⇰ To Index Page

பாரதியார் கவிதைகள்

Non commercial web site of personal collections, available to every one. Use it if you find them useful. Encouraged to copy and distribute if needed.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் [To TOP]

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா இறைவா இறைவா!
(எத்தனை)
சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்
(எத்தனை)
முக்தியென்ற்றொரு நிலை சமைத்தாய் – அங்கு
முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலை வகுத்தாய் – எங்கள்
பரமா பரமா பரமா

You made us enjoy infinite bliss, Oh My God! My God!
You have merged divine with matter (divinity inside matter)
You made this wonderful world with five elements. (Fire,Air,Space,Water,Earth)
You made this whole world as a colourful encylopedia of beautiful things.
You gave us a state of Absolute Knowledge and Bliss.
You make us realize greatness of Bhakti (love of divine).
Oh almighty God! Oh almighty God!

Below some short listed songs
  1. எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
  2. ஓடி விளையாடு பாப்பா
  3. மனதிலுறுதி வேண்டும்
  4. காணி நிலம் வேண்டும்
  5. அச்சமில்லை அச்சமில்லை
  6. நல்லதோர் வீணை செய்தே
    Language Country work
  7. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி
  8. செந்தமிழ்நாடு
  9. பாரத நாடு
  10. பாரத தேசம் - Future blue print
  11. தொழில்
  12. அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
    Kannan - Divine form
  13. காக்கை சிறகினிலே நந்தலாலா
  14. தீராத விளையாட்டுப் பிள்ளை
  15. கண்ணன் - என் குழந்தை (சின்னஞ் சிறு கிளியே)
  16. வேய்ங்குழல் Flute
  17. கண்ணன் - என் தாய்
  18. சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா
  19. பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
  20. கண்ணன்- என் காதலன்
  21. கண்ணன் - என் காந்தன்
  22. கண்ணன் - என் தோழன்
  23. கண்ணன்- என் சேவகன்
  24. கண்ணன் - என் ஆண்டான்
  25. கண்ணன் எனது சற்குரு
  26. கண்ணம்மா-எனது குல தெய்வம்
    Living and Hope
  27. நல்ல காலம் வருகுது
  28. நிகழ்காலத்தில் வாழ்க
  29. தெளிவு Mental Clarity
    God and Philosophy
  30. மாயையே
  31. உலகத்தை நோக்கி வினவுதல்
  32. அறிவாய் விளங்குமுதற் சோதிநான்
  33. அறிவே தெய்வம்
  34. கடவுள் எங்கே இருக்கிறார்?
  35. பராசக்‌தியைப்‌ பாடுகின்றோம்

ஓடி விளையாடு பாப்பா [To TOP]

ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா

சின்னஞ் சிறுகுருவி போலே
நீ திரிந்து பறந்துவா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு
நீ மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா
கொத்தித் திரியுமந்தக் கோழி
அதைக் கூட்டி விளையாடு பாப்பா
எத்தித் திருடுமந்தக் காக்காய்
அதற்கு இரக்கப் படவேணும் பாப்பா

பாலைப் பொழிந்துதரும் பாப்பா
அந்தப் பசுமிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்துவரும் நாய்தான்
அது மனிதர்க்குத் தோழனடி பாப்பா
வண்டி இழுக்கும் நல்ல குதிரை
நெல்லு வயலில் உழுதுவரும் மாடு
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு
இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா

காலை எழுந்தவுடன் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு
என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா

பொய் சொல்லக் கூடாது பாப்பா
என்றும் புறஞ்சொல்ல லாகாது பாப்பா
தெய்வம் நமக்குத்துணை பாப்பா
ஒரு தீங்குவர மாட்டாது பாப்பா
பாதகஞ் செய்பவரைக் கண்டால்
நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
துன்பம் நெருங்கிவந்த போதும்
நாம் சோர்ந்துவிட லாகாது பாப்பா
அன்பு மிகுந்ததெய்வ முண்டு
துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா
தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா
தேம்பி யழுங்குழந்தை நொண்டி
நீ திடங்கொண்டு போராடு பாப்பா
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற
எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா

அமிழ்தில் இனியதடி பாப்பா
நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
அதைத் தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம்
அதைத் தினமும் புகழ்ந்திடடி பாப்பா

வடக்கில் இமயமலை பாப்பா
தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா
கிடக்கும் பெரியகடல் கண்டாய்
இதன் கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா
வேத முடையதிந்த நாடு
நல்ல வீரர் பிறந்த திந்த நாடு
சேதமில்லாத ஹிந்து ஸ்தானம்
இதைத் தெய்வமென்று கும்பிடடி பாப்பா

சாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்தமதி கல்வி
அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்
தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும்
இது வாழும் முறைமையடி பாப்பா

Run and play actively! Oh child!
You cannot afford to be lazy! Oh child!
play together with other children! Oh child!
don’t be harsh (scold) on other children! Oh child!

Like a tiny sparrow
You fly around, Oh child!
See the colorful birds
Be happy in your heart, Oh child!
The chicken that pecks and plays with it, Oh child!
The bird (crow) that steals and steals
It deserves pity, Oh child!

It gives us milk in abundance, oh child!
The cow is very good, oh child!
The dog which waggles it tails and comes to you, oh child!
it is the friend of (us) humans! oh Child!
A good horse that pulls a cart
A cow that plows the rice field
A goat that survives on the farm
Please support these, Oh child!

After you wake up in the morning, study, after which
indulge in a good song which brings kindness to your heart,
The evenings are time to play,
Make all this a part of your daily routine! Oh child!

Never tell a lie! Oh child!
Never speak slanderously about anyone! Oh child!
God is with us, Oh child!
No harm will come, Oh child!
If we see someone who does harm, Oh child!
We must not be afraid, Oh child!
Tread on them, Oh child!
Even when we suffer, Oh child!
keep fear away and do not loose courage,
God will always support us! Oh child!
With him by our side, bad will never happen to us! Oh Child!

Laziness is very bad, Oh child!
Don't break the word that your mother said, Oh child!
Thembi, the child is lame
You fight with strength, Oh child!
Worship the Tamil nation that gave birth to us,
Which is our mother, Oh child!

Our land is Sweetest, Oh child!
Our beloved one’s land of the gods, Oh child!
The greatest word is Tamil word
Worship Tamil by studying it, Oh child!
Hindustan is a wealthy place
Sing Praising it daily, Oh child!

In the north, the Himalayas, Oh child!
In the south, the Kumari, Oh child!
You have seen the great ocean
To the east and west of Hindustan, Oh child!
A land of the Vedas
A land where good warriors were born
A Hindu land without harm
Pray this as a god, Oh child!

There are no (differences based on) castes! Oh child!
To describe offensively or boastingly about any race/clan is a sin!
Justice is the highest virtue, education is the highest virtue
Those who have a lot of love are the greatest ones
Love all living beings
True knowledge is understanding that, Truth is God
A strong compassionate heart is what is needed
This is a way of life, Oh child!

