உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

இவர்களே சைவர்கள்

(ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் அடியார்கள் திருக்குழாம், கரிவலம்வந்தநல்லூர் வெளியீடு)

   

   பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
   ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
   வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி
   ஊழி மலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி

                                  - ஸ்姐ீ உமாபதி சிவாசாரியார் சுவாமிகள்.

 தாய், தந்தையரின் மனம் குளிரும்படி காரியங்களைச் செய்பவர்கள் சைவர்கள்.

  ஸ்ரீ சிவ வித்யா உபதேசம் செய்த குருமார்களுக்கு தன் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்யவேண்டும் என்று எண்ணுகின்றவர்கள் சைவர்கள்.

    சைவத்தின் மேற்சமயம் வேறில்லை என்ற உறுதிப்பாட்டை உடையவர்கள் சைவர்கள்.

    ஸ்ரீ சிவபெருமானை தலைவனாக கொண்டு அப்பிரானுடைய திருவடியை தம் நெஞ்சில் சுமப்பவர்கள் சைவர்கள்.

    ஸ்ரீ சிவபெருமானுடைய புகழினை பாடுபவர்களும், திறனை பேசுபவர்களும் சைவர்கள்.

    ஸ்ரீ சிவபெருமானால் "அன்ன" உமாதேவியாருக்கு உபதேசிக்கப் பெற்ற "வேத ஆகமங்களை" பூஜிப்பவர்களும் சைவர்கள்.

    ஸ்ரீ வேத, ஆகம, திருமுறை, சாஸ்திர, புராண மற்றும் சிவபரத்துவ நூல்களுக்கு இழுக்கான செயலை மனம், மொழி, மெய்களால் செய்யாமல் இருப்பவர்கள் சைவர்கள்.

    ஸ்ரீ பன்னிரு திருமுறைகளையும், பதினான்கு சாஸ்திரங்களையும் படித்து அதனை உணர்ந்து உறுதிப்பாடுடன் வாழ்க்கையை நடத்துபவர்கள் சைவர்கள்.

    ஸ்ரீ சிவபெருமானுடைய திருச்சின்னங்கள் தரித்தவர்கள் சைவர்கள்.

    ஸ்ரீ சிவபெருமானுடைய திருச்சின்னங்களைத் தரித்தவர்களை மானசீகமாக வணங்கி மகிழ்பவர்கள் சைவர்கள்.

    ஸ்ரீ சிவபெருமானுடைய பிரதி பிம்பமாக திகழும் சைவ ஆதின கர்த்தாக்களுக்கு அகத்தாலும், புறத்தாலும் வழிபாடுகளை நடத்துபவர்கள் சைவர்கள்.

    ஸ்ரீ சிவபெருமான் அன்னை உமாதேவியாருக்கு உபதேசித்த பேரூர் புராணம் கூறும் அடியார்களின் அக, புற இலக்கணங்களை வாழ்வில் வழுவாது கடைப்பிடிப்பவர்கள் சைவர்கள்.

    ஸ்ரீ சமயக் குரவர்கள் கூறிய நல்வழிகளைக் கடைப்பிடித்து நாணயமாக வாழ்வை நடத்துபவர்கள் சைவர்கள்.

    ஸ்ரீ பெரிய புராண நாயகர்கள் அறுபத்து மூவரையும் ஒன்பது தொகை அடியார்களின் பெருமைகளைப் பேசி அருமைதனை உணர்ந்து ஆடி, பாடி, மகிழ்ந்து விழா எடுப்பவர்கள் சைவர்கள்.

    இலக்கண இலக்கிய சூறாவளி திராவிட மாபாஷ்ய கர்த்தா ஸ்ரீ சிவஞான சுவாமிகளின் கொள்கை கோட்பாடுகளை இவ்வுலகிற்கு உணர்த்தி அதன்படி நடப்பவர்கள் சைவர்கள்.

    சிவாலயத்தில் விழா எடுத்து வினைகளை வேறருக்க முயலுபவர்கள் சைவர்கள்.

    ஸ்ரீ சிவபெருமான் இடத்திலும், சிவ ஆலயத்திலும், சிவனடியார்கள் இடத்திலும் மனம், மொழி, மெய்களால் அன்பை செலுத்தி சிவபெருமான் திருவடியைக் கண்டு பற்றிக் கொண்டவர்கள் சைவர்கள்.

    மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் என்று எண்ணும் எல்லா உயிர்களும், எல்லா உயிர்களையும் தம்முயிர் என எண்ணி யாவும் சிவம் என கருதி சித்தத்தை சிவன் பால் வைத்திருப்பவர்கள் சைவர்கள்.

உரகா பரணத் திருமார்பும், உமைஒப் பனையாள் இடப்புறமும்,
சிரமா லிகையும் புரிசடையும், செய்ய வாயும் கறைமிடறும்,
வரதா பயமும் மழுமானும், வயங்கு கரமும் மலரடியும்,
கருவா புரியான் வெளிப்படுத்திக், காட்சி கொடுத்து நின்றானே.

                           - ஸ்姐ீ சைவ சிரோண்மணி ஞான வரதுங்க ராம பாண்டியர்.

 

   

 

திருச்சிற்றம்பலம்.


Hosted by www.Geocities.ws

1