header_image
Home
Sanskrit

3ஶம: ஸ்கந்த4:[உத்தரார்தே4] :: அத2 ஸப்தாஶீதிதமோऽத்4யாய:


ஶ்ரீமத்பாகவதமஹாபுராணம் :: பத்தாம் ஸ்கந்தம் :: அத்யாயம் 87-அனுபந்தம்.
வேதஸ்துதி - ஸ்ரீஸ்ரீதர ஸ்வாமிகள் வியாக்யானம்.
அத2 ஸப்தாஶீதிதமோऽத்4யாய:

அனுபந்தம் 87- ௧.
ஸ்ரீஸ்ரீதர ஸ்வாமிகள் செய்துள்ள ஸ்ரீமத் பாகவதத்தின் வியாக்யானத்திலிலுள்ள தசம ஸ்கந்த 87ம் அத்யாத்திற்குண்டான ஸ்லோக விளக்கங்கள்.

பாகவத ஸ்லோகம் 14.
ஜயிக்க முடியாதவரே! உங்களுக்கு ஜயமுண்டாகட்டும். பொய்யான குணங்களைக் கிரகித்து சராசர ஜீவர்களைக் கண்ணைக் கட்டி மறைக்கும் இந்த மாயையை நாசமாக்குங்கள். இந்த அப்பாவியான ஜீவர்கள் உங்களுடைய கிருபையில்லாமல் இந்த மாயையைக் கொல்லவும் முடியாது, கடக்கவும் முடியாது. வேதங்கள் நீங்கள் சகல சத்குணங்களின் சமுத்ரமென்று பறை சாற்றுகின்றன. (1)

பாகவத ஸ்லோகம் 15.
பிரம்மா, அக்னி, இந்திரன், சூர்யன் முதலான தேவர்கள் மற்றும் இந்தச் சம்பூர்ண உலகம் கண்ணுக்குத் தோற்றமளித்தாலும்,உங்களை விட வேறானதல்ல. ஆகையால் அநேக தெய்வங்களைப் பிரதிபாலிக்கும் வேத மந்திரங்கள் அந்தத் தெய்வங்களின் பெயர்களினால், தனித்தனியாக உங்களுடையதேயான வெவ்வேறு மூர்த்திகளின் வர்ணனையைக் கூறுகின்றன. உண்மை என்னவெனில், நீங்கள் பிறப்பற்றவர். அந்த மூர்த்திகளுடைய ரூபங்களிலும் கூட, உங்களுடைய பிறப்பு உண்டாகிறதில்லை.

பாகவத ஸ்லோகம் 16.
எல்லா வேதங்களும் உங்களுடைய சத்குணங்களை வர்ணிக்கின்றன. இதனால் உலகத்திலிலுள்ள எல்லாவித்வான்களும் உங்களுடைய மங்களகரமான க்ஷேமத்தைத் தரும் குணங்களின் ச்ரவணம், வர்ணனை மற்றும் சம்ஸ்மரணை முதலியவற்றின் வாயிலாக உங்களிடமே பக்தி செய்து சம்பூர்ணக் லேசங்களிலிருந்தும் விடுதலை அடைகிறார்கள்.

பாகவத ஸ்லோகம் 18.
நரஹரே! மனுஷ்ய சரீரம் அடைந்து ஜீவன் உங்களை ச்ரவணம், வர்ணனை மற்றும் சம்ஸ்மரணை வாயிலாக உங்களைப் பஜிக்காவிட்டால், ஜீவர்கள் ஸ்வாசம் விடுவது ஹோமக்குழல் காற்று ஊதுவது போல வ்யர்த்தமே ஆகிறது.

பாகவத ஸ்லோகம் 19.
மனிதன் ரிஷி முனிகளால் கூறப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைப்பிடித்து மனம் ஆகிய இடக்ளில் யாரைச் சிந்தனை செய்கிறானோ, அந்தப் பிரபு அவ்வாறு சிந்தனை செய்யும் மனிதனை ம்ருத்யுபயத்திலிருந்து விடுவிக்கிறார். ஹ்ருதய தேசத்தில் வீற்றிருக்கும் அந்தப் பிரபுவை நாம் உபாசிக்கிறோம்.