மனதிலுறுதி வேண்டும் [To TOP]

மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்

Resolute/Firm and Strong mind I seek
Refined words I seek
Considerate thoughts I seek
Acquired things to be mine I seek

Dreams that become real I seek
And achieve results or possessions soon I seek
Wealth and happiness I seek
Fame in this world I seek

Clarity of vision I seek
Determination in work I seek
Women's liberation I seek
Protection from great almighty (God) I seek

Growth and prosperity of this land I seek
Vision of happy-heaven I seek
Triumph of truth I seek
Om Om Om Om

காணி நிலம் வேண்டும் [To TOP]

காணி நிலம் வேண்டும்
பராசக்தி காணி நிலம் வேண்டும்

அங்கு தூணில் அழகியதாய்
நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய்
அந்தக் காணி நிலத்தினிடையே
ஓர்மாளிகை கட்டித் தரவேண்டும்

அங்கு கேணியருகினிலே தென்னைமரம்
கீற்று மிளநீரும் பத்துப் பன்னிரண்டு
தென்னைமரம் பக்கத்திலே வேணும்
நல்ல முத்துச் சுடர்போலே
நிலாவொளி முன்பு வரவேணும்

அங்கு கத்துங் குயிலோசை
சற்றே வந்து காதிற் படவேணும்,
என்றன் சித்தம் மகிழ்ந்திடவே
நன்றாயிளந் தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்
எங்கள் கூட்டுக் களியினிலே
கவிதைகள் கொண்டுதர வேணும்

அந்தக் காட்டு வெளியினிலே
அம்மா! நின்றன் காவலுற வேணும்
என்றன் பாட்டுத் திறத்தாலே
இவ்வையத்தைப் பாலித்திட வேணும்.

I need a small piece of land ,
Oh divine mother ,A small piece of land,

In the midst of that land you should build/provide me a house with,
Four pretty pillars and several floors, near the small pond

There near the small pond, ten or twelve coconut trees
Nice shade from Cocunut tree leaves and plants.
Moon light shining like a pearl

there should be the soft song of the nightingales,
fall in my ears to make mind happy,
Good light breeze should blow to make me further happy.

To enjoy music there , there should be a virtuous wife
you should bring and give poems, during our time/play together

And in that forest land, Oh mother you should be the guard,
Should enable me to make life pleasant for all/everyone with my poems and music

அச்சமில்லை அச்சமில்லை [To TOP]

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

*Word fear, does not exist for Courageous, or not in their dictionary.
We have no fear, We have no fear, nothing like fear.

Even if the people of this world stand against us,
We have no fear, We have no fear, nothing like fear.
Although, we are treated cheap and rebuked,
We have no fear, We have no fear, nothing like fear.

Even if forced to beg for food for living, Or born beggar
We have no fear, We have no fear, nothing like fear.
Even if Loveable possessions are lost,
We have no fear, We have no fear, nothing like fear.

If clothed and bosomed damsels, cast their eyes or angry
We have no fear, We have no fear, nothing like fear.
Even if Poisoned, or fed poisoned food by friends
We have no fear, We have no fear, nothing like fear.

Even if approached by attacking strong or Shielded armies,
We have no fear, We have no fear, nothing like fear.
Even if the sky crashed and fell on our head
We have no fear, We have no fear, nothing like fear.

நல்லதோர் வீணை செய்தே [To TOP]

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

Having crafted a wonderful Veena - will you
consign it to dust and let it rot?
Tell me O' Goddess -
You created me with radiant wisdom ;
Won't you give me strength - for me
to live a life fruitful to this land?
Tell me O' Goddess - will you
make me live as a burden to this land?

Like a swiftly thrown ball - a body
ready to spring on brain's command I ask.
Spotless mind I ask - a life
born anew daily I ask.
Even when my skin is aflame - a heart
that sings thy praise I ask.
Unshakeable wisdom I ask - Is there
anything that stops you from bestowing these?

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி [To TOP]

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்§ம், ஒருசொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்;ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.

செந்தமிழ்நாடு [To TOP]

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)

பாரத நாடு [To TOP]

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு.
ஞானத்திலே பரமோனத்திலே - உயர்
மானத்திலே அன்னதானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு - இந்தப் (பாருக்குள்ளே)

தீரத்திலே படை வீரத்திலே - நெஞ்சில்
ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரங் கண்டு
தருவதிலே உயர் நாடு - இந்தப் (பாருக்குள்ளே)

நன்மையிலே உடல் வன்மையிலே - செல்வப்
பன்மையிலே மறத் தன்மையிலே
பொன்மயிலொத்திடும் மாதர்தம் கற்பின்
புகழினிலே உயர் நாடு - இந்தப் (பாருக்குள்ளே)

ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே - புய
வீக்கத்திலே உயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினிலே உயர் நாடு - இந்தப் (பாருக்குள்ளே)

வண்மையிலே உளத் திண்மையிலே - மனத்
தண்மையிலே மதி நுண்மையிலே
உண்மையிலே தவறாத புலவர்
உணர்வினிலே உயர் நாடு - இந்தப் (பாருக்குள்ளே)

யாகத்திலே தவ வேகத்திலே - தனி
யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்திகொண்டார்தம்
அருளினிலே உயர் நாடு - இந்தப் (பாருக்குள்ளே)

ஆற்றினிலே சுனை யூற்றினிலே - தென்றல்
காற்றினிலே மலைப் பேற்றினிலே
ஏற்றினிலே பயன் ஈந்திடுங் காலி
இனத்தினிலே உயர் நாடு - இந்தப் (பாருக்குள்ளே)

தோட்டத்திலே மரக் கூட்டத்திலே - கனி
ஈட்டத்திலே பயிர் ஊட்டத்திலே
தேட்டத்திலே அடங்காத நதியின்
சிறப்பினிலே உயர் நாடு - இந்தப் (பாருக்குள்ளே)

My India is a great and good country in the world,

In wisdom, in divine thought, In respectability,
In charity and feeding all, In music and in poetry
drenched with nectar, It is a great country.

In bravery, in valour, in helping and compassion,
In spirituality and science, It is a great country.

In goodness , in physical strength, in wealth,
in patriotism, in the chastity of women or virtue of women,
who are like golden peacock, It is a great country.

In creativity, job skills, financial knowledge
In sea like army of brave people capable of protecting the country,
It is a great country.

In strength , in greatness and clarity of mind
In intellect, In truth and in fairness of poets,
It is a great country.

In nature worship/rituals, in penance , In the art,
in yoga , in physical and mental recreations,
In belief in divine and faith, It is a great country.

In rivers, in springs of streams, in slow breezes,
In respecting mountains and land,
In productive animals, It is a great country.

In the garden and forest with large number of trees,
In fruit harvest, in the healthy crops and fertile agriculture,
In the natural treasure, It is a great country.

பாரத தேசம் - Future blue print [To TOP]

Mahakavi Bharathiyar sings about the possible development of Bharat or India. The ideas can be a blue print for Indian ambitions and development
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)

வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத)

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)

காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத)

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)

ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)

குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)

மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத)

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்
ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத)

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். (பாரத)

தொழில் [To TOP]

இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்திரங்கள்வகுத்திடு வீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே!
கடலில்மூழ்கிநன் முத்தெடுப்பீரே!
அரும்பும்வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரந் தொழில் செய்திடு வீரே!
பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்.
பிரம தேவன் கலையிங்கு நீரே!

