⇰ To Index Page |
திருக்குறள் - Tirukkural |
1.1 பாயிரவியல்:
1.1.1 கடவுள் வாழ்த்து The Praise of God [To Top]
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி |
பகவன் முதற்றே உலகு. 1-
அகர ஒலியே எல்லா எழுத்துகளுக்கும் முதல்; அதுபோல், ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றான்.
All the letters have the letter ‘A’ as their Origin like eternal almighty as first in the universe or world.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் |
நற்றாள் தொழாஅர் எனின். 2-
தூய அறிவு வடிவான இறைவனின் நன்மை தரும் திருவடி களைத் தொழாதவர் என்றால், அவர் கற்றதனால் உண்டான பயன் யாதுமில்லை.
What use is derived from learning, if the learned do not adore the good feet of almighty who possess pure knowledge?
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் |
நிலமிசை நீடுவாழ் வார். 3-
அன்பர் நெஞ்சமாகிய மலரின்மேல் சென்று வீற்றிருப்பவனது சிறந்த திருவடிகளைச் சேர்ந்தவர்களே, உலகில் நிலையாக வாழ்வார்கள்.
Those who find refuge in the great feet (of Him) who lives in the lotus of the heart (of the devotee) live eternally in heaven (p) They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு |
யாண்டும் இடும்பை இல. 4-
விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை.
Those who have attained the feet of Him who has no likes or dislikes will be rid of all troubles (p) To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் |
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5-
இறைவனின் மெய்ம்மையோடு சேர்ந்த புகழையே விரும்பினவரிடத்து, அறியாமை என்னும் இருளைச் சார்ந்த இருவகை வினைகளும் வந்து சேரா.
Actions, both good and bad that spring from darkness of the mind will never touch those who ever chant the glories of the Lord (p) The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க |
நெறிநின்றார் நீடுவாழ் வார். 6-
ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனின், பொய்ம்மைஇல்லாத ஒழுக்கநெறியில் நின்றவரே நிலையான வாழ்வினர் ஆவர்.
Those who still the five senses and walk in truth and right will ever live (p) Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் |
மனக்கவலை மாற்றல் அரிது. 7-
தனக்கு யாதொன்றும் ஒப்புமை இல்லாதவனின் திருவடிகளைச் சேர்ந்தார்க்கு அல்லாமல், பிறர்க்கு, மனக்கவலையை மாற்றுதல் அரிதாகும்.
Only those who have sought refuge in the feet of the peerless can shake off anxiety Others cannot (p) Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் |
பிறவாழி நீந்தல் அரிது. 8-
அறக் கடலான அந்தணனின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல், பிறர்க்கு, இன்பமும் பொருளும் ஆகிய கடல்களைக் கடத்தல் இயலாது.
Only those who have clung to the feet of the Lord who is the sea of righteousness, will be able to sail the other seas, Others cannot (p) None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் |
தாளை வணங்காத் தலை. 9-
எண்வகைக் குணங்களில் உருவான இறைவன் திருவடிகளை வணங்காத தலை, கேளாக் காதும் காணாக் கண்ணும் போலப் பயனில்லாதது.
The head that does not bow down before and worship the feet of the Lord of the eight attributes, will be as like the palsied senses (p) The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் |
இறைவன் அடிசேரா தார். 10-
இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடப்பார்கள் : சேராதவர்களால் கடக்க இயலாது.
Those who gain the feet of the Lord cross the great ocean of births; others cannot (p) None can swim the great sea of births but those who are united to the feet of God.
1.1.2 வான்சிறப்பு – Glory of sky or rain [To Top]
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் |
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. 11-
மழை பெய்வதனாலேதான் உலக உயிர்கள் வாழ்கின்றன; ஆதலால், மழையே உயிர்களுக்கு அமிழ்தம் ஆகும்.
The world for its existence depends on unfailing rainfall; the rain may well be regarded as the nectar of life (p) By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் |
துப்பாய தூஉம் மழை. 12-
உண்பவர்க்குத் தகுந்த பொருள்களை விளைவித்துத் தந்து, அவற்றைப் பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக (பருகும் நீராக) விளங்குவதும் மழையே ஆகும்.
The rain is the source of all articles of food that man needs It becomes his drink too (p) Rain produces good food, and is itself food.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து |
உள்நின்று உடற்றும் பசி. 13-
மழை காலத்தால் பெய்யாது பொய்க்குமானால்,கடலால் சூழப்பட்டுள்ள இப்பரந்த உலகினுள் பசி நிலைபெற்று உயிர்களை வாட்டும்.
Hunger would stalk abroad and torment this wide sea-girt world were the rims to fail in time (p) If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world.
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் |
வாரி வளங்குன்றிக் கால். 14-
'மழை' என்னும் வருவாயின் வளம் குறைந்ததானால், பயிர் செய்யும் உழவரும் (விளைபொருள்களை விளைவிக்க) ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்கள்.
The cultivators would cease to plough were the clouds’ free supply of water to fail (p) If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே |
எடுப்பதூஉம் எல்லாம் மழை. 15-
காலத்தால் பெய்யாது உலகில் வாழும் உயிர்களைக் கெடுப்பதும் மழை. அப்படி கெட்டவற்றைப் பெய்து வாழச் செய்வதும் மழையே ஆகும்.
It is the rain that afflicts man and it is its fall that relieves him (p) Rain by its absence ruins men; and by its existence restores them to fortune.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே |
பசும்புல் தலைகாண்பு அரிது. 16-
வானிலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல் உலகில், பசும் புல்லின் தலையைக் காண்பதுங்கூட அருமையாகி விடும்.
If the clouds were to withhold rain not even a blade of grass would rustle on earth (p) If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி |
தான்நல்கா தாகி விடின். 17-
மேகமானது கடல் நீரை முகந்து சென்று மீண்டும், மழையாகப் பெய்யாவிட்டால், அப்பெரிய கடலும் தன் வளமையில் குறைந்து போகும்.
Even the illimitable deep shrinks if the clouds do not pour and replenish it (p) Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் |
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. 18-
மழையானது முறையாகப் பெய்யாவிட்டால் உலகத்திலே, வானோர்க்காக நடத்தப்படும் திருவிழாக்களும், பூசனைகளும் நடைபெறமாட்டா.
If the rains were to fail there would be no more o£ferings and festivals to the gods (p) If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials.
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் |
வானம் வழங்கா தெனின். 19-
மழை பெய்து உதவாவிட்டால், இந்தப் பரந்த உலகத்திலே பிறருக்காகச் செய்யப்படும் தானமும், தனக்காக மேற்கொள்ளும் தவமும் இரண்டுமே நிலையாமற் போய்விடும்.
If the rains were to fail, there would neither be alms nor penance on this wide earth (p) If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் |
வான்இன்று அமையாது ஒழுக்கு. 20-
நீர் இல்லாமல் எத்தகையோருக்கும் உலக வாழ்க்கை அமையாது என்றால், மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது.
The world cannot exist without water; there will be no ceaseless supply without rainfall (p) If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து |
வேண்டும் பனுவல் துணிவு. 21-
ஒழுக்கத்தில் நிலையாக நின்று, பற்றுகளை விட்டவர்களின் பெருமையைப் போற்றிச் சிறப்பித்துச் சொல்வதே நூல்களின் துணிபு.
The one supreme thing all scriptures affirm is the great renunciation of those who walk in right conduct (p) The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து |
இறந்தாரை எண்ணிக்கொண்டற்று. 22-
பற்றுகளை விட்டவரின் பெருமையை அளந்து சொல்வதானால், உலகில் இதுவரை இறந்தவர்களைக் கணக்கெடுத்தாற் போன்றதாகும்.
To measure the greatness of one who has renounced is like reckoning the number of the dead in this world (p) To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead.
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் |
பெருமை பிறங்கிற்று உலகு. 23-
இம்மை, மறுமை என்னும் இரண்டின் கூறுகளைத் தெரிந்து, இவ்வுலகில் அறநெறியை மேற்கொண்டவரின் பெருமையே உயர்ந்ததாகும்.
The greatest thing on earth is the renunciation of those who understand birth and liberation (p) The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others).
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் |
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. 24-
'அறிவு' என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காப்பவன் எவனோ, அவனே மேலான வீட்டுலகிற்கு ஒரு வித்து ஆவான்.
He who with firmness bridles the five senses is (himself) the seed of the eternal bliss Verily he is the seed of the immortals who with firmness bridles the five senses (p) He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் |
இந்திரனே சாலுங் கரி. 25-
ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனுடைய வலிமைக்கு, அகன்ற வானுலகோர் கோமானாகிய இந்திரனே போதிய சான்று.
Indra, the Lord of the skies is himself a witness, to the might of those who have conquered their five senses (p) Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் |
செயற்கரிய செய்கலா தார். 26-
செய்வதற்கு அருமையானவற்றைச் செய்பவர் பெரியோர்; சிறியோர், செய்வதற்கு அரியவற்றைச் செய்யமாட்டாதவர் ஆவர்
The great achieve the impossible; the little cannot (p) The great will do those things which is difficult to be done; but the mean cannot do them.
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் |
வகைதெரிவான் கட்டே உலகு. 27-
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் தெரிந்து நடப்பவனிடமே உலகம் உள்ளது.
The world falls at the feet of one who has realised the true nature of the taste, sight, touch, sound and smell (p) The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து |
மறைமொழி காட்டி விடும். 28-
நிறைவான மொழிகளையே சொல்லும் சான்றோரின் பெருமையை, உலகத்தில் நிலையாக விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
The greatness of the sages in this world is borne out by their prophetic utterances (p) The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி |
கணமேயும் காத்தல் அரிது. 29-
நல்ல குணம் என்கின்ற குன்றின்மேல் ஏறி நின்ற சான்றோரால், சினத்தை ஒருகணமேனும் பேணிக் காத்தல் அருமையாகும்.
It is impossible to resist even for a minute the wrath of those who stand on the hill of virtue’s actions (p) The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும் |
செந்தண்மை பூண்டொழுக லான். 30-
எவ்வகைப்பட்ட உயிருக்கும் செவ்வையான அருளை மேற்கொண்டு நடப்பதனால், அந்தணர் எனப்படுவோரே அறவோர் ஆவர்.
They are the Brahmans who are righteous and love all creation (p) The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.
1.1.4. அறன்வலியுறுத்தல் - Emphasizing Virtue [To Top]
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு |
ஆக்கம் எவனோ உயிர்க்கு. 31-
அறமானது சிறப்பைத் தரும்; செல்வத்தையும் தரும்; அதனால் அறத்தைவிட உயிருக்கு ஆக்கம் தருவது வேறு யாதுமில்லை.
Is there anything higher in life than Dharma? It secures glory and wealth (p) 31. Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess?
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை |
மறத்தலின் ஊங்கில்லை கேடு. 32-
அறநெறியோடு வாழ்வதைக் காட்டிலும் உயிருக்கு நன்மை யானதும் இல்லை; அறநெறியைப் போற்றாமல் மறத்தலைக் காட்டிலும் கேடானதும் இல்லை.
Nothing is higher than Dharma; to forget it is wrought with greatest evil (p) There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே |
செல்லும்வாய் எல்லாஞ் செயல். 33-
நம்மாலே முடிந்த வகைகளில் எல்லாம். முடியக்கூடிய வழிகளில் எல்லாம், அறச் செயல்களை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும்.
Avail yourself of all opportunities Do not cease from practising Dharma on all possible occasions to the best of your ability (p) As much as possible, in every way, incessantly practise virtue.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் |
ஆகுல நீர பிற. 34-
தன் மனத்திடத்துக் குற்றம் இல்லாதவனாகுதல் என்னும் அவ்வளவே அறம் எனப்படும்; பிற ஆரவாரத் தன்மை கொண்டவை.
Be pure in mind That is Dharma (p) Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் |
இழுக்கா இயன்றது அறம். 35-
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் ஒருசிறிதும் இடம் தராமல் ஒழுகிவருவதே அறம் ஆகும்.
That course of conduct that steers clear of every desire, wrath, and offensive speech — is alone Dharma (p) That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது |
பொன்றுங்கால் பொன்றாத் துணை. 36-
'பின்காலத்தில் பார்ப்போம் என்று தள்ளி வைக்காமல், அறத்தை அன்றே செய்க. அது இறக்கும் காலத்திலே அழியாத் துணையாகும்.
Do not postpone doing Dharma Do it now (p) Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை |
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. 37-
சிவிகையைச் (பல்லக்கு) சுமப்பவனோடு, அதனில் அமர்ந்து செல்பவன் ஆகியவருக்கு, 'அறத்தின் வழி இதுதான்' என்று கூறவேண்டாம்.
Why search for the fruits of Dharma? Behold the one in the palanquin and the palanquin-bearer (p) The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் |
வாழ்நாள் வழியடைக்கும் கல். 38-
செய்யத் தவறிய நாள் என்றில்லாமல் ஒருவன் அறம் செய்வானானால், அதுவே வாழ்நாள் முடியும் வழியை அடைக்கும் கல்லாகும்.
If one were to practise righteousness every day it would be the stone that blocks the way to re-birth (p) If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births.
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் |
புறத்த புகழும் இல. 39-
அறவாழ்வில் வாழ்வதனால் வருவதே இன்பமாகும். மற்ற பொருளும் இன்பமும் இன்பமாகா; அவற்றால் புகழும் இல்லை.
Happiness springs only from Dharma All else is sorrow and merits no praise (p) Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு |
உயற்பால தோரும் பழி. 40-
ஒருவன் தன் வாழ்நாளில் செய்யவேண்டியது எல்லாம் அறமே; அவன் செய்யாமல் காக்க வேண்டியது எல்லாம் பழிச்செயலே
To do good and to avoid evil must be the law of our being (p) That is virtue which each ought to do, and that is vice which each should shun.
1.2. இல்லறவியல் Domestic or Married Life:
1.2.1. இல்வாழ்க்கை Domestic Virtue [To Top]
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் |
நல்லாற்றின் நின்ற துணை. 41-
இல்லறத்தில் வாழ்பவன் என்பவன், பிற அற இயல்பையுடைய முத்திறத்தார்க்கும் நல்வழியில் நிலையான துணையாவான்.
The householder is the prop of the three orders of life in the conduct of their virtue (p) He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in their good path.
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் |
இல்வாழ்வான் என்பான் துணை. 42-
துறவியர்க்கும், வறுமைப்பட்டோர்க்கும், தனக்குத் தொடர்புடைய இறந்தவர்கட்கும் இல்வாழ்வினனே துணையாவான்.
The householder is the mainstay of the ascetics, the needy and the dead (p) He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு |
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. 43-
தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்திடத்தும் பேணுதல் இல்வாழ்பவனுக்குச் சிறப்பாகும்.
It is the supreme virtue (of the householder) to fulfil his obligations to forefathers, gods, guests, relatives and himself (p) The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை |
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். 44-
பழிக்குப் பயமும், உள்ளதைப் பிறர்க்குப் பகுத்துக் கொடுத்து| உண்ணும் இயல்பும் உடையதானால், வாழ்க்கை வழிக்கு எப்போதுமே குறைவு இல்லை.
If one were to live in fear of infamy and partake of the remains of food (offered) one’s line would never perish (p) His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others).
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை |
பண்பும் பயனும் அது. 45-
கணவன் மனைவியருக்குள் அன்புப் பிணைப்பும், அறநெறிப் படியே நிகழ்ந்து வருவதும் உடையதானால், இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் அந்த வாழ்வே ஆகும்.
The life of householder marked by love and rectitude is itself virtue and its fruit (p) If the married life possess love and virtue, these will be both its duty and reward.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் |
போஒய்ப் பெறுவ தெவன்? 46-
அறநெறிப்படியே இல்வாழ்க்கையை ஒருவன் நடத்தி வருவானானால், அவன் வேறு நெறியிலே போய்ப் பெறுவது என்ன?
Is there any gain greater in resorting to other orders of life than by pursuing the right path of the householder? (p) What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state?
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் |
முயல்வாருள் எல்லாம் தலை. 47-
அறநெறியின் தன்மையோடு இல்வாழ்க்கை வாழ்பவனே வாழ்வுமுயற்சியில் ஈடுபடுவாருள் எல்லாம் தலைசிறந்தவன் ஆவான்.
The life of the householder is far greater than that of one in the path of renunciation (p) Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை |
நோற்பாரின் நோன்மை உடைத்து. 48-
பிறரையும் அறநெறிப்படி நடக்கச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை வாழ்வதானது, தவசியரின் நோன்பைவிட வலிமையானது ஆகும்.
The householder who keeps others in the right path and himself does not deviate from his, does greater penance than the anchorite (p) The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance.
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் |
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. 49-
அறம் என்று சான்றோரால் சொல்லப்பட்டது யாதெனில், இல்வாழ்க்கையே. அதுவும் பிறன் பழித்துப் பேசுவதில்லையானால் சிறப்பாகும்.
What is Dharma but the life of the householder? There is no greater life if it is free from reproach (p) The marriage state is truly called virtue. The other state is also good, if others do not reproach it.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் |
தெய்வத்துள் வைக்கப் படும். 50-
உலகத்துள் வாழும் நெறிப்படியே வாழ்பவன், வானகத்தே வாழும் தெய்வத்துள் ஒருவனாகக் கருதி நன்கு மதிக்கப் படுவான்.
He who lives the true life of the householder on earth becomes one among the gods in Heaven (p) He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven.
1.2.2 1.2.2 வாழ்க்கைத் துணைநலம் Life partner [To Top]
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் |
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 51-
இல்வாழ்வுக்குத் தகுந்த சிறந்த பண்பு உடையவளாகித் தன்னை மணந்தவனின் வளமைக்குத் தகுந்தபடி நடப்பவளே, சிறந்த வாழ்க்கைத் துணைவியாவாள்
She is the true partner in life who possesses all the wifely virtues and spends according to the income of her husband (p) She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை |
எனைமாட்சித் தாயினும் இல். 52-
இல்வாழ்வுக்கான சிறப்புகள் அனைத்தும் மனைவியிடம் இல்லையானால், அந்த இல்வாழ்க்கையில் எவ்வளவு சிறப்பிருந்தாலும் அது வாழ்வு ஆகாது.
Home life shorn of its grace will be barren however pompous it may be (p) If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing.
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் |
இல்லவள் மாணாக் கடை? 53-
இல்லாள்சிறந்தவளானால் இல்லாதது என்பது என்ன? இல்லவள் சிறந்தவள் அல்லாதபோது உள்ளதுதான் என்ன?
If the wife abounds in virtues is there anything lacking in home? Lacking which, it lacks everything (p) If his wife be eminent (in virtue) , what does (that man) not possess? If she be without excellence, what does (he) possess?
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் |
திண்மை உண்டாகப் பெறின். 54-
கற்பு என்னும் மனவுறுதி, இல்லாளிடம் உண்டாயிருந்தால், அந்தப் பெண்ணைவிடப் பெருமைமிக்கவை உலகில் யாவை உள? ஒன்றுமில்லை.
Is there anything greater than a woman if only she is the citadel of chastity? (p) What is more excellent than a wife, if she possess the stability of chastity?
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் |
பெய்யெனப் பெய்யும் மழை. 55-
தெய்வம் தொழாதவளாய்த் தன் கொழுநனையே தொழுது துயிலெழுகின்ற கற்புடையவள் பெய்' என்றால், மழையும் பெய்யும்.
Waking up she worships no other god than her husband Verily at her very bidding it rains (p) If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற |
சொற்காத்துச் சோர்விலாள் பெண். 56-
தன் கற்பு வழுவாமல் காத்துத் தன் கணவனையும் பேணித் தகுதியமைந்த புகழையும் காத்துச் சோர்வு அடையாதவளே பெண்.
She is the woman who shields herself, serves her wedded lord, maintains her glory and never ceases from her toil (p) She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame.
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் |
நிறைகாக்கும் காப்பே தலை. 57-
சிறை வைத்துக் காக்கின்ற காவல் என்ன பயனைச் செய்து விடும்? மகளிர், கற்பு என்னும் பண்பைக் காப்பதே சிறப்பானதாகும்.
Of what use is one’s watch and ward? Her chastity is her only shield (p) What avails the guard of a prison? The chief guard of a woman is her chastity.
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் |
புத்தேளிர் வாழும் உலகு. 58-
பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செய்வாரானால், பெரும் சிறப்புடைய புத்தேளிர் (அமரர் தேவர் கடவுள்) வாழும் உலகினைப் பெறுவார்கள்.
A dutiful wife inherits heaven with all its glory (p) If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish.
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் |
ஏறுபோல் பீடு நடை. 59-
புகழைக்காப்பாற்ற விரும்பும் மனைவி இல்லாதவருக்கு, இகழ்ச்சியாகப் பேசுபவர் முன்னே ஏறுபோல் நடக்கும் பெருமித நடையும் இல்லை.
A cuckold knows not the lovely gait of a lion before his detractors (p) The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் |
நன்கலம் நன்மக்கட் பேறு. 60-
மனைவியின் சிறந்த பண்பே இல்வாழ்வுக்கு மங்கலம்; நல்ல மக்கட் பேறும் உடையதாய் இருத்தல், அதற்கு நல்ல அணிகலன் ஆகும்.
The grace of a home is her virtue Her blessed children are its adornment (p) The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness.
1.2.3 புதல்வரைப் பெறுதல் Begetting or Wealth of Children [To Top]
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த |
மக்கட்பேறு அல்ல பிற. 61-
பெறுகின்ற செல்வங்களாகியவற்றுள், அறிவறிந்த மக்களைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்ததாக, எதனையும் யாம் கருதுவதில்லை.
We do not know of any other asset than that of intelligent off-spring (p) Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் |
பண்புடை மக்கட் பெறின். 62-
பழிச்சொல் ஏற்படாத நற்பண்புடைய மக்களைப் பெற்றிருந்தால், ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் தீவினைப்பயன்களாகிய துன்பங்கள் அணுகாது.
All the seven births no evil befalls one who is blest with good and unstained children (p) The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் |
தம்தம் வினையான் வரும். 63-
'தம் பொருள்' என்று போற்றுவதற்கு உரியவர் தம் மக்களேயாவர்; மக்களாகிய அவர்தம் பொருள்கள் எல்லாம் அவரவர் வினைப் பயனால் வந்தடையும்.
A man’s riches are his children; their riches are the fruit of their actions (p) Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் |
சிறுகை அளாவிய கூழ். 64-
தம்முடைய மக்களின் சின்னஞ்சிறு கைகளாலே அளாவாப் பெற்றது, மிகவும் எளிமையுடைய கூழேயானாலும், அது பெற்றோருக்கு அமிழ்தினும் இனிமையானதாயிருக்கும்.
Sweeter than ambrosia is the food handled by the tender hand of one’s children (p) The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர் |
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 65-
தம் மக்களின் உடம்பைத் தொடுதல் உடலுக்கு இன்பமாகும். அவர்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு மிகுந்த இன்பமாகும்.
The delight of the body is the touch of one’s children The delight of the ear is their lisp (p) The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் |
மழலைச்சொல் கேளா தவர். 66-
தம் மக்களின் மழலைப் பேச்சைக் கேட்டு இன்புறாதவர்களே, 'குழலிசை இனியது', 'யாழிசை இனியது' என்று புகழ்ந்து கூறுவார்கள்.
The ‘lute is sweet’, ‘the Veena is sweet’, they say who have not heard the lisp of their little ones (p) The pipe is sweet, the lute is sweet, say those who have not heard the prattle of their own children.
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து |
முந்தி இருப்பச் செயல். 67-
ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் நல்ல உதவி, அவனைக் கற்றோர் அவையிலே, முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலே ஆகும்.
The good a father can do his son is to make him occupy the first rank in an assembly (p) The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து |
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. 68-
தம்மைக்காட்டினும், தம் மக்கள் அறிவுடையவராக விளக்கம் பெறுதல், பெற்றோருக்கு மட்டுமல்லாமல், பெரிய உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் இனிமையானது ஆகும்.
Wisdom of the child is not merely the father’s delight but the delight of the world (p) That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves.
ஈன்ற பொழுதின் பெரிதவக்கும் தன்மகனைச் |
சான்றோன் எனக்கேட்ட தாய். 69-
தன் மகனைச் சான்றாளன் என்று பலரும் போற்றுவதைக் கேள்வியுற்ற தாய், அவனைப் பெற்றபொழுதிலும் பெரிதாக மகிழ்வாள்.
A mother’s joy to hear of her son’s greatness transcends that at his birth (p) The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை |
என்நோற்றான் கொல் எனும் சொல். 70-
மகன், தந்தைக்குச் செய்யும் உதவி 'இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன நோன்பு செய்தானோ' என்னும் புகழ்ச் சொல்லே ஆகும்.
The service a son can do his father is to make the public exclaim ‘see, the fruit of his father’s good deeds (p) (So to act) that it may be said "by what great penance did his father beget him," is the benefit which a son should render to his father.
1.2.4 அன்புடைமை Love or Loving Kindness [To Top]
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் |
புன்கணீர் பூசல் தரும். 71-
அன்புக்குப் பிறர் அறியாமல் மறைத்து வைக்க தாழ்ப்பாள் உண்டா? இல்லை; அன்பு கொண்டவர், தான் நேசிப்பவர் துன்பத்தில் இருக்கும்போது கண்ணீரை வடிப்பதன் மூலம் அன்பை வெளிப்படுத்திவிடுவார்கள்
Is there a bolt to fasten one’s love? The trickling tears at the distress of one’s friends will proclaim the love within (p) Is there any fastening that can shut in love? Tears of the affectionate will publish the love that is within.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் |
என்பும் உரியர் பிறர்க்கு. 72-
அன்பில்லாதவர் எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பர்; அன்பு உடையவரோ தம் எலும்பையும் பிறருக்கு உரியதாக்கி மகிழ்வர்.
The loveless are full of themselves but the loving lay down their lives for others (p) Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love cons ider even their bones to belong to others.
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு |
என்போடு இயைந்த தொடர்பு. 73-
அருமையான உயிருக்கு உடம்போடு பொருந்திய தொடர்பானது, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கைக்காகவே என்பர் சான்றோர்.
They say the endless incarnation of one’s spirit is for the fulfilment of love (p) They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth).
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் |
நண்பு என்னும் நாடாச் சிறப்பு. 74-
அன்பானது பிறர்பால் ஆர்வம் உடையவராகும் பண்பைத் தரும். அந்தப் பண்பானது நட்பு என்கின்ற அளவற்ற மேன்மையைத் தரும்.
Out of love springs kindness It in turn grows into inestimable prize of friendship (p) Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship.
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து |
இன்புற்றார் எய்தும் சிறப்பு. 75-
இவ்வுலகத்திலே இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவராகப் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர்.
The joy of heaven is but the fruit of righteous life rooted in love (p) They say that the felicity which those who, after enjoying the pleasure (of the conjugal state) in this world, obtain in heaven is the result of their domestic state imbued with love.
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் |
மறத்திற்கும் அஃதே துணை. 76-
அறத்திற்கே அன்பு துணையாகும் என்று சொல்பவர் அறியாதவர். ஆராய்ந்தால் மறச்செய்கைகளுக்கும் அன்பே துணையாயிருக்கும்.
The ignorant say that kindness is an ally of virtue No, it is a defence against evil too (p) The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.
என்பி லதனை வெயில்போலக் காயுமே |
அன்பி லதனை அறம். 77-
எலும்பில்லாத புழுப்பூச்சிகளை வெயில் காய்ந்து வருத்துவது போல, அன்பில்லாதவனை அறமானது காய்ந்து வருந்தச் செய்யும்.
The sun dries up a boneless body Likewise the god of righteousness destroys the loveless one (p) Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, i.e. worms.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் |
வற்றல் மரந்தளிர்த் தற்று. 78-
உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கையானது, வன்மையான பாலைநிலத்திலேகாய்ந்தமரம் தளிர்த்தாற்போல நிலையற்றதாம்.
To live a life void of love is like a withered tree bursting into leaf in a barren land (p) The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்பு ம் யாக்கை |
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. 79-
உள்ளத்தின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவருக்கு, கண்ணுக்குத் தெரியும் உடம்பின் புற உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும்?
What profits one’s outward feature if one's heart is devoid of love? (p) Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு |
என்புதோல் போர்த்த உடம்பு. 80-
உயிர்நிலை என்பது அன்பின் வழியாக அமைந்ததே; அஃது இல்லாதவருக்கு எலும்பைத் தோலால் போர்த்த உடம்பு மட்டுமேயாகும்.
That body where love dwells is the seat of life; all others are but skin-clad bones (p) That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.
1.2.5. விருந்தோம்பல் Hospitality [To Top]
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி |
வேளாண்மை செய்தற் பொருட்டு. 81-
இவ்வுலகில் இருந்து, பொருளைப் பேணி, இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவுதலின் பொருட்டே ஆகும்.
To keep house and to acquire wealth is only to minister to guests (p) The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா |
மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று. 82-
விருந்தாக வந்தவர் வெளியே சென்றிருக்க, தான்மட்டும் உண்ணுதல், சாவா மருந்தாகிய அமிழ்தமே என்றாலும் விரும்பத் தக்கது அன்று.
With a guest waiting it would not be proper to eat even though it were nectar (p) It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை |
பருவந்து பாழ்படுதல் இன்று. 83-
நாள்தோறும் தன்னை நாடி வரும் விருந்தினரைப் போற்றுகிறவனுடைய இல்வாழ்க்கை துன்பத்தால் பாழ்படுதல் என்றும் இல்லையாகும்.
A life of one who daily looks after the incoming guests will never suffer from poverty (p) The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து |
நல்விருந்து ஓம்புவான் இல். 84-
முகமலர்ச்சியோடு நன்முறையில் விருந்தினரைப் பேணுகிறவன் வீட்டிலே, உளமலர்ச்சியோடு திருமகள் அகலாது தங்கியிருப்பாள்
Fortune smiles on the house of one who entertains with cheerful face worthy guests (p) Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி |
மிச்சில் மிசைவான் புலம். 85-
விருந்தினரைப் போற்றியபின், எஞ்சியதைத் தான் உண்ணுகிறவனுடைய நிலத்தில், விதையும் விதைக்க வேண்டுமோ?
Does the field of one who partakes of what remains after entertaining the guest, need to be sown with seeds? (p) Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain?
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் |
நல்வருந்து வானத் தவர்க்கு. 86-
செல்லும் விருந்தினரையும் போற்றி, வரும் விருந்தையும் எதிர் பார்த்திருப்பவன், வானத்துத் தேவர்க்கு நல்ல விருந்தினான் ஆவான்.
He who cherishes the guests who come to him, and looks forward to new guests, will himself be the honoured guest of the gods (p) He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven.
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் |
துணைத்துணை வேள்விப் பயன். 87-
விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவினது என்று கூறத்தக்கது அன்று; அது விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினது ஆகும்.
The effects of hospitality cannot be exactly measured They are proportionate to the worth of the guest (p) The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure.
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி |
வேள்வி தலைப்படா தார். 88-
பொருளை வருத்தத்தோடு காத்து, அது போய்விட்டபோது 'தாம் பற்றில்லாதவர்' என்பவர்கள், விருந்தைப் பேணி அந்த வேள்வியில் ஈடுபடாதவரே யாவர்!
Those who have failed in their duties to guests will regret the folly of mere hoarding (p) Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, "we have laboured and laid up wealth and are now without support."
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா |
மடமை மடவார்கண் உண்டு. 89-
பொருள் உடைமையுள்ளும் இல்லாமை' என்பது, விருந்தோம்பலைப் பேணாத மடமையே; அஃது அறிவற்றவரிடமே உளதாகும்.
To be poor amidst plenty is to despise hospitality Such folly is only of the ignorant (p) That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து |
நோக்கக் குநழ்யும் விருந்து. 90-
அனிச்ச மலர் மோந்தவுடனே வாடிவிடும்; முகம் மாறுபட்டு நோக்கிய உடனே விருந்தினரும் உள்ளம் வாடி விடுவார்கள்.
The aniccam flower withers when smelt, and the guest under a displeased look (p) As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away.
1.2.6 இனியவைகூறல் Sweet or Pleasant speech [To Top]
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் |
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 91-
செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்.
Sweet are the words that fall from the lips of those who are full of guileless love and truth (p) Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து |
இன்சொலன் ஆகப் பெறின். 92-
முகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவ னானால் அது, அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளைவிட நல்லதாகும்.
To speak with a pleasant look is better than to give with a cheerful heart 31 (p) Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் |
இன்சொ லினதே அறம். 93-
முகத்தோற்றத்தால் விருப்பத்தோடு இனிமையாகப் பார்த்து, உள்ளத்திலிருந்து வரும் இனிய சொற்களையும் சொல்லும் அதுவே, அறமாகும்.
To welcome one with a pleasant look and loving words is righteousness (p) Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue.
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் |
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. 94-
எவரிடத்தும் இன்பம் உண்டாகத் தகுந்த இன்சொல்லைப் பேசுபவர்க்கு, துன்பத்தை மிகுதியாக்கும் வறுமையும் இல்லாமற் போகும்.
The torment of poverty does not befall those who have a good word to say to all (p) Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு |
அணியல்ல மற்றுப் பிற. 95-
பணிவு உடையவனாகவும், இனிதாகச் சொல்பவனாகவும் ஆகுதல், ஒருவனுக்கு அணிகலனாகும்; பிறவெல்லாம் அணிகலன்கள் ஆகா.
Humility and loving words are only true ornaments Others are not (p) Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments).
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை |
நாடி இனிய சொலின் 96-
நன்மையானவைகளையே விரும்பி, இனிய சொற்களையும், சொல்லி வந்தால், அதனால் பாவங்கள் தேய்ந்து போக, அறம் வளர்ந்து பெருகும்.
Vice wears out and virtue grows in one who speaks kind and wholesome words (p) If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று |
பண்பின் தலைப்பிரியாச் சொல். 97-
பிறர்க்கு நல்ல பயனைத் தந்து, நல்ல பண்பிலிருந்து ஒருசிறிதும் விலகாத சொற்கள், சொல்வானுக்கும், நன்மை தந்து உபகாரம் செய்யும்.
Sweetly uttered words that do good to others will light up the path of virtue (p) That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world).
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் |
இம்மையும் இன்பம் தரும். 98-
சிறுமையான எண்ணங்களில்லாத இனிய சொற்கள், மறுமையிலும் இம்மையிலும் ஒருவனுக்கு இன்பத்தைத் தரும்.
Sweet and inoffensive words yield one happiness both here and hereafter (p) Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next.
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ |
வன்சொல் வழங்கு வது? 99-
இனிய சொற்கள் தனக்கு மிகுந்த இன்பத்தைத் தருவதனைக் காண்பவன்,வன்சொற்களை வழங்குவது எந்தக் காரணத்தாலோ?
Why should a man use harsh words, knowing the pleasure that sweet speech kindles? (p) Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields?
இனிய உளவாக இன்னாத கூறல் |
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. 100-
இனிய சொற்கள் இருக்கின்றபோது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்கவும் காயைத் தின்பது போன்றதே!
Indulging in offensive words and avoiding sweet ones is like prefering the raw to a ripe fruit (p) To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.
1.2.7 செய்ந்நன்றி அறிதல் Gratitude [To Top]
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் |
வானகமும் ஆற்றல் அரிது. 101-
தான் எதுவுமே செய்யாதிருக்கவும், பிறன் தனக்குச் செய்த உதவிக்கு, இவ்வுலகமும் வானுலகமும் ஈடாக முடியாது.
For the help rendered expecting no return even earth and heaven will prove no recompense (p) (The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் |
ஞாலத்தின் மாணப் பெரிது. 102-
காலத்தோடு செய்த உதவியானது அளவால் சிறிதே என்றாலும், அதன் பெருமையோ உலகத்தைவிடப் பெரியதாகும்.
A help timely, though small, transcends the world (p) A favour conferred in the time of need, though it be small (in itself) , is (in value) much larger than the world.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் |
நன்மை கடலின் பெரிது. 103-
பயனைக் கருதாதவர் செய்த உதவியின் நன்மையினை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலையும் விட அளவினால் மிகப் பெரியதாகும்.
Help done expecting no return, if weighed will be vaster than the sea (p) If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் |
கொள்வர் பயன்தெரி வார். 104-
உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவே ஒருவன் நன்மை செய்தாலும், அதனைப் பனையளவாக உளங் கொண்டு போற்றுவார்கள்.
Small as millet is the help given, the wise hold it as big as a palmyra fruit (p) Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit.
உதவி வரைத்தன்று உதவி உதவி |
செயப்பட்டார் சால்பின் வரைத்து. 105-
உதவியானது அதன் அளவையே எல்லையாக உடையது அன்று; அது, உதவி செய்யப்பட்டவரின் பண்பையே தனக்கு அளவாக உடையதாகும்.
Help rendered is not in terms of the return but its value depends on the receiver (p) The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure.
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க |
துன்பத்துள் துப்பாயார் நட்பு. 106-
மனமாக இல்லாதவரின் நட்பினை ஒருபோதும் மறக்கலாகாது; துன்பக் காலத்தில் உறுதுணையாக உதவியவரின் நட்பையும் விடலாகாது.
Forget not the companionship of the pure of heart Give up not the friendship of those who have stood by you in hour of sorrow (p) Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless.
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் |
விழுமந் துடைத்தவர் நட்பு. 107-
தம்முடைய துன்பத்தை ஒழித்தவரின் நட்பினை, ஏழேழ் பிறப்பினும் மறவாது நினைந்து போற்றுவர் நன்றியுடையோர்
The good remember with gratitude, all through seven births, the friendship of those who have wiped out their suffering (p) (The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது |
அன்றே மறப்பது நன்று. 108-
ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்ல பண்பு ஆகாது; ஆனால், அவர் செய்த தீமையை அன்றைக்கே மறந்து விடுவது மிகவும் நல்லது.
The good remember with gratitude, all through seven births, the friendship of those who have wiped out their suffering (p) (The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction.
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த |
ஒன்றுநன்று உள்ளக் கெடும். 109-
ஒருவர் நம்மைக் கொன்றாற் போன்றதொரு துன்பத்தைச் செய்தாலும், அவர் முன்பு செய்த நன்மை ஒன்றை நினைத்தாலும் அத்துன்பம் கெடும்.
The remembrance of one good act done removes from our mind the sting of a deadly injury (p) Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை |
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 110-
எந்த நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்; ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது.
There is salvation to those guilty of any other sin; but there is no redemption for the sin of ingratitude (p) He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.
1.2.8 நடுவு நிலைமை Impartiality or Equity [To Top]
தகுதி எனவொன்று நன்றே பகுதியால் |
பாற்பட்டு ஒழுகப் பெறின். 111-
ஒவ்வொரு பகுதிதோறும் முறையோடு பொருந்தி நடை பெறுமானால், 'தகுதி' என்று கூறப்படும் நடுவுநிலைமையும் நல்லதே ஆகும்.
An equity which knows no partiality is in itself a unique virtue (p) That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue.
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி |
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. 112-
செம்மை உடையவனின் பொருள் வளமையானது இடையிலே அழிந்து போகாமல், அவன் வழியினர்க்கும் உறுதியாக நன்மை தரும்.
The wealth of the upright dwindles not and passes on to their posterity (p) The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity.
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை |
அன்றே யொழிய விடல். 113-
நன்மையே தருவது என்றாலும், நடுவுநிலைமை தவறுதலால் வருகின்ற வளத்தை, அப்போதே உள்ளத்திலிருந்து போக்கிவிட வேண்டும்.
Give up ill-gotten wealth though it brings in its train prosperity (p) Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity.
தக்கார் தகவிலர் என்பது அவரவர் |
எச்சத்தாற் காணப்ப படும். 114-
ஒருவர் தகுதியாளர், மற்றவர் தகுதியற்றவர் என்று உரைப்பது எல்லாம், அவரவரது எஞ்சி நிற்கும் புகழும் பழியும் என்பவற்றால் காணப்படும்.
The just and the unjust are known by the progeny (p) The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings.
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் |
கோடாமை சான்றோர்க் கணி. 115-
பொருள் கேடும், பொருள் பெருக்கமும் வாழ்வில் இல்லாதன அல்ல; நெஞ்சத்தில் என்றும் நடுவுநிலைமை கோணாதிருப்பதே சான்றோர்க்கு அழகாகும்.
To hold the scales even unmindful of prosperity or adversity is the ornament of the wise (p) Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both).
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் |
நடுவொரீஇ அல்ல செயின். 116-
தன் நெஞ்சமானது நடுவுநிலைமையிலிருந்து விலகி, தவறு செய்பவன், யான் இதனால் கெடுவேன்' என்பதனையும் அறிந்து கொள்வானாக
Even an iniquitous thought spells one's ruin (p) Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, "I shall perish."
கெடுவாக வையாது உலகம் நடுவாக |
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. 117-
நடுவுநிலைமையோடு நன்மையான செயல்களிலே நிலைத்திருப் பவனின் தாழ்ச்சியையும் கேடு என்று உலகம் ஒருபோதும் கொள்ளாது.
The world despises not the poverty of the just (p) The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity.
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் |
கோடாமை சான்றோர்க் கணி. 118-
தன்னைச் சமனாகச் செய்துகொண்டு, பொருளைச் சீர்தூக்கிக் காட்டும் துலாக்கோல்போல அமைந்து, ஒருபக்கம் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்.
Not to tilt like the well poised balance is the grace of the wise (p) To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise.
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா |
உட்கோட்டம் இன்மை பெறின். 119-
உள்ளத்திலே கோணுதலற்றபண்பை முடிவாகப் பெற்றிருந்தால், சொற்களில் கோணுதல் இல்லாதிருத்தலும் செப்பமாக உணரப் படும்.
Equity is the impartial expression of an unbiased mind (p) F reedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind.
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் |
பிறவும் தமபோல் செயின். 120-
பிறர் பொருளையும் தமதே போலக் சுருதிக்கொண்டு ஒழுகுதல், வாணிகம் செய்வார்க்குரிய நல்ல வாணிக மரபாகும்.
To deal with others’ goods as their own is the only true trade among traders (p) The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own.
1.2.9. அடக்கமுடைமை Self control [To Top]
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை |
ஆரிருள் உய்த்து விடும். 121-
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும் (நரக வாழ்க்கை).
Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell) (p) Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் |
அதனினூஉங் கில்லை உயிர்க்கு. 122-
அடக்கத்தைச் செல்வமாகப் பேணிக் காத்து வருக; உயிருக்கு ஆக்கந் தருவது அதனினும் மேம்பட்ட செல்வம் பிற யாதுமில்லை.
There is no greater wealth than self-control; treasure it as your wealth (p) Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that.
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து |
ஆற்றின் அடங்கப் பெறின். 123-
அறியவேண்டுவன அறிந்து நல்வழியிலே அடக்கத்தோடு நடக்கும் பண்பைப் பெற்றால், அதன் செறிவை அறிந்து மேன்மையும் உண்டாகும்.
If one knows the value of self-control and restrains oneself it will bring one fame (p) Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் |
மலையினும் மாணப் பெரிது. 124-
தன் நிலையிலிருந்து திரிந்து போகாமல் அடங்கி இருப்பவனின் தோற்றமானது, மலையைக் காட்டிலும் மிகப் பெரிதான உயர்வு உள்ளதாகும்.
Loftier than a mountain is the greatness of one who practises self-control (p) More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself.
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் |
செல்வர்க்கே செல்வம் தகைத்து. 125-
பணிவாக நடத்தல் என்பது எல்லார்க்கும் நன்மையானதாகும்; அவருள்ளும் செல்வர்க்கு அதுவும் ஒரு செல்வத்தைப் போன்ற சிறப்பினதே யாகும்.
Humility becomes all; but it crowns anew the wealthy (p) Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches.
ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் |
எழுநம்யும் ஏமாப் புடைத்து. 126-
ஆமையைப் போல, ஐம்பொறிகளையும் இந்த ஒரு பிறப்பிலே அடக்கிக் கொள்ளுதலில் வல்லவனானால், அதனால் எழுமையும் பாதுகாப்பு உண்டு.
If one were to withdraw within oneself the five senses like a tortoise, it would afford him protection all the seven births (p) Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births.
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் |
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 127-
எவற்றைக் காக்காதவராயினும் தன் நாவைத் தவறாமல் காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பம் அடைவர்.
Whatever else you may not control, control your tongue, lest you should repent your indiscreet words (p) Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue.
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் |
நன்றாகா தாகி விடும். 128-
தீய சொற்களாலே வந்தடைந்த பொருளாகிய நன்மை ஒன்றாயினும் ஒருவனிடம் இருந்தாலும், அதனால் எல்லா நன்மையுமே இல்லாமற் போய்விடும்.
One would lose the fruits of one’s good actions, if one word of evil were to land another in trouble (p) If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil.
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே |
நாவினாற் சுட்ட வடு. 129-
தீயினாலே சுடப்பட்ட புண் உள்ளே ஆறிவிடும்; ஆனால், நாவினாலே சுட்ட வடுவானது உள்ளத்தில் ஒருபோதும் மறையவே மறையாது.
The blister caused by fire will heal But the brand of a bitter tongue will never heal (p) The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal.
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி |
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. 130-
சினத்தைக் காத்து, கல்வி கற்று, அடங்கி வாழ்தலையும் மேற்கொள்பவனின் செவ்வியை, அவன் வழியில் சென்று அறமானது பார்த்திருக்கும்.
The God of righteousness seeks one who is on guard against anger and attains self-control through knowledge (p) Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against anger.
1.2.10. ஒழுக்கமுடைமை Right conduct or Decorum [To Top]
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் |
உயிரினும் ஓம்பப் படும். 131-
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதனால், அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகச் சான்றோரால் காக்கப்படும்.
Right conduct exalts one So it should be prized above one’s life (p) Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life.
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் |
தேரினும் அஃதே துணை. 132-
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும்; பலவும் ஆராய்ந்து கைக்கொண்டு தெளிந்தாலும், ஒழுக்கமேஉயிருக்குத் துணையாகும்.
Strive hard to walk in the right path One finds in it one’s surest ally (p) Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid.
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் |
இழிந்த பிறப்பாய் விடும். 133-
ஒழுக்கம் உடையவராக இருப்பதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மை; ஒழுக்கம் கெடுதல் இழிந்த பிறப்பின் தன்மையாகி விடும்.
Right conduct ennobles one’s family Bad conduct makes one sink in the scale (p) Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் |
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134-
கற்றதை மறந்தாலும் மீண்டும் ஓதிக் கற்றுக் கொள்ளலாம்; ஆனால், வேதமோதுவான் பிறப்பால் வந்த உயர்வு,அவன் ஒழுக்கம் குன்றினால் கெடும்.
The Brahman may learn anew the Vedas which he forgot If he were to fall from his estate he would be lost (p) A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high bi rth will be destroyed.
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை |
ஒழுக்க மிலான்கண் உயர்வு. 135-
பொறாமை உடையவனிடத்திலே ஆக்கம் அமையாதது போல, ஒழுக்கம் இல்லாதவன் வாழ்க்கையிலும் உயர்வு இல்லை!
The envious do not prosper; likewise one straying from the right path does not advance (p) Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness.
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் |
ஏதம் படுபாக் கறிந்து. 136-
மன வலிமை உடையவர், ஒழுக்கம் குன்றுதலால் குற்றம் நேரிடுதலை அறிந்து, ஒழுக்கத்திலிருந்து ஒருபோதுமே பிறழ மாட்டார்கள்.
The strong of mind will not shrink from virtue; for they know that any deviation is wrought with dire consequences (p) Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் |
எய்துவர் எய்தாப் பழி. 137-
ஒழுக்கத்தால் எல்லாரும் மேன்மை அடைவார்கள்; ஒழுக்கக் கேட்டால் அடையத்தகாத பழியை அடைவார்கள்.
Men of right conduct are crowned with glory Men of evil ways are covered with disgrace (p) From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் |
என்றும் இடும்பை தரும். 138-
நல்ல ஒழுக்கமானது இன்பமான நல்வாழ்வுக்கு வித்தாக இருக்கும்; தீய ஒழுக்கமோ எக்காலத்தும் துன்பத்தையே தரும்.
Good conduct is the spring of happiness Bad conduct leads one ever to misery (p) Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow.
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய |
வழுக்கியும் வாயாற் சொலல். 139-
தீய சொற்களைத் தவறியும் தம் வாயினாற் சொல்லும் குற்றம், நல்ல ஒழுக்கம் உடையவர்களுக்கு ஒருபோதும் பொருந்தாத பண்பாகும்.
It is difficult for a man of right conduct to utter evil words even in a forgetful mood (p) Those who study propriety of conduct will not speak evil, even forgetfully.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் |
கல்லார் அறிவிலா தார் 140-
உலகத்தவரோடு பொருந்தி ஒழுகும் தன்மையை அறியாதவர், பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவர்.
Those who cannot move in harmony with the world are learned fools (p) Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.
1.2.11. பிறனில் விழையாமை Faithfulness to partner [To Top]
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து |
அறம்பொருள் கண்டார்கண் இல். 141-
பிறனுக்கு உரியவளான ஒருத்தியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்து அறமும் பொருளும் ஆராய்ந்தவரிடத்து இருப்பது இல்லை.
The folly of intriguing with another’s wife is not found in one versed in the laws of truth and wealth (p) The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை |
நின்றாரின் பேதையார் இல். 142-
நல்ல அறநெறியை மறந்து கீழான வழியிலே சென்றவர் எல்லாரினும், பிறன்மனைவியை இச்சித்து, அவன் வீட்டு வாயிலில் நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.
Among those who walk in the ways of sin, the most foolish are those who stand at the entrance of another’s (house) (p) Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour's door.
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் |
தீமை புரிந்து ஒழுகு வார். 143-
சந்தேகப்படாமல் தெளிந்து நம்பியவர் வீட்டில் தீமையைச் செய்து நடப்பவர் செத்தவரைக் காட்டிலும் வேறுபட்டவர் அல்லர்.
They are as good as dead who misbehave towards the wives of their confiding friends (p) Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undoubtingly confide in them.
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் |
தேரான் பிறனில் புகல். 144-
தினையளவேனும் தம் பிழையை ஆராயாமல் பிறன் இல்லத்தே செல்லுதல், எவ்வளவு சிறப்புடையவர் ஆயினும் என்னவாக முடியும்?
What avails one’s greatness if one desecrates the sanctity of the house of another reckless of the consequences (p) However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another?
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் |
விளியாது நிற்கும் பழி. 145-
இது செய்வதற்கு எளிது எனக் கருதி பிறன் மனைவிபால் செல்கின்றவன், எக்காலத்தும் மறையாமல் நிலைத்து நிற்கும் பழியை அடைவான்.
He who invades (easily) the house of another thinking it a mere trifie will incur eternal infamy (p) He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.
பகைபாவம் அச்சம் பழியென நான்கும் |
இகவாவாம் இல்லிறப்பான் கண். 146-
பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கு தீமைகளும் பிறன் மனைவியை நாடிச் செல்பவனிடமிருந்து எப்போதும் நீங்காதனவாம்.
Four evils, enmity, sin, fear and disgrace dog one who covets another’s wife (p) Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife.
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் |
பெண்மை நயவா தவன். 147-
அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்விலே வாழ்பவன் என்பவன், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாதவனே ஆவான்.
He is a true householder who does not love another man’s wife (p) He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு |
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு. 148-
பிறன் மனைவியை இச்சித்துப்பார்க்காத பேராண்மை சான்றோர்க்கு அறன் மட்டுமன்று; நிரம்பிய ஒழுக்கமும் ஆகும்.
The heroic manhood that does not lust after another’s wife is to the wise not mere virtue but the very law of their being (p) That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் |
பிறர்க்குரியாள் தோள்தோயா தார். 149-
அச்சந்தரும் கடல் சூழ்ந்த இவ்வுலகிலே 'நன்மைக்கு உரியவர் யார்?' என்றால், பிறருக்கு உரியவளின் தோளைத் தழுவாதவரே ஆவர்.
Verily he is a gentleman on this sea-girt earth who is free from the sin of adultery (p) Is it asked, "who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea?" Those who touch not the shoulder of her who belongs to another.
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் |
பெண்மை நயவாமை நன்று. 150-
அறத்தையே கருதாமல் ஒருவன் அறமல்லாதவற்றையே செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பா திருத்தலே நல்லதாகும்.
One may be guilty of any other sins; let one be free from adultery (p) Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another.
1.2.12. பொறையுடைமை Forbearance or Forgiveness [To Top]
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை |
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 151-
தன்னை அகழ்பவரையும் தாங்கும் நிலத்தைப்போல், தம்மை இகழ்வாரையும் பொறுத்தலே மிகச்சிறந்த பண்பாகும்.
The earth sustains even those who dig into her To bear with those who slander us is the crown of virtue (p) To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை |
மறத்தல் அதனினும் நன்று. 152-
அளவு கடந்து செய்த தீங்கையும் எப்போதும் பொறுத்துக் கொள்ள வேண்டும்; அதனை நினையாமலே மறந்து விடுதல் அதனிலும் நன்மையாகும்.
Put up always with one’s transgressions Far greater than one’s forbearance is one’s oblivion of them (p) Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.
இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் |
வன்மை மடவார்ப் பொறை. 153-
வறுமையுள்ளும் வறுமையாவது விருந்தைப் போற்றாமல் விடுதல்; வலிமையுள்ளும் வலிமையாவது அறிவிலார் செயலைப் பொறுத்தல் ஆகும்.
Poverty within poverty is denying hospitality to guests; grace within grace is bearing with the foolish (p) To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை |
போற்றி யொழுகப் படும். 154-
நிறை உடையனாயிருக்கும் தன்மை தன்னைவிட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், அவன் பொறையுடைமையைப் போற்றிக் கைக்கொள்ள வேண்டும்.
If one wishes to maintain character one’s conduct must be marked by patience (p) If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience.
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் |
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. 155-
தமக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரை ஒரு பொருளாக எவரும் மதியார்; ஆனால், பொறுத்தவர்களைப் பொன்போல பொதிந்து வைப்பார்கள்.
The world takes no note of the avenger but it esteems the patient like gold (p) (The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் |
பொன்றுந் துணையும் புகழ். 156-
தீங்கு செய்தவர்களைத் தண்டித்தவர்களுக்கு அன்று ஒரு நாளைக்கே இன்பம்; ஆனால், பொறுத்தவர்க்கோ உலகம் அழியும்வரை புகழ் உண்டு.
The delight of the avenger is for a day The joy of the forbearing lasts till the end of the earth (p) The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து |
அறனல்ல செய்யாமை நன்று. 157-
தகுதியில்லாதவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், அதனால் மிகவும் மனம் நொந்து அவருக்குத் தீமை செய்யாதிருத்தல் நல்லது.
Resist not a wrong however grievous but forgive out of pity other’s transgressions (p) Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue.
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் |
தகுதியான் வென்று விடல். 158-
செருக்கு மிகுதியால் தீமை செய்தவர்களை தாம், தம்முடைய பொறுமை என்னும் தகுதியினால் வென்றுவிட வேண்டும்.
Conquer with forbearance one who has done you harm in one’s insolent pride (p) Let a man by patience overcome those who through pride commit excesses.
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் |
இன்னாச்சொல் நோற்கிற் பவர். 159-
எல்லை மீறி நடப்பவரின் வாயிற் பிறக்கும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள், துறவியர் போலத் தூய்மையாளர் ஆவர்.
Greater than an ascetic is one who endures the insolent words of the transgressor (p) Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics.
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் |
இன்னாச்சொல் நோற்பாரின் பின். 160-
உணவு உண்ணாமல் நோன்பு கொள்பவர், பிறர் சொல்லும் டுஞ்சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையிலே தான் பெரியவர் ஆவர்.
Great are those who fast and do penance but greater than they are those who put up with insults (p) Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.
1.2.13 அழுக்காறாமை Avoid envying [To Top]
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து |
அழுக்காறு இலாத இயல்பு. 161-
தன் நெஞ்சில் பொறாமை எண்ணம் இல்லாத தன்மையினையே, ஒருவன் தனக்கு உரிய வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்.
Let no one have envy; for freedom from envy must be one’s virtue (p) Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct.
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் |
அழுக்காற்றின் அன்மை பெறின். 162-
ஒருவன் எவரிடத்திலும் எப்போதும் பொறாமை இல்லாமல் இருக்கின்ற தன்மையைப் பெறுவானாயின், மேலான பேறுகளில் அதற்கு இணையாகச் சிறந்தது எதுவும் இல்லை.
Envy none; there is no other possession greater than one’s freedom from it (p) Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others.
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் |
பேணாது அழுக்கறுப் பான். 163-
பிறனுடைய ஆக்கத்தைக் கண்டதும், அதனைப் பாராட்டாமல் பொறாமைப்படுகிறவன், தனக்கு அறனும் ஆக்கமும் சேர்வதை விரும்பாதவனே ஆவான்.
He who envies other’s riches neither loves virtue nor wealth (p) Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said "he neither desires virtue not wealth."
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் |
ஏதம் படுபாக்கு அறிந்து. 164-
'பொறாமை' என்னும் தவறான எண்ணத்தால் துன்பமே உண்டாவதை அறிந்து, அறிவாளர் பொறாமையால் தீவினை களைச் செய்யமாட்டார்கள்.
The wise do not commit any wrong out of envy; for, they know the evils that spring from it (p) (The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் |
வழுக்காயும் கேடீன் பது. 165-
பொறாமை உடையவரைக் கெடுப்பதற்கு எந்தப் பகையும் வேண்டாம்; அதுவே போதும்; பகைவர் கேடு செய்யத் தவறினாலும், அது தவறாமல் கேட்டைத் தந்துவிடும்.
The envious need no enemies to work their own ruin; for they find in their envy their sufficient foe (p) To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் |
உண்பதூஉம் இன்றிக் கெடும். 166-
இன்னொருவன் பிறனுக்குக் கொடுப்பதைப் பார்த்துப் பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்க உடையும் உண்ண உணவும் இல்லாமல் கெடும்.
The envious that stand in the way of charity perish with their kith and kin (p) He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் |
தவ்வையைக் காட்டி விடும். 167-
பொறாமை உடையவனைக் கண்டு திருமகள் வெறுத்து, அவனைத் தன் தமக்கையான மூதேவிக்குக் காட்டி, தான் அவனைவிட்டு நீங்கிப் போய்விடுவாள்.
Fortune forsakes the envious to her elder sister (p) Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் |
தீயுழி உய்த்து விடும். 168-
பொறாமை என்னும் ஒப்பற்ற கொடிய 'பாவி, ஒருவனது செல்வத்தையும் கெடுத்து, அவனைத் தீய வழியிலும் செல்லும் படி செலுத்திவிடும்.
Envy is a deadly sin It blights one’s fortune and casts one into hell (p) Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் |
கேடும் நினைக்கப் படும். 169-
பொறாமை கொண்ட நெஞ்சத்தானின் ஆக்கமும், பொறாமை யற்ற சிறந்தவனுடைய கேடும், மக்களால் எப்போதும் நினைக்கப் படும்.
The prosperity of the envious and the adversity of the virtuous afford food for reflection (p) The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered.
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் |
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். 170-
உலகில் பொறாமையினால் மேன்மை அடைந்தாரும் இல்லை; பொறாமை இல்லாததால் பொருள் பெருக்கத்தில் குறைந்த வறுமையானவரும் இல்லை.
Envy never thrives; fortune never forsakes one who is free from it (p) Never have the envious become great; never have those who are free from envy been without greatness.
1.2.14. வெஃகாமை Not coveting [To Top]
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் |
குற்றமும் ஆங்கே தரும். 171-
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும். அவனுக்கு என்றும் அழியாத குற்றமும் வந்து சேரும்.
If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் |
நடுவன்மை நாணு பவர். 172-
நடுவுநிலைமை தவறுவதற்கு வெட்கப்படுகிறவர்கள், கவர்தலால் வந்தடையும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யவே மாட்டார்கள்.
Those who stand for equity do not commit sinful acts through covetousness (p) Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained.
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே |
மற்றின்பம் வேண்டு பவர். 173-
நிலையான இன்பத்தை விரும்புகிறவர்கள், கவரும் பொருளால் வரும் சிறிய இன்பத்தை விரும்பி, அறன் அல்லாத செயல்களைச் செய்ய மனம் விரும்பமாட்டார்கள்.
Those who seek eternal happiness will never commit unrighteous acts through love of low pleasures (p) Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy. (in this life.)
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற |
புன்மையில் காட்சி யவர். 174-
ஐம்புலன்களையும் வென்ற குறை இல்லாத அறிவாளர்கள், யாம் பொருளில்லாதேம்' என்ற வறுமை நிலையிலும் பிறர் பொருளைக் கவர விரும்பமாட்டார்கள்.
The spotless wise who have conquered their senses though destitute, will not covet other’s wealth (p) The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others) , with the thought "we are destitute."
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் |
வெஃகி வெறிய செயின். 175-
ஒருவன் எவரிடத்திலிருந்தும் பொருளைக் கவர நினைத்துப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமாகவும் விரிவானதாகவும் வளர்ந்த அவனது அறிவால் ஏதும் பயனில்லை.
Of what avail is one’s keen and penetrating intellect if one through covetousness acts foolishly? (p) What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all?
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் |
பொல்லாத சூழக் கெடும். 176-
அருளை விரும்பி நல்லொழுக்கத்திலே நிலைத்து நின்றவன், பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயல்களைச் செய்ய நினைத்தால், கெட்டுப் போய்விடுவான்.
Even he who treads the path of grace comes to ruin through covetous intentions (p) If he, who through desire of the virtue of kindness abides in the domestic state i.e., the path in which it may be obtained, covet (the property of others) and think of evil methods (to obtain it) , he will perish.
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் |
மாண்டற் கரிதாம் பயன். 177-
பிறர் பொருளைக் கவர்ந்து கொள்வதால் வரும் ஆக்கத்தை| எவருமே விரும்பவேண்டாம்; செயல் அளவில் அதன் பயன் நன்மையாவது என்பது எப்போதும் அரிதாகும்.
Covet not other’s wealth for out of covetousness spring evils (p) Desire not the gain of covetousness. In the enjoyment of its fruits there is no glory.
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை |
வேண்டும் பிறன்கைப் பொருள். 178-
ஒருவனது செல்வ வளம் குறையாமல் இருப்பதற்குரிய வழியாதென்றால், அவன் பிறன் பொருளைக் கவர விரும்பாதிருத்தலே ஆகும்.
Preservation of one’s property lies through one’s freedom from covetousness (p) If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness.
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் |
திறன்அறிந் தாங்கே திரு. 179-
அறத்தை அறிந்து, பிறன் பொருளைக் கவர விரும்பாத அறிவுடையாரை, திருமகள்,தான் சேர்வதற்குரிய திறன் தெரிந்து சென்று அடைவாள்
The wise who know what is righteous covet not; the Goddess of Fortune would seek them unbidden (p) Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others.
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் |
வேண்டாமை என்னுஞ் செருக்கு. 180-
வரும் துன்பத்தை நினையாமல் பிறர் பொருளைக் கவர விரும்பினால், அது கெடுதலைத் தரும்; அதனை விரும்பா திருத்தல் என்னும் பெருமையே வெற்றியைத் தரும்.
A blind covetousness brings about one’s ruin Freedom from it begets one’s triumph (p) To covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory.
1.2.15. புறங்கூறாமை Avoiding Slander [To Top]
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் |
புறங்கூறான் என்றல் இனிது. 181-
அறத்தைப்பற்றி வாயாலும் சொல்லாதவனாய், ஒருவன் தீய செயல்களையே செய்து வந்தாலும், 'அவன் பிறனைப் பழித்துப் புறங்கூறாதவன்' என்பது இனிதாகும்.
One may be guilty of wrongful deeds, but let not one be guilty of slander (p) Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite."
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே |
புறனழீஇப் பொய்த்து நகை. 182-
அறத்தையே அழித்துத் தீமைகளைச் செய்துவருவதைக் காட்டிலும், இல்லாதபோது ஒருவனைப் பழித்துப் பேசி, நேரில் பொய்யாகச் சிரிப்பது தீமையாகும்.
More heinous than sin is the deceitful smile of a slanderer (p) To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் |
அறங்கூற்றும் ஆக்கத் தரும். 183-
பிறர் இல்லாதபோது அவரைப் புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலைவிட, இறந்துபோதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.
Prefer death to a life of slander; for one finds in it the fruit of one’s virtue (p) Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out.
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க |
முன்னின்று பின்நோக்காச் சொல். 184-
நேரில் நின்று இரக்கம் இல்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசுக; நேரில் இல்லாதபோது பின்விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் எடுத்துச் சொல்லக் கூடாது.
Talk your bitterest to one’s face but abstain from wanton slander (p) Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் |
புன்மையாற் காணப் படும். 185-
அறநூல்கள் கூறும் உள்ளமுள்ளவனாக ஒருவன் இல்லாத தன்மையினை, அவன் புறங்கூறுகின்றதான அந்த இழி செயலால் தெளிவாக அறியலாகும்.
The tongue of the base slanderer that talks of virtue belies his heart (p) The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back.
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் |
திறன்தெரிந்து கூறப் படும். 186-
பிறனைப் பின்னால் பழித்துப் பேசுபவன், அவனுடைய பழிச் செயல்களுள்ளும் இழிவானதைத் தெரிந்தெடுத்துக் கூறிப் பிறரால் மிகவும் பழிக்கப்படுவான்.
Ye scandal-mongers, beware of your being scandalized (p) The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published.
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி |
நட்பாடல் தேற்றா தவர். 187-
மகிழ்ச்சியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவரே, பிறர் தம்மைவிட்டு விலகுமாறு பழித்துப் பேசி, தமக்குள்ள நண்பரையும் பிரித்துவிடுவர்.
Those who alienate friends by back-biting may have forgotten the art of making friends through suavity of speech (p) Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives.
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் |
என்னைகொல் ஏதிலார் மாட்டு. 188-
நெருங்கிய நட்பினரின் குற்றத்தையும் புறத்தே பேசித் தூற்றும் இயல்பினர் அயலாரிடத்து எப்படி மோசமாக நடந்து கொள்வார்களோ?
Those who trumpet the faults of their closest friends, what would they not do in the case of strangers? (p) What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends?
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் |
புன்சொல் உரைப்பான் பொறை. 189-
ஒருவன் இல்லாததைப் பார்த்து, அவனைப்பற்றி இழிவான சொற்களை உரைப்பவனையும், அறத்தைக் கருதியேதான் உலகம் தாங்கிக் கொண்டிருக்கின்றதோ?
How the earth bears the heavy burden of one who scandalises others! Perhaps patience is her virtue (p) The world through charity supports the weight of those who reproach others observing their absence.
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் |
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 190-
அயலாரின் குற்றங்களைக் காண்பதுபோலவே தம் குற்றங்களையும் காண்பாரானால், நிலைபெற்ற உயிர்கட்கு எத்தகைய தீமையும் உண்டாகுமோ?
Will ever harm befall one who looks upon the faults of others as one’s own? (p) If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men?
1.2.16. பயனில சொல்லாமை Against Vain speech [To Top]
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் |
எல்லாரும் எள்ளப் படும். 191-
பலரும் வெறுக்கும்படி பயனில்லாத சொற்களையே சொல்லும் ஒருவன், உலகினர் எல்லாராலுமே இகழ்வாகப் பேசப்படுவான்.
He who revels in frivolous talk will be despised by all (p) He who to the disgust of many speaks useless things will be despised by all.
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில |
நட்டார்கண் செய்தலிற் றீது. 192-
பலபேர் முன்பாகப் பயனற்ற பேச்சைப் பேசுதல், நன்மை அல்லாத செயலை நண்பர்களிடத்தில் செய்வதைவிடத் தீமையானது ஆகும்.
To talk frivolously in the presence of many is worse than an unjust act towards friends (p) To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends.
நயனிலன் என்பது சொல்லும் பயனில |
பாரித் துரைக்கும் உரை. 193-
பயன் இல்லாத ஒன்றைப்பற்றியே விரிவாகப் பேசும் ஒருவனது பேச்சானது, 'அவன் நல்ல பண்பில்லாதவன்' என்பதை உலகுக்கு அறிவிக்கும்.
Indulgence in useless words at once betrays one’s lack of probity (p) That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue."
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் |
பண்பில்சொல் பல்லா ரகத்து. 194-
பயனோடு சேராத பண்பற்ற சொற்களைப் பலரோடும் சொல்லுதல், எந்த நன்மையையும் தராததோடு, உள்ள நன்மையையும் போக்கிவிடும்.
Uttering empty words before all deprives one of one’s sense of justice and mars one’s noble qualities 51 (p) The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness.
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில |
நீர்மை யுடையார் சொலின். 195-
நல்ல பண்பு உடையவர்களும், பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்களானால், அவர்களுடைய சிறந்த தன்மையும் சிறப்பும் நீங்கிப் போகும்.
If good-natured men speak profitless words, their greatness and glory will disappear (p) If the good speak vain words their eminence and excellence will leave them.