பாகவத ஸ்லோகம் 20.
தன்னால் நிர்மிக்கப்பட்ட சம்பூர்ணக் கார்யங்களில் குறைவு, அதிகம், பெரியது, சிறியது, என்ற எண்ணங்களற்று எல்லாவற்றிலும் பரிபூர்ணமாக நிறைந்து நின்று, இந்த ரூபத்தில் அனுபவத்தில் வரக்கூடிய நிர்விசேஷ இருப்பின் ரூபத்தில் நிலைத்திருக்கும் அந்தப் பகவானை நாம் பஜிக்கிறோம்.

பாகவத ஸ்லோகம் 21.
என்னுடைய பரமானந்த ஸ்வரூப ஸ்வாமியே! நான் உங்களுடைய அம்சம். உங்களுடைய சரணங்களுக்குச் சேவை செய்யுமபடி கட்டளையிட்டு உங்களுடைய மாயையால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் என்னுடைய பந்தத்தை நிவிர்த்தி செய்வீர்களாக. சில விரக்தியுடைய சுத்தாந்தக்கரண மஹா புருஷர்கள் உங்களுடைய அமிர்தமயமான கதாசாகரத்தில் சஞ்சரித்துக்கொண்டு பரமானந்தத்தில் மூழ்கிவிடுகிறார்கள். இவர்கள் தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோக்ஷம் - இந்த நான்கு புருஷார்த்தங்களையும் துரும்பாக மதிக்கிறார்கள்.

பாகவத ஸ்லோகம் 22.
நீங்கள் ஜகத்தின் ஸ்வாமியாகவும், எங்களுடைய ஆத்மாவாகவும் இருக்கிறீர்கள். இந்த ஜன்மத்திலேயே என்னுடைய மனம் உங்களிடத்தில் ரமிக்கட்டும். என்னுடைய ஸ்வாமியே! இந்த விதமான மனித ஜன்மம் கிடைக்கும் சௌபாக்யம் எனக்கு எப்பொழுது கிட்டும்?

பாகவத ஸ்லோகம் 23.
தேவரே! உங்களுடைய சரணங்களை பிரேமையுடன் ஸ்மரிப்பது என்பது மிகவும் துர்லபம். எப்படியிருந்தாலும் நான் வேண்டுவதெல்லாம் உங்களுடைய ஸ்மரணை இருக்கவேண்டுமென்பதே.

பாகவத ஸ்லோகம் 24.
அனந்தரே! புத்தி முதலியவைளுக்குள் அடங்கியிருக்கும் நான் எங்கே? மனம், வாக்கு, முதலியவைகளுக்கு அப்பாற்பட்ட உங்களுடைய அகோசர ரூபம் எங்கே? உங்களை அறிவது மிகவும் கடினமான கார்யம். ஆகையால் தீனபந்தோ! தயாசிந்தோ! நரஹரி தேவரே! எனக்கோ உங்களிடம் பக்தியையே கொடுங்கள்.

பாகவத ஸ்லோகம் 25.
அனந்த மஹிமாசலப் பிரபோ! எந்த மந்தமதி புருஷன் பொய்யான தர்க்கங்களின் மூலமாகப் பிரேரிக்கப்பட்ட அத்யந்தக் கடுமையான வாத-விவாதங்களாகிற கோர இருட்டில் சிக்குண்டு அல்லல்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உங்களுடைய ஞானமார்க்கம் ஸ்பஷ்டமாகத் தெரிவது சம்பவிக்கத்தக்கதல்ல. ஆகையால் என்னுடைய வாழ்க்கையில் நான் உங்களை "ஸ்ரீமன் மாதவர், வாமனர், திரிலோசனர், ஸ்ரீசங்கரர், ஸ்ரீமதி, கோவிந்தர், மதுபதி என ஆனந்த சாகரத்தில் மூழ்கிக் கூப்பிடும் சௌபாக்யம் பொருந்திடும் வேளை எப்பொழுது கை கூடும்?