மண்ணெடுத்துக் குடங்கள் செய்வீரே!
மரத்தை வெட்டி மனைசெய்கு வீரே!
உண்ணக் காய்கனி தந்திடு வீரே!
உழுது நன்செய்ப் பயிரிடு வீரே!
எண்ணெய், பால்நெய் கொணர்ந்திடு வீரே!
இழையை நூற்றுநல் லாடைசெய் வீரே!
விண்ணி னின்றெமை வானவர் காப்பார்;
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே!

பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே!
பரத நாட்டியக் கூத்திடு வீரே!
காட்டும் வையப் பொருள்களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்திடு வீரே!
நாட்டி லேயறம் கூட்டி வைப்பீரே!
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே;
தேட்ட மின்றி விழியெதிர் காணும்
தெய்வ மாக விளங்குவிர் நீரே!

அக்னிக் குஞ்சொன்று கண்டேன் [To TOP]

அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ.
I saw a spark of fire.
I left it in the hollow of a tree, in a forest
Burnt to a cinder was the forest.
In its rage, is there a difference between a spark or a blaze? spark of fire is an action or determination, which can produce immense results.

காக்கை சிறகினிலே நந்தலாலா [To TOP]


காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

In the black bird's feathers I see your dark hue nandhalala
In all those trees I see your greenish hue nandhalala
In all those notes I hear your melody nandhalala
Thy is heard nandhalala.
On placing my fingers in the fire, your warm bliss spreads over me nandhalala.

தீராத விளையாட்டுப் பிள்ளை [To TOP]

தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை
(தீராத)
தின்னப் பழங்கொண்டு தருவான்;-பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால்-அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்
(தீராத)
தேனொத்த பண்டங்கள் கொண்டு-என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான்-சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்
(தீராத)
அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை
அழஅழச் செய்துபின் “கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்” என்பான்-என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்
(தீராத)
பின்னலைப் பின்னின் றிழப்பான்;-தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே-புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்
(தீராத)
புல்லாங் குழல்கொண்டு வருவான்-அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்,
கள்ளர்ல் மயங்குவது போலே அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்
(தீராத)
அங்காந் திருக்கும்வாய் தனிலே-கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ?-கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ?
(தீராத)
விளையாட வாவென் றழைப்பான்;-வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்;-எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான்
(தீராத)
அம்மைக்கு நல்லவன்,கண்டீர்!-மூளி
அத்தைக்கு நல்லவன்,தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர்-வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான்
(தீராத)
கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்;-பொய்மை
சூத்திரம் பழிசொலக் கூசாக் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித்-தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான்
(தீராத)

வேய்ங்குழல் Flute [To TOP]

எங்கிருந்து வருகுவதோ?-ஒலி யாவர் செய்குவதோ?-அடி தோழி!

குன்றினின்றும் வருகுவதோ?-மரக் கொம்பினின்றும் வருகுவதோ?
வெளி மன்றினின்று வருகுவதோ?-
என்றன் மதிமருண்டிடச் செய்குதடி!-இஃது (எங்கிருந்து)

அலையொலித்திடும் தெய்வ -யமுனை யாற்றினின்றும் ஒலிப்பதுவோ?-அன்றி
இலையொலிக்கும் பொழிலிடை நின்றும் எழுவதோ இஃதின்னமுதைப்போல்?(எங்கிருந்து)

காட்டினின்றும் வருகுவதோ? -நிலாக் காற்றைக் கொண்டு தருகுவதோ?-வெளி
நாட்டினின்றுமித் தென்றல் கொணர்வதோ?
நாதமிஃதென் உயிரையுருக்குதே!(எங்கிருந்து)

பறவை யேதுமொன்றுள்ளதுவோ!-இங்ஙன் பாடுமோ அமுதக் கனற்பாட்டு?
மறைவினின்றுங் கின்னரராதியர் வாத்தியத்தினிசை யிதுவோ அடி!(எங்கிருந்து)

கண்ணனூதிடும் வேய்ங்குழல் தானடி!
காதிலேயமு துள்ளத்தில் நஞ்சு ,
பண்ணன்றாமடி பாவையர்வாடப்
யெய்திடும் அம்படி தோழி!(எங்கிருந்து)

கண்ணன் - என் தாய் [To TOP]

உண்ண உண்ணத் தெவிட்டாதே - அம்மை
உயிரெனும் முலையினில் உயர்வெனும் பால்;
வண்ணமுற வைத்தெனக் கே - என்றன்
வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,
கண்ணனெனும் பெயருடையாள், - என்னை
கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து
மண்ணெனுந்தன் மடியில்வைத்தே - பல
மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள். ... 1

இன்பமெனச் சிலகதைகள் - எனக்
கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள் - கெட்ட
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்

என்பருவம் என்றன் விருப்பம் - எனும்
இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே
அன்பொடவள் சொல்லிவரு வாள்; - அதில்
அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன். ... 2

விந்தைவிந்தை யாக எனக்கே - பல
விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்;
சந்திரனென் றொரு பொம்மை - அதில்
தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்;
மந்தை மந்தையா மேகம் - பல
வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்;
முந்தஒரு சூரியனுண்டு - அதன்
முகத் தொளி கூறுதற்கொர் மொழியிலை யே. ... 3

வானத்து மீன்க ளுண்டு - சிறு
மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்;
நானத்தைக் கணக்கிடவே - மன்
நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை;
கானத்து மலைக ளுண்டு - எந்தக்
காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை;
மோனத்தி லேயிருக்கும் - ஒரு
மொழியுலை யாதுவிளை யாடவருங் காண். ... 4

நல்லநல்ல நதிகளுண்டு - அவை
நாடெங்கும் ஓடிவிளை யாடி வருங்காண்;
மெல்ல மெல்லப் போயவை தாம் - விழும்
விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்;
எல்லையதிற் காணுவ தில்லை; - அலை
எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்;
ஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மை
ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண். ... 5

சோலைகள் காவினங் கள் - அங்கு
சூழ்தரும் பலநிற மணிமலர் கள்
சாலவும் இனியன வாய் - அங்கு
தருக்களில் தூங்கிடும் கனிவகை கள்
ஞாலமுற்றிலும் நிறைந் தே - மிக
நயந்தரு பொம்மைகள் எனக்கென வே;
கோலமுஞ் சுவையு முற - அவள்
கோடிபல கோடிகள் குவித்துவைத் தாள். ... 6

தின்றிடப் பண்டங்களும் - செவி
தெவிட்டறக் கேட்கநற் பாட்டுக்க ளும்,
ஒன்றுறப் பழகுதற் கே - அறி
வுடையமெய்த் தோழரும் அவள்கொடுத் தாள்;
கொன்றிடு மெனஇனி தாய் - இன்பக்
கொடுநெருப் பாய் அனற் சுவையமு தாய்,
நன்றியல் காதலுக் கே - இந்த
நாரியர் தமையெனைச் சூழவைத் தாள். ... 7