பயனில் சொல் பராட்டு வானை மகன்எனல் |
மக்கட் பதடி யெனல். 196-
பயனில்லாத சொற்களையே விரும்பித் தொடர்ந்து பேசுபவனை, 'மனிதன்' என்றே சொல்லக் கூடாது; மக்களுள், 'பதர்' என்றே கொள்ளல் வேண்டும்.
He is not a man but the chaff among men, who indulges in vain words (p) Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men.
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் |
பயனில சொல்லாமை நன்று. 197-
நன்மை இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம்; பயனில்லாத சொற்களை எப்போதுமே சான்றோர் சொல்லாம லிருத்தல் நல்லது.
Let great men speak untruth; it is better they refrain from uttering useless words (p) Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things.
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் |
பெரும்பயன் இல்லாத சொல். 198-
அருமையான பயன்களை ஆராய்கின்ற அறிவாளர்கள், பெரும் பயன் இல்லாத சொற்களை ஒருபோதுமே சொல்ல மாட்டார்கள்.
Men of great discernment will never speak words devoid of great import (p) The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த |
மாசறு காட்சி யவர். 199-
மனமயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவை உடையவர்கள், பயனில்லாத சொற்களை மறந்தும்கூட ஒருகாலத்திலும் சொல்லமாட்டார்கள்.
Men of unclouded wisdom never utter nonsense even in a forgetful mood (p) Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க |
சொல்லிற் பயனிலாச் சொல். 200-
சொன்னால், பயன் தருகின்ற சொற்களையே யாவரும் சொல்லுக; பயனில்லாத சொற்களை ஒருபோதுமே எவரும் சொல்லாதிருக்க வேண்டும்.
Speak profitable words; avoid nonsense (p) Speak what is useful, and speak not useless words.
1.2.17. தீவினையச்சம் Fear of Sin or evil deeds [To Top]
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் |
தீவினை என்னும் செருக்கு. 201-
தீய செயலைச் செய்தலாகிய இறுமாப்பைத் தீவினையாளர்கள் அஞ்சமாட்டார்கள்; ஆனால், மேலோர்கள் தீயவைகளைச் செய்வதற்கு அஞ்சுவார்கள்.
Men hardened in sins do not fear evil; but the good dread it (p) Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.
தீயவை தீய பயத்தலால் தீயவை |
தீயினும் அஞ்சப் படும். 202-
தீயசெயல்கள் பிறர்க்கும் தமக்கும் தீமை விளைவித்தலால், தீயசெயல்களைத் தீயினும் கொடியதாகச் சான்றோர் நினைத்து அஞ்சுவார்கள்.
Evil is to be dreaded more than fire; for it lands one in disaster (p) Because evil produces evil, therefore should evil be feared more than fire.
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய |
செறுவார்க்கும் செய்யா விடல். 203-
தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்துவிடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.
Not to return evil to those who do evil unto you, is, they say, the crown of wisdom (p) To do no evil to enemies will be called the chief of all virtues.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் |
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. 204-
பிறனுக்குக் கேடு செய்வதைப் பற்றி மறந்தும் நினைக்கக் கூடாது; நினைத்தால், அப்படி நினைத்தவனுக்குக் கேடு செய்ய அறமே நினைக்கும்.
Let none plot evil to others even in forgetfulness If he does so, the God of Righteousness will compass his ruin (p) Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates.
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் |
இலனாகும் மற்றும் பெயர்த்து. 205-
'இவன் துணையிலன்' என்று ஒருவனுக்குத் தீமையைச் செய்யாதிருக்கவேண்டும்; செய்தால், மீண்டும் இவனே யாதும் துணை இல்லாதவன் ஆவான்.
Let none do wrong on account of poverty; if he does so he becomes poorer still (p) Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still.
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால |
தன்னை அடல்வேண்டா தான். 206-
துன்பம் தருவனவான தீவினைகள் தன்னைத் தொடர்ந்து வருத்துதலை விரும்பாதவன், தீய செயல்களைத் தான் பிறருற்கு ஒருபோதும் செய்யாதிருப்பானாக.
Let not one do evil unto others, if one wants to be free from affliction (p) Let him not do evil to others who desires not that sorrows should pursue him.
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை |
வீயாது பின்சென்று அடும். 207-
எத்தகைய பகைமை உடையவரும் தப்பிப் பிழைப்பர்: தீவினையாகிய பகையோ, ஒருவனை விடாமல் பின்பற்றிச் சென்று துன்பத்தைச் செய்யும்.
You may escape your enemies but your evil follows you and hunts you down relentlessly (p) However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை |
வீயாது அஇஉறைந் தற்று. 208-
தீய செயல்களைச் செய்தவர் கெடுதல் உறுதி என்பது, நிழல் தன்னை விடாமல் வந்து தன் காலடியிலேயே தங்கி இருத்தலைப் போன்றதாகும்.
Evil dogs you close on your heels like a shadow (p) Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not.
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் |
துன்னற்க தீவினைப் பால். 209-
தன்னைத் தான் விரும்பி வாழ்பவர், அவன் எத்தகையதொரு தீய செயல்களிலும் ஒருபோதுமே ஈடுபடாமல் இருப்பாராக!
If one really loves oneself let one not do any harm to others (p) If a man love himself, let him not commit any sin however small.
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் |
தீவினை செய்யான் எனின். 210-
ஒருவன், தவறான வழியிலே சென்று தீய செயல்களைச் செய்யாதிருப்பானானால், அவன் கேடற்றவன் ஆவான் என்று தெளிவாக அறியலாம்.
Hardly doth sorrow befall one who does not deviate from right (p) Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.
1.2.18. ஒப்புரவறிதல் Social obligation [To Top]
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு |
என் ஆற்றுங் கொல்லோ உலகு. 211-
மழைக்கு இவ்வுலகம் என்னகைம்மாறு செய்யக்கூடும்? உலக நன்மையைக் கருதிச் சான்றோர் செய்யும் கடமைகளும் அவ்வாறே, கைம்மாறு விரும்பாதவைகளே.
Do not expect any return for the services (duty) done What does the world give in exchange for the clouds that pour rain? (p) Benevolence seeks not a return. What does the world give back to the clouds?
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு |
வேளாண்மை செய்தற் பொருட்டு. 212-
தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம், தக்கவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும்.
All the wealth one earns is for rendering help to the deserving (p) All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே |
ஒப்புரவின் நல்ல பிற. 213-
ஒப்புரவைப் போலப் பலருக்கும் நன்மையான வேறொரு பண்பை இவ்வுலகத்திலும், தேவர்களின் உலகத்திலும் பெறுவது அருமை ஆகும்.
Is there anything greater than decorum either here or in the world to come? (p) It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods.
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் |
செத்தாருள் வைக்கப் படும். 214-
எவ்வுயிரும் ஒத்த தன்மையானது' என்று அறிந்து உதவி செய்து வாழ்பவனே உயிர் வாழ்கின்றவன் : ஒப்புரவற்ற மற்றவன், செத்தவருள் வைத்துக் கருதப்படுவான்.
Verily he is alive who is in harmony with the world; others should be ranked with the dead (p) He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows the m not will be reckoned among the dead.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் |
பேரறி வாளன் திரு. 215-
உலகினர் எல்லாரும் விரும்புமாறு, உதவி செய்து வாழும் பேரறிவாளனுடைய செல்வமானது, ஊருணியிலே நீர் நிரம்பினால்போலப் பலருக்கும் பயன்படுவதாகும்.
The wealth of the wise is a never-failing spring (p) The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank.
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் |
நயனுடை யான்கண் படின். 216-
செல்வம் நல்ல பண்பு உடையவனிடம் சென்று சேர்தலானது ஊருக்குள்ளேபழமரம் பழுத்திருப்பதுபோலப் பலருக்கும் பயன் தருவதாகும்.
The wealth of the truly liberal is like a tree ripening in the heart of a village (p) The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town.
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் |
பெருந்தகை யான்கண் படின். 217-
செல்வமானது பெருந்தகுதி உடையவனிடம் சேர்தல் பிணிதீர்க்கும் மருந்தாகிப் பயன்தரத் தவறாத மருந்துமரம்போல எப்போதும் பயன் தருவதாகும்.
The wealth of the generous is like a healing medicinal tree (p) If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence) , it is like a tree which as a medicine is an infallible cure for disease.
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் |
கடனறி காட்சி யவர். 218-
ஒப்புரவு செய்தலாகிய கடமையை அறிந்த அறிவாளர்கள், அதற்கேற்ற பொருள்வசதி இல்லாத காலத்திலும் முடிந்தவரை உதவத் தளர மாட்டார்கள்.
Even in poverty the truly discerning never ceases to be liberal (p) The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth.
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர |
செய்யாது அமைகலா வாறு. 219-
ஒப்புரவாகிய நல்ல பண்பை உடையவன் பொருளற்று வறுமை உடையவனாதல், செய்யத் தகுந்த உதவிகளைச் செய்யவியலாது வருந்துதலே ஆகும்.
The poverty of the liberal of heart is his failure in the offices of tenderness (p) The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same.
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் |
விற்றுக்கோள் தக்க துடைத்து. 220-
ஒப்புரவினாலே கேடு வரும் என்றால், அந்தக் கேடானது தன்னை விற்றாவது ஒருவன் பெறுவதற்குத் தகுந்த சிறப்பை உடையதாகும்.
The poverty that results from a just course of action is worth purchasing by going into the very bond of slavery (p) If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's self.
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் |
குறியெதிர்ப்பை நீர துடைத்து. 221-
வறுமையானவர்க்கு (தேவைப்படுபவர்க்கு) ஒரு பொருளைத் தந்து உதவுவதே ஈகை; பிறருக்குத் தருவது எல்லாம் எதிர்ப்பயனை எதிர்பார்த்துத் தருவது ஆகும்.
Gift to the poor alone is true charity Everything else is of the nature of a barter (p) To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return.
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் |
இல்லெனினும் ஈதலே நன்று. 222-
நல்ல அறச்செயலுக்கே' என்றாலும், பிறரிடம் இரந்து பெறுவது தீமையே; மேலுலகம் இல்லையானாலும் பிறருக்குக் கொடுத்து உதவுதலே நன்மையானது.
Receiving gifts is bad though one is assured of heaven Bestowing gifts is good, though thereby one should be bereft of it (p) To beg is evil, even though it were said that it is a good path (to heaven). To give is good, even though it were said that those who do so cannot obtain heaven.
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் |
குலனுடையான் கண்ணே யுள. 223-
ஒருவன் வந்து, 'நான் யாதும் இல்லாதவன்' என்று தன் துன்பத்தைச் சொல்லும் முன்பாகவே, அவனுக்கு உதவும் தன்மை உயர்ந்த குடிப்பிறப்பாளனிடம் உண்டு.
The innately noble never beg but give ere charity begins (p) (Even in a low state) not to adopt the mean expedient of saying "I have nothing," but to give, is the characteristic of the mad of noble birth.
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் |
இன்முகங் காணும் அளவு. 224-
உதவியை நாடிவந்த இரந்தவருடைய மகிழ்ச்சியான முகத்தைக் காணும் வரைக்கும், இரந்து கேட்கப்படுதலும் ஈகையாளனுக்குத் துன்பம் தருவதேயாகும்.
Even to be begged is miserable for we feel wretched till the beggar’s face is lit with joy (p) To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance.
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை |
மாற்றுவார் ஆற்றலின் பின். 225-
பசியைப்பொறுத்துக் கொள்பவரது ஆற்றலே சிறந்த ஆற்றலாகும்; அதுவும், அப்பசி நோயை உணவளித்து மாற்றுவாரின் ஈகைக்குப் பிற்பட்டதே ஆகும்.
Endurance of one’s hunger is the test of one’s penance Far greater than that endurance is the spirit of appeasing the hunger of others (p) The power of those who perform penance is the power of enduring hunger. It is inferior to the power of those who remove the hunger (of others).
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் |
பெற்றான் பொருள்வைப் புழி. 226-
எதுவுமே இல்லாத ஏழையரின் கொடிய பசிநோயைப் போக்க வேண்டும்; அதுதான் பொருள்பெற்றவன் தன் பொருளைச் சேமித்து வைக்கும் இடமும் ஆகும்.
Let the rich appease the devouring hunger of the indigent poor It is a charity rendered unto themselves (p) The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth.
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் |
தீப்பிணி தீண்டல் அரிது. 227-
பலரோடும் பகுத்து உண்ணுகின்ற பழக்கம் உடைய கொடையாளனைப் 'பசி' என்கின்ற தீய நோயானது சென்று தீண்டுதல் என்பதே அருமையாகும்.
The pest of hunger never touches one who shares one’s food with the poor (p) The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை |
வைத்திழக்கும் வன்க ணவர். 228-
தாம் சேர்த்துள்ள செல்வத்தைக்காப்பாற்றி வைத்துப் பின் இழந்துவிடும் கல்நெஞ்சர்கள், பிறருக்குக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியமாட்டார்களோ?
The callous rich hide their barren metal; perhaps they know not the joy of giving (p) Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving?
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய |
தாமே தமியர் உணல். 229-
தாம் முயன்று தேடி நிரப்பி வைத்துள்ளதைத் தாமே தனியாக உண்டு மகிழ்வது என்பது, வறுமையால் பிறரிடம் சென்று இரத்தலைவிடத் துன்பம் தருவதாகும்.
More squalid than begging is a life of self-indulgence (p) Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் |
ஈதல் இயையாக் கடை. 230-
சாதலைக் காட்டிலும் துன்பமானதுயாதுமே இல்லை;பிறருக்குக் கொடுத்து உதவ நினையாத கடைப்பட்டவனைப் பொறுத்த மட்டில் அப்படிச் சாதலும் இனியதே ஆகும்.
Death indeed is the greatest calamity; worse than death is one’s failure in charity (p) Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது |
ஊதியம் இல்லை உயிர்க்கு. 231-
உள்ளதைப் பலருக்கும் பகுத்துக் கொடுத்துப் புகழோடு வாழவேண்டும்; அப்படிப்பட்ட வாழ்வு அல்லாமல் 'உயிருக்கு ஊதியம்' என்பது வேறு யாதும் இல்லை.
Give and make a name There is no greater gain to man than such a renown (p) Give to the poor and live with praise. There is no greater profit to man than that.
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று |
ஈவார்மேல் நிற்கும் புகழ். 232-
புகழ்ச்சியாகப் பேசுகிறவர் பேசுகின்றவற்றுள் எல்லாம் இரப்பவர்க்கு ஒன்றைக் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழே எப்போதும் நிலையானது.
The one undying theme of praise is the praise of charity (p) Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor.
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் |
பொன்றாது நிற்பதொன் றில். 233-
உயர்ந்த புகழ் அல்லாமல், உலகத்திலே ஒப்பற்ற ஒரு பொருளாக அழிவில்லாமல் நிலைத்து நிற்கக்கூடியது யாதுமே இல்லை.
Nothing lasts save one’s fearless renown (p) There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness.
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் |
போற்றாது புத்தேள் உலகு. 234-
உலகத்தின் எல்லை வரை பரவி நிற்கும் புகழுக்குரிய செயலை ஒருவன் செய்தால், வானுலகமும் தேவரைப் போற்றாது; அப் புகழாளனையே விரும்பிப் போற்றும்.
The wise are not favoured of the gods; but the' renowned on earth are adored by them (p) If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world.
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் |
வித்தகர்க் கல்லால் அரிது. 235-
புகழால் மேன்மை பெறக்கூடிய கேடும், செத்தும் புகழால் வாழ்ந்திருக்கும் சாவும், அறிவிற் சிறந்தோருக்கு அல்லாமல், பிறருக்கு ஒருபோதுமே கிடையாது.
Out of death and ruin the wise fashion things enduring (p) Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise.
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் |
தோன்றலின் தோன்றாமை நன்று. 236-
உலகத்தார் முன்பாக ஒருவன் தோன்றினால் புகழோடுதான் தோன்ற வேண்டும்; புகழ் இல்லாதவர் தோன்றுவதைவிடத் தோன்றாமற்போவதே நல்லது.
Let man be born to achieve renown Let not the unrenowned see the light of day (p) If you are born (in this world) , be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born.
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை |
இகழ்வாரை நோவது எவன்? 237-
தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழாதவர்கள், தம்மை நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்ற உலகத்தாரை நொந்துகொள்வது எதற்காகவோ?
Let the inglorious blame themselves Let them not reproach others (p) Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability.
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் |
எச்சம் பெறாஅ விடின். 238-
தமக்குப் பின்னரும் எஞ்சிநிற்கும் புகழைப் பெறாமல் விட்டு விட்டால்,அதுவே உலகத்தார்க்கு எல்லாம் பெரிய வசையாகும் என்பார்கள்.
World’s reproach befalls one who does not achieve lasting fame (p) Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world.
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா |
யாக்கை பொறுத்த நிலம். 239-
புகழ் இல்லாதவனுடைய உடம்பைத் தாங்கிக் கொண்டிருந்த பூமியுங்கூட வசையில்லாத வளமான பயனைத் தருவதில் குறைபாடு அடையும்.
In a land which bears the burden of the unrenowned even nature’s bounty is on the wane (p) The ground which supports a body without fame will diminish in its rich produce.
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய |
வாழ்வாரே வாழா தவர். 240-
வசை இல்லாமல் வாழ்கின்றவரே முறையாக வாழ்பவர் ஆவர்; புகழ் இல்லாமல் வாழ்கின்றவரே உயிரோடிருந்தும் உயிர் வாழாதவர் ஆவர்.
The unblemished truly live; the unrenowned merely exist (p) Those live who live without disgrace. Those who live without fame live not.
1.3 துறவறவியல் Ascetic Virtue:
1.3.1 அருளுடைமை Compassion [To Top]
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் |
பூரியார் கண்ணும் உள. 241-
அருளாகிய செல்வமே செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம்; பொருள்களாகிய பிற வகைச் செல்வங்கள் எல்லாம் இழிந்தவரிடத்திலும் உள்ளனவே!
The crown of wealth is one’s compassion; all other wealth is found even among meanest of men (p) The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men.
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் |
தேரினும் அஃதே துணை. 242-
நல்ல வழியினாலே ஆராய்ந்து அருளைச் செய்க: பல வழியாக ஆராய்ந்தாலும், அப்படி அருள்செய்தலே உயிருக்கு உறுதுணையாகும்.
Be compassionate; for compassion is the pivot of all tenets (p) (Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss.)
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த |
இன்னா உலகம் புகல். 243-
இருள் அடர்ந்திருக்கும் துன்ப உலகமாகிய நரகத்துக்குச் செல்லுதல், அருள்பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு ஒருபோதுமே இல்லையாகும்.
The compassionate know not hell (p) They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப |
தன்னுயிர் அஞ்சும் வினை. 244-
நிலைபெற்ற உலகத்தில் உள்ள உயிர்களைக் காத்து, அருள் செய்து வாழ்கின்றவர்களுக்குத் தம் உயிரைக் குறித்து அஞ்சுகின்ற தீவினைகள் இல்லை!
Freedom from dread of sin is only for the compassionate that love all creation (p) (The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures)
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் |
மல்லன்மா ஞாலங் கரி. 245-
அருள் கொண்டவராக வாழ்பவர்களுக்கு எந்தத் துன்பமுமே இல்லை; காற்று உயிர் வழங்குதலால் வாழும் வளமான பெரிய உலகமே இதற்குச் சான்று.
The compassionate know not life’s agonies; verily the wind-blown earth is witness to it (p) This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kind-hearted.
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி |
அல்லவை செய்தொழுகு வார். 246-
அருள்தலிலே இருந்து விலகித் தீயவைகளைச் செய்து வாழ்கிறவர்களே, உறுதிப்பொருளை இழந்து தம் வாழ்க்கைக் குறிக்கோளையும் மறந்தவராவர்.
The cruel that delight in sin perhaps know not what awaits them (p) (The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth) , and forgot (the sorrows which they must suffer.)
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு |
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. 247-
பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகிலே இன்பமான வாழ்க்கை இல்லாததுபோலவே, அருள் இல்லாதவர்களுக்கு மேலுலகத்து வாழ்வும் இல்லை யாகும்.
Heaven is not for the unfeeling; earth is not for the indigent (p) As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness.
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் |
அற்றார்மற் றாதல் அரிது. 248-
பொருள் இழந்தவர்களும் ஒரு காலத்தில் பொருள் வளம் அடைவார்கள். அருள் இல்லாதவரோ அதை இழந்தால் வாழ்வை இழந்தவரே: மீண்டும் அடைதல் அரிது.
Fortune may smile on the ruined; the un feeling are the unredeemed (p) Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change.
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் |
அருளாதான் செய்யும் அறம். 249-
அருள் இல்லாதவன் செய்யும் தருமத்தை ஆராய்ந்தால், தெளிவில்லாதவன் மெய்ந் நூலிற் கூறப்பெற்ற உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றதே!
Behold the unfeeling seeking virtue; it is like ignorance seeing light (p) If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.
வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின் |
மெலியார்மேல் செல்லு மிடத்து. 250-
தன்னைவிட மெலிவானவர்மேல் பகைத்துச் செல்லும்போது, தன்னைவிட வலியவர் முன்பாகத் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைவிற் கொள்ளவேண்டும்.
Oppress not the weak; remember your fate in stronger hands (p) When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself.
1.3.2. புலான்மறுத்தல் Vegetarianism [To Top]
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் |
எங்ஙனம் ஆளும் அருள்? 251-
தன் சதையைப் பெருக்குவதற்குத் தான் பிறிதோர் உயிரின் தசையைத் தின்கின்றவன், எப்படி உயிர்களுக்கு எல்லாம் அருள் செய்பவனாக இருக்க முடியும்?
He who fattens on the flesh of animals, can he ever understand the rule of love? (p) How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures.
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி |
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. 252-
பொருள் உடையவராக இருக்கும் தகுதி அப்பொருளைக் காப்பாற்றாதவர்க்கு இல்லை; அவ்வாறே, அருள் உடையவர் ஆகும் தகுதி ஊனைத் தின்பவர்க்கும் இல்லை.
Wealth is not for the unwary Compassion is not for the flesh-eater (p) As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh.
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் |
உடல்சுவை உண்டார் மனம். 253-
ஒன்றன் உடலைச் சுவையாக உண்டவரது மனம், கொலைக் கருவியை ஏந்தினவரது நெஞ்சத்தைப் போலப் பிறவுயிருக்கு அருள் செய்தலைப் பற்றியே நினையாது
The heart of a flesh-eater is devoid of love like that of the wielder of a deadly weapon (p) Like the (murderous) mind of him who carries a weapon (in his hand) , the mind of him who feasts with pleasure on the body of another (creature) , has no regard for goodness.
அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல் |
பொருளல்லது அவ்வூன் தினல். 254-
கொல்லாமையே அருள் ஆகும் ஓர் உயிரைக் கொல்லுதலோ அருளில்லாத தன்மை; அதன் ஊனைத் தின்னலோ சற்றும் முறையில்லாத செயல் ஆகும்.
What is compassion but refraining from killing; what is sin but eating flesh? (p) If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life).
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண |
அண்ணாத்தல் செய்யாது அளறு. 255-
உயிர்களின் நிலைத்த வாழ்வு ஊனுண்ணாத இயல்பில்தான் உள்ளது; ஊன் உண்டால், நரகம் அவனை வெளியேவி ஒருபோதும் தன்னுடைய கதவைத் திறவாது.
Will there be throb of life when there is flesh-eating? Will there be any escape from hell for the flesh-eater? (p) Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fallen in).
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் |
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். 256-
புலாலைத் தின்னும் பொருட்டாக உயிர்களை உலகத்தார் கொல்லாதிருந்தால், எவரும் விலைப்படுத்தும் பொருட்டாக உயிரைக் கொன்று ஊனைத் தரமாட்டார்கள்.
Would there be meat for sale, if men were not to kill animals for eating flesh? (p) If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money.
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் |
புண்ணது உணர்வார்ப் பெறின். 257-
புலால் பிறிதோர் உயிரின் புண் என்று உணர்பவர், அதனைத் தாம் பெற்றபோதும் உண்ணாமல் இருக்கும் நல்ல ஒழுக்கம் உடைய இயல்பினராதல் வேண்டும்.
If one realises that meat is nothing but the wound of another creature, one refrains from eating it (p) If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it.
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் |
உயிரின் தலைப்பிரிந்த ஊன். 258-
பிறிதோர் உயிரின் உடலிடத்திலிருந்து பிரிந்துவந்த ஊனை, குற்றத்திலிருந்து விடுபட்ட அறிவாளர்கள் ஒருபோதும் உண்ணவேமாட்டார்கள்.
Men of clear vision abstain from the flesh of a slaughtered animal (p) The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal.
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் |
உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259-
அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்தலைக் காட்டிலும், ஒன்றன் உயிரைக் கொன்று, அதன் உடலைத் தின்னாமலிருத்தல் மிகவும் நன்மையானதாகும்.
Far nobler than a thousand oblations on fire is an act of abstinence from flesh (p) Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி |
எல்லா உயிருந் தொழும். 260-
கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் வாழும் உயர்ந்த பண்பாளனை, எல்லா உயிர்களும் கைதெ, அது தெய்வமாக நினைத்துப் போற்றும்.
The whole world folds its hands in prayer to one who kills not and abjures flesh (p) All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh.
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை |
அற்றே தவத்திற் குரு. 261-
தமக்கு வந்த துன்பத்தைப் (நோய்) பொறுத்தலும், பிறவுயிருக்குத் தாம் துன்பஞ் செய்யாமலிருத்தலும் ஆகிய அவ்வளவினதே தவத்திற்கு உள்ளதான வடிவம் ஆகும்.
The true form of penance is to put up with all pain and to abstain from injury (p) The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others.
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை |
அஃதிலார் மேற்கொள் வது. 262-
தவநெறிக்கு ஏற்ற மனவியல்பு கொண்டவர்க்கே தவமும் கைகூடும்; தவப்பயன் இல்லாதவர்கள் அதனைத் தாமும் மேற்கொள்வது வீணான முயற்சியே!
Penance is possible only for the disciplined Disgrace attends the undisciplined (p) Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth) ; it will be useless for those who have not done so, to attempt to practise them (now).
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் |
மற்றை யவர்கள் தவம். 263-
துறவியர்க்கு உணவு முதலாயின தந்து உதவுதலின் பொருட்டாகவே, இல்லறத்தார்கள் துறவு நெறியைத் தாம் மேற்கொள்ள மறந்தனர் போலும்?
In their ministering to the needs of the ascetic, verily the householders have become oblivious of their penance (p) It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity?
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் |
எண்ணின் தவத்தான் வரும். 264-
பொருந்தாத பகைவரைத் தண்டித்தலும், தம்மை விரும்பும் அன்புடையவரை உயர்த்துதலும் தவ வாழ்வினால் மிகவும் எளிதாக வந்து கைகூடும்.
Penance, if it wills can mar its foe, or bless its friend (p) If (the ascetic) desire the destruction of his enemies, or the aggrandizement of his friends, it will be effected by (the power of) his austerities.
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் |
ஈண்டு முயலப் படும். 265-
வேண்டிய பயன்களை வேண்டியபடியே பெறுகின்றதனால், செய்வதற்குரிய தவம் இவ்விடத்திலேயே விரைவாகச் செய்யப்படுவதற்கு உரியதாகும்.
They persevere in penance; for through penance they achieve their desired goal (p) Religious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come).
தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் |
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. 266-
தம் உயிருக்கு நன்மை செய்பவர் தவம் செய்பவரே யாவர்; மறையோர், ஆசைகளுக்கு உட்பட்டுத் தம் உயிருக்குத் தீமைகளைச் செய்பவர்களே ஆவர்.
To do penance is to be alive to one’s duty; those enmeshed in desire come to ruin (p) Those discharge their duty who perform austerities; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure).
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் |
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. 267-
கூடச்ட ஒளிவிடும் பொன்னேபோல், துன்பம் சுட்டு வருத்த வருத்த, தவஞ்செய்பவருக்கும் உண்மையான அறிவுடைமை யானது மேன்மேலும் ஒளிபெற்று வரும்.
Gold shines all the more in fire; those who do penance become mellowed through suffering (p) Just as gold is purified as heated in the fire, will those shine, who have endured the burning of pain (in frequent austerities).
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய |
மன்னுயி ரெல்லாந் தொழும். 268-
தான்' என்னும் செருக்கானது தன்னிடமிருந்து நீங்கிய தவ வலிமை பெற்றவனை, உலகத்தில் செறிந்துள்ள உயிர்கள் எல்லாம் தொழுது போற்றும்.
The world worships one who has regained one’s soul (p) All other creatures will worship him who has attained the control of his own soul.
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் |
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல். 269-
தவநெறியாலே ஆத்ம வலிமையைப் பெற்ற மகான்களுக்குத் தம்மிடத்தே வருகின்ற கூற்றத்தையும் எதிராக நின்று வெற்றிகொள்வதற்கு முடியும்.
Men at the height of their penance can triumph over even death (p) Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death).
இலர்பல ராகிய காரணம் நோற்பார் |
சிலர்பலர் நோலா தவர். 270-
உலகில் மெய்யறிவு அற்றவர்கள் பலராகியதன் காரணம், தவம் செய்பவர் சிலராகவும், தவம் செய்யாதவர் பலராகவும் இருப்பதுதான்.
Many are the indigent; for only a few practise penance (p) Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world.
1.3.4. கூடாவொழுக்கம் Imposture [To Top]
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் |
ஐந்தும் அகத்தே நகும். 271-
வஞ்சக மனத்தினனது பொய்யான நடத்தையைக் கண்டு, அவனுடம்பாக அமைந்து விளங்கும் ஐந்து பூதங்களும், தம்முள்ளே சிரித்துக்கொண்டிருக்கும்.
A man’s five senses will laugh within at the false conduct of a deceitful mind (p) The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man.
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் |
தான்அறி குற்றப் படின். 272-
தன் நெஞ்சம், தான் அறிந்து செய்யும் குற்றத்திலேயும் ஈடுபடுமானால், அத்தகையவனது வானளாவிய தவத்தோற்றமும் என்ன பயனைச் செய்யும்?
Of what avail is a man’s saintly mien, if his mind is bent on evil? (p) What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin.
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் |
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. 273-
மனவலிமை இல்லாதவன் மேற்கொள்ளும் வலிய தவத்தோற்றம், பசு புலியின் தோலைப் போர்த்துச் சென்று பயிரை மேய்ந்தாற் போன்றதாகும்.
The ascetic appearance of one who has no strength of will, is like that of an ox grazing in the guise of a tiger (p) The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity) , is like a cow feeding on grass covered with a tiger's skin.
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து |
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. 274-
தவக் கோலத்திலே மறைந்துகொண்டு தீயசெயல்களைச் செய்தல், கொலைகுறித்த வேடன் புதரின்பின் மறைந்து நின்று, பறவைகளை வலைவீசிப் பிடிப்பது போன்றதாகும்.
Committing evil under the mask of holiness is like the hunter lying in wait for birds (p) He who hides himself under the mask of an ascetic and commits sins, like a sportsman who conceals himself in the thicket to catch birds.
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று |
ஏதம் பலவுந் தரும். 275-
பற்றுகளை விட்டோம் என்பவரது பொய்யான தீய ஒழுக்கம், என்ன செய்தோம்?' என்று வருந்தும்படியான பலவகைத் துன்பங்களையும் தரும்.
The hypocrisy of one who professes asceticism lands one in endless troubles (p) The false conduct of those who say they have renounced all desire will one day bring them sorrows that will make them cry out, "Oh! what have we done, what have we done."
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து |
வாழ்வாரின் வன்கணார் இல். 276-
நெஞ்சிலே ஆசையை விடாதவர்களாய், வெளியே ஆசை அற்ற ஞானிகளைப் போலக் காட்டி மக்களை வஞ்சித்து வாழ்பவரினும் கொடியவர் எவருமே இலர்!
There is none so hardened in vice as one who though hollow at heart, wears the mask of saintliness (p) Amongst living men there are none so hard-hearted as those who without to saking (desire) in their heart, falsely take the appearance of those who have forsaken (it).
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி |
முக்கிற் கரியார் உடைத்து. 277-
புறத்தோற்றத்திலே குன்றிமணியின் நிறம்போலச் செம்மையான தோற்றம் உடையவர் என்றாலும், உள்ளத்தில் குன்றிமணியின் மூக்குப்போலக் கரியவரும் உள்ளனர்.
This world contains (many) men who like the Kunri seed are fair of face but foul of heart (p) (The world) contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berry.
மனத்தது மாசாக மாண்டார் நீராடி |
மறைந்தொழுகு மாந்தர் பலர். 278-
மனத்துள்ளே இருப்பது குற்றமாகவும், மாண்பு உடையவர் போல நீராடி மறைவாக வாழ்வு நடத்தும் மாந்தர்களும் இந்த உலகிற் பலர் ஆவார்.
There are many insincere men who frequent sacred waters to pass for holy men (p) There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of greatness, while their mind is defiled (with guilt).
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன |
வினைபடு பாலால் கொளல். 279-
நேரானாலும் அம்பு கொடுமை செய்வது; வளைவானாலும் யாழ்க்கோடு இன்னிசை தருவது; மனிதரையும் இப்படியே அவரவர் செயல்தன்மை நோக்கியே அறிதல் வேண்டும்.
The arrow, though straight is deadly; the yāl though crooked is sweet Let people be judged by their actions (p) As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of) men be estimated.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் |
பழித்தது ஒழித்து விடின். 280-
உலகம் பழித்த தீயசெயல்களை ஒழித்துவிட்டால் உயர்வுதானே வரும்; உயர்வுகருதி மயிரை மழித்துக் கொள்ளலும் நீள வளர்த்தலும் செய்ய வேண்டாம்.
If persons abstain from deeds condemned by the world there is no need either for tonsure or for matted locks (p) There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned.
1.3.5. கள்ளாமை Avoiding Fraud [To Top]
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் |
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. 281-
உலகினரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன் எத்தகைய பொருளையும் களவாடிக் கொள்ள நினையாதபடி தன் மனத்தை முதலில் காத்தல் வேண்டும்.
He who wants to command respect must guard his mind against robbing others (p) Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing.
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் |
கள்ளத்தால் கள்வேம் எனல். 282-
பிறன் பொருளைக் கள்ளமாகக் களவாடிக் கொள்வோம் என்று ஒருவன், தன் உள்ளத்தால் நினைத்தாலும் அந்த நினைவுகூடத் தீமையானதே.
It is a sin to lust for another’s belongings (p) Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another.
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து |
ஆவது போலக் கெடும். 283-
களவாலே வந்தடையும் செல்வமானது அளவு கடந்து பெருகுவதுபோலவே, எதிர்பாராமல், எல்லாம், வந்தது போல விரைந்து ஒழிந்தும் போய்விடும்.
Ill-gotten wealth however vast comes to nought (p) The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் |
வீயா விழுமம் தரும். 284-
களவு செய்வதில உண்டாகும் முதிர்ந்த விருப்பமானது அதனால் வரும் விளைவுகளின் போது தீராத துன்பத்தைத் தருவதாகவே விளங்கும்.
Inordinate desire to steal brings in its train endless suffering (p) The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் |
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். 285-
பொருள் தேடுதலையே நினைத்துப் பிறர் சோர்ந்திருக்கும் காலத்தைப் பார்க்கும் கள்வரிடத்தே, அருளைக் கருதி அன்புடையவராதல், சான்றோரிடமும் இல்லை.
Can ever grace and love be found in one who exploits the unwary? (p) The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another's forgetfulness, though desire of his property.
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் |
கன்றிய காத லவர். 286-
களவுநெறியின்கண் மிக முதிர்ந்த ஆசையுடையவர்கள் எல்லாரும், தம் வருவாயின் அளவுக்குத் தகுந்தபடி ஒழுக்கத்தோடு வாழ் இயலாதவர்களே.
Those who have a burning desire to steal cannot walk in the path of virtue (p) They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others.
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் |
ஆற்றல் புரிந்தார்கண்ட இல். 287-
களவு எனப்படும் இருள்படர்ந்த அறிவாண்மையானது, அளவறிந்து வாழும் ஆற்றலை விரும்பிய நன்மக்களிடத்திலே ஒருபோதும் இல்லையாகும்.
The dark thought of stealing is absent in those who are alive to the value of life (p) That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude.
அளவுஅறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் |
களவறிந்தார் நெஞ்சில் கரவு. 288-
அளவறிந்து வாழ்தலை அறிந்தவரின் நெஞ்சத்திலே 'அறம்' நிற்பதுபோல், களவுத்தொழிலை அறிந்தவரின் நெஞ்சிலே 'வஞ்சகம்' எப்போதும் நிலைத்திருக்கும்.
Virtue dwells in the person of known probity; deceit dwells in persons addicted to stealing (p) Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the mind s of those who are conversant with rectitude.
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல |
மற்றைய தேற்றா தவர். 289-
களவு அல்லாத, பிற நல்ல முயற்சிகளைச் செய்து பொருள் தேடி வாழ்தலைத் தெளியாதவர்கள், அளவுகடந்த செலவுகளைச் செய்து அக்களவாலேயே அழிவர்.
Those who know nothing else than stealing will indulge in unrighteous acts and forthwith perish (p) Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression.
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் |
தள்ளாது புத்தே ளுளகு. 290-
களவு செய்வார்க்கு, உடலில் உயிர் நிலைக்கும் காலமும் தவறிப் போகும்; களவு செய்யாதவர்க்குத் தேவருலகத்து வாழ்வும் தவறிப் போகாது.
Their very bodies fail the defrauding The world of the gods fail not the upright (p) Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud.
1.3.6. வாய்மை Truthfulness [To Top]
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் |
தீமை இலாத சொலல். 291-
'வாய்மை' என்று சொல்லப்படுவது யாது என்றால், அது பிறருக்குத் தீமை இல்லாதபடி யாதொரு சொல்லையும் எப்போதும் சொல்லுதல் ஆகும்.
What is truth but unsullied utterance? (p) Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த |
நன்மை பயக்கும் எனின். 292-
குற்றமே இல்லாத நன்மையைத் தருவது என்றால், பொய்யான சொற்களும்கூட வாய்மையின் இடத்தில் வைத்துச் சிறப்பாகக் கருதத் தகுந்தவை ஆகும்.
Even untruth has the stamp of truth, if it is free from harm (p) Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் |
தன்நெஞ்சே தன்னைச் சுடும். 293-
ஒருவன், தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைப் பற்றிப் பொய்த்துப் பேசாதிருப்பானாக; அப்படி பொய்த்த பின்னர்.அவன் நெஞ்சமே அவனைச் சுடும்.
Let none utter a falsehood against his conscience lest it should torment him (p) Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் |
உள்ளத்து ளெல்லாம் உளன். 294-
உள்ளத்தால் பொய்யாது நடந்து வருவானாயின், அவன்உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இருப்பவன் ஆகும் சிறந்த உயர்வைப் பெறுவான்.
One sits high in the hearts of all who is true to oneself (p) He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு |
தானஞ்செய் வாரின் தலை. 295-
மனத்தோடு பொருந்திய வாய்மையையே ஒருவன் சொல்லி வருவானானால், அவன், தவத்தோடு தானமும் செய்பவரினும் மிகவும் சிறந்தவன் ஆவான்.
Far greater than a benefactor or an ascetic is one whose words come from the depths of truth (p) He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை |
எல்லா அறமுந் தரும். 296-
பொய்யாமை போலப் புகழ் தருவது ஏதும் இல்லை; அதில் தளராமல் உறுதியாயிருப்பது ஒருவனுக்கு எல்லா அறத்தின் சிறப்பையும் தரும்.
One’s renown is rooted only in truth; it leads one easily to every other virtue (p) There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue.
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற |
செய்யாமை செய்யாமை நன்று. 297-
பொய்யாமை என்னும் அறத்தையே பொய்யாகாது தொடர்ந்து செய்துவந்தால், பிற அறச்செயல்கள் ஏதும் செய்யாத போதிலும்கூட, அது நன்மையைத் தரும்.
Practise truth, you need not practise any other virtue (p) If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை |
வாய்மையால் காணப் படும். 298-
உடலின் (புறத்தின்) தூய்மை நீராலே ஏற்படும்; உள்ளத்தின் தூய்மையானது, ஒருவன் வாய்திறந்து சொல்லும் அவனது வாய்மையாலே அடையப்படும்.
Water cleanses the body; truth cleanses the soul (p) Purity of body is produced by water and purity of mind by truthfulness.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் |
பொய்யா விளக்கே விளக்கு. 299-
புறவிருளைப் போக்கும் எல்லா விளக்கும் சிறந்த விளக்கு ஆகாது; சான்றோர்க்குப் பொய்யாமையாகிய விளக்கே அவற்றினும் சிறந்த விளக்காகத் தோன்றும்.
All lamps are not lamps To the great the lamp of truth is the lamp (p) All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் |
வாய்மையின் நல்ல பிற. 300-
யாம் மெய்ப்பொருளாக அறிந்தவற்றுள் எல்லாம், வாய்மையினும் எத்தன்மையாலும் சிறப்பான பொருள் இந்த உலகத்திலே வேறு எதுவும் இல்லை.
In all the scriptures we have read, there is no virtue greater than truth (p) Amidst all that we have seen (described) as real (excellence) , there is nothing so good as truthfulness.
1.3.7 வெகுளாமை Restraining Anger [To Top]
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் |
காக்கின்என் காவாக்கால் என்? 301-
தனக்குச் செல்லக்கூடிய இடத்திலும் சினத்தைக்காப்பவனே காப்பவன்; செல்லாத இடத்திலே காத்தால் என்ன? காவாதிருந்தால் என்ன?
He who restrains his wrath where it can be vented shows real restraint What does it matter whether one restrains it or not in an unavailing hour? (p) He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not?
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் |
இல்அதனின் தீய பிற. 302-
செல்லாத இடத்திலே சினம் கொள்வதனால் தீமை வரும். செல்லும் இடத்திலும் அதனிலும் தீமையானது.
Anger is bad even where it is unavailing; but where it can be effectively exercised there is no worse evil (p) Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய |
பிறத்தல் அதனான் வரும். 303-
வேறு ஏதும் எவரிடத்திலும் சினங்கொள்ளாமல், அவர் தீச்செயலை மறத்தலே நல்லது; தீமையான விளைவுகள் அச்சினத்தினாலே வந்து சேரும்.
Do not get angry with any one; for out of anger springs forth a host of evils (p) Forget anger towards every one, as fountains of evil spring from it.
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் |
பகையும் உளவோ பிற. 304-
முகமலர்ச்சியான நகையையும், அகமலர்ச்சியான உவகையையும் கொல்லும் சினத்தினும், உயிருக்குப் பகையானவை வேறு உளவோ?
Is there any enemy other than anger that kills both joy and pleasure? (p) Is there a greater enemy than anger, which kills both laughter and joy?
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் |
தன்னையே கொல்லுஞ் சினம். 305-
ஒருவன் தன்னைக் காக்க விரும்பினால் சினம் ஏழாமல் காத்துக் கொள்க; காவாதிருந்தால், அச்சினமானது அவனையே முடிவில் கொன்றுவிடும்.
If a man were to guard himself let him restrain anger Otherwise anger gets the better of him (p) If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் |
ஏமப் புணையைச் சுடும். 306-
சேர்ந்தவரைக் கொல்லும் இயல்புடைய சினமானது, 'தன் இனத்தார்' என்னும் பாதுகாவலான தெப்பத்தையும் சுட்டு எரித்துவிடும்.
Anger destroys even one’s kindred who is the canoe of his life (p) The fire of anger will burn up even the pleasant raft of friendship.
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு |
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. 307-
சினத்தையே செல்வம் என்று நினைத்து மேற்கொண்டவன் அதனாற் கெடுதல், நிலத்திலே அறைந்தவனின் கையானது நோவிலிருந்து தப்பாததுபோல் உறுதியாகும்.
The ruin of one who nourishes wrath is as certain as the injury to one’s hands when beat on the ground (p) Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் |
புணரின் வெகுளாமை நன்று. 308-
பலமாகக் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் வீழ்ந்தாற் போன்ற துன்பத்தை ஒருவன் செய்தபோதும், கூடுமானால், அவன்பால் வெகுளாமையே நன்று.
It is better you show no wrath even against one who inflicts on you harm scorching you like a thousand-tongued flame 73 (p) Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் |
உள்ளான் வெகுளி எனின். 309-
ஒருவன் உள்ளத்தாலும் சினத்தைப்பற்றி நினையாதவன் என்றால், அப்படிப்பட்டவன் நினைத்தது எல்லாம் உடனே அவனை வந்தடையும்.
Banish anger from your mind; you get all that you long for (p) If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் |
துறந்தார் துறந்தார் துணை. 310-
அளவுகடந்து சினத்திலே ஈடுபட்டவர் இறந்தவரைப் போன்றவர்; சினத்தைக் கைவிட்டவரோ முற்றும் துறந்த மேலோருக்குச் சமமாவர்.
Men given to wrath are one with the devil; Men free from it are one with the immortals (p) Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).
1.3.8 இன்னாசெய்யாமை Non Violence [To Top]
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா |
செய்யாமை மாசற்றார் கோள். 311-
சிறப்பைத் தருகின்ற பெருஞ்செல்வமே பெற்றாலும், பிறருக்குத் துன்பம் செய்யாதிருத்தலே குற்றமற்ற அறிவாளரின் கொள்கையாகும்.
It is the nature of the spotless not to inflict suffering on others, though by it they may get wealth and renown (p) It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness.
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா |
செய்யாமை மாசற்றார் கோள். 312-
கறுவுகொண்டு ஒருவன் துன்பம் செய்தபோதும், திரும்ப அவனுக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்யாதிருத்தலே குற்றமற்ற அறிவாளரின் கொள்கை.
It is the nature of the stainless not to resist evil (p) It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil.
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் |
உய்யா விழுமந் தரும். 313-
ஏதும் செய்யாத போதிலேயே தீமை செய்தவருக்கும், பதிலுக்குத் துன்பத்தைச் செய்தால், அது பின்னர் மீளாத் துயரத்தையே தரும்.
Even our vengeance for a wanton injury results in our own unbearable sorrow (p) In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow.
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண |
நன்னயஞ் செய்து விடல். 314-
துன்பம் செய்தவரைத் தண்டித்தல், அவர், தம் செய்கையை நினைத்து வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மைகளைச் செய்துவிடுதல் ஆகும்.
The noblest revenge is to put the foe to the blush by our acts of kindness (p) The (proper) punishment to those who have done evil (to you) , is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் |
தந்நோய்போல் போற்றாக் கடை. 315-
பிறிதோர் உயிரின் துன்பத்தைத் தன் துன்பமேபோலக் கொள்ளாத இடத்தில், அறிவினாலே ஆகும் பயன்தான் ஏதும் உளதாகுமோ?
What profiteth one’s reason, if one does not feel others’ sufferings as his own and guard against them? (p) What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself?
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை |
வேண்டும் பிறன்கண் செயல். 316-
துன்பம் தருவன எனத் தான் உணர்ந்த ஒரு செயலைப் பிறரிடத்தே செய்தலை ஒருவன் எப்போதும் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
Avoid all that causes pain to others (p) Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow.
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் |
மாணாசெய் யாமை தலை. 317-
எவ்வளவினது ஆனாலும், எக்காலத்தில் ஆனாலும், எவருக்கும், மனத்தினாலும் பொருந்தாத துன் பங்களைச் செய்யாமலிருத்தலே சிறப்பு ஆகும்.
It is the supremest virtue not to commit at any time even slight injury to others (p) It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time.
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ |
மன்னுயிர்க்கு இன்னா செயல். 318-
தன் உயிருக்குத் துன்பமாதலைத் தான் அறிந்து வருந்தும் ஒருவன், மற்றைய உயிர்களுக்குத் துன்பத்தைச் செய்தல் என்பது, என்ன அறியாமையாலோ?
How is it a man inflicts injury upon others knowing how painful it would be to himself? (p) Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself?
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா |
பிற்பகல் தாமே வரும். 319-
முற்பகலில் பிறருக்குத் துன்பத்தைச் செய்தால், பிற்பகலில் தமக்குத் துன்பங்கள் தாமாகவே வந்து சேரும் என்பதை அறிதல் வேண்டும்.
As the night follows day, evil that we do recoils on us (p) If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening.
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் |
நோயின்மை வேண்டு பவர். 320-
துன்பம் தருவன எல்லாம் துன்பம் செய்தவரின்மேல் சென்று சேர்வன; ஆகவே, துன்பப்படாமலிருப்பதை விரும்புகிறவர் பிறருக்குத் துன்பம் செய்யாதிருப்பர்.
All sufferings befall those who inflict harm on others Those who desire immunity from suffering never commit injury (p) Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others.
1.3.9 கொல்லாமை Non-Killing [To Top]
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் |
பிறவினை எல்லாந் தரும். 321-
அறச்செயல் என்பது யாதென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே; கொல்லும் செயல் பிற தீவினைகளை எல்லாம் கொண்டு வரும்.
If you ask what is the sum total of virtues, it is non-killing; killing begets sin (p) Never to destroy life is the sum of all virtuous conduct. The destruction of life leads to every evil.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் |
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 322-
உணவை பலரோடும் பங்கிட்டுத் தான் உண்ணும் இயல்பினை மேற்கொள்ளுதல், அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்களுள் எல்லாம் மிகச் சிறந்தது.
All the scriptures emphasise the virtue of hospitality and the creed of nonviolence (p) The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures.
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் |
பின்சாரப் பொய்யாமை நன்று. 323-
ஒப்பற்ற நல்லறம் என்பது எந்தவுயிரையும் கொல்லாமல் இருத்தலே ஆகும்; அதற்கு அடுத்ததாக நல்லறம் என்று கருதப்படுவது பொய்யாமை ஆகும்.
The crown of all virtues is non-violence Next comes non-lying (p) Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood.
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் |
கொல்லாமை சூழும் நெறி. 324-
நல்ல ஒழுக்கம் எனப்படுவது யாதென்றால், எந்தவொரு உயிரையும் கொலை செய்யாமலிருத்தல் என்பதைக் கருதும் வாழ்க்கை நெறியே ஆகும்.
The path of rectitude is the path of non-violence (p) Good path is that which considers how it may avoid killing any creature.
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் |
கொல்லாமை சூழ்வான் தலை. 325-
வாழ்வின் நிலையாமை கண்டு பற்றுவிட்டவருள் எல்லாம், கொலைப் பாவத்திற்குப் பயந்து, கொல்லாமை நெறியைப் போற்றுபவரே சிறந்தவர்கள்.
Far greater than an ascetic who renounces the fleeting world is the follower of non-violence (p) Of all those who, fearing the permanence of earthly births, have abandoned desire, he is the chief who, fearing (the guilt of) murder, considers how he may avoid the destruction of life.
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் |
செல்லாது உயிருண்ணுங் கூற்று. 326-
கொல்லாமை ஆகிய அறத்தையே மேற்கொண்டு நடக்கிறவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைத் தின்னும் கூற்றமும் ஒருபோதும் செல்லாது.
Yama, the Destroyer of life, never invades the realm where non-violence prevails (p) Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life.
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது |
இன்னுயிர் நீக்கும் வினை. 327-
தன்னுடைய உயிரையே விட்டுவிட நேர்வதானாலும்கூட, தான் மற்றொன்றினது இனிய உயிரைப் போக்கும் பாவச் செயலை எவரும் செய்யது.
Do not commit any act of violence though your life is in peril (p) Let no one do that which would destroy the life of another, although he should by so doing, lose his own life.
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் |
கொன்றாகும் ஆக்கங் கடை. 328-
கொலை செய்வதனாலே நன்மையாக வந்து சேரும் ஆக்கம் பெரிதானாலும், சான்றோருக்குக் கொன்றுவரும் ஆக்கம் இழிவானதே யாகும்.
The truly great scorn the riches acquired through slaughter (p) The advantage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world) , even although it should be said to be productive of great good.
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் |
புன்மை தெரிவா ரகத்து. 329-
கொலையையே செய்தொழிலாக உடைய மக்கள், அதன் இழிவான தன்மையைத் தெரிந்தவரிடத்தில் தாழ்ந்த செயலினராகவே தோன்றுவர்.
In the eyes of the discerning, men given to slaughter are but churls (p) Men who destroy life are base men, in the estimation of those who know the nature of meanness.
உயிர் உடம்பின் நீக்கியார் என்பசெயிர் உடம்பின் |
செல்லாத்தீ வாழ்க்கை யவர். 330-
நோய் மிகுந்த உடலோடு உயிரும் போகாமல் வருந்தித் துன்புறுகின்ற வாழ்வை உடையவர், பிற உயிர்களை அவற்றின் உடலிலிருந்து போக்கியவரேயாவர்.
Behold the Lazarus, he is guilty of acts of violence in his former birth (p) (The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth).
1.3.10 நிலையாமை Impermanence [To Top]
நில்லாத வற்றை நிலையின என்றுணரும் |
புல்லறி வாண்மை கடை. 331-
நிலைத்து நில்லாத பொருள்களை எல்லாம் நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற இழிவான அறிவுடைமை மிகவும் தாழ்ந்ததாகும்.
It is contemptible folly to mistake the unstable for the stable (p) That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise).
கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம் |
போக்கும் அதுவிளிந் தற்று. 332-
பெரும்பொருள் வந்தடை தல் கூத்தாடுமிடத்திலே கூட்டம் வந்து கூடுவதைப் போன்றதாகும்; அது போய்விடுவதும் அக்கூட்டம் கலைவதைப் போன்றதே.
The flow of fortune is like the gathering of a crowd at a concert; its ebb is like the melting of the crowd at its close (p) The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly.
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் |
அகுப ஆங்கே செயல். 333-
நிலைத்து இராத தன்மையுடையது செல்வம்; அதனை ஒருவன் அடைந்தால், அது நிலைப்பதற்கான அறமான செயல்களை அப்போதேசெய்யவேண்டும்.
Fortune is fickle; if you come by it delay not; put it to proper use (p) Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும் |
வாளது உணர்வார்ப் பெறின். 334-
வாழ்வை ஆராய்ந்து உண்மை உணர்பவரைப் பெற்றால், 'நாள்' என்பது ஒரு கால அளவுபோலத் தன்னைக் காட்டி உயிரை அறுக்கும் வாள் என்பது விளங்கும்.
Time seems all laughter; but to the discerning it is a saw sawing away the life of men (p) Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life.
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை |
மேற்சென்று செய்யப் படும் 335-
நாக்கு உள்ளே இழுத்துக்கொண்டு விக்குள் மேலாக எழுந்து வருவதற்கு முன்பாகவே, நல்ல செயல்களை விரைவாகச் செய்ய வேண்டும்.
Before hiccough arises and before the tongue is paralysed, do good that leads to salvation (p) Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் |
பெருமை உடைத்துஇவ் வுலகு. 336-
"நேற்று உள்ளவனாக இருந்த ஒருவன், இன்று இல்லை' என்னும் நிலையாமையாகிய பெருமையை உடையதுதான் இந்த உலகம் ஆகும்.
Yesterday he was but to-day he is not; this is the glory of the earth (p) This world possesses the greatness that one who yesterday was is not today.
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப |
கோடியும் அல்ல பல. 337-
அடுத்த பொழுதில் உயிர் வாழும் வாழாது என்பதைத் தெரியாதவர்கள் நினைப்பது, கோடியும் மேல் அளவற்ற பலவாகும்.
One is not sure what awaits him the next moment; but he becomes a prey to a thousand and one thoughts (p) Innumerable are the thoughts which occupy the mind of (the unwise) , who know not that they shall live another moment.
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே |
உடம்பொடு உயிரிடை நட்பு. 338-
தான் இருந்த கூடானது தனித்துக் கிடக்கவும், பறவை பறந்து வெளியேறிப் போய்விட்டது போன்றதுதான் உடலோடு உயிருக்குள்ள தொடர்பு.
The attachment of life to the body is like that of a full-fledged bird flying from its broken shell (p) The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty.
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி |
விழிப்பது போலும் பிறப்பு. 339-
ஒருவன் செயலில்லாமல் தூங்குவதைப்போன்றது சாக்காடு; அவன் மீண்டும் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்வது போல்வதே பிறப்பு.
Death is like sleep, birth is that awakening from sleep (p) Death is like sleep; birth is like awaking from it.
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் |
துச்சில் இருந்த உயிர்க்கு. 340-
உடலினுள் ஒரு மூலையிலே குடியிருந்த உயிருக்கு, நிலையாக நுழைந்து தங்கியிருப்பதற்குரிய தகுதிவாய்ந்த ஓர் இடம் அமையவில்லை போலும்!
Why should the soul seek a temporary shelter in the perishable body? Is there not a durable habitation for it? (p) It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home.
1.3.11 துறவு Renunciation [To Top]
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் |
அதனின் அதனின் இலன். 341-
எந்த எந்தப் பொருளில் ஆசைகொள்வதிலிருந்து ஒருவன் விடுபட்டவன் ஆகின்றானோ, அந்த அந்தப் பொருளைக் குறித்து அவன் துன்பம் அடைவதில்லை.
A man does not suffer pain from whatever things he has renounced (p) Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.
வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின் |
ஈண்டுஇயற் பால பல. 342-
துன்பம் இல்லாத வாழ்வை விரும்பினால், ஆசைகளை எல்லாம் விட்டுவிட வேண்டும்; அப்படி விட்டு விட்டபின் இவ்வுலகில் அடையக் கூடிய இன்பம் பலவாகும்.
There is endless joy in early renunciation (p) After a man has renounced (all things) , there will still be many things in this world (which he may enjoy) ; if he should desire them, let him, while it is time abandon. (the world).
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் |
வேண்டிய வெல்லாம் ஒருங்கு. 343-
ஐந்து வகையான புலன்களின் ஆசைகளையும் அடக்கி வெற்றி கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டிய பொருளாசைகளை ஒருசேர விட்டுவிட வேண்டும்.
Subdue your senses and give up all your longings (p) Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired.
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை |
மயலாகும் மற்றும் பெயர்த்து. 344-
ஒரு பொருளின் மீதும் ஆசை இல்லாததே தவநெறியின் இயல்பாகும்; ஆசை உள்ளதானால் மீளவும் உலகபோகத்தில் மயங்கியதேயாகும்.
Renunciation is the mark of asceticism Any clinging leads to one’s delusion (p) To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state.
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் |
உற்றார்க்கு உடம்பும் மிகை. 345-
பிறவியாகிய துன்பத்தை ஒழிக்க முயல்பவருக்கு உடம்பும் மிகையான ஒரு பொருள்; ஆகவே, மற்றயை ஆசைத் தொடர்புகள் எல்லாம் எதற்காகவோ?
Why talk of other attachments; even our body is a hindrance (p) What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them).
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு |
உயர்ந்த உலகம் புகும். 346-
உடலை 'யான்' எனவும், பொருள்களை 'எனது எனவும் நினைக்கின்ற மயக்கத்தை அறுத்துவிடுகிறவன், வானோர்க்கும் உயர்ந்த உலகம் சேர்வான்.
He enters the abode of the gods who lays the axe at ‘I’ and ‘mine ’ (p) He who destroys the pride which says "I", "mine" will enter a world which is difficult even to the Gods to attain.
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் |
பற்றி விடாஅ தவர் க்கு. 347-
பொருள்கள்மீதுள்ள பற்றுகளையே இறுகப் பற்றிக்கொண்டு ஆசையை விடாதவர்களுக்குத் துன்பங்களும் பற்றிக் கொண்டு விடாமல் இருக்கும்.
Sufferings seize men of desire (p) Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி |
வலைப்பட்டார் மற்றை யவர். 348-
அனைத்தையும் துறந்தவர்களே மேலான நிலையினர் ஆவர்; மற்றையோர் மயங்கி ஆசை வலையில் அகப்பட்டுக்கொண்ட வர்களே ஆவர்.
Salvation is for one of renunciation; others get entangled in endless births and deaths (p) Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God) ; all others wander in confusion, entangled in the net of (many) births.
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று |
நிலையாமை காணப் படும். 349-
பற்றுகள் அறுந்துபோன அப்பொழுதே பிறப்பாகிய பந்தமும் அறுந்து போகும்; மேலும், உலக நிலையாமையும் அப்போது காணப்படும்.
Cut off all attachments; you cut off the tangle of life; otherwise you are caught (p) At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் |
பற்றுக பற்று விடற்கு. 350-
பற்று இல்லாதவனான இறைவனது பற்றினை மட்டுமே பற்றுக; உலகப் பற்றுகளை விடுவதற்காக, அதனையே எப்போதும் விடாமல் பற்றிக் கொள்க.
Cling fast to Him who is free from all desire Seek Him for your freedom, from attachment (p) Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire.
1.3.12 மெய்யுணர்தல் Truth realization [To Top]
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் |
மருளானாம் மாணாப் பிறப்பு. 351-
உண்மையில் பொருளற்றவைகளைப் பொருளாகக் கருதி உணர்கின்ற மயக்கத்தினாலேயே, சிறப்பற்ற பலவகைப் பிறப்புக்களும் உண்டாகின்றன.
Out of ignorance which mistakes things unreal for things real springs the wretched cycle of births (p) Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real.
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி |
மாசறு காட்சி யவர்க்கு. 352-
மயக்கம் நீங்கிய குற்றமற்ற மெய்யறிவு உடையவர்களுக்கு, அவ்வுணர்வு, இருளிலிருந்து விடுபட்டு அடைகின்றதான இன்பத்தையும் கொடுக்கும்.
Men of pure vision are led from darkness to light (p) A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven).
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் |
வானம் நணிய துடைத்து. 353-
ஐயத்திலிருந்து நீங்கித் தெளிவுபெற்ற மெய்யறிவாளருக்கு, இவ் வையகத்தினும், வானம் மிகவும் அண்மையானதும் உறுதியானதும் ஆகும்.
To men of unclouded wisdom heaven is nearer than earth (p) Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt.
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே |
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. 354-
மெய்யுணர்வு இல்லாதவர்களுக்கு, ஐம்புலன்களின் உணர்வுகளை எல்லாம் முறைப்படியே பெற்றுள்ளபோதிலும் பயன் யாதும் இல்லை.
What profits one’s perfect senses if one is not endowed with true knowledge (p) Even those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் |
மெய்ப்பொருள் காண்பது அறிவு. 355-
எப்பொருள் எத்தகைய தன்மையோடு தோன்றினாலும், மயங்காமல், அப் பொருளின் மெய்யான இயல்பைத் தெளிவாகக் காண்பதே அறிவாகும்.
To track all things to their subtlest retreats is true knowledge (p) (True) knowledge is the perception concerning every thing of whatever kind, that thing is the true thing.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் |
மற்றீண்டு வாரா நெறி. 356-
கற்க வேண்டிய கல்வியைக் கற்று, மெய்ப்பொருளையும் அறிந்தவர், மீண்டும் இவ்வுலகில் பிறவிகளைத் தாம் எடுத்து வராத நெறியை மேற்கொள்வார்கள்.
Those who have learnt the truth never enter back to this world (p) They, who in this birth have learned to know the True Being, enter the road which returns not into this world.
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் |
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. 357-
என்றும் உளதான மெய்ப்பொருளை உள்ளம் ஆராய்ந்து அறிந்து விட்டதானால், மீளவும் தனக்குப் பிறப்பு உள்ளதென்று அவன் எண்ணவேண்டாம்.
There is no fear of one’s re-birth if one seeks and finds the truth (p) Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being.
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் |
செம்பொருள் காண்பது அறிவு. 358-
பிறப்புக்குக் காரணமான அறியாமைகள் நீங்குவதற்குச் சிறப்பான துணை எனப்படும் செம்பொருளை முயன்று காண்பதே மெய்யுணர்வு ஆகும்.
Seek the truth to remove delusion; that is wisdom (p) True knowledge consists in the removal of ignorance; which is (the cause of) births, and the perception of the True Being who is (the bestower of) heaven.
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் |
சார்தரா சார்தரு நோய். 359-
எல்லாப் பொருள்களுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து, பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்குரிய துன்பங்கள் திரும்பவும் வந்து சாரமாட்டா.
Seek the truth on which everything rests; you will be free from all the ills that assail life (p) He who so lives as to know Him who is the support of all things and abandon all desire, will be freed from the evils which would otherwise cleave to him and destroy (his efforts after absorption).
காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன் |
நாமம் கெடக்கெடும் நோய். 360-
காமம், வெகுளி, மயக்கம் என்னும் இவை மூன்றின் பெயர்களைக்கூட உள்ளத்திலிருந்து அறவே நீக்கிவிட்டால் பிறவித் துன்பமும் கெடும்.
Wipe out the very names of lust, anger and delusion; you will be wiping out the pause of re-birth (p) If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish evils (which flow from them).
1.3.13 அவாவறுத்தல் Desire/Craving [To Top]
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும் |
தவாஅப் பிறப்பீனும் வித்து. 361-
எல்லா உயிருக்கும் எக்காலத்திலும் பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்றதான வித்து, 'அவர்' என்பதுதான் என்று ஆன்றோர் கூறுவர்.
The learned say desire is the eternal seed of life (p) (The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது |
வேண்டாமை வேண்ட வரும். 362-
ஒருவன் எதையேனும் விரும்புவதானால், பிறவாமை என்பதையே விரும்ப வேண்டும்; அந்த நிலை அவா இல்லாத நிலையை விரும்பினால் வரும்.
Do you long for anything? Long for not being born again; this you can achieve if you cease your desires (p) If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire.
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை |
ஆண்டும் அஃதொப்பது இல். 363-
அவாவற்ற தன்மைபோலச் சிறந்த செல்வம் இவ்வுலகில் யாதும் இல்லை; எவ்விடத்தும் அதற்கு இணையானதான செல்வமும் யாதும் இல்லை.
There is no greater possession than freedom from desire either here or in the world beyond (p) There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it.
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது |
வாஅய்மை வேண்ட வரும். 364-
தூய்மையான நிலை என்பது அவாவில்லாத நிலையே ஆகும்; அந்த நிலை, வாய்மையையே விரும்பி நடந்தால் தானாகவே நம்மை வந்து சேரும்.
What is purity of mind but absence of desire? It will follow if one burns for truth (p) Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் |
அற்றாக அற்றது இலர். 365-
பற்று அற்றவர் என்பவர்கள் அவர் அற்றவரே; அவா அறாத மற்றையவர் எல்லாரும் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.
Only those who have renounced are free; others are not 84 (p) They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free.
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை |
வஞ்சிப்ப தோரும் அவா. 366-
ஒருவனை அவன் தளர்ச்சி கண்டு வஞ்சிப்பது அவா ஆகும்; அதனால், அவாவுக்குப் பயந்து ஒதுங்கி வாழ்வதே மேன்மையான அறநெறி ஆகும்.
It is desire that seduces men into sin; Asceticism dreads desires (p) It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him.
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை |
தான்வேண்டு மாற்றான் வரும். 367-
அவாவினை முழுவதும் அறுத்து விட்டால், கெடாமல் வாழ்வதற்கான நல்வினைகள், தான் விரும்பியபடியே வந்து ஒருவனுக்கு வாய்க்கும்.
The desired path of virtue is open to one who kills desire (p) If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them.
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் |
தவாஅது மேன்மேல் வரும். 368-
அவா இல்லாதவருக்குத் துன்பம் என்பதும் இல்லையாகும்; அவா உள்ளதானால் துன்பமும் ஒழியாமல் மேன்மேலும் வந்துகொண்டே இருக்கும்.
There is no sorrow for those who are free from desire Endless sorrows befall men with desire (p) There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more.
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் |
துன்பத்துள் துன்பங் கெடின். 369-
அவா என்கின்ற துன்பத்தினுள் கொடிய துன்பமானது கெடுமானால், வாழ்வில், இன்பம் இடையறாமல் வந்துவாய்த்துக்கொண்டிருக்கும்.
There is an eternal flow of life’s happiness when desire, the evil of all evils, dies out (p) Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed.
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே |
பேரா இயற்கை தரும். 370-
ஒருபோதும் நிரம்பாத அவாவினைக் கைவிட்டால், அந்தப் பொழுதிலேயே, பெரிதான இன்பவாழ்வை அந்நிலைமையானது தானாகவே தந்துவிடும்.
Give up your insatiable longings; you will be conferring on yourself an eternal life (p) The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed.
1.4 ஊழியல்:
1.4.1. ஊழ் Destiny or Fate [To Top]
கூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் |
போகூழால் தோன்றும் மடி. 371-
ஆவதற்குரிய ஊழ் வந்தால் சோர்வில்லாத முயற்சிகள் தோன்றும்; கைப்பொருள் போவதற்குரிய ஊழ் வந்தால் சோம்பல் தோன்றும்.
Out of fate springs perseverance which leads to one’s fortune Out of fate springs one’s indolence which leads to one’s ruin (p) Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate.
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் |
ஆகலூழ் உற்றக் கடை. 372-
இழப்பதற்கான ஊழ் ஒருவனைப் பேதையாக்கும்; ஆவதற்கான ஊழ் வந்தால் ஒருவனது அறிவை விரிவாக்கி அவனுக்குப் பல நன்மைகளைத் தரும்.
