இது தான் இஸ்லாம் தளம் "பாரான் மலையின் அக்னி பிரமாணம்" என்று ஒரு கட்டுரையை எழுதினார்கள். அதில் கீழ் கண்ட வாதங்களை முன் வைத்தார்கள்.
1. பைபிளில் வரும் "பாரான்" என்ற இடம், அரேபியாவின் "மக்கா" ஆகும்.
2. உபாகமம் 33:1-2 வசங்களில் சொல்லப்பட்டவர் முகமது ஆவார்.
3. ஆபகூக் 3:3ல் சொல்லப்பட்ட "பரிசுத்தர்" முகமது ஆவார்.
1. பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல. - (இந்த கட்டுரையை இங்கே படிக்கவும்)
2. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது, "கர்த்தரையா - யேகோவா" அல்லது "முகமதுவையா" ?
3. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடும் "பரிசுத்தர்" யார்?
4. இது தான் இஸ்லாம் கட்டுரை "பாரான் மலையில் அக்னி பிரமாணம்" : ஈஸா குர்-ஆன் பதில் (மறுப்பு)
இஸ்லாமியர்கள் சில பைபிள் வசனங்கள் இறைவனின் வார்த்தை தான்,
அவைகளை யாரும் திருத்தவில்லை என்று சொல்கிறார்கள். முக்கியமாக அந்த வசனங்களில்
அவர்கள் "முகமதுவை" பார்க்கிறார்கள், அதனால் தான் அவைகள் அவர்களுக்கு ஆதாரமாக
தென்படுகிறது.
உபாகமம் 33:2ம்
வசனத்தில் முகமதுவைப் பற்றி பைபிள் தீர்க்கதரிசனம் சொல்கிறது என்றுச்
சொல்கிறார்கள்.
உபாகமம் 33:2ல் வரும் "பதினாயிரங்களான
பரிசுத்தவான்களோடு பிரசன்னமானார்" என்ற சொற்றொடர் "முகமது மக்காவிற்கு
தன் தோழர்களோடு நுழைந்த நிகழ்ச்சியோடு " ஒப்பிடுகிறார்கள்.
இஸ்லாமியர்களுடைய இந்த கருத்து
ஆதாரமற்றது என்றும், பைபிளின் இந்த வசனத்திற்கும் முகமதுவிற்கும் எந்த தொடர்பும்
இல்லை என்பதையும் இந்த கட்டுரையில் தகுந்த ஆதாரங்களோடு நாம் காணலாம்.
உபாகமம் 33:2ம் வசனத்தில்
சொல்லப்பட்டவர் முகமது அல்ல என்பதற்கான ஆதாரங்கள் அல்லது காரணங்கள்.
1. இஸ்லாமியர்கள் நினைப்பது போல "பாரான்"
என்பது "மக்கா" அல்ல என்பதை இந்த கட்டுரையை படித்தால் புரிந்துக்கொள்ளலாம். இது
இஸ்லாமியர்களின் ஆதாரமற்ற ஒரு வாதமே ஒழிய உண்மையல்ல.
(படிக்க : பைபிளின் பாரான் அரேபியாவில் உள்ள மக்கா அல்ல)
இனி உபாகமம் 33:2ம் வசனத்தை நம் ஆய்விற்கு
எடுத்துக்கொள்வோம்.
2. முகமது இஸ்மவேலின் வம்சத்தில்
வந்தவர் அல்ல. படிக்கவும் 1) Ishmael
is not the father of Muhammad and 2) Ishmael
is not the father of Muhammad Revisited.
உபாகமம்
33:1-2
உபாகமம்: 33:1-2 1. தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது,2. கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது .
இந்த வசனத்தில் நாம் முக்கியமாக
ஆராயவேண்டிய வாக்கியங்கள் இவைகள்:
1.
கர்த்தர்.....பிரசன்னமானார்.
2. சீனாய்.... சேயீர்.... பாரான்:
3. பதினாயிரங்களான
பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்:
4. அக்கினி மயமான பிரமாணம்
இப்போது மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு
தலைப்பையும் நாம் சிந்திப்போம், இதன் மூலம் இவ்வசனத்தில் சொல்லப்பட்ட செய்திகள்
முகமதுவிற்கும் இஸ்லாமிற்கும் எவ்விதத்திலும் சம்மந்தமில்லாதது என்பது விளங்கும்.
