சித்தாடி ஸ்ரீ காத்தாயி துதி
ஸ்ரீ காத்தாயி துதி
சித்தாடி காத்தாயி சித்தாடி சிந்தித்துப்
பூத்தாடிப் புனிதப் புத்தடி புகழ்ந்து
ஆத்தாடி இனியான் அத்தடி ஆகேனென்று
கூத்தாடிக் கொல்லவே குத்தடி பிறப்பிறப்பு
நித்தம் நிகரிலா நினதடி நினைப்பேன்
சித்தம் சிவமாக சிறு நகை சிரித்துக்
கொத்தம் கொய்யாது கொடுமை கொடுக்கும்
மத்தம் மறைந்து மதியுள்ள மகனாகி
வித்தம் விரிந்து விழித்தென் விழியகல
தத்தம் தந்திடு தரணியில் தன்யனாக
தொத்தம் தொடுக்கும் தொல்வினை தொலைந்துக்
குத்தம் குமித்திடு குலதேவி கும்பிட்டேன்.
ஸ்ரீ காத்தாயி துதி
நீ இல்லாத இடமில்லை தாயே
பக்தரின் குறை அறியாதது இல்லை நீயே – நீ
சோதனை செய்வதற்கு அளவே இல்லையா
வேதனை தந்தும் போதவில்லையா – நீ
காட்டிடையே குடியிருந்தாலும்
வீட்டிலிருப்போர் உளம் அறியாயோ
பாட்டில் சொல்லி அழுதாலும்
கேட்டிலையோ ஈஸ்வரி என் தாயே – நீ