உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

ஏகபாதமூர்த்தி

   

"வெய்யதிரி சூலம் விழைவோ டினிதேந்தும்
 கைகளொரு நான்குமலர் கண்களொரு மூன்றும்
 செய்யமலர் வென்றவொரு நாளுமுறு தேவை
 யொய்யென அமைத்தவர்கள் முத்தியுறுவாரே"

                                    - இலிங்妵புராணம்

ர்வசம்ஹாரம் நிகழும் மகாப் பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் தன்னிடம் சரண்டைந்து, தன் திருவடியில் இலயம் பெற வேண்டி, ஒற்றைக்கால உடையவராகத் திருவுளம் கொண்டு சிவபெருமான் விளங்கும் கோலமே ஏகபாதமூர்த்தியாகும்.  இவர் ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்டு விளங்குவார்.  இவரது பின் வலக்கரம் சூலத்தையும் பின் இடக்கரம் மழுவையும் ஏந்தியுள்ளன.  இவரது முன் வலக்கரம் அபயகரமாகவும் முன் இடக்கரம் வரதகரமாகவும் அமைந்திருக்கும்.  மணிகளாலான மாலையை அணிந்து, புலித்தோல் உடுத்து, கங்கையும் பிறையும் விளங்கும் ஜடாமகுடமும் திகழ இவர் விளங்குவார்.

    விசுவகர்ம சிற்பசாஸ்திரத்தில் ஏகபாதமூர்த்தி பதினாறு கரங்களுடையவராகக் காட்டப்படுகிறார்.  அவரது இடக்கரங்களில் முறையே கட்வாங்கம், பாணம், சக்க்ரம், டமருகம், முத்கரம், வரதம், அட்சமாலை, சூலம் ஆகியனவும், வலக்கரங்களில் முறையே தனுசு, கண்ட்டம் (மணி), கபாலம், கெளமுதி (பிறை), தர்ஜனி (கண்ணாடி), கதை, பரசு, சத்தியாயுதம் ஆகியனவும் அமைந்துள்ளன.  ஏகபாதமூர்த்தியை ஏகாதசருத்திரருள் ஒருவராகக் கூறுவாரும் உளர்.

    மதுரையில் இம்மூர்த்தி தூண் சிற்பமாக உள்ளது.  திருவொற்றியூரிலும் திருவானைக்காலில் அகிலாண்டேஸ்வரி சன்னதியில் தூணிலும் ஏகபாத திரிமூர்த்தி வடிவம் உள்ளது.  பிரம்மாவும் விஷ்ணுவும் இருபுறம் விளங்க நடுவில் சிவபிரான் விளங்கும் ஏகபாததிரிமூர்த்திகோலம் அருமையாக உள்ளது. 

    ஏகபாதமூர்த்தியை வழிபடுவோர் அனைத்துப் பேறுகளும் எய்தி இன்புறுவர்.

  


 

 

திருச்சிற்றம்பலம்.


Hosted by www.Geocities.ws

1