பாகவத ஸ்லோகம் 26.
இந்த உலகமானது அதனுடைய ஸ்வரூபம், நாமம் மற்றும் ஆக்ருதியின் ரூபத்தில் அசத்தாக இருந்தாலும் கூட எந்த அதிஷ்டானத்தின் சத்ய இருப்பினால் உண்மையாகத் தெரிகிறதோ, மற்றும் இந்த அசத்யப் பிரபஞ்சத்தில் சத்ய ரூபத்தில் சதாகாலமும் விளங்கிக்கொண்டிருக்கிறதோ, அந்தப் பகவானை நாம் பஜிக்கிறோம்.

பாகவத ஸ்லோகம் 29.
ஜனங்கள் பஞ்சாக்னி முதலிய தாபங்களால் தபிக்கப்பட்டுத் தவம் செய்தாலும், மலைகளிலிருந்து கீழே விழுந்து ஆத்மஹத்தி செய்தாலும், தீர்த்தங்களைச் சென்று சேவித்தாலும், வேதங்களை ஓதினாலும், யக்ஞங்கள் மூலமாக யஜித்தாலும், அல்லது விதவிதமான கொள்கைகளின் மூலமாகத் தங்களுக்குள் விவாதம் செய்தாலும், உங்களுடைய கருணையின்றி, இந்த ம்ருத்யுமய சம்சார சாகரத்தைக் கடக்கவே முடியாது.

பாகவத ஸ்லோகம் 30.
ந்ருசிம்ஹரே! உங்களுடைய சிருஷ்டி சங்கல்பத்தினால் கலைக்கப்பட்டு மாயையானது கர்மங்களை விழித்தெழச் செய்தது. அதனால் தான் எங்களுடைய பிறப்பே உண்டாயிற்று. இப்பொழுது இந்த ஜன்ம-மரணச் சுழலில் அகப்பட்டுக் கொண்டு நாங்கள் துக்கமடைந்திருக்கிறோம்.

பாகவத ஸ்லோகம் 31.
ச்ருதியானது சமஸ்த த்ருச்யப் பிரபஞ்சத்தின் அந்தர்யாமி ரூபத்தில் யாரைக் கானம் செய்கின்றனவோ, அவ்வாறே யுக்தியினாலும் நிச்சயிக்கப்படுகிறது. சர்வக்ஞரும் சர்வ சக்திமானும் மற்றும் அந்த சர்வ சௌந்தர்ய மாதுர்ய நிதிப் பிரபுவை நான் மனத்தினால் சரண மடைகிறேன்.

பாகவத ஸ்லோகம் 32.
ஹே நரசிம்ஹரே! இந்தஜீவன் சம்சாரச் சக்கரத்தினால் பொடிப்பொடியாக்கப்பட்டு விதவித சம்சாரிக பாபங்களாகிற எரிகின்ற கொள்ளிக் கட்டைகளால் வெந்து கொண்டிருக்கிறார்கள். ஆபத்துக்களால் சூழப்பட்டிருக்கும் ஜீவன் எப்படியோ உங்களுடைய கிருபையால் உங்களைச் சரணடைந்திருக்கிறார்கள். நீங்கள் அவர்களை உத்தாரணம் செய்யுங்கள்.

பாகவத ஸ்லோகம் 33.
பரமானந்தமய குருதேவரே! பகவன்! என்னுடைய மனம் உங்களுடைய சரணங்களை அடைகிற பொழுது நான் உங்களுடைய கிருபையால் சமஸ்த சாதனங்களின் சிரமத்திலிருந்தும் விடுபட்டுப் பரமானந்தத்தை அடைவேன்.

