2. சரித்திர தவறுகள்

3. ஹாமான், பிரொன் - ஒரே காலத்தவர்கள் ? குர்-ஆன் 28:38, 40:36-37.

பதில்: ஹாமான் என்பவன் எகிப்து அரசன் பார்வோனின் (குர்-ஆன் படி :ஃபிரவ்ன்) மந்திரி அல்லது அதிகாரி என்று குர்-ஆன் கூறுகிறது. இவன் மூஸா சமகாலத்தவன் என்றுச் சொல்கிறது. ஆனால் பைபிளின் எஸ்தர் 3:1 ன்படி "ஹாமான்" என்பவன் பெர்சிய அரசனின் மந்திரியாவான்.

மூஸா காலத்திற்கு பின்பு 1000 வருடங்கள் கழித்து வரும் ஒரு "நபரை: ஹாமானை" குர்-ஆன், மூஸாவின் சமகாலத்தவன் என்றுச் சொல்கிறது. இது ஒரு முக்கியமான சரித்திர தவறாகும்.



குர்-ஆன் 28:35-42,40:36-37.

28:38 இன்னும் ஃபிர்அவ்ன் சொன்னான்: 'பிரமுகர்களே! என்னைத்தவிர உங்களுக்கு வேறெரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின், ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயைமூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும் - மேலும் நிச்சயமாக நான் இவரை பொய்யர்களில் நின்றுமுள்ளவர்" என்றே கருதுகின்றேன்.




குர்-ஆன் 40:36-37

40:36 (இவ்வளவு உபதேசித்த பின்னரும்:) 'ஹாமானே உயரமான ஒரு கோபுரத்தை எனக்காக நீ கட்டுவாயாக - நான் (மேலே செல்வதற்கான) பாதைகளைப் பெறும் பொருட்டு!

40:37 '(ஆம்) வானங்களின் பாதைகளை அடைந்து மூஸாவுடைய ஆண்டவனை நான் காண வேண்டும்; எனினும் அவர் பொய் சொல்லுகிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்;" என ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல்கள் அழகாக்கப்பட்டன; இன்னும் (நேர்) வழியிலிருந்து அவன் தடுக்கப்பட்டான்; ஃபிர்அவ்னுடைய சதி அழிவில்லாமல் (வேறு எவ்விதமாகவும்) முடிய வில்லை.

சில இஸ்லாமிய அறிஞர்கள், இக்கேள்விக்கு பதில் தருகிறார்கள். மூஸா காலத்திலும் ஒரு "ஹாமான்" இருந்தான். பிறகு 1000 வருடங்களுக்கு பிறகு பெர்சிய அரசனின் காலத்திலும் ஒரு "ஹாமான்" இருந்தான் என்றுச் சொல்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், "ஹாமான்" என்ற பெயர் ஒரு "எபிரேய" பெயர். இது ஒரு எகிப்திய பெயர் இல்லை. எந்த எகிப்திய அகராதியிலும் எப்பெயர் இல்லை.

இதைப்பற்றி மேலும் அறிய இங்கே க்ளிக் செய்யவும். ஸைஃபுல்லா கேள்வியும், பதிலும்

எகிப்திய பெயர்கள்:




Isa Koran Home Page Back - Contradictions Index
Hosted by www.Geocities.ws

1