குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

ஆசிரியர்: Khaled

முதல் உரை: இந்த கட்டுரை www.answering-islam.org என்ற தளத்தில் வெளியான "Is the Quran Preserved " ? என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பாகும். இதன் ஆசிரியர் சகோதரர் "கால்ட்" என்பவர் ஆவார். நான் அவருக்கு ஒரு மெயில் அனுப்பி, அவருடைய இந்த கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து இணையத்தில் வெளியிடலாமா என்று அனுமதி கேட்டபோது. உடனே அவர் எனக்கு அனுமதி கொடுத்தார். அனுமதி கொடுத்ததற்காக அவருக்கு கர்த்தருக்குள் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆங்கிலத்தில் அவருடைய கட்டுரையை இங்கு படிக்கலாம், ஆங்கிலத்தில் படித்தால் இக்கட்டுரையின் விவரங்கள் இன்னும் தெளிவாக புரியும்.

அவருடைய மெயில் விலாசம் : Khaled
அவருடைய கட்டுரைகளை இங்கு படிக்கலாம்: Articles
அவருடைய இந்த கட்டுரைக்கு ஒரு இஸ்லாமியர் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதிலை இங்கு படிக்கலாம் Answers to a Muslim Critic

கட்டுரை தொடர்கிறது...

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

குர்-ஆன் இதை உரிமைபாராட்டுகிறது:

குர்-ஆன் 15:9

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.

இஸ்லாமிய உரை எழுதுபவர்களில்(Commentators) ஒருவராகிய இபின் கதிர் என்பவரின் (Ibn Kathir) கருத்துப்படி, இந்த "நினைவூட்டும் வேதம் " என்பது குர்-ஆனை குறிக்கும். ஏனென்றால், இதே அதிகாரத்தில் சில வசனங்களுக்கு முன்பு நாம் படிக்கிறோம்:

குர்-ஆன் 15:6

(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.

இஸ்லாமியர்கள் கருத்துப்படி, “(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே!” என்ற வாக்கியத்தில் குறிப்பிடப்படுபவர் "முகமது" ஆவார், எனவே, "நினைவூட்டும் வேதம்" என்று இங்கு குறிப்பிடுவது நிச்சயமாக "குர்-ஆனைத் தான்" என்று சொல்கிறார்கள். "குர்-ஆனை யாராலும் மாற்றமுடியாது" என்பது அல்லாவின் உறுதிமொழியாகும், எனவே இன்றளவும் குர்-ஆன் சரியாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று இஸ்லாமியர்கள் முடிவு செய்கின்றனர்.

இஸ்லாமியர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் சில கிறிஸ்தவர்கள் (Christian Apologists) "நினைவூட்டும் வேதம்" என்பது அல்லாவின் எல்லா வசனங்களையும், மற்றும் பைபிளில் வெளிப்படுத்தப்பட்ட வசனங்களையும் குறிக்கும் என்று சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் சாதாரணமாக கிறிஸ்தவர்களின் இந்த வாதத்தை மறுத்து, அல்லா பாதுகாப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தது குர்-ஆனை மட்டும் தான் என்றுச் சொல்கிறார்கள். யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் வேதங்களைப் பற்றி குர்-ஆன் சொல்லும் எல்லா வசனங்களையும் கருத்தில் கொண்டு கவனித்தால், யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடம் இப்போதுள்ள வேதம் இறைவனின் அதிகார பூர்வமான மற்றும் திருத்தப்படாத வேதம் தான் என்று குர்-ஆன் சொல்வதை நிச்சயமாக கவனிக்கலாம். (இந்த கட்டுரைகளை படிக்கவும் ) . இருந்தபோதிலும், இஸ்லாமியர்கள் இந்த விவரங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்த கட்டுரையின் நோக்கம் என்னவென்றால், இஸ்லாமியர்கள் இப்படி நம்பிக்கை கொண்டிருப்பதினால், அவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையை (Logical Problems) எடுத்துக்காட்டுவதாகும். எனவே, விவாதத்திற்காக வேண்டி, இஸ்லாமியர்கள் நம்பிக்கையின் படியே நான் செல்கிறேன், மற்றும் அவர்களுடைய இந்த நம்பிக்கை எங்கு கொண்டு செல்கிறது என்று பார்ப்போம்.

 

குர்-ஆன் மற்றொரு இடத்தில் தன்னிடம் பிழை இல்லை என்று உரிமைபாராட்டுகிறது:

குர்-ஆன் 41:42 , 4:82

குர்-ஆன் 41:42 அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது.

