அப்துல்லாவும் அப்ரஹாமும் உரையாடல்

பாகம் - 2

[ சனிக்கிழமை இரவு 8:00 மணி, அப்துல்லா தன் நண்பன் அப்ரஹாமுக்கு டெலிபோன் செய்கின்றான். வேலை ஒன்றும் இல்லையானால், நாளை மாலை வீட்டிற்கு வருவாயா என்று அப்துல்லா கேட்கிறான். அப்ரஹாமும் வருகிறேன் என்றான். ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 5, அப்ரஹாம், அப்துல்லா வீட்டிற்குச் சொல்கின்றான், இனி அவர்கள் இருவர் உரையாடலை கேட்ப்போம். ]

அப்துல்லா: வாடா, வேத பண்டிதனே! வா! சரியான நேரத்திற்கே வந்துட்டியே?

அப்ரஹாம்: நீ கூப்பிட்ட பிறகு கூட, லேட்டா வரமுடியுமா சொல்லு?

அப்துல்லாவின் மனைவி: அண்ணா, வாங்க வாங்க, வீட்டு பக்கமே வருவதில்லையே நீங்க?

அப்ரஹாம்: ஒன்னும் இல்லேம்மா, கொஞ்சம் வேலை அதிகமா இருக்கு கம்பனியிலே, அதனாலே தான் வரமுடிகிறதில்லே.

அப்துல்லாவின் மனைவி: நீங்க பேசிகிட்டு இருங்க, இதோ, அஞ்சு நிமிஷத்திலே காபி கொண்டு வரேன்.


[ குறிப்பு: குர்-ஆன் படி ஒரு பெண், இப்படி மூன்றாம் நபர் ( கணவரின் உயிர் நண்பனானாலும் சரி) முன்பு, "புர்கா" அணியாமல், சாதாரண உடையில் வரக்கூடாது. இருந்தாலும், இந்த குடும்பம் நட்பிற்கு இலக்கணமாக திகழுவதினால், இவர்கள் இப்படிப்பட்ட சட்டங்களை சீரியசாக எடுத்துக்கோள்வதில்லை ]

அப்துல்லா: டேய், நான் ரொம்ப நாளா குர்-ஆன், பைபிள் பற்றி சில செய்திகளை சேகரித்து வந்திருக்கேன். நான் சொல்லப்போகும் செய்திகள் கேட்டு, நீ அப்படியே திகைச்சி போவே தெரியுமா?

அப்ரஹாம்: கேளுடா, கேளு. யார் திகைச்சி போவாங்க என்று அப்புறம் தெரியும்.

அப்துல்லா: முதல்லே, நான் குர்-ஆன் பத்தின பெருமையைச் சொல்வேன், பிறகு பைபிளைப் பற்றி சில முக்கியமான முரண்பாடுகள், பிழைகளைப் பத்தி கேள்வி கேட்பேன் சரியா?


அப்ரஹாம்: ரொம்ப சந்தோஷம்டா. அப்படியே செய்வோம்.


சூடான காபி வருகிறது, இருவரும் குடிக்கிறார்கள். அப்துல்லா தன் மனைவிக்கு ஒருமணி நேரம் கழித்து மறுபடியும், காபி கொண்டுவா என்று சொல்கிறான்.

அப்ரஹாம்: ஏண்டா, ஒரு மணி நேரத்திலேயே மறுபடியும் காபி ?


அப்துல்லா: எனக்கு இல்லேடா, உனக்குத் தான். நான் சொல்லப்போற செய்திகள் கேட்டு உனக்கு தலை சுத்துமில்லையா, அதுக்குத் தான், காபி.


அப்ரஹாம்: [அப்துல்லா மனைவியை கூப்பிட்டு ] ஏம்மா, இரண்டு கப் காபி, மற்றும் ஒரு "சாரிடன் மத்திரை" கூட. ஹா..ஹா.. ஹா... [ எல்லாரும் சிரிக்கிறார்கள் ]


அப்துல்லா: டேய், நான் சொன்னது போல, எங்கள் குர்-ஆன் பற்றிய பெருமையை நான் மொதல்ல சொல்லுவேன். இதோ பாரு

1. உலகத்திலேயே மாறாமல் இருக்கும் ஒரு வேதம், குர்-ஆன் தான்.

