பிஜே
அவர்கள் எழுதியது:
ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். அவருடைய சீஷர்கள் அதைக்கண்டு விசனமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள்.
இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை
ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.
(மத்தேயு 26:7-10 மூலம் : இயேசு இறைமகனா?
ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். அவருடைய சீஷர்கள் அதைக்கண்டு விசனமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள்.
இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். (மத்தேயு 26:7-10)
1. இயேசு சீமோன் என்பவனுடைய வீட்டில் இருந்தார்.
2. அந்த சமயத்தில் ஒரு பெண் மிகவும் விலை உயர்ந்த தைலத்தை(நறுமணத்தை) கொண்டு வந்து இயேசுவின் தலையிலே ஊற்றுகிறாள்.
3. இதைக்கண்டு இயேசுவின் சீடர்கள் இந்த வீண் செலவு எதற்கு, அந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம் அல்லவா? என்று கேட்கிறார்கள்.
4. இயேசு அப்போது அவர்களுக்கு பதில் தருகிறார்.
மத்தேயு 26:10 இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.
மத்தேயு 26:11 தரித்திரர் எப்போதும் உங்களிடத்திலிருக்கிறார்கள். நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன்.
மத்தேயு 26:12 இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின் மேல் ஊற்றினது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது.
மத்தேயு 26:13 இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
1) தேவனுடைய வேலைக்காக ஒரு ஆசாரியனை அல்லது அரசனை பிரதிஷ்டை செய்ய பயன்படுத்துவார்கள் ( 1 சாமுவேல் 16:1 , 2 இராஜாக்கள் 9:6 சங்கீதம் 89:20)
2) மகிழ்ச்சியான நேரங்களில் பயன்படுத்துவார்கள் (நீதிமொழிகள் 27:9, ஏசாயா 61:3)
3) அரசர்களை, பெரியவர்களை சந்திக்கப்போகும் பொது மரியாதைக்காக விலை உயர்ந்த தைலத்தை நறுமணங்களைக் கொண்டுச்செல்வார்கள் (ஆதியாகமம் 43:11, மத்தேயு 2:11)
4) இறைவனுடைய ஆலய வேலைகளில் நறுமணமுள்ள தைலத்தை பயன்படுத்துவார்கள் (யாத்திராகமம் 30:25-32).
5) ஒருவர் மரித்துவிட்டால், அவரை அடக்கம் செய்யும் போது நறுமண தைலத்தை பூசி துணிகளால் சுற்றி அடக்கம் செய்வார்கள் (மத்தேயு 26:12, லூக்கா 23:55, 56, லூக்கா 24:1).
1. மத்தேயு 26ம் அதிகாரம் 1-2ம் வசனங்களில், தன்னை சிலுவையில் யூதர்கள் அறைவார்கள் என்று இயேசு முன்னுரைக்கிறார்.
2. அப்படியே ஆசாரியர்களும் இயேசுவை பிடித்துகொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள் (மத்தேயு 26:3-5).
3. பிறகு தான் இந்த நறுமணம் பற்றிய நிகழ்ச்சி நடக்கிறது (மத்தேயு 26:7-13) இதில் வசனங்கள் 11லிருந்து 13 வரை பிஜே அவர்கள் வேண்டுமென்றே குறிப்பிடாமல் மறைத்தார்.
4. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இயேசு மறுபடியும் தன் மரணத்தைப்பற்றி முன்னுரைக்கிறார். ஏழைகள் உங்களிடத்தில் எப்போதும் இருப்பார்கள், ஆனால், நான் இருக்கமாட்டேன் என்று இயேசு சொல்கிறார்.
5. பிற்கு யூதாஸ் காரியோத்து என்ற சீடன் இயேசுவை காட்டிக்கொடுக்க யூதர்களிடம் பேசுகிறான் (மத்தேயு 26:14-16)
இப்படி ஆதாரங்களை அடுக்கிக்கொண்டுப் போகலாம்.
பிஜே அவர்களுக்கும் மற்ற அறிஞர்களுக்கும் சிந்திக்க சில கேள்விகள்:
1. எந்த சூழ்நிலையிலாவது இயேசு சீடர்களை அனுப்பி நறுமணங்களை கொண்டுவரும்படிச் சொல்லி, தினமும் பூசிக்கொண்டார் என்று உங்களால் ஆதாரம் காட்டமுடியுமா?
2. இயேசுவின்
சீடர்கள் இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியில் "ஏன் இந்த வீண் செலவு
?" என்று விசனப்பட காரணமென்ன? காரணத்தை நான் சொல்கிறேன், இயேசு ஒரு முறை கூட இப்படி அதிக விலை உயர்ந்த தைலத்தை பணம் செலவு செய்து வாங்கிக்கொண்டு வரும்படி தன் சீடர்களுக்கு சொல்லவில்லை என்பதும், இயேசு இப்படி வீணான செலவுகள் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் என்பதையும் சீடர்கள் அறிந்திருந்தனர்.
3. மட்டுமல்ல, இந்த சீடர்கள் அந்த பெண்ணின் மீது கோபப்பட்டார்களே தவிர இயேசுவின் மீதல்ல? காரணம் இயேசு அவராகவே ஏற்பாடு செய்துக்கொண்டு தைலத்தை தன் உடலில் பூசிக்கொள்ளவில்லை என்பதும், அந்தப்பெண் தானாகவே வந்து இப்படி செய்தாள் என்பதும் சீடர்கள் அறிந்திருந்தார்கள். எனவே தான் இயேசு அந்தப் பெண்ணின் மீது கோபப்படாதீர்கள், இது என் மரண சடலத்தின் மிது பூசப்படப்போகும் நறுமணம் என்று சீடர்களுக்குச் சொன்னார்.