குர்-ஆன் 4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

அதே நேரத்தில், அல்லா இறக்கிய முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டதென்று வரும் குர்-ஆன் வசனங்களை முஸ்லீமகள் நம்புகின்றனர்.

குர்-ஆன் 5:41

குர்-ஆன் 5:41 தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் 'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர். மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள்;. மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு. ( இந்த வசனங்களையும் பார்க்கவும்: குர்-ஆன் 3:78, 2:79, 4:46 5:13)

இப்படி இருந்தும், முஸ்லீம்கள் முந்தைய வேதங்களை நம்பவேண்டுமென்று குர்-ஆன் கட்டளையிடுகிறது:

குர்-ஆன் 2:4, 2:285 & 3:84

குர்-ஆன் 2:4 (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.

குர்-ஆன் 2:285 (இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். "நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள்.

குர்-ஆன் 3:84 "அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

இந்த முந்தைய வேதங்கள், கீழ்கண்டவைகளை உள்ளடக்கி உள்ளது.

குர்-ஆன் 5:44, 21:105, & 5:46

குர்-ஆன் 5:44 நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. …

குர்-ஆன் 21:105 நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; "நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.

குர்-ஆன் 5:46 இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.

(தவ்ராத் = ஆதியாகமம் முதல் உபாகமம் வரை, மோசேவிற்கு இறங்கிய வேதம், ஜபூர் = சங்கீதம் & இன்ஜில் = சுவிசேஷங்கள் - தெளிவிற்காக நான் சேர்த்தது)

இது வரையில் நாம் சேகரித்த விவரங்களை இங்கு சுருக்கமாக பார்ப்போம்:

1. குர்-ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது.

2. குர்-ஆனுக்கு முந்தி அல்லா இறக்கிய வேதங்கள்: தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜில் (ஆதியாகமம்-உபாகமம், சங்கீதம், சுவிசேஷங்கள்) ஆகும். (இந்த புத்தகங்கள் புனித பைபிளில் பெரும் இடத்தை பிடித்துள்ளது)

3. குர்-ஆன் , தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜில் எல்லாம், அல்லா இறக்கிய வேதங்கள் ஆகும்

4. அல்லாவின் வேதத்தை யாரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது

5. குர்-ஆனுக்கு முந்தி வந்த வேதம் மாற்றப்பட்டது அல்லது திருத்தப்பட்டது.

6. முந்தைய வேதமாகிய பைபிளை(தவ்ராத், ஜபூர், இன்ஜில்) அதிகாரபூர்வமாக அல்லா தான் இறக்கினான் என்று முஸ்லீம்கள் நம்பினாலும், குர்-ஆன் பாதுகாக்கப்பட்டு இருப்பதால், அதை மட்டும் தான் நம்பவேண்டும்.

நாம் இப்போது இந்த லாஜிக்கை(LOGIC) பார்ப்போம்: (We now here to deal with this logic)

A. குர்-ஆன், தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் என்பவைகள் அல்லாவின் வேதங்கள் ஆகும்.

B. இப்போதுள்ள தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் திருத்தப்பட்டது.

C. அல்லாவின் கடைசி வேதமாகிய குர்-ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது.

1st Conclusion: அல்லாவின் சில வார்த்தைகள் (Some of Allah’s Words) திருத்தப்பட்டது

2nd Conclusion: அல்லாவின் சில வார்த்தைகள் (Some of Allah’s Words) பாதுகாக்கப்பட்டது.

மேலே கண்ட பொதுவான விவரங்களிலிருந்து, கீழே கொடுக்கப்பட்ட முடிவுகளுக்கு நாம் வரலாம்.

Major premise: அல்லாவின் சில வார்த்தைகள் திருத்தப்பட்டது.

Minor premise: குர்-ஆன் அல்லாவின் வார்த்தையாகும்.

Conclusion: குர்-ஆன் திருத்தப்பட்டு இருக்கலாம்.

அல்லது இப்படியும் இருக்கலாம்,

Major premise: அல்லாவின் சில வார்த்தைகள் பாதுகாக்கப்பட்டது.

Minor premise: தௌராத்தும், ஜபூரும் மற்றும் இன்ஜிலும் அல்லாவின் வார்த்தைகள்.

Conclusion: தவ்ராத்தும், ஜபூரும் மற்றும் இன்ஜிலும் பாதுகாக்கப்பட்டு இருக்கலாம்.

