Home

News

Members

Islam

Contact

Activities

Guest Book

Your Vote

 

 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

அருள்மறை கூறும் அழகிய மொழிகள்:-

மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கி யிருக்கின்றானோ, அதனை (அடைய வேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள், ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு, (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு, எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:32)

 

 

     அமைதியின் பிறப்பிடமாம் முத்துப்பேட்டையின் அன்றாட நிகழ்வுகளை உலகரிய செய்ய மீவா இணைய தளத்தின் சிறிய முயற்ச்சியாக இந்த பக்கத்தை உங்களுக்கு வழங்குகிறோம். தாங்களும் செய்திகளை இங்கே பதிவு செய்ய விரும்பினால் உடனே தொடர்புகொள்ள வேண்டிய முகவரி

Z. Ahamed Kuraysi,  Mobile: +97150-3557100, email: [email protected] இச்சேவை பற்றி தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகினிறன். என்றும் மக்கள் சேவையில் உங்கள் மீவா.

 

முத்துப்பேட்டை செய்திகள்:-

   
 16-03-2008

முத்துப்பேட்டையில் கோஷ்டி மோதல் போலீஸ் குவிப்பு

 11-03-2008

முத்துப்பேட்டை அருகே வேன் மீது லாரி மோதல் 8 பேர் உடல் நசுங்கி சாவு

 04-03-2008 முத்துப்பேட்டையில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை
 19-10-2007

திருவாரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

 17-10-2007

பி.ஜே.பி இந்து முன்னணி குண்டர்களால் முத்துப்பேட்டை முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர்.

 15-10-2007

முஸ்லிம் பெண்களை வெட்ட வந்த சங்பரிவார்! அப்பாவிகளை கைது செய்த காவல்துறை!

 

   

முத்துப்பேட்டையில் கோஷ்டி மோதல் போலீஸ் குவிப்பு


முத்துப்பேட்டை,மார்ச்.16-முத்துப்பேட்டையில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோஷ்டி மோதல் முத்துப்பேட்டையை அடுத்த பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தமீம்அன்சாரி (வயது 17), செய்யதுஅபுதாகீர் (18). இருவரும் அதே ஊரில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்கள். சம்பவத்தன்று இரவு இருவரும் பேட்டையில் உள்ள தாமரைகுளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த தினேஷ்குமார் (17), பாலமுருகன் (18), சதீஷ்குமார் (17), ராஜவர்மன் (16) ஆகிய 4 பேரும் தமீம்அன்சாரியையும், செய்யது அபுதாகீரையும் வழிமறித்து இரவு நேரத்தில் உங்களுக்கு இங்கு என்ன வேலை? எதற்காக வந்தீர்கள்? என்று கூறி தகராறு செய்தனர். ஒரு கட்டத்தில் மறைத்து வைத்திருந்த கட்டையால் இருவரையும் சரமாரியாக தாக்கினர்.

4 பேர் கைது இதில் படுகாயம் அடைந்த இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்பிரசாத், தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன், தினேஷ்குமார், ராஜவர்மன், சதீஷ்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீண்டும் மோதல் இந்தநிலையில், பேட்டையைச் சேர்ந்தவர்கள் இளம்பரிதி (22), கார்த்திக் (23). இருவரும் வயரிங் வேலை செய்பவர்கள். நேற்று மதியம் 2 மணிக்கு, முத்துப்பேட்டையில் வேலையை முடித்து விட்டு, இருவரும் மதியஉணவு சாப்பிடுவதற்காக பேட்டையை நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பேட்டை ரோடு, தெற்குத்தெரு என்ற இடம் அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்தது.

அப்போது, எங்கள் தெருவைச் சேர்ந்த பசங்களை ஏன் அடித்தீர்கள்? என்று மிரட்டி, மறைத்து வைத்து இருந்த கிரிக்கெட் மட்டைகளால் 2 பேரையும் ஓடஓட விரட்டி அடித்தனர். இதில், கார்த்திக்கின் மண்டை உடைந்தது. இளம்பரிதிக்கு இடுப்பு மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த இருவரும் அலறல் சத்தம் போட்டதால், மர்மகும்பல் தப்பியோடிவிட்டது.

