தமிழ் கிறிஸ்தவர்கள்

 மின்னிதழ்

 

முதல் பக்கம்

 உள்ளே

வாழ்கை வரலாறு

இருதய துடிப்பு

கட்டுரைகள்

தமிழகம்

பெண்கள் பகுதி

கவிதைகள்

இனைப்புகள்

எங்களைப் பற்றி

கடந்த இதழ்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உறுதியான பாறை

(கிறிஸ்தவ அர்ப்பணிப்பிற்குரிய வேதபாடங்கள்)

சபையிலுள்ள ஒவ்வொரு விசுவாசியையும் சரியான புரிந்து கொள்ளுதல், கீழ்ப்படிதல் மற்றும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுதலுக்குள் கொண்டு வரும்படி உறுதியான அஸ்திபாரத்தைப் போடுவதற்கேற்றவாறு இப்பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன் (மத்தேயு 7:24). அவன் ஆழமாய்த் தோண்டி கற்பாறையின்மேல் அஸ்திபாரம் போட்டு, வீடு கட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் (லூக்கா 6:48).

புதிய விசுவாசிகளுக்கு...

சபையில் இணைந்துகொள்வதற்குரிய அர்ப்பணத்தைக் குறித்த இப்பாடத்திட்டத்திற்கு உங்களை வரவேற்கிறோம். நீங்கள் சமீபத்தில்தான் கிறிஸ்தவராகியிருந்தால், உங்கள் வாழ்வில் தேவன் என்ன செய்திருக்கிறாரென்று அதாவது ""கிறிஸ்துவுக்குள் இருப்பதென்றால் என்ன?'' என்பதைக்- குறித்துப் புரிந்துகொள்ள இப்பாடத்திட்டம் உங்களுக்கு உதவியாயிருக்கும்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷராக மாறுவதற்குரிய முதல் படியில் நீங்கள் காலடி எடுத்து வைக்கப்போகிறீர்கள்.

புத்துணர்வூட்டும் பாடங்கள்

நீங்கள் ஏற்கெனவே கிறிஸ்தவராக இருந்தால், இப்பாடங்கள் எபிரெயர் 5:12ல் கூறப்பட்டுள்ளபடி தேவனுடைய வாக்கியங்களின் அடிப்படை உபதேசங்களை மீண்டும் உங்களுக்கு நினைப்பூட்டுபவையாக இருக்கும்.

ஒரு ஆவிக்குரிய குடும்பம்

நீங்கள் இப்போது ஒரு கிறிஸ்தவராக இருப்பதால், நீங்கள் உள்ளூர் சபையாகிய ஒரு ஆவிக்குரிய குடும்பத்துடன் இணைந்திருப்பது மிகவும் அவசியமாகும். அங்கு நீங்கள் ஐக்கியம், போதனை, அன்பு, கரிசனை போன்றவைகளை அனுபவிப்பதுடன், முழுமையான கிறிஸ்தவ அனுபவங்களில் வளருவதற்குரிய உற்சாகத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.

உறுதியான பாறையாகிய வேதாகமத்தின் போதனைகளின் அடிப்படையில் உங்கள் வாழ்வைக் கட்டியெழுப்புவதைக் குறித்து இப்பாடங்களில் நீங்கள் கற்றுக்கொள்வதுடன், மனிதப் பாரம்பரியங்களின் அடிப்படையில் அல்லாமல் வேதாகமத்தின் அடிப்படையில் சபை அங்கத்தினரிடம் எதிர்பார்க்கப்படுபவை என்னவென்றும் அறிந்துகொள்ளப் போகிறீர்கள். இப்பாடங்களின் மூலம் நீங்கள் ஒரு சவாலையும், புதிய மாற்றங்களையும் நிச்சயம் அடைவீர்கள் என்று நம்புகிறோம்.

எளிமையான கேள்விகள்

இப்பாடங்களைக் கற்பிக்கிற சபையில்தான் நீங்கள் சேர வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் எதுவுமில்லை. இப்பாடங் களைக் கற்றுக்கொள்வதினால் எங்கள் சபையில் நீங்கள் அங்கத்தினராகிவிட வேண்டுமென்று உங்களை நாங்கள் வற்புறுத்த மாட்டோம்.

இப்பாடங்களின் முடிவில் மிக எளிமையான சில கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வாய்ப்பு உங்களுக்கு உண்டு. நீங்கள் விரும்பினால் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ எங்கள் பிரதிநிதி ஒருவர் அக்கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் உங்களுக்கு உதவிசெய்ய முடியும்.

இப்பாடங்களைக் கற்றுக்கொள்வதின் மூலம் ஆவிக்குரிய குடும்பமாகிய சபையில் இணைந்துகொள்ள நீங்கள் முன்வருவீர்கள் என்பது நிச்சயம் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஆயத்தம்

இப்பாடங்களை நீங்கள் ஒரு குழுவிலோ அல்லது சபையிலோ கற்றுக்கொள்வீர்களென்றால், இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து அங்கு செல்வதுடன், உங்களுக்கும் குழுவிலுள்ள அனைவருக்கும் தேவன் சத்தியங்களைக் குறித்த தெளிவைத் தரும்படி ஜெபியுங்கள். வகுப்புகள் துவங்குவதற்கு முன்பே பாடக்குறிப்புகளை நீங்கள் வாசித்திருந்தால் போதனை, மற்றும் விவாதங்களின் மூலம் அதிகமான பலனைக் கண்டுகொள்வீர்கள். தயவுசெய்து குறிப்பிட்ட நேரத்திற்கு வகுப்புகளுக்கு வாருங்கள். ஒவ்வொரு வகுப்புகளிலும் நீங்கள் அடையப்போகும் ஆசீர்வாதங்கள் அதிகமாயிருக்கும்.

வீட்டுப்பாடங்கள்

வீட்டுப்பாடங்களைத் தவறாமல் செய்யக் கவனமாயிருங்கள். அவை தனிப்பட்ட முறையிலும், அனுபவப்பூர்வமாகவும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். வாரந் தோறும் வகுப்புகளில் கலந்துகொள்வதுடன், வீட்டுப் பாடங்களையும் சேர்த்து நீங்கள் அப்பியாசம் செய்துவந்தால் நீங்கள் அதிகமான ஆசீர்வாதங்களை அடைவீர்கள்.

குறிப்பு: ஒரு ஆலயத்தில் நடக்கும் போதனை வகுப்பில் இப்பாடங்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பில்லாமல், நீங்கள் தனியாகவே கற்றுக்கொள்பவராக இருந்தால் முடிந்தவரை உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் அமர்ந்து கலந்துரையாடி குழுவாகக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம்.

 

தொடர்பு முகவரி

இப்பாடங்களைக் கற்க விரும்பும் அனைவருக்கும் இதைக் கொடுத்து உதவுங்கள். இதிலுள்ள செய்திகள் அனைவருக் கும் உரியது. மேலும் பிரதிகள் தேவைப்பட்டால் பின்வரும் முகவரியுடன் தொடர்புகொள்ளுங்கள்

Agape Bible Church - Bangalore

E-Mail : [email protected]

 

உறுதியான பாறை

(கிறிஸ்தவ அர்ப்பணிப்பிற்குரிய வேதபாடங்கள்)

 



Tamil Unicode enabled web site
Best viewed with  Windows 2000 and Windows XP or Windows 98 with
'Latha' unicode font.

This site is best viewed using IE5.0 and above in a 800 x 600 resolution.For problems or questions regarding this web contact [email protected]
Last updated: 07/29/04 08:29:50 PM.

Hosted by www.Geocities.ws

1