Fate makes fools of the wise Fate makes folly pass for wisdom (p) An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் |
உண்மை யறிவே மிகும். 373-
நுண்மையான நூல்கள் பலவற்றை முயன்று கற்றாலும், ஊழின் நிலைமைக்குத் தகுந்தபடி உள்ளதாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
What if one is a man of subtle learning; one’s mind is swayed by fate (p) Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail.
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு |
தெள்ளிய ராதலும் வேறு. 374-
ஊழின் காரணத்தால் உலகத்து இயற்கையானது இருவேறு வகைப்படும்; செல்வராதல் வேறு ஊழ்; தெளிவான அறிவினராதல் வேறு ஊழ் ஆகும்.
Fate has a double sway It makes the foolish rich and the wise poor (p) There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் |
நல்லவாம் செல்வம் செயற்கு. 375-
செல்வம் தேடும் முயற்சிக்கு, நல்லூழால் தீயவும் நல்லவை யாவதும், தீயூழால் நல்லவைகளும் தீயவை தருகின்ற தன்மையவாதலும் உண்டு.
Things favourable become adverse, and the unfavourable favourable (p) In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate).
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் |
சொரியினும் போகா தம. 376-
வருந்திக்காப்பாற்ற முயன்றாலும் நல்லூழ் இல்லாதபோது எதுவுமே ஆகாது; கொண்டுபோய் வெளியே சொரிந்தாலும் நல்லூழிருந்தால் நம் பொருள் போகாது.
One may lose one’s wealth however carefully one may guard it One may not lose it though he flings it away (p) Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it away.
வகுத்தான் வகுத் வகையல்லால் கோடி |
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. 377-
ஊழை வகுத்தவன் வகுத்துவிட்ட வகைப்படி அல்லாமல், கோடியாகப் பொருள் தொகுத்தவர்க்கும் அவற்றைத் துய்த்தல் என்பது அரிதாகும்.
Unless pre-ordained by the divine Disposer, even if a man did pile up a crore it would not be possible for him to enjoy it (p) Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things).
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால |
ஊட்டா கழியு மெனின். 378-
வந்தடைவதான இன்பங்கள் வந்து சேராமற்போகுமானால், துய்க்கும் பொருள் இல்லாதவர்கள் தம்முடைய ஆசைகளைத் துறப்பார்கள்!
The poor could easily renounce the world if fate were to refrain from visiting them with the curse of their past deeds (p) The destitute will renounce desire (and become ascetics) , if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away.
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் |
அல்லற் படுவ தெவன்? 379-
ஊழால் நன்மைகள் விளையும்போது, அவற்றை நல்லவையாகக் காண்பவர்கள், அஃது இல்லாத கேடு காலத்தில் துன்பப்படுவதுதான் எதற்காக?
Why worry about pain and pleasure? They are all the workings of fate (p) How is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate)?
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று |
சூழினுந் தான்முந் துறும். 380-
ஊழைக்காட்டிலும் பெரிதும் வலிமையானவை யாவை உள்ளன! மற்றொன்றை வலியது என்று கருதினாலும், அங்கும் ஊழே முன்வந்து நிற்கும்!
What is there so potent as Fate? Even if we devise some way of counteracting it, it takes us by surprise (p) What is stronger than fate? If we think of an expedient (to avert it) , it will itself be with us before (the thought).
பொருட்பாலில் அரசன், அரசாட்சி, பொருளாதாரம், நிர்வாகம், குடிமக்கள் பண்புகள் பற்றி எழுபது அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ளது. உள்ள பொருளை மேலும் பெருக்கவும் அதைத் தமக்கும் பிறர்க்கும் பயன்படும் நல்வழிகளில் செலவிடவும், அப்பொருளைப் பிறர் வஞ்சித்துக் கவராமல் காக்கவும் பொறுப்பு வாய்ந்த அரசமைப்பும் அதற்கு அறிவுரை கூறவல்ல அமைச்சரவையும் தேவை.
பொருட்பால் அரசும் சமுதாயமும் மனிதநிறைவுக்கு வழிகோலும் முறையைச் சொல்கிறது. மக்கள் யாவரும் சமம்; மனிதரிடையே ஏற்றத்தாழ்வு யாதுமில்லை; யாரும் எப்பணியையும் மேற்கொண்டு வாழ்வு நடத்தலாம்; எதுவும் ஒடுக்கப்படவில்லை; எல்லா வினைகளும் அறத்தின்பாற்பட்டனவாக இருத்தல்வேண்டும். இது பொருட்பால் கூறும் கருத்தின் சாரம்.
பொருட்பால் அறவழிப்பட்ட நாடு பற்றிப் பேசுகிறது. ஆட்சித் தலைவர்கள் அறிவும் ஆற்றலும் அருளும் கொண்டு அன்பாலும் அற உணர்வாலும் செயல்படும் ஒர் உயர்ந்த மனிதர்கள். மேலும் காலம் அறிதல், இடம் அறிதல், வலியறிதல், ஊக்கம், சோம்பலில்லாமை, முயற்சி, துன்பத்தில் கலங்காமை, சொல்வன்மை, செயலில் தூய்மை, செயலில் உறுதி, செயல் செய்து முடிக்கும் திறமை, நட்பு, பகை, பெரியோரைப் போற்றல், விலைமகளிரிடம் சேராமை, கள் குடித்தலின் தீமை, சூதாட்டத்தின் தீங்கு, மருந்து, மானம், நற்பண்பு, உழவின் சிறப்பு, வறுமையின் கொடுமை முதலிய கருத்துக்கள் குடிமக்கள் எல்லாருக்கும் பொதுவாகப் பொருந்தும் வகையில் இருப்பதாக அமைந்துள்ளன.
2.1 அரசியல் Royalty:
2.1.1 இறைமாட்சி Merits of King [To Top]
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் |
உடையான் அரசருள் ஏறு. 381-
படை, குடி, விளைபொருள், அமைச்சர், நண்பர், அரண் என்னும் ஆறு உறுப்புக்களையும் சிறப்பாகப் பெற்றவன் அரசருள் சிங்கம் ஆவான்.
He is a lion among kings, who possesses with an army, a territory, wealth, ministers, allies and a fortress (p) He who possesses these six things, military, people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் |
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. 382-
அஞ்சாமை, எளியோர்க்குக் கொடுத்து உதவும் ஈகை, அறிவு, ஊக்கம், என்னும் நான்கும் குறைவில்லாமல் இருப்பது வேந்தருக்கு இயல்பு ஆதல் வேண்டும்.
Fearlessness, liberality, wisdom and energy are the unfailing marks of a King (p) Never to fail in these four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kingly character.
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் |
நீங்கா நிலனான் பவர்க்கு. 383-
நாடாளும் மன்னனுக்கு, விரைவாகச் செயலைச் செய்தலும், அதனை அறியும் அறிவும், செய்யும் துணிவும் என்னும் மூன்று திறனும் நீங்காமல் இருக்க வேண்டும்.
The ruler of the earth must never be bereft of his sleepless watchfulness, learning and courage (p) These three things, viz., vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country.
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா |
மானம் உடைய தரசு. 384-
அரச நெறியிலிருந்து வழுவாமலும், நெறியல்லாதவைகளை நாட்டைவிட்டு நீக்கியும், மறமாட்சியில் தாழ்ச்சியின்மை என்னும் மானமும் உடையவனே அரசன்.
He is an honourable King who swerves not from virtue and abstains from vice (p) He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice.
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த |
வகுத்தலும் வல்ல தரசு. 385-
பொருள் வருவாய்க்கான வழிகளை உண்டாக்கலும், வரும் பொருளைச் சேமித்தலும், பாதுகாத்தலும், நாட்டின் நலத்துக்குத் தக்கபடி செலவிடுதலும் வல்லதே அரசு.
He is the King who is capable of acquiring, preserving and wisely distributing wealth (p) He is a king who is able to acquire (wealth) , to lay it up, to guard, and to distribute it.
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் |
மீக்கூறும் மன்னன் நிலம் 386-
தன்னைக் காண வருவார்க்கு தான் எளியவனாயும், கடுஞ்சொல் சொல்லாதவனாயும் அரசன் விளங்கினால், அவன் நாட்டை உலகமே உயர்வாகக் கூறும்.
The world will extol the kingdom of one who is easy of access and who does not indulge in harsh words (p) The whole world will exalt the country of the king who is easy of access, and who is free from harsh language.
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் |
தான்கண் டனைத்திவ் வுலகு. 387-
இனிமையான சொல்லோடு, துன்புறுவார்க்கு வேண்டியதைக் கொடுத்தும் காப்பாற்றவல்ல அரசன், தன் மனத்தில் கருதியவாறே உலகமும் அமையும்.
He who is not harsh of tongue but full of grace and liberality commands the homage of the world (p) The world will praise and submit itself to the mind of the king who is able to give with affability, and to protect all who come to him.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு |
இறையென்று வைக்கப் படும். 388-
முறைமையோடு ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றும் மன்னவன், அம்மக்களுக்குத் தெய்வம் என்று சொல்லப்படும் உயர்நிலையிலே வைத்து மதிக்கப்படுவான்.
He is a God among men who shields his subjects (p) That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects).
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் |
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. 389-
சான்றோர்கள் கண்டித்துச் சொல்வது கேள்விக்கு வெறுப்பாயிருந்தாலும், பொறுத்து, அக்குறைகளை நீக்கும் பண்புள்ள வேந்தனின் குடை நிழலில், உலகம் தங்கும்.
The world is under the sway of the monarch who puts up with bitter counsel (p) The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear.
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் |
உடையானாம் வேந்தர்க் கொளி. 390-
கொடையும், இரக்க குணமும், செங்கோன்மையும், குடி காத்தலும் என்னும் நான்கையும் சிறப்பாகப் பெற்றவன் வேந்தர்க்கு எல்லாம் ஒளிவிளக்கு ஆவான்.
He is a light among Kings who is endowed with liberality, grace, love for his subjects, and a desire for just rule (p) He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care for his people.
2.1.2 கல்வி Education or Learning [To Top]
கற்க கசடறக் கற்பவை கற்றபின் |
நிற்க அதற்குத் தக. 391-
கற்பதற்குத் தகுதியான நூல்களைப் பழுதில்லாமல் கற்க வேண்டும்; கற்றதன் பின்னர் கற்ற அக்கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும்.
Faultlessly pursue knowledge and abide by it (p) Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும் |
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. 392-
'எண் என்று சொல்லப்படுவதும், 'எழுத்து என்று கூறப்படுவதும் என்னும் இவை இரண்டும், இவ்வுலகில் வாழும் உயிர்களுக்குக் 'கண்' என்பார்கள்.
Verily the numbers and letters are the eyes of the living one (p) Letters and numbers are the two eyes of man. (Language/art and Mathematics/science)
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு |
புண்ணுடையர் கல்லா தவர். 393-
கண்' உடையவர் என்று உயர்வாகக் கூறப்படுவோர் கற்றவரே ஆவர்; கல்லாதவர்கள் தம் முகத்தில் இரண்டு புண் உடையவர்கள் ஆவர்.
The learned alone are said to possess eyes; but they are only sores in the face of the unlettered (p) The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் |
அனைத்தே புலவர் தொழில். 394-
எல்லாரும் மகிழும் வகையிலே கூடியிருந்து, 'இனி என்று மீளக் கூடுவோம்' என்று எண்ணும்படியாகப் பிரிதல் கல்வியறிவினரது செயல் ஆகும்.
The duty of the learned is to delight man by their company Hunger ever more for it even while parting (p) It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again.)
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் |
கடையரே கல்லா தவர். 395-
செல்வர்களின் முன்னே உதவிகேட்கும் எளியவர் பணிவோடு நிற்பதுபோல், ஆசிரியரிடம் பணிந்து நின்று கற்றவரே சிறந்தவர்; கல்லாதவரோ கடையர்!
Eager like the beggars at the door of the wealthy is the sufferer of knowledge; the illiterate are held in scorn (p) The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் |
கற்றனைத் தூறும் அறிவு. 396-
மணலிலே தோண்டும் கிணற்றில், தோண்டிய அளவுக்கே நீர் ஊறும் மாந்தருக்கும் அவரவர் முயன்று கற்றதன் அளவுக்கே அறிவும் ஊறிச் சுரக்கும்.
The deeper you delve into the earth, the greater will be the flow of water Likewise knowledge is in proportion to your learning (p) Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning.
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் |
சாந்துணையுங் கல்லாத வாறு. 397-
கற்றவனுக்கு எந்த நாடும் நாடாகும்; எந்த ஊரும் ஊராகும்; இதுவே உண்மையாக இருந்தும் ஒருவன் சாகும்வரைக்கும் கல்லாமலிருப்பது எதனால்?
No country and no place is alien to the learned How is it that persons remain in ignorance to the end of their lives? (p) How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country) , and every town his own (town)?
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு |
எழுமையும் ஏமாப் புடைத்து. 398-
ஒரு பிறவியிலே தான் கற்ற கல்வியானது, ஒருவனுக்குத் தொடர்ந்து வரும் ஏழு பிறப்புக்களிலும் அவனைப் பாதுகாக்கும் சிறப்புடையது ஆகும்.
The knowledge that a person gains in one birth stands him in good stead for seven births (p) The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births.
தாமின் புறுவது உலகின் புறக் கண்டு |
காமுறுவர் கற்றறிந் தார். 399-
தாம் இன்பம் அடைவதாகிய கல்வியினாலே உலகத்தாரும் இன்பம் அடைவதைக் கண்டு, கற்றறிந்தவர், மேன்மேலும் தாம் கற்பதையே விரும்புவார்கள்.
The learned thirst for knowledge more and more, because what gives them pleasure delights the world (p) The learned will long (for more learning) , when they see that while it gives pleasure to themselves, the world also derives pleasure from it.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு |
மாடல்ல மற்றை யவை. 400-
'அழிவில்லாத சிறந்த செல்வம்' என்பது கல்விச் செல்வமே; மற்றைய பொன் பொருள் மண் என்னும் செல்வங்கள் ஒருவனுக்குச் சிறந்த செல்வம் ஆகா.
The precious undecaying wealth of a man is his learning All other riches are no wealth at all (p) Learning is the true imperishable riches; all other things are not riches.
2.1.3 கல்லாமை Illiteracy or Non-Learning [To Top]
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய |
நூலின்றிக் கோட்டி கொளல். 401-
நிரம்பிய நூலறிவு இல்லாமல் கற்றவர் அவையிலே சென்று ஒருவன் பேசுதல், அரங்கம் இழைக்காமலே வட்டாடினால் போன்ற அறியாமையான செயல் ஆகும்.
Entering an assembly without sufficient knowledge is like playing at a dice board without its knowledge (p) To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares.
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் |
இல்லாதாள் பெண்காமுற் றற்று. 402-
கல்லாதவன் தானும் அவையிற் பேசவேண்டும் என்று விரும்புதல், முலைகளிரண்டும் இல்லாதவளான பெண் பெண்மையை விரும்புதல் போன்ற அறியாமை ஆகும்.
The desire of the ignorant to speak is like the desire of a woman without breasts claiming womanhood (p) The desire of the unlearned to speak (in an assembly) , is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood.
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் |
சொல்லா திருக்கப் பெறின். 403-
கற்றவர்களின் முன்பாகச் சென்று சொல்லாடாதிருந்தால், கல்லாதவர்களும், அந்த அளவுக்கு மிகவும் நல்லவர்களாகவே கற்றவரால் கருதப்படுவர்.
Blessed are the ignorant if they venture not to address the assembly of the learned (p) The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் |
கொள்ளார் அறிவுடை யார். 404-
கல்லாதவனது அறிவு சில சமயங்களிலே மிகவும் நன்றாயிருந்தாலும், அறிவுடையவர்கள் அதனை நன்றென்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
The learned value not the intelligence of the illiterate (p) Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து |
சொல்லாடச் சோர்வு படும். 405-
கல்லாத ஒருவன், தன்னையும் கற்றவர்போல மதித்துக் கொண்டு சொல்லாடினால்,அவனுக்கு இயல்பாக உள்ள மதிப்பும் கெட்டுப் போய்விடும்.
The pretensions of the illiterate disappear the moment they launch upon a discussion with the learned (p) The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of the learned).
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் |
களரனையர் கல்லா தவர். 406-
உயிரோடு இருக்கின்றார்' என்னும் அளவினரே அல்லாமல், எந்தப் பயனும் இல்லாத களர்நிலத்தைப் போன்றவர்களே கல்லாதவர் ஆவர்.
The ignorant just exist; they are like a piece of barren land (p) The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் |
மண்மாண் புனைபாவை யற்று. 407-
நுட்பமாகவும் சிறப்பாகவும் நுழைந்து கற்ற அறிவுநலம் இல்லாதவனின் உடல் அழகு, மண்ணால் அழகாகச் செய்த ஒரு பாவையின் உடல் அழகு போன்றதே!
The imposing position of one who lacks penetrating intellect reminds us of the external glitter of clay (p) The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll.
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே |
கல்லார்கண் பட் ட திரு. 408-
கல்வியறிவு உடைய நல்லவரிடம் உள்ளதான வறுமையைவிடக் கல்லாதவரிடம் சேர்ந்த அளவற்ற செல்வமானது பெரிதும் துன்பம் தருவதாகும்.
Far sweeter is the poverty of the learned than the riches of the ignorant (p) Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned.
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் |
கற்றார் அனைத்திலர் பாடு. 409-
மேலான குடியிலே பிறந்தவராயினும், கல்லாத மட்மையாளர், தாழ்ந்த குடியிலே பிறந்தும் கற்றவரைப் போலப் பெருமை இல்லாதவர் ஆவர்.
The highborn ignorant sink low in the scale while the learned even of humble birth are exalted (p) The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் |
கற்றாரோடு ஏனை யவர். 410-
அறிவு விளங்கும் நூல்களைக் கல்லாதவர்கள், மக்களை நோக்க விலங்குகள் இழிந்தவை ஆவதுபோல, கற்றவரைக் கருதத்தாமும் இழிந்தவர் ஆவர்.
The ignorant are but beasts by the side of men of wide learning (p) As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works.
2.1.4 கேள்வி Listening [To Top]
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் |
செல்வத்து ளெல்லாந் தலை. 411-
கேள்வியால் அடைகின்ற அறிவே செல்வங்களுள் சிறந்த செல்வம் ஆகும்; அந்தக் கேள்விச் செல்வம் பிற செல்வங்களுள் எல்லாம் முதன்மையானதும் ஆகும்.
The wealth of all wealth is the wealth of hearing It out-tops all other wealth (p) Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.
செவுக்குண வில்லாத போழ்து சிறிது |
வயிற்றுக்கும் ஈயப் படும். 412-
செவிக்கு உணவான கேள்வி இல்லாதபொழுது, உடலைக் காப்பதன் பொருட்டாக வயிற்றுக்கும் சிறிதளவான உணவு அறிவுள்ளவரால் தரப்படும்.
Men think a little of the stomach only when the ear is not fed (p) When there is no food for the ear, give a little also to the stomach.
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் |
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. 413-
செவியுணவு ஆகிய கேள்வியை உடையவர், இவ்வுலகத்தில் இருப்பவரானாலும், அவியுணவை ஏற்றுக்கொள்ளும் வானுலகத்தோத் தேவர்களோடு ஒப்பாவார்கள்.
Those mortals who feast their ears with learning are one with the immortals with their sacrificial offerings (p) Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices.
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு |
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. 414-
தான் முயன்று கற்கவில்லை என்றாலும், கற்றவரிடம் கேட்டாவது அறிவு பெறவேண்டும்; அது ஒருவன் தளர்ச்சி அடையும்போது ஊன்றுகோல்போலத் துணையாகும்.
Though devoid of learning let one fill one’s ear with knowledge It is his prop in his hour of gloom (p) Although a man be without learning, let him listen (to the teaching of the learned) ; that will be to him a staff in adversity.
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே |
ஒழுக்க முடையார்வாய்ச் சொல். 415-
நல்ல ஒழுக்கம் உடையவரது வாய்ச்சொற்கள், வழுக்கும் சேற்றில் வழுக்காமல் செல்ல உதவும் ஊன்றுகோல்போல ஒருவனுக்கு எப்போதும் உதவியாக விளங்கும்.
The counsel of the upright is like a staff over a slippery ground (p) The words of the good are like a staff in a slippery place.
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் |
ஆன்ற பெருமை தரும். 416-
எவ்வளவு சிறிது என்ற போதும் நல்ல பேச்சுக்களையே கேட்கவேண்டும்; அது அந்த அளவுக்கேனும் சிறந்த பெருமையைக் கேட்டவனுக்குத் தவறாமல் தரும்.
Listen to wholesome counsel however meagre; for out of it springs great good (p) Let a man listen, never so little, to good (instruction) , even that will bring him great dignity.
பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் |
தீண்டிய கேள்வி யவர். 417-
நுட்பமாகக் கற்றுணர்ந்த அறிவோடு கேள்வியறிவும் உடையவர்கள், பிழை ஒன்றை உணர்ந்தாலும், தமக்குப் பேதைமை தருகின்ற சொற்களைச் சொல்லமாட்டார்கள்.
Men of searching understanding do not speak foolishly even in a thoughtless mood (p) Not even when they have imperfectly understood (a matter) , will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction).
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் |
தோட்கப் படாத செவி. 418-
கேள்வியால் துளைக்கப்படாத செவிகள், பிற ஒலிகளை எல்லாம் கேட்குமாயினும், உண்மையில் செவிடான காதுகளே ஆகும்.
The ear that is not filled with understanding is really deaf (p) The ear which has not been bored by instruction, although it hears, is deaf.
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய |
வாயின ராதல் அரிது. 419-
நுண்மையான கேள்வி அறிவைப் பெறாதவர்கள், தாம். வணக்கமாகப் பேசும் வாயினர் ஆகுதல் அருமையே! கேள்வியறிவு பெற்றவர்கள் பணிவாகவே பேசுவார்கள்.
Men that lack subtle understanding lack modesty in speech (p) It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction.
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் |
அவியினும் வாழினும் என்? 420-
கேள்வியாகிய அறிவுச் சுவையை உணராது, வாயால் அறியும் நாக்கின் சுவையுணர்வு மட்டுமே கொண்டவர்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் ஒன்றுதான்.
What avails it whether men live or die, if they merely satisfy the palate and not feed the ear with wisdom (p) What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear?
2.1.5 அறிவுடைமை Wisdom [To Top]
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் |
உள்ளழிக்க லாகா அரண். 421-
இறுதிக்காலம் வரையும் காப்பாற்றும் கருவி அறிவு ஆகும்; பகைவருக்கும் உட்புகுந்து அழிக்க இயலாத கோட்டையும் அந்த அறிவு ஆகும்.
The weapon of wisdom saves one from evil It is a citadel which cannot be destroyed by the foe (p) Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ |
நன்றின்பால் உய்ப்ப தறிவு. 422-
மனத்தை அது சென்ற இடங்களிலேயே செல்லவிடாமல் தீமைகளிலிருந்து விலக்கி, நன்மையில் மட்டுமே செல்லவிடுவது அறிவு ஆகும்.
Wisdom bridles the wandering mind, keeps it away from evil and bids it tread the right path (p) Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் |
மெய்ப்பொருள் காண்ப தறிவு. 423-
எந்தப் பொருளைப்பற்றியும், எவரெவரிடமிருந்து கேட்ப தானாலும்,அப்பொருளினது மெய்யான தன்மைகளைக் காண்பதுதான் அறிவு ஆகும்.
Wisdom seeks the truth of all things which are heard or uttered (p) To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் |
நுண்பொருள் காண்ப தறிவு. 424-
கேட்பவருக்குப் புரியும்படி எளிமையாகத் தான் விளக்கிச் சொல்லியும், பிறரின் பேச்சுக்களில் உள்ள நுண்மையான பொருளைக் காண்பதும், அறிவு ஆகும்.
Wisdom unravels things subtle and seeks them in others (p) To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdom.
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் |
கூம்பலும் இல்ல தறிவு. 425-
உயர்ந்தவர்களைத் தன்னுடையவர்களாகச் செய்து கொள்வதே அறிவு; அத் தொடர்பிலே முதலில் மகிழ்தலும் பின்னர் குவிதலும் இல்லாததும் அறிவு ஆகும்.
To befriend the world is wisdom; and wisdom is not inconstant like the flower that blossoms and fades (p) To secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged, and) not opening and closing (like the lotus flower).
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு |
அவ்வ துறைவ தறிவு. 426-
உயர்ந்தோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவ்வாறே, அந்த உயர்ந்தவர்களோடு தானும் அங்ஙனமே வாழ்வதுதான் அறிவுடைமை ஆகும்.
To be one with the world is wisdom (p) T o live as the world lives, is wisdom.
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் |
அஃதறி கல்லா தவர். 427-
பின்னே வரப்போவதை முன்னாலேயே அறிபவர்களே அறிவுடையவர்; அவ்வாறு அறிந்து நடப்பதற்குக் கல்லாதவர்களே அறிவில்லாதவர் ஆவர்.
Wisdom knows the future but not ignorance (p) The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise.
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது |
அஞ்சல் அறிவார் தொழில். 428-
அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் நடப்பது அறிவில்லாத தன்மை ஆகும்; அஞ்சவேண்டியதற்கு அஞ்சி விலகிநடப்பதே அறிவுடையவர் செயலாகும்.
It is folly not to fear what must be feared It is wisdom to fear what must be feared (p) Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை |
அதிர வருவதோர் நோய். 429-
பின்னர் வரப்போவதை முன்னதாகவே அறிந்து காக்கும் அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வருவதான ஒரு துன்பமும் இல்லை.
Men of foresight who guard themselves against coming events know no distress (p) No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils.
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் |
என்னுடைய ரேனும் இலர். 430-
அறிவுடையோர் எல்லா நன்மையுமே உடையவர் ஆவர்; அறிவில்லாதவர் எதனை உடையவரானாலும் எந்த நன்மையும் இல்லாதவரே ஆவர்.
The wise possess everything; but the poor are the unwise rich (p) Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothing.
2.1.6 குற்றங்கடிதல் Avoiding or Correcting faults [To Top]
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் |
பெருக்கம் பெருமித நீர்த்து. 431-
செருக்கும், சினமும், சிறுமைக் குணமும் இல்லாதவருடைய பெருஞ்செல்வமானது சான்றோரால் மதிக்கப்படும் தன்மையை உடையது ஆகும்.
Exalted is the wealth that is free from pride, wrath and lust (p) Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா |
உவகையும் ஏதம் இறைக்கு. 432-
ஈயாத உலோபமும் மாட்சியில்லாத மானவுணர்வும், தகுதியில்லாத உவகையும் தலைவனாக இருப்பவனுக்குக் கேடுதரும் குற்றங்கள் ஆகும்.
Niggardliness, empty honour, blind favouritism, are all the faults of a King (p) Avarice, undignified pride, and low pleasures are faults in a king.
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் |
கொள்வர் பழிநாணு வார். 433-
பழிச்சொல்லுக்கு வெட்கப்படுகின்றவர்கள், தினை அளவான சிறு குற்றம் தம்மிடம் வந்தாலும், அதனைப் பனையளவு பெரிதாகக் கருதி வருந்துவார்கள்.
Even the slightest fault looms large in the eyes of those who dread dishonour (p) Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree.
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே |
அற்றந் த்ரூஉம் பகை. 434-
தனக்கு முடிவைத் தருகின்ற கொடிய பகை குற்றமே; ஆகவே, குற்றம் செய்யாதிருப்பதே பொருளாகத் தன்னை எப்போதும் காத்துக்கொள்க.
Guard against your error as you would your wealth For error spells your ruin (p) Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் |
வைத்தூறு போலக் கெடும். 435-
குற்றம் வருவதற்கு முன்பே, வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கையானது, நெருப்பின் முன்னர் வைத்த வைக்கோல் போர் போலக் கெடும்.
Like a piece of straw in a consuming flame, will be destroyed the life of one who does not guard against faults (p) The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் |
என்குற்ற மாகும் இறைக்கு? 436-
தன் குற்றத்தையும் வராமல் நீக்கிக் கொண்டு, பிறர் குற்றங்களையும் கண்டறிந்து நீக்குவானானால், அரசனுக்கு என்ன குற்றம் உண்டாகும்?
What fault will befall a King who is free from guilt and detects guilt in others? (p) What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.
செயற்பால செய்யா திவறியான் செல்வம் |
உயற்பால தன்றிக் கெடும். 437-
செல்வம் பெற்ற போது அதனாலே செய்யவேண்டிய செயல்களைச் செய்யாமல் தவறியவனுடைய செல்வமானது, நிலைக்கும் தன்மையற்று, அழியும்.
The hoarded wealth of the miser who fails in his offices perishes (p) The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue.
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் |
எண்ணப் படுவதொன் றன்று. 438-
செல்வத்தின்மேல் பற்றுக்கொண்ட உள்ளம் எனப்படும் கஞ்சத்தனம், எந்தக் குற்றங்களோடும் எண்ணப்படும் ஒன்றாக இல்லாமற்,பெருங் குற்றமாகும்.
A clutching greedy heart that knows no charity commits the greatest folly (p) Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all).
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க |
நன்றி பயவா வினை. 439-
எப்போதும் தன்னையே வியந்து பேசுதல் கூடடாது; நன்மை பயவாத செயல்களையும் ஒருபோதும் செய்ய விரும்புதலும் செய்தலும் கூடாது.
Let not conceit enter your heart at any time of your life; do not run after trifles (p) Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things.
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் |
ஏதில ஏதிலார் நூல். 440-
தன் விருப்பத்தைப் பிறர் அறியாதபடி நுகர வல்லவனானால், அவனைப் பகைத்தவர் செய்யும் சூழ்ச்சிகள் எல்லாம் பயனில்லாமல் அழிந்து போகும்.
Of what avail are the designs of the foe, if one does not betray one’s secrets? (p) If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless.
2.1.7 பெரியாரைத் துணைக்கோடல் Asspciation with great persons [To Top]
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை |
திறனறிந்து தேர்ந்து கொளல். 441-
அறத்தின் தன்மைகளை அறிந்து முதிர்ந்த அறிவுடையவரது நட்பினை, கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
The friendship of virtuous men of mature wisdom is to be appreciated and secured (p) Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge.
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் |
பெற்றியார்ப் பேணிக் கொளல். 442-
நாட்டிற்கு வந்தடைந்த துன்பத்தை நீக்கி, மேலும் நாட்டில் துன்பம் வராதபடி முற்படக் காக்கும் தகுதியுடைய பெரியோரையே துணையாகக் கொள்ளல் வேண்டும்.
Seek the friendship of those who can remove existing distress and guard against future (p) Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happen.
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் |
பேணித் தமராக் கொளல். 443-
பெரியோரையே விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக்கொள்ளுதல், பெறுதற்கரிய பேறுகளுள் எல்லாம் அரிதான் பெரும்பேறு ஆகும்.
To seek and win the alliance of the great is the rarest of all blessings (p) To cherish great men and make them his own, is the most difficult of all difficult things.
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் |
வன்மையு ளெல்லாந் தலை. 444-
தன்னினும் பெரியோராக உள்ளவர்கள் தன் சுற்றத்தினராக ஆகுமாறு நடந்துவருதல், ஒருவனது வலிமையுள் எல்லாம் தலையான வலிமை ஆகும்.
To follow in the footsteps of those that are greater than oneself is the crown of one’s strength (p) So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest.
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் |
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். 445-
தகுதியான வழிகளை ஆராய்ந்துசொல்பவரையே கண்ணாகக் கொண்டு உலகம் நடத்தலால், மன்னவன், அவரை ஆராய்ந்து தன் சுற்றமாக்கிக் கொள்ளல் வேண்டும்.
Verily the ministers are the eyes of the monarch; let the monarch have tried ones (p) As a king must use his ministers as eyes (in managing his kingdom) , let him well examine their character and qualifications before he engages them.
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் |
செற்றார் செயக்கிடந்த தில். 446-
தகுதியுடைய பெரியோர்களின் துணையுள்ளவனாகத் தான் நடந்துகொள்ள வல்லவனைப் பகைவர் பகைத்துச் செய்யக்கூடிய துன்பம் ஏதுமில்லை.
No adversary can ruin the King who relies on his efficient counselors (p) There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men.
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே |
கெடுக்குந் தகைமை யவர். 447-
இடித்துக் கூறித் திருத்தும் துணைவரான பெரியோரைத் துணையாகக் கொண்டவரை, எவர்தாம் கெடுக்கக்கூடிய வல்லமை உடையவர்?
None can harm the ruler who seeks the wholesome counsel of his ministers though bitter (p) Who are great enough to destroy him who has servants that have power to rebuke him?
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் |
கெடுப்பா ரிலானுங் கெடும். 448-
இடித்துச் சொல்லித் திருத்துபவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன், தன்னைக் கெடுப்பவர் எவரும் இல்லாதபோதும், தானாகவே கெடுவான்.
The King who is not guarded by men of firm counsel will perish even though he has no enemies (p) The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him.
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ் |
சார்பிலார்க் கில்லை நிலை. 449-
முதல் இல்லாத வாணிகருக்கு அதனால் வரும் ஊதியமும் இல்லையாகும்; அவ்வாறே தன்னைத் தாங்கும் துணையில்லா தவர்க்கு உலகில் நிலைபேறும் இல்லை.
Is there profit without capital? Is there security for the monarch devoid of wise counselors? (p) There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.
பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே |
நல்லார் தொடர்கை விடல். 450-
பலரோடும் பகைத்துக் கொள்வதைவிட நல்லோருடன் கொண்ட தொடர்பைக் கைவிட்டு விடுதல், அதனினும் பதின்மடங்கு தீமை தருவதாகும்.
Greatly injurious is the forsaking of the friendship of the good; it is like encountering singlehanded many foes (p) It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many.
2.1.8 சிற்றினஞ்சேராமை Avoiding Mean persons [To Top]
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் |
சுற்றமாச் சூழ்ந்து விடும். 451-
பெரியோர் சிற்றினத்தைக் காணின் அஞ்சி ஒதுங்குவார்கள்; சிறியாரோ அதுவே தம் சுற்றமாகக் கருதித் தம்முடன் சேர்த்துக் கொள்வார்கள்.
The great dread the company of the ignoble, for the ignoble delight in the company of the mean (p) (True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friends.
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு |
இனத்தியல்ப தாகும் அறிவு. 452-
நிலத்தின் தன்மையால், அதிற் சேர்ந்த நீரின் தன்மை மாறுபடும் அவ்வாறே, மாந்தர்க்கும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மைப்படியே அறிவும் ஆகும்.
Water smacks of the soil; The wisdom of man takes the colour of the company he keeps (p) As water changes (its nature) , from the nature of the soil (in which it flows) , so will the character of men resemble that of their associates.
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் |
இன்னான் எனப்படுஞ் சொல். 453-
மாந்தர்க்கு உணர்ச்சி என்பது மனத்தின் தன்மையால் உண்டாவதாகும்; இவன் இன்னவன் எனப்படும் சொல்லானது அவனவன் சேர்ந்த இனத்தாலே உண்டாகும்.
It is the mind that helps a man to gain knowledge; but it is one’s association that makes people say what sort of man he is (p) The power of knowing is from the mind; (but) his character is from that of his associates.
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு |
இனத்துள தாகும் அறிவு. 454-
ஒருவனது மனத்தில் உள்ளதுபோலக் காட்டினாலும், ஒருவனுக்கு அவன் சேர்ந்த இனத்தை யொட்டியதாகவே அறிவு) உண்டாகும்.
One’s wisdom partakes of the nature of one’s mind and one is known by the company he keeps (p) Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் |
இனந்தூய்மை தூவா வரும். 455-
மனம் தூய்மை யாதலும், செய்யும் தொழில் தூய்மை யாதலும் ஆகிய இரண்டும், தான் சேர்ந்த இனத்தின் தூய்மையை ஒட்டியே வரும்.
Purity of mind and purity of action are of a piece with the purity of one’s associates (p) Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct.
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு |
இல்லைநன் றாகா வினை. 456-
மனத்திலே தூய்மை உடையவர்களுக்கு எஞ்சி நிற்பதான புகழ் முதலியவை நன்றாக ஆகும்; சேர்ந்த இனம் தூய்மையானவர்க்கு நன்மையாகாத செயல் யாதுமில்லை.
A good progeny awaits the pure There is no effort of one endowed with good company but bears fruit (p) To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் |
எல்லாப் புகழும் தரும். 457-
மனத்தின் நல்ல நிலையே மன்னுயிர்க்கு ஆக்கம் தரும்; இனத்தின் நல்ல துணையோ எல்லாவகையான புகழையும் ஒருவனுக்குத் தருவதாகும்.
Company of the pure brings one all glory (p) Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men.
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு |
இனநலம் ஏமாப் புடைத்து. 458-
சான்றோர் மனநலத்தினை நல்லபடியே உடையவரானாலும், அவருக்குத் தாம் சேர்ந்திருக்கும் இனத்தது நலமே எல்லாப் புகழையும் தரும்.
The wise may be pure in mind Good company is the source of one’s strength (p) Although they may have great (natural) goodness of mind, yet good society will tend to strengthen it.
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் |
இனநலத்தின் ஏமாப் புடைத்து. 459-
மனத்தின் செம்மையாலே மறுமை இன்பம் உண்டாகும்; மற்று அந்த மறுமையும், சேர்ந்த இனத்தின் செம்மையால் நல்ல பாதுகாப்புடன் இருக்கும்.
Heaven awaits the pure of heart; verily it is the reward of good company (p) Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good.
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் |
அல்லற் படுப்பதூஉம் இல். 460-
நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாவது உலகத்தில் யாதுமில்லை; தீய இனத்தைவிட அல்லல் படுத்துவதும் உலகத்தில் யாதுமில்லை.
There is no greater evil than the company of the wicked (p) There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked.
2.1.9 தெரிந்துசெயல்வகை Planned action [To Top]
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் |
ஊதியமும் சூழ்ந்து செயல். 461-
ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக, அதனால் முதலில் அழியக்கூடியதும், பின்னர் ஆகிவரக் கூடியதும், கிடைக்கும் மிச்சமும் கருதிய பின்னரே செய்ய வேண்டும்.
After much deliberation over profit and loss and the final gains, launch on a task (p) Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) act.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு |
அரும்பொருள் யாதொன்றும் இல் 462-
தொழில் தெரிந்த நண்பர்களுடன் கலந்து எதையும் ஆராய்ந்து செய்பவருக்கு, முடிவதற்கு அரிய பொருள் என்று சொல்லக்கூடியது யாதொன்றுமே இல்லை.
Nothing is impossible for those who act after listening to the counsel of persons of known probity (p) There is nothing too difficult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends.
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை |
ஊக்கார் அறிவுடை யார். 463-
வரப்போவதாகக் கருதும் ஆக்கத்தை எண்ணி, செய்துள்ள முதலீட்டையும் இழக்கின்ற முயற்சியினை அறிவுடையவர்கள் ஒருபோதும் மேற்கொள்ளமாட்டார்கள்.
The wise do not approve of the action of those who lose their capital anticipating some distant gain (p) Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal.
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் |
ஏதப்பாடு அஞ்சு பவர். 464-
தமக்கு இகழ்ச்சி தருவதான ஒரு குறைபாட்டுக்கு அஞ்சுகிறவர்கள், ஊதியம் வரும் என்று தெளிவில்லாத செயலை ஒருபோதும் தொடங்க மாட்டார்கள்.
Men who dread ignominy never embark on a work without deliberation (p) Those who fear reproach will not commence anything which has not been (thoroughly considered) and made clear to them.
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் |
பாத்திப் படுப்பதோ ராறு. 465-
ஒரு செயலைப்பற்றி எல்லாவகையிலும் முற்றவும் ஆராயாமல் செய்யத் தொடங்குதல்,பகைவரை நல்ல பயிருள்ள பாத்தியுள் நிலைபெறுத்துவது போன்ற செயலாகும்.
A thoughtless expedition only fosters the might of one’s foes (p) One way to promote the prosperity of an enemy, is (for a king) to set out (to war) without having thoroughly weighed his ability (to cope with its chances).
செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க |
செய்யாமை யானுங் கெடும். 466-
செய்யத் தகுந்தது அல்லாத ஒரு செயலைச் செய்தாலும் பொருள் கெடும்; செய்யத்தகுந்த செயலைச் செய்யாமையாலும் பொருள் கெடும்.
To do a thing which ought not to be done is to court trouble; to fail to do a thing which ought to be done is to land oneself in ruin (p) He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to do.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் |
எண்ணுவம் என்பது இழுக்கு. 467-
நன்றாக எண்ணிய பின்னரே ஒரு செயலைச் செய்யத் துணிய வேண்டும்; 'துணிந்த பின்னர் எண்ணுவோம்' என்று எதையும் நினைப்பது குற்றமாகும்.
Begin your task after much deliberation To think after launching action is to court a grievous blunder (p) Consider, and then undertake a matter; after having undertaken it, to say "We will consider," is folly.
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று |
போற்றினும் பொத்துப் படும். 468-
செய்வதற்கு உரிய வழிகளிலே முயன்று செய்யப்படாத தொழிலானது, பலர் துணைநின்று பின்னர்க் காத்தாலும் கெட்டுப் போய்விடும்.
An ill-organised scheme though supported by many goes to pieces (p) The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it.
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் |
பண்பறிந் தாற்றாக் கடை. 469-
அவரவரது இயல்புகளைத் தெரிந்து கொண்டு, அவரவர்க்குத் தகுந்தபடி செய்யாவிட்டால், நன்மைசெய்வதிலும்கூடக் குற்றம் உண்டாகிவிடும்.
Even a good scheme falls through if we do not divine aright the disposition of men (p) There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men.
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு |
கொள்ளாத கொள்ளாது உலகு. 470-
உயர்ந்தோர் இகழ்ச்சியாக நினையாத செயல்களையே ஆராய்ந்து செய்யவேண்டும்; உயர்ந்தோர் தம் தகுதியோடு பொருந்தாதவற்றை ஏற்கவே மாட்டார்கள்.
Let not the king do; any unwise act lest the world should hold him in scorn (p) Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things which do not become of his position to adopt.
2.1.10 வலியறிதல் Knowing strength [To Top]
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் |
துணைவலியும் தூக்கிச் செயல். 471-
செயலில் வலிமையும், தன் வலிமையும், மாற்றானது வலிமையும், துணைசெய்வாரின் வலிமையும் ஆராய்ந்தே செயலைச் செய்ய வேண்டும்.
A king must act after measuring the strength of his plan, his own resources, the strength of the enemy and that of the ally (p) Let (one) weigh well the strength of the deed (he purposes to do) , his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both) , and then let him act.
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் |
செல்வார்க்குச் செல்லாதது இல். 472-
தன்னாலே முடிய கூடியவனை ஆராய்ந்து அறிந்து, அச் செயலிலேயே நிலைத்துநின்று முயற்சி செய்பவர்களுக்கு முடியாத செயல் எதுவும் இல்லை.
Nothing is impossible for them who know the nature of their task and throw themselves heart and soul into it (p) There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy) , make themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, and apply themselves wholly to their object.
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி |
இடைக்கண் முரிந்தார் பலர். 473-
தம்மிடமுள்ள வலிமையை அறியாதவராய், மனவெழுச்சி யினாலே தூண்டப்பட்டுச் செயலைத் தொடங்கிவிட்டு, இடையிலே முரிந்துபோனவர்கள் உலகிற் பலராவர்.
Many kings have failed in the middle of their enterprise, for they have launched on it in their blind ignorant zeal (p) There are many who, ignorant of their (want of) power (to meet it) , have haughtily set out to war, and broken down in the midst of it.
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை |
வியந்தான் விரைந்து கெடும். 474-
மற்றவரோடு பொருந்தி நடக்காதவனாகித் தன் வலிமை அ வை அறியாதவனும் ஆகி, தன்னை வல்லவன் என்று வியந்து நடப்பவன் விரைவிற் கெடுவான்.
He who is ignorant of the might of his foe and who thinks too much of himself will come to grief (p) He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does not live in peace with his neighbours.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் |
சால மிகுத்துப் பெயின். 475-
மென்மையான மயிலிறகை ஏற்றியுள்ள வண்டியும், அம் மயிலிகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்க முரிந்து கெடும்.
The axle of a cart breaks even under the overload of a peacock’s feathers 106 (p) The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded.
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் |
உயிர்க்கிறுதி ஆகி விடும். 476-
மரத்தின் நுனிக்கொம்பு வரையும் ஏறி விட்டவர்கள், அதனையும் கடந்து மேலே செல்வதற்கு முயன்றால் அது அவர்கள் உயிருக்கே இறுதியாகி விடும்.
Over-vaulting ambition perishes (p) There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further.
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் |
போற்றி வழங்கு நெறி. 477-
தன்னிடமுள்ள பொருளின் அளவைத் தெரிந்து, அதற்குத் தகுந்த அளவே கொடுத்து உதவுக; அது பொருளைப் போற்றி வழங்குவதற்குரிய நெறியாகும்.
Let your charity be according to the measure of your wealth That is the way to preserve it (p) Let a man know the measure of his ability (to give) , and let him give accordingly; such giving is the way to preserve his property.
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை |
போகாறு அகலாக் கடை. 478-
வருமானம் வருகின்ற வழியானது சிறிதாக இருந்தாலும், அது செலவாகிப் போகும் வழியானது விரியாதிருந்தால், அவனுக்குக் கேடில்லை.
No harm comes of one’s small earnings Let not one’s expense out-run one’s income (p) Even though the income (of a king) be small, it will not cause his (ruin) , if his outgoings be not larger than his income.
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல |
இல்லாகித் தோன்றாக் கெடும். 479-
தன்னுடைய செல்வத்தின் அளவை அறிந்து அதற்கு ஏற்றபடி வாழாதவனுடைய வாழ்க்கை உள்ளதுபோலத் தோன்றினாலும் இல்லாததாய்க் கெடும்.
The seeming prosperity of the extravagant perishes (p) The prosperity of him who lives without knowing the measure (of his property) , will perish, even while it seems to continue.
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை |
வளவரை வல்லைக் கெடும். 480-
தன்னுடைய செல்வத்தின் அளவை ஆராயாது அளவு கடந்து உதவிவந்தால், அவன் செல்வத்தின் அளவும் விரைவில் கெட்டுப்போகும்.
The fortune of one, lavish of charity beyond measure, goes to rack and rain (p) The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property.
2.1.11 காலமறிதல் Knowing Proper Time [To Top]
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் |
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. 481-
தன்னைவிட வலிமையான கூகையைப் பகல் நேரத்தில் காக்கை போரிட்டு வென்றுவிடும்; அவ்வாறே பகைவரை வெல்லும் வேந்தர்க்கும் தகுந்த காலம் வேண்டும்.
During the day the crow conquers the owl So the monarch who wishes to defeat the enemy must choose the proper time (p) A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time.
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் |
தீராமை ஆர்க்குங் கயிறு. 482-
காலத்தோடு பொருந்த முயற்சிகளைச் செய்து வருதல், செல்வத்தைத் தம்மைவிட்டுப் போகாமல் பிணித்து வைக்கும் கயிறு ஆகும்.
Action at the appropriate hour is the rope that holds for ever the Goddess of Fortune to the King (p) Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king).
அருவினை யென்ப உளவோ கருவியான் |
காலம் அறிந்து செயின். 483-
ஏற்ற கருவிகளோடு, தகுதியான காலத்தையும் அறிந்து செயலைச் செய்தால், செய்வதற்கு அரிய செயல் என்பதும் உண்டோ?
Is there anything impossible if one acts at the right time and with the proper equipment? (p) Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time?
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் |
கருதி இடத்தாற் செயின். 484-
தகுதியான காலத்தை ஆராய்ந்து, ஏற்ற இடத்திலேயும் செய்தால், உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும்.
One can succeed in the attempt to conquer the world if the right time and the right place are chosen (p) Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place.
காலம் கருதி இருப்பர் கலங்காது |
ஞாலம் கருது பவர். 485-
உலகை வெற்றி கொள்ளக் கருதுகின்றவர்கள் அதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்து, அதுவரையும் மனந்தளராமல் காத்திருப்பார்கள்.
He who without any fear aims at the conquest of the world will await the season for it (p) They who thoughtfully consider and wait for the (right) time (for action) , may successfully meditate (the conquest of) the world.
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் |
தாக்கற்குப் பேருந் தகைத்து. 486-
ஊக்கம் உடையவன் ஒருவன் பகைவர்மேல் போருக்குச் செல்லாமல் ஒடுங்கியிருப்பது, போரிடும் ஆட்டுக்கடா பகையைத் தாக்குவதற்குப் பின்வாங்கும் தன்மையது.
The self-restraint of the mighty is like the drawing back of the fighting ram just before its attack (p) The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity) , is like the drawing back of a fighting-ram in order to butt.
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து |
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். 487-
அறிவுடையவர், பகைவர் கெடுதல் செய்த அந்தக்கணமே தன் சினத்தை வெளியே காட்டார்கள், தகுந்த காலத்தை எதிர்பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வார்கள்.
The wise will not fly into a passion when assailed; they allow their anger to smoulder within till the right time comes (p) The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within.
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை |
காணின் கிழக்காம் தலை. 488-
தமக்குச் சாதகமான காலம் வரும் வரையிலும் பகைவரைக் கண்டால் பணிந்துபோக, அவர்கட்கு முடிவுகாலம் வரும்போது அவர்கள் தலை கீழே விழும்.
Bow before the enemy till the time of his destruction When the hour comes, strike him down (p) If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low.
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே |
செய்தற் கரிய செயல். 489-
கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்தபோது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றிபெற வேண்டும்.
Do not let slip a golden opportunity; when the hour dawns, attempt the impossible (p) If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity).
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் |
குத்தொக்க சீர்த்த இடத்து. 490-
காலத்தை எதிர்பார்க்க வேண்டிய பருவத்தில், கொக்கைப் போல் இருந்து ; காலம் வாய்த்தபோதில் கொக்கு மீனைக் குத்தினாற்போலத் தவறாமல் செய்துமுடிக்கவேண்டும்.
When the time is not ripe, be still as a heron But at the ripe hour, attack the enemy without missing your aim (p) At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity.
2.1.12 இடனறிதல் Evaluating The Place [To Top]
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் |
இடங்கண்ட பின்அல் லது. 491-
பகைவரை முற்றுவதற்குத் தகுதியான இடத்தைக் கண்டபின் அல்லாமல், எந்தச் செயலையும் செய்யவேண்டாம்; அவர் வலிமையை இகழாமலும் இருக்கவேண்டாம்.
Scorn not the foe; embark not on any action till you secure a coign of vantage to overwhelm him (p) Let not (a king) despise (an enemy) , nor undertake any thing (against him) , until he has obtained (a suitable) place for besieging him.
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் |
ஆக்கம் பலவுந் தரும். 492-
மாறுகொள்ள வல்லவரான வலிமையாளருக்கும், அரணைச் சேர்ந்திருத்தலினால் உண்டாகும் வெற்றியானது பலவகைப் பயன்களையும் தரும்.
Even to men of great valour and power, manifold are the advantages yielded by a fortress (p) Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages.
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து |
போற்றார்கண் போற்றிச் செயின். 493-
தகுந்த இடத்தை அறிந்து கொண்டு, பகைவர்களோடு போராடுதலைச் சிறப்பாகச் செய்தால், அவர்க்கு எதிர்நிற்க ஆற்றாதவரும், போரிட்டு அவரை அழிப்பர்.
Even the weak are able to win if they choose the right place to assail the foe (p) Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action) , and guard themselves, while they make war on their enemies.
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து |
துன்னியார் துன்னிச் செயின். 494-
தகுதியான இடத்தை ஆராய்ந்து பற்றிக் கொண்டவர்கள், போரையும் நெருக்கிச் செய்தாரானால்,அவரை வெல்ல எண்ணியவர், தம் எண்ணம் இழப்பார்கள்.
If a king stations himself at a right place the conquering foe loses all hope (p) If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy) , the latter, will have to relinquish the thought which they once entertained, of conquering them.
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் |
நீங்கின் அதனைப் பிற. 495-
ஆழமான நீரினுள் மற்றைய உயிர்களை முதலை வெற்றி கொள்ளும்; நீரைவிட்டு வெளியே வந்தால், முதலையை மற்றைய விலங்குகள் கொன்றுவிடும்.
The crocodile in waters deep overpowers all; once it leaves the waters, he falls an easy prey to its foes (p) In deep water, a crocodile will conquer (all other animals) ; but if it leave the water, other animals will conquer it.
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் |
நாவாயும் ஓடா நிலத்து. 496-
நிலத்திலே ஓடுவதற்குரிய வலிய சக்கரங்களைக் கொண்ட தேர்கள் கடலில் ஓடா; கடலில் ஓடும் கப்பல்களும் நிலத்தில் ஓடமாட்டா.
The strong wheeled lofty chariot cannot cross the seas, nor can ocean sailing ships move on land (p) Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth.
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை |
எண்ணி இடத்தால் செயின். 497-
செய்யவேண்டியவைகளை எல்லாம் நன்றாக ஆராய்ந்து, தகுதியான இடத்திலும் செய்வாரானால், அவருக்கு மனவுறுதியைத் தவிரத் துணை எதுவும் வேண்டாம்.
If one selects a suitable place by one’s discretion, no other help is needed (p) You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do) , and select (a suitable) place for your operations.
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் |
ஊக்கம் அழிந்து விடும். 498-
சிறு படையினை உடையவனும், தன் வலிமையைச் செலுத்தக்கூடிய இடத்தில் சேர்ந்திருந்தால், பெரும்படை உடையவனும் தன் முயற்சியில் தோல்வி காண்பான்.
Ruined will be the strength of one who takes a large army to a place where the enemy of small forces is entrenched (p) The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act.
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் |
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. 499-
கடக்க முடியாத அரணும், பிற சிறப்புக்களும் இல்லாத வரானாலும், அவர்கள் வாழும் நாட்டினுள் சென்று தாக்கி அவரை வெற்றி பெறுதல் அரிதாகும்.
A people may not have either strength or strongholds; still it is difficult to fight with them on their own soil (p) It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress.
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா |
வேலாள் முகத்த களிறு. 500-
போர்க்களத்தில் வேலேந்திய வீரரையும் கோத்து எடுத்த கொம்புடைய அஞ்சாத களிற்றையும், அதன் கால் ஆழ்கின்ற சேற்று நிலத்தில், சிறுநரிகள் கொன்டுவிடும்.
A mad elephant that kills the bold spearman is killed even by a jackal when it gets stuck up in the mire (p) A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down.
2.1.13 தெரிந்துதெளிதல் Evaluating people for Selection [To Top]
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் |
திறந்தெரிந்து தேறப் படும். 501-
அறம், பொருள், இன்பம், தன் உயிருக்கு அச்சம் என்னும் நான்கினது வகையாலும் ஆராய்ந்தே, ஒருவன்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.
One should be chosen after patting one to a fourfold test of righteousness, wealth, inclination and fear of life and death (p) Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and tear of (losing) life.
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் |
நாணுடையான் சுட்டே தெளிவு. 502-
நல்ல குடியிலே பிறந்து, குற்றங்கள் இல்லாதவனாய், பழிச்சொல் வரக்கூடாதென்று அஞ்சும் மானமுள்ளவனிடத்திலேயே நம்பிக்கை வைக்க வேண்டும்.
One of good family, free of faults, and possessed of a wholesome fear of sin, should be chosen (p) (The king's) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin).
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் |
இன்மை அரிதே வெளிறு. 503-
அருமையான நூல்களைக் கற்று, குற்றங்கள் எதுவும் இல்லா தவரிடத்திலும், ஆராய்ந்தால் அறியாமை இல்லாமல் இருப்பது என்பது அருமையாகும்.
One may be an unblemished man and of vast learning; but it is rare to find one free from ignorance (p) When even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் |
மிகைநாடி மிக்க கொளல். 504-
ஒருவனது குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து, அவை இரண்டினுள் மிகுதியானவற்றைத் தெரிந்து, அதற்குத் தகுந்தபடியே அவனைக் கொள்ள வேண்டும்.
Examine the good and bad in a person and judge his character according to what predominates in his composition (p) Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் |
கருமமே கட்டளைக் கல். 505-
ஒருவர் தாம் அடையும் பெருமைக்கும், மற்றொருவர் தாம் அடையும் சிறுமைக்கும், அவரவர்களின் செயல்களே தகுந்த உரைகல் ஆகும்.
One’s own deed is the touchstone of one’s greatness and littleness (p) A man's deeds are the touchstone of his greatness and littleness.
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் |
பற்றிலர் நாணார் பழி. 506-
உலகப்பற்று இல்லாதவரை நம்ப வேண்டாம்; அவர் பற்றில்லாதவர்; அதனால் பிறர் கூறும் பழிச்சொல்லுக்கு வெட்கப்பட மாட்டார்கள்.
Choose not persons who have no kith and kin, and who possesses no social instincts, they will be callous of heart and dread no crime (p) Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and thereforehave no fear of crime.
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் |
பேதைமை எல்லாந் தரும். 507-
அறிய வேண்டியவைகளை அறியாத ஒருவரைத் துணையாக, அன்புடைமை காரணமாகத் தேர்ந்து கொண்டால் எல்லாவகையான அறியாமையையும் அது தரும்.
It is the height of folly to choose the ignorant blinded by affection (p) To choose ignorant men, through partiality, is the height of folly.
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை |
தீரா இடும்பை தரும். 508-
தெளிவாக ஆராயாமல் ஒருவனைத் துணையாக நம்பியவனுக்கு, அவனுக்குமட்டுமின்றி அவன் வழிமுறையில் வருபவர்களுக்கும் தீராத துன்பம் உண்டாகும்.
To choose a stranger without knowing his traits results in one’s grief (p) Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known.
தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின் |
தேறுக தேறும் பொருள். 509-
ஆராயாமல் யாரையுமே நம்புதல் வேண்டாம்; ஆராய்ந்து நம்பியதன் பின்னால், அவர் சொல்லும் பொருள்களை நல்லவையாகவே நம்புதல் வேண்டும்.
Let men be chosen with deliberate care; when once the choice is made, let no suspicions crump into your soul (p) Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் |
தீரா இடும்பை தரும். 510-
ஒருவனைப் பற்றி ஆராயாமல் நம்புவதும், அப்படி ஆராய்ந்து நம்பியவனிடத்திலே சந்தேகம் கொள்ளுவதும் தீராத துன்பத்தையே தரும்.
To choose men with no forethought and to suspect them will land you in endless woes (p) To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow.
2.1.14 தெரிந்துவினையாடல் Evaluating and Deployment [To Top]
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த |
தன்மையான் ஆளப் படும். 511-
ஒரு செயலால் வருகின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து, நல்லதைச் செய்யும் தன்மையுடையவனையே அந்தச் செயலுக்குப் பயன்படுத்த வேண்டும்.
After examining the good and the bad, cling to the good (p) He should be employed (by a king) , whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking.
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை |
ஆராய்வான் செய்க வினை. 512-
செல்வம் வருவதற்குரிய வழிகளைப் பெருகச்செய்து, அதனால் தன்னை வளமைப்படுத்திக் கொண்டு, மேலும் தகுந்தவற்றை ஆராய்பவனே செயலைச் செய்வானாக.
He who taps all productive sources and guards against losses is the true servant (p) Let him do (the king's) work who can enlarge the sources (of revenue) , increase wealth and considerately prevent the accidents (which would destroy it).
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் |
நன்குடையான் கட்டே தெளிவு. 513-
அன்பு, அறிவு, தெளிவு, பேராசை இல்லாமை என்னும் இந் நான்கு குணங்களும் நன்றாகக் கொண்டவனையே செயலுக்கு உரியவனாகத் தெளிய வேண்டும்.
Choose men, who are endowed with love, wisdom, clever vision and freedom from covetousness (p) Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness.
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் |
வேறாகும் மாந்தர் பலர். 514-
எல்லாவகையிலும் ஆராய்ந்து தெளிந்த போதும், செய்யும் செயலின் வகையினாலே பொருத்தமற்று வேறுபடும் மாந்தர்கள் உலகில் பலர் ஆவர்.
Position corrupts even the men of our own deliberate choice (p) Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed).
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் |
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. 515-
செய்யும் செயலைப் பற்றி நன்றாக அறிந்து, இடையில் வரும் துன்பங்களைத் தாங்கிச் செய்பவனை அல்லாமல், இவன் சிறந்தவன் என்று யாருக்கும் வேலை தரக்கூடாது.
Let worth prevail Let not blind affection dictate the choice of men (p) (A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment.
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு |
எய்த உணர்ந்து செயல். 516-
செய்பவனைப்பற்றி நன்கு ஆராய்ந்து, செய்யும் செயலையும் ஆராய்ந்து, செய்யத் தகுந்த காலத்தோடு பொருந்தவே செயலைச் செய்ய வேண்டும்.
The thing to be done, the proper person for it and the appropriate time for doing it, must all be duly weighed (p) Let (a king) act, after having considered the agent (whom he is to employ) , the deed (he desires to do) , and the time which is suitable to it.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து |
அதனை அவன்கண் விடல். 517-
இந்தச் செயலை, இன்ன காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அந்தச் செயலை அவனிடமே செய்யுமாறு விட்டு விடுதல் வேண்டும்.
Let the king be first convinced of the competency of a person; then he shall allow him to move freely in the sphere of his appointed task (p) After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty.
வினைக் குரிமை நாடிய பின்றை அவனை |
அதற்குரிய னாகச் செயல். 518-
இந்த வேலைக்குத் தகுந்தவன் இவன் என்று ஆராய்ந்து கண்ட பின்னால், அவனையே அந்த வேலைக்கு உரியவனாகச் செய்ய வேண்டும்.
Choose men of approved merit and then make them worthy of the station (p) Having considered what work a man is fit for, let (the king) employ him in that work.
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக |
நினைப்பானை நீங்கும் திரு. 519-
எப்போதும் தன் தொழிலிலே முயற்சி உடையவனது நட்பினைப் பாராட்டாமல், வேறாக நினைப்பவனை விட்டுச் செல்வம் தானும் நீங்கிவிடும்.
Prosperity deserts one who suspects the motives of a servant ever loyal to his work (p) Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.
நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான் |
கோடாமை கோடா துலகு. 520-
தொழிலைச் செய்பவன் தன்கடமையைக் கோணாமல் செய்வானானால் உலகமும் கோணாது; ஆதலால் மன்னன் நாள் தோறும் அத்தகையவனையே செயலில் வைப்பானாக.
Let them not swerve from the right path; for on them rests the just conduct of the world (p) Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.
2.1.15 சுற்றந்தழால் Cherishing Kindred (connected) [To Top]
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் |
சுற்றத்தார் கண்ணே உள. 521-
ஒருவன் வறுமையாளன் ஆகிய போதும் பழையபடியே அவனிடம் அன்பு பாராட்டுதல் என்பது சுற்றத்தார் இடம் மட்டுமே காணப்படும் தனி இயல்பாகும்.
It is one’s own kith and kin that cherish their old attachments to men out of suit with fortune (p) Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness).
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா |
ஆக்கம் பலவும் தரும். 522-
அன்பில் நீங்காத சுற்றத்தார் அமைந்தனரானால், அது, குறைவில்லாமல் வளருகின்ற பல செல்வ நலங்களையும் ஒருவனுக்குக் கொடுப்பதாகும்.
One’s unceasing kinship is the source of all one’s fortune (p) If (a man's) relatives remain attached to him with unchanging love, it will be a source of ever-increasing wealth.
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் |
கோடின்றி நீர்நிறைந் தற்று. 523-
சுற்றத்தாரோடு மனங்கலந்து பழகாத ஒருவனுடை ய வாழ்வானது, கரையில்லாத குளப்பரப்பிலே நீர் நிரம்பினாற் போலப் பயனற்றதாகும்.
The life of one with no kin will be like overflowing waters of a tank with no bund (p) The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank that has no banks.
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் |
பெற்றத்தால் பெற்ற பயன். 524-
சுற்றத்தாரால் தான் சூழ்ந்திருக்கும்படியாக வாழ்தலே, ஒருவன் செல்வத்தைப் பெற்றதனாலே அடைந்த பயனாக இருக்க வேண்டும்.
The value of one’s wealth consists in a life surrounded by one’s kinsmen (p) To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealth.
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய |
சுற்றத்தால் சுற்றப் படும். 525-
சுற்றத்தார்க்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலும், அவரோடு இனிதாகப் பேசுதலும் செய்வானாயின்,அவன் சுற்றத்தார் பலராலும் சூழப்படுவான்.
One delights in the company of one generous of heart and suave of speech (p) He will be surrounded by numerous relatives who manifests generosity and affability.
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் |
மருங்குடையார் மாநிலத்து இல். 526-
மிகுதியாகக் கொடுக்கும் இயல்புள்ளவனாயும், சினத்தை விரும்பாதவனாயும் ஒருவன் இருந்தால், அவனைப் போல் சுற்றம் உடையவர் உலகில் யாரும் இல்லை.
Nothing excels on earth the love of one large of heart and free of wrath, but shares it with the rest (p) No one, in all the world, will have so many relatives (about him) , as he who makes large gift, and does not give way to anger.
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் |
அன்னநீ ரார்க்கே உள. 527-
காக்கை உணவைக் கண்டதும் மறைக்காமல் தன் இனத்தைக் கூவி உடனிருந்தே உண்ணும். அத்தகைய இயல்பினருக்கே சுற்றப் பெருக்கமும் உண்டாகும்.
Fortune smiles on one of like disposition (p) The crows do not conceal (their prey) , but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives).
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் |
அதுநோக்கி வாழ்வார் பலர். 528-
எல்லாரையும் ஒரே தன்மையாகப் பொதுப்பட நோக்காது, அவரவர் தகுதிக்கேற்ப நோக்கிப் செய்வன செய்தால், அச்சிறப்பைக் கருதிச் சுற்றத்தார் சூழ்வர்.
The king must not be indifferent to one’s deserts but reward people according to their merit (p) Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit.
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் |
காரணம் இன்றி வரும். 529-
சுற்றத்தாராக இருந்து தன்னைப் பிரிந்தவர்கள், பிரிவதற்கு ஏற்பட்ட காரணத்தை நீக்கிவிட்டால், மீண்டும் அவர்களே வந்து சேர்ந்திருப்பார்கள்.
Reject none on the score of disagreement Men who have become estranged will flock to you (p) Those who have been friends and have afterwards forsaken him, will return and join themselves (to him) , when the cause of disagreement is not to be found in him.
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் |
இழைத் திருந்து எண்ணிக் கொளல். 530-
காரணம் இல்லாமல் தன்னிடமிருந்து பிரிந்து, பின்ஒரு காரணத்தால் தன்பால் வந்த உறவினனை, அரசன் அதனைச்| செய்து அவனைத் தழுவிக் கொள்ளவேண்டும்.
Let the king embrace his estranged kith and kin by redressing their grievances (p) When one may have left him, and for some cause has returned to him, let the king fulfil the object (for which he has come back) and thoughtfully receive him again.
2.1.16 பொச்சாவாமை Unforgetfulness [To Top]
இறந்த வெகுளியின் தீதே சிறந்த |
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. 531-
சிறப்பான உவகையாலே மகிழ்ச்சியடைந்து, அதனால் கொள்ளும் மதியானது, அளவு கடந்து கொள்ளும் சினத்தைக் காட்டிலும் தீமை தருவதாகும்.
Forgetfulness which cometh of mad joy is more dangerous than wild wrath (p) More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை |
நிச்ச நிரப்புக் கொன் றாங்கு. 532-
நாளுக்குநாள் பெருகும் வறுமைத் துயரமானது ஒருவனது அறிவைக் கெடுத்தலைப்போல, மறதியானது, ஒருவனது புகழையும் தவறாமல் கெடுத்து விடும்.
Poverty freezes knowledge Forgetfulness blights one’s reputation (p) Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge.
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து |
எப்பால்நூ லோர்க்கும் துணிவு. 533-
மறதி உடையவர்களுக்கு புகழ் உடைமை என்பது இல்லை. அது உலகத்திலுள்ள எத்தகைய நூலோர்க்கும் ஒத்ததாக விளங்கும் ஒரு முடிவு ஆகும்.
Fame is not for the thoughtless, so say the scriptures of the world (p) Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை |
பொச்சாப் புடையார்க்கு நன்கு. 534-
அச்சம் உடையவர்களுக்கு அரண்காவல் இருந்தும் பயனில்லை, அவ்வாறே மறதி உடையவர்களுக்கு நல்ல செல்வநலம் இருந்தாலும் அதனால் பயன் இல்லை.
Of what avail is a citadel to a crown, what good availeth the thoughtless (p) Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded) , so the thoughtless has no good (whatever advantages he may possess).
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை |
பின்னூறு இரங்கி விடும். 535-
துன்பம் வருவதற்கு முன்னாகவே தன்னைக் காத்துக் கொள்ளாமல் மறதியாக இருந்தவன், பின்னர்த் துன்பம் வந்த போது, தன்பிழையை நினைத்து வருந்துவான்.