இறகுடைப் பறவைக ளும் - நிலந்
திரிந்திடும் விலங்குகள் ஊர்வனங்கள்
அறைகடல் நிறைந்திட வே - எண்ணில்
அமைத்திடற் கரியபல் வகைப்பட வே
சுறவுகள் மீன்வகை கள் - எனத்
தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்;
நிறைவுற இன்பம்வைத் தாள்; - அதை
நினைக்கவும் முழுதிலுங் கூடுதில்லை. ... 8

சாத்திரம் கோடி வைத்தாள்; - அவை
தம்மினும் உயர்ந்தோர் ஞானம் வைத்தாள்;
மீத்திடும் பொழுதினி லே - நான்
வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே
கோத்தபொய் வேதங்களும் - மதக்
கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்
மூத்தவர் பொய்ந்நடை யும் - இள
மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்; ... 9

வேண்டிய கொடுத்திடு வாள்; - அவை
விரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்;
ஆண்டருள் புரிந்திடு வாள்; - அண்ணன்
அருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்;
யாண்டுமெக் காலத்தி னும் - அவள்
இன்னருள் பாடுநற் றெழில்புரி வேன்;
நீண்டதொர் புகழ்வாழ் வும் - பிற
நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள். ... 10

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா [To TOP]

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ
சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று

Are Your glowing eyes the sun and the moon? Kannamma,
Are Your black eyeballs sky's dark hue? Kannamma,
Sparkling diamonds in your dark blue Silk saree
are midnight stars!
Is your alluring smile Garden flower's brightness?
Are your thoughts Waves of the blue ocean?
Is your sweet voice enchanting melody of the cuckoo?
I am in love with you, Innocent girl Kannamma,
Who needs all your talk of tradition? Kannamma,
Is tradition a hurdle for fast and quick action? Kannamma
our wedding will take place, when elders accept,
How can I wait till then? let us cheek kiss meanwhile

கண்ணன் - என் குழந்தை (சின்னஞ் சிறு கிளியே) [To TOP]

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா செல்வக் களஞ்சியமே! (சின்னஞ்சிறு)
என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்! (சின்னஞ்சிறு)

பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா! பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே ஆடிவருந் தேனே (சின்னஞ்சிறு)

ஓடி வருகையிலே- கண்ணம்மா! உள்ளம் குளிருதடீ;
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தவிழுதடி

உச்சிதனை முகந்தால் - கருவம் ஓங்கி வளருதடி
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ.

கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா உன்மத்த மாகுதடீ.

உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில் உத்திரங் கொட்டுதடி;
என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ! x3

சொல்லும் மழலையிலே – கண்ணம்மா துன்பங்கள் திர்த்திடு வாய்
முல்லைச் சிரிப்பாலே – எனது மூர்க்கந் தவிர்த்திடுவாய் ,
இன்ப கதைகளெல்லாம் – உன்னைப்போல் ஏடுகள் சொல்வ துண்டோ ?
அன்பு தருவதிலே – உனைநேர் ஆகுமோர் தெய்வ முண்டோ ?
மார்பில் அணிவதற்கே – உன்னைப்போல் வைர மணிக ளுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே – உன்னைப்போல் செல்வம் பிறிது முண்டோ ?

பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு [To TOP]

பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா...

வீணையடி நீ எனக்கு மேவும் விறல் நானுனக்கு
பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு
காணுமிடந்தோறும் நின்றான் கண்ணினொளி வீசுதடி
மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா...

வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு
பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் ஜோதிமுகம்
ஊனமறு நல்லழகே ஊரு சுவையே கண்ணம்மா....

வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு
பண்ணுசுதி நீ எனக்கு பாட்டினிமை நான் உனக்கு
எண்ணி எண்ணி பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே கட்டியமுதே கண்ணம்மா....

வீசுகமழ் நீ எனக்கு விரியுமலர் நான் உனக்கு
பேசுபொருள் நீ எனக்கு பேணுமொழி நான் உனக்கு
நேசமுள்ள வான்சுடரே நின்னழகாய் எத்துறைப்பேன்
ஆசை மதுவே கனியே அல்லு சுவையே கண்ணம்மா....

காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு
வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு
போதமுற்ற போதினிலே பொங்கிவரும் தீஞ்சுவையே
நாதவடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா....

நல்லவுயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே
முல்லை நிகர் புன்னகையை மோதுமின்பமே கண்ணம்மா...

தாரையாடி நீ எனக்கு தண்மதியம் நான் உனக்கு
வீரமடி நீ எனக்கு வெற்றியடி நான் உனக்கு
தரணியில் வானுலகத்தில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய் சமைந்தாய் உள்ளமுதே கண்ணம்மா....!!!

கண்ணன்-என் காதலன் [To TOP]

தூண்டிற் புழுவினைப்போல்-வெளியே சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக -எனது நெஞ்சத் துடித்த தடீ!
கூண்டுக் கிளியினைப் போல்-தனிமை கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம்-மனது வெறுத்து விட்ட தடீ!
பாயின் மிசை நானும்-தனியே படுத் திருக்கையி லே,
வாயினில் வந்ததெல்லாம்-சகியே! தாயினைக் கண்டாலும்-சகியே!
சலிப்பு வந்த தடீ!
வளர்த்துப் பேசிடு வீர்; நோயினைப் போலஞ்சி னேன்;-சகியே!
நுங்க ளுறவையெல் லாம்.
உணவு செல்லவில்லை;-சகியே! உறக்கங் கொள்ளவில்லை;
மணம் விரும்பவில்லை;-சகியே! மலர் பிடிக்கவில்லை;
குண முறுதி யில்லை;-எதிலும் குழப்பம் வந்த தடீ!
கணமும் உள்ளத்திலே-சுகமே காணக் கிடைத்த தில்லை.
பாலுங் கசந்ததடீ!-சகியே! படுக்கை நொந்த தடீ!
நாலு வயித்தியரும்-இனிமேல் நம்புதற் கில்லை யென்றார்;
பாலந்துச் சோசியனும்-கிரகம் படுத்து மென்று விட்டான்.
கனவு கண்டதிலே-ஒருநாள் கண்ணுக்குத் தோன்றா மல்,
இனம் விளங்க வில்லை-எவனோ என்னகந் தொட்டு விட்டான்,
வினவக் கண் விழித்தேன்;-சகியே! மேனி மறைந்து விட்டான்;
மனதில மட்டிலுமே -புதிதோர் மகிழ்ச்சி கண்ட தடீ!
உச்சி குளிர்ந்ததடீ;-சகியே! உடம்பு நேராச்சு
மச்சிலும் வீடுமெல்லாம்-முன்னைப்போல் மனத்துக் கொத்த தடீ!
இச்சை பிறந்ததடீ-எதிலும் இன்பம் விளைந்த தடீ;
அச்ச மொழிந்த தடீ;-சகியே! அழகு வந்த தடீ!
எண்ணும் பொழுதி லெல்லாம்-அவன்கை இட்ட விடத்தினி லே
தண்ணென் றிருந்ததடீ!-புதிதோர் சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்;-அவன்தான் யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் -அங்ஙனே கண்ணின் முன் நின்ற தடீ!