முக்கிய பிரச்சனை: பலவீனமான மனிதர்கள் தன் முந்தைய வேதங்களை மாற்ற அல்லா அனுமதித்ததால், நாம் கீழ்கண்டவாறு அல்லாவைப் பற்றி கருத வேண்டியுள்ளது:

1. அல்லா ஒரு பலவீனமான இறைவன். அவரால் தன் முந்தைய வேதத்தை பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லா அதிக வலிமையை சம்பாதித்துக்கொண்டார், அதனால் தான், தன் கடைசி வேதமாகிய குர்-ஆனை பாதுகாத்து இருக்கிறார்.

2. மக்கள் கள்ளத்தனமான வெளிப்பாடுகளால்(counterfeit revelations) வழிவிலகி சென்றுக்கொண்டு இருந்தபோது, அதைப் பற்றி அல்லா அக்கரைக் கொள்ளவில்லை. தான் அக்கரைகொள்ளாமல் இருந்தும், மக்கள் திருத்தப்பட்ட வேதத்தை பின்பற்றுகிறார்கள் என்றுச் சொல்லி, அவர்களுக்கு "நரக நெருப்பு" தப்பாது என்று தண்டனையும் தருகிறார். அல்லா தன் விருப்பத்தின்படியே முந்தைய வேதம் திருத்தப்பட அனுமதித்தார் என்று அந்த மக்கள் உணராமல் இருக்கிறார்கள். இதனால் அல்லா ஒரு அநீதியானவர் என்று தெரிகிறது.

மேற்கண்ட விவரங்களின் வெளிச்சத்தைக்கொண்டு பார்த்தால், அல்லாவின் மூன்று வேதங்கள் திருத்தப்பட்டிருக்கும் போது, தன் கடைசி வேதமான குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது என்று எப்படி நம்புவது? பலவீன மனிதர்கள் தன் முந்தைய வேதங்களை திருத்தும் போது, அதை தடுக்க தனக்கு சக்தியில்லாமல் சும்மா இருந்த அல்லா, தன் பிந்திய வேதமாகிய குர்-ஆனை மட்டும் பாதுகாத்தார் என்று ஒரு மனிதன் நம்புவது எப்படி?

அல்லா தன் ஐந்தாவது வேதத்தை அனுப்பவேண்டி வரலாம்? ஒரு வேளை, தன் ஐந்தாவது புத்தகத்தை ஏற்கனவே அனுப்பிவிட்டும் இருக்கலாம். அது “பஹாய் மத நம்பிக்கையின்” நிறுவனரான "பஹாயுல்லா"விற்கு வெளிப்பட்ட வேதமாக கூட இருக்கலாம்?

மிகவும் முக்கியமாக, அல்லாவின் வேதத்தில் மாற்றம் இருந்தும், "இறைவனின் வார்த்தையில் மாற்றம் இல்லை" என்ற அல்லாவின் வாதத்தை முஸ்லீம்கள் எப்படி சரி செய்துக்கொள்ளப்போகிறார்கள்? அல்லது ஏற்றுக்கொள்ளப்போகிறார்கள்?

இஸ்லாமியர்களே, நீங்கள் ஒரு முடிவை எடுக்கவேண்டும், கீழ்காணும் தெரிவுகளில் ஏதாவது ஒன்றை தெரிந்தெடுக்க வேண்டும்.

1. குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது: இதை தெரிந்தெடுத்தால், இதன் பொருள், அல்லா பலவீனமானவர் அல்லது அவர் ஒரு அநீதிக்காரர். தன் முந்தைய வேதங்களை திருத்தப்பட விட்டு, குர்-ஆனை மட்டும் பாதுகாத்த அல்லாவின் செயலுக்கு, இது தான் விளக்கமாக அமையும்.

2. முந்தைய வேதங்களைப் போல குர்-ஆனும் திருத்தப்பட்டது: இதை தெரிவு செய்தால், நீங்கள் எப்படி திருத்தப்பட்ட முந்தைய வேதங்களை படிப்பதில்லையோ அதே போல திருத்தப்பட்ட குர்-ஆனையும் படிக்கக்கூடாது. அப்படி திருத்தப்பட்ட குர்-ஆனை படித்தால், முந்தைய வேதங்களையும் படிக்கவேண்டும்.