Who is not on his guard against impending evil, rues his folly? (p) The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை |
வாயின் அதுவொப்பது இல். 536-
மறதியில்லாத இயல்பு எவரிடத்தும் எக்காலத்தும் குறையாமல் இருந்தால், அதற்கு ஒப்பாக நன்மை தருவது வேறு எதுவும் இல்லை.
There is no greater good than to be ever on the vigil (p) There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons.
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் |
கருவியால் போற்றிச் செயின். 537-
மறவாமை என்னும் கருவியினாலே எதனையும் பேணிச் செய்தால், செய்வதற்கு அரியன் என்று நினைத்துக் கைவிடும் செயல்களும் இல்லையாகும்.
Nothing is impossible for the thoughtful (p) There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour.
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது |
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். 538-
சான்றோர்கள் சிறந்தவையாகப் போற்றும் கடமைகளைப் போற்றிச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் மறந்தவருக்கு எழுமையும் நன்மை இல்லை.
No good awaits him in birth to come who fails of his noble deeds (p) Let (a man) observe and do these things which have been praised (by the wise) ; if he neglects and fails to perform them, for him there will be no (happiness) throughout the seven births.
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் |
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. 539-
தாம்,தம்முடைய மகிழ்ச்சியினாலே செருக்கடையும்போது முன்னர் அப்படிப்பட்ட மகிழ்ச்சியினாலே மறதியடைந்து கெட்டழிந்தவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.
When drunk with delight, remember those who have perished through wilful neglect (p) Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy.
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் |
உள்ளியது உள்ளப் பெறின். 540-
தான் அடையக் கருதியதை இடைவிடாமல் மறதியின்றி நினைக்கக் கூடுமானால், ஒருவன், தான் நினைத்ததை அடைதல் என்பது எளிதாயிருக்கும்.
No task is difficult to the thoughtful and diligent (p) It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it.
2.1.17 செங்கோன்மை Good Governance [To Top]
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் |
தேர்ந்துசெய் வஃதே முறை. 541-
நடுநிலைமை தவறாமல், யாரிடத்தும் இரக்கம் காட்டாமல், குற்றத்தின் கடுமையை ஆராய்ந்து, அதற்குத் தகுந்த தண்டனை விதிப்பதே அரசனுக்கு முறையாகும்.
Strict enquiry and impartial justice mark the rule of a just monarch (p) To examine into (the crimes which may be committed) , to show no favour (to any one) , to desire to act with impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely resolved on, constitute rectitude.
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் |
கோல் நோக்கி வாழுங் குட. 542-
மழையின் செம்மையை எதிர்பார்த்து உலகத்து உயிர்கள் எல்லாம் வாழும்; மன்னவனின் செங்கோன்மையை எதிர் பார்த்துக் குடிகள் வாழ்வார்கள்.
The world looks to rain for its existence The subjects look to the sceptre for their existence (p) When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் |
நின்றது மன்னவன் கோல். 543-
அந்தணரது நூல்களுக்கும், உலகில் அறம் நிலைப்பதற்கும் அடிப்படையாக நின்றது, மன்னவனது அறம் தவறாத செங்கோன்மையே ஆகும்.
The king’s sceptre is the standing proof of Brahminical books and their teachings (p) The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் |
அடிதழீஇ நிற்கும் உலகு. 544-
குடிகளை அணைத்துக்கொண்டு செங்கோல் செலுத்தும் மாநிலத்து வேந்தனின் அடிகளைத் தழுவி, இவ்வுலகத்து, வாழ்வும் நிலைபெறுவதாகும்.
The world falls at the feet of a great King who wields the sceptre for his subjects’ welfare (p) The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love.
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட |
பெயலும் விளையுளும் தொக்கு. 545-
அரசனுக்குரிய இயல்போடு செங்கோல் செலுத்தும் மன்னவனின் நாட்டிலே, பருவமழையும், விளைபொருள்களும் ஒருங்கே மலிந்திருக்கும்.
Both seasonal rains and waving corn are seen in the land of a righteous monarch (p) Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.
வேலன்று வென்றி தருவது மன்னவன் |
கோலதூஉங் கோடா தெனின். 546-
மன்னவனுக்கு வெற்றியளிப்பது அவன் கையிலுள்ள வேல் அல்ல; அவன் செங்கோன்மை கோணாமல் இருந்ததானால் அதுவே வெற்றி அளிப்பதாகும்.
Victory is won not by the spear but by the unswerving sceptre of a monarch (p) It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice.
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை |
முறைகாக்கும் முட்டாச் செயின். 547-
உலகத்தாரை எல்லாம் மன்னவன் காப்பாற்றி வருவான்; முறை தவறாமல் அவன் செங்கோல் செலுத்தி வந்தால், அது அவனைக் காப்பாற்றி நிற்கும்.
The king protects the whole world and justice protects him if unfailingly admonished (p) The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் |
தண்பதத்தான் தானே கெடும். 548-
முறையிட வருபவரது காட்சிக்கு எளியவனாய் அவர்கள் குறைகளைக்கேட்டு ஆராய்ந்து முறை செய்யாத மன்னவன், தாழ்ந்த நிலையிலே சென்று தானே கெடுவான்.
The king who does not administer impartial justice goes to ruin (p) The king who gives not facile audience (to those who approach him) , and who does not examine and pass judgment (on their complaints) , will perish in disgrace.
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் |
வடுவன்று வேந்தன் தொழில். 549-
குடிகளைப் பகைவரிடமிருந்து காத்தும், அவர்களுக்கு நன்மை செய்து பேணியும், குற்றங்களை நீக்கியும் முறை செய்தால் வேந்தனுக்குக் குற்றம் இல்லை; அதுவே அவன் தொழில்.
To punish crime is the duty, not the fault of the king who attends to the welfare of his subjects (p) In guarding his subjects (against injury from others) , and in preserving them himself; to punish crime is not a fault in a king, but a duty.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் |
களைகட் டதனொடு நேர். 550-
கொடிய செய்வாரைக் கொலைத்தண்டனையால் தண்டித்தும் மற்றவர்களை அருளோடு காத்தும் முறைசெய்தல், பசும் பயிரில் களையெடுப்பது போன்ற சிறந்த செயலாகும்.
Punishing murderers with death is like plucking out weeds among the crops 121 (p) For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.
2.1.18 கொடுங்கோன்மை Misrule or Cruelty [To Top]
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு |
அல்லவை செய்தொழுகும் வேந்து. 551-
குடிகளை வருந்தச்செய்யும் செயல்களையே மேற்கொண்டு தீமை செய்து ஆட்சி நடத்துகிற வேந்தன், கொலையையே தொழிலாகக் கொண்டவரிலும் கொடியவனாவான்.
The unrighteous king who oppresses his subjects is more cruel than the one who leads the life of a murderer (p) The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் |
கோலொடு நின்றான் இரவு. 552-
அரசன் குடிகளிடம் முறை கடந்து பொருளைக் கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன், 'எல்லாவற்றையும் தந்துவிடு என்று கேட்பதைப் போன்றதாகும்.
The wielder of the sceptre asking for gifts, is like the spearman asking the wayfarer ‘give ’ (p) The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth".
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் |
நாடொறும் நாடு கெடும். 553-
நாட்டிலே நாள் தோறும் ஏற்படும் நிலைமையை ஆராய்ந்து தகுந்தபடி முறை செய்யாத மன்னவன், நாளுக்கு நாள் தன் நாட்டையும் கெடுத்து விடுவான்.
That country will perish any day whose monarch does not administer justice day by day (p) The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin.
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் |
சூழாது செய்யும் அரசு. 554-
மேல் நடப்பதைப்பற்றி கருதாமல், முறை தவறி அரசாளுகின்ற மன்னவன், தன் பொருள் வளத்தையும், நாட்டு மக்களது அன்பையும், ஒருங்கே இழந்து விடுவான்.
That king who allows his sceptre to bend indiscriminately will lose his wealth together with his subjects (p) The king, who, without reflecting (on its evil consequences) , perverts justice, will lose at once both his wealth and his subjects.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே |
செல்வத்தைத் தேய்க்கும் படை 555-
கொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள், அதைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரே,ஓர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படை ஆகும்.
Are not the tears, shed as a result of oppression, the weapons which destroy the prosperity of the monarch? (p) Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king) , become a saw to waste away his wealth?
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் |
மன்னாவாம் மன்னர்க் கொளி. 556-
செங்கோன்மையால் தான் மன்னர்க்குப் புகழ் நிலைக்கிறது; அந்தச் செங்கோன்மை இல்லை என்றால், பிறவற்றால் வரும் புகழ் எல்லாம் நிலை பெறாது.
Good Government makes one’s rule enduring Where it is not found, his lustre will not last long? (p) Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance.
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் |
அளியின்மை வாழும் உயிர்க்கு. 557-
மழையில்லாத நிலைமை உலகத்துக்கு எத்தகைய துன்பம் தருமோ, அவ்வாறே அரசனின் அருளில்லாத தன்மை, அவன் நாட்டில் வாழ்பவருக்குத் துன்பம் தரும்.
The people who live under a graceless king suffer like the earth unvisited by drops of rain (p) As is the world without rain, so live a people whose king is without kindness.
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா |
மன்னவன் கோற்கீழ்ப் படின். 558-
முறைப்படி ஆட்சி செய்யாத மன்னவனின் கொடுங்கோலின்கீழ் வாழ்ந்திருந்தால், ஏழ்மையைக் காட்டிலும், செல்வம் உடைமையே துன்பம் தரும்.
Where people possess a king, who does not enforce justice, wealth does not confer more happiness than poverty (p) Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice.
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி |
ஒல்லாது வானம் பெயல். 559-
ஆட்சிமுறை கோணி மன்னவன் ஆட்சி செய்தால், பருவ மழையானது தவறிப்போக, மேகமும் வேண்டுங் காலத்து மழை பொழியாது ஒதுங்கிப் போகும்.
Were the king to rule unjustly, the Heavens would withhold rains? (p) If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் |
காவலன் காவான் எனின். 560-
காவலன் முறையோடு நாட்டைக் காத்து வராவிட்டால், அந்நாட்டிலே பசுக்களும் பால் வளம் குன்றும்; அறு தொழிலோரும் மறை நூல்களை மறப்பார்கள்.
If the protecting monarch fails in his duties, the *six-functioned forget their lore, Cows give less. * the six functions are: learning, teaching, giving, getting, sacrificing, kindling sacrifice These are duties of Vedic savants. (p) If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.
2.1.19 வெருவந்தசெய்யாமை Avoiding tyranny [To Top]
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் |
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. 561-
ஒருவனுடைய குற்றத்தைத் தகுந்த வழிகளாலே ஆராய்ந்து, மீளவும் அதைச் செய்யாதபடி குற்றத்திற்குத் தகுந்தபடி தண்டிப்பதே வேந்தன் கடமையாகும்.
A righteous king investigates and fittingly punishes the wrongdoer so that he may not repeat it (p) He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice) , suitably punishes it, so that it may not be again committed.
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் |
நீங்காமை வேண்டு பவர். 562-
நெடுங்காலம் ஆக்கம் நீங்காமல் இருத்தலை விரும்புகிறவர்கள், குற்றஞ் செய்தவரைத் தண்டிக்கும் போது, கடுமையைக் காட்டினாலும் அளவோடு தண்டிப்பாராக.
If you wish enduring prosperity behave as if you punish excessively, but do it mildly (p) Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires wi th strictness, and then punish with mildness.
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் |
ஒருவந்தம் ஒல்லைக் கெடும். 563-
குடிகள் அச்சம் அடையும் செயல்களைச் செய்கின்ற கொடுங்கோல் அரசன், மிகவும் விரைவாகவே கெட்டுப்போய் அழிவை அடைவான்.
The tyrant who terrifies his subjects will soon perish (p) The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin.
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் |
உறைகடுகி ஒல்லைக் கெடும். 564-
எம் அரசன் கடுமையானவன்' என்று மக்கள் சொல்லும் பழிச்சொல்லுக்கு ஆளாகிய வேந்தன், தன் ஆயுளும் விரைவில் கெட்டுப்போக, அழிவை அடைவான்.
That king whom people speak of as a tyrant will rapidly perish (p) The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened.
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் |
பேஎய்கண் டன்னது உடைத்து. 565-
எளிதாகக் காணமுடியாத தன்மையும், கடுமையான முகங்காட்டும் இயல்பும் உள்ளவனின் பெருஞ்செல்வம், பேயால் கவனித்துக் காக்கும் புதையல் போன்றதாகும்.
The great wealth of a king who is inaccessible and assumes a fearful look, is no better than in the possession of a demon (p) The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் |
நீடின்றி ஆங்கே கெடும். 566-
கடுமையான பேச்சும், இரக்கமற்ற தன்மையும் உடையவனானால், அவ்வரசனது பெருஞ்செல்வமும் நீடித்திருக்காமல் தேய்ந்து அப்போதே கெடும்.
The abundant wealth of a king who utters harsh words and puts on unkind looks will not last long (p) The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him.
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் |
அடுமுரண் தேய்க்கும் அரம். 567-
கடுமையான சொல்லும், முறை கடந்த தண்டனையும் அவ்வரசனுடைய பகைவரை வெல்லும் வலிமையைத் தேய்த்து அழிக்கும் அரமாகும்.
Severity in speech and excess in punishment are like the file which removes his capacity to destroy (his enemies) (p) Severe words and excessive punishments will be a file to waste away a king's power for destroying his enemies
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் |
சீறிற் சிறுகும் திரு. 568-
அமைச்சர் முதலானவரோடு கலந்து ஆராய்ந்து செய்யாமல், தன் சினத்தின் வழியிலேயே சென்று பிறரைச் சீறுவானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.
The prosperity of a king who does not consult his advisers but makes them the victims of his fury will shrink (p) The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself) , commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them.
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் |
வெருவந்து வெய்து கெடும். 569-
போர் வருவதற்கு முன்பாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாத வேந்தன், அது வந்த காலத்தில், பாதுகாப்பு இல்லாமல் அஞ்சியவனாக, அழிந்து போவான்.
If a king who has no fortress meets a foe, he will be ruined by fear (p) The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது |
இல்லை நிலக்குப் பொறை. 570-
கொடுங்கோல் ஆட்சியானது மூடர்களயே தனக்குத் துணையாக்கிக் கொள்ளும்; அந்த ஆட்சி அல்லாமல் பூமிக்குப்பாரம் என்பது வேறு யாதும் இல்லை.
No burden is harder for the earth to bear than the cruel sceptre wielded by the unwise (p) The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds).
2.1.20 கண்ணோட்டம் Benign Looks, Compassion [To Top]
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை |
உண்மையான் உண்டிவ் வுலகு. 571-
'கண்ணோட்டம்' என்று சொல்லப்படுகின்ற மிகப் பெரிய அழகு இருப்பதனாலேதான், இவ்வுலகமும் அழிவு அடையாமல் நிலைப் பெற்றிருக்கிறது.
The world exists because of the existence of the most beautiful virtue called kindliness (p) The world exists through that greatest ornament (of princes) , a gracious demeanour.
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் |
உண்மை நிலக்குப் பொறை. 572-
உலக நடைமுறை என்பது கண்ணோட்டத்தினால் நடந்து வருவதே; ஆகவே, கண்ணோட்டம் இல்லாதவர்கள் இருப்பது உலகத்திற்கு வீண் சுமைதான்.
The world lives through kindliness; those who do not have it are a burden to the earth (p) The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth.
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் |
கண்ணோட்டம் இல்லாத கண். 573-
பொருளோடு பாடல் பொருந்த வில்லை என்றால் அந்த இசையினால் பயன் இல்லை; அதுபோலவே, கண்ணோட்டத் தோடு அமையாத கண்களாலும் பயன் இல்லை.
What is the use of a song that could not be enjoyed? Likewise, what is the use of the eyes that have no kindliness? (p) Of what avail is a song if it be inconsistent with harmony? what is the use of eyes which possess no kindliness.
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் |
கண்ணோட்டம் இல்லாத கண். 574-
தேவையான அளவுக்குக் கண்ணேட்டம் இல்லாத கண்ணானது, முகத்திலே இருப்பதுபோலத் தோன்றுவதைத் தவிர, உடையவனுக்கு என்ன நன்மையைத் தரும்?
What is the use of one’s eyes if they do not beam with immeasurable love? 126 (p) Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness?
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் |
புண்ணென்று உணரப் படும் 575-
கண்ணுக்கு அழகுதரும் ஆபரணம் கண்ணோட்டமே! அந்தக் கண்ணோட்டமாகிய ஆபரணம் இல்லையானால், அது 'புண்' என்றே சான்றோரால் கருதப்படும்.
Kindliness is the fitting ornament for the eyes They are a sore, where it is absent (p) Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ |
டியைந்துகண் ணோடா தவர். 576-
கண்ணோடு பொருந்தியவராக இருந்தும், கண்ணோட்டம் ஆகிய செயலைச் செய்யாதவர்கள், மண்ணோடு பொருந்தியுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர்.
Those whose eyes do not reflect love resemble trees that stand on the earth (p) They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others).
கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் |
கண்ணோட்டம் இன்மையும் இல். 577-
கண்ணோட்டம் இல்லாதவர்கள், கண்கள் இருந்தாலும் குருடர்களே; கண்ணுடையவர்கள், கண்ணோட்டம் இல்லாமல் இருத்தல் என்பது பொருத்தமில்லை.
Verily they are blind who have no kindly look (p) Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks.
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு |
உரிமை உடைத்திவ் வுலகு. 578-
தொழிலிலே கெடுதல் ஏற்படாமல், எவரிடமும் கண்ணோட்டத் துடன் நடந்துகொள்ள வல்லவர்களுக்கு, இவ்வுலகமே உரிமை உடையதாகும்.
The world belongs to a king who can do his duty and yet be courteous (p) The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice).
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் |
பொறுத்தாற்றும் பண்பே தலை. 579-
தம்மை வருத்தும் தன்மை உடையவரிடத்திலும், கண்ணோட்டம் உடையவராக, அவரது குற்றத்தையும் பொறுத்து நடக்கும் பண்பேசிறந்ததாகும்.
It behoves a king to put up with the doer of harm and even be kind to him (p) Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions.
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க |
நாகரிகம் வேண்டு பவர். 580-
விரும்பத் தகுந்த 'கண்ணோட்டம்' என்னும் நாகரிகத்தை விரும்பும் சான்றோர்கள். பழகியவர் நஞ்சைப் பெய்வதைக் கண்டாலும், அதனை உண்டு அமைவார்கள்.
Those who wish to acquire loveable urbanity will knowingly swallow even the poison served (p) Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them.
2.1.21 ஒற்றாடல் Espionage [To Top]
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் |
தெற்றென்க மன்னவன் கண். 581-
ஒற்றர்களும், புகழ் அமைந்த அறநூலும் என்னும் இந்த இரண்டு பகுதியையுமே, ஒரு மன்னன் தனக்குரிய இரு கண்களாகக் கொள்ளல் வேண்டும்.
Verily the two eyes of a king are espionage and the celebrated code of laws (p) Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் |
வல்லறிதல் வேந்தன் தொழில். 582-
எல்லாருக்கும் நிகழ்கின்ற எல்லாவற்றையும், எல்லாக் காலத்திலும், மிகவும் விரைவாக ஒற்றர்மூலம் அறிந்து கொள்ளுதல், வேந்தனுக்கு உரிய தொழிலாகும்.
A king’s duty is to get day to day knowledge of everything that happens (p) It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men.
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் |
கொற்றங் கொளககிடந்தது இல். 583-
பகைநாட்டு நிகழ்ச்சிகளை ஒற்றர் மூலமாகத் தெரிந்து கொண்டு, அவற்றின் பொருளையும் ஆராய்ந்து தெளியாத மன்னன், போரில் வெற்றி கொள்வதற்கு வழியே இல்லை.
The sure way of achieving success for a king is to get correct information from spies (p) There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy.
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு |
அனைவரையும் ஆராய்வது ஒற்று. 584-
அரசன் செயல்களைச் செய்பவர்கள், அரசனுக்கு உரிய கற்றத்தினர், அரசனை விரும்பாத பகைவர், என்று சொல்லப் படும் அனைவரையும் ஆராய்வதே, ஒற்றரின் கடமை.
Espionage consists of watching all people, to wit, the king’s employees, his relations and his enemies (p) He is a spy who watches all men, to wit, those who are in the king's employment, his relatives, and his enemies.
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் |
உகாஅமை வல்லதே ஒற்று. 585-
சந்தேகப்படாத மாற்றுருவுடன், எவருடைய பார்வைக்கும் அஞ்சாமல், அறிந்ததைத் தன் அரசனைத் தவிரப் பிறருக்கு வெளிப்படுத்தாமலிருக்க வல்லவனே ஒற்றன்.
An able spy puts on undoubted disguise, does not fear when detected, and never reveals his purpose (p) A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others) , who fears no man's face, and who never reveals (his purpose).
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து |
என்செயினும் சோர்விலது ஒற்று. 586-
புகமுடியாத இடங்களுக்கும், துறவியர் வேடத்தோடு சென்று, அனைத்தையும் ஆராய்ந்து, எவர் யாது செய்தாலும் அதனால் சோர்வடையாதவனே ஒற்றன்.
A spy in the guise of an ascetic should gather information however difficult and should never be tired whatever be the troubles (p) He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes) , examines into (all, that is needful) , and never discovers himself, whatever may be done to him.
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை |
ஐயப்பாடு இல்லதே ஒற்று. 587-
மறைவான பேச்சுக்களையும் கேட்டு அறியக்கூடிய திறமை உள்ளவனாகி, தான் அறிந்தவற்றில் எவ்விதச் சந்தேகமும் இல்லாதவனே நல்ல ஒற்றன்.
A spy should secure knowledge of things secret and should have no doubt about his information (p) A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known.
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் |
ஒற்றினால் ஒற்றிக் கொளல். 588-
ஓர் ஒற்றன் அறிந்துவந்து சொன்ன செய்தியையும், மற்றுமோர் ஒற்றனை ஏவி அறிந்து வருமாறு செய்து, உண்மையை ஒப்பிட்டு அறிதல் வேண்டும்.
One must get confirmed the information supplied by one spy, by that of another (p) Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் |
சொற்றொக்க தேறப் படும். 589-
ஓர் ஒற்றன் மற்மோர் ஒற்றனை அறியாதபடி பார்த்துக் கொள்வதோடு, இப்படி மூன்று ஒற்றர் சொல்வதையும் ஒருங்கே ஆராய்ந்தே, உண்மை தெளியவேண்டும்.
Let the engagement of one spy be not known to another Accept the information supplied independently by three spies (p) Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive it.
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் |
புறப்படுத்தான் ஆகும் மறை. 590-
பிறர் அறியும்படியாக ஒற்றனுக்குச் சிறப்புக்களைச் செய்யக் கூடாது; செய்தால், மறைக்க வேண்டிய இரகசியத்தை அரசனே வெளிப்படுத்தினவன் ஆவான்.
Let not a king honour the spy publicly; for, by so doing he will be letting out his own secret (p) Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret.
2.1.22 ஊக்கமுடைமை Possessing Vigour [To Top]
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார் |
உடையது உடையரோ மற்று. 591-
ஊக்கம் உடைமையே 'உடையவர்' என்று சொல்லப்படும் சிறப்புக்கு உரியது ; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் உடையவர் அல்லர்.
One’s real possession is one’s exertion If one does not have it, can one be said to really possess anything else? (p) Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess?
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை |
நில்லாது நீங்கி விடும். 592-
ஊக்கம் உடைமையே ஒருவனது நிலையான செல்வம் ஆகும்; மற்றைய செல்வங்கள் எல்லாம் நிலைத்திருக்காமல் ஒரு காலத்தில் நீங்கியும் போய்விடும்.
Exertion alone is one’s wealth; inconstant material wealth will pass away (p) The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.
ஊக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் |
ஒருவந்தம் கைத்துடை யார். 593-
உறுதியான ஊக்கத்தையே தம்முடைய கைப்பொருளாகப் பெற்றவர்கள், தாம் செல்வம் இழந்தபோதும், இழந்தோமே என்று நினைத்து, வருந்த மாட்டார்கள்.
Those who possess constant exertion will not grieve over the loss of their wealth (p) They who are possessed of enduring energy will not trouble themselves, saying, "we have lost our property."
ஊக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா |
ஊக்க முடையா னுழை. 594-
தளராத ஊக்கம் உடையவர்களிடத்திலே, ஆக்கம், தானே அவரிருக்கும் இடத்திற்கு வழிகேட்டுக்கொண்டுபோய்ச் சென்று, அவரிடம் நிலையாகச் சேர்ந்திருக்கும்.
Prosperity will discover a route to a person of undaunted will (p) Wealth will find its own way to the man of unfailing energy.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் |
உள்ளத் தனையது உயர்வு. 595-
நீர்ப்பூக்களினது தண்டின் நீளமானது நீரின் ஆழத்தின் அளவினது ஆகும்; அதுபோலவே மக்களின் உயர்வும் அவர்களுடைய ஊக்கத்தின் அளவினதே ஆகும்.
The length of a watery plant is determined by the depth of the water Likewise the greatness of a person is proportionate to the strength of his will power (p) The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men's greatness proportionate to their minds.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது |
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. 596-
உயர்ந்த நிலைகளையே நினைவில் எல்லாரும் நினைத்து வரவேண்டும்; அந்த நிலை கைகூடாதபோதும், அப்படி நினைப்பதைமட்டும்கைவிடவே கூடாது.
In all acts and deeds, let exertion be one’s ideal Even if it were unattainable, its presence is enough (p) In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate) , it will have the nature of not being thrust from him.
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் |
பட்டுப்பா டூன்றுங் களிறு. 597-
தன்னுடம்பில் தைத்துள்ள அம்புகளாலே வேதனை அடைந்த போதும், களிறு, தன்பெருமையை நிலைநிறுத்தும்; அவ்வாறே ஊக்கமுள்ளவர் அழிவிலும் தளரமாட்டார்கள்.
The elephant stands undaunted despite piercing arrows; so too, a person of strong will, will not get discouraged even in a losing concern (p) The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து |
வள்ளியம் என்னுஞ் செருக்கு. 598-
யாம் வள்ளன்மை உடையோம் என்னும் இறுமாந்த நிலையை, ஊக்கம் இல்லாதவர்கள், இவ்வுலகத்தில் ஒருபோதும் அடையவே மாட்டார்கள்.
A man of no strong will, cannot win the esteem of the world for his action (p) Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, "we have excercised liaberality".
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை |
வெரூஉம் புலிதாக் குறின். 599-
பெருத்த உடலும் கூர்மையான கொம்புகளும் இருந்தாலும், யானையானது, மனவூக்கமுள்ள புலி தன்மீது பாய்ந்தால், தான் அச்சம் கொள்ளும்.
Even the huge elephant with sharp tusks dreads the attacking tiger (p) Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் |
மரம்மக்க ளாதலே வேறு. 600-
ஒருவனுக்கு உள்ள செல்வம் என்பது ஊக்கமே! அந்த ஊக்கம் ஆகிய செல்வம் இல்லாதவர், உருவத்தால் மக்கள் போலத் தோன்றினாலும், மரங்களைப் போன்றவரே!
One’s strength is one’s exertion Without it persons are only trees in the form of men (p) Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men.
2.1.23 மடியின்மை Freedom From Sloth [To Top]
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் |
மாசூர மாய்ந்து கெடும். 601-
ஒருவன் வந்து பிறந்த குடியென்னும் அணையா விளக்கானது, சோம்பல் என்னும் மாசு படரப்பட ஒளி மழுங்கி, முடிவில் அணைந்தும் போய்விடும்.
If sloth extends its darkness it will extinguish the lustrous lamp of one’s family (p) By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished.
மடியை மடியா ஒழுகல் குடியைக் |
குடியாக வேண்டு பவர். 602-
தாம் பிறந்த குடியை மேன்மேலும் உயர்ந்த குடியாக உயர்த்த விரும்புகிறவர்கள், சோம்பலை அறவே விலக்கி, முயற்சியாளராக விளங்க வேண்டும்.
Those who wish the esteem of their family should never encourage sloth (p) Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct.
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த |
குடிமடியும் தன்னினும் முந்து. 603-
விலக்கவேண்டிய சோம்பலைத் தன்னிடத்தே கொண்டிருக்கும் அறிவற்றவன், பிறந்த குடியின் பெருமையானது, அவன் அறிவதற்கு முன்பாகவே அழிந்துவிடும்.
The family of the fool who hugs sloth in his own lap fades away before him (p) The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead.
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து |
மாண்ட உஞற்றி லவர்க்கு. 604-
சோம்பலிலே ஆழ்ந்துவிட்டுச் சிறந்த முயற்சிகளிலே ஈடுபடாமல் இருப்பவருடைய குடிப்பெருமையும் கெட்டு, குற்றமும் நாளுக்குநாள் பெருகும்.
Faults will be many among those who are devoid of exertion and will result in the ruin of their families (p) Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் |
கெடுநீரார் காமக் கலன். 605-
சோம்பல், எதையும் தாமதமாகவே செய்தல், மறதி, தூக்கம் என்னும் நான்கும்,தாம் அழிந்துவிடக் கருதும் தன்மை கொண்டவர்கள், விரும்பி ஏறும் கப்பல்களாம்.
Procrastination, carelessness, sluggardliness and sleep are the four boats fondly entered into by those who go to ruin (p) Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction.
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் |
மாண்பயன் எய்தல் அரிது. 606-
நாடாளும் தலைவருடைய தொடர்பு இயல்பாக வந்து கிடைத்த காலத்திலும், சோம்பல் உடையவர்கள், அதனால் எந்தவிதமான சிறந்த பயனையும் அடைவதில்லை.
Even when the wealth of the rulers of all earth is within his reach, the slothful will hardly derive any great benefit from it (p) It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it.
இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து |
மாண்ட உஞற்றி லவர். 607-
சோம்பலை விரும்பி, நல்ல முயற்சிகளைக் கைவிடுகிறவர்கள், கடுமையாகப் பிறர் இகழ்ந்து பேசுகின்ற சொற்களைக் கேட்கின்ற நிலைமையை அடைவார்கள்.
Lovers of idleness with no praiseworthy exertion will be the butt of disgrace and will receive words of rebuke (p) Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches.
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு |
அடிமை புகுத்தி விடும். 608-
நல்ல குடியிலே பிறந்தவனிடம், சோம்பல் என்பது சேர்ந்து விடுமானால், அது, அவனை, அவன் எதிரிகளுக்கு விரைவில் அடிமைப்படுத்தி விடும்.
If sloth comes to stay in one’s family, it will make one the slave of one’s enemies (p) If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் |
மடியாண்மை மாற்றக் கெடும். 609-
ஒருவன், தன்னிடமுள்ள சோம்பலை ஒழித்துவிட்டான் என்றால், அவன் தன் குடும்பத்தை நடத்துவதில் ஏற்பட்ட குற்றங்கள் எல்லாம் நீங்கிவிடும்.
By conquering sloth, one can wipe out the reproach that has come over one’s family (p) When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் |
தாஅய தெல்லாம் ஒருங்கு. 610-
சோம்பல் இல்லாத அரசன், தன் அடியாலே உலகத்தை அளந்த திருமால் தாவிய நிலப்பரப்பு எல்லாம், தானும் தன் முயற்சியால் ஒருங்கே பெற்றுவிடுவான்.
All the universe once measured by God will be with the king of no sloth (p) The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot.
2.1.24 ஆள்வினையுடைமை Effort: [To Top]
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் |
பெருமை முயற்சி தரும். 611-
இச்செயலை நம்மாலே செய்ய முடியாதென்று தளர்ச்சி கொள்ளாமல் இருக்கவேண்டும்; இடைவிடாத முயற்சியானது அதனைச் செய்துமுடிக்கும் வலிமையைத் தரும்.
“Do not give up (your task) saying ‘O’ It is very difficult " The art of doing it comes of exertion (p) Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it).
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை |
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. 612-
ஒரு செயலைச் செய்துமுடிக்காமல் இடையிலே விட்டவரை உலகமும் கைவிடும்; ஆதலால், செய்யும் செயலிடத்திலே முயற்சியற்றிருப்பதை விட்டுவிட வேண்டும்.
Do not give up your task in the middle; for the world will abandon those who leave their task unfinished (p) Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work.
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே |
வேளாண்மை என்னுஞ் செருக்கு. 613-
'எல்லாருக்கும் உதவி செய்தல்' என்னும் செருக்கானது,விடாத முயற்சி உடையவர்கள் என்னும் பண்பிலேதான் நிலைத்திருப்பது ஆகும்.
The greatness which consists in helping others dwells in the virtue of persevering effort (p) The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை |
வாளாண்மை போலக் கெடும். 614-
போருக்கு அஞ்சுகின்ற பேடியின் கையிலுள்ள வாளிடத்தில் ஆண்மைச் செயல் எதுவும் தோன்றாதது போல, விடாமுயற்சி இல்லாதவன் உதவுகின்ற தன்மையும் கெட்டுப் போகும்.
The service of one with no persevering effort is vain like the sword wielded by a hermaphrodite (p) The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand.
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் |
துன்பம் துடைத்தூன்றும் தூண். 615-
தன் இன்பத்தை விரும்பாமல், எடுத்த செயலை முடிப்பதையே விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கி, அவர்களைத் தாங்கும் தூண் ஆவான்.
One who does not seek pleasure but delights in work will be a pillar of support to one’s relatives in their sorrow (p) He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை |
இன்மை புகுத்தி விடும். 616-
இடைவிடாத முயற்சியானது ஒருவனுடைய செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாமையோ, அவனிடத்து இல்லாமையை உண்டாக்கும்.
Exertion achieves wealth; absence of it brings on poverty (p) Labour will produce wealth; idleness will bring poverty.
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் |
தாளுளான் தாமரையி னாள். 617-
சோம்பல் இல்லாதவனின் முயற்சியிலே தாமரையாளான திருமகள் சென்று வாழ்வாள்; சோம்பலிலே கருநிறம் உடைய மூதேவிதான் சென்று வாழ்வாள்.
Goddess of misfortune dwells in sloth; the Goddess of fortune lives in exertion (p) They say that the black Mudevi (the goddess of adversity) dwells with laziness, and the Latchmi (the goddess of prosperity) dwells with the labour of the industrious.
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து |
ஆள்வினை இன்மை பழி. 618-
நல்ல விதி இல்லாமலிருத்தல் என்பது குற்றம் ஆகாது; அறிய வேண்டியவைகளை அறிந்து முயற்சி செய்யாமல் இருப்பதே ஒருவனுக்குப் பழி ஆகும்.
Ill-luck is no disgrace; but it is a disgrace if one does not exert himself as to what should be done (p) Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் |
மெய்வருத்தக் கூலி தரும். 619-
தெய்வத்தின் அருளாலே கைகூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது, தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்துவிடும்.
Though fate should ordain failure, bodily exertion will yield its own reward 135 (p) Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் |
தாழாது உஞற்று பவர். 620-
சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சிகளைச் செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறங்காட்டி ஓடச்செய்பவர் ஆவார்கள்.
Those who labour hard, undaunted by obstacles will overcome destiny (p) They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back.
2.1.25 இடுக்கண் அழியாமை Courage during adversity [To Top]
இடுக்கண் வருங்கால் நகுக அதனை |
அடுத்தூர்வது அஃதொப்ப தில். 621-
துன்பங்கள் வரும்போது, மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக. துன்பங்களைக் கடப்பதற்கு அதனைவிடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.
Laugh over your obstacles; nothing like it to push them further and further (p) If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் |
உள்ளத்தின் உள்ளக் கெடும். 622-
வெள்ளமாகப் பெருகி வருகின்ற துன்பங்களும், அறிவு உடையவன் தன் உள்ளத்திலே நினைத்தபோது, அவனை விட்டு மறைந்து போய்விடும்.
Troubles like a flood will be overcome by a courageous thought rising in the minds of the wise (p) A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு |
இடும்பை படாஅ தவர். 623-
இடையூறுகள் வந்த போது அதற்காக வருந்தாத மனத்தெளிவு உள்ளவர்கள், துன்பத்துக்குத் துன்பம் உண்டாக்கி அதனைப் போக்கி விடுவார்கள்.
The courageous will be causing sorrow to sorrow itself (p) They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.
மடுத்தவா யெல்லம் பகடன்னான் உற்ற |
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. 624-
தடைப்படும் இடங்களில் எல்லாம், தளர்ந்துவிடாமல் வண்டியை இழுத்துச் செல்லும் எருதைப்போன்ற ஊக்கம் உடையனுக்கு நேரிடும் துன்பங்களே துன்பம் அடையும்.
Just as the buffalo drags a cart through miry depth, one who fights on will overcome his difficulties (p) Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற |
இடுக்கண் இடுக்கட் படும். 625-
மேன்மேலும் துன்பங்கள் வந்தாலும், நெஞ்சம் கலங்காதவனுக்கு நேர்ந்த துன்பமானது, தானே துன்பப்பட்டு அவனிடமிருந்து விலகிப் போகும்.
Just as the buffalo drags a cart through miry depth, one who fights on will overcome his difficulties 136 (p) Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று |
ஓம்புதல் தேற்றா தவர். 626-
பொருள்அடைந்தோம் என்று அதனைப் போற்றிக் காப்பதற்கு அறியாதவர்கள், வறுமைக் காலத்தில் 'பொருளை இழந்தோம் என்று துன்பம் அடைவாரோ?
Will those who do not during prosperity exultingly say “we are rich”, cry out (during adversity) “Oh, we are destitute”? (p) Will those men ever cry out in sorrow, "we are destitute" who, (in their prosperity) , give not way to (undue desire) to keep their wealth.
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் |
கையாறாக் கொள்ளாதாம் மேல். 627-
இவ்வுடலானது துன்பங்களுக்கு இலக்கானது என்று அறிந்து, அதற்கு வரும் துன்பங்களுக்கு உள்ளம் கலங்காமல் இருப்பவர்களே மேலோர்கள்.
The great know that the body is ever the target of trouble and will not regard trouble as trouble at all (p) The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் |
துன்பம் உறுதல் இலன். 628-
இன்பம் உண்டாகிய போது அதனை விரும்பாதவனாக, துன்பம் வருதலும் இயல்பு என்று உணர்பவன், எந்தக் காலத்திலும் துன்பம் அடையமாட்டான்.
He who never gives way to sorrow, will not long for pleasure; he will regard trouble as quite natural (p) That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் |
துன்பம் உறுதல் இலன். 629-
இன்பமான காலத்திலும் இன்பத்தை நுகர விரும்பாதவன் எவனோ அவன், துன்பமான காலத்திலும் எத்தகைய ஒரு துன்பமும் அடையமாட்டான்.
He who does seek for pleasure in pleasure will not be vexed in sorrow (p) He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் |
ஒன்னார் விழையுஞ் சிறப்பு. 630-
துன்பமே தனக்கு இன்பமானது என்று கருதித் தொழிலைச் செய்பவன், அவன் எதிரிகளும் அவன் முயற்சியை விரும்பும் சிறந்த நிலைமையை அடைவான்.
One who regards trouble as pleasure will gain the elevation which his enemies desire (for themselves) (p) The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure.
2.2 அங்கவியல் Advisers and Staff
2.2.1 அமைச்சு Advisers: [To Top]
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் |
அருவினையும் மாண்டது அமைச்சு. 631-
ஒரு செயலைச் செய்வதற்கு வேண்டிய கருவிகளையும், ஏற்ற காலத்தையும், செய்யும் வகையையும், செயலின் அருமையும், நன்கு சிந்திப்பவனே, நல்ல அமைச்சன்.
He is the minister who, finds out the (right) means, the time, the deed and its full accomplishment (p) The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself).
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு |
ஐந்துடன் மாண்டது அமைச்சு. 632-
மனவலிமையும், குடிகளைக் காத்தலும், அறநூல்களைக் கற்று அறிந்திருத்தலும், விடாமுயற்சியும், ஐம்புலங்களின் தூய்மையும் சிறந்திருப்பவனே, அமைச்சன்.
A minister should have five qualities; tenacity of purpose, birth in a respectable family, welfare of the people, profound learning and perseverance (p) The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness, protection of subjects, clearness by learning, and perseverance.
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் |
பொருத்தலும் வல்ல தமைச்சு. 633-
பகைவரோடு சேர்ந்துள்ளவரைப் பிரித்தலும், தம்மவரைப் பிரிந்து போகாமல் காத்தலும், பிரிந்து போயினவரை முயன்று மீண்டும் சேர்த்தலும் வல்லவனே, அமைச்சன்.
A minister must be able to separate a foe from his ally, befriend allies and reunite separated allies (p) The minister is one who can effect discord (among foes) , maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him).
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் |
சொல்லலும் வல்லது அமைச்சு. 634-
எதனையும் நன்கு ஆராய்ந்து அறிதலும், ஆராய்ந்தபின் பே செய்தலும், எதனையும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லுதலும் வல்லவனே, நல்ல அமைச்சன்.
A minister should study the consequences of an act and carry it successfully by a decisive speech (p) The minister is one who is able to comprehend (the whole nature of an undertaking) , execute it in the best manner possible, and offer assuring advice (in time of necessity).
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் |
திறனறிந்தான் தேர்ச்சித் துணை. 635-
நீதி நெறிகளைத் தெரிந்து, பொருள் நிரம்பிய சொல்லை உடையவனாய், எப்போதும் செயலாற்றும் திறனை நன்கு அறிந்தவனாய், இருப்பவனே, நல்ல அமைச்சன்.
He is a helpful counselor who is righteous and considerate in his speech, and always knows how to act (p) He is the best helper (of the king) who understanding the duties, of the latter, is by his special learning, able to tender the fullest advice, and at all times conversant with the best method (of performing actions).
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் |
யாவுள முன்நிற் பவை. 636-
இயல்பான நுண்ணறிவும், அதனோடு சேர்ந்த நூலறிவும் உடையவரான அமைச்சர்களின் எதிராக, எந்த நுட்பமான சூழ்ச்சிகளும் நிற்கமுடியாமல் போய்விடும்.
To a keen intellect combined with learning no difficulty stands in the way (p) What (contrivances) are there so acute as to resist those who possess natural acuteness in addition to learning?
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து |
இயற்கை அறிந்து செயல். 637-
செயலைச் செய்யும் முறைகளை நூலறிவால் அறிந்திருந்த போதும், அதனை,உலகத்தின் இயற்கையையும் அறிந்து, அதற்கேற்றபடியே முறையாகச் செய்ய வேண்டும்.
Even though you know the rules, act in conformity with the world opinion (p) Though you are acquainted with the (theoretical) methods (of performing an act) , understand the ways of the world and act accordingly.
அறிகொன்று அறியான் எனினும் உறுதி |
உழையிருந்தான் கூறல் கடன். 638-
அறிந்து சொல்பவரின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளாமல், தானும் அறிவில்லாதவனான அரசனானாலும், அவனுக்கும் உறுதி கூறுதல் அமைச்சரது கடமை யாகும்.
Though a king listens not to wise words it is the duty of the minister to speak firmly to him (p) Although the king be utterly ignorant, it is the duty of the minister to give (him) sound advice.
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர் |
எழுபது கோடி உறும். 639-
அருகில் இருந்தவாறே தன் அரசனுக்குப் பழுதினைக் கருதும் மந்திரியைவிட, எழுபது கோடிப் பகைவர் ஏற்படுவதையும் அந்த அரசன் பொறுத்துக் கொள்ளலாம்.
A treacherous minister by the king’s side is equal to seventy crores of enemies (p) Far better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his) ruin.
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் |
திறப்பாடு இலாஅ தவர். 640-
முறையாக ஆராய்ந்து அறிந்து உணர்ந்த போதிலும் செயல் திறமை இல்லாதவரான அமைச்சர்கள் முடிவில்லாத செயல்களையே செய்வார்கள்.
Ministers who have no requisite ability will leave a task unfinished though well begun (p) Those ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects, although they may have contrived aright.
2.2.2 சொல்வன்மை Persuasiveness, Power Of Speech: [To Top]
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் |
யாநலத்து உள்ளதூஉம் அன்று. 641-
நாவன்மை என்னும் சிறப்பைப் பெற்றிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும், அந்தச் சிறப்பு மற்றெந்தச் சிறப்பினுள்ளும் அடங்காத ஒரு சிறந்த சிறப்புமாகும்.
The virtue of good speech is greater than all the other good qualities found in one (p) The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness.
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் |
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. 642-
மேன்மையும் கெடுதியும் பேச்சினாலேயே வருவதனால் சொல்லிலே சோர்வு உண்டாகாதபடி எப்போதும் ஒருவன் தன்னைக் காத்துப் பேணிவருதல் வேண்டும்.
As I both prosperity and ruin are caused by words, a minister must guard against imperfection in his speech (p) Since (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness therein.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் |
வேட்ப மொழிவதாம் சொல். 643-
கேட்பவர் உள்ளத்தைப் பிணிக்கும் தன்மை உடையவாயும், பகைவரும் கேட்பதற்கு விருப்பப்படும் வகையிலும் சொல்லப்படுவதே சிறந்த சொல்வன்மை ஆகும்.
The minister must use such words as have the effect of strengthening the approval of those who agree and differ (p) The (minister's) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his friendship).
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் |
பொருளும் அதனினூஉங்கு இல். 644-
கேட்பவரது மனப்பான்மையை அறிந்தே எந்தச் சொல்லையும் சொல்ல வேண்டும்; அப்படிச் சொல்வதைவிட மேலான அறம் பொருளும் யாதும் இல்லை.
Speak having regard to one’s capacity to listen; for there is no greater virtue nor wealth than that (p) Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealth.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை |
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. 645-
தாம் சொல்ல நினைத்த சொல்லை வெல்லக்கூடிய மற்றொரு சொல் இல்லை என்பதை நன்றாக அறிந்தபின்பே, அந்தச் சொல்லை யாவரும் சொல்ல வேண்டும்.
Speak out what you have to say only after knowing that your own argument will not be turned against you (p) Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் |
மாட்சியின் மாசற்றார் கோள். 646-
தாம் சொல்லும்போது பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லும்போது அதன் பயனை அறிந்து ஏற்றுக் கொள்ளுதலே, மேன்மையில் குற்றமற்றவரது கொள்கை.
A good minister wins the approval of the listener by persuasive speech (p) It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more) and grasp the meaning of what he hears himself.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை |
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. 647-
சொல்வன்மை உடையவன், சொற்சோர்வு இல்லாதவன், சபைக்கு அஞ்சாதவன், ஆகிய ஒருவனைப் பேச்சில் வெல்லுவது என்பது, எவருக்குமே அருமையாகும்.
A clever speaker is neither tired nor fearful; none can defeat him in a debate (p) It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid.
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது |
சொல்லுதல் வல்லார்ப் பெறின். 648-
கருத்தை நிரல்படக் கோத்து, இனிய முறையில் சொல்வதற்கு வல்லவர்களைப் பெற்றால், இவ்வுலகம் அவர்கள் ஏவியதைக் கேட்டு, விரைந்து தொழில் செய்யும்.
Cogent reasoning and soft speech can bring the people over to one’s side (p) If there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner, the world would readily accept them.
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற |
சிலசொல்லல் தேற்றா தவர். 649-
குறையில்லாத சில சொற்களாலே தம் கருத்தை விளக்கிச் சொல்வதற்கு அறியாதவர்களே, பல சொற்களைச் சொல்வதற்கு, எப்போதும் விரும்புவார்கள்.
Those who cannot say a few words correctly will evince a desire to speak much (p) They will desire to utter many words, who do not know how to speak a few faultless ones.
இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது |
உணர விரித்துரையா தார். 650-
தாம் கற்றவைகளைப் பிறரும் அறியும்படியாக விளக்கிச் சொல்லத் தெரியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தும் மணம் வீசாத மலரைப் போன்றவர்கள் ஆவர்.
Those who cannot explain well what they have learnt resemble the odourless flowers with their petals open (p) Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance.
2.2.3 வினைத்தூய்மை Honest dealing, Purity Of Action [To Top]
துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம் |
வேண்டிய எல்லாந் தரும். 651-
துணைவர்களால் உண்டாகும் நன்மை செல்வத்தை மட்டுமே தரும்; செய்யும் செயலின் செம்மையோ ஒருவன் விரும்பிய எல்லாவற்றையுமே தரும்.
A man’s friends bring prosperity to him; but his good acts fetch him his wish (p) The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired.
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு |
நன்றி பயவா வினை. 652-
புகழுடன் கூடியதாகவும் நன்மை தருவதாகவும் அமையாத செயல்களை, எந்தக்காலத்திலும், ஒருவன் செய்யாமல் நீக்கிவிட வேண்டும்.
That deed must always be discarded which does not promote virtue and produce fame (p) Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).
ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை |
ஆஅதும் என்னு மவர். 653-
மேலாக உயர்வதற்கு நினைக்கின்றவர்கள், தங்களுடைய மதிப்பைக் கெடுக்கும் எந்த ஒரு செயலையும் எப்போதும் செய்யாமல் இருக்க வேண்டும்.
Those who wish to become great must always avoid deeds which darken the lustre of their reputation (p) Those who say, "we will become (better) " should avoid the performance of acts that would destroy (their fame).
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் |
நடுக்கற்ற காட்சி யவர். 654-
கலக்கம் இல்லாத அறிவை உடையவர்கள் தாம் இடையூறுகளுக்கு உட்பட நேர்ந்த காலத்திலும், இழிவான செயல்கள் எதையுமே செய்ய மாட்டார்கள்.
Even adversity does not prompt men of unswerving purity to do mean things (p) Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers).
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் |
மற்றன்ன செய்யாமை நன்று. 655-
என்ன செய்தோம்' என்று பின்னர் வருந்தக்கூடியதான செயல்களைச் செய்யவே கூடாது; செய்துவிட்டால், பின்னர் அதைப்பற்றி வருந்தாமலிருப்பது நன்று.
Desist from deeds which you may regret later; but if you once happen to do such a deed, repeat it not (p) Let a minister never do acts of which he would have to grieve saying, "what is this I have done"; (but) should he do (them) , it were good that he grieved not.
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் க |
சான்றோர் பழிக்கும் வினை. 656-
தன்னைப் பெற்ற தாயின்பசித் துன்பத்தைக் கண்ணால் கண்ட போதிலும், மேலோர்கள் பழிக்கும் செயல்களை ஒருவன் செய்யவே கூடாது.
Though you find your mother starving, do not do anything which will be condemned by the great (p) Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt).
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் |
கழிநல் குரவே தலை. 657-
பழிகளைச் செய்து அதனாலே வந்தடைந்த செல்வப் பெருக்கத்தை காட்டிலும், சான்றோர்களது வறுமையின் மிகுதியே மிகவும் சிறந்ததாகும்.
Better the poverty adopted by the great than the wealth resulting from sin (p) Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful deeds.
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் |
முடிந்தாலும் பீழை தரும். 658-
செய்யத் தகாதவை என்று சான்றோரால் விலக்கப்பட்ட செயல்களைக் கடிந்து ஒதுக்காமல் செய்தவர்களுக்கு, அவை| நன்மையாக முடிந்தாலும், துன்பத்தையே தரும்.
Those who do knowingly forbidden things will suffer in the end, although they may succeed in doing them (p) The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great) , will, even if they succeed, cause them sorrow.
அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் |
பிற்பயக்கும் நற்பா லவை. 659-
பிறர் அழும்படியாகச் செய்து பெற்றுக்கொண்ட செல்வம் எல்லாம், நாம் அழும்படியாக அகன்று போகும்; நல்ல வழியில் வந்தவற்றை இழந்தாலும் பின்னர் பயன்தரும்.
What is secured by causing tears to others will be lost with tears But good deeds will result in good later (p) All that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself) ; but what has been by fair means; though with loss at first, will afterwards yield fruit.
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் |
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. 660-
தீய வழிகளாலே பொருளைச் சேர்த்து ஒருவனைக் காப்பாற்றுதல் என்பது, பசுமண் கலத்தினுள் நீரைப்பெய்து அதைக் கசியாமல் காப்பாற்றுவது போன்றதாகும்.
A minister who promotes his king’s resources by fraud is like one who tries to store up water in a pot of unburnt clay (p) (For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water.
2.2.4 வினைத்திட்பம் Efficiency [To Top]
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் |
மற்றைய எல்லாம் பிற. 661-
மேற்கொண்ட செயலைச் செம்மையாக முடிக்கும் திறமை என்பது, ஒருவனது மனவலிமையே; பிற வலிமைகள் எல்லாம் சிறந்த வலிமைகள் ஆகா.
Determination in action is one’s resolution All others are nothing (p) Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature.
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் |
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். 662-
ஆராய்ந்து அறிந்தவர்களின் கொள்கையானது, இடையூறு வரும் முன்பாகவே விலக்கிக் கொள்ளுதலும், வந்தால் மனம் தளராமையும் ஆகிய, இரண்டு வழிகளே ஆகும்.
Ministers versed in lore will not do unprofitable deeds, and if they do, they will not regret it (p) Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subject.
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் |
எற்றா விழுமந் தரும். 663-
செயலில் ஆண்மையாவது, முடிந்தபின் வெளியே புலப்படுமாறு அதுவரை மறைத்துச் செய்வதாம்; இடையில் வெளிப்பட்டால், அது தீராத துன்பத்தையே தரும்.
A clever minister publishes a deed after its completion; if it becomes public in the intermediate stage, it will end in trouble (p) So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it beforehand, will cause irremediable sorrow.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் |
சொல்லிய வண்ணம் செயல். 664-
இதனை இப்படி யிப்படிச் செய்வோம்' என்று சொல்லுதல் எல்லாருக்கும் எளிதாகும்; சொல்லியபடி செய்து முடித்தலோ, மிகவும் அருமையாக இருக்கும்.
It is easy for one to say, but it is difficult to do it in the said manner (p) To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said.
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் |
ஊறெய்தி உள்ளப் படும். 665-
எண்ணத்தாலே சிறந்த மனவுறுதி கொண்டவர்களது தொழில் திறமையானது, மன்னன் மனத்திலும் சென்று பதிவதனால், பலராலும் நன்கு மதிக்கப்படும்.
The resolution of a thoughtful and good minister in strengthening his monarch will earn all praise (p) The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் |
திண்ணியர் ஆகப் பெறின். 666-
ஒரு செயலைச் செய்வதற்கு நினைத்தவர்கள், தாம் எண்ணிய எண்ணத்திலே உறுதி உடையவர்களானால், நினைத்ததை| நினைத்தபடியே செய்து, வெற்றி அடைவார்கள்.
Firm of purpose, ministers carry out their resolution (p) If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it.
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு |
அச்சாணி அன்னார் உடைத்து. 667-
உருளுக்கின்ற பெரிய தேருக்கு அச்சாணிபோல நின்று காப்பவரையும் உலகம் உடையது; அதனால், ஒருவரது சிறிதான உருவத்தைப் பார்த்து இகழக் கூடாது.
Do not despise one for lack of personality Does not the little nail of the chariot keep the wheel going? (p) Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car.
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது |
தூக்கங் கடிந்து செயல். 668-
மனம் கலங்காமல் தெளிவோடு மேற்கொண்ட செயலில், இடையிலே சோர்வில்லாமலும், காலம் கடத்தாமலும் ஈடுபட்டு, விரைவாகவேசெய்ய வேண்டும்.
What you have clearly decided to do, do it without hesitation and delay (p) An act that has been firmly resolved on must be as firmly carried out without delay.
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி |
இன்பம் பயக்கும் வினை. 669-
முதலிலே வருகின்ற துன்பங்களால் வருத்தம் அடைய நேர்ந்தாலும், முடிவிலே இன்பம் தருகின்ற செயல்களை மனத் துணிவுடனே செய்துமுடிக்க வேண்டும்.
Be resolute in deed which ends in happiness, though troublesome at the beginning (p) Though it should cause increasing sorrow (at the outset) , do with firmness the act that yield bliss (in the end).
எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம் |
வேண்டாரை வேண்டாது உலகு. 670-
எந்த வகையிலே உறுதி உடையவரானாலும், செய்யும் செயலிலே மனவுறுதி இல்லாதவர்களை உலகம் மதியாது; சிறந்தோராகவும் ஏற்றுக்கொள்ளாது.
The world will not esteem him who has no determined will, notwithstanding his other strong virtues (p) The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.
2.2.5 வினைசெயல்வகை Action Execution [To Top]
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு |
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. 671-
ஒரு செயலைப் பற்றிய ஆராய்ச்சியின் முடிவு, மனத்தில் துணிவு பெறுவதே ஆகும்; அவ்வாறு துணிவு கொண்ட பின், அதனைச் செய்யாமல் காலம் கடத்துதல் தீமையாகும்.
Decision is the result of deliberation It is harmful to rest it low (p) Consultation ends in forming a resolution (to act) ; (but) delay in the execution of that resolve is an evil,”
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க |
தூங்காது செய்யும் வினை. 672-
காலம் கடந்து செய்வதற்கு உரிய செயல்களைக் காலம் தாழ்த்தியே செய்யவேண்டும்; கடத்தாமல் செய்வதற்குரிய செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.
Delay such things as call for delay But never delay that which cannot be delayed (p) Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over.
ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் |
செல்லும்வாய் நோக்கிச் செயல். 673-
செய்யக்கூடிய இடங்களில் எல்லாம் செயலைச் செய்வது நன்மையே; செய்ய இயலாதபோது, அதை முடிப்பதற்கேற்ற வழிகளை ஆராய்ந்தபின்பே செய்தல் வேண்டும்.
Achieve a thing wherever possible; if it were not possible adopt a cautious policy (p) Whenever it is possible to overcome your enemy the act {of fighting) is certainly good; if not, endeavour to employ some more ‘successful method.
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் |
தீயெச்சம் போலத் தெறும். 674-
செய்யும் செயலையும், ஒழிக்கும் பகையையும், குறைவிடாமல் செய்துவிடவேண்டும்; அவற்றின் மிச்சம் தீயின் ஒழிவைப் போலப் பெருகிப் பெருங்கேடு உண்டாக்கிவிடும்.
An unfinished deed and an unfinished fight will like a half extinguished fire, cause ultimate harm (p) When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the {unextinguished} remnant of a fire,
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் |
இருள்தீர எண்ணிச் செயல். 675-
வேண்டிய பொருள், கருவிகள், தக்க காலம், செயலறிவு, உரிய இடம் என்னும் ஐந்தையும் மயக்கமில்லாமல் ஆராய்ந்து கொண்ட பின்னரே, செய்தல் வேண்டும்.
Do a thing after carefully deliberating on five things; resources, means, the time, the nature of the deed, and the place (p) Do an act alter a due consideration of the {following} five, viz., Money, means, time, execution and place.
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் |
படுபயனும் பார்த்துச் செயல். 676-
செயலின் முடிவைப்பற்றியும், இடையில்வரும் இடையூறுகளைப் பற்றியும், முடித்தபின் அடையும் பெரும்பயனையும் ஆராய்ந்தே, ஒரு செயலைச் செய்தல் வேண்டும்.
In doing a thing, weigh deeply your aim, the hindrances and the final gain thereof (p) An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great to be gained {on its completion).
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை |
உள்ளறிவான் உள்ளம் கொளல். 677-
ஒரு செயலைச் செய்வதற்குரிய செயல்முறையாவது, அதனை முன்பேசெய்துமுடித்துத் தெளிந்தவனிடம் கேட்டறிந்து, அவைகளைத் தாமும் மேற்கொள்ளுதல் ஆகும்.
The manner in which a thing should be done is to be determined after consulting an expert (p) The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereof,
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் |
யானையால் யானையாத் தற்று. 678-
மதநீரால் கன்னம் நனையும் யானையைக் கொண்டு, வேறான யானையைக் கட்டுவதைப்போல, பழகிய செயலின் அறிவைக் கொண்டேபிற செயல்களையும் செய்தல் வேண்டும்.
Use one act to achieve another just as one wild elephant is used to capture another (p) To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing arother.
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே |
ஒட்டாரை ஒட்டிக் கொளல். 679-
மாறுபட்டவரையும் தம்முடன் பொருந்துமாறு செய்து செயலிலே ஈடுபடுதல், நண்பருக்கு நல்லவை செய்வதிலும் மிகவும் விரைவாகச் செய்வதற்கு உரியதாகும்.
It is much more urgent to secure the alliance of one’s enemies, than to do good to one’s friends (p) One should rather hasten to secure the alliance of the foes (of one's foes} rather than perform good offices to one’s friends,
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் |
கொள்வர் பெரியார்ப் பணிந்து. 680-
ஒன்றைச் செய்யும் வல்லமை இல்லாதவருள், பயந்து இடையில் குறைப்பட்டவர்கள், பெரியோரைப் பணிந்து கேட்டு, அவர் கூறியபடி நடந்துகொள்ள வேண்டும்.
Fearing that their weak king may quake with fear, ministers will bow before superior kings and accept their terms (p) Ministers of smali states, afraid of their people being frightened will yield to and acknowledge thelr superior foes, it the latter offer them a chance of reconciliation
2.2.6 தூது Representative or Envoys [To Top]
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் |
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. 681-
தன் நாட்டின்மீது அன்பும், உயர்ந்த குடிப்பிறப்பும், வேந்தன்விரும்புகின்ற உயர்ந்த பண்புகள் அமைதலும் தூது.
The characteristics of an ambassador are lovability, noble birth and other qualities which evoke the monarch’s respect (p) The qualification of an ambassador are affection (for his relations) a fitting birth, and the possession of attributes pleasing to royalty.
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு |
இன்றி யமையாத மூன்று. 682-
உரைப்பவனுக்கு வேண்டிய பண்புகள்: தன் நாட்டிடத்திலே அன்பும், தெளிவான அறிவும், எதையும் ஆராய்ந்து பேசும் சொல்வன்மையும், தூது உரைப்பவனுக்குஇன்றியமையாத மூன்று தகுதிகள்.
Love, wisdom, ability to talk with full knowledge, are the three indispensable qualities of an ambassador (p) Love (to his sovereign) , knowledge (of his affairs) , and a discriminating power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassador.
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் |
வென்றி வினையுரைப்பான் பண்பு. 683-
அரசியல் நூல்கள் அறிந்தவருள் தான் வல்லவனாதலும், வேல் வீரர்களுள் வெற்றித்திறனைக் கொண்டவனாக இருத்தலும், தூது உடையவனுக்கு வேண்டிய சிறந்த தகுதிகள்.
A skilful ambassador who wishes to gain his mission among other monarchs wielding the spear must be more learned than the learned (p) To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign).
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் |
செறிவுடையான் செல்க வினைக்கு. 684-
இயல்பாகவே அமைந்த நுண்ணறிவும், தோற்றக் கவர்ச்சியும், ஆராய்ந்துபெற்ற கல்வியறிவும் என்னும் இம்மூன்றின் செறிவை உடையவனே தூது உரைப்பவன் ஆவான்.
Only those who have wisdom, personality and mature scholarship must be sent on a mission (p) He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three. viz., (natural) sense, an attractive bearing and well-tried learning.
தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி |
நன்றி பயப்பதாந் தூது. 685-
விரிக்காமல் தொகுத்துச் சொல்லியும், இன்னாச் சொற்களை நீக்கியும், கேட்கும் மாற்றார் மகிழுமாறு சுவைபடச் சொல்லியும், தன் நாட்டிற்கு நன்மை விளைவிப்பவனே தூதன்.
A good ambassador is he who can talk cogently and sweetly and who is not offensive even in saying things that are disagreeable (p) He is an ambassador who (in the presence of foreign rulers) speaks briefly, avoids harshness, talks so as to make them smile, and thus brings good (to his own sovereign).
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் |
தக்கது அறிவதாம் தூது. 686-
கற்பன கற்றறிந்து, அவரது கடும்பார்வைக்கு அஞ்சாமல் சொல்வதை அவர்கள் மனத்திற் பதியும்படி சொல்லிக் காலத்தோடு பொருந்துவதை அறிபவனே தூதன்.
The envoy must be learned, fearless, persuasive and expedient (p) He is an ambassador who having studied (politics) talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the time.
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து |
எண்ணி உரைப்பான் தலை. 687-
தன் கடமையை அறிந்து, நிறைவேற்றும் காலத்தையும் கருத்திற் கொண்டு, ஏற்ற இடத்தையும் தெரிந்து, நன்றாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதன்.
The best envoy states his case convincingly knowing his duty at the proper time and place (p) He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes) , seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due) consideration.
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் |
வாய்மை வழியுரைப்பான் பண்பு. 688-
நடத்தையிலே தூய்மையும், தக்க துணைவரை உடைமையும், மனத்திலே துணிவு உடைமையும் ஆகிய இம்மூன்றினையும் வாய்த்திருப்பவனாக விளங்குதலே தூதனின் பண்பு.
The qualifications of a true envoy are morality, loyalty to his monarch and courage (p) The qualifications of him who faithfully delivers his (sovereign's) message are purity, the support (of foreign ministers) , and boldness, with truthfulness in addition to the (aforesaid) three.
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் |
வாய்சேரா வன்கணவன். 689-
தன் அரசன் சொல்லியனுப்பியதைப் பிற வேந்தரிடம் சென்று உரைப்பவனாகிய தூதன், வடுப்படும் சொல்லை வாய்சோர்ந்தும் சொல்லாத திறன் உடையவனாக இருக்க வேண்டும்.
He who does not falter even when faced with personal danger is fit to deliver his king’s message (p) He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter).
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற் கு |
உறுதி பயப்பதாம் தூது. 690-
தன் உயிருக்கே முடிவைத் தந்தாலும், அதற்கு அஞ்சித் தன் கடமையிலே குறைவுபடாது; தன் வேந்தனுக்கு நன்மை தரும் உறுதிப்பாட்டை செய்துமுடிப்பவனே தூதன்.
A true envoy delivers his message even at the risk of death (p) He is the ambassador who fearlessly seeks his sovereign's good though it should cost him his life (to deliver his message).
2.2.7 மன்னரைச் சேர்ந்தொழுதல் Companions for Rulers [To Top]
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க |
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். 691-
மாறுபடும் வேந்தரைச் சேர்ந்து வாழ்கின்றவர்கள், அவரை விட்டு மிகவும் நீங்காமலும், மிகவும் நெருங்காமலும், தீயில் குளிர்காய்பவரைப் போலப் பழகிவர வேண்டும்.
Those who personally serve the monarch do not go too near him or too far away from him, like those who warm themselves by the fire side (p) Ministers who serve under fickle-minded monarchs should, like those who warm themselves at the fire, be neither (too) far, nor (too) near.
மன்னர் விழைப விழையாமை மன்னரால் |
மன்னிய ஆக்கந் தரும். 692-
மன்னர் விரும்புகின்றபொருள்களைத் தானும் விரும்பாதிருக்கும் தன்மையானது, அம்மன்னராலே நிலைத்திருக்கும் செல்வங்களை ஒருவனுக்குத் தருவதாக விளங்கும்.
Not to covet those things which are desired by the monarch produce lasting wealth (p) For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth.
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் |
தேற்றுதல் யார்க்கும் அரிது. 693-
அரசன் சினம்கொண்டால் அவனைத் தெளிவித்தல் அரிதான தால், அரசனைச் சார்ந்திருப்பவர், பொறுத்தற்கரிய பிழைகள் தம்மிடம் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.
To save himself a minister must avoid gross faults, for it is difficult to please, once being found fault with (p) Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if the king's suspicion is once roused, no one can remove it.
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் |
ஆன்ற பெரியா ரகத்து. 694-
அறிவாற்றலில் சிறந்த பெரியவர்கள் கூடியுள்ள அரசவையில் இருக்கும்போது, காதோடு காதாகப் பேசுவதையும், பிறரோடு சேர்ந்து சிரிப்பதையும், நீக்கிவிட வேண்டும்.
In the presence of the great avoid whispering and smiling (p) While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others.
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை |
விட்டக்கால் கேட்க மறை. 695-
அரசனின் மறைவான பேச்சுக்களைக் கேளாமலும், அதன் தொடர்பாக எதுவும் சொல்லாமலும் இருந்து, அவனாகச் சொன்னால் மட்டுமே கேட்டல் வேண்டும்.
Let not the minister lend ear to the king’s secret or be inquisitive to know it But let him listen to it when the king reveals it (p) (When the king is engaged) in secret counsel (with others) , ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by the king himself).
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில |
வேண்டுப வேட்பச் சொலல். 696-
அரசனது உள்ளக் குறிப்பை அறிந்து, காலத்தையும் கருத்திற் கொண்டு, அரசனுக்கு வெறுப்புத்தராத சொற்களை, அவன் விரும்பிக் கேட்கும்படி சொல்ல வேண்டும்.
Watch the mood of the monarch Talk to him pleasantly and inoffensively (p) Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable.
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் |
கேட்பினும் சொல்லா விடல். 697-
அரசன் விரும்புகிற செய்திகளைமட்டும் அவனிடம் சொல்லியும், அவனுக்குரியவை அல்லாதனப்பற்றி அரசனிடம் சொல்லாமற் கைவிடுதலும் வேண்டும்.
Speak desirable things though unasked, but abstain from profitless talk although solicited by him (p) Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so).