கண்ணன் -என் காந்தன் [To TOP]

கனிகள் கொண்டுதரும்-கண்ணன் கற்கண்டு போலினிதாய்;
பனிசெய் சந்தனமும்-பின்னும் பல்வகை அத்தர்களும்,
குனியும் வாண்முகத்தான்-கண்ணன் குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே-வண்ணம் இயன்ற சவ்வாதும்.
கொண்டை முடிப்பதற்கே-மணங் கூடு தயிலங்களும்,
வண்டு விழியினுக்கே-கண்ணன் மையுங் கொண்டுதரும்;
தண்டைப் பதங்களுக்கே-செம்மை சார்த்துசெம் பஞ்சுதரும்;
பெண்டிர் தமக்கெல்லாம்-கண்ணன் பேசருந் தெய்வமடி!
குங்குமங் கொண்டுவரும்-கண்ணன் குழைத்து மார்பெழுத;
சங்கையி லாதபணம்-தந்தே தழுவி மையல் செய்யும்;
பங்கமொன் றில்லாமல்-முகம் பார்த்திருந் தாற்போதும்;
மங்கள மாகுமடீ!-பின்னோர் வருத்த மில்லையடீ!

கண்ணன் -என் தோழன் [To TOP]

பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்
புறங்கொண்டு போவ தற்கே-இனி
என்ன வழியென்று கேட்சில்,உபாயம்
இருகணத் தேயுரைப் பான்;-அந்தக்
“கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்
காணும் வழியொன் றில்லேன்-வந்திங்கு
உன்னை யடைந்தனன்”என்னில் உபாயம்
ஒருகணத் தேயுரைப் பான்.
கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
கலக்க மிலாதுசெய் வான்;-பெருஞ்
சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்
தேர்நடத் திக்கொடுப் பான்;-என்தன்
ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
உற்ற மருந்துசொல் வான்;-நெஞ்சம்
ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
இதஞ்சொல்லி மாற்றிடு வான்.
பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாமொரு
பேச்சினி லேசொல்லு வான்;
உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்
உண்ணும் வழியுரைப் பான்;
அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்
அரைநொடிக் குள்வரு வான்;
மழைக்குக் குடை,பசி நேரத் துணவென்தன்
வாழ்வினுக் கெங்கள்கண் ணன்.
கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்;சொல்லுங்
கேலி பொறுத்திடு வான்;-எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
ஆறுதல் செய்திடு வான்;-என்தன்
காட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
நான்சொல்லும் முன்உணர் வான்;-அன்பர்
கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு
கொண்டவர் வேறுள ரோ?
உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்
ஓங்கி யடித்திடு வான்;-நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தைசொன் னாலங்கு
காறி யுமிழ்ந்திடு வான்;-சிறு
பள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்ட
பாசியை யெற்றி விடும்-பெரு
வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி
மெலிவு தவிர்த்திடு வான்
சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச்
சிரித்துக் களித்திடு வான்;-நல்ல
வன்ன மகளிர் வசப்பட வேபல
மாயங்கள் சூழ்ந்திடு வான்;-அவன்
சொன்ன படிநட வாவிடி லோமிகத்
தொல்லை யிழைத்திடு வான்;-கண்ணன்
தன்னை யிழந்து விடில்,ஐயகோ;பின்
சகத்தினில் வாழ்வதி லேன்
கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துத்
குலுங்கிடச் செய்திடு வான்;-மனஸ்
தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி
தளர்த்திடச் செய்திடு வான்;-பெரும்
ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று
அதனை விலக்கிடு வான்;-சுடர்த்
தீபத்தி லேவிழும் பூச்சிகள் போல்வரும்
தீமைகள் கொன்றிடு வான்
உண்மை தவறி நடப்பவர் தம்மை
உதைத்து நசுக்கிடு வான்;-அருள்
வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்
மலைமலை யாவுரைப் பான்;-நல்ல
பெண்மைக் குணமுடை யான்;-சில நேரத்தில்
பித்தர் குணமுடையான்;மிகத்
தண்மைக் குணமுடையான்;சில நேரம்
தழலின் குணமுடை யான்.
கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர்
குணமிகத் தானுடை யான்;-கண்ணன்
சொல்லு மொழிகள் குழந்தைகள் போலொரு
சூதறி யாதுசொல் வான்;-என்றும்
நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது
நயமுறக் காத்திடு வான்;-கண்ணன்
அல்லவ ருக்கு விடத்தினில் நோயில்
அழலினி லுங்கொடி யான்.
காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்
கண்மகிழ் சித்திரத் தில்-பகை
மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம்
முற்றிய பண்டிதன் காண்;-உயிர்
வேத முணர்ந்த முனிவ ருணர்வினில்
மேவு பரம்பொருள் காண்;-நல்ல
கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்
கீர்த்திகள் வாழ்த்திடு வேன்.

கண்ணன்-என் சேவகன் [To TOP]

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம்மறப்பார்;
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
‘ஏனடா,நீ நேற்றைக் கிங்குவர வில்லை’யென்றால்,
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாறென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்;ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்;
சேவகரால் பட்ட சிரமமிக வுண்டு,கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ,செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான்“இடைச் சாதி நான்”என்றான்;
“மாடுகன்று மேய்த்திடுவேன்,மக்களை நான் காத்திடுவேன்;
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே;
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும்,கள்ளர்பய மானாலும்,
இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை,தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்பேன்;
கற்ற விததை யேதுமில்லை;காட்டு மனிதன்;ஐயே!
ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர்
நானறிவேன்;சற்றும் நயவஞ் சனைபுரியேன்”
என் றுபல சொல்லி நின்றான்.“ஏதுபெயர்? சொல்” என்றேன்
“ஒன் றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை” என்றான்
கட்டுறுதி யுள்ளவுடல் கண்ணிலே நல்லகுணம்,
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல்-ஈங்கிவற்றால்,
தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,
“மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;
கூலியென்ன கேட்கின்றாய்? கூறு”கென்றேன்.“ஐயனே!
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;
நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும்
ஆன வயதிற் களவில்லை;தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை;நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை“யென்றான்.
பண்டைக் காலத்துப் பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை
ஆளாகக் கொண்டுவிட்டேன்.அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக,நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்;கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெலாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல்,என்குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான்.வாய்முணுத்தல் கண்டறியேன்
வீதி பெருக்குகிறான்;வீடுசுத்த மாக்குகிறான்;
தாதியர்செய் குற்றமெலாம் தட்டி யடக்குகிறான்;
மக்களுக்கு வாத்தி,வளர்ப்புத்தாய்,வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப்
பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப்
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய் மந்திரியாய்,நல்லா சிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான்,இடைச்சாதி யென்று சொன்னான்.
இங்கிவனை யான்பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்!
கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம்,இளமாண்பு,சீர்,சிறப்பு,நற்கீர்த்தி,
கல்வி,அறிவு,கவிதை,சிவயோகம்,
தெளிவே வடிவாம் சிவஞானம்,என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்!
கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொண்டேன்!
கண்ணனை யாம்கொள்ளக் காரணமும் உள்ளனவே!

