எதைச் செய்தாலும், அதை
மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்
கொலோசெயர் 3 : 24
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே
இத்தளத்தின் முலம் உங்களைச் சந்திப்பதில்
மகிழ்ச்சி அடைகிறோம். இன்று இனணயமானது மிக வேகமாக வளர்ச்சி அடைந்து
வருகிறது. அதை கிறிஸ்துவின் மகிமைக்கு என்று பயன்படுத்துபவர்களில் நாங்களும்
ஒருவர் என்று சொல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கர்த்தர் எங்களுக்குக்
கொடுத்த இப்பணியை அவரின் பலத்தால் அவருடைய நாமம் மகிமை படும்படி நாங்கள் மிகச்
சிறப்புடன் செய்து முடிப்போம்
இத்தளம்
முழுவதையும் நாங்கள் யூனிகோட் என்று அழைக்கப்படும் புதிய முறையில்
வடிவமைத்துள்ளோம்.இது தமிழ் யூனிகோட்டில் அமைக்கபட்ட இரண்டாவது தளம். இதன் முலம்
Font Download தவிர்க்கபடும். இது தமிழுக்கு ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில்
ஐய்யமில்லை. இந்திய மொழிகளில் தமிழ் மிகவேகமாக இனையத்தில் வளர்ச்சி அடைந்து
வருகிறது. அனேக தமிழ் தன்னார்வ தொண்டர்களின் அயராத உழைப்பால் இன்று இனணயத்தில்
எம்மொழி உயர்ந்து இருக்கிறது (சுமார் 15 லட்சம் தமிழ் தளங்கள்). எம் மொழியை
திக்கெட்டும் கொண்டு செல்ல உழைத்த அறிஞர்களுக்கு எங்களுடைய நன்றியை இந்த
சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறோம.
இத்தளத்தமானது தமிழ் வேதபாட வகுப்புகள்,
கட்டுரைகள், இந்திய மிஷனெரிகளின் அர்பணிப்புகள், மிஷினரிகளின் வாழ்க்கை
வராலாறுகள், சாட்சிகள், கவிதைகள், விவாத மேடை, மகளிர் மற்றும் வாலிபர் செய்திகள்
ஆகியவற்றை உங்களுக்கு மிகவும் புரியும் வகையில் சொல்லும். திசையெங்கும்
பரந்துகிடக்கும எம் தமிழ் மக்களுக்கு
இதன் முலம் நற்செய்தியைகூறவும் முற்பட்டு இருக்கிறோம்.
இது ஒரு மாதாந்திர மின்னிதழ். ஒவ்வொரு மாதமும் இத்தளம் Upload செய்யப்படும்.
மேலும் எங்களுக்கு கட்டுரைகளையும், வேதபாடங்களையும் தந்தவர்களுக்காகவும் நாங்கள்
நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இத்தளம் அமைவற்கு உதவின அனைவர்களையும்
எங்களுடைய ஜெபங்களில் நாங்கள் நினைவுபடுத்திக் கொள்வோம். படியுங்கள் பயன்
பெறுங்கள் நீங்கள் பெற்றதை மற்றவர்களிடமும் பகிர்ந்து தங்களின் கருத்துக்களை
எங்களுக்குத்
தெரிவியுங்கள்.
மேலும்
உங்களுடைய படைப்புகளையும் எங்களுக்கு அனுப்பிவைத்தால் அதையும் இத்தளத்தில்
ஏற்றுவோம்.
என்றும்
கர்த்தரின் பணியில்
தமிழ்
கிறிஸ்துவ குழுவினர்
[email protected]
1.கிறிஸ்தவம் என்பது ஒரு மதமா?
.....நண்பரே,
சிலர் தவறாக எண்ணுகிறதுபோல
இது ஒரு மதப்பிரச்சாரமோ மதமாற்றமோ
அல்ல, ஏனென்றால் உலகத்திலுள்ள
எந்த மதமும் உங்களை இரட்சிக்காது. கிறிஸ்தவமும் உங்களை இரட்சிக்க முடியாது!
2. இயேசு கிறிஸ்து என்பவர் யார்?
.......அன்பான
சகோதரனே, சகோதரியே,
இது ஒரு கட்டுக்கதையல்ல! ஒருவேளை இதற்குமுன்பு இதைப் பற்றிக்
கேள்விப்படாதவர்களுக்கு இது புதுமையாகத் தோன்றலாம். ஆனால் இதை விசுவாசிக்கும்
எங்களுக்கு
இது ஆறுதலாகவும், சந்தோஷமாகவும், சமாதானமாகவுமிருக்கிறது......
3.நான்
சாகும்போது
எனக்கு என்ன நடக்கும்?
மரணத்தில் மூன்று முக்கிய மாற்றங்கள் அடங்கும்.
....உங்களுடைய
ஆவி (அல்லது உள்ளான மனிதன்),
மற்றும் உங்கள்
ஆத்துமா
(மனது,
உணர்ச்சி,
சித்தம்)
உங்கள் சரீரத்திலிருந்து பிரியும்...உங்கள்
சரீரத்திலுள்ள வேதிப்பொருள்கள் உடைந்து,
புழுதிக்குத்
திரும்பும். (புதைப்பது அல்லது எரிப்பதினால்)....உங்கள்
ஆவியும் ஆத்துமாவும்
ஒரு புதிய நிலைக்குச் சென்று,
தேவனுடைய
நியாயத்தீர்ப்புக்கும்,
சரீர உயிர்த்தெழுதலுக்கும் காத்திருக்கும்....
அடுத்த இதழில்
1.கிறிஸ்தவ பாடல்களில்
தமிழிசை
2. என்ன நடக்கிறது
வடஇந்தியாவில்? ஒரு நேரடி ஆய்வு
3. சிலுவையின் மீட்பு - வேதபாடம்
52 வாரங்கள்
4. ஜெபிக்கும்
மனைவியின் வல்லமை - மகளிர் பகுதியில்
5. மிஷனெரிகளுக்காக
எவ்வாறு ஜெபிக்கலாம்?
6. எனக்கு ஒரு கனவு இருக்கிறது -
உங்கள் சிந்தனைக்கு
7. கேள்வி- பதில் - ஒரு புதிய பகுதி
|