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற |
ஒளியோடு ஒழுகப் படும். 698-
'இளையவர்' என்று கருதியோ, 'இனமுறை' என்று கருதியோ இகழாமல், நிலைபெற்ற அறிவுடன் அரசனிடம் நடந்து கொள்ளுதல் வேண்டும்.
Do not disrespect a king on the ground of age or kinship, but behave as befits his royalty (p) Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, "He is our junior (in age) and connected with our family!".
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் |
துளக்கற்ற காட்சி யவர். 699-
தாம் அரசராலே மதித்துக் கொள்ளப்பட்டோம் என்றும், அவர் ஏற்றுக்கொள்ளாத செயல்களைக் குற்றம் இல்லாத அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.
Men of high intelligence, respected by a king will not indulge in things revolting to him (p) Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within themselves) "We are esteemed by the king".
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் |
கெழுதகைமை கேடு தரும். 700-
மிகப் பழையகாலத் தொடர்புடையோர்' என்று நினைத்தும் பண்பில்லாத செயல்களைச் செய்பவனின் நெருக்கமான உரிமை, அவனுக்கே கெடுதல் தரும்.
To take liberty under the cover of old acquaintance and do unwanted things is to court ill (p) The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin.
2.2.8 குறிப்பறிதல் Mind reading Guessing [To Top]
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் |
மாறாநீர் வையக் கணி. 701-
ஒருவன் சொல்வதன் முன்பாகவே, குறிப்பால் அவன் கருத்தை அறியக்கூடியவன், வற்றாத கடலால் சூழப் பெற்றுள்ள உலகத்துக்கே அணிகலன் ஆவான்.
He who is able to divine one’s hidden intentions is a jewel among men on this sea-girt earth (p) The minister who by looking (at the king) understands his mind without being told (of it) , will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea.
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் |
தெய்வத்தோ டொப்பக் கொளல். 702-
கொஞ்சமும் ஐயப்படாத வகையிலே, பிறர் உள்ளத்திலுள்ள எண்ணங்களை உணர்ந்து கொள்ளக் கூடியவனைத் தெய்வத் தோடு சமமாகக் கொள்ளுதல் வேண்டும்.
He who would speak out fearlessly what he feels will be regarded equal to God (p) He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind).
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் |
யாது கொடுத்தும் கொளல். 703-
ஒருவரது முகக்குறிப்பினாலேயே, அவரது கருத்துக்களை உணர்கின்றவரை, உறுப்பினுள் எதனைக் கொடுத்தேனும் துணையாக்கிக் கொள்ளல் வேண்டும்.
The king at any cost should secure among his associates one who can discover by intuition another’s unexpressed thoughts (p) The king should ever give whatever (is asked) of his belongings and secure him who, by the indications (of his own mind) is able to read those of another.
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை |
உறுப்போ ரனையரால் வேறு. 704-
தாம் செய்வதற்குக் குறித்த ஒரு செயலைச் சொல்வதற்கு முன்பாகவே குறிப்பால் அறிந்து செய்பவர்களோடு, பிறர் நிலையால் ஒத்தாலும் பயனால் ஒப்பாகார்.
Those who are able to discover unexpressed thoughts may be deemed superior to other’s service (p) Those who understand one's thoughts without being informed (thereof) and those who do not, may (indeed) resemble one another bodily; still are they different (mentally).
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் |
என்ன பயத்தவோ கண்? 705-
ஒருவர் ஒரு கருத்தைக் குறிப்பால் காட்டியபோது, அதனை உணராமலிருந்தால், உடலுறுப்புக்களுள் கண் என்பது என்ன பயனைச் செய்வதாகுமோ?
Of what avail is the eye, among the organs of sense, if it does not note another’s intentions? (p) Of what use are the eyes amongst one's members, if they cannot by their own indications dive those of another?
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் |
கடுத்தது காட்டும் முகம். 706-
தன்னை அடுத்திருக்கும் ஓர் உருவத்தைத் தன்னிடத்தே காட்டும் பளிங்கைப்போல் ஒருவர் நெஞ்சம் கடுத்ததனை அவரது முகமும் தெளிவாகக் காட்டிவிடும்.
Like a mirror that reflects what is near it, the face will show what passes in the mind (p) As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind.
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் |
காயினும் தான்முந் துறும். 707-
முகத்தைக் காட்டிலும் அறிவால் மிக்கது வேறு யாதும் உண்டோ? உள்ளம் மகிழ்ந்தாலும் சினந்தாலும், தான் முந்திக் கொண்டு அதனை வெளியே காட்டிவிடும்.
Is there anything more expressive than the face which is an index as well as agony? (p) Is there anything so full of knowledge as the face? (No.) it precedes the mind, whether (the latter is) pleased or vexed.
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி |
உற்ற துணர்வார்ப் பெறின். 708-
முகத் தோற்றத்தால் ஒருவருக்கு நேர்ந்த துயரத்தை உணர்பவரைத் துணையாக அடைந்தால், அவர் எதிரே நின்றாலே போதும்; எதுவுமே சொல்ல வேண்டாம்.
If you come across one, who can read your face, study one’s face as one does yours (p) If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him) it is enough that he stand looking at their face.
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் |
வகைமை உணர்வார்ப் பெறின். 709-
கண் பார்வையால் கருத்தை வகைப்படுத்தி உணர்பவரைத் துணையாகப் பெற்றால், ஒருவரது பகைமையையும், நட்பையும், அவரது கண்களே நமக்குச் சொல்லி விடும்.
The eye proclaims friendliness and hostility to one who can read the message of the eyes (p) If a king gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will (themselves) reveal (to him) their hatred or friendship.
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் |
கண்ணல்லது இல்லை பிற. 710-
நுண்ணறிவு உடை யோம் என்பவர் பிறரை அளந்தறியும் அளவுகோல் யாதென ஆராயுங்காலத்து, அப்பிறரது கண் அல்லாமல் பிற உறுப்புக்கள் யாதும் இல்லை.
There is no other measuring rod, used by intelligent ministers than the monarch’s eye (p) The measuring-rod of those (ministers) who say "we are acute" will on inquiry be found to be their (own) eyes and nothing else.
2.2.9 அவையறிதல் Knowing the Audience [To Top]
அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் |
தொகையறிந்த தூய்மை யவர். 711-
சொல்லின் தொகையை அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, தாம் சொல்லப் போவதையும் நன்றாக ஆராய்ந்தே, எதனையும் சொல்லவேண்டும்.
Men should weigh their words in speaking when addressing an audience (p) Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled).
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் |
நடைதெரிந்த நன்மை யவர். 712-
சொல்லின் நடையை அறிந்த நல்லறிவை உடையவர்கள், தாமிருக்கும் அவையின் தன்மையைத் தெரிந்து, சொல்ல வேண்டியவற்றை உணர்ந்தே, சொல்ல வேண்டும்.
Good people who know the value of the language they employ, must speak noting how their words are received (p) Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court).
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் |
வகையறியார் வல்லதூஉம் இல். 713-
தாமிருக்கும் அவையின் தன்மையை அறியாதவர்களாக, ஒன்றைச் சொல்பவர்கள் சொல்லின் வகையை அறியாதவர்கள்; அவர்களால் எதையுமே சாதிக்க முடியாது.
The learning of those who speak without taking into consideration the assembly addressed or ignorant of the art of speaking can be of no use to them (p) Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning).
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் |
வான்சுதை வண்ணம் கொளல். 714-
அறிவினாலே ஒளியுடையவர் முன்பாகத் தாமும் அறிவொளி யினர் ஆகவேண்டும்; அறிவிலாதவர் முன்பாக, சுண்ணாம்பு வண்ணங் கொள்ளுதல்போல ஆகிவிடவேண்டும்.
Before brilliant people be brilliant; before plain people be as plain as white chalk (p) Ministers should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness of mortar (ignorance) in that of fools.
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் |
முந்து கிளவாச் செறிவு. 715-
அறிவால் முதிர்ந்தவர் அவையிலே,அவர்கள் கருத்துக்களைக் கேட்டறியும் முன்பாக எதையும் சொல்லாத அடக்கமானது, சிறந்த நன்மை தருவதாகும்.
The humility to maintain silence before superiors is the best of all good qualities (p) The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualities.
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் |
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. 716-
விரிந்த அறிவு நுட்பங்களை அறிந்தவர்முன் சென்று பேசிக் குற்றப்படுதல், ஆற்று வெள்ளத்தில் நீந்துபவன் இடையிலே நிலை தளர்ந்தால் போன்றதாம்.
To be censured by an assembly of the learned wise is like losing one’s balance while on the road to salvation (p) (For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue).
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் |
சொல்தெரிதல் வல்லார் அகத்து. 717-
குற்றம் இல்லாமல் சொற்களின் பொருள்களைத் தெரிவதற்கு வல்லமை உடையவர்களிடையே, கற்றறிந்த கல்வியறிவு மேலும் விளக்கம்பெற்றுத் தோன்றும்.
The scholarship of the learned shines brilliantly before those who can appreciate faultless speech (p) The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words.
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் |
பாத்தியுள் நீர்சொரிந் தற்று. 718-
சொல்லின் பயனை உணர்கின்றவர்களின் முன்பாக ஒன்றைச் சொல்லுதல், நல்ல பயிர் வளருகின்ற பாத்தியினுள்ளே, நீர் சொரிந்தாற் போலப்பெரும்பயன் தருவதாகும்.
Speaking before the wise is like feeding crops with water (p) Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves).
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் |
நன்குசலச் சொல்லு வார். 719-
நல்ல அறிவாளர்கள் கூடியுள்ள அவையிலே, அவர்களுக்கு நன்றாகப் பதியுமாறு சொல்லுகிறவர்கள், புல்லறிவினர் கூட்டத்திலே, மறந்தும் பேசாதிருக்க வேண்டும்.
Those who say good things before a good assembly should not even in forgetfulness say the same before the illiterate (p) Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் |
அல்லார்முன் கோட்டி கொளல். 720-
தம்போன்ற அறிவுடையவர்கள் அல்லாதவரின் முன்பாக ஒன்றைப்பற்றி விரிவாகப் பேசுதல் அங்கணத்துள்ளே அமுதத்தைக் கொட்டியதுபோலப் பாழாகிவிடும்.
Entering an assembly of men of unequal respectability will be like pouring nectar in an unclean courtyard (p) To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground.
2.2.10 அவையஞ்சாமை Courage or Bravery in assembly [To Top]
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் |
தொகையறிந்த தூய்மை யவர். 721-
சொற்களின் தொகை அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, வலியவர் அவையிலே வாய்சோர்ந்து எதனையும் பேசமாட்டார்கள்.
The expert in the art of speaking will not flounder, addressing an assembly of the learned (p) The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body.
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் |
கற்ற செலச்சொல்லு வார். 722-
'கற்றவர்களுள் கற்றவர்' என்று புகழப்படுகின்றவர்கள், கற்றவர் அவையின்முன், தாம் கற்றதை அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு எடுத்துச் சொல்லக்கூடியவர்களே ஆவர்.
Those will be deemed foremost among the learned, who can speak learned things acceptable to the learned (p) Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.
பகையகத்துச் சாவார் எளியர் அரியர் |
அவையகத்து அஞ்சா தவர். 723-
போர்க்களத்தின் நடுவே அஞ்சாமல் சென்று சாவையும் ஏற்பவர்கள் பலர்; ஆனால், கற்றோர் அவையிலே சென்று பேசக் கூடிய அஞ்சாமை உடையவர்கள் மிகமிகச்சிலரே!
Many die in the field of battle But few are those who can fear fools addressing an assembly (p) Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற |
மிக்காருள் மிக்க கொளல். 724-
தாம் கற்றவைகளைக் கற்றோர்கள் மனங்கொள்ளும்படியாகச் சொல்லி, தம்மிலும் மிகுதியாகக் கற்றவர்களிடம்,தாமும் எஞ்சிய மிகுதியைக் கேட்டுக்கொள்ளல் வேண்டும்.
Speak to the learned what you have learnt, and receive from them much that you have to learn (p) (Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning).
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா |
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. 725-
அவையினருக்கு அஞ்சாமல், அங்கே எழும் கேள்விகளுக்கு விடை சொல்லும்பொருட்டு, அதற்கு வேண்டிய நூல்களைப் பொருள்நயம் அறிந்து கற்றுக்கொள்ளல் வேண்டும்.
Understand the full scope of learning and learn, so that you may, without fear, reply effectively in an assembly (p) In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar).
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் |
நுண்ணவை அஞ்சு பவர்க்கு. 726-
அஞ்சாமை இல்லாதவர்க்கு அவர் ஏந்தியுள்ள வாளினால் என்ன பயன்? நுட்பமான அறிவையுடையவர் அவையிலே பேச அஞ்சுபவர்க்கு நூலறிவாலும் பயன் இல்லை.
Of what use is the sword for the unvaliant? Likewise of what use is learning for the timid to face an assembly? (p) What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly?
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து |
அஞ்சு மவன்கற்ற நூல். 727-
பகைவர் நடுவே புகுந்த, பேடியின் கையிலேயுள்ள கூர்மையான வாள் பயன்படாததைப்போல, அவையில் பேசுவதற்கு அஞ்சுகிறவன் நூலறிவும் பயன்படாது.
The learning of one afraid of an assembly is like the shining sword in the hands of an eunuch in a battle-field (p) The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் |
நன்கு செலச்சொல்லா தார். 728-
நல்லவர்கள் அவையிலே, அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி நல்ல பொருள்பற்றிப் பேசத் தெரியாதவர்கள் பலவகையான நூல்களைக் கற்றவரானாலும் பயன் இல்லாதவரே!
Vain is the versed learning of one who can not address with profit a learned assembly (p) Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirements.
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் |
நல்லா ரவையஞ்சு வார். 729-
தாம் பல நூல்களைக் கற்று அறிந்திருந்தாலும், நல்லறிவு உடையவர் அவையிலே பேசுவதற்கு அஞ்சுகிறவர்கள், கல்லாதவரினும் கடைப்பட்டவர்கள் ஆவர்.
The learned who are afraid of a good assembly will be regarded as worse than the illiterate (p) They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate.
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் |
கற்ற செலச்சொல்லா தார். 730-
அவைக்கு அச்சமடைந்து, தாம் கற்றவற்றை அவையினர் ஏற்கும் வண்ணம் சொல்ல முடியாதவர்கள், அறிவுள்ளவரே என்றாலும், அறிவற்றவர்களுக்கே சமமாவார்கள்.
Dead though alive are those who are afraid to address an assembly on what they have learnt (p) Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead.
2.3 அங்கவியல் Politics:
2.3.1 நாடு Country [To Top]
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் |
செல்வரும் சேர்வது நாடு. 731-
நாட்டு மக்களின் தேவைக்குக் குறையாத விளைபொருளும், தகுதியுடைய சான்றோர்களும், தாழ்வில்லாத செல்வத்தை உடையவரும் ஒன்று சேர்ந்திருப்பதே, நல்ல நாடாகும்.
That is a kingdom which has undiminishing produce, righteous people and fadeless riches (p) A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and merchants with inexhaustible wealth, dwell together.
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் |
ஆற்ற விளைவது நாடு. 732-
பெரும் பொருள்பெருக்கத்தால் அனைவராலும் விரும்பத் தகுந்ததாகியும், கேடுகள் இல்லாததாகியும், மிகுதியான விளைச்சலை உடையதாகியும் விளங்குவதே, நல்ல நாடு.
That is a kingdom which has boundless wealth coveted for by other nations and has imperishable fertile resources (p) A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes.
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு |
இறையொருங்கு நேர்வது நாடு. 733-
வேற்று நாட்டாரையும் தாங்குவதற்கான நிலையில், அவரைத் தாங்கிக்காத்தும், தம் அரசனுக்குரிய இறைப் பொருளை முழுவதும் கொடுத்தும் காப்பதே, நல்ல நாடாகும்.
That alone is a kingdom which accommodates immigrants and whose king receives taxes willingly paid (p) A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its sovereign.
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் |
சேரா தியல்வது நாடு. 734-
நீங்காத பசித்துன்பமும், தீராத நோய்களும், மேல்வந்து தாக்கும் பகைவர்களும் தன்னைச் சேராமல், வலிமையோடும் வளமோடும் விளங்குவதே, நல்ல நாடாகும்.
That is a kingdom where excessive hunger, incurable diseases and destructive enemies are absent (p) A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் |
கொல்குறும்பும் இல்லது நாடு. 735-
பலவாகப் பிரிந்து இயங்கும் கூட்டங்களும், நாட்டைப் பாழாக்கும் உட்பகையும், வேந்தனைத் துன்புறுத்தும் கொலை வெறியுள்ள குறுநில மன்னரும், இல்லாதது நாடு.
That is a kingdom where there are not many (disloyal) associations, destructive internal dissensions and disturbing murderous chieftains (p) A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies, and murderous savages who (sometimes) harass the sovereign.
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா |
நாடென்ப நாட்டின் தலை. 736-
பகைவராலே கெடுதல்களை அறியாததாய், இயற்கையின் மாறுபாடுகளால் கெட்டவிடத்திலும் வளம் குன்றாமலிருக்கும் நாடுதான், நாடுகளுள் சிறந்த நாடாகும்.
That is the top kingdom which is not harassed by an enemy, and which even if harassed does not experience want (p) The learned say that the best kingdom is that which knows no evil (from its foes) , and, if injured (at all) , suffers no diminution in its fruitfulness.
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் |
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. 737-
கீழ்நீரும் மேல்நீரும் என்னும் இருநீர்வளமும், வளம் வாய்ந்த மலைகளும், ஆறுகளும், வலிமையான அரண்களும், ஒரு நாட்டிற்கு வேண்டிய உறுப்புக்களாம்.
Surface and subsoil water, well situated hills from which flow waters and an invincible fort are the limbs of a kingdom (p) The constituents of a kingdom are the two waters (from above and below) , well situated hills and an undestructible fort.
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் |
அணியென்ப நாட்டிவ் வைந்து. 738-
மக்கள் நோயில்லாமலிருத்தல், செல்வம் உடைமை, விளை பொருள்பெருக்கம், இன்பந்தரும் கவின்கலைகள், நல்லகாவல் என்னும் இவ் ஐந்துமே, நாட்டிற்கு அழகு!
Five are the ornaments of a kingdom - absence of disease, wealth, fertility, happiness and security (p) Freedom from epidemics, wealth, produce, happiness and protection (to subjects) ; these five, the learned, say, are the ornaments of a kingdom.
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல |
நாட வளந்தரு நாடு. 739-
வேற்று நாடுகளை எதற்கும் வேண்டாதபடி, எல்லா வளமும் கொண்டதே நல்ல நாடு என்பர்; பிறர் உதவியைநாடி அதனால் வளமை வரும் நாடு, நாடே ஆகாது.
That is a kingdom which has rich natural resources That is no kingdom which yields wealth by toil (p) The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour.
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே |
வேந்தமை வில்லாத நாடு. 740-
மேற்சொல்லியவை எல்லாம் சிறப்பாகவே அமையப் பெற்றிருந்தாலும், ஆட்சிநடத்தும் இவேந்தன் பொருத்தமில்லாமல் இருக்கும் நாடு, பயனற்ற நாடு ஆகும்.
Vain is the kingdom which may have all the excellence except harmony between the ruler and the ruled (p) Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the sujects.
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் |
போற்று பவர்க்கும் பொருள். 741-
பகைவருக்கு அஞ்சாமல் மேற்சென்று போரிட வல்லவர்களுக்கும் அரண் செல்வம்; அஞ்சி உள்ளேயிருந்து தம்மைக் காத்துக்கொள்ள நினைப்பவருக்கும் அரண் செல்வம்.
A fortress is important alike to a conquering foe and a timid defender (p) A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிிழற் |
காடும் உடைய தரண். 742-
நீலமணி போன்ற நீரினையுடைய அகழியும், வெளியான நிலப்பரப்பும், உயரமான மலையும், மரநிழலாற் செறிந்த காடும் கொண்டுள்ளதே, பாதுகாப்பான நல்ல அரண்!
It is a fortress which has sparkling water, open spaces, hills and cool and shady forests round (p) A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests.
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் |
அமைவரண் என்றுரைக்கும் நூல். 743-
உயரமும், அகலமும், உறுதியும், பகைவரால் நெருங்குவதற்கு அருமையும் என்னும்நான்கும், சிறப்பாக அமைந்ததே அரண்' என்று போரியல் நூல்கள் கூறும்.
Treatises on fortification state that the walls of a stronghold should be lofty, broad, strong and inaccessible (p) The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz., height, breadth, strength and inaccessibility.
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை |
ஊக்கம் அழிப்ப தரண். 744-
காக்கவேண்டும் இடத்தினால் சிறிதானதாகவும், உள்ளே பெரிதான பரப்பை உடையதாகவும், பகைவரது மன ஊக்கத்தை முற்றும் அழிக்கவல்லதே நல்ல அரண் ஆகும்.
A fortress which has a name as a natural defence cools the heat of the attacking foe (p) A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes.
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் |
நிலைக்கெளிதாம் நீரது அரண். 745-
பகைவராலே கைப்பற்றுவதற்கு அரியதாயும்,தன்னிடத்தே கொண்டுள்ள உணவுப்பொருள்களை உடையதாயும் அகத்தாரது போர்நிலைக்கு எளியதாயும் அமைந்ததே அரண்.
A good fortress is that which is inaccessible, is sufficiently provided and is easily defensible from within (p) A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates.
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் |
நல்லாள் உடையது அரண். 746-
அகத்தாருக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் உடையதாய், அழிவிடத்து உதவிக்காக்கும் நல்ல காவல் மறவர்களையும் கொண்டதாய், விளங்குவதே அரண்.
A fortress shall have all things needed by its residents including capable warriors (p) A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes).
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் |
பற்றற் கரியது அரண். 747-
சூழ்ந்து முற்றியும், திடீரெனத் தாக்கியும், வஞ்சனைகளாலே உள்ளிருப்போரை வசப்படுத்தியும்,பகைவரால் கைப்பற்று வதற்கு இயலாத அருமையுடையதே அரண்!
A good fortress cannot be besieged or taken by storm or be undermined (p) A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் |
பற்றியார் வெல்வது அரண். 748-
வந்து சூழ்ந்துள்ள பகைவரது பெரும்படையையும், உள்ளிருப்போர் இடம்விட்டுப் பெயராமல் நிலைத்துநின்ற படியே வெல்லும் அமைப்பை உடையதே, அரண்.
The inmates of a good fortress can defend themselves even when besieged on all sides (p) That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it.
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து |
வீறெய்தி மாண்ட தரண். 749-
முற்றுகையிட்ட பகைவர்கள் போர்முனையின் முகப்பிலேயே அழிந்துபோகுமாறு, போர்த்தொழிலில் வீறுபெற்றுச் சிறந்த காவல் மறவர்களையும் கொண்டதே அரண்!
That fortress is famous which makes it possible for its defenders to destroy the besiegers even at the outset (p) A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield.
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி |
இல்லார்கண் இல்லது அரண். 750-
எத்தகைய பாதுகாவலை உடையதாய் இருந்தாலும் அரண்காக்கும் மறவர்கள் போர்வினைச் சிறப்பு இல்லாதவரானால், அந்த அரணும் பயனற்று அழிந்துபோகும்.
Of what use are these barriers of defence to a stronghold if it possesses no men of valour (p) Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action.
2.3.3 பொருள்செயல்வகை Wealth Creation [To Top]
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் |
பொருளல்லது இல்லை பொருள். 751-
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance. (p) Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance.
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை |
எல்லாரும் செய்வர் சிறப்பு. 752-
பொருள் இல்லாத வறியவரை எல்லாருமே இகழ்ச்சியாகப் பேசுவார்கள்; செல்வம் உடையவரையோ எல்லாரும் சிறப்புச் செய்து போற்றுவார்கள்.
All will despise the poor; all will accord honour to the wealthy (p) All despise the poor; (but) all praise the rich.
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் |
எண்ணிய தேயத்துச் சென்று. 753-
பொருள்' என்னும் நந்தாவிளக்கமானது, தன்னை உடையவர் எண்ணிய தேயங்களுக்கும் சென்று, அவர் பகையாகிய இருளைப் போக்கும் வல்லமை உடையதாகும்.
The faultless lamp of riches will dispel the darkness (of trouble) in any country to which it is taken (p) The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein).
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து |
தீதின்றி வந்த பொருள். 754-
தீய வழிகளால் அல்லாமல்,பொருள் தேடும் திறனை அறிந்து தேடியதனால் வந்தடைந்த செல்வமானது, அறவாழ்க்கையையும், இன்பத்தையும் ஒருங்கே கொடுப்பது ஆகும்.
The wealth accumulated justly and without sin will confer virtue and happiness (p) The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness.
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் |
புல்லார் புரள விடல். 755-
'அருள்' என்னும் இயல்போடும், மக்களின் அன்போடும் பொருந்திவாராத பொருட் பெருக்கத்தைத் தீயவர் புரள்வதற்கு விலக்கி விட்டுவிட வேண்டும்.
Let not the king accept the wealth not acquired through mercy and love (p) (Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love.
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் |
தெறுபொருளும் வேந்தன் பொருள். 756-
உடையவர் இல்லாததாலே வந்து சேர்ந்த செல்வமும், சுங்க வரியாக வந்த பொருளும், பகைவரை வென்று பெற்ற திறைப் பொருளும், வேந்தனின் உரிமைப் பொருளாகும்.
Unclaimed wealth, tolls and tributes by the subdued chieftains are the king’s property (p) Unclaimed wealth, wealth acquired by taxes, and wealth (got) by conquest of foes are (all) the wealth of the king.
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் |
செல்வச் செவிலியால் உண்டு. 757-
அன்பு' என்னும் தாய் பெற்றெடுத்த 'அருள்' என்னும் குழந்தையானது, பொருள்' என்கின்ற செல்வம் படைத்த செவிலித்தாயால் வளர்க்கப்பட வேண்டும்.
What is mercy, but the child of love? What is wealth, but the nurse of mercy? (p) The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth.
குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று |
உண்டாகச் செய்வான் வினை. 758-
தன் கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதானது, குன்றின்மேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டாற்போல், துன்பமின்றி இன்பம் தருவதாகும்.
The deeds of the wealthy are like elephant fights witnessed from a hill (p) An undertaking of one who has wealth in one's hands is like viewing an elephant-fight from a hill-top.
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் |
எஃகதனிற் கூரிய தில். 759-
பகைவரின் மனச் செருக்கை அழித்து வெற்றிபெரும் ஆயுதம் பொருளைக் காட்டிலும் கூர்மையானது வேறில்லை ஆதலால்; பொருளை எப்போதும் தேடிக்கொள்ள வேண்டும்.
Store up wealth; no other weapon is sharper than that to destroy the enemy’s pride (p) Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it.
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் |
ஏனை இரண்டும் ஒருங்கு. 760-
சிறந்த வழியோடு வந்த பொருளை மிகுதியாகத் தேடிக் கொண்டவர்களுக்கு, எண்ணப்படும் மற்றையவாகிய அறமும் இன்பமும் ஒருங்கே வந்துவாய்க்கும் பொருள்களாகும்.
Amass wealth by lawful means; the other two (virtue and happiness) will follow (p) To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure) are things easy (of acquisition).
2.3.4 படைமாட்சி Glory of military [To Top]
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் |
வெறுக்கையுள் எல்லாம் தலை. 761-
நால்வகை உறுப்புக்களாலும் முறையாக அமைந்து, களத்திற்படும் துன்பங்கட்கு அஞ்சாமல் பகைவரை வெல்லும் படையே, செல்வங்களுள் சிறந்த செல்வம்.
A well-equipped and fearlessly conquering army is the foremost wealth of a king (p) The army which is complete in (its) parts and conquers without fear of wounds is the chief wealth of the king.
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் |
தொல்படைக் கல்லால் அரிது. 762-
போரில் நேரிட்ட அழிவுக்குஅஞ்சாமல் பகைவர்மேற் செல்லும் ஆண்மை,வழிவழிப் புகழோடு விளங்கும் தொல்படைக்கே இயல்வதாகும்.
The heroic valour of rallying round the king even in adversity is peculiar to hereditary force, and not to others (p) Ancient army can alone have the valour which makes it stand by its king at the time of defeat, fearless of wounds and unmindful of its reduced strength.
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை |
நாகம் உயிர்ப்பக் கெடும். 763-
பகைப்படைகள் எலிகளைப்போலக் கடலாகத் திரண்டு வந்து ஆரவாரித்தாலும், சிறிய படை நாகத்தைப் போல மூச்சுவிட்டதும், அது முற்றவும் அழிந்துபோம்.
The hiss of a cobra stills for ever an army of rats as vast as the ocean (p) What if (a host of) hostile rats roar like the sea? They will perish at the mere breath of the cobra.
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த |
வன்க ணதுவே படை. 764-
மனத்தின் உறுதியிலே அழிவற்றதாய், பகைவரது வஞ்சனைகளுக்கு உட்படாததாய், வழிவழித் தொடர்ந்துவந்த வன்கண்மை உடையதாய் விளங்குவதே, சிறந்த படை.
It is a heroic force that is hereditary, undiminished in powers and not undermined by the enemy (p) That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy).
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் |
ஆற்ற லதுவே படை. 765-
கூற்றம் சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும், அதனோடும் சென்று பொருந்தி, எதிர்த்துப் போரிட்டு வெல்லும் ஆற்றல் உடையதே, சிறந்த படை ஆகும்.
A valiant army faces courageously the advancing foe even when led by the God of Death (p) That indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advances against it with fury.
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் |
எனநான்கே ஏமம் படைக்கு. 766-
மறப்பண்பும், மானவுணர்வும், நன்னெறியே பற்றிச் செல்லுதலும், மன்னனால் தெளியப்பட்ட சிறப்பும் என்னும் நான்கும், படைக்குச் சிறந்த பாதுகாப்பு ஆகும்.
Heroism, honour, tried policy and fidelity to the king, these four are an army’s shelter (p) Valour, honour, following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness; these four alone constitute the safeguard of an army.
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த |
போர்தாங்கும் தன்மை அறிந்து. 767-
மேல் வந்த போரைத் தாங்கிநின்று, பகைவரை மேற்சென்று வெல்லும் வகைகளை ஆராய்ந்து, அவர்களின் தூசிப்படையைத் தாக்கி அழித்து மேற்செல்வதே, படை ஆகும்.
That alone is an army which understands the enemy’s tactics, and fearlessly advances (p) That is an army which knowing the art of warding off an impending struggle, can bear against the dust-van (of a hostile force).
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை |
படைத்தகையால் பாடு பெறும். 768-
போரிடுகின்ற தறுகண்மையும், அதற்கு வேண்டிய ஆற்றலும் இல்லாதிருந்தாலும், ஒருபடை தனது அணிவகுப்பினாலேயே பகைவரை வெற்றி அடைந்துவிடும்.
An army by mere show can achieve distinction though it may lack bold advance or even self-protection (p) Though destitute of courage to fight and strength (to endure) , an army may yet gain renown by the splendour of its appearance.
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் |
இல்லாயின் வெல்லும் படை. 769-
தேய்ந்து சிறுகுலும், மனம்நீங்காத வெறுப்பும், பொருளில்லாத வறுமையும் இல்லாமலிருந்தால், அந்தப் படை தவறாமல் எந்தப் பகையையும் வெற்றி கொள்ளும்!
It is a winning army which has neither littleness, nor irremovable bitterness and poverty (p) An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty.
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை |
தலைமக்கள் இல்வழி இல். 770-
நிலையான மறவர்களை மிகுதியாக உடையதானாலும், ஒரு படையானது, தன் தலைவர்கள் திறமையில்லாதவர்களாக இருந்தால், பயனற்று அழிந்துவிடும்.
Of what avail is the army of heroic warriors if there be no general to guide them? (p) Though an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generals.
2.3.5 படைச்செருக்கு Pride of Military [To Top]
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை |
முன்நின்று கல்நின் றவர். 771-
பகைவரே! என் தலைவனின் முன்னே எதிர்த்துவந்து நில்லாதீர்; அவன் முன்னர் எதிர்த்து வந்துநின்று, களத்தில் வீழ்ந்து பட்டு, நடுகற்களாக நிற்பவர் மிகப் பலர்.
O, Enemies! Do not stand in front of our Lord; for many who stood before him are now standing as hero-stones (p) O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statues.
கான முயலெய்த அம்பினில் யானை |
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. 772-
காட்டு முயலைக் குறிதவறாமல் எய்து வீழ்த்திக் கொன்ற அம்பினைக் காட்டிலும், யானைமேல் எறிந்து குறிதவறிய வேலினைத் தாங்குதலே படை மறவருக்கு இனிதாகும்.
Better to bear the spear hurled against an elephant, though it misses its aim, than the arrow aimed against a hare in the forest (p) It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest.
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் |
ஊராண்மை மற்றதன் எஃகு. 773-
'பேராண்மை' என்பது பகைவர்க்கு அஞ்சாமல் எதிர்நின்று போரிடும் ஆண்மையே; அவருக்கு ஒருகேடு வந்தவிடத்து உதவிநிற்கும் ஆண்மையோ, அதனிலும் சிறந்ததாகும்.
Fearlessness is a manly virtue; but in distress, mercy is its keen edge (p) The learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் |
மெய்வேல் பறியா நகும். 774-
தன் கைவேலினைக் களிற்றின் மீது எறிந்து விட்டுப் படைக் கலமின்றி வருபவன், தன்னுடம்பில் தைத்திருந்த பகைவரின் வேலைப் பறித்து மகிழ்ச்சி அடைவான்!
The warrior who hurls his spear against an advancing elephant enjoys to pull it from his body (p) The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) will pluck the one (that sticks) in his body and laugh (exultingly).
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் |
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. 775-
பகைவர்மீது சினந்துபார்த்த கண்கள், அவர் தம் கைவேலை எறிந்த காலத்தினும், வெகுட்சியை மாற்றி இமைக்குமானால் மறவருக்கு இழிவுதரும் அல்லவோ!
If the fierce look (of a warrior) winks at a dart aimed at him, it is tantamount to a retreat (p) Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe)?
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் |
வைக்கும்தன் நாளை எடுத்து. 776-
கழிந்து போன தன் வாழ்நாட்களைக் கணக்கிட்டுப் பார்த்து, விழுப்புண் படாத நாட்களை எல்லாம், தான் தவறவிட்ட நாட்களுள் சேர்ப்பவனே படை மறவனாவான்.
Reflecting on the days past, a hero regards those days vain in which he has not received a wound (p) The hero will reckon among wasted days all those on which he had not received severe wounds.
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் |
கழல்யாப்புக் காரிகை நீர்த்து. 777-
உலகைச் சூழ்ந்து பரவும் புகழையே விரும்பி, உயிரை வெறுத்துப் போரிடும் ஆண்மையுள்ள மறவரின் காலிலே, விளங்கும் கழல்களே அழகு உடையவாகும்.
The anklet is a fitting adornment to warriors who fight fearless of life for a worldwide reputation (p) The fastening of ankle-ring by those who disire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves).
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் |
செறினும் சீர்குன்றல் இலர். 778-
போர்க்களத்திலே தம் உயிருக்கும் அஞ்சாமல் போரிடும் படை மறவர்கள், தம் அரசனே தடுத்தாலும், தம் மனவூக்கத்தில் சிறிதும் குறையமாட்டார்கள்.
Warriors unmindful of their lives in battle will not be daunted even by the wrath of their obstructing monarch (p) The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting).
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே |
பிழைத்தது ஒறுக்கிற் பவர். 779-
தாம் உரைத்த சூளுரையிலிருந்து தப்பாமல் போரினைச் செய்து, அதனிடத்தில் சாகிறவரை, எவர்தாம் சூளுரை பிழைத்ததற்காகத் தண்டிப்பவர்கள்!
Who can find fault with those (soldiers) who will lay down their lives to fulfil their vow? (p) Who would reproach with failure those who seal their oath with their death?
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு |
இரந்துகோள் தக்கது உடைத்து. 780-
தம்மைப் பேணியவரின் கண்கள் நீர் சிந்தும்படியாகக் களத்தில் சாவைத் தழுவினால், அத்தகைய சாவு ஒருவன் இரந்தும் கொள்ளத்தகுந்த சிறப்பினை உடையதாகும்.
Ye! Soldiers, endeavour to earn a death of glory which will move your chief to tears (p) If (heroes) can so die as to fill with tears the eyes of their rulers, such a death deserves to be obtained even by begging.
2,3.6 நட்பு Alliance, Friendship [To Top]
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் |
வினைக்கரிய யாவுள காப்பு. 781-
நட்பைப்போல் ஒருவன் செய்துகொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை; நட்பைப்போலச் செயல்களுக்கு அருமையான பாதுகாப்பும் எதுவுமில்லை.
What is there more important than an ally; and what is more helpful than securing his aid (p) What things are there so difficult to acquire as friendship? What guards are there so difficult to break through by the efforts (of one's foes)?
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் |
பின்னீர பேதையார் நட்பு. 782-
நல்ல தன்மையுள்ளவரோடு கொண்ட நட்பானது, வளர் பிறைபோல நாளுக்குநாள் வளரும்; பேதைகளின் நட்பு, தேய்பிறைபோல நாளுக்குநாள் தேய்ந்து போகும்.
The friendship of the wise resembles the waxing crescent; the friendship of the unwise fades away like the waning moon (p) The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் |
பண்புடை யாளர் தொடர்பு. 783-
நல்ல பண்பு உடையவர்களின் தொடர்பானது, படிக்கப் படிக்க நூலின் நயம் மேன்மேலும் இனிமை தருவதுபோல், பழகப் பழக மேன்மேலும் இன்பம் தருவதாகும்.
Even as good literature enraptures its reader the attachment of good men increases a king’s happiness (p) Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become.
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் |
மேற்செனறு இடித்தற் பொருட்டு. 784-
நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அன்று;அவர் மிகுதியாகத் தவறுசெய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.
Friendship is made not for pleasure but it is a corrective to him who errs on the other side (p) Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression.
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் |
நட்பாங் கிழமை தரும். 785-
நட்புச் செய்வதற்கு ஒருவரோடு ஒருவர் கலந்துபேசிப் பழகுதல் வேண்டியதில்லை; இருவரிடமும் உள்ள ஒத்த உணர்ச்சிகளே, நட்பு என்னும் உரிமையைத் தந்துவிடும்.
Friendship is not cultivated by mere acquaintance It is the harmony that cements the bond of friendship (p) Living together and holding frequent intercourse are not necessary (for friendship) ; (mutual) understanding can alone create a claim for it.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து |
அகநக நட்பது நட்பு. 786-
உள்ளம் கலக்காமல், முகத்தோற்றத்தில் மகிழ்ச்சி காட்டி நட்புச்செய்வது நல்ல நட்பு ஆகாது; நெஞ்சத்தின் உள்ளேயும் மகிழ்ச்சியோடு நட்புச்செய்வதுதான் நல்ல நட்பு.
Smile is no index for friendship Real friendship makes the heart also smile (p) The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship.
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் |
அல்லல் உழப்பதாம் நட்பு. 787-
நண்பனுக்கு அழிவு வரும்போது அதை விலக்கி, அவனை நிலைபெறச் செய்து, தன்னையும் மீறிய அழிவின்போது தானும் அவனோடு துயரப்படுவதே நல்ல நட்பாகும்.
Friendship prevents harmful deeds being committed and does beneficial things sharing the other’s misfortunes (p) (True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way, and, in case of loss if shares his sorrow (with him).
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே |
இடுக்கண் களைவதாம் நட்பு. 788-
ஆற்று வெள்ளத்தில் உடையை இழந்தவனது மானத்தை மறைக்க, அவன் கை உடனே உதவுவதுபோல, நண்பன் துன்பத்தை விரைந்து நீக்குவதுதான் நல்ல நட்பு.
Friendship removes suffering even as promptly as the hand which clutches the slipping garment (p) (True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly).
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி |
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. 789-
நட்பு என்பது நிலையாகத் தங்கியிருக்கும் இடம் யாது?" என்றால், மனமாறுபாடு இல்லாமல், முடிந்த இடமெல்லாம், இணைந்துநின்று காத்து பேணும் நிலையாகும்.
If one asks where friendship abides, it lies in timely aid (p) Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice or virtue and wealth).
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று |
புனையினும் புல்லென்னும் நட்பு. 790-
'இவர் எமக்கு இப்படிப்பட்டவர்', 'யாம் இவருக்கு இத்தன்மைவர்' என்று, நட்பின் அளவைச் சொன்னாலும், அந்த நட்பு தன் சிறப்பை இழந்து போகும்.
Even one may say, “These are my friends; I am deeply attached to them" Yet, it may be insignificant friendship (p) Though friends may praise one another saying, "He is so intimate with us, and we so much (with him) "; (still) such friendship will appear mean.
2.3.7 நட்பாராய்தல் Choosing friends [To Top]
நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின் |
வீடில்லை நட்பாள் பவர்க்கு. 791-
நன்றாக ஆராயாமல் நட்புச் செய்வதைவிடக் கெடுதி எதுவும்| இல்லை; அப்படி நட்புச் செய்தபின் கைவிடுதல், நட்பை விரும்புவோரால் முடிவதும் இல்லை.
Nothing causes greater harm than the indiscriminate choice of friends; for one cannot give up one’s chosen friends (p) As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him) , there is no evil so great as contracting a friendship without due inquiry.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை |
தான்சாம் துயரம் தரும். 792-
பலப்பல வகையாலும் ஒருவனைப்பற்றி ஆராய்ந்து தெளிந்தபின் கொள்ளாத நட்பானது, தானே முடிவில் சாக வேண்டிய அளவுக்குப் பெரும் துயரத்தைத் தந்துவிடும்.
The friendship entered into without repeated tests causes grief till the end of one’s life (p) The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death.
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா |
இனனும் அறிந்தியாக்க நட்பு. 793-
ஒருவன் குணத்தையும், அவன் பிறந்த குடியின் சிறப்பையும், அவன் குற்றங்குறைகளையும், நிலையாக அவனோடு இருக்கும் தோழர்களையும் அறிந்தே, நட்புச் செய்ய வேண்டும்.
Make friends with one after knowing one’s character, ancestry, defects and one’s great associates (p) Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one's relations.
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் |
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. 794-
உயர்ந்த குடியிலே பிறந்தவனும், பழிச்சொற்களுக்கு வெட்கப்படுகிறவனும் ஆகிய ஒருவனை, எந்தப் பொருளைக் கொடுத்தானாலும் நட்பாக்கிக் கொள்ளவேண்டும்.
Even by paying a price secure the friendship of one of noble family who fears a blot on his character (p) The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing.
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய |
வல்லார்நடபு ஆய்ந்து கொளல். 795-
நாம் தவறு செய்யும்பொழுது கடுமையாகப் பேசியும், மேலும் செய்யாதபடி தடுத்தும், உலக நடையை அறிவதற்கு வல்லவரின் நட்பினையே கொள்ளவேண்டும்.
Make after proper test friendship with the wise who make you weep for a crime and chastise when you err (p) You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach you (the ways of) the world.
கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரை |
நீட்டி அளப்பதோர் கோல். 796-
ஒருவனுக்கு கெடுதல் உண்டாவதாலும் ஒருவகை நன்மை உண்டு; அது, நண்பரின் உறவை அளந்து அறியும் அளவுகோலாக அது விளங்குவதுதான்.
Adversity has its uses, for it is the touchstone that tries the genuine friend (p) Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection of one's) relations.
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் |
கேண்மை ஒரீஇ விடல். 797-
ஒருவனுக்கு ஊதியமாவது யாதென்றால், அறிவற்றவர்களோடு அறியாமல் கொண்ட நட்பினை, அவரைப் பற்றித் தெரிந்த அப்பொழுதிலேயே விட்டுவிடுதல் ஆகும்.
One must regard it as a windfall if one is able to shake off unwise friends (p) It is indead a gain for one to renounce the friendship of fools.
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க |
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. 798-
உள்ளம் சிறுமை கொள்ளும்படி எதனையுமே நண்பனைக் குறித்து எண்ணக்கூடாது; அல்லல் காலத்திலே கைவிட்டுப் போனவர் நட்பையும் விட்டுவிட வேண்டும்.
Refrain from doing things which make your heart shrink Likewise avoid friends who desert you in adversity (p) Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity.
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை |
உள்ளினும் உள்ளஞ் சுடும். 799-
நாம் கெட்டுப்போன காலத்திலே, நம்மைக்கைவிட்டு விலகிப் போனவரின் நட்பைப்பற்றிச் சாகிற காலத்திலே நினைத்தாலும், நம் உள்ளம் வேதனையால் எரியும்.
Friendship of those who fall off in adversity continues to rankle in your heart of hearts till your death (p) The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one's mind at the time of death.
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் |
ஒருவுக ஒப்பிலார் நட்பு. 800-
குற்றம் இல்லாத நல்லோர்களின் நட்பையே கொள்ளவேண்டும்; தகுதியில்லாத கீழோரின் நட்பினை, ஒன்றைக் கொடுத்தாவது விட்டுவிடுதல் வேண்டும்.
Count the friendship of the faultless and release yourself even at a price from friends not of approved conduct (p) Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world).
2.3.8 பழைமை Intimacy, Familiarity [To Top]
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் |
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. 801-
'பழமை என்னும் தொடர்பின் தன்மை யாது? என்றால், அது, உண்டாகிய உரிமைத் தொடர்பை எதுவும் சிதைத்து விடாமல் காத்துவரும் நல்ல நட்பு ஆகும்.
What is old friendship? It is that which willingly submits to friendly interferences (p) Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy).
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு |
உப்பாதல் சான்றோர் கடன். 802-
நட்புக்கு உறுப்பாவது நெருக்கமாகப் பொருந்தும் உரிமைத் தன்மை ஆகும்; அப்படிப்பட்ட உரிமைத் தன்மைக்கு இலக்கணமாக நடத்தல் சான்றோரது கடமை.
The soul of friendship is perfect freedom To be of cheer in friendly interference is the duty of the wise (p) The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise.
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை |
செய்தாங்கு அமையாக் கடை. 803-
தாம் கொண்ட நெருக்கமான உறவுத் தன்மையானது, தம் நண்பரிடத்திலும் அமைந்திராவிட்டால் அவரோடு நெடுங்காலம் பழகிய நட்பும் என்ன பயனைச் செய்யும்?
What use is old friendship if one’s intimacy does not approve of one’s acts? (p) Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy?
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் |
கேளாது நட்டார் செயின். 804-
தம்மோடு கொண்ட நெருக்கமான நட்புரிமை காரணமாக, ஒரு செயலைச் செய்துவிட்டாலும் அதனைத் தாமும் விரும்பினவரைப் போல் இருப்பவரே, நல்ல நண்பர்கள்.
If friends voluntarily do their duty through intimacy the wise accept it with approval (p) If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability.
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க |
நோதக்க நட்டார் செயின். 805-
நட்பாகக் கொண்டவர் நாம் மனம் விரும்பாத ஒரு செயலைச் செய்தாரென்றால், அதனை அறியாமை என்று நினைக்கக் கூடாது; நட்புரிமை என்றே நினைக்க வேண்டும்.
If a friend acts contrary to one’s wishes, treat it as not due to ignorance but to intimacy (p) If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy.
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் |
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. 806-
அறிவுடையவர், தமது தொல்லைகளின் போது உதவியாக நின்றவரின் தொடர்பை, அவர் தொலைவான இடங்களுக்குப் போனாலும்கூடக் கைவிட மாட்டார்கள்.
Old friends may do harm but it is the quality of friendship not to abandon them (p) Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends.
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் |
வழிவந்த கேண்மை யவர். 807-
அன்பாலே பொருந்திய நட்பை உடையவர்கள், அழிவு வரக்கூடிய ஒரு செயலைச் செய்தாலும், அவர்மீது நாம் கொண்டிருந்த அன்பு அறுந்து போகாது.
Old and loving friends, even when betrayed do not break off in their love (p) Those who have (long) stood in the path of affection will not give it up even if their friends cause (them) their ruin.
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு |
நாளிழுக்கம் நட்டார் செயின். 808-
நண்பரின் குற்றங் குறைகளைப் பிறர் சொன்னாலும் கேளாத நட்புரிமை வல்லவர்களுக்கு, நண்பர் குற்றம் செய்தால், அது அந்நாளின் குறையாகவே தோன்றும்.
Intimacy is the refusal to hear about friend’s faults Noble friends smile that day when their friends commit faults (p) To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may commit a fault.
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை |
விடாஅர் விழையும் உலகு. 809-
கெடுதல் இல்லாத வழியோடு தொடர்ந்து பழகி வந்த நட்பினை எதனாலும் கைவிடாத பண்பினரை, உலகத்தார் எல்லாருமே நண்பராகக் கொள்ள விரும்புவார்கள்.
The world applauds long established friends who do not forsake one another (p) They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy.
விழையார் விழையப் படுப பழையார்கண் |
பண்பின் தலைப்பிரியா தார். 810-
பழைமையான நண்பர்களிடத்திலும், சற்றும் விலகாமல் நடந்துகொள்ளும் பண்பினர், தம் பகைவராலும் விரும்பி நட்பாக்கிக் கொள்ளப் படுவார்கள்.
Even foes long for those who do not forsake their old and erring friends (p) Even enemies will love those who have never changed in their affection to their long-standingfriends.
2.3.9 தீ நட்பு Bad friendship [To Top]
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை |
பெருகலிற் குன்றல் இனிது. 811-
நம்மை அள்ளிப் பருகுவர் போல் அன்பு காட்டினாலும், நல்ல பண்பில்லாத தீயோரது நட்பானது, நாளுக்குநாள் பெருகுவதைவிடக் குறைந்துபோவதே இனியது.
Let that kind of friendship diminish rather than increase if it is really pretentious and devoid of genuine feeling (p) The decrease of friendship with those who look as if they would eat you up (through excess of love) while they are really destitute of goodness is far better than its increase.
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை |
பெறினும் இழப்பினும் என்? 812-
செல்வம் உண்டானால் நட்புச் செய்தும், அது போனால் விலகியும் போகின்ற, ஒத்த தன்மையில்லாத தீயோரின் நட்பினைப் பெற்றாலும், இழந்தாலும் ஒன்றுதான்.
What does it matter whether we gain or lose the equal friendship of those who befriend if advantageous to them and betray if disadvantageous? (p) Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave when there is none?
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது |
கொள்வாரும் கள்வரும் நேர். 813-
தாம் அடைவதையே சீர்தூக்கிப் பார்த்திருக்கும் நட்பும்,தாம் பெறுவதைக் கொள்ளும் விலைமகளிரும், நம் பொருளைக் களவாடும் கள்வரும், ஒரே தன்மையினரே!
Those who value friendship for the gain thereof are only avaricious prostitutes and thieves (p) Friendship who calculate the profits (of their friendship) , prostitutes who are bent on obtaining their gains, and thieves are (all) of the same character.
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் |
தமரின் தனிமை தலை. 814-
போர்க்களத்தின் இடையில் நண்பரை விட்டுவிட்டுத் தாம் ஓடிப்போய்விடும், கல்லாத விலங்கு போன்றவரின் நட்பைவிடத் தனிமையே மிகவும் சிறந்தது.
Better solitude than the alliance of the wicked who fail like the unbroken steed its rider in the battlefield (p) Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battle.
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை |
எய்தலின் எய்தாமை நன்று. 815-
நமக்குத் துன்பம் வந்தபோது உதவி செய்து காப்பாற்றுவதற்கு வராத சிறுமையாளரது புன்மையான நட்பை அடைதலைவிட, அடையாததே நன்மையாகும்.
Better to abandon than contract the friendship of the lowly who do not aid you in adversity (p) It is far better to avoid that to contract the evil friendship of the base who cannot protect (their friends) even when appointed to do so.
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் |
ஏதின்மை கோடி உறும். 816-
பேதையாளனது மிகவும் செறிவான நட்பைக் காட்டிலும், அறிவுடையவர்களின் தொடர்பு இல்லாமல் இருப்பது, ஒருவனுக்கு கோடி நன்மை தருவதாக விளங்கும்.
Very much more valuable is the hatred of the wise than the doting friendship of fools (p) The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool.
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் |
பத்தடுத்த கோடி உறும். 817-
வெற்றுரை பேசிச் சிரித்து மகிழ்வதற்கு மட்டுமே பயன்படும் தீயோரின் நட்பைக் காட்டிலும், பகைவராலே, பாத்துக் கோடிக்கும் மேலான நன்மை நமக்குக் கிடைக்கும்.
Ten thousand times better is the enmity of foes than the friendship which makes one a laughing stock (p) What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter.
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை |
சொல்லாடார் சோர விடல். 818-
நம்மாலே செய்து முடிக்கக்கூடிய செயலையும் செய்ய விடாமல், வீண்பொழுது போக்குபவரது நட்பு உறவை, அவரோடு பேசுவதைக் கைவிட்டு, நீக்கிவிடவேண்டும்.
Abandon without fuss friends who make a possible thing impossible (p) Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do.
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு |
சொல்வேறு பட்டார் தொடர்பு. 819-
தம் செயல்கள் வேறாகவும், தம் பேச்சுக்கள் வேறாகவும் நடப்பவரின் தொடர்பானது, நனவில் மட்டுமே அல்லாமல் கனவிலும்கூடத் துன்பமானதாகும்.
The alliances of men whose words are different from their deeds afford no pleasure even in a dream (p) The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one's) dreams.
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ |
மன்றில் பழிப்பார் தொடர்பு. 820-
வீட்டிலுள்ளபோது நட்புரிமை பேசிவிட்டு, பொதுமன்றிலே பழித்துப்பேசுபவரின் தொடர்பு, எந்தச் சிறிய அளவுக்கேனும், நம்மை அடையாதபடி காத்தல் வேண்டும்.
Avoid the friendship however little, of those who befriend you at home but betray you in the assembly (public) (p) Avoid even the least approach to a contraction of friendship with those who would love you in private but ridicule you in public.
2.3.10 கூடாநட்பு Friends to avoid [To Top]
சீரிடம் காணின் எறிதற்குப் பட் டடை |
நேரா நிரந்தவர் நட்பு. 821-
உள்ளத்தால் நெருக்கமில்லாமல் பழகுகிறவரது நட்பானது நம்மை அழிப்பதற்கான இடம் கண்டால், எறிவதற்கு மறைந்துள்ள பட்டடை போன்றது ஆகும்.
Friendship of the wicked is but a pretext to stab you cunningly in an unwary mood (p) The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself.
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் |
மனம்போல வேறு படும். 822-
நம் இனத்தார் போலவே உறவுகாட்டி, உள்ளத்திலே நம் இனம் அல்லாத கீழோரின் நட்பானது விலைமகளிர் மனம் போலப், பெறுகிற பயனுக்குத் தகுந்தபடி மாறிவிடும்.
Inconstant as the heart of a woman is the false friendship of seeming friends (p) The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women.
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் |
ஆகுதல் மாணார்க் கரிது. 823-
பலவான நல்ல அறநூல்களை எல்லாம் கற்றிருந்தாலும், தம் மனத்திலே நல்லபண்பினர் ஆகுதல் என்பது, பெருந்தன்மைப்பண்பு இல்லாதவருக்கு அரிய செயலாகும்.
A wicked heart never mellows with learning (p) Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா |
வஞ்சரை அஞ்சப் படும். 824-
முகத்திலே இனிமை தோன்றச் சிரித்துப் பேசினபோதும் அகத்திலே துன்பத்தையே நினைக்கும் வஞ்சகரின் உறவினை, விளையும் தீமைக்கு அஞ்சி, விட்டுவிட வேண்டும்.
Fear those who smile and smile but are villainy at heart (p) One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart.
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் |
சொல்லினால் தேறற்பாற்று அன்று. 825-
மனத்தாலே நம்மோடு நெருக்கம் கொள்ளாதவரை, எந்த ஒருவகையாலும், அவர் சொல்லினால் மட்டுமே நல்ல நண்பராகத் தெளிந்துகொள்ளக் கூடாது.
It is impossible to convince those whose minds do not agree (p) In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் |
ஒல்லை உணரப் படும். 826-
நம்மிடம் பேசும்போது நமக்கு நண்பரைப் போலவே நல்ல பேச்சுகளைச் சொன்னாலும், நம்மோடு ஒட்டாதவரின் வஞ்சகத்தை விரைவிலேயே அறிந்துவிடலாம்.
Of what avail are the friendly words of your foe? (p) Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import).
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் |
தீங்கு குறித்தமை யான். 827-
வில்லின் வளைவு தீமையைக் குறியாகக் கொண்டதே; இவ்வாறே பகைவரிடத்திலிருந்து வரும் வணக்கமான பேச்சையும் தீமைதரும் என்று தள்ளிவிட வேண்டும்.
Do not trust the seeming humility of the enemy’s speech for the bow bends only to do harm (p) Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes.
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் |
அழுதகண் ணீரும் அனைத்து. 828-
நம்மைத் தொழும் போதுகூடப் பகைவரது கையினுள் கொல்வதற்கான படை மறைக்கப்பட்டிருக்கும்; பகைவர் அழுதுவடிக்கும் கண்ணீரும் அந்தத் தன்மையதே!
The folded hands of the enemy in an attitude of devotion conceal a weapon Likewise are his false tears (p) A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature.
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து |
நட்பினுள் சாப்புல்லற் பாற்று. 829-
வெளிப்பட மிகுதியாக நட்புச்செய்து, உள்ளத்திலே நம்மை இகழுகிறவர்களை, நாமும் மகிழ்ச்சியடையச் செய்து, நம் உள்ளத்தில் அந்த நட்பை அழித்துவிடல் வேண்டும்.
Policy requires that hostility to a foe should be hidden under a smile (p) It is the duty of kings to affect great love but make it die (inwardly) ; as regard those foes who shew them great friendship but despise them (in their heart).
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு |
அகநட்பு ஒரீஇ விடல். 830-
பகைவரும் நட்பாகப் பழகுவதற்கு ஏற்ற காலம் வருங்காலத்திலே அவருடன் முகத்தளவால் நட்புச்செய்து, உள்ளத்தில் போற்றாது நீக்கி விடுதல் வேண்டும்.
When the enemy pretends alliance, receive him with outward smile and inward distrust (p) When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former).
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு |
ஊதியம் போக விடல். 831-
பேதைமை என்பதன் தன்மை யாது? என்றால், ஒன்றைச் செய்யும்போது வரும் துன்பத்தை ஏற்றுக்கொண்டு, அதனால் வரும் ஊதியத்தை விட்டுவிடுதல் ஆகும்.
Stupidity clings to the evil and lets slip the good (p) Folly is one (of the chief defects) ; it is that which (makes one) incur loss and forego gain.
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை |
கையல்ல தன்கட் செயல். 832-
பேதைமை என்பவற்றுள் எல்லாம் பெரிய பேதைமையாவது விரும்பத் தகாத ஒரு செயலைச் செய்யத் தொடங்கி, அதையும் பொருத்தமற்ற வகையில் செய்தல் ஆகும்.
The crown of stupidity is the desire to do evil (p) The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden.
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் |
பேணாமை பேதை தொழில் 833-
பழிக்கு வெட்கப்படாமையும், நன்மைகளை விரும்பாதிருத்தலும், அன்பரிடம் அன்பு கொள்ளாமையும், எதனையும் பேணிக் காவாமையும், பேதையரது தொழிலாகும்.
Shamelessness, negligence, arrogance and giddiness mark the stupid (p) Shamelessness indifference (to what must be sought after), harshness, and aversion for everything (that ought to be desired) are the qualities of the fool.
ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப் |
பேதையின் பேதையார் இல். 834-
நூல்களை முறையாக ஓதி உணர்ந்தும், பிறருக்குச் சொல்லி வந்தும், தான் அடக்கத்தைக் கொள்ளாத பேதையிலும், பெரிய பேதையர் உலகில் எவரும் இலர்.
Most stupid is the learned fool who remains disloyal to his own noble teaching (p) There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and even taught it to others, does not walk according to his own teaching.
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் |
தான்புக் கழுந்தும் அளறு. 835-
இந்தப் பிறப்பில் பேதைமைச் செயல்களையே செய்துவரும் பேதை, தொடர்ந்துவரும் ஏழு பிறப்பினையும், தான் புகுந்து அழுந்தும் நரகங்களாகவே காண்பான்.
Acts of folly done in one birth cause misery to him in seven more births to come (p) A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births.
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் |
பேதை வினைமேற் கொளின். 836-
ஒன்றின் செய்வகை அறியாத பேதை அதனைச் செய்வதற்கு முற்படுவதால், அது பொய்யாகிப் போவதுடன், அவனும் தளை பூண்கின்ற துயரத்தை அடைவான்.
The task undertaken by a foolish man is spoiled and also ruined (p) If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all? He will even adorn himself with fetters.
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை |
பெருஞ்செல்வம் உற்றக் கடை. 837-
பேதை, தன் முன்வினைப்பயனால் பெருஞ்செல்வத்தை அடைந்த காலத்தில், தொடர்பில்லாத பலரும் நன்றாக அனுபவிக்க, அவன் | சுற்றத்தார் பசியால் வாடுவர்.
Strangers and not relatives fatten on the unlimited wealth of a fool (p) If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve.
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் |
கையொன்று உடைமை பெறின். 838-
பேதை ஒரு பொருளைத் தனது உடைமையாகப் பெற்றால், மயங்கிய ஒருவன் மேன்மேலும் கள்ளைப் பருகியதுபோல நிலைமாறி வழிதவறி நடப்பான்.
A fool that lives by a fortune is like a mad man in his drunken glee (p) A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy.
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் |
பீழை தருவதொன் றில். 839-
ஒருவகையில், பேதையோடு கொள்ளும் தொடர்பும் இனிமை தருவதே யாகும்; அதுதான், அவனைப் பிரிந்த விடத்துத் துன்பம் தரும் தன்மை இல்லாததால்.
Verily sweet are the uses of fools’ love For nothing is lost in a separation (p) The friendship between fools is exceedingly delightful (to each other) : for at parting there will be nothing to cause them pain.
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் |
குழாஅத்துப் பேதை புகல். 840-
சான்றோர்களின் கூட்டத்தில் ஒரு பேதை புகுதலானது, மாசுபடிந்த காலைக் கழுவாமல் தொழுகைக்குரிய பள்ளியினுள்ளே எடுத்து வைப்பது போன்றதாகும்.
A fool’s entry into the assembly of the wise is like one’s unclean foot on the bed (p) The appearance of a fool in an assembly of the learned is like placing (one's) unwashed feet on a bed.
2.3.12 புல்லறிவாண்மை Petty Ignorance [To Top]
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை |
இன்மையா வையா துலகு. 841-
அறிவில்லாத தன்மையே, வறுமையுள் கொடிய வறுமை; பிற, பொருள் இல்லாத வறுமையை உலகம் நிலையான வறுமையாக ஒருபோதும் கருதாது.
Of all forms of poverty, poverty of intellect is the most serious; other forms of poverty are not regarded serious by the world (p) The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such.
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் |
இல்லை பெறுவான் தவம். 842-
அறிவில்லாத ஒருவன்,மனமகிழ்ச்சியோடு ஒரு பொருளை ஒருவனுக்குத் தருவதென்பது, பெறுவானது தவத்தின் பயனே அல்லாமல், வேறு எதனாலும் இல்லை.
If a fool makes a gift with pleasure, it is due to the recipient’s luck (p) (The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth).
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை |
செறுவார்க்கும் செய்தல் அரிது. 843-
அறிவில்லாதவர், தமக்குத்தாமே செய்துகொள்ளும் வருத்தம் தரக்கூடிய துன்பங்கள், அவரது பகைவராலும் அவருக்குச் செய்யமுடியாதவையாக இருக்கும்.
The unwise inflict upon themselves more harm than the enemies can think of (p) The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes.
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை |
உடையம்யாம் என்னும் செருக்கு. 844-
அறியாமை என்று சொல்லப்படுவது யாது? என்றால், அஃது, அறிவில்லாதவனும், தான் அறிவுடையவன் என்று நினைத்துச் செருக்கு அடைதலாகும்!
Where does conceit dwell but in the immature mind? (p) What is called want of wisdom is the vanity which says, "We are wise".
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற |
வல்லதூஉம் ஐயம் தரும். 845-
தான் கல்லாத ஒரு செயலையும், அறிவில்லாததால் துணிந்து செய்யத் தொடங்குதல், எதையும் குறையில்லாமல் செய்யவல்ல செயல்களிலும், ஐயத்தைத் தரும்.
Pretension to knowledge beyond one’s province makes men suspect the proficiency in one’s own province (p) Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered.
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் |
குற்றம் மறையா வழி. 846-
தம்மிடத்திலே உள்ள குற்றங்கள் மறையாதபோது, உடல் முழுவதும் ஆடைகளாலே மறைத்துக்கொண்டு, நல்லவர் போலத் திரிதல், அறிவற்ற தன்மை ஆகும்.
What availeth one’s garment if one’s defects lie naked to the world? (p) Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them).
அருமறை சோரும் அறிவிலான் செய்யும் |
பெருமிறை தானே தனக்கு. 847-
அரியவான மறைகளைக் கற்றும், உண்மைப்பொருளை அறியாமல் சோர்வு அடைகின்ற அறிவில்லாதவன், தனக்குத்தானே பெரிய தீமைகளைச் செய்து கொள்வான்.
A learned fool doth harm to himself (p) The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself.
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் |
போஒம் அளவுமோர் நோய். 848-
அறிவுடையோர் 'இன்னின்னபடி செய்க' என்று ஏவிய போதும், அதன்படி செய்யமாட்டாதவன், தானும் தெளியாதவன், உயிர் போகுமளவும் துன்பம் அடைவான்.
A fool neither listens to wise counsel nor exerts himself He will be a plague to the world till his death (p) The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a burden (to the earth) till it departs (from the body).
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் |
கண்டானாம் தான்கண்ட வாறு. 849-
தன் அறியாமையால், தான் கண்டபடியே பிறருக்குக் காட்டுபவன்,தானும் உண்மை காணாதவன்,என்றுமே தான் கண்டபடி காண்பவனாகவே விளங்குவான்.
He who seeks to enlighten a fool befools himself i For the conceited fool thinks that he knows everything (p) One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself "wise in his own conceit".
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து |
அலகையா வைக்கப் படும். 850-
உலகத்தார் 'உண்டு' என்னும் ஒரு பொருளை, தன்னுடைய அறியாமையாலே 'இல்லை' என்று சொல்லுபவன் உலகத்தாரால் பேயாகக் கருதி ஒதுக்கிவைக்கப் படுவான்.
He who is out of tune with the world is regarded a demon (p) He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth.
2.3.13 இகல் Hatred Hostility [To Top]
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் |
பண்பின்மை பாரிக்கும் நோய். 851-
எல்லா உயிர்களுக்கும், பிற உயிர்களோடு கூடாமை என்னும் தீய குணத்தை வளர்க்கும் குற்றம், "இகல்" என்று பெரியோர்கள் சொல்லியுள்ளார்கள்
Hatred is a foul disease that brings discord among men (p) The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி |
இன்னாசெய் யாமை தலை. 852-
தம்முடன் கூடாமையை நினைத்து, ஒருவன் வெறுக்கக்கூடியன செய்தானானாலும், அவனோடு மாறுபடுதலைக் குறித்து, அவனுக்குத் துன்பம் செய்யாதிருப்பதே உயர்ந்தது!
What if one does us harm out of hatred? It is the height of wisdom to resist not evil (p) Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred.
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் |
தாவில் விளக்கம் தரும். 853-
மாறுபாடு என்னும் துன்பம் செய்யும் நோயை மனத்தில் இருந்தே நீக்கிவிட்டால், அவனுக்கு எந்தக் காலத்திலும் உள்ளவனாகின்ற நிலையான புகழை, அதுவே தரும்.
He who is rid of the full disease of hatred crowns himself with eternal glory (p) To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame.
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் |
துன்பத்துள் துன்பங் கெடின். 854-
மாறுபாடு' என்னும் துன்பங்களுள் பெரிதான துன்பம் இல்லையானால், அவ்வின்மையே ஒருவனுக்கு இன்பங்களுள் எல்லாம் சிறந்த இன்பத்தைத் தரும்.
It is the joy of joys to bury hatred, the evil of all evils (p) If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight.
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே |
மிக்லூக்கும் தன்மை யவர். 855-
தம் உள்ளத்திலே மாறுபாடு தோன்றிய பொழுது, அதனை ஏற்றுக் கொள்ளாமல் சாய்ந்து ஒழுகவல்லவரை வெல்லக் கருதும் தன்மை உடையவர், எவருமே இலர்.
Can anyone overcome him who has conquered hatred? (p) Who indeed would think of conquering those who naturally shrink back from hatred?
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை |
தவலும் கெடலும் நணித்து. 856-
'பிறரோடு அவரினும் மிகுதியாக மாறுபடுதல் எனக்கு இனிது' என்று, அதனைச் செய்பவனது உயிர்வாழ்க்கை, சிறுபொழுதிற்குள் பிழைத்தலும் கெடுதலும் ஆகிவிடும்.
Swift ruin awaits one who delights in discord (p) Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred.