கண்ணன் - என் ஆண்டான் [To TOP]

தஞ்ச முலகினில் எங்கணு மின்றித் தவித்துத் தடுமாறி,
பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன், பார முனக் காண்டே!
ஆண்டே! - பாரமுனக் காண்டே! ... 1

துன்பமும் நோயும் மிடிமையுந் தீர்த்துச் சுகமருளல் வேண்டும்;
அன்புடன் நின்புகழ் பாடிக்குதித்து நின் ஆணை வழி நடப்பேன்;
ஆண்டே! - ஆணைவழி நடப்பேன்.

சேரி முழுதும் பறையடித் தேயருட் சீர்த்திகள் பாடிடுவேன்;
பேரிகை கொட்டித் திசைக ளதிரநின் பெயர் முழக்கிடுவேன்;
ஆண்டே! - பெயர் முழக்கிடுவேன்.

பண்ணைப் பறையர் தங் கூட்டத்தி லேயிவன் பாங்கிய மோங்கி விட்டான்;
கண்ண னடிமை யிவனெனுங் கீர்த்தியில் காதலுற் றிங்கு வந்தேன்;
ஆண்டே! - காதலுற் றிங்குவந்தேன்

காடு கழனிகள் காத்திடுவேன், நின்றன் காலிகள் மேய்த்திடுவேன்;
பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னரென் பக்குவஞ் சொல்லாண்டே!
ஆண்டே! - பக்குவஞ் சொல்லாண்டே!

தோட்டங்கள் கொத்திச் செடிவளர்க்கச் சோதனை போடாண்டே!
காட்டு மழைக்குறி தப்பிச் சொன்னா லெனைக் கட்டியடி யாண்டே!
ஆண்டே! - கட்டியடி யாண்டே!

பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப் பிழைத்திட வேண்டுமையே!
அண்டை யலுக்கென் னாலுப காரங்கள் ஆகிட வேண்டுமையே!
உபகாரங்கள் - ஆகிட வேண்டுமையே!

மானத்தைக் காக்கவோர் நாலுமுழத்துணி வாங்கித் தரவேணும்!
தானத்துக்குச் சில வேட்டிகள் வாங்கித் தரவுங் கடனாண்டே!
சில வேட்டி - தரவுங் கடனாண்டே.

ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி யொருசில பேய்கள் வந்தே
துன்பப் படுத்துது மந்திரஞ் செய்து தொலைத்திட வேண்டுமையே!
பகையாவுந் - தொலைத்திட வேண்டுமையே!

பேயும் பிசாசுந் திருடரு மென்றன் பெயரினைக் கேட்டளவில்,
வாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்க வழி செய்ய வேண்டுமையே!
தொல்லைதீரும் - வழிசெய்ய வேண்டுமையே!

கண்ணன் எனது சற்குரு [To TOP]

சாத்திரங் கள்பல தேடினேன்
அங்கு சங்கையில் லாதன சங்கையாம்
பழங் கோத்திரங்கள் சொல்லு மூடர்தம்
பொய்மைக் கூடையில் உண்மை கிடைக்குமோ?
நெஞ்சில் மாத்திரம் எந்த வகையிலும்
சக மாயம் உணர்ந்திடல் வேண்டுமே
என்னும் ஆத்திரம்நின்ற திதனிடை
நித்தம் ஆயிரந் தொல்லைகள் சூழ்ந்தன.

நாடு முழுதிலுஞ் சுற்றிநான்
பல நாட்கள் அலைந்திடும் போதினில்,
நிறைந் தோடும் யமுனைக் கரையிலே
தடி ஊன்றிச் சென்றாரோர் கிழவனார்;
ஒளி கூடு முகமும், தெளிவுதான்
குடி கொண்ட விழியும், சடைகளும்,
வெள்ளைத் தாடியும் கண்டு வணங்கியே
பல சங்கதி பேசி வருகையில்,

என்னுளத் தாசை யறிந்தவர்
மிக இன்புற் றுரைத்திட லாயினர்
தம்பி, நின்னுளத் திற்குத் தகுந்தவன்,
சுடர் நித்திய மோனத் திருப்பவன்,
உயர் மன்னர் குலத்தில் பிறந்தவன்,
வட மாமது ரைப்பதி யாள்கின்றான்;
கண்ணன் தன்னைச் சரணென்று போவையில்
அவன் சத்தியங் கூறுவன் என்றனர்.

மாமதுரைப்பதி சென்றுநான்
அங்கு வாழ்கின்ற கண்ணனைப் போற்றியே,
என்தன் நாமமும் ஊரும் கருத்துமே
சொல்லி நன்மை தருகென வேண்டினன்;
அவன் காமனைப் போன்ற வடிவமும்
இளங் காளையர் நட்பும் பழக்கமும்
கெட்ட பூமியைக் காக்குந் தொழிலிலே
எந்தப் போதுஞ் செலுத்திடுஞ் சிந்தையும்,

ஆடலும் பாடலும் கண்டுநான்
முன்னர் ஆற்றங் கரையினில் கண்டதோர்
முனி வேடந் தரித்த கிழவரைத்
கொல்ல வேண்டுமென் றுள்ளத்தில் எண்ணினேன்
சிறு நாடு புரந்திடு மன்னவன்
கண்ணன் நாளுங் கவலையில் மூழ்கினோன்;
தவப் பாடுபட்டோர்க்கும் விளங்கிடா
உண்மை பார்த்திவன் எங்ஙனம் கூறுவான்?
என்று கருதி யிருந்திட்டேன்;

பின்னர் என்னைத் தனியிடங் கொண்டுபோய்,
நினை நன்று மருவூக! மைந்தனே!
பர ஞான முரைத்திடக் கேட்பைநீ;
நெஞ்சில் ஒன்றுங் கவலையில் லாமலே
சிந்தை ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே
தன்னை வென்று மறந்திடும் போழ்தினில்
அங்க விண்ணை யளக்கும் அறிவுதான்!

சந்திரன் சோதி யுடையதாம்;
அது சத்திய நித்திய வஸ்துவாம்;
அதைச் சிந்திக்கும் போதினில் வந்துதான்
நினைச் சேர்ந்து தழுவி அருள்செயும்
அதன் மந்திரத் தாலிவ் வுலகெலாம்
வந்த மாயக் களிப்பொருங் கூத்துக்காண்
இதைச் சந்ததம் பொய்யென் றுரைத்திடும்
மடச் சாத்திரம் பொய் யென்று தள்ளடா!

