத்தின் இந்நாள், முன்னாள் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள்,
உறுதுணை புரிந்தோர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் உளம் மகிழ்ந்த
நன்றியை உரித்தாக்குகிறோம், நன்றி.. நன்றி.. நன்றி..!
ஏக வல்லவனாம் அல்லாஹ்வுக்கே எல்லா புகழையும் சமர்ப்பிக்கிறோம்
|
|
நமது சங்கதின் வெள்ளி விழா சிறப்பு
கூட்டத்திற்கு தாயகத்திலிருந்து வருகைதந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட
ஹாஜி
Dr.
L.
கமால் பாட்சா
அவர்களுக்கும்
ஹாஜி
M. இமாம்தீன்
அவர்களுக்கும்
துபாயிலிருந்து வருகை
தரும்
ஹாஜி A. ஜாபர் அலி
அவர்களுக்கும்
K.M. ஹாரூன் ரசீது
அவர்களுக்கும்
நமது சங்க
பிரதிநிதிகள்
ஹாஜி க.மு.நெய்னார்
முஹம்மது
அவர்களுக்கும்
H. ஹுமாயூன் கபீர்
அவர்களுக்கும்
முத்துப்பேட்டை ஐக்கிய முஸ்லீம் ஜமாத் தலைவர்
ஹாஜி M. பசீர் அஹமது
அவர்களுக்கும்
நன்றி ! நன்றி !!
நன்றி !!!
இப்படிக்கு
சங்க உறுப்பினர்கள் மற்றும்
பொறுப்பாளர்கள்
|
|
25ம்
ஆண்டு வெள்ளி
விழாசிறப்பு கூட்டம்
|
நாள்
19.12.2007
புதன் கிழமை
(ஹஜ் பெருநாள் அன்று)
மாலை 5:30 மணிக்கு
|
இடம்
Eat & Drink
Restaurant Party Hall
Garhoud – Dubai
Near to Dubai International Airport |
தலைமை
T.E.
ஷாஹுல் ஹமீது
அவர்கள்
முன்னிலை
M. அப்துல் காதர்
அவர்கள்
M. முஹம்மது ஹிலால்
அவர்கள்
கிரா அத்
S.
ஜஹபர் உசேன்
அவர்கள்
வரவேற்புரை
T. ஜாஹிர் உசேன்
அவர்கள்
சிறப்புரை
P.M.
ஜாஹிர் உசேன்
அவர்கள்(என்னை
கவர்ந்த மீவா)
S.L.M.
சாஹிப் மரைக்காயர்
அவர்கள்(சங்கம்
கடந்து வந்த பாதை)
சிறப்பு விருந்தினர்கள்
Haji Dr. Rtn.
L.
கமால் பாட்சா
அவர்கள்
Prop.: National
Pharma-Tanjour
Haji.
A.
ஜாபர் அலி
அவர்கள்
Assistant Vice President Dubai Islamic Bank
Haji
M.
இமாம்தீன்
அவர்கள்
Prop.: Royal
Furniture - Muthupet
K.A.M.
ஹாரூன் ரசீது
அவர்கள்
Assistant Manager Commercial Bank of Dubai
மேலும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்
நன்றியுரை
H. ஷேக் தாவூது
அவர்கள்
நிகழ்ச்சி தொகுப்பு
Z. அஹமது
குரைஷி அவர்கள்
சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நமதூர்வாசிகள் அனைவரும் குடும்பத்துடன்
தவறாது கலந்து கொண்டு நமது சங்கத்தின் நற்சேவைகள் தொடர துஆ செய்து
ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
|
வாகன வசதி
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது |
|
துபாய் தேரா
அப்பா கடை |
ஷார்ஜா ரோலா
பனாமா ரெஸ்டாரன்ட் |
|
பஸ் புறப்படும்
நேரம் மாலை 4:30 மணிக்கு |
|
தொடர்புக்கு:
|
S.
Jahabar Hussain |
T.
Jahir Hussain |
P.M.
Jahir Hussain |
Z.