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் |
இன்னா அறிவி னவர். 857-
இகலோடு பொருந்தும் தீய அறிவினைக் கொண்டவர், வெற்றி பொருந்துதலை உடைய நீதிநூற்களின் பொருள்களை ஒருபோதுமே உணர்ந்து அறிய மாட்டார்கள்.
Those who nourish hatred will never see the triumphant light of truth (p) Those whose judgement brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth.
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை |
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு. 858-
தன் உள்ளத்திலே மாறுபாடு தோன்றியபோது, அதனை எழாமல் தடுத்துக் கொள்ளுதலே ஆக்கம் தருவதாகும்; அதனை மிகுத்துக் கொண்டால் அவனுக்குக் கேடுவரும்.
To fight against hatred is to save one’s soul; to harbour it is to court one’s own ruin (p) Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin.
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை |
மிகல்காணும் கேடு தரற்கு. 859-
தனக்கு நல்ல காலம் வரும்போது, காரணமிருந்தாலும் ஒருவன் இகலைப்பற்றி நினைக்கமாட்டான்; தனக்குக் கேடு காலம் வரும்போது பெரிதாக மாறுபடுதலை நினைப்பான்.
Freedom from hatred is the sign of one’s prosperity Presence of hatred foreshadows decline of one’s fortune (p) At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase.
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் |
நன்னயம் என்னும் செருக்கு. 860-
மாறுபாடு' என்னும் ஒன்றினால் ஒருவனுக்கு எல்லாத் துன்பங்களும் உண்டாகும்; நட்புச் செயலினாலோ, நல்ல நீதியாகிய பெருமிதநிலை உண்டாகும்.
From love springs the proud joy of a righteous life (p) All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues.
2.3.14 பகைமாட்சி Enemy's might [To Top]
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா |
மெலியார்மேல் மேக பகை. 861-
தம்மைவிட வலியவருக்குப் பகையாகி அவரை எதிர்த்தலைக் கைவிடல் வேண்டும்; தம்மினும் மெலியவருக்குப் பகையாவதை விடாமல் கொள்வதற்கு விரும்ப வேண்டும்.
Avoid hostility towards the powerful do not cease from hostility towards the weak (p) Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் |
என்பரியும் ஏதிலான் துப்பு. 862-
தன் சுற்றத்தாரிடம் அன்பில்லாதவன், வலிய துணையில்லா தவன், தானும் வலிமையற்றவன், பகைவரது வலிமையை எவ்வாறு, எதனால் போக்க முடியும்?
One devoid of love has neither the strength nor support How can he stem the tide of the advancing foe? (p) How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe?
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் |
தஞ்சம் எளியன் பகைக்கு. 863-
அஞ்சுபவன், அறியவேண்டுவதை அறியாதவன், பிறருடன் பொருந்தாதவன், எவருக்கும் கொடுத்து உதவாதவன், பகைவருக்கு அழிப்பதற்கு எளியவனாவான்.
He who is cowardly, ignorant, restless and niggardly, falls an easy prey to his enemy (p) In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் |
யாங்கணும் யார்க்கும் எளிது. 864-
நீங்காத சினத்தை உடையவன்,நிறைவான மனவலிமை இல்லாதவன் ஆகிய ஒருவன்மீது பகைத்து வெற்றியடைதல், எக்காலத்திலும் எவர்க்கும் எளிதாகும்.
He who does not abstain from anger and has insufficient resources can be attacked by any one at any time (p) He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all.
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் |
பண்பிலன் பற்றார்க்கு இனிது. 865-
நீதிநூல்களைக் கல்லாதவன்,அவை விதித்த செயல்களைச் செய்யாதவன், தனக்கு வரும் பழியைப் பாராதவன். பண்பற்றவன், ஆகியவனைப் பகைத்தலும் இனிதாகும்.
He who does not walk in the right path or follow the rule, who is callous to public odium falls an easy victim to his enemies (p) (A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them cares not for reproach and is not possessed of good qualities.
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் |
பேணாமை பேணப் படும். 866-
தன்னையும் பிறரையும் அறியாமைக்கு காரணமான சினம் கொண்டவன், மேன்மேலும் பெருகும் காமத்தான் பகைமை, பிறரால்விரும்பி ஏற்றுக் கொள்ளப்படும்.
One can court the enmity of the blindly wrathful and the inordinately lustful (p) Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure.
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து |
மாணாத செய்வான் பகை. 867-
தொடங்கும்போது உடனிருந்து, பின் கேடுகளைச் செய்பவன் பகைமையை, சில பொருள்களை அழியும்படி கொடுத்தாவது உறுதியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
It is good to get the enmity of one who is blind to one’s purpose (p) It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment).
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு |
இனனிலனாம் ஏமாப் புடைத்து. 868-
நல்ல குணம் எதுவும் இல்லாதவனாய், குற்றங்களும் பலவாக உள்ளவன், எவ்வகைத் துணையுமே இல்லாதவன் ஆவான்; அப்படி இல்லாததே அவன் பகைவருக்குத் துணையாகும்.
One who is void of virtue but full of vice invites the foe 185 (p) He will become friendless who is without (any good) qualities. and whose faults are many; (such a character) is a help to (his) foes.
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா |
அஞ்சும் பகைவர்ப் பெறின். 869-
நீதியை அறிதல் இல்லாதவரும் அஞ்சுபவரும் ஆகியவரைப் பெற்றால், அவரைப் பகைத்தவர்க்கு, உயர்ந்த இன்பங்கள் எல்லாம் சென்று நீங்காமல் பொருந்தி யிருக்கும்.
The cowardly and the foolish gladden the heart of the foe beyond measure (p) There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid.
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் |
ஒல்லானை ஒல்லா தொளி. 870-
நீதிநூலைக் கல்லாதவனோடு பகைகொண்டு அழிப்பதனால் வரும் சிறுபொருளை, எப்போதும் தான் அடைவதற்கு நினையாதவனை, வெற்றிப் புகழும் சேர்ந்திருக்காது.
Glory awaits one who does not exploit the ignorant (p) The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe).
2.3.15 பகைத்திறந்தெரிதல் Appraising Opponents [To Top]
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் |
நகையேயும் வேண்டற்பாற்று அன்று. 871-
'பகை' என்று கூறப்படும் தீமை தருவதனை,ஒருவன், விளையாட்டிடத்தில் என்றாலும் விரும்புதல் நன்மையாகாது இதுவே நீதி நூல்களின் முடிந்த முடிபாகும்.
One should not desire, even in a sportive mood, the evil known as enmity (p) The evil of hatred is not of a nature to be desired by one even in sport.
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க |
சொல்லேர் உழவர் பகை. 872-
வில்லை ஏராகவுடைய உழவரான மறவரோடு பகை கொண்டாலும், சொல்லை ஏராகவுடைய உழவரான நுண்ணறிவை உடையவரோடு பகைகொள்ளக் கூடாது.
You may not fear the sword; but beware of the pen (p) Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words.
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் |
பல்லார் பகைகொள் பவன். 873-
தான் துணைவலிமை இல்லாமல் தனியனாய் இருப்பதறிந்தும், பலருடன் பகை கொண்டு வாழும் அறிவற்றவன், பித்துற்ற மக்களிலும் அறிவிழந்தவன் ஆவான்.
One who incurs the wrath of the enemy is blinder than the mad (p) He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men.
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் |
தகைமைக்கண் தங்கிற்று உலகு. 874-
தான் வேண்டும்போது, தன் பகைவருள் சிலரைப் பிரித்து நண்பராக்கிக் கொள்ளும் சூழ்ச்சித்திறனுடைய அரசனது பெருமையினுள்ளே, இவ்வுலகமே அடங்கிவிடும்.
The world is under the sway of one who has the art of converting an enemy into a friend (p) The world abides in the greatness of that good-natured man who behaves so as to turn hatred into friendship.
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் |
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. 875-
'தனக்கு ஒரு துணை இல்லை; பகையோ எனில் இரண்டு' என்னும்போது, அதனுள் ஒன்றை அப்போதைக்குத் தனக்கு இனிய துணையாகுமாறு செய்துகொள்ளல் வேண்டும்.
One who has no ally but two adversaries must befriend one of them (p) He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).
தேறினும் தேறா விடினும் அழிவின்கண் |
தேறான் பகாஅன் விடல். 876-
பகைவனை முன்பே தெளிந்தாலும் தெளியாவிட்டாலும், தனக்கு மற்றொரு செயலினாலே தாழ்வு வந்தவிடத்து, அவரைக் கூடாதும் நீக்காதும், விட்டுவைக்க வேண்டும்.
In a dark hour assume a neutral attitude either to your known enemy or to an unknown foe (p) Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him).
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க |
மென்மை பகைவர் அகத்து. 877-
தான் நொந்ததைத் தாமாகவே அறியாத நண்பருக்குச் சொல்லவேண்டாம்; வலியிழந்த நேரத்தை எதிர்பார்க்கும் பகைவரிடம் தன் மெலிவையும் புலப்படுத்த வேண்டாம்.
Whisper not your troubles to friends who cannot divine them; betray not your weakness to your enemy (p) Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes.
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் |
பகைவர்கண் பட்ட செருக்கு. 878-
தான் செய்யும் செயலின் வகையை அறிந்து, அது முடிவதற்கு ஏற்றபடி தன்னைப் பெருக்கிச் சோம்பல் புகாமல் காக்கவே, பகைவரிடம் உள்ள செருக்குத் தானே தேய்ந்துவிடும்.
Plan well your design and arm yourself with all the sinews of war (p) The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர் |
கைகொல்லும் காழ்த்த இடத்து. 879-
களைய வேண்டிய முள்மரத்தை அது இளைதான பொழுதே களைந்துவிடுக; முதிர்ந்தபின் அதைக் களை தலைச் செய்தால், அது களைபவர் கையினைத் தான் களைந்துவிடும்.
Nip the thorn in the bud lest it should hurt the hands of those who seek to cut it when hardened into a tree (p) A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் |
செம்மல் சிதைக்கலா தார். 880-
பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு வந்தபோதும், அவர் மீதுள்ள இகழ்ச்சியால் அதனைச் செய்யாத அரசர், பின்னர், உயிரோடு இருப்பதற்கும் உரியவர் ஆகார்.
He is one among the dead who fails to subdue his naughty foe (p) Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe.
2.3.16 உட்பகை Enemy within [To Top]
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் |
இன்னாவாம் இன்னா செயின். 881-
நிழலும் நீரும் நுகரும் காலத்தில் இன்பமானாலும், பின்னர் நோய் செய்யும்; தழுவவேண்டும் சுற்றத்தாரின் இயல்புகளும் முதலில் இனியவாயினும், பின்னர் இன்னாதனவாகும்.
Even shade and water, wholesome as they are, become pernicious where not needed; our kith and kin likewise are (p) Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain.
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக |
கேள்போல் பகைவர் தொடர்பு. 882-
வாளைப்போல வெளிப்பட்டு நிற்கும் பகைவர்க்கு அஞ்சவேண்டாம்; சுற்றத்தார்போல அன்புகாட்டி உள்ளத்தில் பகைமறைத்து நிற்பவருக்கே, அஞ்ச வேண்டும்.
Be not afraid of open enemies with drawn swords; but beware of false friends (p) Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly act) like relations.
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து |
மட்பகையின் மாணத் தெறும். 883-
உட்பகையாக விளங்குபவருக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்; அங்ஙனம் காவாதிருப்பின், தனக்குத் தளர்ச்சி வந்தபோது, அவர்கள் கெடுதல் செய்வார்கள்.
Guard yourselves against your enemies from within In your trying hour they will undermine your strength, like the potter’s knife, cleaving the mind asunder (p) Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter's clay.
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா |
ஏதம் பலவும் தரும். 884-
உள்ளத்தில் திருந்தாத உட்பகை தோன்றினால், அரசன் அதனை அப்போதேஒழிக்க வேண்டும்; இல்லையானால், அஃது சுற்றம் வசமாகாதபடி குற்றங்களைத் தந்து விடும்.
The land is seething with dissensions when the foes from within, appear on the scene (p) The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relations.
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் |
ஏதம் பலவும் தரும். 885-
புறத்தே உறவுமுறைத் தன்மையோடு பழகுவாரிடம் உட்பகை தோன்றினால், அஃது அவனுக்கு இறத்தல் முறைமையோடு கூடிய பல குற்றங்களையும் தரும்.
Many evils dark as death befall a king, when his own kith and kin sow dissensions in the land (p) If there appears internal hatred in a (king's) family; it will lead to many a fatal crime.
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் |
பொன்றாமை ஒன்றல் அரிது. 886-
தனக்கு உட்பட்டவர் இடத்திலேயே பகைமை தோன்றினால், தனக்குச் சாவாதிருப்பது கைகூடுவது என்பதும் எக்காலத்திலும் அரியதாகும்.
If kinsmen were to play to the traitor it would be difficult to escape death (p) If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death.
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே |
உட்பகை உற்ற குடி. 887-
செப்பின் புணர்ச்சிபோல வெளிப்பார்வைக்குப் பொருந்தினவர் ஆயினும், உட்பகை உண்டாகிய குடியிலுள்ளவர்கள் தம் உள்ளத்தினாலே ஒன்றுகூட மாட்டார்கள்.
There will be no real union in a house divided The apparent unity is like the appearance of the casket and the lid seen as one (p) Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid.
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது |
உட்பகை உற்ற குடி. 888-
முன் உயர்ந்து வளர்ந்ததே என்றாலும், உட்பகையுள்ள குடியானது, அரத்தினால் அராவப்பட்ட இரும்பைப் போல் நாளுக்குநாள் தேய்ந்து அழிந்து போகும்.
The family torn with internal dissensions dwindles in strength just like pure gold filed away by an iron file (p) A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away.
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் |
உட்பகை உள்ளதாங் கேடு. 889-
ஒருவனது உட்பகை, அவன் பெருமையை நோக்க, எள்ளின் பிளவு போன்று சிறிதானது என்றாலும், அதனாலும், அவன் பெருமை எல்லாம் பின்காலத்தில் கெட்டுவிடும்.
Internal hostility little as it is, like a tiny seed, hides within a mighty evil (p) Although internal hatred be as small as the fragment of the sesamum (seed) , still does destruction dwell in it.
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் |
பாம்போடு உடனுறைந் தற்று. 890-
மனம் பொருந்தாதவரோடு கூடியிருந்து வாழும் வாழ்க்கை ஒரு குடிசையுள்ளே பாம்போடு கூடத் தங்கியிருந்து வருந்துவதைப் போன்றதாகும்.
Dwelling among men of hidden hate is like dwelling in a hamlet which harbours a snake (p) Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut.
2.3.17 பெரியாரைப் பிழையாமை Not offending the Great [To Top]
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் |
போற்றலுள் எல்லாம் தலை. 891-
மேற்கொண்ட செயல்களை முடிக்கவல்லவரின் ஆற்றல்களை ஒதுக்கக் கூடாது; அதுவே தீங்கு வராமல் காப்பவரின் காவல்களுள் எல்லாம், மிகச் சிறந்தது ஆகும்.
Not to offend the mighty is the crowning means of shielding one self (p) Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil).
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் |
பேரா இடும்பை தரும். 892-
பெரியோர்களை நன்கு மதிக்காமல் நடந்தால், அப் பெரியோரால் அவருக்கு எவ்விடத்தும் நீங்காத துன்பங்களை அது கொடுத்து விடும்.
Lack of reverence for the great results in endless troubles (p) To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் |
ஆற்று பவர்கண் இழுக்கு. 893-
தான் விரும்பிய பொழுதிலேயே பகையரசரைக் கொல்லவல்ல வேந்தரிடத்தே, தான் கெடுதலை வேண்டுபவன், நீதிநூலைக் கடந்து பிழைகளைச் செய்வானாக!
To pick a quarrel with the mighty is to court one’s own ruin (p) If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns).
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு |
ஆற்றாதார் இன்னா செயல். 894-
மூவகை ஆற்றலும் உள்ளவருக்கு, அவை இல்லாதவர் துன்பத்தைச் செய்தல், தானே வரக்கூடிய கூற்றுவனை முற்பட வருமாறு கைகாட்டி அழைப்பதைப் போலாகும்.
Behold the weak trying to do harm to the mighty It is like beckoning unto death (p) The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them).
யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் |
வேந்து செறப்பட் டவர். 895-
பகைவருக்கு வெய்யதான வலிமிகுந்த, வேந்தனால் தாக்கப்பட்ட அரசர், தப்பிப் பிழைத்து எவ்விடத்துச் சென்றாலும், எங்கும் உயிர்பிழைத்திருக்கவே மாட்டார்கள்.
Where is the refuge for one who incurs the wrath of the mighty monarch? (p) Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go.
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் |
பெரியார்ப் பிழைத்தொழுகு வார். 896-
காட்டினுள் சென்றவன், காட்டுத் தீயால் சுடப்பட்டாலும், ஒருவழியாக உயிர்பிழைத்து விடுவான்; பெரியாரைப் பிழைத்து நடந்தவனுக்கு உய்வே கிடையாது.
There is just a chance of saving oneself if one gets caught in a fire; but there is no hope for men who insult the great (p) Though burnt by a fire (from a forest) , one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் |
தகைமாண்ட தக்கார் செறின். 897-
சாபமிடுதலும் அருள்செய்தலும் ஆகிய தகுதிகளால் சிறந்த தவத்தோர் சினங்கொண்டால், பலவகையாலும் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் அழிந்து விடும்.
What avails one’s proof of prosperity and mighty riches if one rouses the wrath of the great (p) If a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth?
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு |
நின்றன்னார் மாய்வர் நிலத்து. 898-
குன்று போலத் தவநெறியால் உயர்ந்தவர்கள் கெடவேண்டும் என்று நினைப்பார்களானால், தம் குடியோடு நிலைபெற்றார் போன்ற பெருஞ்செல்வரும், மாய்வார்கள்.
The fury of the sages like the lofty hills destroys the great race of pure men of stable fortune (p) If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth.
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து |
வேந்தனும் வேந்து கெடும். 899-
உயர்ந்த விரவாழ்வைக் கொண்டவர்கள் சீற்றம் அடைந்தால், இந்திரன் போன்ற வாழ்க்கையுடை யவனும், அப்போதே அழிந்து போய்விடுவான்.
Even the Lord of Heaven will be humbled from his throne if he rouses the wrath of men of mighty penance (p) If those of exalted vows burst in a rage, even (Indra) the king will suffer a sudden loss and be entirely ruined.
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் |
சிறந்தமைந்த சீரார் செறின். 900-
மிகவும் பெரிய தவத்தை உடையவர் சினங்கொண்டாரானால், மிகப்பெரிய சார்பு உடையவரானாலும் உய்யமாட்டார்கள்; அப்போதே அழிவார்கள்.
Even kings of ancient renown perish before the wrath of the great (p) Though in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless.
2.3.18 பெண்வழிச்சேறல் Being Led By females [To Top]
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் |
வேண்டாப் பொருளும் அது. 901-
தம் மனையாள் விரும்புகிறபடியே வாழ்கின்றவர், சிறந்த அறப்பயன்களையும் அடையார்; பொருள் செய்தலுக்கு முற்படுகின்றவர் இகழ்ந்து ஒதுக்கும் பொருளும் அதுவே.
To follow one’s wife’s directive blindly is to lose one’s honour and fortune (p) Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் |
நாணாக நாணுத் தரும். 902-
தன் ஆண்மையைப் பேணாது, மனையாளது பெண்மையையே விரும்புகிறவன் செல்வம், இவ்வுலகத்து ஆண்பாலர்க்குப் பெரியதோர் நாணமாக வெட்கம் தரும்.
The wealth of a henpecked husband is a mere mockery to him (p) The wealth of him who, regardless (of his manliness) , devotes himself to his wife's feminine nature will cause great shame (to ali men) and to himself;
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் |
நல்லாருள் நாணுத் தரும். 903-
தன் இல்லாளிடத்தே தாழ்ந்து போவதற்கு ஏதுவான ஒருவனது அச்சம், அஃது இல்லாத நல்லோர்களிடையே செல்லும் காலத்தில், எப்போதும் நாணத்தையே தரும்.
The cowardice of one who submits to one’s wife makes one shrink from the company of the good (p) The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good.
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் |
வினையாண்மை வீறெய்த லின்று. 904-
தன் மனையாளுக்கு அஞ்சி வாழும் மறுமைப் பயனை இல்லாத ஒருவனுக்கு, செயலைச் செய்யும் செயலாண்மை இருந்த போதிலும், அது நல்லோரால் மதிக்கப் படாது.
He who dreads his wife denies himself the joys of Heaven Even his noble actions are held in scorn (p) The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss) , will never be applauded.
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் |
நல்லார்க்கு நல்ல செயல். 905-
தன் மனையாளுக்கு எப்போதும் அஞ்சுகின்றவன், தன் தேடிய பொருளேயானாலும், அதனால் நல்லவர்களுக்கு நல்ல செயல் செய்வதற்கும் அச்சங் கொள்வான்.
He who fears his wife fails in his offices to the good and the virtuous (p) He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் |
அமையார்தோள் அஞ்சு பவர். 906-
தம் இல்லாளின் மூங்கில் போன்ற தோளைக் கண்டதும் அஞ்சுகிறவர்கள், வீரத்தால் சுவர்க்கம்பெற்ற அமரரைப் போல வாழ்ந்தாரானாலும், ஆண்மையற்றவரே.
Those who are under the spell of their bamboo-shouldered bewitching wives cease to be men even though they are like Gods on earth (p) They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods.
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் |
பெண்ணே பெருமை உடைத்து. 907-
தன் இல்லாள் ஏவியபடியே செய்து திரிகின்ற ஒருவனது ஆண் தன்மையைக் காட்டிலும், நாணத்தையுடைய அவளது பெண்தன்மையே மேலானதாகும்.
More respectful is the bashfulness of a woman than the ignoble conduct of one who is a slave to one’s wife (p) Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs the behests of a wife.
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் |
பெட் டாங்கு ஒழுகு பவர். 908-
தம் மனையாள் விரும்பியபடியே நடப்பவர்கள், தம்முடைய நண்பர்களின் குறைகளைத் தீர்க்கமாட்டார்கள்; மறுமைக்கு உதவும் எந்த அறத்தையுமே செய்ய மாட்டார்கள்.
An infatuated husband can never be a friend in need; nor can he hope to do virtuous deeds (p) Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் |
பெண்ஏவல் செய்வார்கண் இல். 909-
அறச்செயலும், அது முடிப்பதற்கு ஏதுவான பொருளைச் செய்தலும், பிறவான இன்பச் செயல்களும், தம் மனையாள் ஏவலைச் செய்வாரிடத்தில் உள்ளனவாகா.
(p) From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasure.
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் |
பெண்சேர்ந்தாம் பேதைமை இல். 910-
கருமச் சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சமும், அதனால் ஆகிய செல்வமும் உடைய வேந்தர்க்கு, மனையாளைச் சேர்ந்து நடப்பதனால் உண்டாகும் பேதைமை உண்டாகாது.
Men of resolute will never commit the folly of slaving for women (p) The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom.
2.3.19 வரைவின்மகளிர் Public, Wanton woman [To Top]
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் |
இன்சொல் இழுக்குத் தரும். 911-
அன்பால் விரும்பாமல், அவன்தரும் பொருளையே விரும்பும் மகளிரது, அவனையே அன்பால் விரும்பியதுபோலப் பேசும் பேச்சும், அவனுக்குப் பின்னர்த் துன்பம் தரும்.
Honeyed words of public women who serve not for love but for money become gall and wormwood in the end (p) The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow.
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் |
நயன்தூக்கி நள்ளா விடல். 912-
ஒருவனிடமுள்ள பொருளின் அளவை அறிந்து, அதனை அடையும்வரை பண்பைப் பற்றிப் பேசும் பண்பில்லாத மகளிரது நடத்தையை, ஆராய்ந்து விட்டுவிடுக.
Beware of public women sweet of tongue but greedy of gain (p) One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them).
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் |
ஏதில் பிணந்தழீஇ அற்று. 913-
கொடுக்கும் பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்யான முயக்கமானது, பிணம் எடுப்பவர் இருட்டறையில் முன் அறியாத பிணத்தைத் தழுவியது போலாகும்.
Embracing false women bent on gain is like embracing a strange corpse in a dark room (p) The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room.
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் |
ஆயும் அறிவி னவர். 914-
இன்பமாகிய பொருளை இகழ்ந்து, பொருளையே விரும்பும் பொது மகளிரது இழிந்த இன்பத்தை, அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவாளர் விரும்பார்.
Men seeking the light of grace turn away in scorn from the fleshy delights of prostitutes (p) The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches.
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் |
மாண்ட அறிவி னவர். 915-
இயற்கையான மதிநலத்தால் மாட்சிமைப்பட்ட அறிவினை உடையவர்கள், பொருள் தருவார்க்கெல்லாம் பொதுவான ஆசைகாட்டும் மகளிரது இழிவான நலத்தைத் தீண்டார்.
Men of great wisdom care not for the barren pleasures of women who sell themselves for hire (p) Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights of those whose favours are common (to all).
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் |
புன்னலம் பாரிப்பார் தோள். 916-
தம் அழகால் செருக்கடைந்து, தம் புன்மையான நலத்தை, விலை தருவாரிடம் எல்லாம் பரப்பும் பொதுமகளிர் தோளினை, தம் புகழை நினைக்கும் உயர்ந்தோர் தீண்டமாட்டார்.
Men aspiring to fame do not long for the delights of women who sell themselves (p) Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those,who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay).
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் |
பேணிப் புணர்பவர் தோள். 917-
நெஞ்சிலே பொருள்மேல் ஆசைகொண்டு, அதைப் பெறக் கருதிப் பொருள் தருபவரோடு உடலால் கூடியிருக்கும் மகளிரது தோள்களை, நெஞ்சமில்லாதவர்களே சேர்வர்.
Only men of unruly desires go in search of the shoulders of women who sell themselves (p) Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things.
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப |
மாய மகளிர் முயக்கு. 918-
வஞ்சித்தலில் வல்ல மகளிரது முயக்கத்தை, அவ் வஞ்சனையை ஆராய்ந்து அறியும் அறிவுடையவர் அல்லாத பிறருக்கு, 'அணங்குத் தாக்கு' என்று சொல்வார்கள்.
False women’s embraces which only the ignorant desire are like the possession of evil spirits (p) The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female.
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் |
பூரியர்கள் ஆழும் அளறு. 919-
உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் எவரையும், விலை தந்தால் தழுவுகிற மகளிரது மெல்லிய தோள்கள் அறிவில்லாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தும் நரகம் ஆகும்.
The soft shoulders of women who deck themselves for attraction are the hell into which undiscerning fools sink (p) The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base.
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் |
திருநீக்கப் பட்டார் தொடர்பு. 920-
எப்போதும் கவர்த்த மனத்தையுடைய மகளிரும், கள்ளும், சூதும், என்னும் மூன்று தொடர்புகளும், திருமகளால் கைவிடப்பட்டவருக்கு நெருங்கிய நட்பு ஆகும்.
Double-tongued women, wine and dice are the allies of those abandoned by the goddess of fortune (p) Treacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by Fortune.
2.3.20 கள்ளுண்ணாமை Avoiding alcohol [To Top]
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் |
கட்காதல் கொண்டொழுகு வார். 921-
கள்ளின் மேல் ஆசைகொண்ட அரசர்கள், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார்; தம் முன்னோரால் அடைந்திருந்த புகழ் என்னும் ஒளியையும் இழந்து விடுவார்கள்.
He who is addicted to wine can never strike fear in the heart of his foe; nor can he retain his ancient splendour (p) Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).
உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான் |
எண்ணப் படவேண்டா தார். 922-
அறிவை மயக்கும் கள்ளை அறிவுடையோர் உண்ணாது விடுவாராக; நல்லவரால் எண்ணப்படுதலை வேண்டாதவர் மட்டுமே விரும்பினால் கள்ளை உண்பாராக.
Do not drink wine, for a drunkard can never command the homage of the great (p) Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great.
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் |
சான்றோர் முகத்துக் களி. 923-
எது செய்தாலும் உவப்படையும் தாயின் முன்பும் கள்ளுண்டு களித்தல் இன்னாததாகும்; அவ்வாறானால், குற்றம் எதனையுமே பொறாத சான்றோர்களின்முன் என்னவாகும்.
Even an indulgent mother never puts up with a drunkard; will the virtuous ever tolerate him? (p) Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise?
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் |
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. 924-
'கள்' என்னும் யாவரும் இகழும் பெருங்குற்றத்தை உடையவரை, 'நாண்' என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள், பார்ப்பதற்கும்) அஞ்சி முகத்தைத் திருப்பிக்கொள்வாள்.
The good lady of modesty averts her face from him guilty of hateful drink (p) The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness.
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து |
மெய்யறி யாமை கொளல். 925-
தன் கைப்பொருளைக் கொடுத்துத் தன்னுடலை மறக்கும் அறியாமையைக் கொள்ளுதல், அவன் பழவினைப் பயனையே தனக்குக் காரணமாக உடையதாகும்.
To acquire forgetfulness at a price is indeed the fruit of past sin (p) To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions).
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் |
நஞ்சுண்பார் கள்ளுண் பவர். 926-
உறங்கினவர், அறிவிழந்திருப்பதால் செத்தாரினும் வேறானவர் அல்லர்; அவ்வாறே கள்ளுண்பவரும் எப்போதும் நஞ்சு உண்டவரின் வேறானவர் அல்லர்.
To be asleep is to be dead To drink wine is to drink poison (p) They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters.
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் |
கள்ளொற்றிக் கண்சாய் பவர். 927-
கள்ளை மறைவாக உண்டு, அதன் களிப்பினாலே தம் அறிவை இழந்தவர்கள், உள்ளூரில் வாழ்பவரால், அவர் மறைவை அறிந்து எள்ளி நகையாடப் படுவர்.
A drunkard who has lost his senses becomes an object of ridicule to his sober neighbours (p) Those who always intoxicate themselves by a private (indulgence in) drink; will have their secrets detected and laughed at by their fellow-townsmen.
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து |
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். 928-
கள்ளை உண்டபொழுதே, முன் ஒளித்த குற்றம் மிகுதியாக வெளிப்படுமாதலால், மறைவாகக் கள்ளை உண்டு, 'யான் உண்டு அறியேன்' என்று பொய் கூறுவதைக் கைவிடுக.
Let not a drunkard boast that he has not tasted wine; for that which is hidden shows itself with greater force when drunk (p) Let (the drunkard) give up saying "I have never drunk"; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal.
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் |
குளித்தானைத் தீத்துரீஇ அற்று. 929-
கள்ளுண்டு களித்தவனைக் காட்டி இஃது நினக்கும் ஆகாது' என்று கூறித் தெளிவித்தல், நீரினுள் மூழ்கினான் ஒருவனை விளக்கினால் தேடுவதைப்போல் முடியாத செயலாகும்.
To reason a drunkard into his senses is like searching with a candle for one lost in deep waters (p) Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man.
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் |
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. 930-
கள்ளுண்பவன், தானுண்ணாதபோது, உண்டு களித்த பிறனைக் காண்பான் அல்லவோ! அப்படிக்காணும்போது, தன் நிலையும் இப்படித்தான் என்று நினைக்க மாட்டானோ?
If a drunkard in sober moments sees, another under the influence of wine, will he fail to realise his own state when drunk? (p) When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink.
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் |
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. 931-
தான் வெல்பவன் ஆனாலும் சூதாடலை விரும்ப வேண்டாம். வெற்றியால் வரும் பொருளும், தூண்டில் இரும்பினை இரையென்று நினைத்து மீன் விழுங்கினாற்போன்றதே.
Do not desire to gamble even if you win; for your gain is like the bait to a fish (p) Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hook.
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் |
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. 932-
பெறுவோம் என்னும் ஆசையால் நூற்றுக்கணக்காக இழந்து வறியவராகும் சூதருக்கும், பொருளால் நன்மைகளை அடைந்து வாழ்கின்ற நெறியும் ஒன்று உளதாகுமோ?
Can gamblers who lose a hundred times before winning once ever dream of an upright life? (p) Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred?
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் |
போஒய்ப் புறமே படும். 933-
உருளும் கவற்றின் மீது கட்டப்படும் பந்தயப் பொருளை இடைவிடாது சொல்லிச் சூதாடுமாயின், ஈட்டிய பொருளும், வருவாயும் எல்லாம் எதிரிகளிடம்போய்ச் சேர்ந்துவிடும்.
If one continually plays with the rolling dice one’s riches desert one to enrich one’s enemies (p) If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other's hands.
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் |
வறுமை தருவதொன்று இல். 934-
தன்னை விரும்பியவருக்குப் பலவகைத் துன்பங்களையும் செய்து அவரிடமுள்ள புகழையும் கெடுக்கும் சூதைப்போல் வறுமையைத் தரக்கூடியது வேறு எதுவும் இல்லை.
Nothing brings on poverty more than gambling It ruins one’s fame and is the mother of all evils (p) There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation.
கவறும் கழகமும் கையும் தருக்கி |
இவறியார் இல்லாகி யார். 935-
முன்காலத்திலே செல்வம் உடையவராயிருந்தும், தற்போது இல்லாதவரானவர்கள், கவற்றினையும், அஃதாடும் களத் தினையும், கைத்திறனையும், மேற்கொண்டு விடாதவரே.
None but those who dream of dice and the gaming table will come to grief (p) Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gambling-place and the handling (of dice).
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் |
முகடியான் மூடப்பட் டார். 936-
சூதென்னும் முகடியினாலே விழுங்கப்பட்டவர்கள் இம்மையிலே வயிறார உணவைப் பெறுவதுடன், மறுமையில் நரகத் துன்பத்திலும் சிக்கி வருந்துவார்கள்.
Torments of poverty and hell befall one who is seized by the demon of gambling (p) Those who are swallowed by the goddess called "gambling" will never have their hunger satisfied, but suffer the pangs of hell in the next world.
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் |
கழகத்துக் காலை புகின். 937-
நல்லது செய்வதற்கு என்னும் காலமானது சூதாடு களத்தில் கழியுமானால், அது, தொன்று தொட்டு வந்த அவன் செல்வத்தையும் நல்ல பண்புகளையும் கெடுத்துவிடும்.
Ceaseless gambling destroys one’s ancestral wealth and fame (p) To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character.
பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து |
அல்லல் உழப்பிக்கும் சூது. 938-
பொருளையும் கெடுத்து, பொய்யை மேற்கொள்ளச் செய்து, அருளையும் கெடுத்து, சூதானது, ஒருவனை இருமையும் துன்பத்திலே ஆழ்த்தி விடும்.
Gambling destroys wealth, makes one play false, kills all virtues, and brings on distress (p) Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter).
உடைசெ்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் |
அடையாவாம் ஆயங் கொளின். 939-
சூதாடலை வேடிக்கை என்று கருதிச் செய்வானானாலும், ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்னும் இவை ஐந்துமே,அவனை அடையாமற் போய்விடும்.
A king whose hobby is gambling has neither raiment nor food, nor wealth nor renown nor learning (p) The habit of gambling prevents the attainment of these five: clothing, wealth, food, fame and learning.
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் |
உழத்தொறூஉம் காதற்று உயிர். 940-
இழக்கும்போதெல்லாம், மேன்மேலும் விருப்பங்கொள்ளுகின்ற சூதனைப்போல், உடம்பும் துன்பத்தால் வருந்தவருந்த மேன்மேலும் அதனை விரும்பும்.
In spite of all the ills of life we cling to it In spite of all losses, a gambler clings to his dice (p) As the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through it.
2.3.22 மருந்து Medicine [To Top]
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் |
வளிமுதலா எண்ணிய மூன்று. 941-
ஒருவனுடைய உணவும் செயல்களும் அளவுக்குமேல் கூடினாலும், குறைந்தாலும், மருத்துவ நூலோர் வாதம் முதலாக எண்ணி வகுத்த மூன்றும் நோயைச் செய்யும்.
Overfeeding and underfeeding upset the three humours and cause disease, says the physician (p) If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது |
அற்றது போற்றி உணின். 942-
முன் உண்டது செரித்ததைத் தெளிவாக அறிந்து, அதன் பின்னரே உண்பானானால், அவனுடைய உடலுக்கு மருந்து என்னும் எதுவுமே வேண்டாம்.
There is no need for medicine if one eats with appetite (p) No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு |
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. 943-
முன்னுண்டது அற்றபின், உண்பதனையும் அளவாக உண்ண வேண்டும்; அதுவே பெறுவதற்கரியதான இந்த மானிட யாக்கையை நெருங்காலத்திற்குக் காப்பாற்றும் வழி.
Let there be measure and moderation in eating It leads to long life (p) If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul.
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல |
துய்க்க துவரப் பசித்து. 944-
முன்னுண்டது அற்றதை அறிந்து, மிகவும் பசித்து, உடலிலே மாறுபாட்டைச்செய்யாத உணவுகளைத் தெரிந்தெடுத்து, உண்டு வருதல் வேண்டும்.
Eat wholesome food when you feel hungry (p) (First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you).
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் |
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. 945-
உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவையும், தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவினாலே உண்பானானால், அவனுக்குப் பிணிகளால் துன்பமில்லை.
No disease attacks the person who eats with moderation the food which agrees with him (p) There will be no disaster to one's life if on e eats with moderation, food that is not disagreeable.
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் |
கழிபேர் இரையான்கண் நோய். 946-
அளவுக்குச் சிறிது குறைவாகவே உண்பவனிடம் இன்பம் நீங்காமல் நிற்பதுபோல, அளவுக்கு மிகுதியாக உண்பவனிடம் நோயும் நிலைத்து நிற்கும்.
Health dwells in a man of temperance, disease invades a glutton (p) As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously.
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் |
நோயள வின்றிப் படும். 947-
பசித் தீயின் அளவாலே அல்லாமல், காலமும் அளவும் அறியாதபடி பெருமளவு உண்டானானால், அவனிடத்திலே எல்லையில்லாமல் நோய்களும் வளரும்.
Countless are the ills that befall a glutton (p) He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் |
வாய்நாடி வாய்ப்பச் செயல். 948-
குணங்குறிகளால் நோயைத் துணிந்து, அதன் காரணத்தையும் தெளிந்து, தீர்க்கும் வழியையும் அறிந்து, செய்வகை பிழையாமல் மருத்துவம் செய்யவேண்டும்.
Diagnose the disease, find out its cure after tracing its root and apply the proper remedy (p) Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule).
உற்றான் அளவும் பிணியளவும் காலமும் |
கற்றான் கருதிச் செயல். 949-
மருத்துவத்தைக் கற்றறிந்தவன், நோயாளியின் சக்தியையும், நோயின் தன்மையையும், காலத்தின் இயல்பையும்,நன்கு கருதிப்பார்த்தே சிகிச்சை செய்ய வேண்டும்.
Let the learned physician know the nature of the patient and the duration of ailment and then treat (p) The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment).
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று |
அப்பால் நாற் கூற்றே மருந்து. 950-
பிணிக்கு மருந்தாவது, பிணியுற்றவன், அதனைத் தீர்க்கும் மருத்துவன், அவனுக்கு உதவும் மருந்துகள், அதனை இயற்றுபவன் என்னும் நான்கு பாகுபாடு உடையதாம்.
The science of medicine deals with the patient, the physician, the medicine and the recipe (p) Medical science consists of four parts, viz., patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions.
2.4 ஒழிபியல் [Miscellaneous]
2.4.1 குடிமை Nobility, Lineage [To Top]
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் |
செப்பமும் நாணும் ஒருங்கு. 951-
செம்மையும் நாணமும் ஒன்றுசேர்ந்து பொருந்தி விளங்குதல் என்பது, நல்லகுடியிற் பிறந்தவரிடம் இல்லாமல் பிறரிடத்தில் அவரது இயற்கையாக அமைந்திருப்பதில்லை.
Probity and a sense of shame are virtues innate only in men of noble lineage (p) Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born.
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும் |
இழுக்கார் குடிப்பிறந் தார். 952-
நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் குடிக்கு உரிய நல்ல ஒழுக்கங்கள், வாய்மை காத்தல், பழிக்கு அஞ்சி நாணுதல் என்னும் மூன்றிலும், ஒருபோதுமே தவறமாட்டார்கள்.
Men of noble descent never forsake good conduct, truthfulness and modesty (p) The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty. *Modesty is the quality or state of being unassuming in the estimation of one's abilities.
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் |
வகையென்ப வாய்மைக் குடிக்கு. 953-
எக்காலமும் திரிபில்லாத குடியில் பிறந்தவர்களுக்கு வறியவரிடம் முகமலர்ச்சியும், உவப்போடு தருதலும், இன்சொல் உரைத்தலும், இகழாமையும் உரியவாம்.
A cheerful countenance, charity, soft words and sweet learning all these characterise men of noble birth (p) A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் |
குன்றுவ செய்தல் இலர். 954-
பல்வாக அடுக்கிய கோடி அளவுக்குப் பொருள் பெற்றாலும், நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் குடிப்பெருமைக்குக் குறைவான எதனையும் செய்ய மாட்டார்கள்.
Men of noble birth never stoop to mean acts, though they may thereby gain untold riches (p) Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming.
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி |
பண்பில் தலைப்பிரிதல் இன்று. 955-
தொன்றுதொட்டே வருகின்ற பழங்குடியிலே பிறந்தவர்கள், தாம் கொடுத்து உதவும் பொருள் சுருங்கியபோதும், தம் பண்பிலே குறைய மாட்டார்கள்.
A family of ancient dignity never fails of its charity even when fallen on evil days (p) Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality).
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற |
குலம்பற்றி வாழ்தும் என் பார். 956-
'வசையில்லாமல் வருகின்ற நம் குடி மரபினோடு ஒத்து வாழக் கடவோம் என்று கருதி வாழ்பவர்கள், வறுமையிலும் தகுதி குறைந்ததைச் செய்யமாட்டார்கள்.
Those who walk in the untarnished traditions of their noble family never do wrong even in poverty (p) Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto.
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் |
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. 957-
உயர் குடியிலே பிறந்தவர்களிடம் தோன்றும் குற்றம், அளவால் சிறிதானாலும், விசும்பிடத்து மதியிலே தோன்றும் மறுவைப்போல் உலகத்தாரால் அறியப்படும்.
Dark as the spot of the Moon in the sky doth the stain of the noble family loom large (p) The defects of the noble will be observed as clearly as the dark spots in the moon.
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் |
குலத்தின்கண் ஐயப் படும். 958-
குடிச்சிறப்போடு வருகின்றவனிடத்தே அருளில்லாத தன்மை தோன்றிற்றானால், அவனை அக் குடிப்பிறப்பு உடையவன்தானோ என்று கருதி உலகம் ஐயப்படும்.
The world suspects the noble lineage of one who lacks in sympathy (p) If one of a good family betrays want of affection, his descent from it will be called in question.
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் |
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். 959-
நிலத்தின் இயல்பினை அதனிடம் முளைத்த முளை காட்டும்; அவ்வாறே, நல்ல குலத்தில் பிறந்தவர்களது இயல்பினை அவர் வாய்ச்சொற்கள் எடுத்துக் காட்டும்.
The plants are quite racy of the soil The words of men of high birth betoken their ancestral dignity (p) As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth).
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின் |
வேண்டுக யார்க்கும் பணிவு. 960-
ஒருவன், தனக்கு நன்மைகளை விரும்பினால் பழிக்கு நாணம் உடையவனாதலை விரும்ப வேண்டும்; குலனுடைமையை விரும்பினால், பணிவோடு நடத்தல் வேண்டும்.
Out of modesty springs one’s greatness Out of humility rises the honour of family (p) He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் |
குன்ற வருப விடல். 961-
மிகவும் இன்றியமையாத சிறப்புக்களை உடையாயினும், உயர்குடியில் பிறந்தவர், தாழ்ச்சி வரும்படியான செயல்களைச் செய்யாமல் விட வேண்டும்.
Reject mean actions, even if they bring glory in their turn (p) Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death.
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு |
பேராண்மை வேண்டு பவர். 962-
தமக்குச் சிறப்பையே தருமானாலும், தம் குடியின் சிறப்புக்குப் பொருந்தாத செயல்களை, புகழும் மானமும் நிலைப்பதை விரும்புகிறவர்கள் செய்யமாட்டார்கள்.
Those who desire honour and name will not do mean things in their thirst for glory (p) Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய |
சுருக்கத்து வேண்டும் உயர்வு. 963-
உயர் குடியிலே பிறந்தவர்களுக்கு, நிறைந்த செல்வம் உண்டானபோது, பணிவுடைமை வேண்டும்; செல்வம் சுருங்கி வறுமை உண்டாகும்போது உயர்வு வேண்டும்.
During prosperity practise humility Even in adversity keep dignity (p) In great prosperity humility is becoming; dignity, in great adversity.
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் |
நிலையின் இழிந்தக் கடை. 964-
நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் உயர்வான நிலையை விட்டுத் தாழ்ந்தவிடத்து, தலையைவிட்டு அகன்று விழுந்த மயிரைப்போல இழிவு அடைவார்கள்.
Men fallen from a high estate are like the hair fallen from the head (p) They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ |
குன்றி அனைய செயின். 965-
குடிப்பிறப்பாலே குன்றுபோல உயர்ந்த பெருமையை அடைந்தவர்களும், குன்றியளவு தகுதியற்ற செயல்களைச் செய்தாரானால் தாழ்ச்சி அடைவார்கள்.
Even a trivial mean act will drag down a man from the hill top of his eminence (p) Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று |
இகழ்வார்பின் சென்று நிலை. 966-
தன்னை இகழ்பவர்களின் முன்பாக மானமிழந்து நிற்கும் நிலைமை புகழையும் தராது, மற்றும் புத்தேளிர் நாட்டிலும் கொண்டுபோய்ச் சேராது; அதனால் என்ன பயன்?
Of what use is servility to one who despises you? It brings neither fame nor does it show the path to heaven (p) Of what good is it (for the high-born) to go and stand in vain before those who revile him? it only brings him loss of honour and exclusion from heaven.
ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே |
கெட்டான் எனப்படுதல் நன்று. 967-
தன்னை இகழ்பவரின் பின்னே சென்று பொருள்பெற்று, அதனால் உயிர்வாழ்தலைவிட, இறந்தவன் என்று சொல்லப் படுதலே ஒருவனுக்கு நன்மை ஆகும்.
Better to die in poverty than to be servile to one that scorns you (p) It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him.
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை |
பீடழிய வந்த இடத்து. 968-
தம் குடிக்குரிய பெருந்தன்மை அழியும் நிலையில், தான் இறந்து போகாமல், மானம்விட்டு உடம்பைக் காப்பது பிறவிப்பிணிக்கு ஏற்ற மருந்தாகுமோ?
When one’s honour is ruined, will the life that sustains the body confer immortality? (p) For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் |
உயிர்நீப்பர் மானம் வரின். 969-
தன் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் இழந்து உயிரைக் காக்கும் நிலைமை வந்தால், அப்போதே உயிரை விட்டுவிடுவார்கள்.
He whose honour is at stake lays down his life like the Yak that is shorn of its single hair (p) Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.
இளிவரின் வாழாத மானம் உடையார் |
ஒளிதொழுது ஏத்தும் உலகு. 970-
தமக்கு ஓர் இழிவு வந்தபோது உயிரை விட்டுவிட்ட மானமுள்ளவரது புகழ்வடிவினை, எக்காலத்திலும் உலகத்தார் தொழுது போற்றித் துதிப்பார்கள்.
The world sings in praise of those noble persons who prefer death to dishonour (p) The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity.
2.4.3 பெருமை Greatness [To Top]
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு |
அஃதிறந்து வாழ்தும் எனல். 971-
ஒருவனுக்குப் பெருமை, 'பிறரால் செய்வதற்கரியதைச் செய்வேன்' என்னும் மனவூக்கமே; இழிவாவது, 'அதனைச் செய்யாமலே உயிர் வாழ்வேன்' என்று நினைப்பதாகும்.
The glory of life is to achieve greatness The poverty of life is to be lost to all glory (p) One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind.)
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா |
செய்தொழில் வேற்றுமை யான். 972-
எல்லா மக்களுயிர்க்கும் பிறப்பியல்பு சமமானதே; தொழில் வேறுபாட்டால் பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் தாம் ஒருபோதும் ஒத்திருப்பதில்லை.
It is not birth but deeds that mark men (p) All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் |
கீழல்லார் கீழல் லவர். 973-
செயற்கரிய செய்யாத சிறியவர் உயர்ந்த ஆசனங்களிலே வீற்றிருந்தாலும் பெரியவர் ஆகார்; அச்செயல்களைச் செய்த பெருமையினர் தரையில் நின்றாலும் சிறியவராகார்.
One is not great because of one’s birth in a noble family; one is not low because of one’s low birth (p) Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.
ஒருமை மகளிரே போலப் பெருமையும் |
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. 974-
கவராத மனத்தையுடைய மகளிர், நிறையிலே வழுவாமல் தம்மைத்தாமே காத்து ஒழுகுதலைப்போல பெருமையும், தன்னைத்தான் காப்பவனிடமே உளதாகும்.
Greatness springs from one’s own good conduct preserved like the sacred honour of a woman (p) Even greatness, like a woman's chastity, belongs only to him who guards himself.
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் |
அருமை உடைய செயல். 975-
பெருமை உடையவர்கள், தாம் வறுமையானபோதும், பிறரால் செய்வதற்கு அருமையான தம் செயல்களை விடாமல் செய்துமுடிக்கும் வலிமை கொண்டவராவார்.
Greatness achieves things difficult for others (p) (Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do).
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் |
பேணிக் கொள் வேம் என்னும் ோக்கு. 976-
இத்தகையவரான பெரியோரை வழிபட்டு அவரியல்பை நாமும் அடைவோம்' என்னும் நல்ல நோக்கம், மற்றைச் சிறியார் மனத்தில் ஒருபோதும் உண்டாகாது.
Littleness feels no reverence for the great (p) It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் |
சீரல் லவர்கண் படின். 977-
தகுதியான பெரியாரிடம் அமைந்திருக்கும் சிறப்பு, பொருந்தாத சிறியவர்களிடத்தேயும் சேருமானால், தகுதியை விட்டுத் தருக்கினிடத்தே அவரைச் செல்லச் செய்யும்.
Littleness is proud of its virtues (p) Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride.
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை |
அணியுமாம் தன்னை வியந்து. 978-
பெருமை உடையவர் தருக்கியிராமல் பணிவாகவே நடந்து வருவார்கள்; மற்றைச் சிறுமை உடையவரோ எப்போதும் தம்மைவியந்து புனைந்து பேசி வருவார்கள்.
Greatness is all humility; littleness is all arrogance (p) The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration.
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை |
பெருமிதம் ஊர்ந்து விடல். 979-
பெருமை குணம் ஆவது, காரணம் உள்ளபோதும் தருக்கின்றி அமைந்திருத்தல்: சிறுமைக்குணமாவது பெருமை அற்றபோதும் தருக்கி, முடிவில் நின்றுவிடலாகும்.
Greatness is not conscious of its worth Littleness is rooted in pride (p) Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness.
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் |
குற்றமே கூறி விடும். 980-
பெருமை உடையவர் பிறரது மானத்தைப்பேசி, அவமானத்தை மறைப்பார்கள்; சிறுமை உடையவரோ பிறரது குணத்தை மறைத்து, குற்றத்தையே கூறுவார்கள்.
Greatness hides the faults of others; littleness trumpets their faults alone (p) The great hide the faults of others; the base only divulge them.
2.4.4 சான்றாண்மை Sublimity [To Top]
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து |
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. 981-
கட்டாயம் செய்யவேண்டிய கடன் என்பது நல்லவைகள். அத்தகைய கடனை அறிந்து செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.
It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good. (p) It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good.
குணநலம் சான்றோர் நலனே பிறநலம் |
எந்நலத்து உள்ளதூஉம் அன்று. 982-
சான்றோர்களின் சிறப்பாவது, அவர் குணநலங்களால் வந்த சிறப்பே;அஃது ஒழிந்த பிற நலன்கள் எல்லாம். எந்நலத்தினும் சேர்வதான ஒரு நலனே ஆகாது.
Good conduct is the virtue of the great; all other things are but dross (p) The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights.
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு |
ஐந்துசால் ஊன்றிய தூண். 983-
அன்பும், நாணமும்,யாவரிடத்தும் ஒப்புரவு செய்தலும் கண்ணோட்டமும், வாய்மையும், சால்பென்னும் பாரத்தைத் தாங்கும் ஐந்து தூண்கள் ஆகும்.
Love, modesty, impartiality, sympathy and truthfulness are the five pillars of nobility (p) Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests.
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை |
சொல்லா நலத்தது சால்பு. 984-
'தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தினிடத்தது; சால்பு, பிறரது குற்றத்தை அறிந்தாலும், வெளியே சொல்லித் திரியாத நல்ல குணத்தினிடத்தது.
Penance kills not, nobility slanders not (p) Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults.
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் |
மாற்றாரை மாற்றும் படை. 985-
ஒரு செயலை முடிப்பவரது ஆற்றலாவது, துணையாகுபவரைப் பணிமொழியால் தாழ்ந்தும் கூட்டிக்கொள்ளுதல்; சால் புடையார் தம் பகைவரை ஒழிக்கும் படையும் அதுவே.
Humility is the strength of the great It is the weapon that disarms the foe (p) Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking) ; and that is the weapon with which the great avert their foes.
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி |
துலையல்லார் கண்ணும் கொளல். 986-
சால்பாகிய பொன்னின் தரத்தை அறிவதற்கான உரைகல், தம்மினும் உயர்ந்தாரிடம் ஏற்கும் தோல்வியை, இழிந்தவரிடமும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகும்.
The touchstone of nobility is to accept defeat even at the hands of inferiors (p) The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors.
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் |
என்ன பயத்ததோ சால்பு. 987-
தமக்குத் தீமை செய்தவர்களுக்கும் இனிய செயல்களைச் செய்யாதவரானால், 'சால்பு என்று சிறப்பாகக் கொள்ளப் படுவதுதான், என்ன பயனை உடையதாகுமோ?
What profits one’s nobility if good is not done even to those who do harm? (p) Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it)?
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் |
திண்மை உண் டாகப் பெறின். 988-
சொல்பு உடைமை என்னும் பண்பு ஒருவனிடம் உறுதி பெற்றிருந்தால், அவனுக்கு வரும் வறுமைத் துன்பங்களும், அவனுக்கு இழிவான நிலைமையைத் தந்துவிடாது.
Poverty is no disgrace to one of enduring nobility (p) Poverty is no disgrace to one who abounds in good qualities.
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு |
ஆழி எனப்படு வார். 989-
சால்புடைமை என்னும் கடலுக்குக் கரை என்று சொல்லப்படும் பெரியோர்கள், ஏனைய கடல்களும் கரையுள் நில்லாமல் காலம் திரிந்தபோதும்.தாம் நிலை திரிய மாட்டார்கள்.
The sea may recede but noble men will remain steadfast (p) Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் |
தாங்காது மன்னோ பொறை. 990-
பல குணங்களாலும் நிறைந்தவரும் தம் தன்மைகளில் குன்றுவார்களானால், இந்தப் பெரிய பூமி தானும் தன் பாரத்தைத் தாங்காததாய் அழிந்து போகும்.
Were the nobility of the noble to shrink, the vast firm earth would totter (p) If there is a defect in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden.
2.4.5 பண்புடைமை Courtesy [To Top]
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் |
பண்புடைமை என்னும் வழக்கு. 991-
எல்லாரிடத்தும் எளிய செவ்வியராதல் உடையவருக்கு, பண்புடைமை என்னும் நன்னெறியினை அடைந்து சிறப்படைதலும், எளிதென்று சொல்லுவார்கள்.
Be cautious and easy of access You will command the homage of the world (p) If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness.
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் |
பண்புடைமை என்னும் வழக்கு. 992-
பிறர்மேல் அன்புடைமையும், உலகத்தோடு அமைந்த குடியிலே பிறத்தலும், ஆகிய இவ்விரண்டும் ஒத்து வருதல் பண்புடை மையால் என்று உலகத்தார் சொல்லுவர்.
Courtesy springs from love and noble lineage (p) Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all.
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க |
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. 993-
உடம்பால் ஒருவரோடு ஒருவர் ஒத்திருத்தல், ஒருவனுக்கு நல்லவரோடு சமநிலையைத் தந்துவிடாது; செறியத்தகுந்த பண்பால் ஒத்திருத்தலே சமநிலை தரும்.
Mere physical features do not rank with men but only courtesy makes them ascend the scale (p) Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract.
யனொடு நன்றி புரிந்த பயனுடையார் |
பண்புபா ராட்டும் உலகு. 994-
நீதியையும் அறத்தையும் விரும்புதலால், பிறருக்கும் தமக்கும் பயன்படுதலை உடையவரது பண்பினை, உலகத்தார் அனைவரும் போற்றிக் கொண்டாடிப் புகழ்வார்கள்.
The world respects the courtesy of those who are just and willing to do good (p) The world applauds the character of those whose usefulness results from their equity and charity.
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் |
பண்புள பாடறிவார் மாட்டு. 995-
தன்னை இகழ்தல் விளையாட்டின்போதும் துன்பமானது : ஆகவே,பாடு அறிவாரிடத்து, பகைமை உள்ளவிடத்திலும் இகழ்தல் இன்றி, இனிய பண்புகளே நிறைந்திடும்.
Do not mock at others even in a sportive mood There is virtue in being courteous even to a foe (p) Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated.
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் |
மண்புக்கு மாய்வது மன். 996-
பண்புடையாரிடத்தே படுதலால் உலகியல் எப்போதும் உள்தானதாய் வந்து கொண்டிருக்கின்றது; அங்ஙனம் இல்லை யானால்,அது மண்ணினுட்புகுந்து மாய்ந்து விடும்.
The world is built on the wisdom of the noble and the good; but for them the entire world would be a heap of ruins (p) The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் |
மக்கட்பண்பு இல்லா தவர். 997-
நன்மக்களுக்குரிய பண்பு இல்லாதவர்கள், அரத்தைப்போலக் கூர்மை உடையவர் என்றாலும், ஓரறிவேயுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர்.
Of what avail is one’s intelligence keen as the edge of the chist^? One is with the socks and gloves if one is not affable (p) He who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a file.
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் |
பண்பாற்றார் ஆதல் கடை. 998-
தம்மோடும் நட்பினைச் செய்யாதவராகப் பகைமையையே செய்து நடப்பவரிடத்தும், தாம் பண்புடையவராக உதவி புரியாதிருத்தல், சான்றோருக்குக் குற்றமாகும்.
To be failing in one’s courtesy even to one’s foe is sin (p) It is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing no friendship (for them) do only what is hateful.
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் |
பகலும்பாற் பட்டன்று இருள். 999-
பண்பில்லாமையாலே ஒருவரோடு கலந்துபேசி உள்ளம்மகிழ மாட்டாதவர்களுக்கு, மிகவும் பெரிய இந்த உலகமானது, பகற்பொழுதிலும் இருண்டு கிடப்பதாகும்.
Even the wide world darkens at noon to the sullen who fails to gladden the hearts of men (p) To those who cannot rejoice, the wide world is buried darkness even in (broad) day light.
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் |
கலந்தீமை யால்திரிந் தற்று. 1000-
பண்பில்லாதவன் முன்னை நல்வினையாலே பெற்ற பெருஞ் செல்வமானது, நல்ல ஆவின்பால் கலத்தின் குற்றத்தால் திரிதல்போல, ஒருவருக்கும் பயன்படாமல் போகும்.
Of what' use is the wealth of the discourteous? It is like good milk spoilt by an unclean vessel (p) The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the impurity of the vessel.
2.4.6 நன்றியில் செல்வம் Useless, Futile wealth [To Top]
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் |
செத்தான் செயக்கிடந்தது இல். 1001-
வீடு நிறையப் பொருளைச் சேர்த்துவைத்தும், உலோபத்தால் தானேயும் உண்ணாதவன், அப்பொருளின் உரிமையால் எதுப் செய்யாததனால், செத்தவனுக்கே சமமாவான்.
He who does not make use of his hoarded wealth is really dead, though aliye; for he cannot do anything great (p) He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him).
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும் |
மருளானாம் மாணாப் பிறப்பு 1002-
பொருளினால் எல்லாமே உண்டாகும்' என்று அறிந்து, அதனை எவருக்கும் கொடாமல்,அதன்மீது மயக்கத்தை உடையவனுக்குப் பேய்ப் பிறவிதான் ஏற்படும்.
The birth of a ghost awaits a miser who thinks he gains everything by hoarding wealth (p) He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will be born a demon.
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் |
தோற்றம் நிலக்குப் பொறை. 1003-
மேன்மேலும் பொருளைத் தேடுவதையே விரும்பி, அதன் பயனாக வரும் புகழை விரும்பாத மக்கட் பிறவியானது, இப் பூமிக்கு ஒரு சுமையே அல்லாமல் வேறில்லை.
He who prefers mere accumulation of wealth to glory is a burden unto the earth (p) A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame.
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் |
நச்சப் படாஅ தவன். 1004-
ஒரு பொருளும் கொடுத்தறியாததால் எவாரலும் விரும்பி வரப்படாதவன், தான் இறந்ததன் பின்னர், இவ்வுலகிலே எஞ்சி நிற்பதற்கென்று எதை நினைப்பானோ?
What awaits one if one cannot win the affections of others? (p) What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come)?
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய |
கோடியுண் டாயினும் இல். 1005-
இரப்போருக்குக் கொடுப்பதும், தாம் நுகர்வதுமாகிய செல்வத்தின் பயனை இழந்தவர்களுக்குக் கோடிகோடியான செல்வம் இருந்தாலும், அதனால் யாதும் பயன் இல்லை.
Of what avail is the untold wealth of one who neither gives nor enjoys it? (p) Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று |
ஈதல் இயல்பிலா தான். 1006-
தானும் நுகராமலும், தகுதியானவருக்கு எதையும் கொடுத்து உதவாமலும் இருப்பவன், தான் பெற்ற பெருஞ் செல்வத்துக்கே ஒரு நோய் போன்றவன் ஆவான்.
Abundance of wealth is not a blessing but a curse to one who can neither enjoy it nor spend it on the deserving (p) He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் |
பெற்றாள் தமியள்மூத் தற்று. 1007-
ஏதும் இல்லாதவருக்கு எதுவும் கொடுத்து உதவாதவனது செல்வம், மிகவும் அழகிய பெண் திருமணப் பயனில்லாமல், தனியாகவே கிழவியானதைப் போன்றதாம்.
The wealth that is not spent on the needy is as barren as the withering charm of a spinster (p) The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband.
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் |
நச்சு மரம்பழுத் தற்று. 1008-
வறியவாலே விரும்பி வாப்படாத உலோபியின் செல்வம், ஊரின் இடையே நிற்கின்ற ஓர் நச்சுமரமானது நிறையப் பழம் பழுத்து விளங்குவதைப் போன்றதாகும்.
The wealth of a miser is like the fruit of a poison-tree in the heart of a village (p) The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town.
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய |
ஒண்பொருள் கொள்வார் பிறர். 1009-
உறவினரிடம் அன்புசெய்தலைவிட்டு, நுகராமல் தன்னையும் வருத்திக்கொண்டு, அறத்தையும் பாராது, ஒருவன் தேடிய பெரும்பொருளைப் பிறர்தாம் கொண்டுபோவார்கள்.
Strangers inherit the great wealth of a miser who neither enjoys it nor gives (p) Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி |
வறங்கூர்ந் தனையது உடைத்து. 1010-
புகழ்பெற்ற செல்வம் உடையவரது சிறிது காலத்திய வறுமை மேகம் சிறிது காலம் வறுமை மிகுந்தாற் போன்ற இடைக்காலத் தன்மையை உடையதே.
The short-lived poverty of the generous rich is the drought of rain-laden clouds (p) The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while).
2.4.7 நாணுடைமை Shame, Being ashamed [To Top]
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல் |
நல்லவர் நாணுப் பிற. 1011-
இழிந்த செயல் காரணமாக நாணுதலே நன்மக்களது நாணம் பிற மன மொழி மெய், ஒடுக்கங்களால் வரும் நாணம் குலமகளிரது நாணம் ஆகும்.
True modesty shrinks from littleness All other forms of modesty are womanish (p) True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids.
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல |
நாணுடைமை மாந்தர் சிறப்பு. 1012-
ஊணும் உடையும் அவையொழிந்த பிறவும் உலகத்து மக்கள் உயிர்க்கு எல்லாம் பொதுவானவை, நன்மக்களுக்குச் சிறப்பாக அமைவது 'நாணம்' ஆகும்.
Common to all human beings are food and clothing and other necessaries of life But what distinguishes them is modesty (p) Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good.
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் |
நன்மை குறித்தது சால்பு. 1013-
உயிர்கள் எல்லாம் தம் இருப்பிடமான உடம்பை ஒருபோதும் விடமாட்டா; அவ்வாறே 'நாணம்' என்னும் குணத்தையும் சால்பு ஒருபோதும் விட்டுவிடாது.
Man clings to his body The noble clings to modesty (p) As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection.
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் |
பிணிஅன்றோ பீடு நடை. 1014-
நாணம் உடைமை சான்றோர்களுக்கு ஓர் ஆபரணம் ஆகும்; அந்த நாணம் என்னும் ஆபரணம் இல்லையானால், அவரது பெருமித நடை கண்டவர்க்கு நோயாகிவிடும்.
Disgraceful is the painted pomp of the life of the immodest (p) Is not the modesty ornament of the noble? Without it, their haughtiness would be a pain (to others).
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு |
உறைபதி என்னும் உலகு. 1015-
பிறரது பழியையும் தம்முடைய பழியையும் சமமாக மதித்து நாணுபவரை, உலகத்தார், 'நாணத்திற்கேஉறைவிடம் இவர்தாம் என்று சிறப்பித்துச் சொல்வார்கள்.
The world finds the very abode of modesty in one who dreads one’s infamy and that of others (p) The world regards as the abode of modesty him who fear his own and other's guilt.
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் |
பேணலர் மேலா யவர். 1016-
உயர்ந்தோர், தமக்கு வேலியாக நாணத்தைக் கொள்வார்களே அல்லாமல், அகன்ற இவ்வுலகத்தைத் தமக்கு வேலியாகக் கொள்வதை விரும்ப மாட்டார்கள்.
The great prefer modesty to the riches of the world (p) The great make modesty their barrier (of defence) and not the wide world.
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் |
நாண்துறவார் நாணாள் பவர். 1017-
நாணத்தையும் உயிரையும் ஒருங்கே காப்பாற்ற முடியாதபோது, சான்றோர்கள் உயிரை விட்டுவிடுவார்கள்; உயிரைக் காப்பதற்கு நாணத்தை விடமாட்டார்கள்.
Better retain modesty than cling to life The noble would rather die than lose modesty (p) The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life.
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் |
அறம்நாணத் தக்கது உடைத்து. 1018-
கேட்டவரும் கண்ட வரும் நாணமின்றிப் பழிக்கத் தான் நாணாதவன் ஆனால், அந்நாணானது, அவனைவிட்டு அறம் நீங்கிபோகத் தகுந்த குற்றத்தை உண்டாக்கிவிடும்.
One who does not shrink from what others blush at knows no righteousness (p) Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of.
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் |
நாணின்மை நின்றக் கடை. 1019-
ஒருவனது ஒழுக்கத் தவறினால், அவன் குடிப்பெருமை ஒன்றே கெட்டுவிடும்; ஒருவனிடம் நாணமில்லாத தன்மை நின்றபோது, அது அவன் நலத்தை எல்லாமே சுடும்.
Lack of decorum disgraces a home; lack of modesty destroys everything good (p) Want of manners injures one's family; but want of modesty injures one's character.
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை |
நாணால் உயிர்மருட்டி அற்று. 1020-
தம் மனத்திலே நாணமில்லாத மக்களின் இயக்கம், மரப்பாவை யந்திரக் கயிற்றாலாகிய தன் இயக்கத்தால் உயிருள்ளதுபோல் மயக்குவது போன்றதாகும்.
The activity of those lacking in modesty is like that of a marionette (p) The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string.
2.4.8 குடிசெயல்வகை Social service [To Top]
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் |
பெருமையின் பீடுடையது இல். 1021-
என் குடியை உயரச் செய்வதற்கான செயல்களைச் செய்வதில் ஒருபோதும் கை ஓயமாட்டேன்' என்னும் பெருமையைப் போல ஒருவனுக்கு சிறந்த பெருமை தருவது வேறில்லை.
Nothing is more exalted and manly than one’s ceaseless toil to uplift one’s own family (p) There is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise my family).
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் |
நீள்வினையால் நீளும் குடி. 1022-
'முயற்சியும், நிறைந்த அறிவும்' என்று சொல்லப்பட்ட இரண்டினையும் உடைய இடைவிடாத கருமச் செயலால், ஒருவனது குடிப்பெருமை தானே உயர்வு அடையும்.
Manly effort and ripe wisdom exalt one’s family (p) One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances.
