முஹம்மது (Muhammad)

தீர்க்கதரிசிகளை (நபிகளை) அவர்கள் உண்மையான தீர்க்கதரிசிகளா! அல்லது கள்ள தீர்க்கதரிசிகளா! என்று சோதித்துப்பார்க்கும் படி பைபிள் நமக்கு போதிக்கிறது. ஒரு தீர்க்கதரிசியின் வாழ்க்கையும், அவர் கொண்டுவந்த செய்தியும் நமக்கு அவரை சோதித்துப்பார்க்க ஒரு அளவுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதையே இஸ்லாமியர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். இஸ்லாமியர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, தீர்க்கதரிசிகள் (நபிகள்) பாவம் செய்யாதவர்களாக இருப்பர்கள் என்று கூடச் சொல்கிறார்கள். ஆனால் பைபிள் இதை ஏற்றுக்கொள்வதில்லை. தீர்க்கதரிசிகளும் நம்மைப் போன்ற மனிதர்களே என்று பைபிள் சொல்கிறது.

முகமதுவிற்கு முன்பும், பின்பும் பலபேர் தங்களை தீர்க்கதரிசிகள் என்றுச் சொல்லிக்கொண்டு வந்தார்கள். உதாரணத்திற்கு ஜோசஃப் ஸ்மித் (இவர் இஸலாமியரல்ல), பஹாஉல்லா மற்றும் மிர்ஜாகுலாம் அஹ்மத் போன்றோரைச் சொல்லலாம். முகமது தான் கடைசி தீர்க்கதரிசி என்றுச் சொன்னதினாலே, இஸ்லாமியர்கள் இப்படிப்பட்டவர்களை சுலபமாக நிராகரிக்கின்றனர். இதே போல கிறிஸ்தவர்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளை இனம்கண்டு நிராகரிக்கின்றனர். தீர்க்கதரிசிகள் என்றுச் சொல்லிக்கொண்டு வருபவர்களை சோதித்து, போலிகளை கண்டறியவேண்டியது நம் கடமையாகும்.

எனவே, இங்கே "முகமது ஒரு தீர்க்கதரிசியா?" என்பதை சோதித்தறிய பல கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது இஸ்லாமியர்களை கோபப்படுத்துவதற்கல்ல, மாறாக முகவதுவின் வாழ்க்கையை, செய்தியை இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் முழுவதுமாக தெரிந்துக்கொள்வதற்கு உதவியாக இருக்கும். முகமதுவை தீர்க்கதரிசி என்று நம்புவதற்கு இஸ்லாமியர்களுக்கும், இயேசுவை இறைவன் என்று நம்புவதற்கு கிறிஸ்தவர்களுக்கும் ஒரு நீண்ட சொற்பொழிவு தேவையில்லை. ஆனால், முகமதுவை தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் நம்பவேண்டுமானால், இயேசுவை இறைவன் என்று இஸ்லாமியர்கள் நம்பவேண்டுமானால் அதற்கு நிறைய ஆதாரங்கள், விளக்கங்கள் தேவை. இதை ஏற்றுக்கொள்கிறீர்களா?



முஹம்மதும் கொலைகளும் (தன் எதிரிகளை எப்படி கொன்றார்)



முஹம்மதுவும் நபித்துவத்தின் நம்பகத்தன்மையும்



பைபிளும் முகமதுவும்



முஹம்மதுவும் தீவிரவாதமும்



முஹம்மது மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குணங்களும்



முஹம்மதுவும் நம்மைப் போல பாவம் செய்யும் மனிதரே



Isa Koran Home Page
Hosted by www.Geocities.ws

1