Ahamed Kuraysi |
|
050-4614636 |
050-4945445 |
050-5956737 |
050-3557100 |
|
|
25ம் ஆண்டின் நிர்வாகப் பொறுப்பாளர்கள் தேர்வுகூட்ட அழைப்பிதழ் |
|
நாள் |
நேரம் |
இடம் |
|
01-12-2007
சனிக்கிழமை |
இரவு 8:30 மணிக்கு |
துபாய் அல்
இத்திஹாத் ரோடு பிலேம் பார்க்கில் |
பேரன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நற்சேவை செய்வோருக்கு நாயனின் நல்லருள் உண்டாகட்டுமாக, வெள்ளி விழாவின்
வெற்றிப்படிகளில் வீரநடை போடும் நமது சங்கத்தின் 25ம் ஆண்டின் நிர்வாக
பொறுப்பாளர்களை தேர்தெடுக்கும் கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும்
01-12-2007 சனிக்கிழமை இரவு 8:30 மணிக்கு துபாய் அல் இத்திஹாத் ரோடு
பிலேம் பார்க்கில் (தேரா டெனாடா அருகில்) நடைபெற இருக்கிறது.
இக்கூட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நமதூர் வாசிகள் அனைவரும்
தவறாது கலந்து கொண்டு, நெஞ்சார்ந்த உறுதியுடன் நிறைவோடு பணிபுரிய
நிர்வாகப் பொருப்பாளர்களை தேர்வு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
|
நிகழ்ச்சி நிரல் :-
8:30 கராஅத் ஓதி கூட்டம் துவக்கம்
8:45 வரவேற்ப்புரை
9:00 சிறப்புரை 'இஸ்லாம் கூறும் நிர்வாக முறை'
9:30 தேர்தல் கண்கானிப்பாளர் நியமனம்
9:45 பொறுப்பாளர்கள் தேர்தெடுப்பு
10:30 நன்றியுரை
10:45 விருந்து உபசரிப்பு |
அறப்பணிகளை
அன்றாடப் பணியாக செயல்படுத்திக் கொண்டிருக்கும்
நமது சங்கத்தின் நற்சேவைகள் தொடர துஆ செய்து அனைவரும் ஒத்துழைப்பு நல்கி
செயலாற்ற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வஸ்ஸலாம்.
|
|
பித்ரா அரிசி வினியோகம் |
|
வெள்ளி விழாவை நோக்கி வெற்றி நடை போடும் நமது சங்கத்தின் 24 ஆண்டுகால பொது
சேவைகளின் முக்கியத்துவம் பெற்ற ரமலான் மாதத்தில் ஏழைகளுக்கு பித்ரா அரிசி
வினியோக திட்டம் வழக்கம் போல் இந்த ஆண்டும் மிக சிறப்பாக
செயல்படுத்தப்பட்டது.
இதற்காக இவ்வாண்டு ரூ. 1,25,000 (ரூபாய் ஒரு லட்சத்து
இருப்பத்தைந்தாயிரம்)
வசூல் செய்யப்பட்டு நமது சங்கத்தின் தலைவர் T.E.ஷாஹுல் ஹமீது
அவர்களின் தலைமையில் நமது சங்க பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களின்
ஒத்துழைப்போடு முத்துப்பேட்டையில் மட்டுமல்லாமல் பாலாவை, சித்தமல்லி,
எடையூர், சங்கந்தி, நெடும்பலம் ஆகிய ஊர்களுக்கும் 7கிலோ அரிசி வீதம்
சுமார் 1000 குடும்பங்களுக்கு அனைத்து பள்ளிவாசள்களின் முஹல்லா
நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு வினியோகம் செய்யப்பட்டுள்ளது என்பதை இதன்
மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
சேவை நோக்கோடு பித்ரா வழங்கி எல்லா வகையிலும் நமது சங்கத்திற்கு
ஒத்துழைப்பு நல்கிவரும் அனைவருக்கும் நமது சங்கத்தின் சார்பாக நன்றி
தெரிவித்துக் கொள்கிறோம்.
அறப்பணிகளை அன்றாடப்பணியாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் நமது
சங்கத்தின் நற்சேவைகள் தொடர துஆ செய்து அனைவரும் ஒத்துழைப்பு நல்கி உதவிட
வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வஸ்ஸலாம்.