2. குர்-ஆனில் மட்டும் தான், ஒரு எழுத்து கூட, அல்லது ஒரு எழுத்தின் பகுதியோ மாறாமல் 1400 ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது.

3. குர்-ஆனில் ஒரு எழுத்து கூட்டவோ, குறைக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை, அது மனிதர்களால் முடியாது கூட. காரணம், குர்-ஆனை பாதுகாப்பதாக அல்லாவே சொல்லியிருக்கிறார். அந்த பொறுப்பை அல்லாவே எடுத்துக்கொண்டார்.

4. இப்போது உலகத்தில் நம்மிடம் இருக்கும் குர்-ஆனும், நபி முகமது (அவர் மிது சாந்தி உண்டாகட்டும்) அவர்களுக்கு வஹி மூலம் இறக்கிய குர்-ஆனும், எழுத்துக்கு எழுத்து மாறாமல், கூட்டப்படாமல், திருத்தப்படாமல் அப்படியே உள்ளது.

இப்போ சொல்லு, இதுக்கு உன் பதில் என்ன? சொல்லு, காபி மற்றும் சாரிடன் இப்போதே கொண்டுவரச் சொல்லட்டுமா? ஹா...ஹா... ஹா...


அப்ரஹாம்: அண்ணே, காபி இப்போ வேண்டாமண்ணே, அப்பறம் குடிக்கலாம். கம்ப்யூட்டரை ஆன் பண்ணு, ஒரு அரபிக் குர்-ஆனை கையில் எடுத்துக்கோள், இன்டெர்னெட் கன்னெக்ட் பண்ணு. இதெல்லாம் இப்போ நமக்கு தேவை. நான் சொல்லப்போற பதில், உன் எல்லா செய்திகளுக்கும் பதில் தரும்.

அப்துல்லா: ஒரு நிமிஷம் இரு, எல்லாம் ரெடியா வெச்சிகிறேன். [ எல்லாவற்றையும் முடித்து விடுகிறான், அப்துல்லா ]சரி, இப்போ சொல்லு உன் பதில்.


அப்ரஹாம்: முகமதுவின் வாழ்நாளிலெ, 23 ஆண்டுகளாக, குர்-ஆன் பகுதி பகுதியாக, சமயத்திற்கு ஏற்றது போல அல்லா முகமதுக்கு வஹி(மனதிலே அல்லா வசனத்தை போடுவது) மூலமாக இறங்கியது. சரி தானே?


அப்துல்லா: ரொம்ப சரி. மேலும் சொல்லு.


அப்ரஹாம்: முகமது மரிப்பதற்கு முன்பாக, அவர் கையிலே, இப்போது நம்மிடம் உள்ள குர்-ஆன் போன்று மொத்த வசனங்கள் அடங்கிய ஒரு மொத்த தொகுப்பு இருந்ததா என்று கேட்டால்? இல்லை என்பது தான் பதில்.

அவர் இருக்கும்போது குர்-ஆன் அதிகாரங்களாக, வசனங்களாக பிரிக்கப்படவில்லை. அதிகாரங்களாக பிரிக்காதது தவறு என்று நான் சொல்லவில்லை. நான் கேட்பது. நம்மிடம் உள்ள குர்-ஆனில் உள்ள எல்லா வசனங்களும்(அல்லது செய்தியும்)உள்ள ஒரு தொகுப்பு (அ லிருந்து ஃ A-Z வரை ), முகமதுவிடம் இருந்ததா?


அப்துல்லா: இருந்தது. இதில் என்ன சந்தேகம்?

