" ஓர் அறிவிப்பு"

- மெய்கண்ட சந்தானத்தான்

 

சித்தாந்த சைவம் ஐக்கியவாதம் சைவம் எனப்படும் வீரசைவம்.
1. நாம் சித்தாந்த சைவசமயத்தினேம். 1. சைவத்திற்கு மிகவும் கீழ்ப்பட்ட ஐக்கியவாத சைவம் எனப்படும் வீரசைவசமயத்தினர்.  திருப்பாதிரிப் புலியூர், பேரூர் போன்ற மடத்து வழியினர்.
2. நமக்குத் திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசக சுவாமிகள் ஆகிய நால்வரும் மெய்கண்டதேசிகர், அருணந்திசிவம், மறைஞான சம்பந்தர் உமாபதிசிவம் ஆகிய நால்வரும் முறையே சமய ஆசாரியரும் சந்தான ஆசாரியரும் ஆவர். 2.  வீரசைவ சமயத்தினருக்கோ, ரேணுகர், அல்லமர், வசவர் முதலானவர்களே ஆசாரியராவார்.  அங்ஙனமாகவும் அவர் "ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறப்பவர் போல"  நமக்குரிய ஆசாரியரான மாணிக்கவாசக சுவாமிகளைத் தமக்குரிய ஆசாரியரென்று அபகரிப்பதும், நெருக்கிக் கேட்ட காலத்து மாணிக்கவாசக சுவாமிகள் சித்தாந்த சைவரே யென்பதுமாகிய தடுமாற்ற நிலையினர்.
3.  நாம் திருக்கைலாய பரம்பரை மெய்கண்ட சந்தானத்தேம். 3.  அவர் நமது சந்தான ஆசாரியரால் பாஷண்டிகளாகக் கருதப்பட்டுச் சங்கற்ப நிராகரணம் பாஷாண்ட நிராகரணம் என்னும் நூல்களால் கண்டித்து ஒதுக்கப்பட்ட மற்றொரு மரபினர்.
4. சிவாகமங்களில் விதித்துள்ள சமயம், விசேடம், நிருவாணம் ஆகிய தீக்ஷைகளே நமக்கு உரியவைகள். 4. அவர் அத்தீக்ஷைகளை வேறு பிரகாரத்தால் உடையவர்.
5. வேத சிவாகமங்களில் விதிகப்பட்ட சிவசின்னங்களாகிய விபூதி உருத்திராக்கங்களே நாம் அணிவன.

"பரமசிவன் அமலன் பத்தர்க்குச் சின்னம்.  உருவுடலிற் கண்டியும் நீறும்" என்று சைவ சமய நெறிக்குறளும் கட்டளையிடுவதாயிற்று.

