March 18, 2009: ஜிஸ்யா வரி.
J. ராஜா முகமதுவின் உரையிலிருந்து(தமிழன் தொலைக்காட்சி)...
ஜிஸ்யா வரி(Jizya Tax) இஸ்லாமிய மன்னர்களால் விதிக்கப்பட்டதாகவும், அதன் கொடுமையால் மக்கள் இஸ்லாமிய மன்னர்களை வெறுத்ததாகவும் நாம் பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறோம்.
ஜிஸ்யா வரி என்பது “பாதுகாப்பு வரி”. அதாவது அரச படையில் சேர்ந்து பணியாற்ற இயலாத மற்ற மதத்தவர்கள் இந்த வரி செலுத்த வேண்டும். பதிலுக்கு அரசு அவர்களின் மத உரிமைகளை காக்கும். முதியவர், பெண்கள், குழந்தைகள் போன்ற சிலருக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. மேலும், இஸ்லாம் மதத்தினர் செலுத்தும் மற்ற வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது. இந்த வரியை இஸ்லாம் மன்னர்களின் ஆட்சிக்கு மற்ற மதத்தவர்கள் கட்டுப்பட்டவர்கள் என்பதன் அடையாளமாகவே இஸ்லாம் மன்னர்கள் கருதினர். வேறு கொடுமையான உள்நோக்கங்கள் இல்லை. ஆங்கிலேயர்கள் இந்திய வரலாற்றை தங்கள் பிரித்தாளும் கொள்கைக்கு ஏற்ப எழுதி வைத்தனர் என்பதற்கு இது ஒரு சான்று.
http://en.wikipedia.org/wiki/Jizya - விக்கிபீடியா கட்டுரை.