2. சரித்திர தவறுகள்

4. பிரோனும் மற்றும் சிலுவை மரணதண்டனையும் குர்-ஆன் 7:124, 26:49

பதில்: சிலர் மூஸாவின் மீது நம்பிக்கைகொண்டதால், அவர்களை சிலுவையில் அறைந்து கொள்வதாக எகிப்திய அரசன் 'ஃபிரவ்ன்' சொல்கிறான். இது ஒரு சரித்திர தவறாகும். ஏனென்றால், சிலுவையில் அறையும் தண்டனை பெர்சிய மற்றும் ரோம அரசர்களால் 'ஃபிரவ்னுக்கு' பிறகு 1000 ஆண்டுகளுக்கு பின்பு வழக்கத்தில் கொண்டுவரப்பட்டது.



4.1 மூஸாவின் ( மோசேயின் ) காலத்தில் சிலுவை பற்றிய குர்-ஆன் வசனங்கள்:

குர்-ஆன் 7:124, 26:49

7:124 'நிச்சயமாக நான் உங்கள் கைகளையும், கால்களையும் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன்" என்று கூறினான்.

26:49 (அதற்கு ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவரிடம் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இவர் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுகொடுத்த உங்களைவிடப் பெரியவராக அவர் இருக்கிறார்; ஆகவே வெகு சீக்கிரம் நீங்கள் (இதன் விளைவைத்) தெரிந்து கொள்வீர்கள். நிச்சயமாக நான் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன் எனக் கூறினான்.

4.2 ஜோசப்பின் காலத்தில் சிலுவை வசனங்கள் (மூஸாவின் காலத்திற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு):

குர்-ஆன் 12:41

12:41 'சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது" (என்று யூஸுஃப் கூறினார்).

இந்த குர்-ஆன் வசனங்கள் சொல்வது போல, பிரவ்ன் சொல்லியிருக்க முடியாது. மூஸாவின் காலத்தில் (கி.மு. 1450 (அ) கி.மு. 1200) எகிப்து நாட்டில் சிலுவையில் அறைந்து கொன்றதாக எந்த ஆதாரமும் இல்லை. இன்னும் குர்-ஆன் 12:41 சொல்வது போல ஜோசப்பின் காலத்திலும் (மூஸாவின் காலத்திற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு), இப்பழக்கம் எகிப்தில் இல்லை.

4.3 முதல் சிலுவை - பெர்சியாவில்:

முதல் முதலில் சிலுவையில் அறையப்படும் தண்டனை பெர்சியாவில் கி.மு. 519 ல் தான் ஆரம்பிக்கப்பட்டது என்று விகிபீடியாவில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் சிலுவையில் அறையப்படும் பழக்கத்தைப் பற்றி குர்-ஆன் பேசுகிறது.

The earliest historical record of crucifixion was made in 519 BC when Darius I, the Persian King of Kings, crucified 3000 political opponents in Babylon. Wikipedia - Crucifixtion

4.4 மரத்தில் தூக்கிப் போடுதலும், சிலுவையில் அறைதலும் ஒன்றல்ல (உபாகமம் 21:22-23)

கல்லால் கொல்லப்பட்டவர்கள், தண்டனை பெற்றவர்களின் உடலை எல்லாரும் பார்க்கும்படி ஒரு மரத்தில் அவர்களுடைய உடலை மாலை வரை தொங்கவிடுவடு, சிலுவையில் அறைவது கண்டுபிடிப்பதற்கு முன்பே இருந்தது. ஆனால் சிலுவையில் அறையப்படுவது கி.மு. 519 ல், முதன் முதலாக பெர்சியர்கள் கொண்டுவந்தார்கள், பிறகு இதனை ரோமர்கள் பின்பற்றினார்கள். ரோமர்கள் எகிப்தை கைபற்றிய பிறகு இப்பழக்கத்தை எகிப்திலும் கொண்டுவந்தார்கள். ஆனால் குர்-ஆன் சொல்வதுபோல யூசுப்(ஜோசப்) மற்றும் மூஸா (மோசே) கலத்திலில்லை.
மேலும் இதைப்பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

உபாகமம் 21:22-23

கொலைசெய்யப்பட ஒருவன்மேல் சாவுக்குப் பாத்திரமான பாவம் உண்டாயிருக்க, அவனைக் கொலைசெய்யும்படி மரத்திலே தூக்கிப்போடுவாயானால், இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது, அந்நாளிலேதானே அதை அடக்கம்பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.

மேலும் அறிய:
இஸ்லாமியர்களின் பதில் இதன் மறுப்பு
Wikipedia - Crucifixtion
Encyclopedia Brittanica - Crucifixtion
Crucifixtion in the Ancient World
Ancient History - Crucifixion




Isa Koran Home Page Back - Contradictions Index
Hosted by www.Geocities.ws

1