4. எல்லாரும் இயேசுவோடு சாப்பிட உட்கார்ந்து இருக்கும் போது, மரணத்தைப் பற்றியும், அடக்க ஆராதனைப் பற்றியும் யாராவது பேசுவார்களா? பேசமாட்டார்கள். ஆனால், இயேசு பேசினார். காரணம் பிஜே அவர்கள் சொல்வது போல, இயேசு விரும்பி நறுமணங்களை பூசிக்கொள்ள ஆசைப்படவில்லை. எல்லா சூழ்நிலைகளையும் தன் மரணத்தைப்பற்றிப் பேச இயேசு பயன்படுத்திக்கொண்டார் என்பது தான் உணமை.
5. அரசாங்கத்திற்கு வரி கட்ட, தூண்டில் போட்டு அதில் முதலாவது பிடிக்கும் மீனின் வயிற்றில் இருக்கும் நாணயத்தை எடுத்து கட்டும் படி இயேசு பேதுருவிடம் சொன்னார்(மத்தேயு 17:24-27). ஒருவேளை இயேசு அதிக விலையுள்ள நறுமணங்களை பூசிக்கொண்டு, பணத்தை வீண் செலவு செய்துக்கொண்டு இருந்து, ஆனால், அரசாங்கத்திற்கு வரிகட்ட மட்டும் பேதுருவிற்கு மீன்பிடித்து கட்டுங்கள் என்று சொல்லியிருந்தால், சீடர்கள் என்ன சொல்லியிருப்பார்கள் என்பதை நீங்களே சிந்தித்துக்கொள்ளுங்கள். "இவர் மட்டும் வீண்செலவு செய்துக்கொண்டு விலை உயர்ந்த நறுமணத்தை பூசிக்கொள்வார், ஆனால், வரி கட்ட மட்டும், நாங்கள் உழைத்து கட்டவேண்டுமா?" என்று கேட்டு இருப்பார்கள். அவரை யாரும் பின்பற்றி இருக்கமாட்டார்கள்.
முடிவுரை:
முடிவாக பிஜே அவர்களே, முதலாவது நேர்மையான முறையில் எல்லா வசனங்களையும் படித்து கேள்வி கேளுங்கள். உண்மை பாதி பொய் பாதி என்பது உம்மைப்போன்ற மக்கள் மத்தியில் ஊழியம் செய்பவர்களுக்கு அழகல்ல என்பது என் கருத்து.
நீங்கள் கேட்ட கேள்வி தவறானது, அதற்கு நீங்கள் காட்டிய வசனங்களும் முழுமையாக காட்டப்படவில்லை. உங்கள் அல்லா போல, பாதி விவரங்கள் குர்ஆனில் சொல்லிவிட்டு, மீதி விவரங்கள் ஹதீஸ்களில் சொல்வது போல பைபிள் இல்லை. எல்லா விவரங்களும் ஒரே இடத்தில் சொல்லப்பட்டிருக்கும், இந்த வசனத்திற்கு ஏற்ற ஹதீஸ் எது என்று மற்ற புத்தகங்களில் தேடி கண்டுபிடிக்க வேண்டிய கஷ்டம் இல்லை. எனவே, முழுவதுமாக படித்து கேள்விகள் கேளுங்கள்.
ஒரு வேளை இயேசு நறுமணம் விருப்பமாக பூசிக்கொண்டாலும் சரி, அது
உங்கள் “அல்லா” உண்மையான இறைவன் என்பதையும்,
“குர்ஆன்
” என்பது இறைவேதம் என்பதையும் நிருபிக்க உதவாது என்பதை சொல்லிக்கொள்கிறேன்.
எங்களுக்கு அல்லாவைப்பற்றியும், முகமதுவைப்பற்றியும் சொல்வதற்கு
முன்பாக உங்களிடம் நாங்கள் எதிர்ப்பார்ப்பது நேர்மையும், உண்மையையும் தான் என்பதை முதலாவது
புரிந்துக்கொள்ளுங்கள்.
உங்கள்
மார்கத்திற்காக மற்றவர்களின் வேதங்களில்
(நாங்கள் தினமும் படிக்கும், தியானிக்கும் வேதத்தில்) இல்லாததை கற்பனை செய்துக்கொண்டுச்
சொல்லும் நீங்கள், உங்கள் வேதத்தைப் பற்றி(நாங்கள் தினமும் படிக்காத,
தியானிக்காத குர்ஆன் பற்றி) எங்களுக்கு விவரிக்கும் போது எவ்வளவு பொய்யான தகவல்களை
சொல்லுவீர்கள் என்பதை கற்பனை கூட செய்துப்பார்க்க முடியாது.
பிஜே அவர்களுக்கு
ஈஸா குர்ஆனின் இதர பதில்கள்:
1. பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்
2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155 159): ஈஸா குர்ஆன் பதில்
3. பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்ஆன் பதில்
4. பிஜேவிற்கு ஈஸா குர்ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1
5. பிஜேவிற்கு ஈஸா குர்ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 2
| Isa Koran Home Page | Back - Answering PJ index Page |