1. குர்-ஆன் முரண்பாடுகள்

4. தேவதூதர்கள் கீழ்படியாதவர்களாக இருப்பார்களா?

பதில்:மலக்குகள் (தேவதூதர்கள்) கீழ்படியாதவர்களாக இருப்பார்களா? என்று கேள்விகேட்டால், அதற்கு குர்-ஆன் முரண்பாடாக பதில் சொல்கிறது. ஒரு இடத்தில், ஆம், மலக்குகள் ஆணவம் கொள்வதில்லை மற்றும் தாங்கள் ஏவப்பாட்டபடியே செய்கின்றன என்றுச் சொல்கிறது.

கீழே உள்ள குர்-ஆன் வசனங்களைப் பார்க்கவும்:

குர்-ஆன் 16:49-50 - மலக்குகள் கீழ்படிகின்றன.

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - ஜீவராசிகளும், மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்து (சிரம் பணிந்து) வணங்குகின்றன. அவர்கள் (ஆண்வங்கொண்டு) பெருமையடிப்பதில்லை.

அவர்கள் தங்களுக்கு மேலாக இருக்கும் (சர்வ வல்லமைவுடைய) தங்கள் இறைவனை பயப்படுகிறார்கள்; இன்னும் தாங்கள் ஏவப்பட்டதை (அப்படியே) செய்கிறார்கள்.



ஆனால், குர்-ஆன் 2:34 ல் அல்லாஹ் சொல்கிறான், மலக்குகளில் ஒருவன் கீழ்படியவில்லை மற்றும் அவன் ஆணவம் கொண்டான்.

குர்-ஆன் 2:34 - ஒரு மலக்கு கீழ்படியவில்லை - இப்லீஸு

பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, "ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்" என்று சொன்னபொது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.






Isa Koran Home Page Back - Contradictions Index
Hosted by www.Geocities.ws

1