அப்ரஹாம்:

இல்லை. முகமது இறந்தவுடன், மற்ற நட்டு அரசர்கள், தாங்கள் முகமதுவிற்கு பயந்து நம்பிக்கொண்டு இருந்த "அல்லாவை" விட்டு விட்டனர். வரியை கட்ட மறுத்தனர். இதை சரி செய்ய "அபு பக்கர்" (முகமதுவின் மாமனார், ஆயிஷாவின் தந்தை, முதல் காலிஃபா), பல முஸ்லீம்களை யுத்தத்திற்கு அனுப்பினார். அந்த யுத்தம் தான் "யமாம" என்று அழைக்கப்படுகிறது. அந்த போரில், முகமதுவின் நெருங்கி வாழ்ந்த தோழர்கள்(சீடர்கள்), குர்-ஆனை மனப்பாடம் செய்தவர்கள், அதிகமான பேர் மரித்துவிட்டனர்.

இந்த ஹதீஸை பார்

Volume 6, Book 60, Number 201:

Volume 6, Book 60, Number 201:

Narrated Zaid bin Thabit Al-Ansari:

who was one of those who used to write the Divine Revelation: Abu Bakr sent for me after the (heavy) casualties among the warriors (of the battle) of Yamama (where a great number of Qurra' were killed). 'Umar was present with Abu Bakr who said, 'Umar has come to me and said, The people have suffered heavy casualties on the day of (the battle of) Yamama, and I am afraid that there will be more casualties among the Qurra' (those who know the Qur'an by heart) at other battle-fields, whereby a large part of the Qur'an may be lost, unless you collect it. And I am of the opinion that you should collect the Qur'an." Abu Bakr added, "I said to 'Umar, 'How can I do something which Allah's Apostle has not done?' 'Umar said (to me), 'By Allah, it is (really) a good thing.' So 'Umar kept on pressing, trying to persuade me to accept his proposal, till Allah opened my bosom for it and I had the same opinion as 'Umar." (Zaid bin Thabit added:) Umar was sitting with him (Abu Bakr) and was not speaking. me). "You are a wise young man and we do not suspect you (of telling lies or of forgetfulness): and you used to write the Divine Inspiration for Allah's Apostle. Therefore, look for the Qur'an and collect it (in one manuscript). " By Allah, if he (Abu Bakr) had ordered me to shift one of the mountains (from its place) it would not have been harder for me than what he had ordered me concerning the collection of the Qur'an. I said to both of them, "How dare you do a thing which the Prophet has not done?" Abu Bakr said, "By Allah, it is (really) a good thing. So I kept on arguing with him about it till Allah opened my bosom for that which He had opened the bosoms of Abu Bakr and Umar. So I started locating Quranic material and collecting it from parchments, scapula, leaf-stalks of date palms and from the memories of men (who knew it by heart).



அப்துல்லா: சரி, இந்த ஹதீஸ் மூலம் நீ என்ன சொல்ல நினைக்கிறே?

அப்ரஹாம்: இந்த ஹதீஸ் என்ன சொல்கிறது என்றால் :

1. குர்-ஆன் முகமது வாழும் காலத்தில், ஒரு தொகுப்பாக, புத்தகமாக ஆக்கப்படவில்லை.

2. குர்-ஆனில் வசனங்கள் சிலரின் மனதில் மனப்பாடமாகவும், சில வசனங்கள் தோல்களிலேயும், பேரிச்ச இலைகளிலேயும், இன்னும் பல விதங்களில் சேமித்துவைக்கப் பட்டதே தவிர, ஒரு தொகுப்பாக, ஒருவரிடம் எல்லா வசனங்களும் இல்லை.

3. ஒரு தொகுப்பு (எல்லா வசனங்களும்) அபு பக்கர், உமர் போன்றவர்களிடம் ஒருந்துயிருக்குமானால், ஏன் அவர்கள் யுத்தத்தில் மரித்த மனிதர்களுக்காக கவலைப்பட வேண்டும்?

4. மனப்பாடம் செய்தவர்கள் (குர்ரா-Qurra) எல்லாரும் போரில் மரித்துவிட்டால், தங்களிடம் இருக்கும் வசனங்கள் (தோலில், இலைகளில்) வைத்துக்கொண்டு ஒரு முழு குர்-ஆனை தொகுக்க முடியாது என்பதால் அவர்கள் ஒரு குர்-ஆன் தொகுப்பை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தார்க்ள்.

