| This page is about seajourney of Nedunthivu people.This may express their Bravities, Sorrows, Hopes...போத்துகீசியர் காலத்தில் கிறிஸ்தவ பாதிரிமார் கோவாவில் இருந்து ராமேஸ்வரம் வந்து அங்கிருந்து படகில் கசசதிவுக்கு வந்து தங்கி பின்பு நெடுந்திவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. 1939 வரை அலுப்பாந்தியில் இருந்து நெடுத்நீவுக்கு படகு போக்குவரத்து நடந்தது. பின்பு ஊர்கவத்துரையிலிருந்து மாவிளித்துறைஇக்கு அரச படகுச் சேவை தொடங்கப்பட்டது. சில்வர்இஸ்பிரய் என்ற படகு சிறந்த சேவை ஆற்றியது.இந்த படகுச் சேவைகள் முறையாகத தொடங்க முன் குறிகட்டுவநிலிருந்து "மற்சுவாய்" எனப்படும் படகு மூலம் நெடுந்தீவுக்கு பயணம் செய்தனர். இந்தப படகுகள் நைனதீவு கடற்கரையில் வசிக்கும் திமிலர் என்ற சமூகத்தினரால் துணிகரமாக திறமையுடன் செலுத்தபட்டன. இதற்க்கு கூலியாக ஐந்து ரூபா அக்காலத்தில் வாங்கப்பட்டது . |