"சித்தாந்த சைவம்"

-காருடை. சு.சூரியமூர்த்தி பிள்ளை

 

சிவாத்துவித சைவம் வேறு சித்தாந்த சைவம் வேறு என்பதற்கு அவ்வச்சமயக் கொள்கைகளிற் சிலவற்றைப் பிரமாணசகிதம் கீழே காணலாம்

சிவாத்துவித சைவக் கொள்கைகள் சித்தாந்த சைவக் கொள்கைகள்
1. சிவசிற்சத்தியே உலசமாகப் பரிணமித்தது (நாமரூபவிபாக அநருகமாய சூக்கும சிதசிற்சத்தி விசிஷ்டராகிய சிவபெருமான் காரணர்; நாமரூப விபாக அரூகமாகிய ஸ்தூல சிதசிற்சத்தி விசிஷ்டராகிய சிவபெருமான் காரியம்' - பிரமசூத்திரம். (15 நீலகண்டருரை) 1. அசுத்த மாயை உலகமாகப் பரிணமிக்கும் (நான்கு வாக்குக்களும்........சுத்த மாயையினின்றும் விருத்தியாய்க் காரியப் படுவனவன்றி அசுத்தமாயா காரியம் போலப் பரிணாமமாய்க் காரியப்படுவனவல்ல - சித்தியார் 1. 24 உரை.
2. சிவமே பாசத்தை அறிவது ( 'பற் பல வஸ்து சமூகங்களைப் பார்த்தறியும் ஞானம் எவர்க்குளதோ அவர் விபச்சித் எனப் படுவராகலின் விரோதமில்லை' - பிரம சூத்திரம் III, ii 16  நீலகண்டருரை) 2. பசுவாகிய ஆன்மாபாசத்தை யறிவது ('சத்தசத்தறிவதான்மா - சித்தியார் | 24 உரை).

 

3. சிவத்தொடு பொருந்தினவன் மீளினும் இழுக்கில்லை (முத்தருக்குச் சதேகத் தன்மையும் விதேகத்தள்மையுமாகிய இரு பிரகாரமும் பொருந்துகின்றன - iv. iv 12 நீலகண்டருரை.) 3. சிவத்தொடு பொருந்தினவன் கருவிக் கூட்டத்திற் சொல்வானல்லன்.  (பொருந்திடுவன் சிவத்தினொடும் போதான் பின்னை' - சித்தியார் VIII.37.)

 

இவ்வுண்மைகளைக் குசாக்கிர புத்தியுடையோர் தாமேயறிவார்; ஏனையோர் தொல்வாணை நல்லாசிரியனை வழிபட்டு அறிய முயல்வர்.  அவ்வாறன்றிப் பிறிதுபிறிதுரைப்பார்க்கு நான் செய்யக்கடவ தொன்றுமில்லை.  மேற்காட்டியவாற்றான் சிவாத்துவித சைவமும் சித்தாந்த சைவமும் தம்முள் வேறென்பது பெறப்படும்.

    இனி சித்தாந்த மாபாடியும் பக்கம் 4.  வரிகள், 21, 22, பக்கம் 6. வரிகள் 32-334, பக்கம் 7 வரிகள் 1-8, பக்கம் 126 வரிகள் 26-31, பக்கம் 127 வரிகள் 15,16 சிவஞான சித்தியார் சுபக்கம் (II. 53) பக்கம் 83 வரி 17. (VII-1) பக்கம் 135 வரிகள் 14-15. (VIII. 38) பக்கம் 166 வரிகள் 4-7, சிவப்பிரகாசம் செய்யுள் 99, சங்கற்ப நிராகரணம் செய்யுள் 11:- இவற்றில் சிவாத்துவித சைவம் சித்தாந்த ஆசிரியன்மாரால் கண்டிக்கப்பட்டிருத்தலின் சிவாத்துவித சைவம் வேறு சித்தாந்த சைவம் வேறு என்பது தெளியப்படும்.

    இன்னும் 'ஏனைப் பாடாணவாத சைவம் முதலிய அறுவரும் பொருளுண்மையெல்லாம் சித்தாந்த சைவரோடு ஒப்பக் கொள்ளும் அந்தரங்க வுரிமை யுடையராயினும் அவ்வப்பொருள் கட்குக் கூறும் தன்னியல்பு பொதுவியல்பு மாத்திரையின் முரணுதலான் அவர் சமயம் அகச்சமயம் என வேறு வைத் தெண்ணப்பட்டன' (சித்தாந்த மாபாடியம் பக்கம் 6. வரிகள் 25-29) என ஸ்ரீ சித்தாந்த பாஷ்யாசாரிய சுவாமிகள் அருளிச் செய்தமையான் மேலது நன்கு அறியப்படும்.

 

 ராஜவல்லிபுரம்

12-6-1917.

 

Hosted by www.Geocities.ws

1