குர்-ஆன் படி யார் அதிக கனத்திற்குரியவர்: இயேசுவா அல்லது முகமதுவா?

இந்த கட்டுரையில், குர்-ஆன் வசனங்களின் படி யார் அதிக கனத்திற்கு உரியவர் என்று நாம் பார்க்கப்போகிறோம். பைபிளின் படி நாம் இப்படி இயேசுவை ஒரு மனிதனோடு ஒப்பிடக்கூடாது, ஒப்பிடமுடியாதுகூட(அல்லாவை ஒரு மனிதனோடு ஒப்பிடமுடியுமா?), இருந்தாலும் இஸ்லாமியர்களுக்காக, குர்-ஆனின் வசனங்களின் படி இவ்விருவரையும் ஒப்பிட்டு பார்க்கப்போகிறோம். சுருக்கமாகச் சொன்னால், பெரும்பான்மையான இஸ்லாமியர்களுக்கு இயேசுவைப்பற்றி என்னென்ன வசனங்கள் குர்-ஆனில் வருகிறது என்று கூட தெரியாது, அவர்கள் அரபியில் மட்டும் படிக்க அதிகமாக ஊக்குவிக்கபடுவதால்.

1) பிறப்பு:

இயேசு: உலக முறைப்படி தந்தை இல்லாதவர் குர்-ஆன் 3:47.
முகமது: தான் பிறப்பதற்கு முன்பே தந்தை மரித்தார்.

குர்-ஆன் 3:47

(அச்சமயம் மர்யம்) கூறினார்: 'என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?" (அதற்கு) அவன் கூறினான்: 'அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக" எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது."


2) பிறப்பில் சிறப்பு:

இயேசு: பரிசுத்தமானவர், சாத்தானால் ( பாவத்தால் ) தொடமுடியாதவர் (குர்-ஆன் 19:19, ஹதீஸ் புகாரி 4:506)

குர்-ஆன் 19:19

'நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்") என்று கூறினார்.


Volume 4, Book 54, Number 506:

Narrated Abu Huraira: The Prophet said, "When any human being is born. Satan touches him at both sides of the body with his two fingers, except Jesus, the son of Mary, whom Satan tried to touch but failed, for he touched the placenta-cover instead."



முகமது: மற்றவர்களைப் போல சாத்தானால் தொடப்பட்டவர் தன் பாவத்திற்காக மன்னிப்பு கேட்கவேண்டியவர்.

குர்-ஆன் 40:55, 48:1-2

40:55 ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக; மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக!

48:1 (நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்

48:2 உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.


3) தாய்:

இயேசு: அல்லாவினால் தெரிந்தெடுக்கப்பட்ட, பரிசுத்தமாக்கப்பட்ட மற்றும் மற்ற எல்லா பெண்களைவிட மேன்மையுள்ள மரியம் (குர்-ஆன் 3:42).

குர்-ஆன் 3:42

3:42 (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்" (என்றும்),

முகமது: தாயும் தந்தையும் விக்கிர ஆராதனைக்காரர்களாக இருந்தார்கள், அதேநிலையில் மரித்தார்கள்.


4) தாய்வழி மூததையர்:

இயேசு: மர்யமின் பெற்றோர்கள் ( இயேசுவின் தாத்தா, பாட்டி) மிகவும் நலலவர்கள் குர்-ஆன் 19:27-28.

குர்-ஆன் 19:27-28

19:27 பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்: 'மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!"


19:28 'ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை" (என்று பழித்துக் கூறினார்கள்).

முகமது: தாய்வழி பெற்றோர்கள், எந்த தகவலுமில்லை, ஒரு வேளை தெரிந்தாலும், விக்கிர ஆராதனைக்காரர்களே குர்-ஆன் படி. முகமதுவிற்கு முன்பு அவர்கள் எல்லாரும் பல தெய்வங்களை வணங்குபவர்கள்.

5) வளர்ப்பு:

இயேசு: அல்லாவினால் ஆசீர்வதிக்கப்பட்ட மர்யமின் மடியில் வளர்க்கப்பட்டார்.

முகமது: செவிலித்தாயினால் வளர்க்கப்பட்டார்.

செவிலித்தாய் வளர்த்தல் கீழ்தரமானது என்று நான் சொல்ல வரவில்லை. இங்கு நாம் தவறாக புரிந்துக்கொள்ளக்கூடாது. அல்லாவின் அருள் இயேசுவின் எல்லா நிலைகளிலும் இருந்த்தது என்று காட்டவே இந்த வித்தியாசத்தை நாம் பார்க்கிறோம்.