1. கர்த்தர்.....பிரசன்னமானார்.
இந்த வசனம் ஒரு மனிதனைப் பற்றியோ,
இறைத்தூதரைப் பற்றியோ சொல்வதில்லை. குறைந்தபட்ச அறிவை பயன்படுத்தி இவ்வசனத்தை
பார்த்தாலே போதும், இதில் சொல்லப்பட்டவர் "கர்த்தர்" அல்லது "தேவன்" என்பது
விளங்கும்.
இஸ்லாமியர்கள்
சொல்வது போல பாரானிலிருந்து பிரசன்னமானவர் "முகமது" அல்ல, அவர் கர்த்தர்.
தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலர்கள்
வனாந்திரத்திலே சஞ்சரிக்கும் போது, பகலிலே "மேக
ஸ்தம்பமாகவும்", இரவிலே "அக்னி
ஸ்தம்பமாகவும் " அவர்களின் 40 வருட பயணத்தின் போது அவர்களோடு வந்தார்.
இஸ்ரவேலர்கள் எத்தனைமுறை கோபப்படுத்தினாலும், அவர்களை விட்டு விலகாமல் அவர்களோடு
வந்தார். இதையே மோசே அவர்களை ஆசீர்வதிக்கும் போது, முதலாவது சொல்கிறார்.
இஸ்லாமியர்கள் ஒன்றை
கவனிக்கவேண்டும், ஏதோ முகமதுவை பைபிளில் கண்டுபிடிக்கிறேன் என்றுச் சொல்லி, “தேவன்”
வரும் இடத்தில் முகமதுவை ஒப்பிட்டுச் சொல்வது, இஸ்லாமியர்கள் தினமும் தங்கள் வாயில்
உச்சரிக்கும் "லாயிலாஹா இல்லல்லாஹூ" என்ற வாக்கியத்தையே அவர்கள்
புறக்கனிக்கிறவர்களாக மாறிவிடுகின்றனர். அல்லாவோடு முகமதுவை ஒப்பிடுவது போல
ஆகிவிடுகிறது. எனவே, அல்லாவிடம் மன்னிப்பை கோரும் படி
கேட்டுக்கொள்கிறேன்.
2. சீனாய்....
சேயீர்.... பாரான்:
தேவன் இஸ்ரவேல் மக்களை மோசே தலைமையில் கானானுக்கு
அழைத்துக்கொண்டு வரும் போது, அவர்களுக்கு சீனாய மலையில் கட்டளைகளை கொடுத்தார். அந்த
கட்டளைகள் கொடுக்கும் நிகழ்ச்சி இஸ்ரவேல் மக்களின் மனதில் நீங்கா பாதிப்பை உண்டாக்க
வேண்டுமென்றும், மோசேவுடைய மதிப்பு மரியாதை இன்னும் அதிகரிக்கவேண்டுமென்று தேவன்
விரும்பினார்.
தேவன் சீனாய்
மலையில் தன் மகிமையோடு இறங்கி பேசியதை பைபிளின் வார்த்தைகளில் பாருங்கள்.
யாத்திராகமம்: 19:9
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி, நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு,
உன்னை என்றைக்கும்
விசுவாசிக்கும்படி, நான்
கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை
மோசே கர்த்தருக்குச் சொன்னான். யாத்திராகமம்
19:11 மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில்
கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய்மலையின்மேல் இறங்குவார் .
யாத்திராகமம்: 19:12 ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ
ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும்,அதின் அடிவாரத்தைத்
தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே
கொல்லப்படுவான் .13. ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக்
கல்லெறியுண்டு, அல்லது ஊடுருவ எய்யுண்டு சாகவேண்டும்; மிருகமானாலும்சரி,
மனிதனானாலும்சரி, உயிரோடே வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாய்த்
தொனிக்கையில், அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார்.
யாத்திராகமம் 19:16 மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும்
மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று;
பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.17. அப்பொழுது ஜனங்கள்
தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்;
அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள். யாத்திராகமம் 19:18 கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது
முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று;
மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. யாத்திராகமம் 19:19 எக்காளசத்தம் வரவர மிகவும்
பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு
வாக்கினால் மறுமொழி கொடுத்தார் . யாத்திராகமம் 19:20 கர்த்தர்
சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின்
கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.