பாகவத ஸ்லோகம் 34.
உங்களைப் பஜிப்பவர்களுக்கு நீங்கள் பரமானந்த சித்கன ஆத்மாவாகவே இருக்கிறீர்கள். ஆகையால் அவர்களுக்கு துச்சமான ஸ்தீரி, புத்ரன் மற்றும் தனம் முதலியவைளால் என்ன பிரயோஜனம்?

பாகவத ஸ்லோகம் 37.
தங்கம், கிரீடம், குண்டலம், வளை , மற்றும் கிங்கிணி ரூபத்தில் இருந்தாலும் உண்மையில் தங்கமே தான். இதே போல மஹத்தத்வம், அகங்காரம், ஆகாயம், மற்றும் வாயு ரூபத்தில் தோற்றமளிக்கும் இந்தச் சம்பூர்ண ஜகத் உண்மையில் உங்களை விட வேறானது அல்ல.

பாகவத ஸ்லோகம் 38.
மாலையில்தோன்றும் சர்ப்பத்தைப் போல சத்ய ஸ்வரூபமான உங்களிடமிருந்து உற்பத்தியாயிருந்தும் இந்தத் திரிபுவனம் சத்யமல்ல. பொய்யான தங்கம் கடைத் தெருவில் விற்கப்பட்ட போதிலும், உண்மைத் தங்கமாகி விடாது. வேதங்களின் தாத்பர்யமும் ஜகத்தை சத்யமென நிரூபிப்பதற்கல்ல. இதனால் இந்திரன் முதலியவர்களால் பூஜிக்கப்படும் ஹே ஹரே! நான் உங்களுடைய பரம சத்யமானதும் பரமானந்த ஸ்வரூப அத்வைதச் சுந்தர பதத்தை வந்தனை செய்கிறேன். சரணாகதனான என்னைக் கை விடாதீர்கள்.

பாகவத ஸ்லோகம் 39.
பிரபோ! உங்களுடைய இந்தமாயையானது உங்களுடைய திருஷ்டியாகறி முற்றத்தில் வந்து நட்யமாடிக் கொண்டிருக்கிறது. மற்றும் காலம், ஸ்வபாவம், முதலியவைகளின் மூலமாக சத்வ, ரஜோ மற்றும் தமோ குணமயமான எண்ணற்ற பாவங்களைத் தோற்றுவிக்கின்றன. கூடவே, இது என் தலை மேல் ஏறிக்கொண்டு ஆதுரனான என்னைப் பல பூர்வகமாகத் துகைக்கிறது. நான் உம்மைச் சரணடைகிறேன். நீர் தான் இதைத் தடுக்கவேண்டும்.

பாகவத ஸ்லோகம் 40.
பிரபோ! நான் சம்பூர்ண சந்யாசம் என்ற காரணத்தினால் ஜனங்களைத் தூண்டுகிறேன். போகங்களின் சிந்தனையிலேயே ஆதூரனாக இருக்கிறேன். இரவு பகலாக நாநாவிதமான உத்யோகங்களைச் செய்யும் களைப்பினால் வ்யாகூலமுற்று மூர்ச்சை அடைகிறேன். நான் உங்களுடைய ஆக்ஞையை உல்லங்கனம் செய்கிறேன். நான் அக்ஞானி ஜனங்களால் கொடுக்கப்பட்ட சம்மானத்தினால் "நான்சத்புருஷன்" என்ற கர்வம் கொண்டிருக்கிறேன். தீனநாதரே! என்னை ரக்ஷியுங்கள். மாதவா! நீங்கள் எனக்கு உங்கள் ஸ்வரூப அனுபவத்தைக் கொடுங்கள். பிறகு சுக-துக்கங்கள் சேர்வதைப் பற்றின பயமே எனக்கு இருக்காது. அல்லது என்னை உங்களுடைய குணங்களின் ச்ரவணம் மற்றும் வர்ணனையின் பிரேமையாவது தாருங்கள். இதனால் நான் விதி நிஷேதங்களுக்கு அடிமையாக மாட்டேன்.

பத்தாம் ஸ்கந்தம் - எண்பத்து ஏழாம் அத்யாய அனுபந்தம் முற்றும்.