5. ஏற்கனவே, ஒரு முழு குர்-ஆன் தொகுப்பு தங்களிடம் (தோலிலோ, இலைகளிலோ) இருந்துயிருந்தால், முகமது ஒரு முழு தொகுப்பை கொடுத்து சென்றுயிருந்தால், இவர்கள் ஏன் இத்தொகுப்பு வேலையை ஆரம்பிக்கவேண்டும்?

6. இப்படிப்பட்ட தொகுப்பு வேலையை, முகமதுவே செய்யும் படி கட்டளையிடவில்லை என்று இந்த ஹதீஸ் சொல்கிறது. அப்படியானால், முகமது மரிக்கும் போது ஒரு புத்தகவடியில் அவரிடமெ ஒரு குர்-ஆன் இல்லை.

மேல் சொன்ன ஹதீஸில், அபு பக்கர், உமர் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று பார்.
" Abu Bakr added, "I said to 'Umar, 'How can I do something which Allah's Apostle has not done?' 'Umar said (to me), 'By Allah, it is (really) a good thing.

"அல்லாவின் தூதரே(முகமது) செய்யாத வேலையை நான் எப்படி செய்ய முடியும்?", உமர் சொல்கிறார், "இருந்தாலும், இது நல்ல வேலை செய்யத்தான் வேண்டும்". இப்படி செய்யவில்லையானால்... சில காலத்திற்கு பின்பு நம்மிடம் "குர்-ஆன்" இருக்காது என்பது உமரின் எண்ணம்.

ஜையதின் தயக்கம் அல்லது எண்ணம்:

ஜையத் என்பவர் தான் முகமது குர்-ஆனை ஓதும் போது, அதை தோல்களிலும், இலைகளிலும் எழுதியவர். ஏன் ஜையத் இந்த தொகுப்பு வேலை ஒரு பெரிய மலை போன்றது என்கிறார்?

இன்றைய இஸ்லாமியர்கள், இன்னும் பல ஹதிஸ்கள் சொல்வதுபோல, பல பேர் குர்-ஆன் முழுவதும் மனப்பாடம் செய்துயிருந்தால், அல்லது தோல்களிலும், இலைகளிலும் முழு குர்-ஆனும் எழுதப்பட்டிருந்தால். ஜையத் இப்படி வேதனைபட்டிருக்க மாட்டார். தான் மனப்பாடம் செய்த எல்லா குர்-ஆன் வசனங்களும், எழுதிவிட்டு, மற்றவர்களை சரிபார்க்கும் படி சொல்லியிருப்பார், வேலை சுலமபாகியிருக்கும். இப்படி எல்லாரிடத்திலும் சென்று, தேடி, கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் இருந்தியிருக்காது.

எனவே, உண்மை என்னவென்றால்:

1. ஒருவரும் குர்-ஆனை முழுவதுமாக ஒரு வார்த்தைவிடாமல், மனப்பாடம் செய்யவில்லை. நூறு சதவிகிதம்(100%) ஒருவரும் மனப்பாடம் செய்யவில்லை.

2. ஒரு நபித்தோழரிடமும், குர்-ஆனின் எல்லா வசனங்களும் தோல்களிலோ, இலைகளிலோ முழுவதுமாக இல்லை.

3. முகமது மரிக்கும் தருவாயில், யாரிடமும், " ஒரு முழு குர்-அனை" கொடுத்துச் செல்லவில்லை. என்பது மிகத்தெளிவாகப் புரியும்.




அப்துல்லா: ஒருவேளை இந்த ஹதீஸ் ஒரு பொய்யான ஹதீஸாக இருக்கலாம்.

அப்ரஹாம்: நீ சொல்வது சரியானது இல்லை. உலக ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள், அறிஞர்கள் எல்லாம், குர்-ஆன் இப்படி தொகுக்கப்பட்டது என்று ஒப்புக்கொள்கின்றனர். இதில் எந்த கருத்துவேறுபாடுமில்லை. வேண்டுமானால், எல்லா இஸ்லாம் தளங்களிலும் சென்று "குர்-ஆன் தொகுக்கப்பட்ட விதம்" என்ற கட்டுரையை தேடிப் பார்.

