பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் கட்டுரைகளுக்கு மறுப்பு

பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தமிழ் நாட்டின் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர். இவர் "இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்" என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியை தமிழ் நாடு முழுவதும் நடத்திக்கொண்டு வருகிறார். இந்நிகழ்ச்சிகளில் பல மாற்று மத நண்பர்கள் பங்கு பெறுகிறார்கள், கேள்விகளை கேட்கிறார்கள், இவர்களுக்கு பி. ஜே (ஜைனுல் ஆபிதீன்) அவர்கள் நிதானமாகவும், அழகாகவும் பதில் அளிக்கிறார். மட்டுமல்லாது, இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

இவர் கிறிஸ்தவத்தைப் பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார், சில கிறிஸ்தவ புத்தகங்களையும் எழுதியுள்ளார். கிறிஸ்தவத்தைப் பற்றி இவர் கொடுக்கும் பதிலில் பல தவறுகள் உள்ளது. மட்டுமல்லாது, கிறிஸ்தவர்களை இஸ்லாத்தின் பால் அழைப்பதற்கு பைபிளில் இல்லாத அல்லது பைபிளில் சொல்லாத பல விவரங்களை கற்பனை செய்துக்கொண்டு பதில் அளிக்கிறார். இவரது இந்த பதில்களால், பலர் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

எனவே, இந்த பக்கத்தில் நாம் இவரது பதில்களில் உள்ள நேர்மையையும், பிழையையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர முயற்சி செய்யப்போகிறோம்.

1. பிஜே அவர்கள் எழுதிய "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு மறுப்பு

Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் "பேதுரு"- Part 2

இந்த கட்டுரையில், "இயேசு நியமித்த நேர்த்தி மிகு தலைவர் பேதுரு " என்ற தலைப்பில் பதில் அளிக்கிறேன். பேதுருவை தலைவராக இயேசு நியமித்தது மிகவும் சரியான மதிப்பிடல் என்பதை இக்கட்டுரையில் விளக்குகிறேன். ஆதாரமே இல்லாமல், பேதுருவை விட சிறந்த சீடர்கள் இயேசுவிற்கு 9 பேர் இருந்தார்கள் என்று பிஜே அவர்கள் சொன்னது தவறானது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

Answering PJ: "பின்னாகப் போ சாத்தானே" என்றார் - Part 1

பிஜே அவர்களின் வார்த்தைகளின் படி, இயேசு பேதுருவை சாத்தான் என்று சொல்லி எடை போட்டாராம், இப்போது இதே வார்த்தைகள் இஸ்லாமையும், முஸ்லீம்களையும் எடை போட்டுக்கொண்டு இருக்கின்றன.

Answering - PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ?

இயேசு பேசிய நான்கு வசனங்களில் (மத்தேயு 26:10, 11, 12,13) ஒரு வசனத்தை (மத்தேயு 26:10) மட்டும் பிஜே குறிப்பிட்டார்கள். அதாவது, இயேசு பேசிய 100% ல், 25% மட்டும் குறிப்பிட்டு, மீதி 75% வேண்டுமென்றே மறைத்துள்ளார் பிஜே அவர்கள்.

பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 2

அற்புதம் நிகழ்த்தியது எப்படி?

பிஜே அவர்களே, தெரிந்தோ தெரியாமலோ மத்தேயு 7:21-23 வசனங்களை மேற்கோள் காட்டி மிகப்பெரிய பிழையை செய்துள்ளீர்கள்.

மத்தேயு 7:21-23 வசனங்கள் நீங்கள் நம்புகிறபடியால் (அ) குறிப்பிட்ட படியால், இயேசுவைப் பற்றி கீழ் கண்ட விவரங்களை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள் என்று பொருள்.

1. முஸ்லீம்களையும் மற்ற உலக மக்களையும் இயேசு நியாயம் தீர்க்க நியாயாதிபதியாக உள்ளார்.

2. மக்களை இயேசு நியாயம் தீர்த்து பரலோகத்தில் அவர்களை அனுமதிக்கும் அதிகாரம் உடையவராக இருக்கிறார்.

பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

பன்மை (Plural) எப்படி பிஜே அவர்களுக்கு ஒருமையாக (Singular) தென்பட்டது?

1. பிஜே அவர்களே சரியாகச் சொல்லுங்கள் "இயேசு ஒரு அற்புதம் மட்டும் தான் செய்தார் " என்று எழுதுகிறீரே? அதை நீங்கள் எந்த வசனத்திலிருந்து எடுத்தீர்கள்?

2. மாற்கு 6:2ம் வசனத்தில் அவரது பலத்த செய்கைகளை(அற்புதங்களை) கண்டு மக்கள் பிரமித்தார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது, அதே போல, மாற்கு 6:5ம் வசனத்தில், "சில நோயாளிகளை சுகமாக்கினார்" என்று சொல்லப்பட்டுள்ளது. "பலத்த செய்கைகள்" என்று பன்மையிலும், "சில" என்று இரண்டிற்கும் அதிகமான எண்ணிக்கையில் சொல்லப்பட்டு இருந்தால், உங்களுக்கு "ஒன்றே ஒன்று மட்டும்" என்று எப்படி இவைகளில் தெரிந்தது?

3. எப்படி இப்படி பைபிள் வசனம் சொல்லாத ஒன்றை கற்பனை செய்துக்கொண்டு எழுதுகிறீர்கள்? கற்பனை அதிகமாக இருந்தால், அதை உங்கள் இஸ்லாமிய கோட்பாடுகளை விவரிக்கும் போது பயன்படுத்திக்கொள்ளுங்கள், அதை ஏன் பைபிளில் பயன்படுத்துகிறீர்கள்?

பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில்

பிஜே அவர்கள் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தில், "இயேசு பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதால் கடவுளாக முடியுமா? " என்ற தலைப்பில், கீழ் கண்ட விவரங்களை அல்லது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்:

1. ஒருவர் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதால், கடவுள் ஆக முடியாது, ஏனென்றால், பலர் பைபிளின் படி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்.

2. இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவி, பல சந்தர்ப்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது.

3. இயேசு இறைவன் என்றால்? பின் ஏன் சோதிக்கப்பட்டார்?

4. இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவரிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்று தெரிகிறது.

5. இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதா, மூன்று தடவை இயேசுவை மறுத்த பேதுரு ஆகியோரும் கூட பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்களா?

பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்ஆன் பதில்

[இது குர்ஆனுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாறுகிறது. இப்படி இயேசுவின் சிலுவை நிகழ்ச்சியை அல்லா மாற்றி சொல்வதினால், அல்லா எதிர் காலத்தைப் பற்றி ஞானமில்லாதவராக தென்படுகிறார், மற்றும் இயேசுவின் சீடர்களை ஏமாற்றியவராக மாறுகிறார். இதுவே, அவருக்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறுகிறது. இது எப்படி சாத்தியம் என்று தெரிந்துக்கொள்ள இக்கட்டுரையை படிக்கவும்]

பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்

[பி.ஜைனுல் ஆபிதீன்(P.J. or பி.ஜே) அவர்கள், "இயேசு இறைமகனா?" என்ற புத்தகம் எழுதினார்கள். அதில் அவர் பைபிளைப் பற்றி பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். திரித்துவ கொள்கையை உருவாக்கி, கிறிஸ்துவத்திற்குள் பவுல் நிழைந்தார் என்ற பி.ஜேயின் குற்றச்சாட்டிற்கு பதில் இக்கட்டுரையில் காணலாம்.]



Isa Koran Home Page
Hosted by www.Geocities.ws

1