முகமது இப்படியாக தான் ஆட்சியை அமைத்தும், மற்றவர்களுக்கு இப்படிப்பட்ட எடுத்துக்காட்டை கொடுத்து சென்று இருக்கும்போது, "முகமது ஒரு அமைதியின் சொரூபம் " என்று எப்படி முஸ்லீம்கள் சொல்கிறார்கள்?
இரண்டாவதாக, இந்த நிகழ்ச்சிகள் இஸ்லாம் அரேபிய இன மக்களின் இடையில் எப்படி பரவியது என்பதை படம் பிடித்து காட்டுகிறது. இந்த நிகழ்ச்சிகள் மிகவும் தெளிவாகச் சொல்கிறது, இந்த இரண்டு கொலைகளுக்குப் பிறகு, "கத்மா இன மக்களின் இடையில் இஸ்லாம் மிகவும் சக்தி மிகுந்ததாக மாறியது". உணமையில், "மர்வான் மகளின் கொலை நடந்த அடுத்த நாளிலிருந்து, "கத்மா" இன மக்கள் இஸ்லாமின் சக்தியை கண்டதால், இஸ்லாமியர்களாக மாறினார்கள் ". "இஸ்லாமின் சக்தியாக (Power of Islam)" அவர்கள் கண்டது என்ன? அது தான் தன்னை எதிர்ப்பவர்களை "கொலை செய்யும் சக்தி". இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரையில், இஸ்லாம் மற்றவர்களை பயப்படவைத்தும், கொடுமைப்படுத்தியும் பரவியது என்பது மிகவும் தெளிவாக புரிகிறது, இதற்கு முகமது தன் அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளார்.
ஒரு சாதாரண கிறிஸ்தவன் "பைபிள் முழுவதையும் படித்து அதன் கோட்பாடுகளை நன்றாக
புரிந்துக்கொள்ள" அவனால் முடியும், ஆனால், ஒரு சாதாரண முஸ்லீம் குர்ஆனையும் மற்றும்
இஸ்லாமில் உள்ள எல்லா புத்தகங்களையும் படித்து புரிந்துக்கொள்வது என்பது மிகவும்
கடினமான வேலையாகும். ஏனென்றால், இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் அடங்கிய புத்தகங்கள்
அதிக அளவில் உள்ளது, மட்டுமல்லாமல் அவைகள் எல்லாம் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை.
உண்மையைச் சொல்லவேண்டுமானால், முகமதுவின் வாழ்க்கையை முதன் முதலில் சரிதையாக
எழுதிய, இபின் இஷாக் அவர்களின் புத்தகமாகிய "சூரத் ரசூல் அல்லா - Ibn Ishaq's,
Sirat Rasul Allah" என்ற புத்தகத்தை பெரும்பான்மையான முஸ்லீம்கள் படிப்பதில்லை.
முகமதுவைப் பற்றி பெரும்பான்மையான மக்களுக்கு தெரிந்திருப்பது உண்மையின் ஒரு பாதி மட்டும் தான் என்பது மிகவும் கொடுமையானது, வருந்தப்படத் தக்கது. இஸ்லாமையும், முகமதுவையும் பற்றிச் சொல்லி இஸ்லாமை வளர்க்கும் அறிஞர்கள் நேர்மையானவர்களாக இருந்து, "முகமதுவின் உண்மையான வாழ்க்கையைப் பற்றியுள்ள எல்லா விவரங்களையும்" சொல்லவேண்டும். "முகமது ஒரு பின்பற்றத்தகுந்த எடுத்துக்காட்டாக இருக்கிறாரா இல்லையா" என்று நாங்கள் முடிவு செய்வதற்கு முன்பு, அவருடைய வாழ்க்கையைப் பற்றிய எல்லா விவரங்களையும் நாங்கள் அறிய விரும்புகிறோம்.
நான் உலகத்தின் பல பாகங்களிலிருந்து குர்ஆன்களை வரவழைத்து, அவர்கள் சொல்வது போல உலகத்தில் இருக்கும் குர்ஆன்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றதா? என்பதை என் சுயமாக பரிசோதித்துப் பார்த்தேன். என்னுடைய இந்த ஆய்வுவின் முடிவு என்னவென்றால், முஸ்லீம்களின் இந்த வாதம் தவறானது எனபது நிரூபனமாகிவிட்டது. உலகத்தில் இருக்கும் குர்ஆன்களை அனைத்தும் ஒன்று போல மற்றொன்று இருக்கவில்லை என்பது உண்மை. அவைகளில் பல சிறிய வித்தியாசங்கள் அடிப்படை எழுத்துக்களிலும், சப்தங்களை மாற்றும் புள்ளிகளிலும் மற்றும் உயிரெழுத்துக்களிலும் உண்டு. உண்மையில் சொல்லப்போனால், பல குர்ஆன்களில் இந்த வித்தியாசங்களை தங்கள் பக்கங்களில் குறிப்பிட்டும் இருக்கின்றனர். இதன் பொருள் என்னவென்றால், உலகமைத்திலும் உள்ள குர்ஆன்களை முஸ்லீம்கள் ஒரே மாதிரியாக நிச்சயமாக ஓதுவது இல்லை என்பது தெளிவு. எனவே, இஸ்லாமிய அறிஞர்கள், தலைவர்கள் இனி குர்ஆன் பற்றி அளவிற்கு அதிகமாக இப்படி புகழ்வதை விட்டு விடவேண்டும். எனவே, குர்ஆனில் பல வித்தியாசமாக ஓதுவதும், எழுத்துக்களில் வேறுபாடுகளும் இருப்பதனால், குர்ஆன் ஒன்றும் பைபிளை விட உயர்ந்தது இல்லை.
Isa Koran Home Page | Back - Author's Index Page |