நியாயாதிபதிகள்: 5:3 ராஜாக்களே, கேளுங்கள்; அதிபதிகளே, செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப்பாடி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.4. கர்த்தாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்துவருகையில், பூமி அதிர்ந்தது, வானம் சொரிந்தது, மேகங்களும் தண்ணீராய்ப் பொழிந்தது.5. கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்கள் கரைந்தது; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக சீனாயும் கரைந்தது.
சங்கீதம்: 68:7 தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று அவாந்தரவெளியிலே நடந்துவருகையில்,(சேலா.)8. பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய் மலையும் அசைந்தது.
நெகேமியா: 9:11 நீர் அவர்களுக்கு முன்பாகச் சமுத்திரத்தைப் பிரித்ததினால், கடலின் நடுவாகக் கால்நனையாமல் நடந்தார்கள்; வலுவான தண்ணீர்களிலே கல்லைப்போடுகிறதுபோல, அவர்களைத் தொடர்ந்தவர்களை ஆழங்களிலே போட்டுவிட்டீர்.12. நீர் பகலிலே மேகஸ்தம்பத்தினாலும் அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினி ஸ்தம்பத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர்.13. நீர் சீனாய் மலையிலிறங்கி வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.
ஆபகூக்: 3:3 தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; சேலா. அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.4. அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மனறந்திருந்தது.5. அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் செடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.6. அவர் நின்று பூமியை அளந்தார்; அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப்பண்ணினார்; பூர்வ பர்வதங்கள் சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது ; அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது.
அப் 7:53 தேவதூதரைக்கொண்டு நீங்கள்
நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும் , அதைக்
கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்.
கலாத்தியர்: 3:19.
அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி
வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு
மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது .
எபிரெயர்: 2:2 ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச்
சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும்
கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம்
உறுதிப்படுத்தப்பட்டிருக்க
ஆ) Ten -thousand
மற்றும் Ten thousands வெவ்வேறானவை, ஒன்றல்ல.
இஸ்லாமியர்கள்
சொல்வது போல, இந்த வசனத்தில் வரும் எண்ணிக்கை சரியாக Ten Thoousand – 10,000 (singular) என்று
வராமல் Ten Thousands (Plural) என்று
சொல்லப்பட்டுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பில் "பதினாயிரங்களோடே" என்று
மொழிபெயர்த்துள்ளனர். ஆங்கிலத்தில் சரியாக மொழி பெயர்த்துள்ளனர். சரியாக 10,000
எண்ணை குறிப்பிடவேண்டுமானால், TEN THOUSAND என்று எழுதுவோம், பல ஆயிரங்கள் என்றுச்
சொல்லவேண்டுமானால், TEN THOUSANDS OR TENS OF THOUSNAD என்று குறிப்பிடலாம். இந்த
வசனத்தில் வரும் "பதினாயிரங்கள்" என்பது இஸ்லாமியர்கள் சொல்வது போல, சரியாக 10,000
அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ளது கணக்கிலடங்கா
(myriads) எண்ணிக்கை என்று பொருள்.
ஆதாரம் தேவையானால், இதோ
சங்கீதம் 68:17.
சங்கீதம் 68:17 தேவனுடைய இரதங்கள் பதினாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாயிருக்கிறது, ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்தவண்னாமாய் அவைகளுக்குள் இருக்கிறார்.
Psalm 68: 17 The chariots of God are tens of thousands and thousands of thousands; the Lord has come from Sinai in to his sanctuary.(NIV) Source: http://www.biblegateway.com/passage/?search=psalm%2068:17&version=31
இந்த சங்கீதம் சொல்கிறது, அவர்
சீனாய் மலையில் இறங்கும் போது, எப்படி பல ஆயிர இரதங்களின் மத்தியில் இருந்தாரோ அது
போல என்றுச் சொல்கிறது. பொதுவாக தேவன்
இறங்குகிறார் என்றால், அந்த இடத்தில் தேவதூதர்கள், இரதங்கள், அக்கினி, மகிமை என்று
பலவிதங்களில் வருனிப்பார்கள் . இதை நாம் பைபிளில் பல சந்தர்பங்களில்
பார்க்கலாம்.