6) ஒரு நாள் குழந்தையாக இருக்கும்போது அற்புதம்:

இயேசு: இயேசு ஒரு நாள் குழந்தையாக இருக்கும் போது பேசினாரென்று குர்-ஆன் 19:29-33 கூறுகிறது.

முகமது: சாதாரணமாக ஒரு குழந்தை எப்போது பேசுமோ அப்போது பேசினார்.

குர்-ஆன் 19:29-33

19:29 (ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; 'நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?" என்று கூறினார்கள்.

19:30 'நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.

19:31 'இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.

19:32 'என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.

19:33 'இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்று (அக்குழந்தை) கூறியது.


7) குர்-ஆன் படி செய்த அற்புதங்கள்:

இயேசு: பல அற்புதங்கள் செய்திருக்கிறார் குர்-ஆன் 3:49.

குர்-ஆன் 3:49

3:49 இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) 'நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்).


முகமது: குர்-ஆனைத் தவிர ஒரு அற்புதமும் செய்யவில்லை.


8) குர்-ஆன் படி உயிர்தெழுதல்:

இயேசு: ஆமாம் குர்-ஆன் 19:33 வசனத்தின் படி, மரித்தபிறகு உயிரோடு எழுந்தார். இயேசுவின் கல்லரை இன்னும் காலியாக உள்ளது.

முகமது: இல்லை. இன்னும் அவருடைய கல்லரை மதினாவில் உள்ளது.



9) குர்-ஆன் படி தீர்க்கதரிசனம் உரைத்தல்:

இயேசு: குர்-ஆன் 3:49 வசனத்தின் படி இயேசு தீர்க்கதரிசனம் உரைத்தார்.

முகமது: தீர்க்கதரிசனம் இல்லை.


10) வாழ்ந்த வாழ்க்கை:

இயேசு: குற்றமற்ற வாழ்க்கை. எக்காலத்திலும் பின்பற்ற தகுந்தது.

முகமது: பல கொலைகள் செய்தது, அடிமைகளை வைத்திருந்தது, பெண் அடிமைகளிடம் திருமணமாகாமல் உடலுறவு கொண்டது(குர்-ஆன் இதை அனுமதிக்கிறது குர்-ஆன் 33:50), பல பெண்களை திருமணம் செய்தது, தன் 51ம் வயதில் 6 வயது சிறுமியை திருமணம் செய்தது, தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்தது, விவாகரத்திற்கு பின்பு குர்-ஆன் 33:37.

குர்-ஆன் 33:37 மற்றும் 33:50

33:37 (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: 'அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.

33:50 நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமினகளைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.



11) விஷம் கொடுக்கப்படுதல்:

இயேசு: ஒருபோதுமில்லை.

முகமது: ஒரு ஆட்டுத்தொடையில் விஷம் வைத்து கொடுக்கப்பட்டது, இதனால் 3 ஆண்டுகளுக்கு பின்பு முகமது இறந்தார்.

Volume 3, Book 47, Number 786:

Narrated Anas bin Malik: A Jewess brought a poisoned (cooked) sheep for the Prophet who ate from it. She was brought to the Prophet and he was asked, "Shall we kill her?" He said, "No." I continued to see the effect of the poison on the palate of the mouth of Allah's Apostle .


Volume 5, Book 59, Number 713:

Narrated Ibn Abbas: 'Umar bin Al-Khattab used to let Ibn Abbas sit beside him, so 'AbdurRahman bin 'Auf said to 'Umar, "We have sons similar to him." 'Umar replied, "(I respect him) because of his status that you know." 'Umar then asked Ibn 'Abbas about the meaning of this Holy Verse:-- "When comes the help of Allah and the conquest of Mecca . . ." (110.1)

Ibn 'Abbas replied, "That indicated the death of Allah's Apostle which Allah informed him of." 'Umar said, "I do not understand of it except what you understand."

Narrated 'Aisha: The Prophet in his ailment in which he died, used to say, "O 'Aisha! I still feel the pain caused by the food I ate at Khaibar, and at this time, I feel as if my aorta is being cut from that poison."



12) மரித்தல்:

இயேசு: அல்லா தன் அளவில் உயர்த்திக்கொண்டார் குர்-ஆன் 4:158.

குர்-ஆன் 4:158

4:158 ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

முகமது: மரித்து 1400 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.