டி.ஐ.ஜி. வருகை தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்த புகாரின் பேரில், முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர்அருண்பிரசாத் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

சம்பவம் குறித்து அறிந்த தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி.ஆபாஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனிஷாஉசேன், திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. பாலாஜிசரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், முத்துப்பேட்டையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருப்பதற்காக, 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால், முத்துப்பேட்டை பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

 நன்றி: தினத்தந்தி

 

முத்துப்பேட்டை அருகே வேன் மீது லாரி மோதல் 8 பேர் உடல் நசுங்கி சாவு


திருவாரூர், மார்ச்.11- திருமண கோஷ்டியினர் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில், டிரைவர் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும், 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருமண கோஷ்டி:திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஆலங்காட்டைச் சேர்ந்தவர் பால்சாமி. இவருடைய மனைவி லெட்சுமி (வயது 55). இவர்களுடைய மகள் பிரேமா (27). இவருக்கும், நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அண்ணாப்பேட்டையைச் சேர்ந்த தங்கவேல் மகன் செல்வராஜ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதன்படி, நேற்று காலை மணமகன் இல்லத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் மணமகளின் தாயார் லெட்சுமியுடன் உறவினர்கள் அனைவரும் வேன் ஒன்றில் ஆலங்காடு புறப்பட்டனர்.

லாரி மோதல்:முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூர் புதுரோடு அருகே வேன் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிரே முத்துப்பேட்டையில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருத்துறைப்பூண்டி நோக்கிச் சென்று கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில், எதிர்பாராதவிதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் வேனும், லாரியும் பயங்கரமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில், வேனின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கி தலைகுப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்கள் அனைவரும் அலறினர்.
 

8 பேர் பலி இந்த விபத்தில் முத்துப்பேட்டையை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் வேன் டிரைவர் செந்தில்குமார் (25), ஆலங்காடு சுப்பையன் மனைவி தனபாக்கியம் (50), அதே ஊரைச் சேர்ந்த வீரமுத்து மனைவி வனரோஜா (47), மணமகளின் தாயார் லெட்சுமி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரெங்கசாமி மகள் நித்யா (10), முருகேசன் மனைவி சரோஜா (38), குணசேகரன் மனைவி தனலெட்சுமி (40) ஆகிய 3 பேரையும் மீட்டு முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே 3 பேரும் உயிர் இழந்தனர்.

மேலும், படுகாயம் அடைந்த 13 பேர் ஆம்புலன்ஸ் மூலமாக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சந்தானலெட்சுமி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திடீர் சாலை மறியல் இந்த நிலையில், விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் உயிர் இழந்த நித்யாவின் பிணத்தை மன்னார்குடி சாலையில் போட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது. அப்போது, மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு சென்ற அரசு பஸ் மீது அவர்கள் கல்வீசி தாக்கினர். இதில் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை சமாதானம் செய்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
 

 நன்றி: தினத்தந்தி

 

முத்துப்பேட்டையில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை
 


முத்துப்பேட்டையில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை மர்மமனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

முத்துப்பேட்டை, மார்ச்.4- முத்துப்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.3 லட்சம் மதிபுள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மமனிதர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பூட்டு உடைபு: முத்துப்பேட்டை, காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முகமது அலி என்பவரின் தம்பி மைனூர்தீன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். வீட்டில் மனைவியும், குழந்தைகளும் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று, வீட்டில் உள்ள அனைவரும் வெளிர் சென்று விட்டனர்.

இதனையறிந்த மர்மமனிதர்கள், இரவு நேரத்தில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே வந்தனர். அங்கிருந்த பிரோவை உடைத்து அதில் இருந்த 37 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். ஊரில் இருந்து திரும் வந்த முகமது அலி வீட்டின் கதவு உடைக்க பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பிரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்க பட்டது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும்.