அப்துல்லா: சரி, நீ சொல்வது ஏற்றுக்கோள்கிறேன், நம் நபி மரித்தபிறகு தான், குர்-ஆன் தொகுக்கப்பட்டது. ஆனால், அந்த தொகுப்பு ஒரு நல்ல படித்தவரிடம் தானே தொகுக்கும்படி ஒப்படைக்கப்பட்டது. அவர், மறுபடியும், எல்லா வசனங்களையும் தொகுத்துயிருப்பார் இல்லையா? அதில் ஒரு வசனம் கூட விடுபட்டுயிருக்காது இல்லையா? எனவே, இப்போது உள்ள குர்-ஆன் எல்லா வசனங்களையும் கொண்டுள்ளது என்று நிச்சயமாக சொல்லலாமே.

அப்ரஹாம்: இதிலும் ஒரு பிரச்சனை உள்ளது. கீழ கண்ட ஹதீஸ் சொல்கிறது. "யமமா" போரில் மரித்தவர்கள் மட்டுமே மனப்பாடம் செய்த சில வசனங்கள், அவர்கள் போரில் மரிக்கும் போது அவர்களோடு அழிந்துவிட்டது. அவ்வசனங்கள் தெரிந்தவர்கள் யாருமில்லை, அவ்வசனங்கள் தோல்களிலும், இலைகளிலும் எழுதப்படவில்லை. எனவே, குர்-ஆனின் சில வசனங்கள், யாருக்கும் தெரியாமலே அழிந்துவிட்டது. இந்த வசனங்களை, அபு பக்கரும், உமரும், உத்மானும் தொகுக்கவில்லை என்று சொல்கிறது இந்த ஹதீஸ்.

Ibn Abi Dawud, Kitab al-Masahif, p.23
Many (of the passages) of the Qur'an that were sent down were known by those who died on the day of Yamama ... but they were not known (by those who) survived them, nor were they written down, nor had Abu Bakr, Umar or Uthman (by that time) collected the Qur'an, nor were they found with even one (person) after them. (Ibn Abi Dawud, Kitab al-Masahif, p.23).

சரி நான் ஒரு கேள்வி கேட்கிறேன். யாராவது குர்-ஆனி எரித்தால் என்ன செய்வீர்கள்?

அப்துல்லா: எரித்தவன் கதி அதோ கதி தான். சும்ம விட மாட்டோம்.

அப்ரஹாம்: அப்படியானால், இந்த ஹதீஸை நீ தான் படிக்கனும்:

Volume 6, Book 61, Number 510:
Volume 6, Book 61, Number 510:

Narrated Anas bin Malik:

Hudhaifa bin Al-Yaman came to Uthman at the time when the people of Sham and the people of Iraq were Waging war to conquer Arminya and Adharbijan. Hudhaifa was afraid of their (the people of Sham and Iraq) differences in the recitation of the Qur'an, so he said to 'Uthman, "O chief of the Believers! Save this nation before they differ about the Book (Quran) as Jews and the Christians did before." So 'Uthman sent a message to Hafsa saying, "Send us the manuscripts of the Qur'an so that we may compile the Qur'anic materials in perfect copies and return the manuscripts to you." Hafsa sent it to 'Uthman. 'Uthman then ordered Zaid bin Thabit, 'Abdullah bin AzZubair, Said bin Al-As and 'AbdurRahman bin Harith bin Hisham to rewrite the manuscripts in perfect copies. 'Uthman said to the three Quraishi men, "In case you disagree with Zaid bin Thabit on any point in the Qur'an, then write it in the dialect of Quraish, the Qur'an was revealed in their tongue." They did so, and when they had written many copies, 'Uthman returned the original manuscripts to Hafsa. 'Uthman sent to every Muslim province one copy of what they had copied, and ordered that all the other Qur'anic materials, whether written in fragmentary manuscripts or whole copies, be burnt. Said bin Thabit added, "A Verse from Surat Ahzab was missed by me when we copied the Qur'an and I used to hear Allah's Apostle reciting it. So we searched for it and found it with Khuzaima bin Thabit Al-Ansari. (That Verse was): 'Among the Believers are men who have been true in their covenant with Allah.' (33.23)