சீனாய் மலையில்
தேவனொடு கூட அக்கினி, மகிமை, இடி,மின்னல் போன்றவைகளை மக்கள் கண்டு நடுங்கினர்.
சலொமோன் தேவாலயம் கட்டி பிரதிஸ்டை
செய்யும் போது, இதே போல மகிமை ஆலயத்தை சூழ்ந்துக்கொண்டது(1 இராஜா 8:10-11).
இங்கு வரும்
"பதினாயிரங்களோடே – Ten Thousands" என்ற வார்த்தை வரும் எபிரேய வார்த்தை பற்றிய
ஆராய்ச்சி கட்டுரையை இங்கு (
Response to Osama Abdulla ) படிக்கலாம்.
இக்கட்டுரையில் ஒசாமா அப்துல்லா என்பவரின் இதே கேள்விக்கு மிகதெளிவாக எபிரேய
வார்த்தையின் விவரங்களோடு, இலக்கணத்தோடு பதில் கொடுக்கப்பட்டுள்ளது. எபிரேய
வார்த்தையைப் பற்றி தனி கட்டுரை வேண்டுமானால், பார்க்கலாம். அதைப்பற்றி இங்கு
எழுதினால், கட்டுரை இன்னும் நீண்டதாக மாறும். எனவே, இந்த கட்டுரையை ஆங்கிலத்தில்
படிக்கவும்.
பதினாறு ஆங்கில
மொழி பெயர்ப்புகளில் இரண்டு மொழி பெயர்ப்பில் மட்டுமே தவறாக "TEN THOUSAND" என்று
உள்ளது, மீதியுள்ள 14 மொழி பெயர்ப்புகளில் "TEN THOUSANDS " என்றும் "MYRIADS"
என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.
First, it should be stated that
the New American Standard and Today's English Version are the only ones that
read the singular "ten thousand" in Deut. 33:2. So Osama is wrong regarding the
rendering of the RSV, the Webster's Bible and the WEB. The following English translations also render the word as
"ten thousands": ASV, DRA, ESV, GNV, KJV, NKJ, RWB; likewise, the Greek
Septuagint (LXX) renders it as plural. The following English translations render the word as
"myriads" [plural]: DBY, JPS, NIB, NIV, NRS, YLT. The following English
translations translate the word as a place-name: BBE, NAB, NLT, TNK. One English
translation (NJB) paraphrases the text as though no number is there. Of all the 16 translations that render the
word as a number, roughly two (NAS and TEV) renders the plural word as a
singular. One cannot build a case on an incorrect translation. Standard
Hebrew grammar, syntax, and lexicography expect the plural form of the word to
be translated plural. (Formats are mine -Isa Koran) Source :
http://www.answering-islam.org/Responses/Osama/holy_ones.htm
எனவே, இந்த வசனத்தில் பதினாயிரங்கள் என்பது
கணக்கிலடங்கா அல்லது ஆயிரமாயிரமானவர்கள் என்று பொருள்படுமே தவிர, சரியாக 10,000
என்று பொருள் அல்ல.
இ) இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் கூற்றுப்படி 12000 பேர்
மக்காவில் நுழைந்தார்கள்
இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் இபின் இஷாக் தன் "சூரத்
ரசூலுல்லா " என்ற முகமதுவின் சரிதையில் சொல்கிறார் "முகமது
மக்காவில் 12000 மனிதர்களோடு நிழந்தார்".
Source: http://www.faithfreedom.org/Articles/sira/23.htm
Then the apostle marched out with two thousand Meccans and the ten thousand companions who
had gone with him before to the conquest of Mecca . The
apostle said, gazing at the greatness of this army of Allah, 'This day we shall
not be overcome because our number is small!' They marched to meet the Hawazin.
4. அக்கினி மயமான பிரமாணம்
இஸ்லாமியர்கள் சொல்வார்கள், அக்னி
மயமான பிரமாணம் என்பது "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்ற
இயேசுவின் கட்டளை" சரியாக பொருந்தாது, முகமது கொண்டுவந்த பிரமாணமாகிய "கணுக்கு கண்,
பல்லுக்கு பல்" என்பது தான் என்று சொல்கிறார்கள்.