போலீஸ் விசாரணை: இதுகுறித்து முகமது அலி கொடுத்த புகாரின் பேரில், முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், அருபிரசாத் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்ண்டு துரையரசன், டி.எஸ்.பி. பாலாஜிசரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொள்ளை நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: இதேபோல, முத்துப்பேட்டை குன்டான் குளத்தெருவைச் சேர்ந்த அப்துல்ரகுமான் என்பவரது வீட்டிலும், இரும்புக்கேட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த ரூ.5 ஆயிரம் மதிபுள்ள வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளை நடந்த 2 வீடுகளுமே அடுத்தடுத்த தெருக்களில் உள்ளதால், 2 வீடுகளிலும் ஒரே கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் எனத்தெரிகிறது.

 நன்றி: ஹஜா நஜ்முதீன்

 

திருவாரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

 

பி.ஜே.பி இந்து முன்னணி குண்டர்களால் முத்துப்பேட்டை முஸ்லிம்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், அராஜக போக்கில் நடந்து கொள்ளும் முத்துப்பேட்டை காவல் துறையை கண்டித்தும், திருவாரூரில் TNTJ நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

 

 

 நன்றி: tntj.net

 

பி.ஜே.பி இந்து முன்னணி குண்டர்களால் முத்துப்பேட்டை முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர்.

   

பி.ஜே.பி - இந்து முன்னணி குண்டர்களால் முத்துப்பேட்டை வாழ் முஸ்லிம்கள் தொடர்ந்து பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகி வருவதையும், அங்குள்ள காவல் துறையினர் பாரபட்சமாகவும், அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதையும் தொடர்ந்து கண்டு வருகின்றோம்.

இதன் தொடரில் கடந்த சில தினங்களாக மீண்டும் அங்கு மோதல் ஏற்பட்டு முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பொய் வழக்குகளுக்கு பலரும் பலியாகியுள்ளனர். அங்கு நிலவும் பதட்டத்தைத் தணிக்கவும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை கலந்து அறுதல் கூறவும் தேவையான மேல் நடவடிக்கையை மேற்கொள்ளவும் டி.என்.டி.ஜே மாநில துணைப் பொதுச் செயலாளர் ஏ.எஸ் அலாவுத்தீன் 16-10-2007 அன்று முத்துப் பேட்டை சென்றார்.

  

 

 

 

 

 

 

 

 

பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை வரும் வழியில் பி.ஜே.பி இந்து முன்னணி குண்டர்கள் பேருந்தில் ஏறி முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக, முத்துப்பேட்டையை சார்ந்த சையது இப்ராஹீம் என்ற வாலிபரை அரிவாளால் வெட்டினர். மயிரிழையில் உயிர் தப்பிய அவர் கையில் பலத்த காயங்களுடன்...  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை வரும் வழியில் பி.ஜே.பி - இந்து முன்னணி குண்டர்கள் பேருந்தில் ஏறி முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக, முத்துப்பேட்டையை சார்ந்த ஜாபர் சாதிக் என்ற வாலிபரை தாக்கினர் காயத்துடன் ஜாஃபர் சாதிக்...

ஆட்டோ ஓட்டிச் சென்ற நைனா முஹம்மது என்பவரை முத்துப்பேட்டை காவல் நிலையம் அருகிலேயே பி.ஜே.பி - இந்து முன்னணி குண்டர்கள் கொலைவெறி தாக்குதலை நடத்தியதோடு, அவரது ஆட்டோவையும் தீ வைத்து கொளுத்தினர். தலையில் காயங்களுடன் நைனா முஹம்மது..

முத்துப்பேடடை காவல் துறை அராஜகத்தை கண்டித்து முத்துபேட்டை மற்றும் சென்னையில் TNTJ நாளை (20-10-2007) ஆர்ப்பாட்டம்நன்றி: tntj.net

 

முஸ்லிம் பெண்களை வெட்ட வந்த சங்பரிவார்! அப்பாவிகளை கைது செய்த காவல்துறை!