5.அவர் வேத சிவாகமங்களில் சின்னமாக விதிக்கப்படாத 'லிங்கதாரண'மும் செய்பவர்.
6. சிவமூர்த்தியை இடதுகையால் தொடுதலும் ஆகாதென்பது சிவாகம விதி. 6. அவர் சிவமூர்த்தியை இடதுகையில் வீற்றிருக்கச் செய்து பூசை புரிவதையே வழக்கமாகக் கொண்டவர்.`
7. உண்ணுமுன் மாத்திரம் சிவபெருமானுக்கு நிவேதனம் செய்வதே சிவாகமம் விதித்த ஆசாரம். 7.அவர் இடதுகையில் சிவபெருமானை வைத்துக் கொண்டு முதலில் ஒரு பிடி உணவை நிவேதனம் செய்து தாம் உட்கொண்டு எச்சிலான மீதி உணவையும் பிடிபிடியாகச் சிவலிங்கப் பெருமானுக்கு ஊட்டுபவர்.  "பிடிக்குப் பிடி நமச்சிவாயமா" என்று உலகத்தார் இழித்துக் கூறும் பழமொழியும் இவரது ஆசாரத்தைக் குறித்தே வழங்குவதாயிற்று.
8. நம்மவரில் சிவபூசையேற்ற ஒருவர் இறந்து விடுவாரானால், நாம் அவர் பூசித்த சிவ மூர்த்தியை வேறு சிவ பூசை புரிபவரிடத்தில் ஒப்புவிப்போம். 8. அவரைச் சார்ந்தவரில் ஒருவர் இறந்து விடுவாரானால் இறந்த சவத்தோடு சிவமூர்த்தியையும் ஒருங்கு சேர்த்து புதைப்பது அவர் வழக்கம்.  ஐயோ பாதகம்! பாதகம்!
9.  நாம் ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலங்களும் அனாதி நித்தியம் என்று கூறுவோம். 9. அவர் எல்லாப் பெருங்கேட்டிற்கும் மூல காரணமாகிய ஆணவ மலம் உண்டு என்று நிச்சயிக்கும் சிவாகம வாக்கியங்களை நிந்திப்பர்.
10. நாம் ஆணவ மலத்தினால் மறைக்கப்பட்ட ஆன்மாவினது அறிவு, இச்சை, செயல்கள் மாயையிலிருந்து செய்யப்பட்ட உடம்போடு கூடிய வழி விளங்கும். 10.  அவர் சூரியனை மேகம் ம்றைத்தாற்போல மாயையே ஆன்மாவினது அறிவு இச்சை செய்ல்களை மறைத்து விடுகிறது என்பர்.
11. உயிர் கண்ணொளியெனத் தானென வேற்றுமை இல்லாமல் உடனாய் விரவி நின்று  கண்ணுக்குக் காட்டிய அதனைக் கண்கண்டதென்றும் கண்ணை அதிட்டித்து நின்ற உயிர் கண்டதென்றும் பகுத்தறிவாராது அத்துவிதமாகி ஒருங்கே நிகழ்ந்தாற் போல முதல்வனை இன்றியமையாத உயிர் ஒரு விடயத்வத அறியுங்கால் முதல்வனது சிற்சத்தி ஆன்ம சிற்சத்தியெனத் தானென வேறு இல்லாமல் உடனாய் விரவி நிற்ப முதல்வனும் அவ்வாறு விரவி நின்று ஆன்மாவிற்கு அறிவித்ததொன்றனை அவ்வான்மா அறிந்ததென்றும் அதனை அதிட்டித்து நின்ற தான் அறிந்தானென்றும் பகுத்தறிய வராது அத்துவிதப்படுவதே வேத சிவாகமம் விதித்த பேரின்பமுத்தி. 11. நீரும் நீரும் ஒன்று சேருவது போல அறிவும் அறிவும் செறிவதே முத்தி என்பது அவர் கொண்ட முத்தி.

இதுபற்றிய உமாபதி சிவம்.

"நீயலை பொருத மாயாவாதி யாயினை அமையும்"

என்று சங்கற்ப நிராகரணத்தில் கட்டளையிடுவதாயிற்று.

 பாளையங்கோட்டை

13-4-1920.

 

ஐக்கியவாதி முத்தி மறுப்பிற்குப் பிராமணம்

சென்றணையு நிழல்போலச் சிவனிற்ப னென்னிற்
    சென்றணையு மவன்முதலி சிவத்தையணைந் தொன்றாய்
நின்றதுயிர் கெட்டென்னிற் கெட்டதணை வின்றா
    நின்றதேற் கேடில்லை யணைந்துகெட்ட தென்னிற்
பொன்றினதேன் முத்தியினைப் பெற்றவரார் புகனீ
    பொன்றுகையே முத்தியெனிற் புருடனித்த னன்றா
மொன்றியிடு நீரொடுநீர் சேர்ந்தாற்போ லென்னி
    னொருபொருளா மதிபதியோ டுயிர் பொருள் ஒன்றன்றே

                                - சிவஞா甡 சித்தியார் - 11.9.

Hosted by www.Geocities.ws

1