துணைதலைவர்
செயலாளர்
H. அப்துல் காசீம்
S.M. சுல்தான் மரைக்காயர்
|
|
செயற்க்குழு கூட்டம் |
|
வெள்ளி
விழாவை நோக்கி வெற்றி நடைபோடும் நமது சங்கத்தின் செயற்க்குழு கூட்டம்
கடந்த 07-09-2007 வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணிக்கு ஜனாப் S.L.M.சாஹிப்
மரைக்காயர் அவர்களின் ரூமில் ஜனாப். H.சேக்தாவுது அவர்கள் தலைமையில்
நடைபெற்றது. அக்கூட்டத்தில், ரமலான் மாதத்தில் பித்ரா வசூல் மற்றும்
வினியோகித்தல் சம்ந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள்:-
1. நமதூரில் மிகுந்த வரவேற்பை பெற்ற ஏழை எளிய மக்களுக்கு பித்ரா வழங்கும்
திட்டம், வழக்கம் போல் இவ்வாண்டும் துரிதமாக பித்ரா வசூல் செய்து செவ்வனே
வினியோகம் செய்ய வேண்டும், இதை செயலாற்ற பித்ரா வசூல் கமிட்டி
அமைக்கப்பட்டுள்ளது.
2. நமது சங்கத்தின் நற்சேவையை திட்டங்களை விரிவு படுத்தும் வகையில்
ஐரோப்பிய நாடுகளின் கிளை பிரதிநிதியாக Dr. G.ரோஸன்தீன் Ph. D.
நியமிக்கப்ட்டிருக்கிறார்கள்.
3. பொது செயலாளர் N.பகுருதீன் அலி அஹமது விடுப்பில் ஊருக்கு செல்ல
இருப்பதால் உதவி செயலாளரான S.M.சுல்தான் மரைக்காயர் பொது செயலாளராகவும்
M.R.S.அஹமது ராவுத்தர் உதவி செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
4. முதியோர் உதவித் தொகை வசூல் மற்றும் வினியோகித்தல் போன்ற
பொறுப்புக்களுக்கு கண்கானிப்பாளராக ஜனாப் H.சேக்தாவூது அவர்கள்
நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
5. நமதூரில் ஒரு மாணவனுக்கு கல்லூரி படிப்பிற்கான கல்வி உதவி கோரி வந்த
கடிதத்திற்கு நமது சங்கத்தின் சார்பாக கல்வி உதவி தொகை வழங்குவதாக
A.N.A.சகோதரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
6. திருமண உதவி மற்றும் ஏனைய உதிவிகள் கோரி வந்த கடிதங்கள் வாசிக்கப்பட்டு
அவற்றுக்கான உதவி தொகைகள் இன்ஷh அல்லாஹ் நோன்பு பெருநாளுக்கு பிறகு
அனுப்பிவைக்கலாம் என தீர்மாணிக்கப்பட்டது.
ரமலான் பித்ரா வசூல்
கமிட்டி
துபாய SLM சாஹிப் மரைக்காயர், T. ஜாஹிர் உசேன், A. தீன் முஹம்மது,
M. சாஹூல் ஹமீது, P.K.M. கனி, Z.அஹமது குரைஷி, M.சஹாப்தீன், A.ஹாலிது
மீயர், A.N.A.ஹாஜா நஜ்முதீன்
ஜபல் அலி S. அப்துல் அஜீஸ், A. ஜாஹிர் உசேன்
அபுதாபி M.K.S. பரக்கத் அலி, M. கமால் முகைதீன்
ஷார்ஜா S. நஜ்முதீன், S. ஜாபர் உசேன், M. ஜமால் முஹம்மது, M.
நிஜாம், N. நாசர்
அஜ்மான் PM. ஜாஹிர் உசேன், MAK. சிராஜூதீன், MRS. அஹமது ராவுத்தர்,
MAK.ஹிதாயத்துல்லா
அறப்பணிகளை அன்றாடப்பணியாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் நமது சங்கத்தின்
நற்சேவைகள் தொடர துஆ செய்து இக்கமிட்டியுடன் அனைவரும் ஒத்துழைப்பு நல்கி
உதவிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வஸ்ஸலாம்.
|
|
24ம் ஆண்டு விழா சிறப்பு கூட்டம் |
|
வெள்ளி விழவை
நோக்கி வெற்றி நடை பொடும் MIWA..!
அல்லாஹ்வின் நல்லருளால் நமது சங்கத்தின்
24ம்
ஆண்டு விழா சிறப்பு கூட்டம் கடந்த
09-03-2007
அன்று மாலை
5.00
மணிக்கு
ஷார்ஜா இந்தியன் அஷோசியேசனில்
மிகசிறப்பாக நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் நமதூரை சார்ந்த முக்கிய பிரமுகர்களும் சிறப்பு
விருந்தினர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். நமதூர் வாசிகள்
குடும்பத்துடன் கலந்து கொண்டு விழவை சிறபித்து தந்தனர்.
|
|