3. குர்-ஆனும் பாதுகாக்கப் பட்டது, அதே போல முந்தைய வேதங்களும் பாதுகாக்கப்பட்டது: இதை தெரிவு செய்தால், நீங்கள் அல்லா அதிகாரபூர்வமாக இறக்கிய முந்தைய வேதத்தை(பைபிளை) கட்டாயமாக படித்தேயாக வேண்டும்.

4. குர்-ஆன் திருத்தப்பட்டது, ஆனால், முந்தைய வேதம் பாதுகாக்கப்பட்டது: இதை தெரிவு செய்தால், நீங்கள் குர்-ஆன் படிப்பதை நிறுத்திவிட்டு, பைபிள் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

ஒரு நொடி நில்லுங்கள், இன்னும் நான் முடிக்கவில்லை.

ஒரு வேளை நீங்கள், மூன்றாவது தெரிவை தெரிந்தெடுத்து இருந்தால், உங்களுக்கு மற்றோரு பிரச்சனை உள்ளது. குர்-ஆன் இந்த முந்தைய வேதங்களோடு பல அடிப்படை கோட்பாடுகளில் முரண்படுகிறது. இதற்கு பொருள் என்னவென்றால், குர்-ஆன் என்பது ஒரு பொய்யான வேதமாகும், அது நிச்சயமாக இறைவனிடமிருந்து வந்துயிருக்காது. ஏனென்றால், இறைவன் என்பவன் குழப்பத்திற்கு இறைவன் இல்லை. இறைவன் எப்போதும், தன் முந்தைய வேதத்திற்கு நேர் எதிரான முரண்பாடான வேதத்தை இறக்கமாட்டான்.

இந்த என் தெரிவுகள்(Alternatives) உங்களுக்கு பிடிக்கவில்லையானால், எனக்கு சொல்லுங்கள்:

மேலே சொல்லப்பட்ட என் கருத்துக்களில் மற்றும் முடிவுகளில் எந்த இடத்தில் தவறு இருக்கிறது என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள்.

நீங்கள் என் வாதத்தின் அடிப்படையை(Premises) ஏற்றுக்கொள்ளவில்லையானால், என் முடிவுகளையும்(Conclusions) தவிர்த்துவிடுங்கள்.

அப்படியானால், குர்-ஆன் பாதுகாக்கப்பட்டதென்று எனக்கு நிருபியுங்கள்

நீங்கள் அதை நிருபிப்பது "பகுத்தறிவு" முறையில் இருக்கவேண்டும். குர்-ஆனிலிருந்து வசனத்தை காட்டக்கூடாது, அது வெறும் திரும்ப திரும்ப சொல்லப்பட்ட வாதமே தவிர அது "ஆதாரமல்ல". அல்லது, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது என்று நிருபிக்க முற்படாதீர்கள், ஒரு வேளை முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டதாக ஏற்றுக்கொண்டாலும், அது குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதை நிருபிக்காது. அல்லது குர்-ஆனில் விஞ்ஞான அற்புதங்கள் உள்ளது என்று என்னிடம் சொல்லாதீர்கள், நான் அந்த அற்புதங்கள் பொய் என்று நம்புகின்றேன். மேலே சொல்லப்பட்ட தத்துவ இயல் முறையிலான பிரச்சனையை தீர்க்கும்படி நான் கேட்கிறேன்(I want you to resolve the philosophical problem outlined above).

பகுத்தறிவோடு சிந்தித்துச் சொல்லுங்கள்,, இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகிய "முழுவதுமாக பாதுகாக்கப்பட்ட குர்-ஆனும், திருத்தப்பட்ட முந்தைய வேதங்களும்" ஒரே இறைவனிடமிருந்து வந்தது என்ற நம்பிக்கை, நீதியான மற்றும் சர்வ வல்லமை படைத்த இறைவனை "இழிவுபடுத்துவது ஆகாது என்று நிருபியுங்கள்?".

(Show me logically and rationally how the Muslim assertion of a perfectly preserved Quran together with an alleged corruption of God’s earlier Revelations is not an insult to God’s perfect justice and great power.)

கட்டுரை முற்றிற்று

ஆசிரியருடைய மெயில் விலாசம் : Khaled
ஆசிரியருடைய கட்டுரைகளை இங்கு படிக்கலாம்: Articles
ஆசிரியருடைய இந்த கட்டுரைக்கு ஒரு இஸ்லாமியர் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதிலை இங்கு படிக்கலாம் Answers to a Muslim Critic




Isa Koran Home Page Back - Koran Index
Hosted by www.Geocities.ws

1