ஆதித் தனிக்பொருளாகுமோர்;
கடல் ஆருங் குமிழி உயிர்களாம்;
அந்தச் சோதி யறிவென்னும் ஞாயிறு
தன்னைச் சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்;
இங்கு மீதிப் பொருள்கள் எவையுமே
அதன் மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்;
வண்ண நீதி யறிந்தின்பம் எய்தியே
ஒரு நேர்மைத் தொழிலில் இயங்குவார்;

சித்தத்திலே சிவம் நாடுவார்,
இங்கு சேர்ந்து களித்துலகாளுவார்;
நல்ல மத்த மதவெங் களிறுபோல்
நடை வாய்ந்திறு மாந்து திரிகுவார்;
'இங்கு நித்தம் நிகழ்வ தனைத்துமே
எந்தை நீண்ட திருவருளால்வரும்
இன்பம் சுத்த சுகந்தனியா நந்தம்'
எனச் சூழ்ந்து கவலைகள் தள்ளியே

'சோதி அறிவில் விளங்கவும்
உயர் சூழ்ச்சி மதியில் விளங்கவும்
அற நீதி முறைவழு வாமலே
எந்த நேரமும் பூமித் தொழில்செய்து
கலை ஓதிப் பொருளியல் கண்டுதாம்
பிறர் உற்றிடுந் தொல்லைகள் மாற்றியே
இன்பம் மோதி விழிக்கும் விழியினார்

பெண்மை மோகத்தில், செல்வத்தில், கீர்த்தியில்,
ஆடுதல், பாடுதல், சித்திரம்
கவியாதி யினைய கலைகளில்
உள்ளம் ஈடுபட் டென்றும் நடப்பவர்
பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவார்
அவர் நாடும் பொருள்கள் அனைத்தையும்
சில நாளினில் எய்தப் பெறுகுவார்
அவர் காடு புதரில் வளரினும்
தெய்வக் காவனம் என்றதைப் போற்றலாம்.

ஞானியர் தம்மியல் கூறினேன்
அந்த ஞானம் விரைவினில் எய்துவாய்
எனத் தேனிலினிய குரலிலே
கண்ணன் செப்பவும் உண்மை நிலைகண்டேன்
பண்டை ஈன மனிதக் கனவெலாம்
எங்ஙன் ஏகி மறைந்தது கண்டிலேன்;
அறி வான தனிச்சுடர் நான்கண்டேன்!
அதன் ஆடலுலகென நான் கண்டேன்!

கண்ணம்மா-எனது குல தெய்வம் [To TOP]

பல்லவி
நின்னைச் சரணடைந்தேன்-கண்ணம்மா! நின்னைச் சரணடைந்தேன்!
சரணங்கள்
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று(நின்)
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன,கொன்றவை போக்கென்று (நின்)
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம் (நின்)
துன்ப மினியில்லை.சோர்வில்லை,தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட(நின்)
நல்லதுதீயது நாமறியோம் அன்னை
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! (நின்)

நல்ல காலம் வருகுது [To TOP]

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது;
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;
சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு

தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;
படிப்பு வளருது;பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
போவான்,போவான்,ஐயோவென்று போவான்!

வேத புரத்திலே வியாபாரம் பெருகுது;
தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான்.
சாத்திரம் வளருது;சூத்திரம் தெரியுது;
யந்திரம் பெருகுது;தந்திரம் வளருது;
மந்திர மெல்லாம் வளருது,வளருது;

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சொல்லடி,சொல்லடி,மலையாள பகவதீ!
அந்தரி,வீரி,சண்டிகை,சூலி
குடுகுடு குடுகுடு

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது;
தொப்பை சுருங்குது,சுறுசுறுப்பு விளையுது:
எட்டு லச்சுமியும் ஏறி வளருது;
சாத்திரம் வளருது,சாதி குறையுது;
நேத்திரம் திறக்குது,நியாயம் தெரியுது;
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது;
வீரம் வருகுது,மேன்மை கிடைக்குது;
சொல்லடி சக்தி,மலையாள் பகவதி;
தர்மம் பெருகுது,தர்மம் பெருகுது

சென்றதினி மீளாது மூடரே! நீர் [To TOP]

சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.

தெளிவு Mental Clarity [To TOP]

எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோடா? - மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின்
புத்தி மயக்கமுண்டோ?

உள்ள தெலாமோ ருயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவ துண்டோ? - மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண்டோடா?

சித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின்
செய்கையுந் தேர்ந்துவிட்டால், - மனமே,
எத்தனை கோடி யிடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிதுமுண்டோ?

செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
தேவ னுரைத்தனனே; - மனமே!
பொய்கரு தாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்சுவரோ?

ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்
கச்சமு முண்டோடா? - மனமே!
தேன் மடை யிங்குத் திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!

உலகத்தை நோக்கி வினவுதல் [To TOP]

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம்
சொற்பனந் தானா?பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தேபோனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் (காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்

மாயையே [To TOP]

மாயையே!
உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ? மாயையே!
மனத் திண்மையுள்ளாரை நீ செய்வது மொன்றுண்டோ! மாயையே!

எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும் மாயையே!
நீ சித்தத் தெளிவெனுந் தீயின்முன் நிற்பாயோ? மாயையே!

என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய் கெட்ட மாயையே!
நான் உன்னைக் கெடுப்ப துறுதியென்றேயுணர் மாயையே!

சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு மாயையே!
இந்தத் தேகம் பொய்யென்றுணார்ந்தாரை யென்செய்வாய்! மாயையே!

இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப மாயையே!
தெளிந்தொருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ? மாயையே!

நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ மாயையே!
சிங்கம் நாய்தரக் கொள்ளுமோ நல்லரசாட்சியை மாயையே!

என்னிச்சை கொண்டுனை யெற்றி விடவல்லேன் மாயையே!
இனி உன்னிச்சை கொண்டெனக் கொன்றும் வராது காண் மாயையே!

யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே!
உன்றன் போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன் உன்னை மாயையே!

அறிவாய் விளங்குமுதற் சோதிநான் [To TOP]

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானிழல் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியிலுள்ள உயிரெலாம் நான்

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உருவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில் நகர் கோபுரம் யாவுமே நான்

இன்னிசை மாத ரிசையுளேன் நான்;
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர் தம் பொய்யெலாம் நான்;
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்

மந்திரங் கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்,
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்,
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்;
கண்டநற் சக்திக் கணமெலாம் நான்,
காரண மாகிக் கதித்துளோன் நான்

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்;
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதிநான்!

I am all the buzzing bees flying in the sky
I am all the roaming animals on earth
I am all the shady trees in forests
I am the air, the rivers and the sea.

I am all the stars seen in sky
I am all the open space in earth
I am all worms on earth
I am all the life forms in universe

I am all of Kamban's poems.
I am all of painter's pictures.
I am all the beautiful homes admired by all
Also all beautiful city's towers and domes.

I am the music in all songs
I am the bliss in all lifes.
I am the lies in all cheats
I am the agony of all suffering.

I am the magician of all illusions
I am the essence of all things making all happy
I am the creator of all tricks
I am the author of all the scriptures.

I am the creator of all the universes
I am the one who directs everything to work flawlessly.
I am all the known Goddess
I am the reason for all

I am the the illusion of creation.
I am the wanderer searching for wisdom
I am the unifying knowledge of light present in all existing things or things ever created.