இஸ்லாமியர்கள் ஒன்றை
மறந்துப்போகிறார்கள், அது என்னவென்றால், "ஒரு கன்னத்தில் அறைந்தால்..." கட்டளையை
கொடுத்தவர் மோசே அல்ல.
மோசே கொண்டுவந்த கட்டளை கூட "அக்னி மயமாக
கட்டளைகள்" தான். அதாவது, பழைய ஏற்பாட்டு காலத்தில் மோசே முலமாக தேவன் கொடுத்த
கட்டளை "கணுக்கு கண், பல்லுக்கு பல்" என்பதாகும்.
மக்களை
குழப்புவதற்கு இஸ்லாமியர்கள் "இயேசுவின் கட்டளைகளை" இயேசுவிற்கு முன் 1400
ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மோசேவோடு சம்மந்தப்படுத்தி, மோசே கொண்டுவந்தது, அக்னி
மயமான கட்டளைகள் கிடையாது என்று சொல்கிறார்கள். ஆனால், மோசேயின் கட்டளைப் போலவே,
முகமது கொண்டுவந்ததும் "கண்ணுக்கு கண்" கட்டளைகள் தான்.(ஆனால், முகமதுவிற்கு
இறக்கப்பட்ட கட்டளைகள் மோசேவிற்கு இறக்கப்பட்ட கட்டளைகளுக்கும் நிறைய
வித்தியாசங்கள் உண்டு, ஜிஹாத், திருமண, விவாகரத்து கட்டளைகள் இன்னும் பல)
ஆனால், ஒரு விவரத்தை
மறந்துப்போகிறார்கள், தேவன் கொடுக்கும் கட்டளைகள் அனைத்தும் "அக்னி மயமான கட்டளைகள்" தான். சீனாய் மலையில் அக்னி
மலையை சூழ்ந்துக்கொண்டிருக்க பெற்ற கட்டளைகள் என்பதனால், அப்படி "அக்னி மயமான பிரமானம் (கட்டளை)" என்று
குறிப்பிடப்பட்டதே தவிர, இஸ்லாமியர்கள் சொல்வது போல் அல்ல.
தேவனுடைய வார்த்தைகள் அக்கினி போல் இருக்கிறது என்று தேவன்
சொல்கிறார்.
எரேமிய 23:29. என் வார்த்தை அக்கினியைப் போலும் , கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.
தேவனுடைய வார்த்தகள் நம் எலும்புகளிலும், இதயத்திலும் அக்கினிப்போல எரியும்.எரேமியா 20:9 ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன் ; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று.
எரேமியா 5:14 ஆகையால் சேனைகளின் தேவனாகி கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும் .
சங்கீதம் 29:7 கர்த்தருடைய சத்தம்
அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும்.
உபாகமம் 4:15 கர்த்தர்
ஓரேபிலே அக்கினியின்
நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில் , நீங்கள் ஒரு ரூபத்தையும்
காணவில்லை.
இன்னும் (இதையும் நினைவு
கூறுங்கள்;)நீங்கள், 'மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது
நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம்
பற்றிக்கொண்டது. (2:55)
நாம் குறித்த காலத்தில்
(குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது
மூஸா "என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக!
என்று வேண்டினார். அதற்கு அவன், "மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது,
எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில்
நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!" என்று கூறினான். ஆகவே
அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத்
தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்;
அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும்,
"(இறைவா!) நீ மிகவும் பரிசத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான்
கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்" என்று கூறினார். (7:143)
இன்னும், நாம்
அவரை தூர் (ஸினாய்) மலையின் வலப்புறத்திலிருந்து
கூப்பிட்டோம்; மேலும் இரகசியத்தில் பேச நாம் அவரை நம்மிடம்
நெருங்கி வரச் செய்தோம். (19:52)
Source : http://chittarkottai.com/quran/surawise.php
உபாகமம் 33:17 அவன் அலங்கரம் அவன் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; அவைகளாலே ஜனங்களை ஏகமாய் ஜனத்தின் கடையாந்தரங்கள்மட்டும் முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பதினாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான்
| Isa Koran Home Page | Back - Rebuttal Index page |