free responsive website design software

TNSF TIRUPUR

    National Children’s Science Congress (NCSC) is a unique, massive and prestigious flagship programme of the Government of India, catalyzed and supported by the National Council for Science & Technology Communication (NCSTC), Department of Science and Technology, Government of India to reach out to the nook and corner of India to search for the best science talents with an aim to inculcate a scientific temper and initiate a culture of rational scientific exploration among children to seek scientific solutions for common local problems..

INTRO WITH YOUTUBE VIDEO

Full screen intro with youtube video.
Tnsf Tirupur helps you cut down development time by providing you with a flexible .

விழுது


விழுது

இருமாத கல்வி இதழ்
விழுது மே-ஜூன் 2016


விழுது

இருமாத கல்வி இதழ்
 விழுது மார்ச்-ஏப்.2016


விழுது

இருமாத கல்வி இதழ்
 விழுது- ஜன.பிப்.2016


விழுது

இருமாத கல்வி இதழ்
விழுது நவ-டிச.2015

 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநில அளவிலான இரண்டு நாள் குழந்தைகள் அறிவியல் திருவிழா உடுமலையில் சனிக்கிழமை தொடங்கியது.

உடுமலையை அடுத்துள்ள பள்ளபாளையம் ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் துவங்கிய இந்த விழாவுக்கு ஒன்றியச் செயலாளர் எம்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். வரவேற்புக் குழு செயலாளர் எஸ்.செல்லத்துரை வரவேற்றார். திருப்பூர் மாவட் ட துளிர் இல்ல நிர்வாகி செல்வன் எஸ்.ஹரிஹரன் தலைமையில் நிகழ்ச்சிகள் துவங்கி யது.ஸ்ரீ ஆதர்ஷ் பள்ளிச் செயலர் கே.பாலசுந்தரம் துவக்க உரையாற்றினார். நிர்வாகிகள் பி.எம்.பாலசுப்பிரமணியம், நா.ராஜமாணிக்கம், முதல்வர் ஜெ.அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



 துளிர் இல்ல மாநில ஒருங்கிணைப்பாளர் கே.வி.மணத்துனைநாதன் குழந்தைகளுக்கான கல்வி எது என்ற தலைப்பில் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொதுச் செயலாளர் அ.அமல்ராஜன் மாற்றுக் கல்வியின் அவசியம் குறித்துப் பேசினார்.மாநாட்டில் “இயற்கை வளம் எங்கள் வளம்’ என்கிற தலைப்பில் செயல்பாடுகள், விவாதங்கள், கலந்தையாடல்கள் நடைபெற்றய. மேலும், இயற்கை வளத்தை அடிப்படையாக கொண்டு பாடல், விளையாட்டு, பொம்மலாட்டம், ஓவியம், குழந்தைகளே குறும்படம் தயாரித்தல், கதை, நாடகம் தயாரித்தல் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.தொடர்ந்து

துளிர் இயக்க குழந்தைகள் இயற்கை வளம் 

 குறித்து தங்களது ஆய்வு அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர். மாநிலப் பொருளாளர் கு.செந்தமிழ்ச்செல்வன் கருத்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து பங்கேற்ற துளிர் இயக்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. துளிர் இயக்க நிர்வாகி டி.அசோகுமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து 150-க்கும் மேற்பட்ட துளிர் இயக்க குழந்தைகள், 50-க்கும் மேற்பட்ட அறிவியல் இயக்க நிர்வாகிகள், கருத்தாளர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பேசினர்.

CONTACT FORM

Shape your future web project with sharp design and refine coded functions.

FOLLOW US