1. கிறிஸ்தவர்களுக்கு உண்மை மார்க்கம் இஸ்லாம் என்று தெரியுமாம்[என்னே கண்டுபிடிப்பு! நான் மட்டும் நோபல் யாருக்கு கொடுக்கலாம் என்று நிர்ணயிக்கும் குழுவில் இருந்தால், 2008ம் ஆண்டிற்கான நோபல் பரிசை இந்த கண்டுபிடிப்பிற்காக இதை எழுதவருக்கு கொடுக்க சிபாரிசு செய்வேன்.]
2. அப்படி தெரிந்து இருந்தும், கிறிஸ்தவர்கள் வறட்டு கௌரவத்தால் இஸ்லாமை நிராகரிக்கிறார்களாம்.
இஸ்லாம் இணையம் எழுதியது:
வேதக்காரர்களான யூதர்களும் கிரிஸ்தவர்களும் உண்மை மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்று தெரிந்த பின்னரும் வறட்டு கௌரவத்தால் சத்தியத்தை நிராகரித்து இறைவேதத்தை இருட்டடிப்பு செய்தும், நவிமொழிகளை நாசவேளை செய்தும் உண்மைக்கு மாற்றமான செய்திகளை பரப்பிவருகிறார்கள். அல்குர்ஆனில் சில வசனங்களை மாற்றியமைத்து தனக்கு சாதகமான சூழ் நிலையை உருவாக்குகிறார்கள். இதுபோதுமல்லாது பல இணையதளங்களை நிறுவி அதன்மூலம் காபாவில் சிலைவணங்குதல், நபிகளார்(ஸல்) அவர்களின் குடும்பத்தை பழித்து வர்ணித்தல், காட்டுமிரான்டி மார்க்கம் என்பனபோன்ற எண்ணற்றக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்ற வகையில் உண்மை எதுவென்று தெரிந்த பின்னரும் அவதூராக பரப்பிவருகிறார்கள். இதை இறைவன் அவர்களின் முகத்திறையை இவ்வாறு கிழிக்கிறான்,
வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? (அல்குர்ஆன் 3:71)
இப்படி பல ஆக்கங்களை நிறுவி முஸ்லிம்களின் உள்ளங்களில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தி தவறான வழிக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அந்த கோர முகங்களின் நஞ்சு எண்ணமாகும். இவ்வாறு இணையதளத்தில் நிறுவப்பட்ட ஆக்கங்கள் புதிதாக இஸ்லாத்தை அறியவேண்டும் என்பதற்காக ஒருவர் விரும்பி தேடும்போது இதை பார்ப்பாரேயானால் விரண்டோடக்கூடிய ஒரு துர்பாக்கிய சூழ்நிலைதான் அங்கு உருவாகும். ஆகவே இப்படிப்பட்ட பல சூழ்ச்சிகளின் மூலம் இஸ்லாத்தின் எழுச்சியை அமுக்க நாடுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை தங்களது விழிகளை உளியை கொண்டு குத்திக்கொண்டு இருக்கிறோம் என்று. இறைவன் அந்த வேதக்காரர்களின் கூறுகெட்டச் செயலை இவ்வாறு விவரிக்கிறான்.
வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது. எனினும் (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை. (அல்குர்ஆன் 3:69)
Source:
1. நாங்கள் வெற்றி பெற்றே தீருவோம்,இவர்களுக்கு பயம் வரும்போதெல்லாம், ஒரு கட்டுரையாவது இப்படி வெளியிட்டுக்கொண்டே இருப்பார்கள். இதை படிக்கும் இதர முஸ்லீம்கள் அப்படியே பொங்கிப்போவார்கள். குர்ஆன் வசனங்களுக்கு இவர்கள் அர்த்தத்தை மாற்றிச் சொல்கிறார்கள், இவர்கள் வெற்றிப்பெறமுடியாது, நாங்கள் தான் வெற்றிப்பெறுவோம் என்று ஓயாமல் கிளிப்பிள்ளைப்போல சொல்லிக்கொண்டே இருப்பார்களே தவிர, இவர்களாகவே குர்ஆன் வசனங்களுக்கு சரியான பொருள் கூறமாட்டார்கள், ஹதீஸ்களுக்கு பொருள் கூறமாட்டார்கள், அப்படி கூறுகிறவர்களின் அர்த்தம் தவறு என்றுச் சொல்வார்கள். இந்த வகையில் அவர்கள் எழுதிய கட்டுரைக்குத் தான் இப்போது நாம் பதிலை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
2. நீங்கள் எவ்வளவுதான் இடையூறுகளை ஏற்படுத்தினாலும் இஸ்லாம் என்கின்ற சத்திய ஒளிக்கு என்றைக்குமே திறையிட முடியாது
3. சத்தியம் ஜெயித்தே தீரும்,
4. யாரும் குர்ஆனுக்கு எதிராக ஒன்றும் செய்யமுடியாது,
5. சூரியனை கைகளால் மறைக்கமுடியாது,
6. சத்தியமார்க்கம் வெற்றிப்பெறும்
7. நாங்கள் பயப்படமாட்டோம்
கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் (மத்தேயு 7:15)
நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.(கலாத்தியர் 1:8,9)
| Isa Koran Home Page | Back - IIOP Rebuttal Index page |