அறிவே தெய்வம் [To TOP]

ஆயிரம் தெய்வங்கள் உண்டு என்று தேடி அலையும் அறிவிலிகாள் – பல
ஆயிரம் வேதம், அறிவு ஒன்றே தெய்வம் உண்டாம் எனல் கேளீரோ!

மாடனைக் காடனை வேடனைப் போற்றி மயங்கும் மதியிலிகாள் – எதனூடும்
நின்று ஓங்கும் அறிவு ஒன்றே தெய்வம் என்று ஓதி அறியீரோ?

சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளீரோ? – பல
பித்த மதங்களிலே தடுமாறிப் பெருமை அழிவீரோ?

வேடம் பல கோடி ஓர் உண்மைக்கு உள என்று வேதம் புகன்றிடுமே – ஆங்கு ஓர்
வேடத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அவ்வேதம் அறியாதே.

நாமம் பலகோடி ஓர்உண்மைக்கு உள என்று நான்மறை கூறிடுமே – ஆங்கே ஓர்
நாமத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அந்நான்மறை கண்டு இலதே.

போந்த நிலைகள் பலவும் பராசக்தி பூணும் நிலையாமே – உப
சாந்த நிலையே வேதாந்த நிலை என்று சான்றவர் கண்டனரே.

கவலை துறந்து இங்கு வாழ்வது வீடு என்று காட்டும் மறைகள் எலாம் – நீவிர்
அவலை நினைந்து உமி மெல்லுதல்போல் இங்கு அவங்கள் புரிவீரோ?

உள்ளது அனைத்திலும் உள்ளொளி ஆகி ஒளிர்ந்திடும் ஆன்மாவே – இங்கு,
கொள்ளற்கு அரிய பிரமம் என்றே மறை கூவுதல் கேளீரோ?

மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து வெறும் கதைகள் சேர்த்து – பல
கள்ள மதங்கள் பரப்புதற்கு ஓர் மறை காட்டவும் வல்லீரோ?

ஒன்று பிரமம் உளது உண்மை அ.·.து உன் உணர்வு எனும் வேதம் எலாம் – என்றும்
ஒன்று பிரமம் உளது உண்மை அ.·.து உன் உணர்வு எனக் கொள்வாயே.

கடவுள் எங்கே இருக்கிறார்? [To TOP]

''சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
சொல்'' லென்று ஹைரணியந்தான் உறுமிக் கேட்க,
நல்லதொரு மகன் சொல்வான்:-'தூணி லுள்ளான்
நாரா யணந்துரும்பி லுள்ளான்'என்றான்.

வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை.
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை;
அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை;
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ

ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொ டுக்கும்
ஒருமொழியே மலமொழிக்கும் ஒழிக்கும் என்ற
ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்
ஒருமொழி 'ஓம் நமச் சிவாய' வென்பர்;

'ஹரிஹரி'யென் றிடினும் அஃதே;'ராம ராம'
'சிவசிவ'வென்றிட்டாலும் அஃதேயாகும்.
தெரிவுறவே 'ஓம்சக்தி'யென்று மேலோர்
ஜெபம்புரிவ தப்பொருளின் பெயரே யாகும்

''சாரமுள்ள பொருளினைநான் சொல்லிவிட்டேன்;
சஞ்சலங்கள் இனிவேண்டா;சரதந் தெய்வம்;
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் அருளைமனத் திசைத்துக் கொள்வாய்;

வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்;
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்

''பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!
புத்த மதம்,சமண மதம்,பார்ஸி மார்க்கம்,
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,
சநாதனமாம் ஹிந்து மதம்,இஸ்லாம்,யூதம்,
நாமமுயர் சீனத்துத் 'தாவு''மர்க்கம்,

நல்ல ''கண் பூசி''மதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே
''பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்

பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்:
சாமி நீ;சாமி நீ;கடவுள் நீயே;
தத்வமஸி;தத்வமஸி;நீயே அஃதாம்;
பூமியிலே நீகடவு ளில்லை யென்று
புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமிநீ அம் மாயை தன்னை நீக்கிச்
சதாகாலம் 'சிவோஹ'மென்று சாதிப் பாயே!''

பராசக்‌தியைப்‌ பாடுகின்றோம்‌ [To TOP]

பராசக்தியைப் பாடுகின்றோம்.
இவள்‌ எப்படி உண்டாயினாள்‌? அதுதான்‌ தெரிய வில்லை.
இவள்‌ தானே பிறந்த தாய்‌;
இவள் எதிலிருந்து தோன்றினாள்? ‘தான்’என்ற பரம் பொருளிலிருந்து.
எப்படித் தோன்றினாள்? தெரியாது
படைப்பு நமது கண்ணுக்குத்‌ தெரியாது; அறிவுக்கும்‌ தெரியாது.
சாவு நமது கண்ணுக்குத் தெரியும்; அறிவுக்கும் தெரியாது.
வாழ்க்கை நமது கண்ணுக்குத்‌ தெரியும்‌; அறிவுக்கும்‌ தெரியும்‌.
வாழ்க்கையாவது சக்தியைப்‌ போற்றுதல்‌; இதன்‌ பயன்‌ இன்பமெய்தல்‌.
உள்ளம்‌ தெளிந்திருக்க; உயிர்‌ வேசமும்‌ சூடும்‌ உடையதாக;
உடல்‌ அமைதியும்‌ வலிமையும்‌ பெற்றிருக்க
நாம் வாழ்கின்றோம். நம்மை வாழ்வுறச் செய்த மஹா சக்தியை மீட்டும் வாழ்த்துகின்றோம்.

பாரதி கண்ட திருக்குறள் [To TOP]

திருக்குறளுறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் பாரதியை கவர்ந்தது. வள்ளுவர் தந்துள்ளக்கருத்துகள் செந்தமிழ்நாட்டிற்கு மட்டுமன்று, உலகத்துக்கும் பொருந்துவன என்றவர் பாரதியார். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்றவர் பாரதியார். திருக்குறளைச் செவியாரக் கேட்டு நல்லுணர்வும், நல்லறிவும் பெற்று வாழ்வைச் செம்மை செய்யவேண்டும்; அவ்வாறு செம்மை செய்யாதவர் செவிடர்’ என்று அறிவித்தவர்.
வாழ்வாங்கு வாழ்பவன் மனித நிலையைக் கடந்து வானுறையும் தெய்வமாக ஆவான்’ என்றது திருக்குறள். பாரதி “தெய்வ வள்ளுவன் வான்குறள் செய்ததும்” என்று வள்ளுவரைத் தெய்வமாக்கி பாடினார்.
From: [email protected]

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 1882 – 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.
பதினோராம் வயதில் எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் சபையில் பாரதி பட்டம். நூற்றுக்கணக்கான சிறு கவிதைகளோடு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலியின் சபதம் ஆகிய தொடர்கவிதைகளையும் எழுதியுள்ளார். சின்னச் சங்கரன் கதை, ஞான ரதம், சந்திரிகையின் கதை போன்ற குறுங்கதைகளையும் பல குட்டிக்கதைகளும் எழுதியுள்ளார். தாகூரின் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.