மூன்றாவது காலிபா உத்மான் ஆண்ட காலத்தில்(முகமது மரித்த 20 ஆண்டுகளுக்கு பின்பு), பல விதமான மொழிபெயர்ப்பு(வசனங்கள்) உள்ள குர்-ஆன் புழக்கத்தில் இருந்தது. இதனால், ஒவ்வொரு பகுதியிலிருந்து வருபவர்கள், தங்கள் குர்-ஆன் தான் சரியானது, மற்றவர்களுடையது தவறானது என்று சண்டையிடவே, உத்மான், அபுபக்கர் தொகுத்த குர்-ஆனை வரவழைத்து, அதில் சில மாறுதல் செய்து, வேறு ஒரு புதிய தொகுப்பை உருவாக்கி, அதில் பல பிரதிகள் எடுத்து, புழக்கத்தில் இருந்த மற்ற எல்லா குர்-ஆன்களையும் எரித்துவிடும்படி உத்மான் கட்டளையிட்டார்.

நான் என்ன சொல்ரேன் என்றால்...


அப்துல்லா: நீ ஒன்னும் சொல்லவேண்டாம். சும்மா இரு. [அப்துல்லா மனைவி வருகிறாள்]

அப்துல்லா மனைவி என்ன உங்க இரண்டுபேரோட பேச்சு முடிஞ்சுதா? அப்ரஹாம் அண்ணா, நான் காபி கொண்டுவரட்டுமா?

அப்துல்லா: அவனுக்கு காபி, கீபி ஒன்னும் வேண்டாம். எனக்கு மட்டும் ஒரு கப் காபி கொண்டுவா..... அதோட, இன்னும் 15-20  நிமிஷத்திலே நிறைய முந்திரி பருப்பு போட்டு, பால் பாயாசம் செய்து கொண்டுவா இவனுக்கு. பாயசமுன்னா இவனுக்கு ரொம்ப இஷ்டம்.

அப்துல்லா மனைவி உங்களுக்கு சாரிடன் மாத்திரை கொண்டுவரட்டுமா? ஹா... ஹா... ஹா...

அப்துல்லா: உன் அண்ணனுக்கும், உனக்கும், நக்கல் அதிகம்.

அப்ரஹாம்: நான் இன்னும் உன் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லலடா?

அப்துல்லா: இன்னிக்கு இது போதும், அடுத்த வாரம் பேசலாம். இன்னும் அதிகமா கத்துகிட்டு வரேன். உன் தோலை அன்னிக்கு நான் உரிக்கிறேன்டா.

அப்ரஹாம்: அடுத்த வாரம் 5 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்துடு. ஒரு புது ஸ்வீட் செஞ்சி உனக்கு குடுக்கனும்னு, உன் தங்கச்சி ஆசைபடுது. பாவம் நீ என் மனைவியின் கையால் அதுவும் புது ஸ்வீட் சாப்பிடப்போறே. கர்த்தர் தான் காப்பாத்தனும்.

சிறிது நேரத்திற்கெல்லாம், பாயாசம் மனக்க மனக்க வருகிறது. அதுவும் முஸ்லீம் கையால் செய்தது. அதை சாப்பிட்டு விடைபெற்றுச் செல்கிறான், அப்ரஹாம்.

அடுத்த வார உரையாடலில், அப்ரஹாம் இப்போது உள்ள குர்-ஆன் சம்மந்தப்பட்ட சில செய்திகளைச் சொல்வான். மற்றும் அப்துல்லா, பைபிளின் வரலாற்றுப் பற்றி, தொகுக்கப்பட்ட முறைபற்றிப் பேசுவான்.


1. அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல், பாகம் 1



Isa Koran Home Page Back - Abdul Abraham Index
Hosted by www.Geocities.ws

1