குறள்
001
பால் இயல் அதிகாரம்
அறத்துப்பால் பாயிரம் இயல்
அடுத்த திருக்குறள்/Next thirukkuraL0011-0020 வான் சிறப்பு
முந்தைய திருக்குறள்/Previous thirukkuraL1321-1330ஊடல் உவகை
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
0001 குறள் விளக்கம்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
0002 குறள் விளக்கம்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
0003 குறள் விளக்கம்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
0004 குறள் விளக்கம்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
0005 குறள் விளக்கம்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
0006 குறள் விளக்கம்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
0007 குறள் விளக்கம்
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
0008 குறள் விளக்கம்
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
0009 குறள் விளக்கம்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
0010 குறள் விளக்கம்
Site developed and maintained by MURUGESAN OPENSSL TECHNICAL ENTERPRISE KNOWLEDGE TRANSFER SOLUTIONS © 2003 to 2056 All rights reserved. PrivacyPolicy