             

அக்டோபர் 15, முத்துப்பேட்டையில் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்திருப்பவர் நஜிமுதீன். இவரது கடையில் ரீசார்ஜ் செய்ய வந்த சங்கர் என்பவருக்கும் இவருக்கும் பிரச்சனை ஏற்பட கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது அப்போது அந்த வழியாக வந்த பி.ஜே.பி. நகர செயலாளர் மாரிமுத்து சங்கருக்கு ஆதரவாக பிரச்சனையில் ஈடுபடுகிறார். இதையடுத்து தாக்கப்பட்ட நஜிமுதீன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்கிறார். ஆனால் 50க்கும் மேற்பட்ட சங்பரிவார கும்பல் காவல் நிலையத்தில் தயாராக நிற்கிறது. விஷயமறிந்து தமுமுக திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் தீன் முஹம்மது காவல் நிலையத்திற்கு சென்றார். புகார் கொடுக்க வந்தவரை தாக்க முனைந்த சங்பரிவார் கும்பலிடம் இருந்து நஜீமுதீனை அழைத்து வருகிறார்.


      ஆனால் சங்பரிவார கும்பல் வெறி அடங்காமல் ஸ்டேஷன் வெளியே நிறுத்தி வைத்திருந்த முஸ்லிம்களுக்கு சொந்தமாக ஒரு ஆட்டோவை கொளுத்துகின்றனர். போலீஸும் வேடிக்கை பார்க்கிறது. அதேபோல் தம்பிக்கோட்டை என்னுமிடத்தில் பேருந்தில் வந்த முஸ்லிம் பெண்களை ஒரு கும்பல் வெட்டுவதற்காக பாய்கிறது. அப்போது தடுக்க முனைகிறார் இப்ராஹீம். அதனால் அவரை வெட்டி விட்டு கும்பல் தப்பி ஒடிவிடுகிறது.


       சம்பவங்களை கேள்விப்பட்ட முத்துப்பேட்டை முஸ்லிம் இளைஞர்கள் ஒன்று திரள, கலவர அபாயம் ஏற்படு கிறது. பஜாரில் சில கடைகள் தாக்கப்படுகின்றன. உடனடியாக அதிரடிப் படை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப் படுகிறது.


       இந்நிலையில் முத்துப்பேட்டை நகர தமுமுக செயலாளர் ஹலீம், இப்ராஹீமை வெட்டிய ரவுடிக்கும்பல் மீது வழக்கு பதிவு செய்த எண்ப்ங் நகல் வாங்குவதற்காக முத்துப்பேட்டை காவல் நிலையம் செல்கிறார். ஆனால் சங்பரிவார சிந்தனை கொண்டதாக மாறிவிட்ட முத்துப்பேட்டை காவல்துறை, ஹலீமைக் கைது செய்கிறது. நகர துணை செயலாளர் ரவூப்பையும் வீடு புகுந்து கைது செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல் பெருநாள் விடுமுறைக் காக வீட்டுக்கு வந்த சென்னை சதக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் தாஜிம் என்பவரை யும் கைது செய்துள்ளனர். கலவரத்தை தொடங்கி வைத்து குளிர் காய்ந்து கொண்டிருக்கும் சங்பரிவாரக் கும்பலை விட்டுவிட்டு அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து வரும் காவல்துறையின் போக்கு முத்துப்பேட்டை மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.


      இதுகுறித்து நம்மிடம் பேசிய மாவட்ட துணைச் செயலாளர் தீன்முஹம்மது, கலவரத்தை ஆரம்பித்த சங்பரிவார் கும்பலையும் அதற்கு பின்புலமாக இருக்கும் மகேஷ், கருப்பு, மாரிமுத்து போன்றவர்களை கைது செய்யாமல் அப்பாவிகளை அதுவும் அடுத்த மாதம் தேர்வை எதிர்நோக்கி இருக்கும் மாணவர் உட்பட அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து வரும் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்களை சட்டரீதி யாக பிணையில் எடுக்க முயற்சிகள் செய்து வருகிறோம். உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யாமல் விட்டு விடும் போக்கினால்தான் முத்துப் பேட்டையில் அவ்வப்போது கலவரம் நடக்கிறது என்றார்.


முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாத் தலைவர் பஷீர் கூறுகையில்,


''கடந்த 15 வருடங்களாக இதுபோன்று பிரச்சினைகள் ஏற்படுவது சாதாரணமாகி விட்டது. இதற்குக் காரணம் பிரச்சி னையை உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் பி.ஜே.பி., இந்து முன்னணி குறிப்பாக பி.ஜே.பி. மாவட்டச் செயலாளர் கருப்பு போன்றவர்கள்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் உண்மைக் குற்றவாளிகளை விட்டுவிட்டு அப்பாவிகளையும், சம்பந்தமில்லா தவர்களையும் கைது செய்வது காவல் துறையின் வாடிக்கையாகி விட்டது.

 

முத்துப்பேட்டையில் பல ஆண்டு களாக அடிக்கடி நடைபெறும் கலவரத் திற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்
      

* இந்த ஆண்டு 3.1.2007 அன்று மாலை 4 மணிக்கு மன்னார்குடியில் கோட்டாட்சியரால் அழைக்கப்பட்டு நடந்த சமாதானக் கூட்டத்தில் ஏற்பட்ட எழுத்துமூலமாக சமாதான உடன்படிக்கை யின்படி 'முஸ்லிம் ஜமாத்' தரப்பினர் நடந்து கொண்ட பிறகும், தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய ஆர்.டி.ஓ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


* ஒவ்வொரு கலவரத்தின் போதும் உண்மையான குற்றவாளிகள் யார் என்று காவல்துறை அறிந்தும் அவர்களைக் கைது செய்யாமல் அப்பாவிகளை இரவு நேரங்களில் கைது செய்வதையும் அவர்களைத் துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும்.


* பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் கலவரங்களில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு சரியான நிவாரணத்தை (இழப்பீடு) அரசு வழங்க வேண்டும்.


* காவல் நிலையம் எதிரிலேயே ஒரு முஸ்லிம் சகோதரரின் ஆட்டோவை தீயிட்டுக் கொளுத்தி நாசப்படுத்தக்கூடிய அளவுக்கு சமூக விரோதிகளின் அராஜகம் அசுர வளர்ச்சி அடைந்திருப் பதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.


* முத்துப்பேட்டை நகர பகுதியில் எப்போதுமே ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டால் கூட சம்பந்தமே இல்லாமல் பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப் பேட்டைக்கு வரும் பேருந்தில் பயணிக்கும் அப்பாவி முஸ்லிம்கள் மீது பி.ஜே.பி. வகையறாக்களால் அடிக்கடி நடத்தப்படும் கொலைவெறித் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்.
என்றார் ஐக்கிய ஜமாத் தலைவர் பஷீர்.
 

   இந்நிலையில் அக்டோபர் 15 அன்று மாநிலச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி முத்துப்பேட்டைக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார்.     மாநில துணைச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி தலைமையில் தமுமுக குழு ஒன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரசேகரனை சந்தித்து முத்துப்பேட்டை நிலைமைகளை எடுத்துரைத்து நியாயம் வழங்கக் கோரியது.


     தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து முத்துப்பேட்டை நிலவரங்களை எடுத்துக் கூறினர். அப்பாவிகளைக் கைது செய்வது பிரச்சினைக்கு எவ்வகையிலும் தீர்வு தராது என்பதை அவர்கள் எடுத்துரைத்து, கைது செய்யப்பட்ட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரினர். சங்பரிவார சக்திகளிடம் வீழந்துவிட்ட முத்துப்பேட்டை காவல்துறை தலை நிமிருமா?

நன்றி: tmmkonline.org

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   

© 2003 MIWA-UAE  |  [email protected]  |  designed by Jana Kuraishe

Hosted by www.Geocities.ws

1