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் |
மடிதற்றுத் தான்முந் துறும். 1023-
என் குடியைப் புகழால் உயரச் செய்வேன் என்று அதற்கேற்ற செயல்களிலே ஈடுபடும் ஒருவனுக்கு, தெய்வமும் மடியை உதறிக்கொண்டு முன்வந்து உதவி நிற்கும்.
Even God girds up His loins in the service of one who strives for the glory of one’s family (p) The Deity will clothe itself and appear before him who resolves on raising his family.
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் |
தாழாது உஞற்று பவர்க்கு. 1024-
தம் குடியை உயர்த்துவதற்கு இடைவிடாமல் முயல்கிறவர்களுக்கு, அதன் வழிபற்றி அவர் ஆராயும் முன்பே, தெய்வ உதவியால், அது தானாகவே முடிந்துவிடும்.
Success comes unbidden to one who exalts one’s family with unremitting toil (p) Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will succeed.
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் |
சுற்றமாச் சுற்றும் உலகு. 1025-
குற்றமாகிய செயல்களைச் செய்யாமல், தன்குடியை உயரச் செய்து நடக்கிறவனின் சுற்றமாக விரும்பி உலகத்தார் எல்லாருமே சென்று அவனைச் சூழ்வார்கள்.
The world becomes kin to one who leads an unblemished householder’s life (p) People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means.
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த |
இல்லாண்மை ஆக்கிக் கொளல். 1026-
ஒருவனுடைய நல்லாண்மை' என்பது, தான் பிறந்த குடியினை ஆளும் தன்மையை அவன், தன்னிடம் உளதாக ஆக்கிக் கொள்ளுதலே ஆகும்.
What is true manliness except perfect ordering of the house for its own glory? (p) A man's true manliness consists in making himself the head and benefactor of his family.
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் |
ஆற்றுவார் மேற்றே பொறை. 1027-
அமரகத்தில் வன்கண்மை உடையவரே போரைத் தாங்குவார்: அதுபோலக் குடியிற் பிறந்தவர் பலரானாலும், வல்லமை உடையவரே அதனைத் தாங்கிக்காப்பவர்.
The brunt of the battle falls on the victorious; the burden of the family on the competent few (p) Like heroes in the battle-field, the burden (of protection etc.) is borne by those who are the most efficient in a family.
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து |
மானங் கருதக் கெடும். 1028-
தம் குடியினை உயரச் செய்பவர் அதனையே கருதவேண்டும்; மற்றுக் காலத்தைப் பார்த்து, மானத்தையும் கருதினால், குடி) கெடும்; ஆகவே அவருக்குக் காலநியதி இல்லை.
To pure householders there is no cessation of work One’s false prestige leads to the ruin of one’s family (p) As a family suffers by (one's) indolence and false dignity there is to be so season (good or bad) to those who strive to raise their family.
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் |
குற்ற மறைப்பான் உடம்பு. 1029-
தன் குடி குற்றம் அடையாமல் காக்க முயல்பவனின் உடம்பு அம்முயற்சித் துன்பத்திற்கே ஓர் கொள்கலமோ? அஃது ஒழிந்து, அது இன்பத்திற்கும் கொள்கலம் ஆகாதோ?
Is he who protects his family from the ills of life a mere vessel of suffering? (p) Is it only to suffering that his body is exposed who undertakes to preserve his family from evil?
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் |
நல்லாள் இலாத குடி. 1030-
துன்பம் வரும்போது, அதனைத் தாங்கிக் காக்கவல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியானது, துன்பமாகிய நவியம்புகுந்ததனால் வீழ்கின்ற மரம்போலத் தானும் வீழ்ந்து படும்.
The axe of adversity falls on the family which has no noble son to shield it (p) If there are none to prop up and maintain a family (in distress) , it will fall at the stroke of the axe of misfortune.
2.4.9 உழவு Agriculture, Farming [To Top]
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் |
உழந்தும் உழவே தலை. 1031-
உழவின் வருத்தத்தைக் கண்டு, பிற தொழில்களைச் செய்து திரிந்தாலும், முடிவில் ஏருடையவரையே உலகம் உணவுக்கு எதிர்பார்த்தலால், உழவே மிகவும் சிறந்தது.
After vain wanderings in search of callings the world returned to the plough (p) Agriculture, though laborious, is the most excellent (form of labour) ; for people, though they go about (in search of various employments) , have at last to resort to the farmer.
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது |
எழுவாரை எல்லாம் பொறுத்து. 1032-
உழவைவிட்டுப் பிற தொழில்களைச் செய்வாருக்கும் உணவுப் பொருள்களைத் தந்து தாங்குவதனால், உழுதொழில் செய்வாரே உலகத்தாருக்கு அச்சாணி ஆவார்.
Agriculturists are the sheet-anchor of the world for on them depend lives of others (p) Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் |
தொழுதுண்டு பின்செல் பவர். 1033-
யாவரும் உண்ணுவதற்கு உணவைத் தந்து, தாமும் உண்டு வாழ்பவரே உரிமை வாழ்வினர்; மற்றையவர் பிறரைத் தொழுது உண்டு, அவர்பின் செல்கின்றவரே யாவர்.
Only the husbandmen live; all others subsist on their toil (p) They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life. A husbandman is an old term for a farmer or cultivator of the land.
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் |
அலகுடை நீழ லவர். 1034-
உழுதலால் நெல்லுடையவரான கருணையாளர் பலவேந்தர் குடைநிழலது ஆகிய உலகம் முழுவதையும், தம் அரசனின் குடைக்கீழ் வந்துசேரக் காணும் சக்தியுடையவர் ஆவர்.
It is the husbandmen that bring the might of the kings under the sway of their own sovereign (p) Patriotic farmers desire to bring all other states under the control of their own king.
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது |
கைசெய்தூண் மாலை யவர். 1035-
உழவான முயற்சியைச் செய்து உண்பதனையே இயல்பாக உடையவர், பிறரைத் தாம் இரவார்: தம்பால் வந்து இரப்பவர்க்கும் அவர் வேண்டியதைத் தருவார்கள்.
A toiling peasant never begs but gives (p) Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg.
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் |
விட்டேம்என் பார்க்கும் நிலை. 1036-
உழவர்களின் கைஉழாது மடங்கி விடுமானால் யாவரும் விரும்பும் உணவையும் கைவிட்டோம் என்று துறந்தவர்க்கும், அவ்வறத்தில் நிலைத்து நிற்க முடியாது.
Even the anchorite ceases from penance if husbandmen sit with their hands folded (p) If the farmer's hands are slackened, even the ascetic state will fail.
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் |
வேண்டாது சாலப் படும். 1037-
ஒரு பலப் புழுதியானது காற்பலமாக ஆகும்படி உழுது காய விடுவானானால், அதனிடம் செய்த பயிர் ஒரு பிடி எருவு இடுதலையும் வேண்டாமலே நன்றாக விளையும்.
Let the land be allowed to dry with dust Even a handful of manure is not needed for a good harvest (p) If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure.
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் |
நீரினும் நன்றதன் காப்பு. 1038-
பலகால் உழுதலினும், எருப்பெய்து வளப்படுத்துதல் சிறந்தது; இவ்விரண்டும் செய்து களையும் எடுத்தபின், பயிரைக் காத்தல், நீர் பாய்ச்சுவதிலும் நல்லதாகும்.
After weeding, let the land be guarded, for more important than water is the protection of crops (p) Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it).
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து |
இல்லாளின் ஊடி விடும். 1039-
நிலத்துக்கு உரியவன் நாள்தோறும் சென்று பார்த்து, வேண்டியவை செய்யாது சோம்பினால், அந்த நிலமும், அவன் மனைவியைப் போல், அவனோடு பிணங்கி விடும்.
The land neglected by its owner puts on the appearance of a sulky woman abandoned by her lord (p) If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure.
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் |
நிலமென்னும் நல்லாள் நகும். 1040-
யாம் வறியோம்' என்று சொல்லிச் சோம்பியிருப்பவரைக் கண்டால் நிலமகள் என்று உயர்த்திப் பேசப்படும் நல்லாள்| தன்னுள்ளே சிரித்துக் கொள்வாள்.
Mother earth laughs in scorn at those who plead poverty (p) The maiden, Earth, will laug h at the sight of those who plead poverty and lead an idle life.
2.4.10 நல்குரவு Poverty [To Top]
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் |
இன்மையே இன்னா தது. 1041-
ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தருவது யாதென்றால், அந்த வறுமையைப்போலத் துன்பந்தருவது, அந்த வறுமையேயன்றி, யாதுமில்லை.
There is no greater evil than poverty! (p) There is nothing that afflicts (one) like poverty.
இன்மை எனவொரு பாவி மறுமையும் |
இம்மையும் இன்றி வரும். 1042-
வறுமை என்னும் ஒரு பாவி ஒருவனிடம் வந்துவிட்டால், அவனுக்கு இம்மையிலுள்ள உலகவின்பமும் ம றுமையின் சுவர்க்க இன்பமும் இல்லாமல் போய்விடும்.
Poverty is an evil which blasts at once the joys of earth and of heaven (p) When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss).
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக |
நல்குரவு என்னும் நசை. 1043-
வறுமை எனப்படும் கேடானது, ஒருவனுடைய பழைய குடும்பச் செல்வத்தையும், அதன்மேல் அக்குடும்பத்திற்கு உண்டான பெரும்புகழையும் கெடுத்துவிடும்.
Poverty which springs of avarice ruins one’s ancestry and its fair name (p) Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech.
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த |
சொற்பிறக்கும் சோர்வு தரும். 1044-
இழிவான சொல் பிறவாத குடும்பத்திடமும், அது பிறப்பதற்கு ஏதுவான சோர்வு என்னும் நிலைமையானது வறுமையை உண்டாக்கிவிடும்.
Dejection due to poverty makes the noble utter the language of the base (p) Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words.
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் |
துன்பங்கள் சென்று படும். 1045-
வறுமை எனப்படும் துன்பம் ஒன்றின் ள்ளாகவே உலகத்தாரால் சொல்லப்படும் பலவகைப்பட்ட துன்பங்கள் எல்லாம் சென்று அடங்கிவிடும்.
Poverty in itself an evil is the mother of all ills (p) The misery of poverty brings in its train many (more) miseries.
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் |
சொற்பொருள் சோர்வு படும். 1046-
நல்லவான பொருள்களைத் தெளிவாக அறிந்து சொன்னார் ஆனாலும், வறுமைப்பட்டவர் சொல்லும் சொற்கள் பொருள் பயவாதவாய்ச் சோர்வு பட்டுவிடும்.
The words of the poor, though born of experience and wisdom are not listened to (p) The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் |
பிறன்போல நோக்கப் படும். 1047-
அறத்தோடு பொருந்தாத வறுமையை உடையவன் தன்னைப் பெற்ற தாயாராலுங்கூட,ஓர் அயலானைப்போலக் கருதிப் பார்க்கப் படுவான்.
Even a mother turns her back on one whose poverty is devoid of probity (p) He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.
இன்றும் வருவது கொல்லோ நெருநலும் |
கொன்றது போலும் நிரப்பு. 1048-
நேற்றுக் கொன்றதுபோலத் துன்பஞ்செய்த வறுமையான து, இன்றும் என்னிடத்தே வந்துவிடுமோ? வந்தால் இனி யான் யாது செய்வேனோ?
Oh, how I dread it I Will that beggary that almost killed me yesterday assail me today also? (p) Is the poverty that almost killed me yesterday, to meet me today too?
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் |
யாதொன்றும் கண்பாடு அரிது. 1049-
மந்திரமும் மருந்தும் முதலியவற்றின் உதவியாலே நெருப்பிற் கிடந்தும் உறங்கலாம்; ஆனால் வறுமை வந்தபோது, எதன் உதவியாலும் உறக்கம் வருவதில்லை.
One may sleep in the midst of scorching fire But the poverty-stricken know no sleep (p) One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.
துப்புர வில்லார் துவரத் துறவாமை |
உப்பிற்கும் காடிக்கும் கூற்று. 1050-
பொருளில்லாத வறுமையாளர் செய்யக்கூடியது முற்றத் துறத்தலே: அதனைச் செய்யாதிருப்பது, பிறர்வீட்டு உப்புக்கும் காடிக்கும் தாம் எமனாவதே யாகும்.
The indigent that do not renounce the world batten on other man’s salt and porridge (p) The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour's salt and water.
2.4.11 இரவு Requesting, Asking [To Top]
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் |
அவர்பழி தம்பழி அன்று. 1051-
தகுதியுள்ளவரைக் கண்டால், அவர்பால் இரந்து கேட்கலாம்; அவர் தம்மிடம் ஏதும் இல்லையென்று ஒளிப்பாரானால், அவருக்குப் பழியேயன்றிக் கேட்பவருக்குப் பழியில்லை.
Beg if you meet people who can give If they refuse, it is their fault, not yours (p) If you meet with those that may be begged of, you may beg; (but) if they withhold (their gift) it is their blame and not yours.
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை |
துன்பம் உறாஅ வரின். 1052-
ஈவாரது நல்லுணர்வால் இரந்த பொருள்கள் துன்பமின்றி வருமானால், அவ்வாறு இரந்து நின்றதும், ஒருவனுக்கு உலகில் இன்பம் தருவதாகும்.
Begging would be pleasant to one if one were to achieve one’s object without causing pain (p) Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs).
கரப்பிலா நெஞ்ின் கடனறிவார் முன்நின்று |
இரப்புமோ ரேஎர் உடைத்து. 1053-
ஒளிப்பதறியாத நெஞ்சமுடைய மானம் அறிபவரின் முன்னேபோய் நின்று, அவரிடம் ஒருபொருளை இரந்தாலும், அப்படி இரப்பதும் வறியவர்க்கு ஓர் அழகு ஆகும்.
There is a grace even in begging of one noble and generous of heart (p) There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars).
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் |
கனவிலும் தேற்றாதார் மாட்டு. 1054-
தமக்கு உள்ளதைக் கனவிலும் ஒளிப்பதற்கு அறியாதவரிடம் சென்று, ஒரு பொருளை வறியவர் இரந்து கேட்பதும், ஈதலைப் போலவே சிறந்ததாகும்.
Begging is endowed with all the grace of giving when the noble guest does not fail of his gifts even in dreams (p) To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself) ;
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று |
இரப்பவர் மேற்கொள் வது. 1055-
முன்னால்நின்றபோதே அருளோடு அவருக்கு உதவுகிறவரும் இருப்பதனாலேதான், உயிரைக் காக்கும் பொருட்டாக இரக்கும் சிலரும் உலகில் உள்ளனர்.
There is beggary because of persons touched by its very presence (p) As there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before them.
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை |
எல்லாம் ஒருங்கு கெடும். 1056-
உள்ளதை ஒளிக்கும் மனநோய் இல்லாதவரைக் கண்டால் மானம் விடாமல் இரப்பவருக்கு, அவர் வறுமைத் துன்பங்கள் எல்லாம் ஒருங்கே அவரைவிட்டுப் போய்விடும்.
All the indignities of begging vanish in the presence of the truly generous who know not the sin of withholding gifts (p) All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing.
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் |
உள்ளுள் உவப்பது உடைத்து. 1057-
தம்மை அவமதித்து இழிவாய்ப் பேசாமல் பொருள் தருவாரைக் கண்டால், இரப்பவரது நெஞ்சமும் மகிழ்ந்து உள்ளுக்கு உள்ளாகவே உவப்பது உண்டு.
Mendicancy inwardly rejoices in the bounty of the generous free of scorn (p) Beggars rejoice exceedingly when they behold those who bestow (their alms) with kindness and courtesy.
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் |
மரப்பாவை சென்றுவந் தற்று. 1058-
வறுமையால் இரப்பவர் இல்லையானால், குளிர்ந்த இடத்தை யுடைய பெரிய உலகினரின் போக்கும்வரவும், மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்றுவந்தாற் போன்றதாகும்.
Were there to be no mendicancy the vast world would be peopled with men moving like dolls (p) If there were no beggars, (the actions done in) the cool wide world would only resemble the movement of a puppet.
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் |
மேவார் இலாஅக் கடை. 1059-
தம்மிடம் வந்து ஒரு பொருளை இரந்து கொள்பவர் எவரும் இல்லாதபோது, கொடுப்பதற்கு விரும்புகிறவர்களுக்கும், இவ்வுலகத்திலே என்ன புகழ்தான் உண்டாகும்!
If there be no beggars in the world, will there be any glory for the bountiful? (p) What (praise) would there be to givers (of alms) if there were no beggars to ask for and reveive (them).
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை |
தானேயும் சாலும் கரி. 1060-
இரப்பவன் ஒருபோதும் தனக்குத் தராதவனை வெகுளாமல் இருக்கவேண்டும்; பொருள் வேண்டிய பொழுது வந்து உதவாதது என்பதற்கு அவன் வறுமையே சான்றாகும்.
The needy should not scowl at "No" His need another's need must show. Do not chafe against the hunks for inevitable is the pain of poverty (p) He who begs ought not to be angry (at a refusal) ; for even the misery of (his own) poverty should be a sufficient reason (for so doing). * Saint valluvar talks of two kinds of Asking:-Asking help for public causes or enterprises. Begging when one is able to work and this is condemned.
2.4.12 இரவச்சம் Dread of Requesting [To Top]
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் |
இரவாமை கோடி உறும். 1061-
தம்மிடம் உள்ள பொருளை ஒளிக்காமல் உ வப்போடு கொடுத் துதவும் கண்போன்றவரிடமும் சென்று இரந்துநிற்காமல், வறுமையைத் தாங்குதல் கோடி நன்மை தருவதாகும்.
A million times blessed is he who refrains from begging even from the generous delighting in charity (p) Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து |
கெடுக உலகியற்றி யான். 1062-
முயற்சிசெய்து உயிர்வாழ்தல் என்றில்லாமல் இரந்தும் ஒருவன் உயிர்வாழ்தலை, இவ்வுலகைப் படைத்தவன் விதித்திருப்பானா னால், அவனும் எங்கும் அலைந்து கெடுவானாக!
May the creator of the world perish if he has ordained life only through mendicancy? (p) If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish.
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் |
வன்மையின் வன்பாட்ட தில். 1063-
வறுமைத் துன்பத்தை முயற்சிகளால் நீக்கக்கடவோம் என்று நினையாமல், இரந்து நீக்க நினைக்கும் வன்மையைப்போல, வன்மையுள்ளது பிறிது யாதும் இல்லை.
There is no greater folly than the thought of wiping out poverty by beggary (p) There is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working).
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் |
காலும் இரவொல்லாச் சால்பு. 1064-
நுகர்பொருள் இல்லாமல் வறுமைப்பட்டபோதும் பிறர்பால் சென்று இரத்தலுக்கு உடன்படாத மனவமைதி, உலகமெல்லாம் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையது.
The greatness of refusing to beg even in adversity transcends the glory of the world (p) Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution.
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது |
உண்ணலின் ஊங்கினிய தில். 1065-
நெறியோடுகூடிய முயற்சியாலே கொண்டுவந்தது, தெளிந்த நீரைப்போலத் தோன்றும் புல்லரிசிக் கஞ்சியே யானாலும் அதனை உண்பதைவிட இனியது வேறு யாதும் இல்லை.
Nothing is sweeter than the thin porridge earned by the sweat of one’s brow (p) Even thin gruel is ambrosia to him who has obtained it by labour.
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு |
இரவின் இளிவந்த தில். 1066-
வேட்கை மிகுதியாலே சாகும் பசுவுக்கு இரக்கங்கொண்டு நீர் தருவீராக என்று இரந்தாலும், அதனைப்போல் நாவிற்கு இழிவான ஒரு செயல் யாதும் இல்லை.
It is a heinous sin to beg for water even for a cow crying of thirst (p) There is nothing more disgraceful to one's tongue than to use it in begging water even for a cow.
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் |
கரப்பார் இரவன்மின் என்று. 1067-
உமக்கு இரக்க வேண்டுமானால், உள்ளதை ஒளிக்காமல் மறைப்பவரிடம் சென்று இரக்காதீர்கள்' என்று இரப்பவரை எல்லாம் யான் இரந்து வேண்டுகின்றேன்.
I implore beggars not to beg of people who hide their wealth (p) I beseech all beggars and say, "If you need to beg, never beg of those who give unwillingly."
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் |
பார்தாக்கப் பக்கு விடும். 1068-
வறுமைக் கடலைக் கடப்பதற்குக் கொண்ட இரத்தல் என்னும் தோணியானது செல்லும்போது, இடையிலே காத்தல் என்னும் பார் தாக்கினால் உடைந்து போய்விடும்.
The unavailing canoe of begging gets wrecked on the rock of refusal (p) The unsafe raft of begging will split when it strikes on the rock of refusal.
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள |
உள்ளதூஉம் இன்றிக் கெடும். 1069-
இரந்து நிற்பதன் கொடுமையை நினைத்தால், எம் உள்ளம் கரைந்து உருகும்; அவர்க்கு இல்லை என்றவர் தன்மையை நினைத்தால், அந்த உருக்கமும் காய்ந்துபோகும்.
The mere thought of begging melts one’s heart It breaks at one’s denial (p) To think of (the evil of) begging is enough to melt one's heart; but to think of refusal is enough to break it.
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் |
சொல்லாடப் போஒம் உயிர். 1070-
ஒளிப்பவர் 'இல்லை' என்று சொன்னதுமே, இரப்பவர் உயிர் போய்விடுகின்றது: ஒளிப்பவர் உயிர் பின்னும் நிற்றலால் அது எங்கே புகுந்து ஒளிந்திருக்குமோ!
The mere thought of begging melts one’s heart It breaks at one’s denial (p) To think of (the evil of) begging is enough to melt one's heart; but to think of refusal is enough to break it.
2.4.13 கயமை Wickedness, Meanness [To Top]
மக்களே போல்வர் கயவர் அவரன்ன |
ஒப்பாரி யாங்கண்ட தில். 1071-
வடிவமைப்பால் கீழ்மக்களும் மக்களைப்போன்றிருப்பார்கள்; அவரைப்போல ஒப்புமையான ஒன்றை வேறிரண்டு சாதிக் கண் யாம் எங்கும் கண்டதில்லை.
Ignoble men are only touched with human shapes Rare indeed are such specimens (p) The base resemble men perfectly (as regards form) ; and we have not seen such (exact) resemblance (among any other species).
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் |
நெஞ்சத்து அவலம் இலர். 1072-
தமக்கு உறுதியானவை இவை என்று அறிவாரைவிட, அவை அறியாத கீழ்மக்கள் நன்மையுடையவர்: அவர்போல் இவர் தம் நெஞ்சத்தில் கவலையில்லாதவர் ஆதலால்.
Blessed are the base who are ignorant of the good Verily they are never ill at ease (p) The low enjoy more felicity than those who know what is good; for the former are not troubled with anxiety (as to the good).
தேவர் அனையர் கயவர் அவருந்தாம் |
மேவன செய்தொழுக லான். 1073-
தேவரைப்போலவே, தம்மை நியமிப்பவர் இல்லாமல்,தாம் விரும்புவனசெய்து ஒழுகுதலால், கயவரும் தேவரும் ஒரே தன்மையுடையவர் ஆவர்.
Mean men resemble unruly gods, for they know no law (p) The base resemble the Gods; for the base ac t as they like.
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் |
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். 1074-
கீழ்மக்கள் தம்மிலும் கீழாகநடப்பவரைக் கண்டால், அந்தக் கீழ்மையில் தாம் அவருக்கு மேம்பட்டிருப்பதைக் காட்டித் தமக்குள் இறுமாப்பு அடைவர்.
The mean fought their superiority among men baser than them (p) The base feels proud when he sees persons whose acts meaner than his own.
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் |
அவாவுண்டேல் உண்டாம் சிறிது. 1075-
'அரசால் துன்பம் வரும்' என்னும் அச்சமும் கீழ்மக்களது ஆசாரத்துக்குக் காரணம்; அஃது ஒழிந்தால், விரும்பப்படும் பொருள் வரும்போது, சிறிது உண்டாகும்.
Fear and desire rule the conduct of the base (p) (The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent.
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட |
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். 1076-
கேட்ட மறைவான செய்திகளைப் பிறரிடம் தாங்கிக்கொண்டு போய்ச் சொல்வதனால், கீழ்மக்கள் செய்தியறிவிக்க அறையப்படும் பறை போன்றவர்கள் ஆவர்.
The base are like the drum for they noise abroad the secrets of men (p) The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard.
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் |
கூன்கையர் அல்லா தவர்க்கு. 1077-
தம் கன்னத்தை நெரிப்பதாக வளைந்த கையினர் அல்லா தவருக்கு, கீழ்மக்கள், தாமுண்டு கழுவிய ஈரக்கையைக் கூட உதறமாட்டார்கள்.
The base part with their crumbs only to a clenched hand (p) The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists.
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் |
கொல்லப் பயன்படும் கீழ். 1078-
குறையைச் சொன்னதும் இரக்கங்கொண்டு உதவுவதற்கு மேலோர் பயன்படுவார்கள்: கரும்பைப் போல் வலியவர் நெருக்கிப் பிழிந்தால் கயவர் அவருக்குப் பயன்படுவர்.
Even the least cry of distress touches the heart of the good; but squeezing goodness out of the vile is like crushing the sugar-cane (p) The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death.
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் |
வடுக்காண வற்றாகும் கீழ். 1079-
பிறர் நன்றாக உடுப்பதையும் சுவையோடு உண்பதையும் கீழ்மகன் கண்டால், அவற்றைப் பொறாமல், அவர்மேல் வடு உண்டாக்கவும் முயல்வான்.
The base envy others in their food and clothing and slander them (p) The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food and clothing.
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் |
விற்றற்கு உரியர் விரைந்து. 1080-
ஒரு துன்பம் வந்துவிட்டால், அதுவே காரணமாகத் தம்மை விரைவில் பிறருக்கு விற்பதற்குக் கயவர் உரியவராவர்; அதுவன்றி வேறு எத்தொழிலுக்கும் உரியராகார்.
What are the base men fit for? They hasten only to sell themselves in adversity (p) The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted?
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை |
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. 1081-
இவ் வடிவம் தேவமகளோ? சிறந்த அழகு மயிலோ? அல்லது, கனவிய குழையையுடைய ஒரு மானுடப் பெண்தானோ! புரியாமல் என் நெஞ்சம் மயங்குகின்றதே!
Is this a goddess fair? Or is it a rare peacock? Or, is it a mortal with heavy earrings? My mind is perplexed in the extreme (p) Is this jewelled female a celestial, a choice peahen, or a human being? My mind is perplexed.
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு |
தானைக்கொண் டன்ன துடைத்து. 1082-
என்னை அவள் நோக்கினாள். என் பார்வைக்கு எதிராகவும் பார்த்தாள்! அந்தப் பார்வை, தானே தாக்கி வருத்தும் அணங்கு, தானையையும் கொண்டதுபோல் உள்ளதே-
The glance she returns for mine resembles that of a terrible goddess leading an army (p) This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me.
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் |
பெண்டகையால் பேரமர்க் கட்டு. 1083-
'கூற்று' என்பதனை இதன்முன்னர் அறியேன்; இப்போது அறிந்து விட்டேன்; அது, அழகிய பெண்ணின் வடிவோடு பெரியவாய் அமர்த்த கண்களையும் உடையது.
The god of death I never knew Now I behold him in the shape of this woman with battling eyes (p) I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities.
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் |
பேதைக்கு அமர்த்தன கண். 1084-
தன்னைக் கண்டவரின் உயிரை உண்ணுகின்ற தோற்றத்தோடு, பெண்களில் சிறந்தவளான இந்தப் பேதைக்குக் கண்களும் அமர்த்தனவாக அமைந்து உள்ளனவே!
The cruel eyes of this woman seem to devour the lives of those on whom they fall (p) These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity.
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் |
நோக்கமிம் மூன்றும் உடைத்து. 1085-
இளமைப் பருவத்தவளான இவளது பார்வை, வருத்தும் கூற்றமோ! பிறழும் கண்ணோ! மருளும் பிணையோ! இம்மூன்று தன்மையையும் தன்பால் கொண்டிருக்கிறதே!
Oh, how the death-dealing antelope-eyes of the lady charm and puzzle me! (p) Is it Yama or death, (a pair of) eyes or a hind?- Are not all these three in the looks of this maid?
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் |
செய்யல மன்இவள் கண். 1086-
விளைவான இவள் புருவங்கள் செம்மையாயிருந்து விளக்கினவானால், அவற்றைக் கடந்து, இவள் கண்களும் நாம் நடுங்கும் துயரைச் செய்ய மாட்டாவே!
Her cruel eyes, had they not been shaded by her brows, would have made me quail and shudder (p) Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eye-brows.
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் |
படாஅ முலைமேல் துகில். 1087-
இந்த மாதின், சாயாத முலைகளின் மேலாக இடப்பட்டுள்ள துகில், அவையும் என்னைக் கொல்லாதபடி காத்தலால், மதகளிற்றின் முகபடாத்தைப் போன்றதாகும்.
The garment over the ample swell of her bosom breasts looks like the cloth on the face of a wild elephant (p) The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant.
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் |
நண்ணாரும் உட்குமென் பீடு. 1088-
போர்க்களத்துக்கு வராதவரும், பிறருக்கு நேர்ந்ததைக் கேட்டு அஞ்சுவதற்கு ஏதுவான என் வலிமையெல்லாம் இவளின் ஒளிவீசும் நெற்றிக்கே உடைந்து போயிற்றே!
My might which has struck terror in the heart of the foe who has only heard of my prowess lies overthrown before her splendid face (p) On her bright brow alone is destroyed even th at power of mine that used to terrify the most fearless foes in the battlefield.
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு |
அணியெவனோ ஏதில தந்து. 1089-
மானின் பிணைபோன்ற மடநோக்கினையும் உள்ளத்தே நாணத்தையும் உடையவளான இவளுக்கு, இவையே சிறந்த அழகாக, வேறும் அணிபூட்டி அழகுபடுத்தல் ஏனோ?
What need of ornament has this lady of modesty, adorned with the glances of an antelope? (p) Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind?
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் |
கண்டார் மகிழ்செய்தல் இன்று. 1090-
தன்னை உண்டவருக்கு மகிழ்ச்சியைச் செய்வதல்லாமல், அடப்பட்ட நறவானது, காமத்தைப் போலக் கண்டவருக்கு மகிழ்வைச் செய்யும் ஆற்றலுடையது இல்லையே!
Wine intoxicates the person when only drunk but love inebriates the soul even by a mere look (p) Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at.
3.1.2 குறிப்பறிதல் Reading Hints or Signs [To Top]
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு |
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. 1091-
இவள் மையுண்ணும் கண்களில் இருவகைப் பார்வைகள் உள்ளன ; ஒன்று என்னிடத்து நோய்செய்யும் பார்வை மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும் பார்வை.
The glances of her collirium-painted eyes have a double sway One wounds and the other heals (p) There are two looks in the dyed eyes of this (fair one) ; one causes pain, and the other is the cure thereof.
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் |
செம்பாகம் அன்று பெரிது. 1092-
என்னை அறியாமல் என்மேல் நோக்குகின்ற இவள் அருகிய நோக்கமானது, காம உறவிலே சரிபாகம் ஆவதன்று; அதனிலும் மிகுதியானது ஆகும்.
More telling than her actual embrace are her stealthy love looks (p) A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace).
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் |
யாப்பினுள் அட்டிய நீர். 1093-
அன்போடு என்னை நோக்கினாள்; பின் எதனையோ நினைத்தாள்போல நாணித் தலைகவிழ்ந்தாள்; அக்குறிப்பு, எங்களின் அன்புப்பயிருக்கு வார்த்த நீராயிற்று.
She gazed and gazed but she became shy and her bashful look has nurtured the plant of love between us (p) She has looked (at men) and stooped (her head) ; and that (sign) waters as it were (the corn of) our love.
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் |
தான்நோக்கி மெல்ல நகும். 1094-
யான் தன்னைப் பாராதபோது என்னை நோக்கி அவள் மெல்ல நகுவாள் ; யான் பார்க்கும்பொழுதோ எனக்கு எதிராகப் பாராள்; தலை கவிழ்ந்து நிலத்தையே பார்ப்பாள்!
She casts her shy look on earth when I gaze at her; but if I turn aside, she glances at me with a gentle smile (p) When I look, she looks down; when I do not, she looks and smiles gently.
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் |
சிறக்கணித்தாள் போல நகும் 1095-
என்னையே குறிப்பாக கொண்டு பார்த்தல் அல்லாமலும், தான் ஒரு கண்ணை, ஒரு பக்கமாகச் சாய்த்தாள் போலவும் நோக்கி, தன்னுள்ளாகவே அவள் நகுவாள்!
Without looking straight at me, with furtive glances she smiles inwardly (p) She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles.
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் |
ஒல்லை உணரப் படும். 1096-
புறத்தே நம்மை விரும்பாதவரைப் போலச் சொன்னாரானாலும், தம் உள்ளத்தில் நம்மைச் சினவாதவரின் சொற்கள் பயனாகுதல், விரைவில் உணரப்படும்.
Though her words are as harsh as those of a stranger, they betoken only love (p) Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் |
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. 1097-
நம்மை உள்ளத்திலே சினவாதவரின் சொல்லும், சினந்தார் போலப் பார்க்கும் பார்வையும், அயலார்போல் உள்ளத்திலுள்ள ஒரு குறிப்பாலே வருவன.
The pretended angry look and the bitter-sweet word of the beloved are like those of a stranger Surely these are but the masks of her love (p) Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers.
அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப் |
பசையினள் பைய நகும். 1098-
அவளை இரப்பதுபோல யான் பார்த்தபோது, அதனால் நெகிழ்ந்தவளாய் மெல்லநகைத்தாள்; அதனால் அசையும் இயல்பு உடையவளுக்கு நன்மைக் குறிப்பும் உண்டு.
When I look beseechingly at her she returns a gentle smile Oh, what bewitching charm fills the tender maid’s look! (p) When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me.
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் |
காதலார் கண்ணே உள. 1099-
முன் அறியாதவரைப் போலத் தம்முள் பொதுநோக்காகவே ஒருவரையொருவர் பார்த்தலும், தம் உள்ளத்திலே காதல் உடையவரிடம் காணப்படும் தன்மை ஆகும்.
Oh, what an indifferent air do the lovers assume! They look at each other as if they were strangers (p) Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers.
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் |
என்ன பயனும் இல. 1100-
காமத்தால் ஒருவர் கண்ணோடு மற்றவர் கண்ணும் நோக்க, வாய்ச் சொற்களால் எந்தப் பயனுமில்லை.
Of what avail are words when eyes speak to eyes and heart whispers unto heart (p) The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers).
3.1.3 புணர்ச்சிமகிழ்தல் Embrace-Bliss [To Top]
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் |
ஒண்தொடி கண்ணே உள. 1101-
கண்டும் கேட்டும் உண்டும் மோந்தும் தீண்டியும் அறிகின்ற ஐம்புல இன்பங்களும், ஒளிவீசும் வளையல் அணிந்த இவள் ஒருத்தியிடத்திலேயே அமைந்துள்ளனவே!
All the pleasures that the five senses give us are garnered in this lady with glittering bracelets What a thrill she gives me! (p) The (simultaneous) enjoyment of the five senses of sight, hearing, taste, smell and touch can only be found with bright braceleted (women).
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை |
தன்நோய்க்குத் தானே மருந்து. 1102-
நோய்க்கு மருந்தாக அமைவன வேறான பொருள்கள். அணி புனைந்த இவளால் நமக்கு வந்த நோய்க்கு, இவள், தானே மருந்தும் ஆயினளே!
The remedy for a disease lies not in the disease but in some healing balm; but not so the loved one who is at once the disease and the cure for the pangs of love (p) The remedy for a disease is always something different (from it) ; but for the disease caused by this jewelled maid, she is herself the cure.
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் |
தாமரைக் கண்ணான் உலகு. 1103-
தாம் விரும்பும் மகளிரின் மென்மையான தோள் மேல் துயிலும் இன்பத்தைப் போலத் தாமரைக் கண்ணானின் போக உலகத்து இன்பமும் இனிதாக இருக்குமோ?
Are the pleasures of the world of the lotus-eyed lord sweeter than reclining on the soft shoulder of the beloved? (p) Can the lotus-eyed Vishnu's heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved?
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் |
தீயாண்டுப் பெற்றாள் இவள்? 1104-
தன்னைவிட்டு விலகிச் சென்றால் சுடுதலும், அருகில் நெருங்கினால் குளிர்தலுமாகிய நெருப்பை, இவள்தான் எவ்விடத்திலிருந்து பெற்றுள்ளாளோ?
This lady has a fire which burns me with passion when I am away; but it cools down when I see her Can anyone say where she has acquired this power? (p) From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach?
வேட்ட பொழுதின் அவையவை போலுமே |
தோட்டார் கதுப்பினாள் தோள். 1105-
விரும்பியபொழுது அவையவை தரும் இன்பத்தைப்போல இன்பம் தருவன, மலரணிந்த கூந்தலை உடையவளான இவள் தோள்கள் தருகின்ற இன்பம்!
Like the dreams of pleasures sought, the embrace of this sweet-shouldered, flower-decked maiden gives me untold pleasure (p) The shoulders of her whose locks are adorned with flowers delight me as if they were the very sweets I have desired (to get).
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு |
அமிழ்தின் இயன்றன தோள். 1106-
அணைக்கும் போதெல்லாம் வாடிய என்னுயிர் தளிர்க்குமாறு தீண்டுதலால் இப்பேதையின் தோள்கள் அமிழ்தத்தால் அமைந்தவை போலும்!
Her embrace ever kindles new warm life in me Verily her shoulders are packed with ambrosia (p) The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them.
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் |
அம்மா அரிவை முயக்கு. 1107-
தம் வீட்டிலிருந்து, தமக்குள்ள பகுதியை உண்ணும் இனிமை போன்றது, அழகிய மாமை நிறம் உடையவளான இவளைத் தழுவிப் பெறுகின்ற இன்பம்!
The embrace of my golden-coloured love reminds me of the joy of a householder who delights in fulfilling the laws of hospitality (p) The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one's own house and live by one's own (earnings) after distributing (a portion of it in charity).
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை |
போழப் படாஅ முயக்கு. 1108-
காற்றும் இடையிலே புகுந்து பிளந்து விடாத இறுக்கமான தழுவுதல், விரும்பிக் கூடும் இருவருக்கும் இனிமை தரும் நல்ல இன்ப உறவாகும்!
Sweet indeed to both the lover and his beloved is that close embrace which allows not even a wisp of air to steal in between their arms (p) To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் |
கூடியார் பெற்ற பயன். 1109-
ஊடலும் அதனை அளவோடு அறிந்து தெளிவித்தலும் பின்னர்க் கூடுதலும், என்னும் இவை எல்லாம் காமம் பொருந்தியவர் தமக்குள் பெற்ற பயன்களாகும்.
Separation, reconciliation and reunion are the pleasures vouchsafed to those stricken with love (p) Love quarrel, reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lust.
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் |
செறிதோறும் சேயிழை மாட்டு. 1110-
ஒன்றை அறியும்போது, முன்னிருந்த அறியாமையைக் கண்டாற்போல, செறிவான சிவந்த அணிகள் உடையவளை சேருந்தோறும், காம இன்பமும் உண்டாகின்றது.
The more I taste the charms of my beloved the more do d hunger for them Verily what is already experienced pales into insignificance before the promise of the future (p) As (one's) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a well-adorned female (only create a desire for more).
3.1.4 நலம்புனைந்துரைத்தல் Charms, Beauty Extolled [To Top]
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் |
மென்னீரள் யாம்வீழ் பவள். 1111-
அனிச்ச மலரே! நீதான் நல்ல சிறப்பை உடையாய்! நீ வாழ்கா! எம்மால் விரும்பப்படுகின்றவளோ நின்னைக் காட்டிலும்மிகவும் மென்மையான தன்மையினள்!
O aniccam flower, the best and softest of all flowers, may you be blest; but do not forget that my lady is yet more tender (p) May you flourish, O Anicham! you have a delicate nature. But my beloved is more delicate than you.
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் |
பலர்காணும் பூவொக்கும் என்று. 1112-
இவள் கண்களும் பலராலும் காணப்படும் இக்குவளைப் பூவைப் போன்றதாகுமோ என்று, இக்குவளை மலரைக் கண்டால், நெஞ்சே. நீயும் மயங்குகின்றாயே!
O Mind, when you behold flowers you think that your beloved’s eyes are like these and pine away (p) O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them.
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் |
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. 1113-
அவள் மேனியோ தளிர் வண்ணம்: பல்லோ முத்து; இயல்பான மணமோ நறுமணம்: மையுண்ட கண்கள் வேல் போன்றவை: தோள்களோ மூங்கில் போன்றவை!
Her body is of rich gold, her teeth pearls She is fragrant, her eyes dart forth glances like a lance, her shoulders gently curve as the bamboo O! what a varied charm my beloved has! (p) The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath, fragrance; and her dyed eyes, lances.
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் |
மாணிழை கண்ணொவ்வேம் என்று. 1114-
குவளை மலர்கள், இவளைக் கண்டால், 'இம் மாணிழை கண்களுக்கு யாம் ஒப்பாக மாட்டோம்' என்று தலையைக் கவிழ்ந்து நிலத்தை நோக்குமே!
The kundalai flower (lily?) hangs down in shame before the eyes of my tastefully adorned lady-love (p) If the blue lotus could see, it would stoop and look at the ground saying, "I can never resemble the eyes of this excellent jewelled one."
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு |
நல்ல படாஅ பறை. 1115-
தன் இடையின் நுண்மையை நினையாதவளாய், அனிச்ச மலரைக் காம்பு களையாமல் கூந்தலிலே சூடியுள்ளாளே! இவள் இடைக்கு இனி நல்ல பறைகள் ஒலிக்கமாட்டா!
She decks herself with aniccam flowers without removing the stalks It is the death-knell of her slender waist (p) No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem.
மதியும் மடந்தை முகனும் அறியா |
பதியின் கலங்கிய மீன். 1116-
மதிதான் யாதென்றும், இம் மடந்தையது முகந்தான் யாதென்றும் வேறுபாடு அறியாமையால், வானத்து மீன்கள் தம் நிலையில் நில்லாது கலங்கிப் போயினவே!
Even the stars of heaven veer their usual courses mistaking my lady’s face for their queen moon (p) The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance.
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல |
மறுவுண்டோ மாதர் முகத்து. 1117-
அவை கலங்குவதுதாம் ஏனோ? தேய்ந்து பின்னர் வளர்ந்து நிறைவாகும் ஒளியுள்ள மதிக்கு உள்ளதுபோல இவள் முகத்திலும் களங்கம் யாதும் உண்டோ?
Is there a dark spot on the face of my lady-love as on the shining moon which waxes and wanes? (p) Could there be spots in the face of this maid like those in the bright full moon?
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் |
காதலை வாழி மதி. 1118-
மதியமே! இப் பெண்ணின் நல்லாளின் முகத்தைப்போல நீயும் ஒளிவிடுவதற்கு வல்லமை உடையையானால் நீயும் என்னால் காதலிக்கப்படுவாய்! நீதான் வாழ்க!
Blest indeed are you Moon! If you will be resplendent without a spot even as the face of my lady, I shall love you with all my heart (p) If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving?
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் |
பலர்காணத் தோன்றல் மதி. 1119-
மதியமே! மலர்போன்ற கண்களையுடைய இவளின் முகத்திற்கு நீயும் ஒத்திருப்பாய் ஆயின், பலரும் காணுமாறு இனி வானத்தில் தோன்றாதிருப்பாயாக!
Moon, if you wish to equal the face of my lady then hide yourself from this world (p) O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all.
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் |
அடிக்கு நெருஞ்சிப் பழம். 1120-
மிகமிக மென்மையான அனிச்ச மலர்களும், அன்னப் பறவைகளின் மெல்லிய இறகுகளும், இம்மாதின் அடிக்கு நெருஞ்சிப் பழம்போலத் துன்பத்தைச் செய்யுமே!
The soft aniccam flower and the down of the swan are but thistles before the soft feet of my lady (p) The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji.
3.1.5 காதற்சிறப்புரைத்தல் Love's Excellence [To Top]
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி |
வாலெயிறு ஊறிய நீர். 1121-
பணிவோடு பேசுகின்ற இவளது, வெண்மையான பற்களிடையே ஊறிவந்த நீரானது, பாலோடு தேனும் கலந்தாற்போல மிகுந்த சுவையினை உடையதாகும்!
The kiss of the tender lips of my modest maid is like the taste of honey with milk (p) The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey.
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன |
மடந்தையொடு எம்மிடை நட்பு. 1122-
உடம்பும் உயிரும் எப்படியோ அப்படியே பருவப் பெண்ணுக்கும் அவளை காதலிக்கும் ஆணுக்கும் உள்ள நட்பு. உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை
The love between lovers (man and his damsel) is like the union of body and soul. Is like bond between soul and body, which is unseparable. (p) The love between me and this damsel is like the union of body and soul.
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் |
திருநுதற்கு இல்லை இடம். 1123-
கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீயும் போய் விடுவாயாக! யாம் விரும்புகின்ற அழகிய நுதலை உடையாளுக்கு இருப்பதற்கான இடம் வேறு இல்லை.
O Image in the pupil of my eye, begone! How can my fair-browed lady sit enthroned, unless you give place to her? (p) O you image in the pupil (of my eye) ! depart; there is no room for (my) fair-browed beloved.
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் |
அதற்கன்னள் நீங்கும் இடத்து. 1124-
இந்த ஆயிழையாள் என்னுடன் இருக்கும் போது, என் உயிருக்கு வாழ்வைத் தருகின்றாள்; நீங்கும் போதோ அவ்வுயிருக்குச் சாதலையே தருகின்றாள்!
Embracing the arms of my choicely adorned lady I feel all the thrill and joy of life, but the moment I separate, I feel the wretchedness of death (p) My fair-jewelled one resembles the living soul (when she is in union with me) , the dying soul when she leaves me.
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் |
ஒள்ளமர்க் கண்ணாள் குணம். 1125-
ஒள்ளியவாய் அமர்த்த கண்களை உடையவளின் குணங்களை மறப்பதற்கே அறியேன்; அதனால், யான் அதை எப்போதாயினும் நினைப்பதும் செய்வேனோ!
I cannot forget the noble quality of my love of the sparkling eyes (p) If I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee) ; but I never forget her. (Thus says he to her maid).
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா |
நுண்ணியர்எம் காத லவர். 1126-
எம் காதலுக்கு உரியவர் எம் கண்களிலிருந்து ஒருபோதுமே நீங்கார், எம் கண்களை இமைத்தாலும் வருந்தார்: அவ்வளவு நுண்ணியவர் அவர்.
My lover will never vanish from my eyes; nor will he be disturbed if I close them He is so ethereal as to be invisible (p) My lover would not depart from mine eyes; even if I wink, he would not suffer (from pain) ; he is so ethereal.
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் |
எழுதேம் கரப்பாக்கு அறிந்து. 1127-
காதலுக்கு உரியவரான அவர் என்கண்ணிலேயே உள்ளனர்; ஆதலினாலே, அவர் மறைவாரோ என்று நினைத்து, என் கண்களுக்கு நான் மையும் எழுத மாட்டேன்.
I fear to paint ray eyes, lest it should hide the vision of my lord dwelling within (p) As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் |
அஞ்சுதும் வேபாக் கறிந்து. 1128-
காதலர் என் நெஞ்சத்தில் நிறைந்திருக்கின்றார்; அதனால், அவருக்குச் சூடு உண்டாவதை நினைத்து, யாம் சூடாக எதனையும் உண்பதற்கும் அஞ்சுவோம்!
With my lover in my heart I do not eat anything hot lest it should harm the delicate one (p) As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him.
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே |
ஏதிலர் என்னும் இவ் வூர். 1129-
இமைப்பின் அவர் மறைவார்' என்று, கண்களை மூடாமலே துயிலொழித்துக் கிடப்போம்; அவ்வளவிற்கே, இவ்வூர் அவரை அன்பற்றவர் என்கின்றதே!
My eyes wink not lest they should lose the vision of my lord within; not knowing this people blame him for my sleeplessness (p) I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving.
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் |
ஏதிலர் என்னும் இவ் வூர். 1130-
எம் உள்ளத்துள்ளே அவர் உவப்போடு உள்ளார்; இருந்தும், 'பிரிந்து போய்விட்பார்; அதனால் அன்பில்லாதவர்' என்று இவ்வூர் அவர்மேல் பழி கூறுகின்றதே!
Delightfully my lover makes my heart for ever his abode; but villainous people say he is cruel and dwells apart (p) My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar.
3.1.6 நாணுத்துறவுரைத்தல் Unabashed [To Top]
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் |
மடலல்லது இல்லை வலி. 1131-
காம நோயால் துன்புற்று, தம் காதலியின் அன்பைப் பெறாமல் வருந்தியவருக்கு வலிமையான பாதுகாப்பு, 'மடலேறுதல் அல்லாமல், வேறு யாதும் இல்லை.
Men anguished by unrequited love find no stronger solace than mounting the madal (p) To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse. *Pangs of passion find no recourse Except riding *`palmyra horse'.
நோனா உடம்பும் உயிரும் மடலேறும் |
நாணினை நீக்கி நிறுத்து. 1132-
காதலியின் அன்பைப் பெறாத துயரத்தைத் தாங்கமுடியாத என் உடம்பும் உயிரும், நாணத்தை என்னிடமிருந்து நீக்கி நிறுத்திவிட்டு, மடலூரத் துணிந்துவிட்டன.
My body and soul, unequal to the pangs of love, seek to mount the madal; bashfulness and reserve are swept away (p) Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse.
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் |
காமுற்றார் ஏறும் மடல். 1133-
நாணத்தையும் நல்ல ஆண்மையையும் முன்னர் பெற்றிருந்தேன்; இப்பொழுதோ பிரிவுத் துயரால் காமநோய் மிகுந்தவர் ஏறும் மடலையே பெற்றுள்ளேன்.
Reserve and dignified manliness once I had; but today I possess the madal which the helpless love-sick resort to (p) Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful.
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு |
நல்லாண்மை என்னும் புணை. 1134-
நாணத்தோடு நல்லாண்மையும் ஆகிய தோணிகளைக் காமநோய் என்கின்ற கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போகின்றதே! என்ன செய்வேன்!
The giant force of the floods of love has carried away the raft of my manliness (p) The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust.
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு |
மாலை உழக்கும் துயர். 1135-
தொடர்பான குறுவளையல்களை அணிந்த இவள்தான், மாலைப்பொழுதிலே வருந்தும் துயரத்தையும், மடலேறும் நிலைமையையும் எனக்கு தந்துவிட்டாளே!
The lady of little bracelets strung like garlands has taught me the love-sick pangs of evening and the madal horse Never before have I known them (p) She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night.
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற |
படல்ஒல்லா பேதைக்கென் கண். 1136-
அப்பேதையின் பொருட்டாக என் கண்கள் ஒருபோதும் மூடுதலைச் செய்யமாட்டா; அதனால், இரவின் நடுச்சாம வேளை யிலும் மடலேறுதலையே நான் நினைத்திருப்பேன்!
Thinking of this maid, my eyelids never close in slumber; even in dead of night my thoughts run, on the suicidal madal (p) Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse.
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் |
பெண்ணின் பெருந்தக்க தில். 1137-
கடலைப் போன்ற காம நோயால் வருத்தமடைந்த போதும், மடலேறாமல், தன் துயரத்தைப் பொறுத்திருக்கும் பெண்ணைப் போன்ற பெருந்தகுதி ஆணுக்கு இல்லை.
Woman tossed about in a sea of the anguish of love think not of mounting the madal — there is nothing greater than this (p) There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust.
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் |
மறையிறந்து மன்று படும். 1138-
நிறை இல்லாதவர் இவர் என்றும், 'இரங்கத்தவர் இவர்' என்றும் பாராது, காமநோயானது, மறைப்பைக் கடந்து, மன்றத்தில் தானாக வெளிப்படுகின்றதே!
Oh my beloved I Wanton is my love which has no sympathy for my modesty or my helplessness; How it compels me to unpack my hidden secret and drag it out to the open! (p) Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it).
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் |
மறுகின் மறுகும் மருண்டு. 1139-
பொறுத்திருந்ததனாலே எல்லாரும் அறிந்தாரில்லை என்று நினைத்தே. என் காம நோயானது, இவ்வாறு தெருவிலே பலரும் அறியுமாறு மயங்கித் திரிகின்றது போலும்!
‘Nobody knows my secret’ I said to myself; but my angry love rages in the market-place to my utter disgrace (p) My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் |
யாம்பட்ட தாம்படா ஆறு. 1140-
யாம் பட்ட இந்தப் பிரிவுத் துன்பத்தை அவர்களும் அடையாததாலே தான், அறிவில்லாதவர், யாம் கண்ணாற் காணும்படியாக எம் எதிரே நின்று சிரிக்கின்றனர்.
Foolish people laugh at me before my very eyes; verily they have not experienced agony of love (p) Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered.
* Palmyra horse or 'Madal' is a torture expressive of the burning passion of the lover to the beloved. The lover's body is laid on a rough pricking palmyra bed and he is carried along the street with songs of love pangs. The parents of the lovers first reproach them and then consent to their marriage.
3.1.7 அலரறிவுறுத்தல் Public Clamour Rumors [To Top]
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் |
பலரறியார் பாக்கியத் தால். 1141-
ஊரிலே பழிச்சொல் எழுந்தும் என் உயிர் இன்னும் போகாது நிற்கின்றது; அஃது என் நல்வினையின் பயனால்தான் என்பதைப் பலரும் அறிய மாட்டார்கள்.
The many scandals about our love do indeed give me fresh hope and sustain my wretched life Luckily for me the village folk do not know what their scandals have done (p) My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது |
அலரெமக்கு ஈந்ததிவ் வூர். 1142-
குவளை மலரைப்போன்ற கண்களை உடையவளான இவளின் அருமையைப் பற்றி அறியாமல், இவளை எளியவளாகக் கருதி, இவ்வூரவர் அலரினைத் தந்தார்களே!
Blind to the esteem of my lady of flower-like eyes, the village folk have linked her name with mine (p) Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் |
பெறாஅது பெற்றன்ன நீர்த்து. 1143-
ஊர் அனைத்தும் அறிந்த இப்பழிச் சொற்கள் அவனையும் சென்று சேராதோ! சேருமாதலால், அதனைப் பெறாதைப் பெற்றாற்போன்றதாகவே யானும் கொள்வேன்.
Is not the rumour of this village sweet to me? For it makes me feel that I have attained the bliss of love even without my lover at my side (p) Will I not get a rumour that is known to the (whole) town? For what I have not got is as if I had got it (already).
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் |
தவ்வென்னும் தன்மை இழந்து. 1144-
ஊரார் உரைக்கும் பழிச்சொற்களாலே காமநோயும் நன்றாக மலர்கின்றது! அதுவும் இல்லையானால், என் ஆசையும் தன் மலர்ச்சியில்லாமல் சுருங்கிப் போய்விடுமே!
The rumours set afloat have heightened my love; but for these, it might lose its sweetness and wither away (p) Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away.
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் |
வெளிப்படுந் தோறும் இனிது. 1145-
களிக்குந்தோறும் களிக்குந்தோறும் மேன்மேலும் கள்ளுண்டலை விரும்பினாற்போல, காமமும், அலரால் வெளிப்பட வெளிப்பட, மேலும் இனிமையாகின்றது.
Each cup adds to the gaiety of a revelling drunkard Even so each rumour of our love adds to my delight (p) As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour.
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் |
திங்களைப் பாம்புகொண் டற்று. 1146-
அவரைக் கண்டது எல்லாம் ஒரே ஒரு நாள்தான்; திங்களைப் பாம்பு கொண்டது எங்கும் பரவினாற்போல அதற்குள் எங்கும் வெளிப்பட்டுப் பரவிவிட்டதே.
Only once have I seen him; but oh! rumours of our secret love have spread all over the vast world, even as the news of the serpent devouring (p) It was but a single day that I looked on (my lover) ; but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் |
நீராக நீளும்இந் நோய். 1147-
இக் காமநோயானது, ஊரவர் சொல்லும் பழிச்சொற்களை எருவாகவும், அதுகேட்டு அன்னை சொல்லும் கடுஞ்சொல்லை ராகவும் கொண்டு வளர்கின்றது.
How this plant of sickness grows on! The gossip of the village manures it and the frown of my mother waters it (p) This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் |
காமம் நுதுப்பேம் எனல். 1148-
நெய்யால் எரியும் நெருப்பை அடக்குவது எப்படியோ அப்படியே ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது அறியாமைச் செயலாகும்.
To say that one could extinguish love/lust/passion by rumour or scandals of the village is like extinguishing fire with ghee. (Difficult to hide feelings especially love and passion) (p) To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee.
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் |
பலர்நாண நீத்தக் கடை. 1149-
'அஞ்சாதே! பிரியேன்' என்று என்னைத் தெளிவித்துக் கூடியவர், இந்நாள் பலரும் நாண நம்மைக் கைவிட்டுப் போனபோது அலருக்கு நாணவும் நம்மால் இயலுமோ!
When my lover who swore not to leave me alone has abandoned me to the mockery of the many, why need I fear these tittle-tattle? (p) When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal.
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் |
கெளவை எடுக்கும்இவ் வூர். 1150-
யாம் விரும்புகின்ற அலரினை இவ்வூரவரும் எடுத்துக் கூறுகின்றனர்; அதனால், எம் காதலரும் தாம் எம் உறவை விரும்பி வந்து எமக்கு அருளினைச் செய்வார்.
This village rumour is useful; it has coupled you and your lover; the moment he desires, the lover can thus help us End of the Secret Union End of the Secret Union (p) The rumour I desire is raised by the town (itself) ; and my lover would if desired consent (to my following him).
3.2 கற்பியல் Chaste Wedded Love:
3.2..1 பிரிவாற்றாமை Pangs of Separation [To Top]
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் |
வல்வரவு வாழ்வார்க் குரை. 1151-
பிரிந்து செல்லாமை உண்டானால் எனக்குச் சொல்வாயாக; பிரிந்துபோய் விரைந்து திரும்பி வருவது பற்றியானால், அது வரையிலும் வாழ்ந்திருப்பவருக்குச் சொல்வாயாக.
If you are not to go away, tell me so that I may sustain my lingering life If you are to go, return soon (p) If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then.
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் |
புன்கண் உடைத்தால் புணர்வு. 1152-
அவர் அன்பான பார்வையும் முன்னர் இனிதாய் இருந்தது; இப்பொழுதோ, பிரிவை நினைத்து அஞ்சுகின்ற துன்பத்தால், அவர் கூடுதலும் துன்பமாகத் தோன்றுகின்றது.
In the days of courtship what pleasure lay in each glance of his! Now after our union, the prospect of his separation brings gloom even in moments of happiness (p) His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation.
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் |
பிரிவோ ரிடத்துண்மை யான். 1153-
அறிவு உடையவரிடமும், தாம் காதலித்தவரைப் பிரிவது ஒரு சமயத்தில் உள்ளதனால், அவர், பிரியேன்' என்று சொன்ன சொல்லையும் என்னால் நம்ப முடியவில்லை!
Hard it is for me to rest assured; the lover who knows full well my miseries in separation still may part from me, making promises of quick return (p) As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible.
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் |
தேறியார்க்கு உண்டோ தவறு. 1154-
அருள் செய்த காலத்தில், 'அஞ்சாதே' என்று கூறி, என் அச்சத்தைப் போக்கியவரே, இப்போது விட்டுப்பிரிவாரானால், அவரை நம்பிய நமக்கும் குற்றம் ஆகுமோ?
How can there be blame on one who has put implicit trust in the comforting words of him who promised to shelter me forever? (p) If he who bestowed his love and said "fear not" should depart, will it be the fault of those who believed in (his) assuring words?
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் |
நீங்கின் அரிதால் புணர்வு. 1155-
என்னைக் காப்பதானால், காதலர் பிரியாதபடி தடுத்துக் காப்பாயாக; அவர் பிரிந்து போய்விட்டார் என்றால், மீண்டும் அவரைக் கூடுதல் என்பது நமக்கு அரிதாகும்.
Stop my lord from leaving me; only then can you save my life Else it will flee at his parting and never again shall we meet (p) If you would save (my life) , delay the departure of my destined (husband) ; for if he departs, intercourse will become impossible.
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் |
நல்குவர் என்னும் நசை. 1156-
பிரிவைப் பற்றிச் சொல்லும் கொடியவர் அவரானால்', அவர் மீண்டும் திரும்பிவந்து நமக்கு இன்பம் தருவார் என்னும் நம் ஆசையும், பயன் இல்லாததே!
If he is cruel enough to speak of leaving me, I am lost; false it is to entertain any hope of his mercy (p) If he is so cruel as to mention his departure (to me) , the hope that he would bestow (his love) must be given up.
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை |
இறைஇறவா நின்ற வளை. 1157-
நம்மைத் தலைவன் பிரிந்து போயினான் என்பதை, மெலிந்த நம் முன்கையிலிருந்து கழலும் வளைகள், ஊரறிய எடுத்துக் காட்டித் தூற்ற மாட்டவோ?
Will not the bracelets slipping loose from my wrist, tell the tale of the separation of my husband? (p) Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord?
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் |
இன்னாது இனியார்ப் பிரிவு. 1158-
தோழியர் எவருமே இல்லாத ஊரில் குடியிருப்பது மிகத் துன்பமானது; இனிய காதலரைப் பிரிந்து தனித்திருப்பது, அதைவிட மிகவும் துன்பமானது.
Painful it is to live removed from familiar friends in a far-off village; but far more painful is the parting of the dearest one (p) Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover.
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல |
விடிற்சுடல் ஆற்றுமோ தீ. 1159-
தன்னைத் தொட்டால் சுடுவதல்லாமல், காமநோயைப் போலத் தன்னை அகன்று தொலைவில் விலகினால் சுடுவதற்குத் தீயும் ஆற்றல் உடையது ஆகுமோ!
Fire can scorch only when touched, but can it, like love, scorch persons away from it? (p) Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed?
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் |
பின்இருந்து வாழ்வார் பலர். 1160-
காதலர் பிரிவைப் பொறுத்து, அதனால் வரும் நலிவையும் விலக்கி, பிரிவுத் துயரையும் தாங்கி, அதன் பின்னரும் உயிரோடு இருக்கும் மகளிர் உலகத்தில் பலர்!
Many ladies have gracefully borne news of separation, steered clear of sorrow, endured the parting of the loved one and still survived I (p) As if there were many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards.
3.2.2 படர்மெலிந்திரங்கல் Love sickness [To Top]
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு |
ஊற்றுநீர் போல மிகும். 1161-
பிரிவுத்துன்பமான இந்த நோயை, பிறர் அறியாதபடி மறைப்பேன்; ஆனால், அஃது ஊற்று நீரைப்போல மேமேலும்சுரந்து சுரந்து பெருகுகின்றதே.
This my disease I seek to hide; but how endlessly it wells up like the waters of the spring (p) I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it.
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு |
உரைத்தலும் நாணுத் தரும். 1162-
காமநோயை முழுவதும் மூடி மறைக்கவும் முடியவில்லை; நோயைச் செய்த காதலருக்குத் தூது அனுப்புவதும் என் பெண்மைக்கு நாணம் தருகின்றதே!
It lies not in my power to conceal the disease of my love Nor am I able to speak of it unabashed to him who caused it (p) I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it.
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் |
நோனா உடம்பின் அகத்து. 1163-
பிரிவுத் துயராலே நலியும் என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு, காமம் நாணமும் இருபாலும் சம எடையாகத் தூங்குகின்றனவே!
My frail body is harassed by love and my bashfulness bids me be quiet My soul is torn between them (p) (Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them.
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் |
ஏமப் புணைமன்னும் இல். 1164-
காமமாகிய நோயும் கடலைப் போலப் பெருகியுள்ளது; அதைக் கடக்கும் தோணியாகிய காதலர்தாம் இப்போது நம்மோடு உடனில்லாமற் போயினர்!
Verily the endless sea of love stretches before me; but I find not even a raft to cross the limitless expanse (p) There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with.
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு |
நட்பினுள் ஆற்று பவர். 1165-
இனிமையான நட்புடைய நம்மிடமே துன்பத்தைச் செய்யும் நம் காதலர்,பகையை வெல்வதற்கான வலிமை வேண்டும்போது, என்னதான் செய்வாரோ?
Even to the loving one, he brings so much suffering; how much more pain will he cause to his enemy! (p) He who can produce sorrow from friendship, what can he not bring forth out of enmity?
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் |
துன்பம் அதனிற் பெரிது. 1166-
காம இன்பமானது அநுபவிக்கும் போது கடலளவு பெரிதாயுள்ளது; ஆனால், பிரிவுத் துன்பத்தால் வருத்தும்போது, அவ்வருத்தம் கடலைவிடப் பெரிதாக உள்ளதே!
Vast as the sea is the delight of wedded love; but vaster still are the sorrows of parting (p) The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater.
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் |
யாமத்தும் யானே உளேன். 1167-
காமமாகிய கடும்புனலை நீந்திநீந்திக் கரை காணாமல் தவிக்கின்றேன்; இந்த நள்ளிரவிலும், யான் ஒருத்தியே தூங்காமல் வருந்தியபடி உள்ளேன்!
Tossed in the troubled waters of love, I reach no shore; 1 am all alone in the still watches of the night (p) I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா |
என்னல்லது இல்லை துணை. 1168-
இந்த இராக்காலமும், எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்டு, என்னையன்றி யாரையும் இந்நள்ளிரவில் தனக்குத் துணையில்லாமல் உள்ளதே!
Beneficent night which has rocked all living creatures to sleep finds in me her lone sleepless companion (p) The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion.
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் |
நெடிய கழியும் இரா. 1169-
பிரிவுத் துயராலே வருந்தும்போது மிக நீண்டதுபோலக் கழிகின்ற இரவுப்பொழுதானது, நம்மைப் பிரிந்துபோன காதலரினும் மிகமிகக் கொடுமையானது.
These nights, all too short in those sweet days, now lengthen their heavy hours, surpassing in cruelty even my lord (p) The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me.
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் |
நீந்தல மன்னோஎன் கண். 1170-
என் உள்ளத்தைப் போலவே, உடலும், அவர் இருக்கும் இடத்திற்கு இப்போதே செல்ல முடிந்ததானால், என் கண்கள் இப்படிக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்தாவே!
If only my eyes like my mind had the speedy power of fleeing to my lover, they need not now swim in a flood of tears (p) Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord) , they would not swim in this flood of tears.
3.2.3 கண்விதுப்பழிதல் Languishing eyes Wistful Love [To Top]
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் |
தாம்காட்ட யாம்கண் டது. 1171-
இக்கண்கள் அவரைக் காட்டியதால் அல்லவோ நீங்காத இக் காமநோயை யாமும் பெற்றோம்; அவை, இன்று என்னிடம் காட்டச் சொல்லி அழுவது எதனாலோ?
Did you not show him to me and push me into the incurable sickness of love? Then why do you weep now to sft him, the cause of all your woe? (p) As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him).
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் |
பைதல் உழப்பது எவன்? 1172-
மேல்விளைவு பற்றி ஆராயாமல், அன்று அவரை நோக்கி மகிழ்ந்த கண்கள், இன்று, என் துயரைப் பகுத்து உணராமல். தாமும் துன்பப்படுவதுதான் எதனாலோ?
Oh Eyes! Having thoughtlessly feasted upon the lover, how can you now grieve for your own folly? (p) The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault).
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் |
இதுநகத் தக்க துடைத்து. 1173-
அன்று, தாமே விரைந்து பார்த்தும், இன்று தாமே அழுகின்ற கண்கள், நம்மால் அதன் அறியாமை கருதிச் சிரிக்கத் தகுந்த 'இயல்பினையே உடையதாகும்.
Those eyes once leapt to see the lover; now they weep by themselves Is it not laughable? (p) They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at?
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா |
உய்வில்நோய் என்கண் நிறுத்து. 1174-
அன்று, யான் உய்யாத அளவு தீராத காமநோயை என்னிடம் நிறுத்திய கண்கள், இன்று, தாமும், அழுவதற்கு மாட்டாதபடி நீர்வற்றி வறண்டுவிட்டனவே!
Plunging me into an inevitable and incurable disease, these eyes of mine pour out their tears and run dry (p) These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up.
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் |
காநோய் செய்தஎன் கண். 1175-
கடலிலும் பெரிதான காமநோயை அன்று எனக்குச் செய்த இக் கண்கள், அத் தீவினையால், தாமும் உறங்காமல் இவ்விரவுப் பொழுதில் துன்பத்தை அடைகின்றன.
My eyes that caused a disease of love vaster than the sea itself, do not now close themselves in sleep; they languish in grief (p) Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness.
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் |
தாஅம் இதற்பட் டது. 1176-
எமக்கு இத்தகைய காமநோயைச் செய்த கண்கள், தாமும் துயில் பெறாமல் இப்படி அழுகையில் ஈடுபட்டது, காண்பதற்கு மிகவும் இனியதாகும்.
