இது எங்களின் தலையான ஆங்கில இணையதளம். இருபத்தியாறு ஆண்டு காலமாக தொடர்ந்து அனுமன் புகழ் பற்றிப் பேசும் ஒரே இணைய தளம் என்பது மனநிறைவை தருகிறது. அனுமாரை பற்றிய கட்டுரைகள், அனுமார் பக்தர்களை பற்றிய கட்டுரைகள், gk kaushik வரைந்த படங்கள் என பல பகுதிகள் உண்டு.
நாங்கள் கடந்து வந்த பாதையை விரிவாக " Biography of the web site named "Vayusutha:" " என்கிற ஏட்டில் கூறியுள்ளோம். எங்கள் சுயசரிதையை படிக்க தாங்களை அழைக்கிறோம்.
இது எங்களின் தலையான தமிழ் இணையதளம். இருபத்தியாறு ஆண்டு காலமாக தொடர்ந்து அனுமன் புகழ் பற்றிப் பேசும் ஒரே தமிழ் இணைய தளம் என்பது மனநிறைவை தருகிறது. ஆங்கில இணையதளத்தின் நகலாக/மொழி மாற்றமாக மட்டும் இல்லாமல் பல திருக்கோயில்கள், அனுமனின் துதிகள் என்று அதிக பகுதிகளை உடையது என்பது குறிப்பிட தக்கது.
நாங்கள் கடந்து வந்த பாதையை விரிவாக " வாயுசுத: என்ற வலைத்தளத்தின் சுயசரிதை" என்கிற ஏட்டில் கூறியுள்ளோம். எங்கள் சுயசரிதையை படிக்க தாங்களை அழைக்கிறோம்.
இது எங்களின் இந்தி இணையதளம். பதினாறு ஆண்டு காலமாக தொடர்ந்து ஹனுமன் புகழ் பற்றிப் பேசும் ஒரே இந்தி இணைய தளம் என்பது மனநிறைவை தருகிறது. இந்தி மொழி மட்டுமே தெரிந்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தொடங்கப்பட்டது. ஆங்கில இணையதளத்தின் ஹிந்தி மொழி மாற்றமாக பக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இணைய தளம் காண சொடுக்கம் "வாயுசுத: இந்தி"
புது தில்லி, கோல் மார்க்கெட் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம ஸத் சங்கம் தை மாதம் 24.01.1988 அன்று தொடங்கி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையில் வார வழிபாடு நடத்தி வருகிறார்கள். கடந்த 38 ஆண்டுகளாக நடக்கும் வழிபாடு. வழிபாடுக்கான நூல் தமிழ், தமிழ்/ஸம்ஸ்கிருதம் [மூன்று முறை], தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட்டனர்.
இந்த ஸத் சங்கத்திற்காக 2002 ஆண்டு துவக்கப்பட்ட இணையதளம் இது. வார வழிபாடு ஸ்லோகங்கள், விசேட நாட்கள் ஸ்லோகங்கள் என பல கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்விணையதளத்தில் NCRஇல் உள்ள தென்னிந்திய கோயில்களின் விவரங்கள், மற்ற NCR தென்னிந்திய ஸத் சங்கங்கள் என்று தென்னிந்தியர்களுக்கான NCR விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.
இணைய தளம் காண சொடுக்கம் "சஹஸ்ரநாமம்"
வால்மீகி இராமாயணம் - பாராயணத்திற்கு உரிய முறையில் மூல கிரந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இராமயண மகிமை, பூஜா விதி, தியான ஸ்லோகங்கள், சமாபன கிரமம், காயத்ரீ இராமயணம், மற்றும் ஆறு காண்டங்களும் சர்கம் வாரியாக கொடுக்கப் பட்டுள்ளது.
இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி மாற்றி, மூல ஸ்லோகங்களை பாராயணம் செய்ய வசதியுள்ளது என்பது மிகவும் முக்கியமாக குறிப்பிட தக்கது.
இணைய தளம் காண சொடுக்கம் "வால்மீகி இராமாயணம்"
ஸ்ரீமத்பாகவதம் - பாராயணத்திற்கு உரிய முறையில் மூல கிரந்தம் ஸம்ஸ்கிருதம் மற்றும் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது. பத்ம புராணம், ஸ்கந்த புராணம் இரண்டிலும் உள்ள ஶ்ரீமத்பாகவத மஹாபுராணம் மஹாத்ம்யம், மூல பாடத்தின் பன்னிரெண்டு ஸ்காந்தங்களும் - அத்யாய வாரியாக ஸம்ஸ்கிருதம் மற்றும் தமிழில் தனிதனியாக கொடுக்கப்பட்டுள்ளது. இது பாராயணம் செய்வதற்கு சுலபமாக இருக்கும் என்பது அனுபவம்.
