2. சரித்திர தவறுகள்2. யோவான் என்ற பெயர், யோவான் ஸ்நானனுக்கு முன் வேறு யாருக்கும் இல்லை. குர்-ஆன் 19:7யஹ்யா என்ற பெயருள்ளவன் இதற்கு முன்பு எவருமில்லை - குர்-ஆன் 19:7
19:7 'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்). அல்லா இங்கு சொல்கிறான், யஹ்யா ( யோவான் ) என்ற பெயர் கொண்ட நபர்களை தான் யோவான் ஸ்நானனுக்கு முன்பு வேறு யாரையும் உருவாக்கவில்லையாம். ஆனால் பைபிளில் பழைய ஏற்பாட்டில் பல நபர்கள் இப்பெயர்கள் கொண்டுயிருந்ததாக நாம் அறியமுடிகிறது. பைபிளில் யோவான்:இந்தப்பெயர் "யோகனான்" என்று பல முறை (27 க்கு அதிகமாக) பழைய ஏற்பாட்டில் வருகிறது. ( பார்க்க 2 இராஜா 25:23, 1 நாளா 3:15,24, 6:9,10, 12:4, 12:12, 26:3, 2 நாளா 17:15, 23:1, 28:12, எஸ்றா 8:12, 10:6, 10:28, நெகே 6:18, 12:13, 12:22,23,42, எரே 40:8 இன்னும் பல இடங்களில்.) சரித்திரத்தில் யோவான்:1) ஜான் ஹிர்கானஸ்: இவர் கி.மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த "ஹாஸ்மொனியன்" நாட்டு அரனாவான். ஆட்சிகாலம் கி.மு. 134 - 104, மரித்த ஆண்டு : கி.மு. 104. (மேலும் விவரங்களுக்கு : பார்க்க விக்கிபீடியா ஜான் ஹிர்கானஸ்: 2) "ஜான்" எஸ்ஸன்: ஒரு கலகம் செய்த குழுவிற்கு தலைவராக இருந்த "ஜான்" எஸ்ஸன் என்வரைப்பற்றி ஜொஸெபாஸ் சொல்கிறார். "ஜான்" எஸ்ஸன் கி.மு. வில் வாழ்ந்தவர். பார்க்க விக்கிபீடியா: "ஜான்" எஸ்ஸன்
3) 1 மக்காபீஸ் 2:1 : மக்காபீஸ் என்ற நூல் ( கி.மு 100) சொல்கிறது. மத்ததியாஸ் "ஜானின்" மகன், ஜான் சிமியோனின் மகன். மற்றும் அதிகாரம் 2 வசனம் 2 சொல்கிறது, மத்ததியாஸுக்கு "ஜான்" என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான் என்று. பார்க்க :
1 மக்காபீஸ் 2:1 :
மேல் சொல்லப்பட்ட எல்லா "ஜான்" களும் , பைபிளின் யோவான் ஸ்நானகனுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல இஸ்லாமிய அறிஞர்களின் குர்-ஆன் மொழிபெயர்ப்பும். நாம் மேலே சொன்னது போல கருத்துள்ளது.
யூசுப் அலி மட்டும் சிறிது மாற்றிச் சொல்கிறார். அவருக்கு இவ்வசனம் சரித்திரப்படி தவறானது என்று தெரிந்திருக்குமோ! குர்-ஆனை தான் நினைத்தபடி மொழிபெயர்த்துள்ளார்.
ஜலால் இவ்வசனத்திற்கு கீழ்கண்டவாறு பொருள் கூறுகிறார்(tafsir).
God, exalted be He, in responding to his request for a son that will be the incarnation of His mercy, says: 'O Zachariah! Indeed We give you good tidings of a boy, who will inherit in the way that you have requested - whose name is John. Never before have We made anyone his namesake', that is, [never has there been] anyone with the name 'John'.
இந்த தவறைப் பற்றி இஸ்லாமியர்களின் கேள்வியும் மற்றும் பதிலும் இங்கு காணலாம்.
|
Isa Koran Home Page | Back - Contradictions Index |