The very eyes that have caused me all those woes languish in sorrow by themselves This is indeed just! (p) The eyes that have given me this disease have themselves been seized with this (suffering). Oh! I am much delighted.
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து |
வேண்டி அவர்க்கண்ட கண். 1177-
விரும்பி உள் நெகிழ்ந்துவிடாதே,அன்று அவரைக் கண்டு மகிழ்ந்த கண்கள், இன்று துயிலாது வருந்தி வருந்தித் தம்மிடமுள்ள நீரும் அற்றே போவதாக!
These eyes hungered, wept, and repeatedly sent their glances to him May they grieve and dry up all their stock of tears! (p) The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tears.
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் |
காணாது அமைவில கண். 1178-
உள்ளத்தில் விருப்பமில்லாமல், பேச்சால் அன்பு காட்டியவர் இவ்விடத்தே உள்ளனர்; அதனால் பயன் என்ன? அவரைக் காணாமல் என் கண்கள் அமைகின்றிலவே!
She says to her companion: ‘Did you not say that he who loves with words gets the wearing Unless I see him straight before me, my eyelids do not close in sleep ’ (p) He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him.
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை |
ஆரஞர் உற்றன கண். 1179-
காதலர் வராதபோது, அவர் வரவை எதிர்பார்த்துத் தூங்கா; வந்தபோது பிரிவஞ்சித் துயிலா ; இருவழியும் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தையே அடைந்தன!
When he is away, my eyes are restless When he comes, they are sleepless Lost between these extremities my eyes endure untold suffering (p) When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony.
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் |
அறைபறை கண்ணார் அகத்து. 1180-
எம்மைப்போல் அறைபறையாகிய கண்களை உடையவரின், நெஞ்சில் அடக்கியுள்ள மறையை அறிதல், இவ்வூரிலே உள்ளவர்க்கு மிகவும் எளியதாகும்.
It is certainly not hard for the villagers to read my secret love My tell-tale eyes proclaim it to the world (p) It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums.
3.2.4 பசப்புறுபருவரல் Wailing pale color of the skin [To Top]
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் |
பண்பியார்க்கு உரைக்கோ பிற. 1181-
என்னை விரும்பிய காதலரின் பிரிவுக்கு அந்நாளிலே உடன்பட்ட யான், இப்பொழுது பசந்த என் இயல்பை யாருக்குச் சென்று எடுத்துச் சொல்வேன்!
I did not assent to my lover’s parting To whom can I now complain of the pallor of my body, stricken with separation? (p) I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow.
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் |
மேனிமேல் ஊரும் பசப்பு. 1182-
'அவர் தந்தார்' என்னும் உரிமையினாலே, இப்பசப்புத் தானும், என் உடலின்மேல் உரிமையோடு பற்றிப் படர்ந்து மேனி எங்கும் நிறைகின்றதே!
The pallor spread over my body, exalting in the fact that he gave its birth (p) Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person.
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா |
நோயும் பசலையும் தந்து. 1183-
என் அழகையும் நாணத்தையும் அவர் தம்மோடு எடுத்துக் கொண்டார்; அதற்குக் கைம்மாறாகக் காமநோயையும் பசலையையும் எனக்குத் தந்துள்ளார்!
For my beauty and my bashfulness which he took away with him, my lover rewarded me with anguish and pallor (p) He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness.
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் |
கள்ளம் பிறவோ பசப்பு. 1184-
அவரையே யான் நினைத்திருப்பேன் ; அவர் திறங்களைப் பற்றியே பேசுவேன்; அவ்வாறாகவும், பசலையும் வந்து படர்ந்ததுதான் பெரிய வஞ்சனையாய் இருக்கின்றது!
I think only of him and I open my lips only to sing his praises Yet this pallor has come over me — O what cunning is this! (p) I think (of him) ; and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful.
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் |
மேனி பசப்பூர் வது. 1185-
அதோ பார், என் காதலர் என்னைப் பிரிந்து போகின்றார்; இதோ பார், அதற்குள்ளேயே என் உடலில் பசலையானது வந்து பற்றிப் படருகின்றது!
Lo! Yonder is my lover gone And here is the pallid hue spreading over my frame (p) Just as my lover departed then, did not sallowness spread here on my person?
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் |
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. 1186-
விளக்கின் முடிவை எதிர்பார்த்துத் தான்வரக் காத்திருக்கும் இருளைப்போல, என் தலைவனுடைய தழுவலின் முடிவைப் பசலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.
Pallor awaits me the moment I am away from my lord’s embrace, even as darkness lies in wait for the light to fade (p) Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourse.
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் |
அள்ளிக்கொள் வற்றே பசப்பு. 1187-
தலைவனைத் தழுவியபடியே கிடந்தேன்; பக்கத்தில் சிறிது புரண்டேன்; அந்தப் பிரிவுக்கே பசலையும் அள்ளிக்கொள்வது போல,என் மீது மிகுதியாகப் பரவி விட்டதே.
I lay locked up in my lover’s embrace; I moved away so little from him; when lo! pallor sprang up as it were to devour me (p) I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on.
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் |
துறந்தார் அவர்என்பார் இல். 1188-
'இவள் பசந்தாள்' என்று என்னைப் பழித்துப் பேசுவது அல்லாமல், இவளைக் காதலர் கைவிட்டுப் பிரிந்தார் என்று பேசுபவர் யாரும் இல்லையே!
People say that I have gone sickly pale; never do they blame him that has abandoned me (p) Besides those who say "she has turned sallow" there are none who say "he has forsaken her".
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் |
நன்னிலையர் ஆவர் எனின். 1189-
'பிரிவுக்கு உடன்படச்செய்த காதலர் நல்ல நிலையினார் ஆவார் என்றால்,என்னுடைய மேனியும் உள்ளபடியே பசலை நோயினை அடைவதாக!
If only he would keep his promise to return, my frame would gladly endure all the pallor of love (p) If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow.
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் |
நல்காமை தூற்றார் எனின். 1190-
'பிரிவுக்கு உடன்படச் செய்து பிரிந்துபோனவர், நமக்கு அருள் செய்யாதது பற்றித் தூற்றார்' என்றால், யான் பசந்தேன் என்று பேர்பெறுவதும் நல்லதேயாகும்!
Good it is for me to be known as pallor incarnate if only people do not call my lover merciless (p) It would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then).
3.2.5 தனிப்படர்மிகுதி Pining Alone, Loneliness [To Top]
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே |
காமத்துக் காழில் கனி. 1191-
தாம் விரும்பும் காதலர், தம்மையும் விரும்பும் பேறு பெற்றவர்கள், காதல் வாழ்வின் பயனாகிய விதையற்ற கனியை நுகரப் பெற்றவர்கள் ஆவர்.
Only those women taste all the juice of the seedless fruit of love, whose love is returned by their lovers (p) The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight?
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு |
வீழ்வார் அளிக்கும் அளி. 1192-
தம்மை விரும்புபவருக்கு, அவரை விரும்புகிற காதலர் அளிக்கும் அன்பானது, உயிர் வாழ்பவருக்கு வானம் மழைபெய்து உதவினாற் போன்றது ஆகும்.
Welcome as the rain to the tillers of the earth is the grace of the lover to his loved one (p) The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it.
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே |
வாழுநம் என்னும் செருக்கு. 1193-
காதலரால் விரும்பப்படுகிறவருக்கு, இடையில் பிரிவுத் துன்பம் வந்தாலும், 'மீண்டும் யாம் இன்பமாக வாழ்வோம்' என்னும் செருக்குப் பொருந்துவது ஆகும்.
Justly may those women feel proud of their life who are endowed with lovers who requite their love in all its fullness (p) The pride that says "we shall live" suits only those who are loved by their beloved (husbands).
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் |
வீழப் படாஅர் எனின். 1194-
தாம் காதலிக்கின்ற காதலரால் தாமும் விரும்பப்படும் தன்மையைப் பெறாதவர், முன்செய்த நல்வினைப் பயனை உடையவரே அல்லர்.
Those whose love is not returned by their sweet ones are unlucky beyond measure Of what avail to them is the esteem of others? (p) Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved.
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ |
தாம்காதல் கொள்ளாக் கடை. 1195-
நாம் காதல் கொண்டவர், நம்மீது தாமும் காதல் கொள்ளாவிட்டால், நமக்கு என்ன நன்மையைத்தான் செய்யப் போகின்றார்!
When he does not return my love, what favour can I expect of him? (p) He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him?
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல |
இருதலை யானும் இனிது. 1196-
'காதல் ஒருதலையானது' என்றால் மிகவும் துன்பமானது; காவடித் தண்டின் பாரத்தைப் போல இரு பக்கமும் ஒத்தபடி இருந்ததானால், அதுவே மிகவும் இனிமையானது.
Bitter is unrequited love; sweet it is if returned in equal measure like the wellpoised even scales (p) Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both.
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் |
ஒருவர்கண் நின்றொழுகு வான். 1197-
இருவரிடத்திலும் ஒத்து நடக்காமல் ஒருவரிடம் மட்டுமே காமன் நின்று நடப்பதால், என் வருத்தத்தையும் துன்பத்தையும் அவன் காணமாட்டானோ?
Cannot the god of love, who pays his attention to me alone, behold all my anguish and sorrow? (p) Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து |
வாழ்வாரின் வன்கணார் இல். 1198-
தாம் விரும்பிய காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் துன்புற்று வாழ்கின்ற பெண்களைவிட வன்கண்மை உடையவர்கள், யாரும் இல்லை.
Breathes there a more cruel soul on this earth than the one who lives on without the encouraging words of the loved one? (p) There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved.
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு |
இசையும் இனிய செவிக்கு. 1199-
யான் விரும்பிய காதலர் மீண்டும் வந்து அன்பு செய்யார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைப் பிறர் சொல்லக் கேட்பதும், காதுகளுக்கு இனிமையாக இருக்கின்றது.
Though the loved one favours me not, delightful indeed is stray news of him that reaches my ears (p) Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears.
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் |
செறாஅஅய் வாழிய நெஞ்சு. 1200-
நெஞ்சமே! நின்னிடம் அன்பற்றவருக்கு நின் நோயைச் சென்று சொல்லுகிறாயே; அதைவிட எளிதாகக் கடலைத் தூர்ப்பதற்கு நீயும் முயல்வாயாக.
Oh my heart! try to tell gnawing cares to your unresponsive lover; you may as well strive to dry up the surging sea (p) Live, O my soul, would you who relate your great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow).
3.2.6 நினைந்தவர்புலம்பல் Nostalgic memoirs [To Top]
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் |
கள்ளினும் காமம் இனிது. 1201-
நினைத்தாலும் தீராத பெருமகிழ்ச்சியை எமக்குச் செய்வதனால், உண்டால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளினும் காமமே உலகத்தில் இனிமை தருவதாகும்.
Love is far sweeter than wine; for unlike wine the very thought of love intoxicates me (p) Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight.
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார் |
நினைப்ப வருவதொன்று ஏல். 1202-
யாம் விரும்புகின்ற காதலரை நினைத்தாலும், பிரிவுத் துன்பம் இல்லாமல் போகின்றது; அதனால், காமமும் எவ்வளவானாலும் ஒருவகையில் இனிமையானதே.
Love is sweet in all respects; the thought of the dear one even in separation tastes sweet (p) Even to think of one's beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful.
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் |
சினைப்பது போன்று கெடும். 1203-
தும்மல் எழுவதுபோலத் தோன்றி எழாமல் அடங்குகின்றதே! அதனால், நம் காதலர் நினைப்பவர் போலிருந்தவர் நம்மை மறந்து நினையாமற் போயினாரோ!
She says to her companion: “A sneeze comes upon me but goes away all of a sudden; perhaps a thought of me occurs to him and then he forgets it ” (p) I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not.
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து |
ஓஒ உளரே அவர். 1204-
எம் நெஞ்சில் காதலராகிய அவர் எப்போதுமே உள்ளனர்; அதுபோலவே, அவருடைய நெஞ்சில், நாமும் நீங்காமல் எப்போதும் இருக்கின்றோமோ?
He is ever present in my thoughts Am I or am I not ever present in his thoughts? (p) He continues to abide in my soul, do I likewise abide in his?
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் |
எம்நெஞ்சத்து ஓவா வரல். 1205-
தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாமல் காவல் செய்து கொண்ட நம் காதலர், நம் உள்ளத்தில் தாம் ஓயாமல் வருவதைப்பற்றி வெட்கப்பட மாட்டாரோ?
He keeps me away from his heart; does he not feel ashamed of constantly stealing into my heart? (p) He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான் |
உற்றநாள் உள்ள உளேன். 1206-
காதலரோடு இன்பமாயிருந்த அந்த நாட்களின் நினைவால் தான் நான் உயிரோடிருக்கிறேன்; வேறு எதனால் நான் அவரைப் பிரிந்தும் உயிர் வாழ்கின்றேன்?
Only the recollection of those ecstatic days with him makes me live What else can sustain me? (p) I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live?
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் |
உள்ளினும் உள்ளம் சுடும். 1207-
அவரை மறந்தால் என்ன ஆவேனோ? அதனால்,அவரை மறப்பதற்கும் அறியேன்; மறக்க நினைத்தால், அந்த நினைவும் என் உள்ளத்தைச் சுடுகின்றதே!
Never have I forgotten the golden days with my beloved; his separation now burns into my heart; certain is death if ever the memory of him forsakes my luckless heart (p) I have never forgotten (the pleasure) ; even to think of it burns my soul; could I live, if I should ever forget it?
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ |
காதலர் செய்யும் சிறப்பு. 1208-
காதலரை எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அவர் என்மேல் சினந்து கொள்ளவே மாட்டார்; நம் காதலர் நமக்குச் செய்யும் சிறந்த உதவியே அதுதான்!
However much I may think of him, he is never angry with me Inimitable is my lover's grace (p) He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved affords me?
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் |
அளியின்மை ஆற்ற நினைந்து. 1209-
நாம் இருவரும் வேறானவர் அல்லேம் என்று சொல்லும் அவர், இப்போது அன்பில்லாமல் இருப்பதை மிகவும் நினைந்து, என் இனிய உயிரும் அழிகின்றதே.
As I think and think of the cruelty of my love who swore that our lives were inseparable, my soul ebbs away (p) My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் |
படாஅதி வாழி மதி. 1210-
மதியமே! என் உள்ளத்தில் பிரியாதிருந்து, என்னைப் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக்காண்பதற்காக, நீயும் வானத்தில் மறையாமல் இருப்பாயாக!
She says to the moon : “O blessed moon I ceaselessly pour your rays till I am able to see with my eyes the loved one who has forsaken me but yet dwells forever in my heart ” (p) May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul.
3.2.7 கனவுநிலையுரைத்தல் Dreams [To Top]
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு |
யாதுசெய் வேன்கொல் விருந்து. 1211-
பிரிவால் வருந்திய நான் அயர்ந்து கண் உறங்கியபோது, காதலர் அனுப்பிய தூதோடும் வந்த கனவுக்கு, விருந்தாக என்ன கைம்மாறு செய்யப் போகின்றேன்!
With what feast may I entertain the dream that has brought glad tidings of my lover? (p) Where with shall I feast the dream which has brought me my dear one's messenger?
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு |
உயலுண்மை சாற்றுவேன் மன். 1212-
யான் விரும்பும்போது என் கண்கள் தூங்குமானால், கனவில் வந்து தோன்றும் காதலருக்கு, யான் தப்பிப் பிழைத்திருக்கும் உண்மையைச் சொல்வேன்!
If only my eyes would close in sleep at my request, how I would meet him in dreams! (p) If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.
நனவினால் நல்கா தவரைக் கனவினால் |
காண்டலின் உண்டென் உயிர். 1213-
நனவிலே வந்து நமக்கு அன்பு செய்யாதிருக்கின்ற காதலரை, கனவிலாவது கண்டு மகிழ்வதனால்தான், என் உயிரும் இன்னமும் போகாமல் இருக்கின்றது.
The merciless one favours me not in waking hours but in dreams I feast on him and thus manage to live (p) My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.
கனவினான் உண்டாகும் காமம் நனவினான் |
நல்காரை நாடித் தரற்கு. 1214-
நனவில் வந்து அன்புசெய்யாத காதலரைத் தேடிக்கொண்டு வருவதற்காகவே, அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் கனவில் வந்து நமக்குத் தோன்றுகின்றன.
Why do I love dreams? It is because they bring before me the one who in waking hours favours me not (p) There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness.
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் |
கண்ட பொழுதே இனிது. 1215-
முன்பு நனவில் கண்ட இன்பமும் அந்தப் பொழுதளவிலே இனிதாயிருந்தது; இப்பொழுது காணும் கனவும், காணும் அந்தப்பொழுதிலே நமக்கு இனிதாகவே யுள்ளது.
Sweet is his presence in the waking hours; sweet too is his appearance in a dream What then do I miss in seeing him in my dreams? (p) I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant.
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் |
காதலர் நீங்கலர் மன். 1216-
நனவு என்று சொல்லப்படும் ஒன்று இல்லையானால், கனவில் வருகின்ற நம் காதலர் நம்மை விட்டு எப்போதுமே பிரியாதிருப்பார் அல்லவோ!
If only there was no such thing as waking hours, my lover would never desert me in my dreams (p) Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.
நனவினால் நல்காக் கொடியார் கனவனால் |
என்எம்மைப் பீழிப் பது. 1217-
நனவில் வந்து நமக்கு அன்பு செய்வதற்கு நினையாத கொடுமையாளரான காதலர், கனவிலே வந்து மட்டும் நம்மை வருத்துவதுதான் எதனாலோ?
Why does the cruel one plague me in my dreams when he shows no compassion on me in my waking state? (p) The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் |
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. 1218-
தூங்கும்போது கனவிலே என் தோள்மேலராகக் காதலர் வந்திருப்பார்; விழித்து எழும்போதோ, விரைவாக என் நெஞ்சில் உள்ளவராக ஆகின்றார்!
She says to her companion: “He embraces me in my dreams but the moment I awake he quickly vanishes into my heart ” (p) When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul.
நனவினால் நல்காரை நோவர் கனவினால் |
காதலர்க் காணா தவர். 1219-
கனவிலே காதலரை வரக்காணாத மகளிரே, நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் குறித்து வருத்தப்பட்டு, மனம் நொந்து கொள்வார்கள்.
Only those women who do not see their lovers in dreams, blame them for their cruelty in walking hours (p) They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours.
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் |
காணார்கொல் இவ்வூ ரவர். 1220-
கனவிலே காதலரை வரக்காணாத மகளிரே, நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் குறித்து வருத்தப்பட்டு, மனம் நொந்து கொள்வார்கள்.
Folk say: “He has abandoned her in sooth ” Verily they do not know how he visits me in my dreams (p) The women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams.
3.2.8 பொழுதுகண்டிரங்கல் Evening sorrows [To Top]
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் |
வேலைநீ வாழி பொழுது. 1221-
பொழுதே! நீ மாலைக் காலமே அல்லை; காதலரோடு கூடியிருந்து, பிறகு பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரையுண்ணும் முடிவு காலமே ஆவாய்!
O blessed twilight! You are not the twilight of the joyous old times; you are the end of the world devouring the lives of the parted lovers (p) Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women.
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் |
வன்கண்ண தோநின் துணை. 1222-
மயங்கிய மாலைப் பொழுதே! எம்மைப் போலவே நீயும் துன்பமுற்றுத் தோன்றுகிறாயே! நின் துணையும் என் காதலரைப் போலவே இரக்கம் இல்லாததோ!
“Blest be thou, O twilight! You are pale and your eyes are lustreless Is your sweet one as cruel as mine?" (p) A long life to you, O dark evening! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine.
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் |
துன்பம் வளர வரும். 1223-
பனி தோன்றிப் பசந்து வந்த மாலைக் காலமானது, எனக்கு வருத்தம் தோன்றி மென்மேலும் வளரும்படியாகவே இப்போது வருகின்றது போலும்!
O Evening! In those joyous days with my beloved you approached me timidly with drops of dew on you and sadness written in your face Your advance now brings with it only distaste and sorrow (p) The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow.
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து |
ஏதிலர் போல வரும். 1224-
காதலர் அருகே இல்லாதபோது, கொலை செய்யும் இடத்திலே ஆறலைப்பார் வருவதைப்போல, இம்மாலையும் என் உயிரைக் கொல்வதற்காகவே வருகின்றதே!
My lover away, evening comes murderously like a hangman rushing to the place of slaughter (p) In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter.
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் |
மாலைக்குச் செய்த பகை? 1225-
காலைப் பொழுதுக்கு யான் செய்த நன்மைதான் யாது? என்னை இப்படிப் பெரிதும் வருத்துகின்ற மாலைப் பொழுதுக்கு யான் செய்த தீமையும் யாதோ?
Morning, Evening, why should these alternately assuage and afflict me in this separation? What good have I done to morn and what harm to even? (p) What good have I done to morning (and) what evil to evening?
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத |
காலை அறிந்த திலேன். 1226-
மாலைப்பொழுது இவ்வாறு துன்பம் செய்யும் என்பதை, காதலர் என்னை விட்டுப் பிரியாமல் கூடியிருந்த அந்தக் காலத்தில் யான் அறியவே இல்லையே!
With my lover by my side, never for once, did I taste the bitterness that eventide can cause (p) Previous to my husband's departure, I know not the painful nature of evening.
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி |
மாலை மலரும்இந் நோய். 1227-
காலையிலே அரும்பாகித் தோன்றி, பகலெல்லாம் பேரரும்பாக வளர்ந்து,மாலைப்பொழுதிலே மலர்ந்து மலராக விரிகின்றது, இந்தக் காமமாகிய நோய்.
This disease of love buds in the morning, grows and grows all day long and flowers into full bloom at eventide (p) This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening.
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் |
குழல்போலும் கொல்லும் படை. 1228-
நெருப்பைப் போலச் சுடுகின்ற மாலைப் பொழுதுக்குத் தூதாகி, ஆயனுடைய புல்லாங்குழலின் இசையும், என்னைக் கொல்லும் படையாக வருகின்றதே!
The note of the shepherd’s pipe, which sounded so pleasant in the happy days, has now become a message of the hot evening — verily a weapon forging my death (p) The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me).
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு |
மாலை படர்தரும் போழ்து. 1229-
அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படர்கின்ற இப்பொழுதிலே, இந்த ஊரும் மயங்கியதாய், என்னைப் போலத் துன்பத்தை அடையும்.
When senseless evening creeps painfully along, the whole village feels dizzy and is plunged in the anguish of separation (p) When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை |
மாயும்என் மாயா உயிர். 1230-
பொருள் காரணமாகப் பிரிந்துசென்ற காதலரை நினைத்து, பிரிவுத் துன்பத்தாலே போகாமல் நின்ற என் உயிரானது, இம் மாலைப்பொழுதில் நலிவுற்று மாய்கின்றதே!
This life of mine which has survived this bitter separation is very near to death in this treacherous evening, as I think of my lord who values riches far above love (p) My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth.
3..2. 9 உறுப்புநலனழிதல் Organs Wasting away [To Top]
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி |
நறுமலர் நாணின கண். 1231-
இந்தத் துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவாகச் சென்றுவிட்ட காதலரை நினைத்து அழுவதனாலே,என் கண்கள், தம் அழகிழந்து நறுமலர்களுக்கு நாணின.
Companion to lady-love: “Stop tins weeping and wailing The thought of the one gone far away has made your eyes pale and lustreless ” (p) While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowers.
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் |
பசந்து பனிவாரும் கண். 1232-
பசலை நிறத்தைப் பெற்று நீரைச் சொரியும் கண்கள், நம்மை முன்பு விரும்பிய நம் காதலர், இப்போது அன்பு செய்யாததைப் பிறருக்கும் சொல்வனபோல் உள்ளனவே!
“Your pallid eyes streaming with tears proclaim the callousness of your lord ” (p) The discoloured eyes that shed tears p rofusely seem to betray the unkindness of our beloved.
தணந்தமை சால அறிவிப்ப போலும் |
மணந்தநாள் வீங்கிய தோள். 1233-
காதலரோடு கூடியிருந்த நாட்களிலே பூரித்திருந்த தோள்கள் மெலிவடைந்து, அவருடைய பிரிவைப் பிறருக்கு நன்றாகத் தெரிவிப்பவைபோல் உள்ளனவே!
“Your shoulders that swelled with joy on the day of your marriage are thin today; they proclaim how your lord has cruelly forsaken you ” (p) The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public).
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் |
தொல்கவின் வாடிய தோள். 1234-
தமக்குத் துணையான காதலரைப் பிரிந்ததால், தம் பழைய அழகுகெட்டு வாடிய தோள்கள், தம் பசிய தொடிகளையும் கழலச் செய்கின்றனவே!
“Since your separation from your lord your shoulders have lost their innate grace; worse still they have become lanky; and the bangles too slip on your slender arms ” (p) In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு |
தொல்கவின் வாடிய தோள். 1235-
தொடிகளும் கழன்றுவீழ, தம் பழைய அழகும் கெட்டுப்போன தோள்கள், நம் துன்பத்தை அறியாத கொடியவரின் கொடுமையை ஊரறியச் சொல்கின்றனவே!
My bracelets slip; the charm of my shoulders withers away It proclaims the cruelty of the heartless one (p) The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one.
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் |
கொடியர் எனக்கூறல் நொந்து. 1236-
தொடிகள் கழன்று வீழ்ந்து, தோள்களும் மெலிந்ததனால், காண்பவர் மனம் நொந்தவராக, அவரைக் 'கொடியவர் என்று கூறக்கேட்டு, யானும் வருந்துவேனே!
With loose bangles and leaner shoulders, I still feel pained to hear him called cruel; I cannot bear any affront to my lord’s fair name (p) I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் |
வாடுதோட் பூசல் உரைத்து. 1237-
நெஞ்சமே! கொடியவராகிவிட்ட காதலருக்கு என்வாடிய தோள்களின் ஆரவாரத்தை எடுத்துச்சொல்லி உதவியைச் செய்ததனால், நீயும் பெருமை அடையாயோ.
“O my heart, do you desire to cover yourself with glory? Then go to the cruel one and tell him the wasting away of my shoulders and these rumours of cruelty abroad ” (p) Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது |
பைந்தொடிப் பேதை நுதல். 1238-
தழுவியிருந்த கைகளைத் தளர்த்திய அப்பொழுதிலேயே, பசிய தொடியணிந்த இப்பேதைமை உடையவளின் நெற்றியும் பசலை நிறத்தை அடைந்துவிட்டதே!
He soliloquising: “once when I gently loosened my hands from an ecstatic embrace, the forehead of my love suddenly turned pale I wonder how she bears my separation in these long days ” (p) When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow.
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற |
பேதை பெருமழைக் கண். 1239-
முயக்கத்திற்கு இடையே குளிர்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிதான மழைபோன்ற கண்களும் அழகிழந்து, பசலைநிறம் அடைந்து விட்டனவே!
“The still eyes of my love dark as the rain bearing cloud turned sickly pale the moment a gust of wind crept in between our locked arms; how does she bear the estranging seas and mountains hurled in between us now?” (p) When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே |
ஒண்ணுதல் செய்தது கண்டு. 1240-
காதலியின் ஒளியுள்ள நெற்றி பசலை நிறம் அடைந்ததைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலை நிறமும் மேலும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது!
“Her eyes turned lustreless at the release of my arms from their close embrace; was it in sympathy with the fading brightness of her forehead?” (p) Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?
3.2.10 நெஞ்சொடுகிளத்தல் Heart to heart (monologue) [To Top]
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் |
எவ்வநோய் தீர்க்கும் மருந்து. 1241-
நெஞ்சமே! இந்தத் துன்பம் தரும் நோயினைத் தீர்க்கும் மருந்து ஏதாயினும் ஒன்றை நினைத்துப் பார்த்து, எனக்கு நீயாயினும் சொல்லமாட்டாயோ?
O heart! can you not cast about and find a remedy for my lovesickness which causes me such sorrow? (p) O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?
காதல் அவரிலர் ஆகநீ நோவது |
பேதைமை வாழியென் நெஞ்சு. 1242-
நெஞ்சமே! அவர்தாம் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்கவும், நீ மட்டும் அவரையே எப்போதும் நினைந்து நினைந்து வருந்துவது பேதைமை ஆகும்.
‘Blessed may you be O heart! how foolish of you to bemoan separation when he has no love for you!’ (p) May you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் |
பைதல்நோய் செய்தார்கண் இல். 1243-
நெஞ்சமே! என்னுடன் இருந்தும் அவரையே நினைந்து வருந்துவது ஏன்? இத்துன்ப நோயைச் செய்தவரிடம் நம்மேல் அன்புற்று நினைக்கும் தன்மை இல்லையே!
‘O heart! Why stay in vain here and feel wretched? There is no sympathy in the heart of him who has caused you this wasting disease ’ (p) O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow.
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் |
தின்னும் அவர்க்காணல் உற்று. 1244-
நெஞ்சமே! நீ அவரிடம் போகும்போது, இக்கண்களையும் அழைத்துப் போவாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.
‘O my heart! if you go to him, take my eyes also with you They eat into my being in their craving to see him ’ (p) O my soul! take my eyes also with you, (if not) , these would eat me up (in their desire) to see him.
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் |
உற்றால் உறாஅ தவர். 1245-
நெஞ்சமே! நாம் விரும்பி நாடினாலும், நம்மை நாடாத அவர், நம்மை வெறுத்து விட்டார் என்று நினைத்து, அவரைக் கைவிட நம்மால் முடியுமோ?
‘O heart! can I really forsake him as cruel though he has used me cruelly when I clung to him ’ (p) O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் |
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. 1246-
என் நெஞ்சமே! ஊடியபோது ஊடலுணர்த்திக் கூடுகின்றவரான காதலரைக் கண்டால், நீ பிணங்கி உணரமாட்டாய்; பொய்யான சினம் கொண்டுதான் காய்கின்றாய்!
‘O my heart I could you ever bear even a mock quarrel with your lover to sweeten his company Then why call him cruel now for your own fault?’ (p) O my soul! when you see the dear one who remove dislike by intercourse, you are displeased and continue to be so. Nay, your displeasure is (simply) false.
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே |
யானோ பொறேன்இவ் விரண்டு. 1247-
நல்ல நெஞ்சமே! ஒன்று காமத்தை விட்டுவிடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; இந்த இரண்டையும் சேர்த்துப் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.
My good heart I cast off one of the two - love or bashfulness I cannot bear the insupportable weight of them both (p) O my good soul, give up either lust or honour, as for me I can endure neither.
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் |
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. 1248-
என் நெஞ்சமே! நம் துன்பத்தை நினைந்து இரங்கிவந்து அவர் அன்பு செய்யவில்லை என்று ஏங்கிப் பிரிந்த காதலரின் பின்னாகச் செல்கின்றாயே, நீ பேதைமை உடையை!
‘You go seeking with a hopeless aching heart after the far-off lover, because he has not understood and favoured you with his mercy O foolish heart!’ (p) You are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough to favour you.
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ |
யாருழைச் சேறியென் நெஞ்சு. 1249-
என் நெஞ்சமே! காதலர் நம் உள்ளத்துள்ளேயே இருப்பவராகவும், நீதான் அவரை நினைத்து யாரிடத்திலே போய்த் தேடிச் செல்கின்றாயோ?
‘O my heart, is it you keep your lover within you? Then whom do you search in your thoughts? Why search for him outside? Whom do you hope to reach?’ (p) O my soul! to whom would you repair, while the dear one is within yourself?
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா |
இன்னும் இழத்தும் கவின். 1250-
நம்மோடு சேர்ந்திருக்காமல் நம்மைப் பிரிந்து சென்றவரை நம் நெஞ்சிலேயே உடையவராய் நாம் இருக்கும்போது, இன்னும், நாம் அழகிழந்து வருகின்றோமே!
The more I have him in my heart who has left me never to come back, the more my beauty wastes away (p) If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains.
3.2.11 நிறையழிதல் Loss of modesty [To Top]
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் |
நாணுத்தாழ் வீழ்த்த கதவு. 1251-
'நாணம்' என்னும் தாழ் பொருந்திய 'நிறை' என்னும் கதவினைக் காமம் ஆகிய கோடறியானது உடைத்துத் தகர்த்து விடுகின்றது.
The door of my maidenly grace and the bolt and bars of modesty are hewn by the weapon of restless love (p) The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty.
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை |
யாமத்தும் ஆளும் தொழில். 1252-
காமம் என்று சொல்லப்படும் ஒன்று கொஞ்சமேனும் கண்ணோட்டமே இல்லாதது; அஃது என் நெஞ்சத்தை இரவிலும் ஏவல் செய்து ஆள்கின்றது.
Verily the thing called love has no grace; even at dead of night it rules my heart and keeps it awake when all the world is in slumber (p) Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy.
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் |
தும்மல்போல் தோன்றி விடும். 1253-
யான் காம நோயை என்னுள்ளேயே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவோ, என் குறிப்பின்படி மறையாமல், தும்மல் போலத் தானே புறத்து வெளிப்பட்டு விடும்.
I strive to hide this - my passion Yet it breaks out against my wish like a sudden sneeze (p) I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze.
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் |
மறையிறந்து மன்று படும். 1254-
இதுவரையில் நிறையோடு இருப்பதாகவே நினைத்திருந்தேன்; ஆனால், என் காமம், என்னுள் மறைந்திருந்த எல்லையைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றதே!
I pride myself on my modesty But my passion breaks all barriers and brings me out into the open (p) I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் |
உற்றார் அறிவதொன்று அன்று. 1255-
தம்மை வெறுத்தவர் பின்னே அவர் அன்பை வேண்டிச் செல்லாத பெருந்தகைமை, காம நோய் உற்றவர் அறியும் ஒரு தன்மையே அன்று.
Victims of passion can never understand the nobility of giving up the pursuit of unrequited love (p) The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love.
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ |
எற்றென்னை உற்ற துயர். 1256-
வெறுத்துக் கைவிட்ட காதலரின் பின் செல்லுதலை விரும்பிய நிலையிலே இருப்பதனால், என்னை அடைந்த இக்காம நோயானது எத்தன்மை உடையதோ!
How cruel is the malady which sends me after the heartless one! Mine is indeed a pitiable lot (p) The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் |
பேணியார் பெட்ப செயின். 1257-
நாம் விரும்பிய காதலரும், காமத்தால் நமக்கு வேண்டியவற்றைச் செய்தாரானால், நாமும் 'நாணம்' என்று குறிக்கப்படும் ஒன்றையும் அறியாதேயே இருப்போம்.
When the loved one, after all his vagaries, took me into his loving embraces all my bashfulness fled away (p) I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me).
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் |
பெண்மை உடைக்கும் படை. 1258-
பல மாயங்களையும் அறிந்த கள்வனாகிய காதலனின் பணிவான சொற்கள் அல்லவோ, அன்று, தம் பெண்மை என்னும் அரணை உடைக்கும் படையாய் இருந்தன.
The weapon that shatters our maidenly reserve is none other than the talk of the artful lover (p) Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம் |
கலத்தல் உறுவது கண்டு. 1259-
ஊடுவேன் என்று நினைத்துச் சென்றேன்; ஆனால், என் நெஞ்சம் என்னை மறந்து அவரோடு சென்று கலந்து விடுவதைக் கண்டு, அவரைத் தழுவினேன்.
With the fixed resolve of forsaking him I went, but my heart yielded to his embrace (p) I said I would feign dislike and so went (away) ; (but) I embraced him the moment I say my mind began to unite with him!
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ |
புணரந்தூடி நிற்பேம் எனல். 1260-
தீயிலே கொழுப்பை இட்டாற்போல உருகும் நெஞ்சை உடையவரான மகளிருக்கு, 'இசைந்து ஊடி நிற்போம்' என்று, ஊடும் தன்மைதான் உண்டாகுமோ!
People with hearts melting like fat at the touch of fire — how can they reject the offered love and stand aloof? (p) Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?
3.2.12 அவர்வயின்விதும்பல் Mutual longings, She [To Top]
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற |
நாளொற்றித் தேய்ந்த விரல். 1261-
அவர் வருவாரென வழியையே பார்த்துக் கண்களின் ஒளியும் கெட்டன: அவர் பிரிந்த நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்களும் தேய்ந்து போயின.
Counting the days of his separation, my fingers have become wasted and worn out; my eyes have grown dim and faint (p) My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail.
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் |
கலங்கழியும் காரிகை நீத்து. 1262-
தோழி! அவரைப் பிரிந்து வருந்திருக்கும் இன்றைக்கும், அவரை மறந்தால், என் தோள்கள் அழகுகெட்டு மெலியும் என் தோள் அணிகளும் கழலும்படி நேர்ந்துவிடும்.
O! bright girl, if I forget my lord today, then my shoulders will become thin and my bangles loose (p) O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose.
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் |
வரல்நசைஇ இன்னும் உளேன். 1263-
வெற்றியை விரும்பி, ஊக்கமே துணையாக, வேற்று நாட்டிற்குச் சென்றுள்ள காதலர் திரும்பி வருதலைக் காண்பதற்கு விரும்பியே, இன்னும் உயிரோடுள்ளேன்.
I continue to live in eager expectation of the return of my lover He took with him as his friend his own brave heart (p) I still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide.
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் |
கோடுகொ டேறுமென் நெஞ்சு. 1264-
முன்னர்க் கூடியிருந்த காம இன்பத்தையும் மறந்து, பிரிந்து போனவரின் வரவை நினைத்து, என் நெஞ்சம் மரக்கிளை தோறும் ஏறி ஏறிப் பார்க்கின்றதே!
With the thought of my lover’s return anxious for reunion, my heart goes on climbing higher and higher (p) My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love.
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் |
நீங்கும்என் மென்தோள் பசப்பு. 1265-
என் காதலனைக் கண்ணாரக் காண்பேனாக; அவ்வாறு கண்டபின் என்மெல்லிய தோள்களில் உண்டாகியுள்ள பசலைநோயும் தானாகவே நீங்கிப் போய்விடும்.
After feasting my eyes with the sight of my husband, my soft shoulders will lose their pallor (p) May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders.
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் |
பைதல்நோய் எல்லாம் கெட. 1266-
என் காதலன் ஒரு நாள்மட்டும் என்னிடம் வருவானாக: வந்தால், என் துன்ப நோய் எல்லாம் தீரும்படியாக அவனோடு, இன்பத்தை நானும் பருகுவேன்.
Let my husband come here one day Then my wasting disease will be completely cured (p) May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow.
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் |
கண்அன்ன கேளிர் விரன். 1267-
என் கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது தழுவிக்கொள்வேனோ? அல்லது ஆவலோடு கலந்து இன்புறுவேனோ? என்ன செய்வேன்?
When my husband, dear to me as my eyes, returns, shall I be indifferent or complaining? Shall I not be one with him? (p) On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him) ; or am I to do both?
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து |
மாலை அயர்கம் விருந்து. 1268-
வேந்தன் இவ்வினையிலே தானும் கலந்து வெற்றி அடைவான். என் மனைக்கண் சென்றுசேர்ந்து, மாலைப் பொழுதில், அவளோடு விருந்தை அநுபவிப்பேன்.
May my lord be victorious in action and may I also go home to enjoy my evening repast with a guest (p) Let the king fight and gain (victories) ; (but) let me be united to my wife and feast the evening.
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் |
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. 1269-
தொலைவிடத்துக்குப் பிரிந்து சென்ற காதலர் வரும் நாளை மனத்தில் வைத்து ஏங்கும் மகளிருக்கு, ஒருநாள் தானும் ஏழுநாள் போல் நெடியதாகக் கழியும்.
To one who awaits the day of arrival of her husband, one day appears as long as seven (p) To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days.
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் |
உள்ளம் உடைந்துக்கக் கால். 1270-
பிரிவுத் துயரம் தாங்காமல் உள்ளம் உடைந்து அழிந்து போய்விட்டால், அவரைப் பெறுவதனால் என்ன? பெற்றால் தான் என்ன? அவரோடு பொருந்தினால்தான் என்ன?
If her heart has been broken, of what avail is it if I become available to her, reach her or even join her? (p) After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?
3.2.13 குறிப்பறிவுறுத்தல் Sign language [To Top]
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் |
உரைக்கல் உறுவதொன் றுண்டு. 1271-
நீதான் மறைந்தாலும், நின் மறைப்பையும் கடந்து, நின் கண்கள் எனக்குச் சொல்ல முற்படுகின்ற ஒரு செய்தியும் நின்னிடத்தில் உள்ளதாகும்.
Though you hide it, your uncontrolled eyes reveal a secret to me (p) Though you would conceal (your feelings) , your painted eyes would not, for, transgressing (their bounds) , they tell (me) something.
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் |
பெண்நிறைந்த நீர்மை பெரிது. 1272-
கண் நிறைந்த பேரழகும், மூங்கில் போலும் அழகிய தோள்களும் கொண்ட என் காதலிக்கு, பெண்மை நிறைந்த தன்மையோ பெரிதாக உள்ளது.
This girl of long eyes and bamboo shoulders has too much womanly modesty (p) Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo.
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை |
அணியில் திகழ்வதொன்று உண்டு. 1273-
நூலில் கோத்த மணியினுள்ளே காணப்படும் நூலைப்போல, என் காதலியின் அழகினுள்ளேயும் அமைந்து, புறத்தே விளங்குகின்ற குறிப்பும் ஒன்று இருக்கின்றது.
Just like the thread concealed by the beads there is something lying beneath this damsel’s beauty (p) There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை |
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு. 1274-
அரும்பினுள்ளே அடங்கியிருக்கின்ற மணத்தைப்போல, என் காதலியின் புன்முறுவலின் உள்ளே அடங்கியிருக்கும் உள்ளத்தின் குறிப்பும் ஒன்று உள்ளது.
Even as the fragrance that is locked up in the bud, there is something hidden in this damsel’s smile (p) There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud.
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் |
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து. 1275-
செறிந்த தொடியுடையவளான என் காதலி செய்துவிட்டுப் போன கள்ளமான குறிப்பானது, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் ஒரு மருந்தையும் உடையதாய் இருந்தது.
The tactful departure of my bangled lady serves as soothing balm for my excruciating pain (p) The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow.
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி |
அன்பின்மை சூழ்வ துடைத்து. 1276-
பெரிதாக அன்பைச் செய்து, விருப்பம் மிகுதியாகுமாறு கலத்தல், அரிதான பிரிவைச் செய்து, அன்பில்லாமல் விட்டுப் பிரியும் உட்கருத்தையும் உடையதாகும்.
The pleasant union after the distress of separation still reminds one of the past indifference of the lover (p) The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love.
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் |
முன்னம் உணர்ந்த வளை. 1277-
குளிர்ந்த நீர்த் துறைக்கு உரியவனாகிய நம் காதலன் நம்மைப் பிரிந்ததனை, நம்மைக் காட்டிலும்,நம் கைவளையல்கள் முன்னதாகவேஉணர்ந்து, தாமும் கழன்றனவே!
My bangles betrayed even before I did my lover’s separation from me (p) My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore.
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் |
எழுநாளேம் மேனி பசந்து. 1278-
நேற்றுத்தான் எம் காதலர் எம்மைப் பிரிந்து சென்றனர்: அவரைப் பிரிந்து ஏழுநாட்கள் ஆகியவரைப்போல மேனி பசலை படர்ந்தவராய் இருக்கின்றோமே!
It was only yesterday that my lover went, but I have acquired seven days’ pallor (p) It was but yesterday my lover departed (from me) ; and it is seven days since my complexion turned sallow.
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி |
அஃதாண் டவள்செய் தது. 1279-
தன் தோள்வளைகளை நோக்கி, மென்மையான தோள்களையும் நோக்கி, தன் அடிகளையும் நோக்கி, அவள் செய்த குறிப்பு உடன்போக்கு என்பதே ஆகும்.
She looks at her bangles; she looks at her beautiful shoulders and she looks down at her feet This is her present occupation (p) She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly).
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் |
காமநோய் சொல்லி இரவு. 1280-
கண்ணினாலே காம நோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்கும்படி இரத்தல், பெண்தன்மைக்கு, மேலும் சிறந்த பெண்தன்மை உடையது என்று சொல்லுவர்.
The eyes seek the cure of passion It is the modesty of a modest woman (p) To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence.
3.2.14 புணர்ச்சிவிதும்பல் Longing or Yearning [To Top]
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் |
கள்ளுக்கில் காமத்திற் குண்டு. 1281-
நினைத்த பொழுதில் களிப்படைவதும், கண்டபொழுதிலே மகிழ்ச்சி அடைவதும் ஆகிய இரண்டு நிலையும், கள்ளுக்குக் கிடையாது; காமத்திற்கு உண்டு.
To become pleased with the thought and happy at the sight of the lover, these are the fruits not of wine but of love (p) To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும் |
காமம் நிறைய வரின். 1282-
பனையளவு பெரிதாகக் காமம் நிறைந்து வரும் பொழுது, காதலரோடு தினையளவுக்குச் சிறிதாகவேனும் ஊடிப் பிணங்காமல் இருத்தல் வேண்டும்.
If a woman’s passion becomes excessive, she should avoid even slight misunderstanding (p) If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet.
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் |
காணா தமையல கண். 1283-
என்னைப் பேணி அன்பு செய்யாமல் புறக்கணித்து, தான் விரும்பியபடியே அவன் செய்தாலும், என் காதலனைக் காணாமல் என் கண்கள் அமைதி அடையவில்லையே!
Though my husband acts regardless of me, yet my eyes cannot be satisfied without seeing him (p) Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து |
கூடற்கண் சென்றது என் னெஞ்சு. 1284-
தோழி! நான்அவரோடு ஊடுதலையே நினைத்துச் சென்றேன்; ஆனால், என்நெஞ்சமோ, அதை மறந்துவிட்டு, அவரோடு இணைந்து கூடுவதிலேயே சென்றதே!
O Friend! I went to quarrel with him; but forgetting it my heart sought for reconciliation (p) O my friend! I was prepared to feign displeasure but my mind forgetting it was ready to embrace him.
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் |
பழிகாணேன் கண்ட இடத்து. 1285-
மை எழுதும்போது, எழுதும் கோலைக் காணாத கண்ணின் தன்மையைப்போல, என் காதலனைக் கண்டபோது, அவன் குற்றங்களையும் யான் காணாமற் போகின்றேனே!
Just as our eyes do not see the pen when writing I could not see my lover’s faults when I saw him (p) Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him.
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் |
காணேன் தவறல் லவை. 1286-
என் காதலனைக் காணும்போது, அவர் போக்கிலே தவறான வற்றையே காணமாட்டேன் ; அவரைக் காணாதபோதோ, தவறல்லாத நல்ல செயல்களையே யான் காணேன்.
When I see my husband I cannot see his faults In his absence I cannot see anything else (p) When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் |
பொய்த்தல் அறிந்தென் புலந்து. 1287-
ஓடும் வெள்ளம் இழுத்துப் போகும் என்பதை அறிந்தும் அதனுள் பாய்கின்றவரைப் போல, ஊடுதல் பயனில்லை என்பதை அறிந்தும், நாம் ஊடுவதால் பயன் என்ன?
Of what avail is it to sift all the lies of one’s husband! It is as ineffectual as a diver battling with an irresistible current (p) Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் |
கள்ளற்றே கள்வநின் மார்பு. 1288-
கள்வனே! இழிவு வரத்தகுந்த துன்பங்களையே செய்தாலும், கள்ளுண்டு களித்தவருக்கு மென்மேலும் ஆசையூட்டும் கள்ளைப்போல், நின் மார்பும் ஆசையூட்டுகிறதே!
O cheat! your breast is coveted more and more even as liquor with all its harm is by the drunkard (p) O you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace.
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் |
செவ்வி தலைப்படு வார். 1289-
அனிச்சமலரைக் காட்டிலும் காமம் மிக மென்மையானது: அதன் தன்மை அறிந்து, அதன் சிறந்த பயனையும் பெறக் கூடியவர்கள், உலகத்தில் சிலரே யாவர்.
More tender than a flower is love and few are they who enjoy it fully (p) Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature.
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் |
என்னினும் தான்விதுப் புற்று. 1290-
கண் நோக்கத் தளவிலே பிணங்கினாள்; பின், என்னைக் காட்டிலும் தான் தழுவுவதிலே விருப்பம் கொண்டவளாகத் தன் பிணக்கத்தையும் மறந்து, அவள் கலங்கினாள்.
With resentful eyes, my lady complained: but eager for reconciliation she forgets her anger (p) She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own.
3.2.15 நெஞ்சொடுபுலத்தல் Chiding or Complaining [To Top]
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே |
நீஎமக்கு ஆகா தது. 1291-
நெஞ்சமே! அவர் நெஞ்சமானது நம்மை மறந்து அவர் விருப்பத்தையே மேற்கொள்வதைக் கண்டபின்னரும், நீதான் | எமக்குத் துணையாகாததுதான் எதனாலோ?
O! My heart, though you know that my husband’s heart thinks only o^ himself, how is it you think of him and not of me? (p) O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் |
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. 1292-
என் நெஞ்சமே! நம்மேல் அன்புகொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று நினைந்து அவரிடமே செல்கின்றாயே! அதுதான் எதனாலோ?
O! My heart, knowing that he has no thought for you, still you run after him expecting no refusal (p) O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased."
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ |
பெட்டாங்கு அவர்பின் செலல். 1293-
நெஞ்சமே! நீ நின் விருப்பத்தின் படியே அவர் பின்னாகச் செல்லுதல், துன்பத்தாலே கெட்டுப் போனவருக்கு நண்பராக யாருமே இல்லை என்பதனாலோ?
0! My heart, you go after him without my permission Is it because none will befriend those in adversity? (p) O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே |
துனிசெய்து துவ்வாய்காண் மற்று. 1294-
நெஞ்சமே! நீதான் ஊடுதலைச் செய்து அதன் பயனையும் நுகரமாட்டாய்; இனிமேல் அத்தகைய செய்திகளைப் பற்றி நின்னோடு ஆராய்பவர் தாம் எவரோ?
O! My heart, if you see him, you do not resent his faults Who can consult you for advice? (p) O my soul! you would not first seem sulky and then enjoy (him) ; who then would in future consult you about such things?
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் |
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. 1295-
அவரைப் பெறாத போதும் அஞ்சும்; பெற்ற போதும் பிரிவாரோ என்று அஞ்சும்; இவ்வாறு என் நெஞ்சம் நீங்காத துயரையே உடையதாகின்றது.
My mind can have only endless anxiety; for I fear both when he is with me and also without me (p) My soul fears when it is without him; it also fears when it is with him; it is sub ject to incessant sorrow.
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் |
தினிய இருந்ததென் நெஞ்சு. 1296-
அவரைப் பிரிந்த நாளில், தனியே இருந்து நினைத்தபோது,என் நெஞ்சம் எனக்குத் துணையாகாமல், என்னைத் தின்பதுபோலத் துன்பம் தருவதாக இருந்தது!
My heart eats me up when I think of him in my loneliness (p) My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் |
மாணா மடநெஞ்சிற் பட்டு. 1297-
காதலரை மறக்கவியலாத, என்னுடைய சிறப்பில்லாத மடநெஞ்சத்தோடு சேர்ந்து, மறக்கக் கூடாததாகிய நாணத்தையும் நான் மறந்தேனே!
With my foolish heart remembering him who has forgotten me, I have forgotten even my sense of shame (p) I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him.
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் |
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. 1298-
பிரிந்த கொடுமையாளரை இகழ்ந்தால் இழிவாகும்' என்று நினைத்து, அவர்மேல் உயிர்போலக் காதல்கொண்ட என் நெஞ்சம், அவரது உயர் பண்புகளையே நினைக்கிறதே!
My heart that loves life and views it ignoble to blame and to deny access to him, ever thinks of his success (p) My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him.
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய |
நெஞ்சந் துணையல் வழி. 1299-
தாம் உரியதாக அடைந்திருக்கும் தம் நெஞ்சமே தமக்குத் துணையாகாத பொழுது, ஒருவருக்குத் துன்பம் வந்த காலத்தில், வேறு எவர்தாம் துணையாவார்கள்
Who will be a friend in misery but one’s own heart? (p) Who would help me out of one's distress, when one's own soul refuses help to one?
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய |
நெஞ்சம் தமரல் வழி. 1300-
தாம் சொந்தமாக உடைய நெஞ்சமே தமக்கு உறவாகாதபோது, அயலார் உறவில்லாதவராக அன்பற்று இருப்பது என்பதும் இயல்பானதே ஆகும்.
If one’s own heart turns against one, how can one expect anything but hostility from others? (p) It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger.
3.2.16 புலவி Sulks, Displeasure, dislike [To Top]
புல்லா திராஅப் புலத்தை அவர் உறும் |
அல்லல்நோய் காண்கம் சிறிது. 1301-
நாம் ஊடும்போது அவர் அடைகின்ற அல்லல் நோயையும் சிறிது நேரம் காணலாம்; அதற்காக, அவர் வந்ததும், அவர்பாற் சென்று தழுவாமல் பிணங்கியிருப்பாயாக.
Let us see a little his distress in passion, by showing reserve (p) Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not.
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது |
மிக்கற்றால் நீள விடல். 1302-
உணவுப் பண்டங்களில்,அளவாக உப்புச் சேர்ந்திருப்பது போன்றதே ஊடல்; அதை அளவுகடந்து சிறிது நீள விட்டாலும்உப்பின் மிகுதிபோல அது கெட்டுவிடும்.
Reserve like a pinch of salt adds to enjoyment, If excessive, it spoils the taste (p) A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much.
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் |
புலந்தாரைப் புல்லா விடல். 1303-
தம்மோடு ஊடியவரைத் தெளிவித்துத் தழுவாமல் விட்டுவிடுதல், துன்புற்று வருந்துவாரை மேலும் துன்பஞ் செய்து வருந்தச் செய்வதுபோன்ற கொடுமையாகும்!
If men do not pacify women who feign coolness, it is like causing more pain to those who already suffer (p) For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony.
ஊடி யவரை உணராமை வாடிய |
வள்ளி முதலரிந் தற்று. 1304-
ஊடிப் பிணங்கியவரைத் தெளிவித்து அன்பு செய்யாமல் கைவிடுதல், முன்பே நீரில்லாது வாடிப்போன வள்ளிக் கொடியின் வேரை அறுப்பதுபோன்றது ஆகும்!
Not to pacify the lady who feigns coolness is to cut the withering creeper away at the root (p) Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root.
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை |
பூஅன்ன கண்ணார் அகத்து. 1305-
நல்ல தகைமைகள் பொருந்தியுள்ள நல்ல ஆடவருக்கு அழகாவது, மலரன்ன கண்களையுடைய அவர் காதலியர்இடத்தே உண்டாகும் ஊடலின் சிறப்பே ஆகும்.
The beauty of a loyal lover is only enhanced by the reserve of his flower-eyed lady (p) An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.
துனியும் புலவியும் இல்லாயின் காமம் |
கனியும் கருக்காயும் அற்று. 1306-
பெரிய பிணக்கமும் சிறிதான பிணக்கமும் இல்லாமற்போனால், காமமானது, மிகக்கனிந்த கனியும், பழுக்காத கருக்காயும்போலப்பயனற்றது ஆகும்.
If indignation and gentle resentment are absent, love will be like fruit over-ripe or unripe (p) Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit.
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது |
நீடுவ தன்று கொல் என்று. 1307-
ஊடியிருத்தலிலும் காதலர்க்கு உண்டாவதோர் துன்பம் உளது; அது, 'கூடியிருப்பதுதான் இனிமேல் நீட்டிக்காதோ' என்று நினைத்து வருந்தும் அச்சமாகும்.
There is anxiety and pain in lovers’ uncertain quarrels (p) The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் |
காதலர் இல்லா வழி. 1308-
நம்மாலே இவரும் நோயுற்றார்' என்று உணர்ந்து, அதைத் தீர்க்க முயலும் காதலர் இல்லாதபோது, வீணாக வருத்தம்அடைவதனால் என்ன பயன்?
If a lover were to be blind to the suffering of the lady-love, then the suffering would be in vain (p) What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?
நீரும் நிழலது இனிதே புலவியும் |
வீழுநர் கண்ணே இனிது. 1309-
நீரும் நிழலிடத்தே உள்ளதானால் இனியதாகும்; அது போன்றே ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தே நிகழுமானால், இனிமையைத் தருவதாகும்.
Just as water in the shade is sweet, so lovers’ quarrels become sweet only to people deep-rooted in love (p) Like water in the shade, dislike is delicious only in those who love.
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் |
கூடுவேம் என்பது அவா. 1310-
ஊடல் கொண்டபோது தெளிவித்து இன்பம் செய்யாமல் வாடவிடுகின்றவரோடு, எம் நெஞ்சம் 'கூடுவோம்' என்று நினைப்பது, அது கொண்டுள்ள ஆசையினாலே ஆகும்.
My heart longs for reunion with him who cares not for my sufferings in the quarrel (p) It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike.
3.2.17 புலவி நுணுக்கம் Coyness, Feigned Anger [To Top]
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் |
நண்ணேன் பரத்தநின் மார்பு. 1311-
பரத்தனே! பெண்தன்மை உடையவர் எல்லாரும், பொதுப் பொருளாகக் கொண்டு நின்னைக் கண்ணால் உண்பார்கள். ஆதலால், நின் மார்பையான் தழுவ மாட்டேன்!
You yielded yourself to all sorts of women to look at you with their eyes Therefore I shall not approach your breast (p) You are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way. I will not embrace you.
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை |
நீடுவாழ் கென்பாக் கறிந்து. 1312-
காதலரோடு யாம் ஊடியிருந்தேமாக, அவரும் அவ்வேளையில், யாம் தம்மை, 'நீடுவாழ்க என்று வாழ்த்துரை சொல்லுவோம் என்று நினைத்துத் தும்மினார்!
When I sat away from him, he sneezed knowing that I would bless him, saying "May you live long ” (p) When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life.
கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் |
காட்டிய சூடினீர் என்று. 1313-
மரக்கிளையிலிருந்து கொணர்ந்த பூவைச் சூட்டினாலும், என் காதலி, ‘நீர் இந்த அழகை எவளோ ஒருத்திக்குக் காட்டுவதற்கே எனக்குச் சூட்டினீர் என்று காய்வாள்.
Even if I put on a garland of hill-flowers, my sweetheart will say “You wore this to please some mistress of yours ” (p) Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman.
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் |
யாரினும் யாரினும் என்று. 1314-
'யாரினும் நின்னையே விரும்புகின்றேம் என்று சொன்னேன் ஆக, அவள்,யாரினும்? யாரினும்' என்று கேட்ட வளாக என்னோடும் ஊடிப் பிணங்கினாள்.
When I said my beloved was greater than anybody else, she grew angry and repeatedly asked me “Greater than whom?” (p) When I said I loved her more than any other woman, she said "more than others, yes, more than others," and remained sulky.
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் |
கண்நிறை நீர்கொண் டனள். 1315-
'இந்தப் பிறப்பிலே நாம் பிரியமாட்டோம்' என்று சொன்னேனாக, இனி வரும் பிறப்பிலே பிரிவோம் என்று நான் கூறியதாகக் கருதிக் கண்களில் நீரைக் கொண்டனள்.
When I said “We shall not separate in this life”, her eyes were full of tears meaning that I would separate from her in the next life (p) When I said I would never part from her in this life her eyes were filled with tears.
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் |
புல்லாள் புலத்தக் கனள். 1316-
நின்னை நினைத்தேன்' என்றேன்; 'நினைத்தது உண்டாயின் மறந்திருந்ததும் உண்டல்லவோ! என்னை ஏன் மறந்தீர்? என்று சொல்லி, அவள் தழுவாமல் பிணங்கினாள்.
When I said ‘I thought of you’, she replied “So you forgot me before” and felt displeased (p) When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike.
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் |
யாருள்ளித் தும்மினீர் என்று. 1317-
யான் தும்மினேனாக 'நூறாண்டு' என்று கூறி வாழ்த்தினாள்; அடுத்து, அதைவிட்டு, 'எவர் நினைத்ததனாலே நீர் தும்மினீர்' என்று கேட்டுக் கேட்டு அழுதாள்.
When I sneezed she blessed me; but she wept and asked me which maiden thought of me when I sneezed (p) When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, "At the thought of whom did you sneeze?"
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் |
எம்மை மறைத்திரோ என்று. 1318-
அவள் பிணங்குவாள் என்று பயந்து நான் எழுந்த தும்மலையும் அடக்கினோனாக, 'உம்மவர் நினைப்பதை எமக்குத் தெரியாதபடி மறைத்தீரோ? என்று அவள் அழுதாள்.
When I controlled sneezing, she shed fretful tears and asked whether I tried to conceal the fact that others think of me (p) When I suppressed my sneezing, she wept saying, "I suppose you (did so) to hide from me your own people's remembrance of you".
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் |
இந்நீரர் ஆகுதிர் என்று. 1319-
அவள் ஊடிப் பிணங்கியபோது அதைத் தெளிவித்து இன்புறுத்தினாலும், நீர் பிறமகளிர்க்கும் இத்தன்மையரே ஆவீர் என்று, என்மேற் சினம் கொள்வாள்.
She will quarrel with me even if I fully satisfy her, saying “You will behave thus to every woman ” (p) Even when I try to remove her dislike, she is displeased and says, "This is the way you behave towards (other women)."
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் |
யாருள்ளி நோக்கினீர் என்று. 1320-
அவள் அழகையே நினைத்து வியந்து பார்த்தாலும், 'நீர் எவரையோ மனத்திற் கொண்டு எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தீரோ? என்று கேட்டுச் சினம் கொள்வாள்.
If I look at her silently and appreciate her beauty, she will ask me querulously, “whom you are thinking of?” (p) Even when I look on her contemplating (her beauty) , she is displeased and says, "With whose thought have you (thus) looked on my person?"
3.2.18 ஊடலுவகை Quarrels, Joys of sulking [To Top]
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் |
வல்லது அவர்அளிக்கு மாறு. 1321-
அவரிடம் தவறு எதுவும் இல்லையானாலும், அவரோடு பிணங்குதல், அவர் நம்மீது மிகுதியாக அன்புசெலுத்தும்படி செய்வதற்கு வல்லது ஆகும்.
Though he is guiltless, false accusations make him more attached (p) Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி |
வாடினும் பாடு பெறும். 1322-
அவரோடு ஊடுதலாலே உண்டாகின்ற சிறு துன்பம், அந்தப் பொழுதிலே அவர் செய்யும் நல்ல அன்பை வாடுவதற்குச் செய்தாலும், பின்னர்ப் பெருமைபெறும்.
The little resentment resulting from lover’s quarrels yields delight in the end, though it may for the moment seem to cause pain (p) His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike.
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு |
நீரியைந் தன்னார் அகத்து. 1323-
நிலத்தோடு நீர் பொருந்தினாற்போல நம்மோடு கலந்த அன்பு உடையவரான காதலருடன் ஊடுவதைக் காட்டிலும், தேவருலகத்து இன்பமும் சிறந்ததாகுமோ?
Is there any other heaven than the quarrel between lovers whose minds are united even as earth and water? (p) Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் |
உள்ளம் உடைக்கும் படை. 1324-
காதலரைத் தழுவி, விடாதேயிருக்கும் ஊடலினுள்ளே, என் உள்ளத்தின் வன்மையை உடைப்பதற்கு வலிமையான படையும் தோன்றுகின்றது.
The weapon that breaks my obstinate heart lies in the quarrel itself (p) In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart.
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் |
அகறலின் ஆங்கொன் றுடைத்து. 1325-
தவறு இல்லாதவரான போதும், தம்மால் காதலிக்கப்பட்ட மகளிரின் மென்மையான தோள்களை உடலால் நீங்கியிருக்கும் போது ஊடலிலும் ஓர் இன்பம் உள்ளது.
Though guiltless being denied, there is a pleasure in the embrace of the soft beautiful shoulders of the sweetheart (p) Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love.
உணலினும் உண்டது அறல்இனிது காமம் |
புணர்தலின் ஊடல் இனிது. 1326-
உண்பதைக் காட்டிலும் முன்னுண்டது செரித்தலே இன்பமாகும்; அதுபோலவே, காமத்தில் கூடிப்பெறும் இன்பத்தைவிட ஊடிப்பெறும் இன்பமே சிறந்தது!
Sweeter than eating is the pause in the process Likewise misunderstanding by lovers affords more joy than union itself (p) To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse.
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் |
கூடலிற் காணப் படும். 1327-
ஊடல் களத்திலே தோற்றவரே வெற்றி பெற்றவர்; அந்த உண்மையானது, ஊடல் தெளிந்த பின், அவர் கூடி மகிழும் தன்மையிலே தெளிவாகக் காணப்படும்.
In a lovers’ quarrel, the vanquished becomes the victor; this is revealed when they reunite (p) Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows).
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் |
கூடலில் தோன்றிய உப்பு. 1328-
நெற்றி வெயர்வு அரும்பும்படி காதலருடன் கூடும் போது உண்டாகும் இன்பத்தை, ஊடியிருந்து, அவர் உணர்த்த மீளவும் சேர்ந்து இன்புறும் போது பெறுவோமோ?
Am I likely to gain, after a friendly quarrel, the delight now experienced in the union with her moistened forehead? (p) Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப |
நீடுக மன்னோ இரா. 1329-
ஒள்ளிய இழையை உடையாள் இன்னும் ஊடுவாளாக! அதனைத் தணிவிக்கும் வகையிலேயாம், அவளை இரந்து நிற்கும்படியாக, இராக்காலமும் இன்னும் நீள்வதாக!
May the jewelled lady-love go on quarrelling; may also the night be long enough to conciliate her! (p) May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் |
கூடி முயங்கப் பெறின். 1330-
ஊடுதல் காமவாழ்விற்கே இன்பம் தருவதாகும்; காதலர் உணர்த்த உணர்ந்து கூடித் தழுவுதலையும் பெற்றால், அஃது, அதனினும் மிகுந்த இன்பமாகும்.
The delight of love is the lovers’ quarrel; greater delight is the loving reunion (p) Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.
Valluvar, the Tamil sage makes humanity and love the cementing force of society. The utter simplicity of his language, his crystal clear utterances, precise and forceful, his brevity, his learning, culture and wisdom, his catholicity and eclecticism, his gentle humour and wholesome counsel have made him an object of veneration for all time.
The Kural differs from the sacred texts in two respects: Firstly, it does not have the backing of any religious community. The Analects has 499 sayings, Dhammapada has 423 verses and the Gita 700 slokas.
Scholars differ in their opinion as to what Bagavan word stands for. Valluvar who has used very few words of Sanskrit origin in his whole work, opted for the twin word "ஆதி பகவன்" to start with. Valluvar makes passing references to some of the common religious beliefs of his time. Several words in the Kuŗal could be understood to have been used to refer a deity or godhead (இறைவன், தெய்வம், வகுத்தான், இயற்றியான், பகவன் etc.). Of these, two words namely 'இறைவன்' and 'தெய்வம்' are general ones, while the words 'வகுத்தான்' and 'இயற்றியான்' appear to be attributes referring to the two acts of God namely Dispensing and Creation. The etymologically the word 'கடவுள்' is a perfect one to denote a Reality which is both Transcendent (கட) and Immanent (உள்).
Like all people of his time, Valluvar would have also been born into some religion. He made a deliberate attempt not to force his religious ideas through his work. Many religious groups, including Jains, Saivites, Vaishnavites, and sometimes even Buddhists and Christians have claimed the Kuŗal to be a reflection of their ideologies. Kuŗal is not a work of any religious affiliation; however, it does contains some religious ideas. Kuŗal may contain references in support of almost all religions.
By birth all men are equal. The differences in their action Render their worth unequal. Kural condemns animal sacrifice. Better than a thousand burnt offerings Is one life un-killed, un-eaten. Being such a staunch promoter of vegetarianism and not-killing, it is quite natural that Valluvar would have opposed the practice of sacrifice with animal offerings.
Tenfold law of Manu: Contentment; Forgiveness Self-control; Abstinence from misappropriation; Obedience to the rules of purification; Coercion of the organs; Wisdom; Knowledge of the Supreme; Truthfulness; and Abstention from anger.
Five moral percepts in Buddhism: (i) To abstain from killing, (ii) To abstain from taking what has not been given, (iii) To abstain from sexual misconduct, (iv) To abstain from false speech, and (v) To abstain from intoxicants that cloud the mind.
Buddhism's ten perfections: Generosity; Morality; Renunciation; Wisdom; Energy; Patience; Truthfulness; Resolution; Loving kindness; and Equanimity.
Valluvar has also dealt with the five vows in Jainism in different chapters. A Jaina householder is expected to abstain from following acts called (five) small vows: (i) Injury to living beings (himsa), (ii) Speaking falsehood, (iii) Taking away a thing which is not given (theft), (iv) Sexual enjoyment with other than one's own wife (incontinence), and (v) Limitless desire for possessions (parigraha).
A similar set of five great vows for monks: (1) Non-injury (2) Refraining from falsehood, (3) Not appropriating un-offered things (4) Celibacy and (5) Freedom from possessions.