இணைய தளம் காண சொடுக்கம் "ஸ்ரீமத்பாகவதம்"
அக்காலத்தில் தமிழ் இணையதளங்களைப் பார்ப்பது கடினமாக இருந்ததால், அதிக எண்ணிக்கையிலான ஸ்ரீ அனுமத் பக்தர்களைச் சென்றடையும் நோக்கில், 30.11.2000 அன்று எங்கள் இணையப் பக்கங்களின் ஆங்கில வடிவத்தை அறிமுகப்படுத்தினோம். இந்தப் பக்கங்கள் வழியாக எங்கள் தமிழ் பக்கங்களை அணுகும் வசதி இருந்தது. 'யாகூ' (Yahoo) நிறுவனம் தனது சேவைகளுக்கான இந்தியச் செயல்பாடுகளைத் தொடங்கியிருந்ததால், எங்களுக்கு http://in.geocities.com/vayusutha என்ற புதிய முகவரி கிடைத்தது. அடுத்ததாக வந்த ஸ்ரீ அனுமத் ஜெயந்தி அன்று முதல், இந்த ஆங்கில இணையதளம் முழுமையான செயல்பாட்டிற்கு வந்தது.
'Geocities.com' மூடப்பட்ட பிறகு, அந்தப் பிரம்மாண்டமான வலைப்பின்னலின் இணையதளங்கள் 'Geocities.ws' மூலம் காப்பகப்படுத்தப்பட்டன. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அந்தத் தொடக்ககாலப் பக்கங்களை நாங்கள் இந்தத் தளத்தில் தொடர்ந்து பராமரித்து வருகிறோம்.
இணைய தளம் காண சொடுக்கம் "வாயு சுத: - ஆங்கிலம்"
எமது "வாயு சுத: - ஆங்கிலம்" வலைதளம் இந்தியாவில் உள்ள பழமையான ஸ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில்களை பற்றியது. இதனை படித்த பல விருந்தினர்கள் தாங்கள் இடத்திலுள்ள பெருமை மிகு கோயில்கள் பற்றியும் எழுத சொன்னார்கள். வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்களும் இதனை ஒத்த கருத்தினை வெளிபடுத்தினர்.
இதனை பூர்த்தி செய்யும் வகையில் நம் நாட்டிலும், பிற நாட்டிலும் உள்ள ஸ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில்களை பற்றி விவரங்களை தாங்கி வரும் வலைதளமாக வலம் வருகிறது "ஹனுமான் டெம்பிள்".
இணைய தளம் காண சொடுக்கம் "அனுமார் திருக்கோயிகள் - உலகம் முழுவதும்"
ஜியோசிட்டிஸ் 1994-ல் தொடங்கப்பட்டது. இதுவே முதல் மாபெரும் 'சமூக வலைத்தளம்' ஆகும். மேலும், 27.10.2009 அன்று மூடப்படும் வரை, இது உலகின் மிக முக்கியமான வலைத்தளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. 27.08.2000 அன்று, நாங்கள் "மையிலை" எழுத்துருவைப் பயன்படுத்தி “http://geocities.com/vhayusudha” என்ற முகவரியில் எங்கள் தமிழ்ப் பக்கங்களைத் தொடங்கினோம். அன்றைய காலகட்டத்தில், தமிழ் உள்ளடக்கங்களுடன் கூடிய தளவமைப்பிற்கு ஏற்ப ஒவ்வொரு உலாவியும் வித்தியாசமாகச் செயல்படும். இதனால், பக்கங்களை அடிக்கடி மறுவடிவமைப்பு செய்ய வேண்டியிருந்தது. யூனிகோட் எழுத்துருக்கள் வரும் வரை, அது ஒரு சவாலான விஷயமாகவே இருந்தது.
Geocities.com மூடப்பட்ட பிறகு, இந்த மாபெரும் வலைப்பின்னலின் வலைத்தளங்கள் Geocities.ws-ஆல் காப்பகப்படுத்தப்பட்டன. அவர்களுக்கு நன்றி, நாங்கள் இந்தத் தளத்தில் முந்தைய பக்கங்களைப் பராமரித்து வருகிறோம்.
இணைய தளம் காண சொடுக்கம் "வாயு சுத: - தமிழ்"