13) மண்ணோடு மண்ணாதல்:

இயேசு: சரீரம் மண்ணோடு மண்ணாக அழியவில்லை. அல்லா தன் அளவில் உயர்த்திக்கொண்டான் குர்-ஆன் 4:158.

முகமது: முகமதுவின் உடல் மண்ணில் அழிந்து 1400 ஆண்டுகளுக்கு மேலாகிறது.


14) உலகத்தின் முடிவிலே:

இயேசு: உலகத்தின் முடிவிலே மறுபடியும் வருவார் குர்-ஆன் 4:159,43:61.

குர்-ஆன் 4:159,43:61.

4:159 வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.


43:61 நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிக் காலத்திற்குரிய அத்தாட்சியாவார்; ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம்; மேலும், என்னையே பின்பற்றுங்கள்; இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).

முகமது: வரமாட்டார். நியாயத்தீர்ப்பிற்காக நிற்பார்.


15) இறைவனிடமிருந்து வந்த வார்த்தை:

இயேசு: அல்லாவிடமிருந்து வந்த வார்த்தை குர்-ஆன் 3:45.

குர்-ஆன் 3:45

3:45 மலக்குகள் கூறினார்கள்; 'மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

YUSUFALI: Behold! the angels said: "O Mary! Allah giveth thee glad tidings of a Word from Him: his name will be Christ Jesus, the son of Mary, held in honour in this world and the Hereafter and of (the company of) those nearest to Allah;

PICKTHAL: (And remember) when the angels said: O Mary! Lo! Allah giveth thee glad tidings of a word from him, whose name is the Messiah, Jesus, son of Mary, illustrious in the world and the Hereafter, and one of those brought near (unto Allah).

SHAKIR: When the angels said: O Marium, surely Allah gives you good news with a Word from Him (of one) whose name is the '. Messiah, Isa son of Marium, worthy of regard in this world and the hereafter and of those who are made near (to Allah).

முகமது: இல்லை.


16) இறைவனின் வார்த்தை:

இயேசு: அல்லாவின் வார்த்தை இயேசு குர்-ஆன் 4:171.

குர்-ஆன் 4:171.

4:171 வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் ('குன்" ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

YUSUFALI: O People of the Book! Commit no excesses in your religion: Nor say of Allah aught but the truth. Christ Jesus the son of Mary was (no more than) a messenger of Allah, and His Word, which He bestowed on Mary, and a spirit proceeding from Him: so believe in Allah and His messengers. Say not "Trinity" : desist: it will be better for you: for Allah is one Allah: Glory be to Him: (far exalted is He) above having a son. To Him belong all things in the heavens and on earth. And enough is Allah as a Disposer of affairs.

PICKTHAL: O People of the Scripture! Do not exaggerate in your religion nor utter aught concerning Allah save the truth. The Messiah, Jesus son of Mary, was only a messenger of Allah, and His word which He conveyed unto Mary, and a spirit from Him. So believe in Allah and His messengers, and say not "Three" - Cease! (it is) better for you! - Allah is only One Allah. Far is it removed from His Transcendent Majesty that He should have a son. His is all that is in the heavens and all that is in the earth. And Allah is sufficient as Defender.

SHAKIR: O followers of the Book! do not exceed the limits in your religion, and do not speak (lies) against Allah, but (speak) the truth; the Messiah, Isa son of Marium is only a messenger of Allah and His Word which He communicated to Marium and a spirit from Him; believe therefore in Allah and His messengers, and say not, Three. Desist, it is better for you; Allah is only one Allah; far be It from His glory that He should have a son, whatever is in the heavens and whatever is in the earth is His, and Allah is sufficient for a Protector.

முகமது: இல்லை.


17) இறைவனிடமிருந்து வந்த ஆவி(ஆத்துமா):

இயேசு: அல்லாவின் ஆன்மா, குர்-ஆன் 4:171.

முகமது: இல்லை.


18) எண்ணிக்கை:

இயேசு: "இயேசு" என்ற பெயர் குர்-ஆனில் 25 முறை வருகிறது. (2:87, 2:136, 2:253, 3:45, 3:52, 3:55, 3:59, 3:84, 4:157, 4:163, 4:171, 5:46 , 5:78 , 5:110, 5:112, 5:114, 5:116, 6:85, 19:22, 19:34, 33:7, 42:13, 43:63, 57:27, 61:6, 61:14)

முகமது: "முகமது" என்ற பெயர் குர்-ஆனில் 4 அல்லது 5 முறை வருகிறது; குர்-ஆன் 3:144,33:40,47:2,48:29.

Hosted by www.Geocities.ws

1